சஞ்சய் அவர்கள் என்னை ஏ பார் தொடரை தொடரச் சொன்னமைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்குப் பல சமயங்களில் நம்ம தமிழகத்தில் எந்தத் துறையில் யார் அமைச்சர், தலைமைச் செயலகத்தில் என்னன்ன பிரிவுகள் இருக்குன்னு, அரசியல் கட்டுரைகள் படிக்கும்போது சந்தேகங்கள் வரும். அதை Assembly.tn.gov.in என்கிற தளத்தில் சென்று பார்ப்பேன். இது எனக்கு விசா வாங்கும்போது தேவைப்பட்ட சில நடைமுறைகளுக்கு மிகவும் உபயோகமாயிருந்தது.
அவ்வப்பொழுது தமிழில் வாழ்த்தட்டைகளை பகிர்வதற்கு bharathgreetings.com செல்வேன்.
C for Cartoonindia.com , எனக்கு எப்பொழுதும் ரொம்பப் பிடித்த ஒன்று. அதுப்போல Glasbergen.com(கொஞ்சம் அமெரிக்க வாசம் தூக்கல்) பிடிக்கும். அதேப்போல மேற்கத்திய சங்கீதத்தில் ஆர்வமில்லாமல் இருந்த எனக்கு அதன் மேல் ஆர்வமேற்படுத்தியவர் என் கணவர். இப்பொழுதெல்லாம் நான் அடிக்கடி செல்லும் தளம் இந்த Classiccat.net .
D for தினத்தந்தி தான், நான் முதல் முதலில் எழுத்துக்கூட்டி தமிழ் படித்தது இதில்தான். அதனால் மற்ற தினசரிகளைவிட இதன் மேல் எனக்குக் கொஞ்சம் பிரியம் ஜாஸ்தி.
E for ebay தான். இஷ்டத்துக்கு தேவயில்லாததஎல்லாம் ஷாப்பிங் போகும்போது வாங்கிட்டு குற்ற உணர்ச்சியில் இருக்கும்போது, இதனை திறந்தால் மக்கள் எவ்வளவு கேணத்தனமாக வாங்குகிறார்கள், வாங்கி இருக்கிறார்கள், விற்கிறார்கள் என்பதை பார்த்து மனச்சாந்தி பெறலாம்.
அடுத்து ELLE என்னுடைய பேவரிட் இதழ். பனிக்காலம், வசந்த காலம், கோடைக் காலம், இலையுதிர் காலம் என அந்தந்த காலகட்டத்தில் கரண்ட் லுக் என்ன, எந்தெந்த நிறங்களில் இப்பொழுது ஆக்சசரீஸ் அணியவேண்டும், எந்த போஷ் எடுத்துப்போகலாம், சாண்டில்ஸ்,பூட்ஸ் வகைகளில் எதையெல்லாம் இம்முறை அணியக்கூடாது போன்ற முக்கியத் தகவல்கள் இதிலிரிந்து ஒவ்வொரு காலத்திற்கும் முன்னரே தெரிந்து, அதற்கேற்றார் போல் ஷாபிங் செய்வோம். அதோட அனைத்து காலங்களிலும் சிலக் குறிப்பிட்ட இடங்களில் திடீர் தள்ளுபடி வெறும் அரைநாள், இரண்டு நாட்கள் என நடக்கும், அந்தத் தகவல்களை இந்த இதழின் தனிப்பட்ட கடிதங்களிலிருந்து பெறலாம். ஒரு முறை நான் ஒரு ப்ரதா(அது ஒன்றுதான் என்னுடைய ஒரே ப்ரதா கலெக்ஷன்) பேக்கை எழுபது சதவிகிதம் தள்ளுபடியில் வாங்கினேன்.
G for google மற்றும் அதன் தொடர்புடைய பிறத் தளங்கள் எல்லாவற்றையும் கூறலாம். இதையும்( guruji.com) நான் அவ்வப்போது உபயோகிப்பதுண்டு.
H for Hinduonline தான். இதில் மிகப் பிடித்த ஒரு பொழுதுப்போக்கு விஷயம் ஞாயிறன்று வரும் மணமகள்/மணமகன் தேவை பக்கங்கள்தான். இப்படிஎல்லாம் கூட எதிர்பார்ப்புகள் வைத்திருப்பார்களா என ஆச்சர்யப் பட வைக்கும். அதேப்போல பல சரித்திர பக்கங்களை பட்டியலிடும் Historysites.net எனும் தளமும்,அடிக்கடி செல்வதில்லை எனினும் பிடிக்கும்.
I for ibnlive . பல சமயம் ஓவர் சீனா இருந்தாலும் பாக்கப் பிடிக்கும். இட்லிவடையும் நான் தினமும் செல்லும் இடம்.
J for Jeyamohan.in, எனக்கு இவரோட 'பாப்பா சாப்பிடு பாப்பா', மற்றும் இவர் மகளைப் பற்றிய நகைச்சுவைக் கட்டுரைகள் மிகவும் பிடிக்கும். இதெல்லாத்தையும் விட எனக்கு சிறுவயதிலிருந்தே மிக மிகப் பிடித்த நடிகர் ஒருவர் என்றால் ஷம்மிகபூர் தான். அவர் வலையில் சேட்டிங் செய்கிறார் என்று கேள்விப்பட்டுத்தான் நான் நெட் பக்கமே பள்ளி காலத்தில் திரும்பினேன். அவரோட மின்னஞ்சல் போக்குவரத்துக்கள், சேட்டிங் என்று இரண்டு மூன்று வருடங்கள் கலகலப்பாக இருந்தது. இந்தியாவில் அனைத்து திரைத்துறயினருக்கும் முன்னர் வலையுலகில் கால் பதித்தவர். அவரின் Junglee.org.in ஆக்டிவாக இருக்கின்றதோ இல்லையோ ஒரு விசிலடிச்சான் குஞ்சாக தினமும் ஒரு முறை சென்று விடுவேன்.
K for குமுதம்.காம், கல்கிஆன்லைன், அதேப்போல Keepvid.com, என்னுடைய பேவரிட் பாடல்களை தரவிறக்கம் செய்ய இங்கு அடிக்கடி செல்வதுண்டு.
L for Le Monde, பிரெஞ்சு தினசரி, எங்கு இருந்தாலும் அவ்விடத்தில் உள்ள அம்மொழி தினசரியை படிக்க வேண்டும் (மொழிப் பிரச்சினை என்றால் குறைந்தபட்சம் பார்க்கவாவது வேண்டும்) என்பது என் கொள்கை.
M for Marian Keyes, என்னுடைய ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவர். அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகளை அவ்வளவு நகைச்சுவையோடு சொல்லும் இவர் பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது. இவருடையக் கதாநாயகிகள் பாத்திரம் பல சமயம் என்னைப் போலவே செயல்படும், பிற பாத்திரங்களும் என்னைச் சுற்றி இருப்பவர்களை ஞாபகப் படுத்தும். இவர் தன் வலைப்பக்கத்தை அடிக்கடி அப்டேட் செய்ய மாட்டார் என்றாலும் நான் தினமும் ஒரு முறையேனும் செல்வேன்.
Meteo paris வானிலைக்காக தினமும் சென்று பார்ப்பேன்.
அதேப்போல Marie Claire ரொம்பப் பிடிக்கும்(சந்தா என் மாமியார் கட்டிவிடுவார்). இதற்கும் Elle காரணமேதான்.
N for ndtv தான். இதில் கூடுதல் நல்ல விஷயம் என்னவென்றால் சேனலயே லைவாக பார்க்கலாம் என்பது தான்.
O for ஆர்குட்.
R for Radioclassique தான். சில சமயம் rediff மெயில் செல்வேன்
S for Sify, Suryan FM, என்னுடைய மற்றொரு பேவரிட் எழுத்தாளர் Sophie Kinsella வலைத்தளம்( Marian Keyes அவர்களின் கதைகள் போலவே மிக மிக நகைச்சுவையாக இருக்கும். இவருடைய shopaholic series என்னுடைய ஆல் டைம் பேவரிட்) . smashits.com நான் அடிக்கடி செல்லும் தளம்
T for Techsatish.net, தமிழ்மணம்.
V for Visual dictionary, Vikatan முதலியவை .
W for Wikipedia,Watch movies முதலியவை .
Y for Youtube, Yahoo முதலியவை.
அடுத்து நான் அழைக்கப் போவது, என்னை, ஜம்புலிங்கம் போன்றவர்களை ப்ளாகர் ஆகத் தூண்டிய அம்பி அண்ணன்(மாட்டிக்கிட்டீங்களா).
விடுமுறையில் செல்வதாகக் கூறிவிட்டு, எல்லாரையும் விட ஜாஸ்தி பதிவுகளை போடும் நண்பர் மோகன் கந்தசாமி.
தினமும் வற்றாத நகைச்சுவை நக்கலோடு பதிவுகள் இடும் நண்பரும், எங்கள் மன்றத்தின் துணைத் தலைவருமான ச்சின்னப் பையன்.
வழிநெறி:தலைப்பு :: ஏ ஃபார் ஆப்பிள்அன்றாடம் புழங்கும் தளங்களுக்கு முன்னுரிமை கொடுங்கஉங்க பதிவுக்குள் அடிக்கடி போவதால், அதை விட்டுடுங்கஇன்னும் மூணு பேரை பிடிங்க .. எழுத வைங்க
Subscribe to:
Post Comments (Atom)
133 comments:
சில தளங்கள் என் தினப்பட்டியலிலும் இருக்கு! :))
ஆனாலும் நம்ம கவர்ன்மெண்ட் பத்தி தளம் சேதி கேட்டதுமே ஆச்சர்யமாக இருந்தது!
நிறைவாக இருந்தது! :)
//ஒரு முறை நான் ஒரு ப்ரதா(அது ஒன்றுதான் என்னுடைய ஒரே ப்ரதா கலெக்ஷன்) பேக்கை எழுபது சதவிகிதம் தள்ளுபடியில் வாங்கினேன்//
The devil wears Prada? ;)
//அடுத்து ELLE என்னுடைய பேவரிட் இதழ். பனிக்காலம், வசந்த காலம், கோடைக் காலம், இலையுதிர் காலம் என அந்தந்த காலகட்டத்தில் கரண்ட் லுக் என்ன, எந்தெந்த நிறங்களில் இப்பொழுது ஆக்சசரீஸ் அணியவேண்டும், எந்த போஷ் எடுத்துப்போகலாம், சாண்டில்ஸ்,பூட்ஸ் வகைகளில் எதையெல்லாம் இம்முறை அணியக்கூடாது போன்ற முக்கியத் தகவல்கள் இதிலிரிந்து ஒவ்வொரு காலத்திற்கும் முன்னரே தெரிந்து, அதற்கேற்றார் போல் ஷாபிங் செய்வோம்.//
ஃபேஷன் மற்றும் மேக்கப்புக்கு இந்த சைட்டுகளைகும் ட்ரை பண்ணலாம்.
ivillage.com, Cosmopoliton.com, makeupalley.com.
இதெல்லாம் நான் அடிக்கடி போகும் தளங்கள் :)
என்னுடைய லிஸ்டிலும் நீங்கள் குறிப்பிட்ட பல தளங்கள் இடம் பெற்றிருக்கிறது. :)
hai sister,
all r a mostly useful sites. well selected.
kindly let me know your mail id
//நிறைவாக இருந்தது//
ரொம்ப நன்றிங்க ஆயில்யன்
//ஆனாலும் நம்ம கவர்ன்மெண்ட் பத்தி தளம் சேதி கேட்டதுமே ஆச்சர்யமாக இருந்தது//
நிஜமாகவே அந்தத் தளம் கொஞ்சம் உபயோகமுள்ளது :):):) இதை நான் முதல்ல திறந்து பார்த்தது என்னோட விசா சம்பந்தப்பட்ட ஒரு நடைமுறைக்காகத்தான்.
//
The devil wears Prada? ;)
//
ஆஹா எனக்கு எல்லா ஆக்சசரீசும் ப்ராதால கிடைக்கும்னா, குட்டிச்சாத்தான், ரத்தக்கட்டேரியாக் கூட இருப்பேனே :):):)
நான் காலேஜ் சேர்ந்த புதுசுல அந்தப் பெண் மாதிரித்தான் இருந்தேன்(நடித்தேன்), அப்புறம் மற்ற பிசாசுகளோட பிசாசா இரண்டறக் கலந்திட்டேன்
//ஆஹா எனக்கு எல்லா ஆக்சசரீசும் ப்ராதால கிடைக்கும்னா, குட்டிச்சாத்தான், ரத்தக்கட்டேரியாக் கூட இருப்பேனே :):):)
நான் காலேஜ் சேர்ந்த புதுசுல அந்தப் பெண் மாதிரித்தான் இருந்தேன்(நடித்தேன்), அப்புறம் மற்ற பிசாசுகளோட பிசாசா இரண்டறக் கலந்திட்டேன்//
LOL
நானும் தான் :)
//ivillage.com, Cosmopoliton.com, makeupalley.com//
இதில் ivillage.com கொஞ்சம் ஜாஸ்தி அமெரிக்க வாசனையோட இருக்கு.
cosmopolitan நாங்க மாசாமாசம் வாங்கறோம், அதால நெட்ல பாக்கறதில்லை.
மூணாவது என்னோட மிகப்பெரிய எதிரி. நான் ஆரம்பத்துல பல பிராண்ட் ட்ரை பண்ணி எதுவுமே என் ஸ்கின் டோனுக்கு ஒத்துக்காம அலர்ஜியாகி, இப்போ மறுபடியும் என்னோட பழைய பிராண்டுக்கே வந்துட்டேன். அதிலிருந்து வேற எந்த பிராடக்டும் ட்ரை பண்றதில்லை.
இதெல்லாத்தையும் விட அப்பப்ப சில சீக்ரெட் வலைத்தளங்களை இதுக்குன்னே ஆரம்பிச்சி சேவை பண்றாங்க, ஆனா திடீர்னு அவைகள் டெட் ஆகிடுது. நான் என்கிட்டே முதல்ல ஒருத்தங்க சொன்னப்போவும் நம்பல, புக்ல படிச்சப்பவும் நம்பல, அப்புறம் இன்னொரு பிரெண்டு அங்கே போய் வாங்கிட்டு வந்தப்புறம்தான் நம்பினேன்.
////ஆஹா எனக்கு எல்லா ஆக்சசரீசும் ப்ராதால கிடைக்கும்னா, குட்டிச்சாத்தான், ரத்தக்கட்டேரியாக் கூட இருப்பேனே :):):)
நான் காலேஜ் சேர்ந்த புதுசுல அந்தப் பெண் மாதிரித்தான் இருந்தேன்(நடித்தேன்), அப்புறம் மற்ற பிசாசுகளோட பிசாசா இரண்டறக் கலந்திட்டேன்//
LOL
நானும் தான் :)
//
இதை இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்.
கயல்விழி, அந்த மேக்கப் அலே சைட்ல பாக்கப் பாக்க வெறுப்பா இருக்குங்க, உங்களுக்கு அலெர்ஜியே கிடையாதா, என்னோடது எல்லாமே அரந்தப் பழசு பிராண்ட்.
//well selected.//
ரொம்ப நன்றிங்க அண்ணே
//kindly let me know your mail id//
அண்ணே, கொஞ்சம் பொறுங்க :):):)
//மூணாவது என்னோட மிகப்பெரிய எதிரி. நான் ஆரம்பத்துல பல பிராண்ட் ட்ரை பண்ணி எதுவுமே என் ஸ்கின் டோனுக்கு ஒத்துக்காம அலர்ஜியாகி, இப்போ மறுபடியும் என்னோட பழைய பிராண்டுக்கே வந்துட்டேன். அதிலிருந்து வேற எந்த பிராடக்டும் ட்ரை பண்றதில்லை.
இதெல்லாத்தையும் விட அப்பப்ப சில சீக்ரெட் வலைத்தளங்களை இதுக்குன்னே ஆரம்பிச்சி சேவை பண்றாங்க, ஆனா திடீர்னு அவைகள் டெட் ஆகிடுது. நான் என்கிட்டே முதல்ல ஒருத்தங்க சொன்னப்போவும் நம்பல, புக்ல படிச்சப்பவும் நம்பல, அப்புறம் இன்னொரு பிரெண்டு அங்கே போய் வாங்கிட்டு வந்தப்புறம்தான் நம்பினேன்.//
ராப்,
Nuetrogena brand ட்ரை பண்ணி பாருங்க, அது Hypo allergic. இது ஸ்டோர் ப்ராண்ட் என்பதால் எல்லா மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
விலை உயர்ந்தது என்றால் Clinique ட்ரை பண்ணலாம். அது ரொம்ப நல்ல குவாலிட்டி. இல்லை என்றால் Bare Essentials mineral makeup - இதனால் யாருக்குமே அலர்ஜி ஏற்பட்டதில்லை.
நான் இதில் எல்லா வகையும் ட்ரை பண்ணி, எனக்கு பிடித்தது க்ளினிக் ப்ராண்ட். என்ன மேக்கப் போட்டாலும் வீட்டுக்கு வந்த பிறகு Face cleanser + scrub போட்டு முகத்தை மறக்காமல் கழுவினாலே பாதி அலர்ஜிகள்/இன்ஃபெக்ஷன்கள் வருவதில்லை.
//யல்விழி, அந்த மேக்கப் அலே சைட்ல பாக்கப் பாக்க வெறுப்பா இருக்குங்க, உங்களுக்கு அலெர்ஜியே கிடையாதா, என்னோடது எல்லாமே அரந்தப் பழசு பிராண்ட்.//
என்ன ப்ரேண்ட் உங்களுது ராப்?
மேக்கப் மட்டும் இல்லை, ஷாம்பூ, ஹேர் ஸ்டைல் போன்ற விவரங்களும் அந்த தளத்தில் இருக்கும்.
//உங்களுக்கு அலெர்ஜியே கிடையாதா//
நல்ல தரமான ப்ராடக்ட் யூஸ் பண்ணினால் எனக்கு அலர்ஜி வருவதில்லை கவுஜாயினி
ரொம்ப ரொம்ப நன்றிங்க கயல்விழி, ஆனா இப்போ uriage(eau thermale) நல்லா செட்டாகிடுச்சி. அதால மாத்தறதில்லை. அப்புறம் மத்த மேக்கப் ப்ராடெக்ட்ஸ் எல்லாமே revlon தான்.
மத்தபடி scrub பண்றதுக்கு Avéne தான்,சன் ஸ்க்ரீனுக்கும் Avéne தான். மாசத்தில் ஒருதரம் மட்டும் visage l'occitane use பண்ணுவேன்(பீலிங்குக்கும், அப்புறம் அதன் எண்ணயை முக மசாஜுக்கும்). முக பேக்குக்கு மட்டும் இயற்கை ப்ராடக்ட்சை தான் உபயோகப்படுத்துவேன். மற்றபடி ஷாம்பூ நாங்க ஒவ்வொரு கோடைக்கும் ப்ராவன்ஸ் செல்லும்போது ஒரு வகை வாசனை மிகுந்த ஹெர்பல் ஷாம்பூக்களையும், சோப்களையும்(முகத்திற்கு கண்டிப்பாக அல்ல) வாங்கி வருவோம். என்னோடது ரொம்ப ரொம்ப சென்சிடிவ் ஸ்கின், அதனால் இப்பொழுதெல்லாம் ரிஸ்க் எடுக்க பயமாக உள்ளது
நீங்க நம்புவீங்களான்னு தெரியல, ஒரு தரம் l'oreal ஐ ப்ராடெக்ட்ஸ் உபயோகப் படுத்தினதுக்கே கண்ல இருந்து தண்ணியா கொட்டுச்சு.
18 -ல் 12 கமென்ட் மேக்கப் பத்திதான் போலிருக்கே! மேக்கப் போடவே மணிக்கணக்கில் நேரமெடுப்பவர்களாயிற்றே பெண்கள். விவாதம் என்றால் சும்மாவா?
இண்ட்ரஸ்ட்டிங்! :-))
மோகன் -> சரியா சொன்னீங்க. கைய கொடுங்க.... அவ்வ்வ்வ்...
ஆ. என்னையும் இழுத்துவிட்டுட்டீங்களா?.. அவ்வ்வ்..
சரி. ஒரு பதிவு போட்டுடறேன்.....
//18 -ல் 12 கமென்ட் மேக்கப் பத்திதான் போலிருக்கே! மேக்கப் போடவே மணிக்கணக்கில் நேரமெடுப்பவர்களாயிற்றே பெண்கள். விவாதம் என்றால் சும்மாவா?
இண்ட்ரஸ்ட்டிங்! :-))
//
ஏங்க மோகன், பொறாமையா இருக்கா:):):) அதுக்கு ஒரு கொடுப்பினை வேணுங்க. எனக்கும் கேட்ஜெட் குருவாகனும்னு ஆசைதான், ஆனா அதுல மனச்சாந்தி கிடைக்க மாட்டேங்குதே.அதுசரி எனக்கொரு சந்தேகம், ஏன் முக்காவாசி பசங்க ஷூக்கே பாதி சொத்தை அழிச்சிட்டு, நாங்க அதையே பரிசா வாங்கிக் கொடுத்தா தேவையில்லாத செலவுன்னு சீன் போடறீங்க? :):):)
மோகன் உங்களோடப் பதிவை ஆர்வமா எதிர்பார்த்துக்கிட்டுருக்கேன்
//மோகன் -> சரியா சொன்னீங்க. கைய கொடுங்க//
ச்சின்னப் பையன் உங்களுக்கும் மோஹனுக்கு சொன்ன அதே பதில்தான் :):):)
//ஆ. என்னையும் இழுத்துவிட்டுட்டீங்களா?.. அவ்வ்வ்..
சரி. ஒரு பதிவு போட்டுடறேன்//
உங்களோடப் பதிவை ஆர்வமா எதிர்பார்த்துக்கிட்டுருக்கேன்
அருமையான வலை தள பட்டியல். நெடு நாட்கள் கழித்து மேற்கத்திய செவ்வியல் இசையில் ஆர்வம் கொண்ட ஒருவரை கேள்வி படுகிறேன்.உங்களுக்கு பிடித்த Composer யார்?
ரொம்ப நன்றிங்க பிரேம்ஜி, எனக்கு மேற்கத்திய க்ளாசிகல் இசையில் ஜாஸ்தி விஷய ஞானம் இல்லை. கேட்கும்போது பிடிப்பதுதான். பலருடயது பிடித்தாலும், என்னுடைய ஆல் டைம் பேவரிட்டாக இருப்பது விவால்டி தான். இவருடயவைகள் இனிமை ப்ளஸ் சிலுசிலுவென இருக்கும் தன்மை கொண்ட படைப்புகளாக இருப்பது முக்கிய காரணம்
d for dailythanthi.com???
நீங்க மட்டுமல்ல நிறைய தமிழர்கள் ப்ரிண்டெட் வேர்ஷன் தினத்தந்தி மூலம் தமிழ் கற்றுள்ளனர், ராப்! :)
//ரொம்ப ரொம்ப நன்றிங்க கயல்விழி, ஆனா இப்போ uriage(eau thermale) நல்லா செட்டாகிடுச்சி. அதால மாத்தறதில்லை. அப்புறம் மத்த மேக்கப் ப்ராடெக்ட்ஸ் எல்லாமே revlon தான்.
மத்தபடி scrub பண்றதுக்கு Avéne தான்,சன் ஸ்க்ரீனுக்கும் Avéne தான். மாசத்தில் ஒருதரம் மட்டும் visage l'occitane use பண்ணுவேன்(பீலிங்குக்கும், அப்புறம் அதன் எண்ணயை முக மசாஜுக்கும்). முக பேக்குக்கு மட்டும் இயற்கை ப்ராடக்ட்சை தான் உபயோகப்படுத்துவேன். மற்றபடி ஷாம்பூ நாங்க ஒவ்வொரு கோடைக்கும் ப்ராவன்ஸ் செல்லும்போது ஒரு வகை வாசனை மிகுந்த ஹெர்பல் ஷாம்பூக்களையும், சோப்களையும்(முகத்திற்கு கண்டிப்பாக அல்ல) வாங்கி வருவோம். என்னோடது ரொம்ப ரொம்ப சென்சிடிவ் ஸ்கின், அதனால் இப்பொழுதெல்லாம் ரிஸ்க் எடுக்க பயமாக உள்ளது//
ராப்
uriage(eau thermale) - இதென்ன ப்ரென்ச் ப்ராடக்ட்டா? எனக்கு தெரியல. மற்றபடி நீங்க சொன்ன ரெவ்லான் மற்றும் லோரீயல் இரண்டுமே ஹைபோ அலெர்ஜினீக் கிடையாது(சென்சிடிவ் ஸ்கின்காரர்கள் யூஸ் பண்ண உகந்ததில்லை). ந்யூட்ரஜினா மட்டுமே ஹைப்போ அலர்ஜெனிக். க்ளினிக்கும் அப்படியே. என் ஃப்ரெண்ட் ஒருத்திக்கும் சென்சிடிவ் வகை ஸ்கின் உங்களை மாதிரியே. அவளோடு ஷாப்பிங் அலைந்து பழக்கம்.
ஹேர் ப்ராடக்ட்ஸ் ரிவ்யூ நான் குறிப்பிட்ட தளத்தில் பார்த்தீங்களா? கூடவே இயற்கை பொருளை வைத்து எப்படி ஃபேஸ் பேக் தயாரிப்பது என்பதைப்பற்றி கூட போட்டிருக்கிறார்கள். (இதை பற்றி என்னிடம் இப்படி பேச்சு கொடுத்தீர்கள் என்றால் இந்த ஜென்மத்தில் நிறுத்தமுடியாது :) :))
சமீபத்தில் எல்லா கம்பனியுமே மினரல் மேக்கப் கொண்டு வந்திருக்காங்களே, அது உங்களுக்கு செட் ஆகுதா?
பல உபோயகமான தளங்களின் பட்டியலுக்கு நன்றி.
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com
//d for dailythanthi.com???
நீங்க மட்டுமல்ல நிறைய தமிழர்கள் ப்ரிண்டெட் வேர்ஷன் தினத்தந்தி மூலம் தமிழ் கற்றுள்ளனர், ராப்//
ஆமாங்க வரூண். நான் தமிழ் படிக்கக் கத்துக்கிட்டதுன்னு இல்லை, தெளிவா சொல்லனும்னா தினசரிகளை படிக்கக் கத்துக்கிட்டேன். அதற்கு தினத்தந்தியோட எளிமையான தெளிவான வடிவமைப்பும் ஒரு முக்கிய காரணம். எனக்கு இன்று வரைக்கும் பல தினசரிகளை படிக்க தலைவேதனையாக இருக்கும். காரணம் கொச கொசவென்று செய்திகளை அளித்திருக்கும் விதம்
//
uriage(eau thermale) - இதென்ன ப்ரென்ச் ப்ராடக்ட்டா? எனக்கு தெரியல//
ஆமாங்க கயல்விழி, ஆனா ஐரோப்பா முழுக்க இது மிகவும் பிரசித்தம். ஒரு முறை கொழுப்பெடுத்து sephora ட்ரை பண்ணி, நல்ல பாதிப்பு. இதனை போட்டுத்தான் சரியாகியது. இதில் அனைத்து வகை கிரீம்களும் உள்ளது.
//ஹேர் ப்ராடக்ட்ஸ் ரிவ்யூ நான் குறிப்பிட்ட தளத்தில் பார்த்தீங்களா? கூடவே இயற்கை பொருளை வைத்து எப்படி ஃபேஸ் பேக் தயாரிப்பது என்பதைப்பற்றி கூட போட்டிருக்கிறார்கள்//
பார்த்தேன், ஆனால் நானெல்லாம் முடி விஷயத்தில் பயங்கர செண்டிமெண்ட் பார்க்கும் டைப். எல்லா மாசமும் ஒரே Coiffeuse தான், வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே ஸ்டைலில் மாற்றம் செய்வேன். அதுவும் எனக்கு வட்ட முக அமைப்பு என்பதால் எல்லாவித ஸ்டைலும் ஒத்துவராது. மற்றபடி நான் உபயோகப் படுத்தும் ப்ராவன்ஸ் ஹெர்பல் ப்ராடெக்ட்ஸ் ரொம்ப ரொம்ப நல்லதுங்க. இங்கு அதுதான் ஸ்பெஷல். இவை ஐரோப்பாவில் ரொம்பப் பிரசித்தம்.
//நீங்க சொன்ன ரெவ்லான் மற்றும் லோரீயல் இரண்டுமே ஹைபோ அலெர்ஜினீக் கிடையாது(சென்சிடிவ் ஸ்கின்காரர்கள் யூஸ் பண்ண உகந்ததில்லை)//
நீங்க சொல்றது ரொம்ப சரிங்க, ஆனா ரெவ்லான் பள்ளி காலத்தில் இருந்தே பழக்கப்பட்டதால் இப்பொழுதும் ஒத்து வருகின்றதென நினைக்கிறேன்.
//சமீபத்தில் எல்லா கம்பனியுமே மினரல் மேக்கப் கொண்டு வந்திருக்காங்களே, அது உங்களுக்கு செட் ஆகுதா//
அதில் நான் லிப் ப்ராடெக்ட்ஸ் மட்டும்தான் வாங்கினேன்(மற்றதை வாங்க வழக்கம்போல் தயக்கமாகவும், விலை குற்ற உணர்ச்சியும் ஏற்படுத்துகிறது). சேல்சிலும் அவைகள் தான் கோடையில் இங்கு ஹாட். மத்ததெல்லாம் இலையுதிர்காலம் முடியும்போதுதான் சூடு பிடிக்கும் போலிருக்கு.
//பல உபோயகமான தளங்களின் பட்டியலுக்கு நன்றி//
தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க விஜய்
/////நாங்க அதையே பரிசா வாங்கிக் கொடுத்தா தேவையில்லாத செலவுன்னு சீன் போடறீங்க? :):):)////
யாருங்க அந்த பொழைக்கத்தெரியாத அப்பாவி? அடுத்த முறை பரிசு வாங்கிவச்சிட்டு யாருக்காவது கொடுத்தே ஆவனும்னுன்னு கொலை வெறியோட இருந்தீங்கன்னா ஒரு வரியில கடுதாசி போடுங்க! என் செலவுல நானே ஷிப் பண்ணிக்கறேன். முடிஞ்சா ரெண்டா வாங்கி அனுப்பிடுங்க!
ஏ பார் ஆப்பிள விரைவில் பதிவிடுகிறேன்
நன்றி வெட்டிஆபிசர்.
ஆகா நிறையா பயனுள்ள வலைத்தளாங்கள் தந்திருக்கீங்க இனி எனக்கு நல்லா பொழுது போகும் இனி கிளாஸ்ல நான் படிச்ச மாதிரித்தான் அதுசரி நான் படிச்சாத்தானே என்ன நான் சொல்லுறது
வாழ்த்துக்கள்.
தமிழ்ப் பிரியன் பதிவை பார்த்து.காலை 04.00 தொடங்கி 0815 மணிவரை அனைத்து பதிவுகளையும் பின்னூடங்களையும் வரி விடாமல் படித்தேன்.
முதலில் பார்த்தது A பார் ஆப்பிள்9(0400a.m)
கடைசியில் அதே இடத்தில்(0815 a.m)
28.07.2008
congrats.
congrats.
congrats.
wishing you all the best
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com
\\இஷ்டத்துக்கு தேவயில்லாததஎல்லாம் ஷாப்பிங் போகும்போது வாங்கிட்டு குற்ற உணர்ச்சியில் இருக்கும்போது, இதனை திறந்தால் மக்கள் எவ்வளவு கேணத்தனமாக வாங்குகிறார்கள், வாங்கி இருக்கிறார்கள், விற்கிறார்கள் என்பதை பார்த்து மனச்சாந்தி பெறலாம்\\
இந்த தளத்தால் இப்படியும் ஒரு பயன் இருக்கா?
f,p,q,u and x அஞ்சு லெட்டர் தான் பாக்கி.. ஒருவேளை நியாபக மறதில தான் விட்டுருப்பீங்க போல.. :)
எனக்கு பழக்கமில்லாததெல்லாம் இருக்கு பார்க்கனும் ...
வெட்டியாப்பீசர், இவ்வளவு சைட் படிக்கிறங்களா? ஆச்சரியமா இருக்கு. நிறைய படிக்கிறவங்களாலதான் நல்லா எழுத முடியும்னு சொல்வாங்க. உங்களைப் பொறுத்தவரை அது நூறு சதவீதம் சரி.
நிறைய வலைதளங்கள் புதியதாக அதேசமயம் உபயோகமாக இருக்கிறது. நன்றி.
//யாருங்க அந்த பொழைக்கத்தெரியாத அப்பாவி? அடுத்த முறை பரிசு வாங்கிவச்சிட்டு யாருக்காவது கொடுத்தே ஆவனும்னுன்னு கொலை வெறியோட இருந்தீங்கன்னா ஒரு வரியில கடுதாசி போடுங்க! என் செலவுல நானே ஷிப் பண்ணிக்கறேன். முடிஞ்சா ரெண்டா வாங்கி அனுப்பிடுங்க//
மோகன் அக்செப்ட் பண்றதுக்கு முன்னாடிதான் சீன். அடுத்த நிமிஷத்தில் அது வேணாம்னா கொடு நான் மாத்தி தரேன்னா, கொடுக்கமாட்டாங்க.
வாங்க இவன் வாங்க. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி :):):)
D for தினத்தந்தி தான், நான் முதல் முதலில் எழுத்துக்கூட்டி தமிழ் படித்தது இதில்தான். அதனால் மற்ற தினசரிகளைவிட இதன் மேல் எனக்குக் கொஞ்சம் பிரியம் ஜாஸ்தி
//
நானும் தான் ராப். 3/ம் வகுப்பு படிக்கும் ேபாேத தினத்தந்தியின் வாசகன் நான்.
ஆஹா, விஜய் அநியாயத்துக்கு காலையில நாலு மணியா, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............
சும்மா சொன்னேன், ஆனாலும் நீங்க தொடர்ந்து படித்ததற்கு ரொம்ப நன்றிங்க.
//இந்த தளத்தால் இப்படியும் ஒரு பயன் இருக்கா//
வந்ததற்கும் பின்னூட்டமிட்டதற்கும் ரொம்ப நன்றிங்க முரளிக்கண்ணன். நானெல்லாம் வேற எப்படி யோசிப்பேன் :):):)
ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ண கட்டுதே!
இப்படி என்னை மாதிரி ஒரு சோம்பேறிய டேக் எழுத வைக்கனுமா? கொஞ்சம் டைம் வேணும். ட்ரை பண்றேன். :)
//நானும் தான் ராப். 3/ம் வகுப்பு படிக்கும் ேபாேத தினத்தந்தியின் வாசகன் நான்//
ஆமாங்க, கிட்டத்தட்ட தமிழ் படிக்கத் தெரிஞ்ச பலரும் இதை வெச்சுத்தான் ஆரம்பிச்சு இருக்காங்கன்னு நினைக்கிறேன்:):):)
வந்ததற்கும், பின்னூட்டமிட்டதற்கும் ரொம்ப நன்றிங்க anandrey
ராப், உங்க மேக்கப் டிப்ஸ் ப்ரமாதம்.
கல்யாணத்துக்கு முந்தி தெரிஞ்சு இருந்தா நாலஞ்சு சப்பாத்திகளிடம் எடுத்து விட்டு குட் பாய் பேர் வாங்கி இருப்பேன். :p
ஆனா இப்ப சொன்னா தங்கமணி தாளிச்சுடுவாங்க. :))
எதுக்கு வம்பு? நான் இந்த சைட்டுக்கே வரலை, எதையும் படிக்கலை. :)
வாங்க முத்து வாங்க, வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றிங்க.
//ஒருவேளை நியாபக மறதில தான் விட்டுருப்பீங்க போல//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........
//எனக்கு பழக்கமில்லாததெல்லாம் இருக்கு பார்க்கனும் //
எனக்கு பொழுதுபோக்கா இருந்தாத்தான் தினமும் விசிட் பண்ணப் பிடிக்கும். அதால என்னோடதுல முக்காவாசி ரொம்ப செல்பிஷ் செலக்ஷனா இருக்கும், நெறயப் பேருக்கு போரடிக்கும். நீங்க விசிட் பண்ணிட்டு சொல்லுங்க, உங்களுக்கு எதாவது பிடிச்சிருக்கான்னு :):):)
ராப்,
மொத்தம் 39 கமெண்ட்ல 29 நீங்களும் கயல்விழியும்..ம்ம்ம்.ம். நாங்க எல்லாம் ஓரமா உக்காந்து பாத்துட்டு இருகக வேண்டியது தான். செரி, எதனா ஒளரலாம்னாலும் மேட்டரு வேற நமக்கு சம்மந்தம் இல்லாம இருக்கு. நான் போடற ஒரே மேக்கப் மூஞ்சில கொஞ்சம் ஜில்லுன்னு தண்ணி...அப்புறம் ரெண்டு கையாலயும் தலமுடிய கோதி விடறது...ம்ம்..ம்...நீங்க பேசுங்க அம்மணி....நாங்க கேக்றோம்..அது தான் எங்க லெவலுக்கு சரி.....
//நிறைய படிக்கிறவங்களாலதான் நல்லா எழுத முடியும்னு சொல்வாங்க. உங்களைப் பொறுத்தவரை அது நூறு சதவீதம் சரி//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................... இப்படியெல்லாம் கலாசக் கூடாது. என்னை ரொம்ப 'நல்லவ'ன்னு சொல்லாம சொல்றீங்க, அதிருக்கட்டும் என்ன நீங்க குசும்பன் சாரோட பதிவுல ஜெ.கே.ரித்தீஷ்னு டைப்பிட்டீங்க, தலயோட தலையெழுத்து ஜே.கே. ரித்தீஷ் ஆச்சே. இனி கவனமா டைப்போனும், சரிங்களா:):):)
//இப்படி என்னை மாதிரி ஒரு சோம்பேறிய டேக் எழுத வைக்கனுமா? கொஞ்சம் டைம் வேணும். ட்ரை பண்றேன்//
அம்பி அண்ணா, என்னை ஜம்புவை எல்லாம் ஊக்கப்படுத்தனீங்க இல்ல, இப்போ அதோட பலனை அனுபவிங்க :):):)
//அதிருக்கட்டும் என்ன நீங்க குசும்பன் சாரோட பதிவுல ஜெ.கே.ரித்தீஷ்னு டைப்பிட்டீங்க, தலயோட தலையெழுத்து ஜே.கே. ரித்தீஷ் ஆச்சே. இனி கவனமா டைப்போனும், சரிங்களா:):):) //
சரிங்க :))))
//தலயோட தலையெழுத்து// :)))
நல்ல தொகுப்பு.
/
மோகன் கந்தசாமி said...
18 -ல் 12 கமென்ட் மேக்கப் பத்திதான் போலிருக்கே! மேக்கப் போடவே மணிக்கணக்கில் நேரமெடுப்பவர்களாயிற்றே பெண்கள். விவாதம் என்றால் சும்மாவா?
இண்ட்ரஸ்ட்டிங்! :-))
/
வெரி வெரி இண்ட்ரஸ்ட்டிங்! :-))
//இப்ப சொன்னா தங்கமணி தாளிச்சுடுவாங்க//
ரொம்ப சரியான விஷயத்தை சொல்லி இருக்கீங்க அண்ணே, தொண்ணூறு சதவிகித பெண்களுக்கு கணவர்கள் வாங்கித் தரும் மேக்கப் சம்பந்தமான ப்ராடெக்ட்ஸ் பிடிக்காது, திரும்பவும் மாத்திக்க ஓடறது, அது சத்தியமில்லைனா, அந்த கடுப்ப கணவன் மேல காட்டறதுன்னு எப்படியும் ஒரு பொழுதுபோக்குக்கு தயாராகிடுவாங்க. ரங்கமணிகளின் நிலைதான், சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாகிடும் :):):)
அசத்தறீங்க ராப்,
கமெண்ட் போட்டுட்டு அது உங்க பதிவுல வரத்துக்குள்ள 4 கமெண்ட் புதுசா.....வாவ்.... வாழ்த்துகள்பா!!!!!!!!!!
//கல்யாணத்துக்கு முந்தி தெரிஞ்சு இருந்தா நாலஞ்சு சப்பாத்திகளிடம் எடுத்து விட்டு குட் பாய் பேர் வாங்கி இருப்பேன்//
ஆஹா அதில் வேற ஒரு ஆபத்து+உள்குத்து இருக்குண்ணே, நல்லவேளை நீங்க அப்படி செய்யலை
//நான் போடற ஒரே மேக்கப் மூஞ்சில கொஞ்சம் ஜில்லுன்னு தண்ணி...அப்புறம் ரெண்டு கையாலயும் தலமுடிய கோதி விடறது//
பொண்ணுங்களை கவர் பண்றதுக்கு இதுதான் ஆல்டைம் சீக்ரெட். இதே நேச்சுரல் லுக்குக்கு தான் பலப் பேர் எக்கச்சக்கமா செலவு பண்றாங்க :):):)
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க vijay
////இப்ப சொன்னா தங்கமணி தாளிச்சுடுவாங்க//
ரொம்ப சரியான விஷயத்தை சொல்லி இருக்கீங்க அண்ணே, தொண்ணூறு சதவிகித பெண்களுக்கு கணவர்கள் வாங்கித் தரும் மேக்கப் சம்பந்தமான ப்ராடெக்ட்ஸ் பிடிக்காது, திரும்பவும் மாத்திக்க ஓடறது, அது சத்தியமில்லைனா, அந்த கடுப்ப கணவன் மேல காட்டறதுன்னு எப்படியும் ஒரு பொழுதுபோக்குக்கு தயாராகிடுவாங்க. ரங்கமணிகளின் நிலைதான், சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாகிடும் :):):)//
அய்யோ...அய்யோ!!!!
அம்பி சொன்ன அர்த்தமே வேற.... செரி எனக்கு எதுக்கு வம்பு... நான் வாய வச்சிட்டு சும்மா இருக்கேன்பா....
அம்பி?
வூட்டுகார அம்மா உங்க பதிவு மட்டும்தானே படிக்கிறாங்க? உங்க பின்னூட்டம் எல்லாம் படிக்கிறது இல்லியே? :P
வெண்பூ, ரொம்ப நன்றிங்க, உடனடியா ஒத்துக்கிட்டதால உங்களை நாயகன் முத நாள் முத ஷோ பாக்கவெக்கனும்னு எடுத்து இருந்த மன்றத்து முடிவை நாங்க வாபஸ் வாங்கிக்கறோம்
வந்ததற்கும் பின்னூட்டமிட்டதற்கும் ரொம்ப நன்றிங்க சிவா, நான் உங்க ப்ளாக்ல கேட்ட கேள்விக்கு எப்போ பதில் சொல்லப் போறீங்க?
vijay, கும்மி ஆரம்பிச்சாசுல்ல, எனக்கு அம்பி அண்ணன் சொன்னது புரிஞ்சது, ஆனா புரிஞ்சா மாதிரி காமிச்சா நான் ஒரு ஜிஸ்டர் இல்லன்னு ஆகிடும்ல, அதான் :):):) அப்டியே அதை டிப்ஸா மாத்திட்டேன்
ஆஹா நானா, என்னோட முதல் கவிதை என்ற உன்னதப் பதிவை படிச்சப்புறமுமா, இம்புட்டு தெகிரியம் உங்களுக்கு. சரி இன்னும் ஒரு வாரத்துக்குள்ள எதாவது புதுசா ட்ரை பண்ணி, எப்படி நொந்தேன்னு போடறேன், அப்போ பாக்கலாம் உங்க ரியேக்ஷன
/
rapp said...
வந்ததற்கும் பின்னூட்டமிட்டதற்கும் ரொம்ப நன்றிங்க சிவா, நான் உங்க ப்ளாக்ல கேட்ட கேள்விக்கு எப்போ பதில் சொல்லப் போறீங்க?
/
அடடா இன்னுமா நீங்க அதை மறக்கலை!?!?!?
அவ்வ்வ்வ்
//பொண்ணுங்களை கவர் பண்றதுக்கு இதுதான் ஆல்டைம் சீக்ரெட். இதே நேச்சுரல் லுக்குக்கு தான் பலப் பேர் எக்கச்சக்கமா செலவு பண்றாங்க :):):)//
வேணாம்.... அழுதுருவேன்.... அந்த ஒரே மேக்கப்க்கும் தீ வச்சிட்டீங்களா? நல்லா...ஆஅ... இருங்கப்பா!!!
உங்க பின்னூட்டம் படிச்சிட்டு என் சகதர்ம்ம்மிணி திரிபுரம் எரித்த கண்ணகியா என்ன பாத்து "ம்ம்ம்...ம்.... நான் அப்பவே நெனச்சேன். என்னாடா தலைய ரொம்பதான் கோதி விடறீங்களேன்னு!!.. இனி ஒரு தரம் விரலு தலைக்குள்ள போச்சினா...ம்ம்ம்....ம்"ன்னுட்டு போறா..
அவ்வ்வ்வ்........
//vijay, கும்மி ஆரம்பிச்சாசுல்ல, எனக்கு அம்பி அண்ணன் சொன்னது புரிஞ்சது, ஆனா புரிஞ்சா மாதிரி காமிச்சா நான் ஒரு ஜிஸ்டர் இல்லன்னு ஆகிடும்ல, அதான் :):):)//
தலைவியா? கொக்கா? கலக்கிட்டீங்க ராப்...
ROTFL....:)))
நான் என்னங்க பண்றது, ஆர்வம் தாங்க முடியல, அவங்க இப்போ ஆன்சைட்ல அங்க இருக்காங்களா, இல்லை ஜெர்மனிக்காரங்களா, இல்லை சென்னைக்காரங்களான்னு தெரிஞ்சுக்கணும், என்னை மாதிரி ஒரு பிறவிக்கு இந்த மாதிரி விஷயத்தில் சஸ்பென்ஸ் வெச்சா தாங்காது.ஒரு கல்யாணப் பத்திரிகை பக்கத்து வீட்டுக்கு வந்தாக் கூட கெஞ்சி வாங்கி, அனாலிசிஸ் பண்ற ஆள் நான். இந்த ஆர்வக்கோளாறு கூடப் பிறந்தது.
//உங்க பின்னூட்டம் படிச்சிட்டு என் சகதர்ம்ம்மிணி திரிபுரம் எரித்த கண்ணகியா என்ன பாத்து "ம்ம்ம்...ம்.... நான் அப்பவே நெனச்சேன். என்னாடா தலைய ரொம்பதான் கோதி விடறீங்களேன்னு!!.. இனி ஒரு தரம் விரலு தலைக்குள்ள போச்சினா...ம்ம்ம்....ம்"ன்னுட்டு போறா..//
இத இத இதத்தான் எதிர்பார்த்தேன். இந்த மாதிரி சேவை செய்யும் வாய்ப்பு இருக்கும்போது வேறென்ன வேண்டும் வாழ்க்கையில சொல்லுங்க.
/
rapp said...
நான் என்னங்க பண்றது, ஆர்வம் தாங்க முடியல, அவங்க இப்போ ஆன்சைட்ல அங்க இருக்காங்களா, இல்லை ஜெர்மனிக்காரங்களா, இல்லை சென்னைக்காரங்களான்னு தெரிஞ்சுக்கணும், என்னை மாதிரி ஒரு பிறவிக்கு இந்த மாதிரி விஷயத்தில் சஸ்பென்ஸ் வெச்சா தாங்காது.ஒரு கல்யாணப் பத்திரிகை பக்கத்து வீட்டுக்கு வந்தாக் கூட கெஞ்சி வாங்கி, அனாலிசிஸ் பண்ற ஆள் நான். இந்த ஆர்வக்கோளாறு கூடப் பிறந்தது.
/
அவ்வ்வ்வ்
கொஞ்சம் பொறுத்துக்கங்க பதிவே போட்டு தாக்கீருவோம்
:)))
//ஆஹா நானா, என்னோட முதல் கவிதை என்ற உன்னதப் பதிவை படிச்சப்புறமுமா, இம்புட்டு தெகிரியம் உங்களுக்கு. சரி இன்னும் ஒரு வாரத்துக்குள்ள எதாவது புதுசா ட்ரை பண்ணி, எப்படி நொந்தேன்னு போடறேன், அப்போ பாக்கலாம் உங்க ரியேக்ஷன//
//நான் என்னங்க பண்றது, ஆர்வம் தாங்க முடியல, அவங்க இப்போ ஆன்சைட்ல அங்க இருக்காங்களா, இல்லை ஜெர்மனிக்காரங்களா, இல்லை சென்னைக்காரங்களான்னு தெரிஞ்சுக்கணும், என்னை மாதிரி ஒரு பிறவிக்கு இந்த மாதிரி விஷயத்தில் சஸ்பென்ஸ் வெச்சா தாங்காது.ஒரு கல்யாணப் பத்திரிகை பக்கத்து வீட்டுக்கு வந்தாக் கூட கெஞ்சி வாங்கி, அனாலிசிஸ் பண்ற ஆள் நான். இந்த ஆர்வக்கோளாறு கூடப் பிறந்தது.//
//மங்களுர் சிவா said.
அவ்வ்வ்வ்
கொஞ்சம் பொறுத்துக்கங்க பதிவே போட்டு தாக்கீருவோம்
:))) //
எனக்கு தலையும் புரியலை. வாலும் புரியலை...
அழகாய் வரிசைப்படுத்திரியுக்கீங்க. ;-)
நல்ல லிஸ்ட் ராப்!!
உங்க மேக்கப் சாட்டிங் இன்ட்ரஸ்டிங்!!
:-)
//அவ்வ்வ்வ்
கொஞ்சம் பொறுத்துக்கங்க பதிவே போட்டு தாக்கீருவோம்//
ஹை ஜாலி, சீக்கிரம் போடுங்க, மிக மிக ஆவலா எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன் :):):)
// //ஆஹா நானா, என்னோட முதல் கவிதை என்ற உன்னதப் பதிவை படிச்சப்புறமுமா, இம்புட்டு தெகிரியம் உங்களுக்கு. சரி இன்னும் ஒரு வாரத்துக்குள்ள எதாவது புதுசா ட்ரை பண்ணி, எப்படி நொந்தேன்னு போடறேன், அப்போ பாக்கலாம் உங்க ரியேக்ஷன// //
அடக் கொடுமையே, நான் இங்க வேற அதை போட்டுட்டேனா, வேறொன்னும் இல்லைங்க vijay பரிசல்காரன் அவர்களின் பதிவுக்குப் போட்ட பின்னூட்டம், இங்கயும் மறந்து போய் தட்டிவிட்டேன் போலருக்கு.
//
//நான் என்னங்க பண்றது, ஆர்வம் தாங்க முடியல, அவங்க இப்போ ஆன்சைட்ல அங்க இருக்காங்களா, இல்லை ஜெர்மனிக்காரங்களா, இல்லை சென்னைக்காரங்களான்னு தெரிஞ்சுக்கணும், என்னை மாதிரி ஒரு பிறவிக்கு இந்த மாதிரி விஷயத்தில் சஸ்பென்ஸ் வெச்சா தாங்காது.ஒரு கல்யாணப் பத்திரிகை பக்கத்து வீட்டுக்கு வந்தாக் கூட கெஞ்சி வாங்கி, அனாலிசிஸ் பண்ற ஆள் நான். இந்த ஆர்வக்கோளாறு கூடப் பிறந்தது.//
//மங்களுர் சிவா said.
அவ்வ்வ்வ்
கொஞ்சம் பொறுத்துக்கங்க பதிவே போட்டு தாக்கீருவோம்
:))) //
//
இது தெரியாதா உங்களுக்கு, அவரும் விரைவில் ரங்கமணிகளின் கழகத்தில் இணைய இருக்கிறார், அது சம்பந்தமாத்தான் இந்த உரையாடல் :):):)
ரொம்ப ரொம்ப நன்றிங்க மைபிரெண்ட். என்னையும் நீங்க பார்க்கும் வலைப்பூக்களின் லிஸ்டில் சேர்த்ததுக்கு ரொம்ப நன்றி :):):)
சந்தனமுல்லை, ரொம்ப ரொம்ப நன்றிங்க. நீங்க எனக்கு கொசுவத்தி சுத்த விட்ட மாதிரி யாருமே செய்ததில்லை. ஒரு முறை bally sagoo பத்தி எழுதின பதிவை படிச்சிட்டு, அது ஒரு அழகிய நிலாக்காலம்னு மனசு ஒரே பாரமாகிடுச்சி. எனக்கும் உங்களை மாதிரி ஒரு சகோதரி இருக்காங்க. நீங்க எழுதறத வெச்சுப் பாக்கும்போது அப்படியே அவங்க ஞாபகம் தான் வருது :):):)
வந்ததற்கும் பின்னூட்டமிட்டதற்கும் ரொம்ப நன்றிங்க
//
அதில் நான் லிப் ப்ராடெக்ட்ஸ் மட்டும்தான் வாங்கினேன்(மற்றதை வாங்க வழக்கம்போல் தயக்கமாகவும், விலை குற்ற உணர்ச்சியும் ஏற்படுத்துகிறது). சேல்சிலும் அவைகள் தான் கோடையில் இங்கு ஹாட். மத்ததெல்லாம் இலையுதிர்காலம் முடியும்போதுதான் சூடு பிடிக்கும் போலிருக்கு.
//
மேக்கப் மட்டும் இல்லை, எல்லா ப்ராடக்டுமே புதுசா மார்க்கெட் வரும் போது விலை அதிகமா தான் இருக்கும் போகப்போக குறையும். ஒரு நல்ல செய்தி, இப்போ ரெவ்லானும், லொரியலும் கூட மினரல் மேக்கப் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அடுத்து Cover girl அறிமுகப்படுத்தினால் போதும், உடனே மினரல் மேக்கப் கூட சேலில் வந்துவிடும். அந்த பொன்னான நாளை தான் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்(உலகத்தில் யார் யாரோ எதை எதையோ எதிர்ப்பார்க்க நான் என்ன எதிர் பார்க்கிறேன் கவனிச்சீங்களா? :) :))
நானும் உங்களோட சேர்ந்து ஆர்வமா இருக்கேங்க கயல்விழி :):):)
என்ன பிரச்சினைனா, கிருஸ்துமஸ் ஷாப்பிங் சீசன் ஆரம்பிக்கும் போதுதான் இங்கு எல்லாரும் இதில்(மேக்கப்) ஆர்வம் காமிப்பார்கள். துணைக்கு பிரெண்ட்சில்லாமல் அங்க போய் என்ன வாங்குறது? விண்டோ ஷாப்பிங் பண்ணக் கூட போரடிக்கும். அப்போக் கூட நான் இவைகள் வாங்குவேனாங்கறது சந்தேகம்தான், இப்போல்லாம் மற்ற ஆக்சசரீஸ் வாங்கத்தான் மனசு பரபரங்குது :):):)
நிறைய புது இணைய தளங்கள் நன்றி
கயல், ராப்,
கண்ணே கட்டுதே. இருக்கிறது ஒரு முகம். அதை போட்டு இந்த பாடு படுத்தினா எப்படி.
மோகன், சின்ன பையன், அம்பி,
வாங்க வாங்க நாம எல்லாம் இதை படிக்க மட்டும் தான் செய்யணும்
முத்துலெட்சுமி-கயல்விழி
நல்லா புடிச்சீங்க ராப்'ஐ
kayal said,
// அந்த பொன்னான நாளை தான் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்(உலகத்தில் யார் யாரோ எதை எதையோ எதிர்ப்பார்க்க நான் என்ன எதிர் பார்க்கிறேன் கவனிச்சீங்களா? :) :)) //
அவன் அவனுக்கு அவன் அவன் பிரச்சனை
rapp,
Biersdorf and Schwarzkopf products kooda nalla irukumae. almost many fashion shops, they use this brands.
sk, வந்ததற்கும் பின்னூட்டமிட்டதற்கும் ரொம்ப நன்றி.
//முத்துலெட்சுமி-கயல்விழி
நல்லா புடிச்சீங்க ராப்'ஐ//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................. எனக்குப் புரியலங்க.
//
Biersdorf and Schwarzkopf products kooda nalla irukumae. almost many fashion shops, they use this brands//
உங்களோட பரிந்துரைக்கு ரொம்ப நன்றிங்க. மற்றபடி இப்போதைக்கு வேறெந்த ப்ரான்டையும் உபயோகப்படுத்தறதா இல்லை. எல்லாத்தையும் ட்ரை பண்ணி பண்ணி போரடிச்சிடுச்சி :):):)
கவிதாயினி ராப். இன்னும் கண்ணீர் அஞ்சலிதான் கண்ணுல படுது.அதனால மனசத்தேத்திகிட்டு அப்புறம் வர்றேன்.
இருந்தாலும் போறதுக்கு முன்னாடி கண்ணுல பட்டது ஏ ஃபார் ஆப்பிள்.சரி.அப்ப எ ?
வாங்க ராஜ நடராஜன், நீங்க நேரம் கிடைக்கும்போது பொறுமையா படிங்க :):):)
//இருந்தாலும் போறதுக்கு முன்னாடி கண்ணுல பட்டது ஏ ஃபார் ஆப்பிள்.சரி.அப்ப எ ?//
ஏன் இந்த கொலைவெறி, எம்புட்டு பேர் எனக்கு முன்னே இதை போட்டாங்க, அங்க யாராச்சும் இப்படியெல்லாம் வெறுப்பேத்தினீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............
மொத்த பின்னூட்டத்தையும் படிச்சு முடிச்சா என் மூஞ்சி கமல் மாதிரி ஆன ஃபீலிங். அப்பாடி எம்புட்டு மேக்கப்பு???
:))
சிவாஆஆஆ?
தாமிரா பதிவையும் என் பின்னூட்டத்தையும் படிச்சிட்டும்..!!!...!!!..!!!.. செரி ..விடு...விடு.... விதி யார விட்டுது? :P
சும்மா.... ஜாலியா சொன்னது சிவா, கண்டுக்காதீங்க!!!!!! வாழ்த்துக்கள் சிவா. வாங்க!!! வாங்க!!! சங்கத்துல சேருங்க.... ம்ம்...ம்ம்.ம்...
ராப்,
நன்றி தகவலுக்கு......
/
Vijay said...
சிவாஆஆஆ?
தாமிரா பதிவையும் என் பின்னூட்டத்தையும் படிச்சிட்டும்..!!!...!!!..!!!.. செரி ..விடு...விடு.... விதி யார விட்டுது? :P
/
ஹா ஹா
அதானே விதி வலியது!!
:)))))
நன்றி விஜய்
அப்துல்லா அண்ணே, மேக்கப்பை பொறுத்தவரை ஒவ்வொன்னா உபயோகப்படுத்தி அதில் ஒரு பிராண்ட் நமக்கு செட்டாகும்போது ஏற்படுற உணர்விருக்கே, அதை வார்த்தைகளால விவரிக்க முடியாது :):):)
ரொம்ப நன்றிங்க vijay
சிவா, யாரோட விதியை பத்தி பேசறீங்க? உங்களோடதா, இல்லை அண்ணியோடதா?
ராப் அவர்களே தங்களுக்கு என்ன புரியவில்லை
அப்துல்லா அண்ணே சொன்னாரு
// மொத்த பின்னூட்டத்தையும் படிச்சு முடிச்சா என் மூஞ்சி கமல் மாதிரி ஆன ஃபீலிங். அப்பாடி எம்புட்டு மேக்கப்பு???//
நீங்க தசாவதாரம் பாட்டி யோசிச்சு தானே சொன்னீங்க :-) :-)
/
rapp said...
சிவா, யாரோட விதியை பத்தி பேசறீங்க? உங்களோடதா, இல்லை அண்ணியோடதா?
/
ரெண்டும் வேற வேறயா????
:)))
எஸ்கே கிருஷ்ணவேணி பாட்டி என்ன, ஃப்ளெட்சரோட கூட கம்பேர் பண்ணிக்கங்க. எங்களுக்கு கவலையே கிடையாது. இந்த உலகத்தை ரசிக்க தனி ரசனை வேணும் :):):)
//முத்துலெட்சுமி-கயல்விழி
நல்லா புடிச்சீங்க ராப்'ஐ//
இதுதான் புரியலன்னு சொன்னேங்க
ஆஹா சிவா, செமக் கலக்கலான பதில். நீங்க ரெண்டு பேரும் வாழ்நாள் முழுக்க இப்படியே இருக்க வாழ்த்துக்கள் :):):)
SK said...
நீங்க தசாவதாரம் பாட்டி யோசிச்சு தானே சொன்னீங்க :-) :-)
//
அண்ணே! நீங்கதான்ணே நம்பள கரெக்டா புருஞ்சுக்கிட்ட ஆளூ :)))
//சிவா, யாரோட விதியை பத்தி பேசறீங்க? உங்களோடதா, இல்லை அண்ணியோடதா?
/
ரெண்டும் வேற வேறயா????
:))) //
இப்பவேவா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....... டயம் லிமிட் கூட வேணம் போல இருக்கே? ரோஓம்ம்ம்ம்ம்பபப தான் தயாராஆ... இருக்கீங்க போல இருக்கே? செரிதான்பா... நல்ல பேரு எடுத்துருவீங்க....
பாருங்க இப்போவே ராப் என்னமா பாராட்டுராங்க.... ம்ம்ம்....நடத்துங்க .... நடத்துங்க
//ஆஹா சிவா, செமக் கலக்கலான பதில். நீங்க ரெண்டு பேரும் வாழ்நாள் முழுக்க இப்படியே இருக்க வாழ்த்துக்கள் :):):)//
:)))) Make-up item paththuna discussionthaan oru ezavum viLangala
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றிங்க அப்துல்லா அண்ணா,
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றிங்க vijay, ஆமா சிவா சொன்ன பதில் சூப்பர்
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றிங்க ஜி, உங்களுக்கு புரியாதது ஒரு வகைல நல்ல விஷயம். உங்க எதிர்கால மனைவி இஷ்டத்துக்கு ஷாப்பிங் பண்ணாலும் உங்களாலே கண்டுப்பிடிக்க முடியாது, அவங்க மனசும் குளிர்ந்து போகும் :):):)
100
ஹய்யா..... நாந்தான் 100... பயந்தே போய்ட்டேன். எங்க சான்ஸ் போய்டுமோன்னு... இனி நிம்மதியா தூங்கலாம். :)))
//Raap said
பெண் மாதிரித்தான் இருந்தேன்(நடித்தேன்), அப்புறம் மற்ற பிசாசுகளோட பிசாசா இரண்டறக் கலந்திட்டேன்
Kayal Said
நானும் தான் :)//
ithuthan enakku comments le purincha 3 lines..:))
Good collection Raap..Thanx
Even i read most these sites daily..
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com
//rapp said...
ஆஹா, விஜய் அநியாயத்துக்கு காலையில நாலு மணியா, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............
சும்மா சொன்னேன், ஆனாலும் நீங்க தொடர்ந்து படித்ததற்கு ரொம்ப நன்றிங்க//
please visit my blog
http://pugaippezhai.blogspot.com/
கோவையில் தேசபிதாவின் மறுபிறப்பு...
http://pugaippezhai.blogspot.com/2008/07/blog-post_24.html
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com
அடேயப்பா.. எவ்ளோ புது புது தளங்கள்.. எல்லாத்தையும் ஒரு ரவுண்டு வலம் வரேன்... அழைப்பை ஏற்று ஏராளமான புதிய தளங்களை எங்களுக்கு அறிமுகப் படுத்திய எங்க மன்றத்து தலைவிக்கு ஒரு பெரிய "ஓ"...
//இதையும்( guruji.com) நான் அவ்வப்போது உபயோகிப்பதுண்டு.//
அட இதை நான் மறந்துட்டேன்.. இதன் ஆரம்ப காலத்துல இருந்தே உபயோகிக்கிறேன். இப்போ புதுசா இசை சேவை வந்திருக்கு.. புதுமையாவும் அழகாவும் இருக்கு. :)
//மோகன் கந்தசாமி said...
18 -ல் 12 கமென்ட் மேக்கப் பத்திதான் போலிருக்கே! மேக்கப் போடவே மணிக்கணக்கில் நேரமெடுப்பவர்களாயிற்றே பெண்கள். விவாதம் என்றால் சும்மாவா?
இண்ட்ரஸ்ட்டிங்! :-))//
லைட்டா ஒரு ரிப்பீட்டு :))
அடடே, vijay நீங்கதான் நூறாவதா? ரொம்ப ரொம்ப நன்றிங்க. இன்னையில இருந்து நீங்கதான் சிவா அவர்களுக்கு அடுத்து சிறந்த கும்மிப்பதிவரா இந்த கும்மி பதிவர்கள் உலகத்தில் தேர்ந்தேடுக்கப்படுகிறீர்கள் :):):) மறுபடியும் ரொம்ப ரொம்ப நன்றிங்க
உங்களோட வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க வழிப்போக்கன். ஹா ஹா ஹா, அது மட்டும் தான் புரிஞ்சதா, இதுவும் ஒருவகைல நல்லதுதான். எப்படியோ இந்த தீபாவளிக்கு ஊருக்கு போறீங்க, எங்கள மூணு மாசம் முன்னயே கடுப்பேத்திட்டீங்க
விஜய் கண்டிப்பா வருகிறேன். நான் எப்படியும் இன்றைக்கு வந்திருப்பேன். நேற்றைக்கு என் பதிவில் பதில் போட்டதால்தான் வர இயலவில்லை. இன்று கண்டிப்பா வருவேன் :):):)
அடடே, சஞ்சய் ரொம்ப ரொம்ப நன்றிங்க. என்னை நீங்க அழைச்சதே எனக்கு ரொம்ப ஆச்சர்யம் ப்ளஸ் சந்தோஷம். உங்களோட வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க :):):)
இங்ஙனம்,
இராப்
தலைவி
அகில உலக அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்
//Sanjai said,
//மோகன் கந்தசாமி said...
18 -ல் 12 கமென்ட் மேக்கப் பத்திதான் போலிருக்கே! மேக்கப் போடவே மணிக்கணக்கில் நேரமெடுப்பவர்களாயிற்றே பெண்கள். விவாதம் என்றால் சும்மாவா?
இண்ட்ரஸ்ட்டிங்! :-))//
லைட்டா ஒரு ரிப்பீட்டு :))//
:):):)
//வாங்க ராஜ நடராஜன், நீங்க நேரம் கிடைக்கும்போது பொறுமையா படிங்க :):):)
//இருந்தாலும் போறதுக்கு முன்னாடி கண்ணுல பட்டது ஏ ஃபார் ஆப்பிள்.சரி.அப்ப எ ?//
ஏன் இந்த கொலைவெறி, எம்புட்டு பேர் எனக்கு முன்னே இதை போட்டாங்க, அங்க யாராச்சும் இப்படியெல்லாம் வெறுப்பேத்தினீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............//
அய்யோ....அய்யோ!!!!
இதுக்கு போய் இவ்ளோ யோசிப்பா? சிம்பிள் பா!!!!
ஏ ஃபார் ஆப்பிள்.
அப்போ
எ ஃபார் அப்பிள் தானே வரும்?
:P
புது பதிவு போட்டாச்சு. நேரம் கிடைக்கும் போது வரவும்
//p said...
விஜய் கண்டிப்பா வருகிறேன். நான் எப்படியும் இன்றைக்கு வந்திருப்பேன். நேற்றைக்கு என் பதிவில் பதில் போட்டதால்தான் வர இயலவில்லை. இன்று கண்டிப்பா வருவேன் :):):)//
புகைப்படப் பேழைக்கு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
//p said...
விஜய் கண்டிப்பா வருகிறேன். நான் எப்படியும் இன்றைக்கு வந்திருப்பேன். நேற்றைக்கு என் பதிவில் பதில் போட்டதால்தான் வர இயலவில்லை. இன்று கண்டிப்பா வருவேன் :):):)//
புகைப்படப் பேழைக்கு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
கவிதாயினி! மீண்டுமொரு வந்து பதிவை முழுதும் படித்தேன்.எல்லாமே புதுசு கண்ணா புதுசு.தினத்தந்தியைத் தவிர.
பின்னூட்ட எண்ணிக்கை இன்னும் வளரட்டும்.
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றிங்க vijay, விஜய், ராஜ நடராஜன்
என்ன எழுதினாலும் பின்னூட்ட மழை பெய்யுதே??? என்னமோ போங்க..
got some good links... thanks..
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றிங்க பாரத் :):):)
//எப்படியோ இந்த தீபாவளிக்கு ஊருக்கு போறீங்க, எங்கள மூணு மாசம் முன்னயே கடுப்பேத்திட்டீங்க
//
ஏதோ என்னால முடிஞ்ச நல்ல காரியம்.:))
சென்சுரி போட்டுட்டு இன்னும் போய்கிட்டே இருக்கிறீங்க...இதெல்லாம் ரெம்ம்ம்ம்ம்பா ஓவர்ங்க...:))
மேக்கப் கமெண்ட்லாம் களை கட்டுது :))
சில புதிய தளங்களை அறிந்துகொண்டேன். மிக்க நன்றி.
//மற்ற ஆக்சசரீஸ் வாங்கத்தான் மனசு பரபரங்குது :):):)
//
உங்களுக்கு வெறும் ஆக்சசரீஸ் வாங்க மட்டுமே பரபரங்குதா? எனக்கு மேசீஸ் மாதிரி கடைக்கு போனால் எல்லாமே வாங்கனும் போல இருக்கும்.
ட்ரெஸ், ஜீன்ஸ், டாப்ஸ், சாண்டல்ஸ்/பூட்ஸ், காஸ்ட்யூம் ஜுவல்லரி(தங்கம் பிடிக்காது என்பது ஒரு சின்ன ஆறுதல், கூடவே அமரிக்க கடைகளில் தங்க நகைகள் கொடுமையா இருக்கும்), மேக்கப், பெர்ஃப்யூம் இப்படி எல்லாமே வாங்கனும் என்று பரபரக்கும். வீக்கெண்ட் கூட மேசியில் "Tommy girl" பெர்ஃப்யூம் வாங்கி வந்தேன். நோய் முத்திப்போச்சு :(
மேக்கப் காமெண்ட்ஸ் ஏன் எல்லாரும் "இண்ட்ரெஸ்டிங்", "களை கட்டுது" என்றல்லாம் சொல்றாங்க? எனக்கு தெரிந்து இவர்கள் மேக்கப்பும் வாங்கப்போவதில்லை, கூட துணைக்கும் போகவும் விருப்பபடுவதில்லை.
வழிப்போக்கன் welcome back :):):)
டுபுக்கண்ணனா, அடடே அண்ணே, பயங்கர இன்ப அதிர்ச்சியா இருக்கு. நானும் தினமும் உங்க ப்ளாக திறந்து பார்த்து இன்னைக்காவது தொடர்ந்தீங்களான்னு பார்த்தா ரெண்டு வாரம் ஏமாத்திட்டீங்க. இப்போதான் வலைப்பதிவர் சந்திப்பு படங்கள் பார்த்தேன்.காலி தட்டோட எல்லாரும் போஸ் கொடுத்திருக்கீங்க :):):)
ரொம்ப ரொம்ப சந்தோஷம்
கயல்விழி, எனக்கு விதவிதமா கைக்கடிகாரம், கைப்பை, வித்தியாசமான பெல்ட்கள், சாண்டில்ஸ், அப்புறம் நம்ம டாப்ஸ் போடற ஹேங்கர்(வித்தியாச வித்தியாசமான வடிவங்களில்), காதணிகள் இதெல்லாம் பயங்கரமா பிடிக்கும். நீங்க ஒருமுறை opéra வந்தீங்கன்னா ரொம்ப விரும்புவீங்க. ஒரே நெகடிவ் விஷயம் இங்குள்ள எந்த போடீகிலும் சரி, ஷோரூம்களிலும் சரி தள்ளுபடியின் போது கூட எதையும் வாங்க மனசு வராது :):):) La Fayat உள்ள வந்தீங்கன்னா ஒரு நாள் முழுக்க இருந்தாலும் சலிக்காது. இங்க முக்காவாசி நான் எதையுமே வாங்க மாட்டேன். ஆனா விண்டோ ஷாப்பிங் பிடிக்கும்னா இதுதான் பெஸ்ட். la fayatகு வெளியே, உள்ள இருக்க அதே டிசைனர் ப்ராடக்ட்சொட டூப்ளிகேட் கிடைக்கும். கிடைக்காத டூப்ளிகேட் வகைகளே இல்லைங்கலாம். இதயெல்லாம் பராக்கு பாக்கறதுதான், என்னோட முக்கிய பொழுதுபோக்கு.
பெர்ப்யூம் மட்டும் எனக்கு என்னோட ரங்கமணிதான் வாங்கித்தருவார். எனக்கு அவர் வாங்கிக்கொடுத்த முதல் பரிசும் அதுதான். அன்றிலிருந்து நான் எப்பவுமே
nina ricci மட்டும்தான். அதுவும் அவர் முதலில் வாங்கிக்கொடுத்த அதே வகைதான்.
நிறையப் பேருக்கு மணிக்கணக்கா ஷாப்பிங் வருவது போரடிக்கும் இல்லைங்களா கயல்விழி. அதே சமயம் இதில் ஆர்வமுள்ளவர்கள் எப்படி ஷாப்பிங் செய்கிறார்கள்னு தெரிஞ்சிக்கவும் விருப்பப்படுவாங்க இல்லையா, அவங்க இப்படிப்பட்ட உரையாடல்களை படிக்கும்போது, அவங்களுக்கு இது இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். அதே மாதிரி சிலப் பெண்கள் இதை ஆண் நண்பர்களோட விவாதிக்க மாட்டாங்க இல்லைங்களா, ஏன்னா நேச்சுரல் லுக்ல இருக்கற மாதிரி மேக்கப் போட்டிருப்பாங்க இல்லையா :):):)
//மேக்கப் காமெண்ட்ஸ் ஏன் எல்லாரும் "இண்ட்ரெஸ்டிங்", "களை கட்டுது" என்றல்லாம் சொல்றாங்க? எனக்கு தெரிந்து இவர்கள் மேக்கப்பும் வாங்கப்போவதில்லை, கூட துணைக்கும் போகவும் விருப்பபடுவதில்லை.//
அய்யோ....அய்யோ!!!!! கயல்....
ஒரு விசயம் புரியலைன்னா உங்க ஊருல வேற எப்பிடி சொல்லுவாங்களாம்? :P
முதல்லயே படிச்சுட்டேன் ஆபீசர் (அ) தலைவி (அ) கவுஜாயினி...
ஆனா, நீங்களும் கயல்விழியும் ரொம்ப சீரியஸா டிஸ்கஷன்ல இருந்தீங்களா? அதான் டிஸ்டர்ப் பண்ணல.
ப்ரொஃபைல்ல மெய்ல் ஐ.டி. குடுக்காம இருக்கறதுல இவ்ளோ நன்மை இருக்கா? இப்போதான் தெரியுது! (பின்ன? மெய்ல் அனுப்பி பேசறதையெல்லாம், பின்னூட்டத்துலயே பேசி பின்னிடறீங்க! ஒரு நாள் விட்டா கமெண்ட் 128! அடேங்கப்பா! - ஹி..ஹி.. காண்டுதான்!)
ரொம்ப சீரியஸா ஒண்ணு சொல்லவா?
இவ்ளோ விஷயாஞானம் இருக்கற நீங்க அதிகமா எழுதாம இருக்கறதுதான் என்னை மாதிரி மொக்கைமன்னர்களுக்கு வசதியா போகுது.
ப்ளீஸ் நிறைய எழுதுங்க!
//முதல்லயே படிச்சுட்டேன் ஆபீசர் (அ) தலைவி (அ) கவுஜாயினி..//
சாரி.. சாரி.. ஒண்ணை குறிப்பிடாம விட்டுட்டேன். என் நண்பன் சென்ஷி கோவிச்சுக்குவாரு..
தங்கச்சிக்கா!
//இவ்ளோ விஷயாஞானம் இருக்கற நீங்க //
ஆஹா கிருஷ்ணா என்னை இப்படில்லாம் கலாசக்கூடாது. உங்க பின்னூட்டத்த படிச்சிட்டு ஒரு நிமிஷம் எனக்கே சந்தேகம் வந்து, நாம அப்படி ஏதாவது எழுதி இருக்கோமான்னு பார்த்தேன், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................ எனக்கே ஒன்னும் தெரியல, அப்புறம்தான் ஒரு விஷயம் நினைவு வந்துச்சு, நீங்க சாம் ஆண்டர்சன் மன்றத்து ஆளுன்னு :):):)
ஆனாலும் பாருங்க எனக்கு என்னை யாராவது பாராட்டினா ரொம்பப் பிடிக்கும், அதனால் ரொம்ப ரொம்ப நன்றி,(நீங்க பாராட்டித்தானே சொன்னீங்க)
////முதல்லயே படிச்சுட்டேன் ஆபீசர் (அ) தலைவி (அ) கவுஜாயினி..//
சாரி.. சாரி.. ஒண்ணை குறிப்பிடாம விட்டுட்டேன். என் நண்பன் சென்ஷி கோவிச்சுக்குவாரு..
தங்கச்சிக்கா!
//
ஆயிரம் பட்டங்கள் இருந்தாலும் என்னுடைய மன்றத்தலைவிப் பதவியை தான் நான் ரொம்ப பெருமையா நினைக்கறேன். பல போட்டிகளுக்கு நடுவில் அடைந்த பதவி என்றாலும், இந்தக் கடினமான பதவியை டீல் செய்வது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், தலயின் கட்டளைக்கு பணிந்து இதனை ஏற்று செயல்படுவதில் பெருமையடைகிறேன்
இங்ஙனம்
இராப்,
தலைவி,
அகில உலக அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்
me the 133th..
supernga
Post a Comment