Sunday, 13 July, 2008

சந்தேகங்கள்

எனக்கு சில சந்தேகங்கள் இருக்குங்க, யாராவது கொஞ்சம் தீர்த்து வைங்களேன்.

ஒருத்தரோட தனிப்பட்ட வாழ்க்கையில பண்ற தவறுகள பெரிதுபடுத்தி பாக்குற சமூகம், ஏங்க அவங்களே பொது வாழ்க்கையில பண்ற தவறுகள கண்டுக்கறதே இல்ல?
தனிப்பட்ட வாழ்க்கையில நல்லவங்களா இருக்கிறவங்க பொது வாழ்க்கையில தப்பான கருத்துக்களே வெச்சிருக்க மாட்டாங்களா?

ஒருத்தர் தனிப்பட்ட வாழ்க்கையில் தவறு செய்தால் ஏற்படுற பாதிப்பு ஒரு சிறிய வட்டத்தை தான் பெரும்பாலும் பாதிக்குது, இன்னும் அதில் சில விஷயங்களுக்கு பரிகாரம் செய்வதின் மூலம் பாதிப்பின் வீரியத்தை குறைக்கலாம். ஆனா இதுவே பொது விஷயத்தில் செய்யும்போது பெரும்பான்மையாக பாதிக்கப் படுபவர்களுக்கு பல சமயங்களில் எந்தப் பரிகாரமும் செய்ய முடிவதில்லை, அப்படி இருக்கும்போது இதற்கு கொஞ்சமாவது கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமா வேண்டாமா?

நான் மேலே சொன்ன விஷயங்களெல்லாம் பலருக்கும், பல விஷயங்களுக்கும் பொருந்தினாலும், இன்னைக்கு நம்மளோட தலையாய பிரச்சினை அணு ஒப்பந்தம் பற்றியும், அதை கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் ஆதரிக்கும் சாராரைப் பற்றியும்தான். இவர்கள் சொல்லுவதிலேயே முக்கியமானக் காரணம் மின்சாரத் தன்னிறைவாம்.

சரிங்க நான் இதை எதிர்க்கறேன்னா, எனக்கென்ன தெரியும் அடிப்படை தேவையான மின்சாரத்தைப் பற்றியும் அந்தப் பற்றாகுறையால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும்? எனக்கு இது பற்றி ஜாஸ்தி தெரியாதுதான், ஆனா ஒரு விஷயம் சுய புத்தி உள்ள எல்லாருக்குமே தெரியும், அது என்னன்னா, மின்சாரம் இல்லாமலோ, இல்ல அரைகுறையான மின்சார வசதிகளோடோ கூட மனிதன் வாழ்ந்திடலாம், ஆனா புற்றுநோய், தோல் வியாதிகள், மேலும் பல பிறவிக் குறைபாடுகளோட காலம் கடத்துவதுதான் நரகத்திலும் கொடூர நரகம்.

தெரியாமத்தான் கேக்குறேன், பாதுகாப்பு பாதுகாப்புன்னு பேத்துறீங்களே, நாட்ல நூறு வகையான அணு ஆயுதங்களை வெச்சுகிட்டா எல்லாரும் பயந்துடுவாங்களா, அழிக்க நினைக்கறவன் கையில் ஒண்ணிருந்தாலும் நூறிருந்தாலும் அதே விளைவுதானே. சரி இதை எதிர்க்கிறவங்களாவது கொஞ்சம் ஒழுங்கான காரணத்தை முழுசா சொல்லி எதிர்க்கிறாங்களா, அதுவும் இல்லை. நாம எப்படி அமரிக்காகிட்ட அடிமயாகலாம்னு எதிர்த்து பல வாதங்கள எழுப்புறவங்கக் கூட அணு உலைகளால் ஏற்படக் கூடிய சுற்றுச்சூழல் மற்றும் அதனை சார்ந்துள்ள உயிரினங்கள், விவசாயம், இவ்விரண்டையும் நம்பியுள்ள அனைத்து வகை தொழில்கள்னு எல்லாமே பயங்கர மோசமான விளைவுகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்கிற உண்மையான, அதி முக்கியமான வாதத்தை ஏன் வைக்க மாட்டேன் என்கின்றனர்.

நாட்டில் மேலும் மேலும் அணு உலைகள்(அது அமெரிக்க உதவியினாலாகட்டும், இல்லை பிரான்சு உதவியினாலாகட்டும் இல்லை நாமே யார் உதவியும் இன்றி ஏற்படுத்துபவைகளாகட்டும்) அமைப்பதனால் நாட்டின் எதிர்காலமே சூனியமாகாதா?

நாம் நம் நாட்டில் நிலவுகின்ற சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தானே முடிவெடுக்க வேண்டும். அதிலும் இறந்த காலத்தில் பிற நாடுகளில் செய்தவற்றை வைத்து எப்படி நம் நாட்டிற்கு நிகழ்கால மற்றும் எதிர்கால முடிவுகள் எடுக்க முடியும்? இந்த விஷயத்திற்கு எப்படி பிரான்சை முன்னுதாரணமாகக் கொள்ள முடியும், இப்பொழுது பிரான்சுலேயே சில அணு உலைகளை பொதுமக்களின் எதிப்பினால் மூடி விட்டார்களே, மேலும் பல ஆண்டுகளாக அணு உலைகள் புதிதாக அமைப்பதில்லயே, ஏன்?

சரி அணு உலைகள் அமைக்கிறோம் பின்னர் அதன் கழிவுகளை என்ன செய்வது? பிரான்ஸில் மற்றும் ஜப்பானில்(பிரான்சின் உதவியால் கட்டப்பட்டது) உள்ள அணுக்கழிவு ரீசைக்கிளிங் ஆலைகள்தான் இதற்கென வடிவமைக்கப் பட்டவை. ஆனால் இவ்விரண்டில் ஒன்று முற்றிலும் செயலிழந்து விட்டதென்றும், மற்றொன்றில் குவியும் கழிவுகளை ரீசைக்கிளிங் செய்து மாளாமல் அவ்வாலையிலேயே தேக்கி வைத்துள்ளனர் என்றும் படிக்கின்றோமே, நம் நாட்டில் என்ன செய்யப் போகிறோம்? அணுக்கழிவுகளை எவ்வாறு அகற்றப் போகிறோம்?

சரி இன்றில்லாமல் போகலாம் இன்னும் ஐம்பதாண்டுகளுக்குள்ளாக மாற்று ஏற்பாடை கண்டுபிடித்து விட மாட்டார்களா என்றால், இந்த விஷயத்தை பொறுத்த வரை பாதிப்பு கழிவினால் மட்டுமில்லை, உற்பத்தியினாலேயே உள்ளது, அதன் உபயோகத்தினாலேயே உள்ளது. என்னுடைய மிக நெருங்கிய உறவினர் என்ன ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார் என்றால், புற்று நோயிற்கு(குறிப்பாக மார்பக புற்று நோய்) அளிக்கப்படும் சிகிச்சையின்போது சில சமயம் பாதிக்கப்பட்டவரும், சில சமயம் சிகிச்சை அளிப்பவருமே கதிர் வீச்சின் மோசமான பாதிப்புக்குள்ளாகின்ற காரணத்தால், அதன் வீரியத்தை குறைப்பது அல்லது இந்த சிகிச்சயிலேயே சிறியளவில் மாற்றம் ஏற்படுத்த முடியுமா எனப் பார்ப்பது. நிலைமை இவ்வாறு இருக்கும்போது இன்றைய முன்னேற்றத்திற்கு ஏன் முட்டுக்கட்டை போடுகிறீர்கள் என்று எப்படி கேட்பது? முன்னேற்றத்தின் பலனை அனுபவிக்க ஆரோக்கியமான எதிர்கால சந்ததிகள் வேண்டாமா?

ஓரளவிற்கு சட்டத்தை ஞாயமாக செயல்படுத்தும் நாடான பிரான்சிலயே அனைத்து பாதுகாப்புகளும் செய்த பின்னரும் நிறைய நீர் வளங்கள் பாதிக்கப்பட்டுள்ளனவே, சாயப் பட்டறைகளின் அத்துமீறலை கூட சரியாக தட்டிக் கேட்காத நம் நாட்டின் நிலை என்னவாகும்? நாம் ஒரிஸ்ஸா கடற்கரையில் உள்ள தோரியத்தை வைத்து அணு உலைகள் அமைக்கலாமே எனச் சிலர் கூறுகின்றனர். அந்த அணு உலைகளால் எந்த பாதிப்பும் ஏற்படாதா? பாதுகாப்பு, மின்சாரம் எனக் கூறும் நாம் ஏற்கனவே அணு உலைகள் அமைந்த பகுதிகளில் என்னன்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளோம், கசிவு ஏற்பட்டால் எப்படி செயல்படுவது என்று. இதை தவிர வேறொன்றும் இல்லை. அணு உலைகள் அமைந்துள்ள இடங்களில் உள்ள வயல்களின் விவசாயப் பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்ற சட்டம் சில நாடுகளில் உள்ளது. ஏன் அங்குள்ள புற்களை உண்ணும் ஆடுகளை கூட உண்ணக் கூடாதென்கின்றனர். இவ்வளவு முக்கியமானப் பிரச்சினையில் வழ வழா கொழக் கொழா பதில்கள் சரிவருமா?

சரி எல்லாவற்றையும் விடுங்கள், பிரான்ஸில் பல ஆறுகளை பயன்படுத்த வேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தி, அதற்கு மாற்றையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது, நம் நாட்டில் அது கொஞ்சமாவது சாத்தியமா? நிலத்தடி நீரிலிருந்து அவ்வளவும் பாதிப்புள்ளாகி மோசமான நிலை ஏற்படாதா, அதற்கு மாற்று ஏற்பாடு செய்வது சாத்தியப்படுமா?

நம்முடைய முக்கிய ஆதார தொழிலான விவசாயம் முற்றிலும் அழிவுப்பாதையில் சென்றுவிடாதா? இதனால் நாட்டின் பொருளாதாரமே ஆட்டம் கண்டுவிடாதா? அனைத்து தொழில்களும் பலவீனமடயாதா? இன்றைய நிலையில் சாதாரண நோய்களுக்குக் கூட மருத்துவ வசதியின்றி பலர் வாழ்வு கேள்விக்குறியோடுள்ளது, நாளை இதன் பாதிப்புகளால் ஏற்படும் புதிய நோய்களுக்கும், அதற்கு தேவையான மருத்துவத்திற்கும் எங்கு செல்வீர்கள், பிறவி குறைபாடுகளை ஏற்படுத்தி சந்ததிகளையே பாதிக்கும் அளவிற்கு வல்லமை படைத்த இதனை நாம் போற்றித்தான் ஆக வேண்டுமா?

மின்சாரத் தன்னிறைவடைஞ்சு மென்பொருள் ஏற்றுமதி செஞ்சு ஈட்டுற அன்னியசெலாவனிய மருத்துவத்துக்கும், நஷ்ட ஈடுக்கும் தாரைவார்க்கப் போறோமா? இல்ல இந்த உலைகளை பாதுகாக்கும் பொருட்டு செலவிடப்போறோமா? மின்சார விளக்கோட ஸ்விட்சை போடுவதற்கு கண், கை, கால் செயல்பாடுகளும் நல்லா இருக்கணும்னு நினைக்கறது தானே பரந்த நோக்கமுடைய சிந்தனை? பல பயன்பாடுகளில் ஏற்கனவே நாம் அணுசக்தியை பயன்படுத்தத் தொடங்கி விட்டோம், அதனை எதுவும் செய்து தடுக்க முடியாது, உள்ள உலைகளை எல்லாம் மூடிவிடுவதும் தீர்வாகிவிடாது. ஆனால் மேலும் பல உலைகளை ஏற்படுத்த வேண்டாம் என்பதே இங்கு கூறப்படுகிறது.

நான் ஆரம்பத்தில் கேட்ட சிலக் கேள்விகள் இந்தப் பிரச்சினையிலும் சிந்திக்க வேண்டிய கட்டாயத்திற்குரியது. ஏனென்றால் மக்கள் ஒருவரின் மேல் வைக்கும் நம்பிக்கையை யாரும் தவறாக மட்டுமல்ல பொறுப்பில்லாமலும் பயன்படுத்தக் கூடாது. அது அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல பாடுபடுவதாய் கூறும் அனைத்து துறையினருக்குமே பொருந்தும்.

102 comments:

ambi said...

//மின்சார விளக்கோட ஸ்விட்சை போடுவதற்கு கண், கை, கால் செயல்பாடுகளும் நல்லா இருக்கணும்னு நினைக்கறது தானே பரந்த நோக்கமுடைய சிந்தனை?//

அருமையான கேள்வி. ஆனா பதில் மட்டும் யார்கிட்டயும் வரவே வராது.

நமக்கு ஓட்டு போடறதோட நம் கடமை(?) முடிஞ்சு போயிடுது. மத்ததெல்லாம் அவங்க தான் முடிவு செய்வாங்க. :(

ambi said...

என்ன சிஸ்டர், நீங்க ஒரு இணைய ஜர்னலிஸ்ட்னு நிரூபிக்கறீங்க போலிருக்கு. :)))

பரிசல்காரன் said...

rapp...

மிகவும் அருமையான பதிவு..

இந்தப் பதிவை நேற்று பதிவர் சந்திப்பில் ஆதங்கப்பட்ட நண்பருக்கு சமர்ப்பிக்கிறேன்!

(ஏன்னு விளக்கம் தெரியணும்ன்னா என்னோட இன்றைய பதிவைப் பாருங்க..!)

Voice on Wings said...

உலகிலேயே மிக அதிக அளவில் அணுசக்தியைப் பயன்படுத்தும் ஃபிரான்ஸிலிருந்து இதை நீங்கள் பதிவு செய்திருப்பது கவனத்திற்குரியது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்தப் பதிவுக்கு எனது பாராட்டுக்கள்.

Voice on Wings said...

இது போன்ற பதிவுகள் பரவலாகப் படிக்கப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டு, 'சூடான இடுகைகள்', 'வாசகர் பரிந்துரை' போன்ற சிறப்புப் பகுதிகளில் வரவேண்டுமென்பது எனது அல்ப ஆசை / நிராசை....... என்ன வேணா.

யாத்திரீகன் said...

hmmmm.. yosika vaendiya vishayangal... mukiyamaana thagavalgal solirukeenga..

இவன் said...

என்ன கவுஜாயினி திடீரென்னு இப்படி சில சந்தேகங்கள்?? திடீரென்னு சீரியஸ் பதிவெல்லாம் போட ஆரம்பிச்சிட்டீங்க?? என்ன ஆச்சு உங்களுக்கு?? நீங்க திருந்தீட்டீங்களா??

கயல்விழி முத்துலெட்சுமி said...

நிறைய கேள்விக்கேட்டிருக்கீங்க? அம்பி சொன்னமாதிரி தான் ஓட்டுவாங்கி அங்க போய் உக்காந்துருக்கவங்க இவன் கவிழ்த்தா அவன் கூட சேந்துக்க்லாம்ன்னு இருக்காங்க.. வேடிக்கை பாக்கறோம் ..
வெளிநாட்டில் இருந்து வேண்டாத குப்பைகளையே காசு கொடுத்து வாங்கிப்போடற ஊருங்க நம்ம ஊரு..

rapp said...

//நமக்கு ஓட்டு போடறதோட நம் கடமை(?) முடிஞ்சு போயிடுது. மத்ததெல்லாம் அவங்க தான் முடிவு செய்வாங்க//
அரசியல்வாதிகள் பதவி கிடைக்குதுன்னா என்ன வேணா செய்வாங்கன்னு நமக்குத் தெரியுமண்ணே, ஆனா இந்த விஷயத்தில் இத்துறையில் பழம் தின்று கொட்டை போட்டவர்களே நம் மக்களுக்கு தவறான வழிகாட்டுதல்கள் ஏற்டுத்தராங்களே. இதுதான் என்னோட பெரிய வருத்தம்

rapp said...

//என்ன சிஸ்டர், நீங்க ஒரு இணைய ஜர்னலிஸ்ட்னு நிரூபிக்கறீங்க போலிருக்கு//
ஹி ஹி, அந்தளவுக்குக் கூட உழைக்கல, கேக்குற விஷயங்கள பொறுமையா சொல்றதுக்குன்னு ஒருத்தர் இருக்காருல்ல

rapp said...

//ஏன்னு விளக்கம் தெரியணும்ன்னா என்னோட இன்றைய பதிவைப் பாருங்க//
கண்டிப்பா வருகிறேன் கிருஷ்ணா, என்னை நீங்க கூப்பிடத்தான் வேண்டுமா, எப்படியும் நான் வருவேன்னு தெரியாதா:):):)

rapp said...

ஆமாங்க voice on wings,

நம்ம நாட்டுல சிலப் பேர் யாரு அங்க போய் சரிபார்க்கப் போறாங்கன்னு தெனாவட்டா, சில முன்னுதாரணங்களை கொடுக்கறாங்க. ஆனா உண்மை நிலவரத்தில் எக்கச்சக்க தகவல்கள வசதியா மறந்திட்டு சொல்றாங்க. பிரான்சு இப்படி எக்கச்சக்கமா அணு உற்பத்தி செஞ்சு ஐரோப்பால பல நாடுகளுக்கு வித்து காசு பாக்குதுன்னு சொல்றவங்க, மீதி எல்லா விஷயத்தையும் மறந்திடறாங்க. இங்க என்னோட ஒரே சந்தேகம், சொந்த காசுல சூனியம் வெச்சுகிட்டாலும், பக்கத்து வீட்டுக்காரன் காசுல சூனியம் வெச்சுகிட்டாலும், ஹை, மூணாம் வீட்டுக்காரன் தனக்கு சூனியம் வெச்சுக்கிட்டுருக்கானே நாம ஏன் வெச்சுக்கக் கூடாதுன்னு, சூனியம் வெச்சுகிட்டாலும் என்னங்க வித்தியாசம்?

rapp said...

//இது போன்ற பதிவுகள் பரவலாகப் படிக்கப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டு, 'சூடான இடுகைகள்', 'வாசகர் பரிந்துரை' போன்ற சிறப்புப் பகுதிகளில் வரவேண்டுமென்பது எனது அல்ப ஆசை / நிராசை//
ஹி ஹி நானும் இதை வழிமொழியறேன்

rapp said...

வந்து உங்கள் கருத்துக்களை பதிஞ்சதுக்கு ரொம்ப நன்றிங்க யாத்திரீகன்.

rapp said...

//என்ன கவுஜாயினி திடீரென்னு இப்படி சில சந்தேகங்கள்?? திடீரென்னு சீரியஸ் பதிவெல்லாம் போட ஆரம்பிச்சிட்டீங்க?? என்ன ஆச்சு உங்களுக்கு?? நீங்க திருந்தீட்டீங்களா??//
ஹி ஹி இதுக்கு நான் என்னங்க சொல்றது, நான் நெறைய தடவ இந்த மாதிரி விபரீதமா முயற்சி பண்ணிருக்கேன், ஆனா யாருக்கும் தெரியாமப் போய்டிச்சோனு நீங்க சொல்றதப் பார்த்தா தோணுது:):):)

முரளிகண்ணன் said...

மிக அவசியமான பதிவு. மின்சார பற்றாக்குறைக்கு வாங்கும் சக்தி அதிகமான நுகர்வோர் ஒரு முக்கிய காரணம். சமூகத்திற்க்காக ஆடம்பரம் எல்லாம் அத்தியாவசியம் ஆனதன் மற்றுமோர் பின்விளைவு

rapp said...

//வெளிநாட்டில் இருந்து வேண்டாத குப்பைகளையே காசு கொடுத்து வாங்கிப்போடற ஊருங்க நம்ம ஊரு//
சூப்பரா சொன்னீங்க கயல்விழி முத்துலெட்சுமி, ஆனா இந்த தடவை கொடுமை என்னன்னா, இதனோட தாக்கத்தை பத்தி முழுசா தெரிஞ்சவங்களும் இதனை ஆதரிக்கறதுதான்

rapp said...

//ஆடம்பரம் எல்லாம் அத்தியாவசியம் ஆனதன் மற்றுமோர் பின்விளைவு//
ரொம்ப சூப்பரா சொல்லிருக்கீங்க முரளிக்கண்ணன் சார், வந்ததற்கும் கருத்துக்களை பதிஞ்சதற்கும் ரொம்ப நன்றி

வால்பையன் said...

நானும் உங்க பக்கம் தான் நண்பா!
அணு உலை திட்டத்தை எதிர்த்தால் நம்மை மனிதனாக பார்க்க மாட்டார்கள்
கம்யூனிஸ்டாக பார்ப்பார்கள். அது தான் ஏனென்று புரியவில்லை

வால்பையன்

கயல்விழி said...

அருமையான கட்டுரை ராப். எனக்கு அனு சக்தியை பற்றி இருக்கும் நாலெட்ஜ் பற்றாது என்பதால் இதுபோன்ற விசயங்களில் குழப்பமே மிச்சம். இனிமேல் நிறைய படிக்கலாம் என்று நினைக்கிறேன்.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

// மின்சாரம் இல்லாமலோ, இல்ல அரைகுறையான மின்சார வசதிகளோடோ கூட மனிதன் வாழ்ந்திடலாம், ஆனா புற்றுநோய், தோல் வியாதிகள், மேலும் பல பிறவிக் குறைபாடுகளோட காலம் கடத்துவதுதான் நரகத்திலும் கொடூர நரகம்//

சரியாச் சொன்ன. நாம் வாழுகின்ற பிரபஞ்சம் நம்முடைய காலம் வரையில் தான் இருக்கும் என்ற எண்ணம் மறைமுகமாக நம் அனைவரின் சிந்தனையிலும் உள்ளது. நமக்கு முன் இருந்த எத்தனையோ ஆயிரம் தலைமுறைகள் நம்மிடம் ஒப்படைத்த இந்த பூமிக்கு நாம் பொறுப்பாளிகள் மட்டுமே..பயனாளிகள் அல்ல. எந்த பாதிப்பும் இன்றி அடுத்து வருகின்ற தலைமுறைகளிடம் இதை ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணம் தலைவர்களிடம் சிறிது இருந்தால் கூட போதும். இந்த பூமி பிழைத்து விடும்.

மணியன் said...

நல்ல கட்டுரை. உங்கள் கருத்து தொழில்நுட்பத்தின் பக்கவிளைவுகளை முன்னிறுத்தி பசுமையான அமைதி (Green Peace) அமைப்பின் தாக்கத்தோடு அமைந்துள்ளது.

அணுசக்தி மூலம் மின் உற்பத்தி வேண்டுமா என்பது அடிப்படை கேள்வி. இதற்கு அத்துறையிலேயே ஆய்வுசெய்து சாதித்தவருக்கு அது அவசியம் என்றும் அதனால் வரும் ஆபத்துகளை தவிர்க்க முடியும் என்றும் நம்பிக்கை இருப்பது இயல்பே.

இன்றைய அரசியல் கட்சிகளிடையே அணுசக்தியினை நாட்டு வளப்பணிகளுக்கு பயன்படுத்துவது பற்றி இணக்கம் நிலவுவதாகவே தெரிகிறது. இந்திய அணுசக்தி நிறுவனத்தினால் ஏற்கெனவே அணுமின்நிலயங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அத்தகைய மின் ஆலைகள் இந்திய தாதுபொருட்களினாலும் தொழில்நுட்பத்தினாலும் இயல வேண்டும் என்பதும் அயல்நாட்டு ஏகாதிபத்தியங்களின் பிடியில் இந்திய இறையாண்மை சிக்கக் கூடாதென்பதுமே எதிர்கட்சிகளின் நிலைப்பாடும் விவாதப் பொருளுமாகும்.

rapp said...

//நானும் உங்க பக்கம் தான் நண்பா!
அணு உலை திட்டத்தை எதிர்த்தால் நம்மை மனிதனாக பார்க்க மாட்டார்கள்
கம்யூனிஸ்டாக பார்ப்பார்கள். அது தான் ஏனென்று புரியவில்லை //

விடுங்க வால்பையன் பேத்துறவங்க பேத்திகிட்டே தான் இருப்பாங்க, ஆனா அதுக்காக இந்த மாதிரி குடிமுழுகிப் போற விஷயங்களில் நாம் நம்ம கருத்துக்களை எதுக்காக வெளிப்படுத்தாம இருக்கணும். நம்மள கம்யூனிஸ்டுன்னு சொல்றவங்க விஷய ஞானம் அவ்வளவுதான். கம்யூனிஸ்டுங்க எதிர்க்கறது இந்த மாதிரியான ஒப்பந்தங்களைத்தான். ஆனா நாம எதிர்க்கறது இன்னொரு அணு உலையை. அணு உலைகளே கேடுங்கும்போது, யார் வந்து சூனியம் வெச்சா என்ன:):):)

rapp said...

வந்து உங்கள் கருத்துக்களை பதிச்சதுக்கு நன்றிங்க கயல்விழி

// இனிமேல் நிறைய படிக்கலாம் என்று நினைக்கிறேன்//

நிறையப் படிக்க வாழ்த்துக்கள்

rapp said...

//நாம் வாழுகின்ற பிரபஞ்சம் நம்முடைய காலம் வரையில் தான் இருக்கும் என்ற எண்ணம் மறைமுகமாக நம் அனைவரின் சிந்தனையிலும் உள்ளது. நமக்கு முன் இருந்த எத்தனையோ ஆயிரம் தலைமுறைகள் நம்மிடம் ஒப்படைத்த இந்த பூமிக்கு நாம் பொறுப்பாளிகள் மட்டுமே..பயனாளிகள் அல்ல. எந்த பாதிப்பும் இன்றி அடுத்து வருகின்ற தலைமுறைகளிடம் இதை ஒப்படைக்க வேண்டும்//

முத்து முத்தான கருத்துக்கள் அப்துல்லா அண்ணே. நாம பயோவெப்பன்சுக்கு மாற்றாகவும், மற்றவர்களோட அணுஆயுதப் போட்டி போடவும், மின்சாரத் தன்னிறைவுங்கர விஷயத்திற்காக, பலத் தலைமுறைகளோட வாழ்க்கைய, அவங்களுக்கு தப்பிக்கும் சந்தர்ப்பமே கொடுக்காமல் நாசம் பண்ண பாக்குறதும் ரொம்ப தப்பான செயல்பாடு

rapp said...

வந்து உங்க கருத்துக்களை பதிஞ்சதுக்கு ரொம்ப நன்றிங்க மணியன்

//உங்கள் கருத்து தொழில்நுட்பத்தின் பக்கவிளைவுகளை முன்னிறுத்தி பசுமையான அமைதி (Green Peace) அமைப்பின் தாக்கத்தோடு அமைந்துள்ளது//

ஆமாங்க மணியன், கண்டிப்பா நாம எல்லாரும் இதைத்தான் கண்டிப்பா சிந்திச்சாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம் இல்லைங்களா:):):)

rapp said...

//இன்றைய அரசியல் கட்சிகளிடையே அணுசக்தியினை நாட்டு வளப்பணிகளுக்கு பயன்படுத்துவது பற்றி இணக்கம் நிலவுவதாகவே தெரிகிறது. இந்திய அணுசக்தி நிறுவனத்தினால் ஏற்கெனவே அணுமின்நிலயங்கள் இயக்கப்பட்டு வருகின்றன//

அப்படி முழுசா யாரும் செய்யறதில்லைங்க. ஒரு உதாரணத்துக்கு பாருங்க தோரியத்திலிருந்து கிடைக்கும் யுரேனியம்-233ஐ வெறும் ஆக்கப்பூர்வமா மட்டுமா பயன்படுத்துகிறார்கள்? உலகத்தில் அவ்வளவு நல்ல தூய நாடே இல்லைங்களே:):):)
அதுமட்டுமில்லாம அணுசக்தி உற்பத்தியினாலயே எக்கச்சக்க தீர்வில்லா நோய்களும், பிரச்சினைகளும் ஏராளம் ஏராளம். அப்படி இருக்கும்போது அதனை உபயோகப்படுத்துவதை குறைத்துக் கொள்வதுதானே உலகிலுள்ள அனைத்து நாடுகளின் கடமை

rapp said...

//இதற்கு அத்துறையிலேயே ஆய்வுசெய்து சாதித்தவருக்கு அது அவசியம் என்றும் அதனால் வரும் ஆபத்துகளை தவிர்க்க முடியும் என்றும் நம்பிக்கை இருப்பது இயல்பே//
நம்பிக்கை, தன்னம்பிக்கை, கனவு என்பதெல்லாம் வேறு விஷயங்களில் புகுத்தலாம், சந்ததி சந்ததியாக பாதிப்பு ஏற்படும், கழிவுகளை முழுமையாக அழிக்கவும் முடியாது, ரீசைக்க்ளிங்கும் செய்ய முடியாது, குறைந்தபட்சம் அடுத்த பத்தாண்டுகளுக்காவது இவற்றுக்கு தீர்வும் கிடையாது. சரி நாம் அனைத்தையும் செய்து முடிப்பதற்கு பத்தாண்டுகளுக்கு மேலாகும், அதனால் பொறுக்கலாம் என்றால், ஒருவேளை அப்பொழுதும் தீர்வு கண்டுப்பிடிக்கவில்லை என்றால் அதன் பாதிப்பு எந்த வகையிலும் பரிகாரம் தேட முடியாத ஒன்றாகும் இல்லைங்களா:):):)
பாதிப்பு கழிவினால் மட்டுமென்றால் சரி, ஆனால் பாதிப்பு அனைத்து பரிமாணங்களிலும் இருக்கும்போது படிப்படியாக அதிலிருந்து விடுபடுவதுதானே சிறந்தது

Syam said...

எனக்கு இது பத்தி அவ்வளவா தெரியாது...நீங்க சைண்டிஸ்ட் பேமிலி நீங்க சொன்ன சரியா தான் இருக்கும்... :-)

பாரி.அரசு said...

இயந்திரதனமான பொதுபுத்தி... நுகர்வை மட்டுமே இலக்காக கொண்ட சமூக சிந்தனை... இப்படி ஏகப்பட்ட ஊனங்களுடன் தொலைநோக்கு திட்டங்கள் தீட்டப்படுகிற அதிகாரகங்களால் நீங்கள் கேட்கிற கேள்வி பதில் கிடைக்காது...

வால்பையனுக்கு,
ஃஃ
நானும் உங்க பக்கம் தான் நண்பா!
அணு உலை திட்டத்தை எதிர்த்தால் நம்மை மனிதனாக பார்க்க மாட்டார்கள்
கம்யூனிஸ்டாக பார்ப்பார்கள். அது தான் ஏனென்று புரியவில்லை
ஃஃ

கம்யூனிஸ தலைமைகள் போலியாகி பல்லிளித்தாலும்... அதன் கடைக்கோடி தொண்டர்கள்... இன்னும் பல இடங்களில் மக்கள் பிரச்சினைகளை கையிலெடுத்து போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்!

எப்பொழுதெல்லாம் மக்கள் பிரச்சினைகள் பேசப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் கம்யூனிஸ்டுகளை தவிர்க்க இயலாது!

கயல்விழி முத்துலெட்சுமி said...

ஒரு மெயில் அனுப்பி இருக்கிறேன் பார்க்கவும்..

ச்சின்னப் பையன் said...

அற்புதமான பதிவு, கேள்விகள்.

இதில் நம் ஊடகங்கள் பயங்கரமான பங்கு வகிக்கின்றன. கலாம் தாத்தாவே சொல்லிட்டார், கலாம் தாத்தாவே சொல்லிட்டார்னா, அவர்கிட்டே யாராவது இந்த திட்டத்துக்கு பாதகமான விஷயங்களைப் பற்றி கேட்டார்களா, அதற்கு அவரோட பதில்கள் என்ன - இதுக்கு பதிலே இருக்காது.

இந்த விஷயத்தை பத்தி பேட்டிக்கு வாங்கப்பான்னு பிரதமர், அமர்சிங், கலாம் எல்லாரையும் கூப்பிட்டு கரன் தாப்பர்தான் கலாய்க்கணும்.

Syam said...

ஆப்பீசர் என்னோட கொள்கைய கொஞ்சம் மாத்திகிட்டேன் (ஆமா இவரு பெரிய லார்டு லபக்கு தாசுன்னு நினைப்புனு எல்லாம் சொல்லபடாது) இங்க பாருங்க :-)

http://jyovramsundar.blogspot.com/2008/07/blog-post_13.html

பரிசல்காரன் said...

//கண்டிப்பா வருகிறேன் கிருஷ்ணா, என்னை நீங்க கூப்பிடத்தான் வேண்டுமா, எப்படியும் நான் வருவேன்னு தெரியாதா//

அன்புக்கு நான் அடிமை!

4TamilMedia said...

உங்களுடைய இந்த இடுகையை எங்கள் தளத்தின் கட்டுரைப் பகுதியில் இனைத்துள்ளோம். அனுமதிக்கு நன்றி.
பார்க்க
www.4tamilmedia.com

rapp said...

பாரி அரசு அவர்களே, தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. இந்த அணுசக்தி விஷயத்தில் கம்யூனிஸ்டுகள் புதிய அணு விஞ்ஞானக் கொள்கையைத்தான் எதிர்க்கிறார்களே அன்றி, புது அணு உலைகளையே எதிர்க்கவில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை புது அணு உலைகளே இந்த உலகிற்கு தேவை இல்லை என்பதுதான் :)

rapp said...

//எனக்கு இது பத்தி அவ்வளவா தெரியாது...நீங்க சைண்டிஸ்ட் பேமிலி நீங்க சொன்ன சரியா தான் இருக்கும்//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............ இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல, இத எழுத இங்குள்ள டிவியில போடுற சில டாக்குமெண்டரிகள பார்த்தாலே போதும்

//ஆப்பீசர் என்னோட கொள்கைய கொஞ்சம் மாத்திகிட்டேன் (ஆமா இவரு பெரிய லார்டு லபக்கு தாசுன்னு நினைப்புனு எல்லாம் சொல்லபடாது) இங்க பாருங்க :-)//
ஏங்க இங்கயும் அணுசக்தி வேண்டாம்னுதானே சொல்றாரு. ஒருவேளை நான் காப்பி அடிச்சிருக்கேன்னு நினைச்சீங்கன்னா, இதென்னங்க ஜோசியமா, இஷ்டத்துக்கு கதை சொல்ல, இந்த விஷயத்தில் ஒரே கொள்கையுடைய எல்லாரும் வேறன்னா சொல்லுவோம்? அதோட நெறயப் பேரு எப்பப்பார்த்தாலும் பிரான்சுல இல்லையா, பிரான்சுல இல்லையான்னு கேட்டே, தப்பிச்சிக்கப் பாக்குறாங்க, அந்த வாதம் எவ்வளவு அர்த்தம் அற்றது என சொல்றதுக்குத்தான் இந்தப் பதிவு. இன்னும்கூட இங்குள்ள விஷயங்கள் பற்றி எழுத இருக்கின்றது. அத்தனையையும் எழுதினா வழக்கம் போல யாருமே படிக்க மாட்டாங்களேன்னுதான் போடல

rapp said...

//இதில் நம் ஊடகங்கள் பயங்கரமான பங்கு வகிக்கின்றன. கலாம் தாத்தாவே சொல்லிட்டார், கலாம் தாத்தாவே சொல்லிட்டார்னா, அவர்கிட்டே யாராவது இந்த திட்டத்துக்கு பாதகமான விஷயங்களைப் பற்றி கேட்டார்களா, அதற்கு அவரோட பதில்கள் என்ன - இதுக்கு பதிலே இருக்காது//
இதுதான் வர வர இப்ப பெரிய பிரச்சினயாப் போச்சுங்க. என்ன விஷய்ந்கரத பார்க்காம, யார் சொன்னாங்கன்னு மட்டும் பாத்து எல்லாரும் கருத்து கந்தசாமிகளா மாறிடறோம், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் என்ற குறளை கொஞ்சம் கூட வர வர யாரும் யோசிக்கறதில்லை:):):)

rapp said...

//அன்புக்கு நான் அடிமை//
கிருஷ்ணா, படிச்சும் பின்னூட்டம் போட நேரமில்லை இன்னைக்கு, ஏன்னா இங்க இன்னைக்கு விடுமுறையா, அதால சமைக்க வேண்டியதா போச்சு அதான். இப்போ வந்திடறேன்

rapp said...

//உங்களுடைய இந்த இடுகையை எங்கள் தளத்தின் கட்டுரைப் பகுதியில் இனைத்துள்ளோம். அனுமதிக்கு நன்றி//
ரொம்ப ரொம்ப நன்றிங்க. வந்து பார்த்தேன். பாராட்டுகளுக்கு நன்றி:):):)

வடகரை வேலன் said...

நல்ல பதிவுங்க ராப்,

தமிழ்மணத்துல இப்பெல்லாம் ஒரே மொக்கப் பதிவுகளாத்தான் வருதுன்னு நேத்து பதிவர் சந்திப்புல ஒருத்தர், ரெம்ப ஆதங்கப்பட்டார்.

இந்த மாதிரி விசய ஞாணத்துடனும் எழுதுவோம்னு சொல்லுகிறாப் போல எழுதியிருக்கீங்க. நன்றி.

//ஒருத்தர் தனிப்பட்ட வாழ்க்கையில் தவறு செய்தால் ஏற்படுற பாதிப்பு ஒரு சிறிய வட்டத்தை தான் பெரும்பாலும் பாதிக்குது, இன்னும் அதில் சில விஷயங்களுக்கு பரிகாரம் செய்வதின் மூலம் பாதிப்பின் வீரியத்தை குறைக்கலாம். ஆனா இதுவே பொது விஷயத்தில் செய்யும்போது பெரும்பான்மையாக பாதிக்கப் படுபவர்களுக்கு பல சமயங்களில் எந்தப் பரிகாரமும் செய்ய முடிவதில்லை//

உண்மைங்க. சில தலைவர்களின் பிடிவாதத்தால் எடுக்கப்படும் முடிவுகள் எத்தனை பேர் வாழ்க்கையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது பற்றிய கவலையோ அல்லது அக்கறையோ இல்லாமல்தான் எடுக்கப்படுகிறது. சில முடிவுகளை சரி செய்ய காலமோ வாய்ப்புகளோ கிடைக்காமல் போய் விடுவதுதான் சோகம்.

//ஒருவரின் மேல் வைக்கும் நம்பிக்கையை யாரும் தவறாக மட்டுமல்ல பொறுப்பில்லாமலும் பயன்படுத்தக் கூடாது//

நல்ல கருத்து.

rapp said...

ரொம்ப ரொம்ப நன்றிங்க வேலன், வந்து உங்க கருத்துக்களை பதிஞ்சதுக்கு. நீங்க வேற வேலன் சார், நெனப்புத்தான் பொழப்ப கெடுக்கும்னு சொல்லுவாங்கல்ல, அந்த மாதிரியான ஆட்கள் அவங்கல்லாம், பதிவுலயே வகைகள் இருக்கும்போது இவங்க நக்கல் பண்ணாங்கன்னா அது தப்பாகிடுமா? நான் பரிசல்காரனுக்கு இப்போதான் பின்னூட்டம் டைப்பிட்டு இருந்தேன், அதில் இதைப்பத்தி எழுதி இருக்கேன்:)
:):)

Syam said...

//ஏங்க இங்கயும் அணுசக்தி வேண்டாம்னுதானே சொல்றாரு. ஒருவேளை நான் காப்பி அடிச்சிருக்கேன்னு நினைச்சீங்கன்னா,//

ஏங்க எம்புட்டு பெரிய கவுஜாயினி நீங்க, உங்கள பொய் காபி டீ அடிச்சீங்கனு சொல்வேனா, அங்க பொய் அணு சக்தி ஒப்பந்தம் சரின்னு சொன்னேன் :-)

rapp said...

syam,
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................ என்னைய ரொம்பப் புகழாதீங்க:):):)
உங்களுக்கு எந்த வாதம் சரின்னு படுதோ நீங்க அதைத்தான ஆதரிக்க முடியும், ஹி ஹி. நான் இங்க போன வாரம் நடந்த ஒரு மிக மிகச்சிறிய அணு உலை கசிவையும், அதைத் தொடர்ந்து இங்க ஒளிபரப்பின செய்திகளையும் பார்த்து பீலாகியும், இவர ப்ளேடு போட்டும், கொஞ்சம் இது சம்பந்தமான புத்தகங்கள படிச்சும் தெரிஞ்சிகிட்ட விஷயங்களைத் தான் போட்டிருக்கேன். ஆனா ஒன்னு மட்டும் எனக்கு உறுதியா தெரியுங்க, இந்த அணு உலைகளால் உலகிற்கு பாதிப்புதான்.நான் பதிவுல சொன்னா மாதிரி immediate futurela ஒரு தீர்வும் இல்லை. இது பொறுமையா காத்துகிட்டு இருக்கக்கூடிய பிரச்சினையும் இல்லை. நம் எதிர்கால சந்ததிகல்யே பாதிக்கிற விஷயம்.

ஜி said...

அருமையான பதிவு...

// ambi said...
என்ன சிஸ்டர், நீங்க ஒரு இணைய ஜர்னலிஸ்ட்னு நிரூபிக்கறீங்க போலிருக்கு. :)))
//

Oru repeatu....

rapp said...

ஜி,

ரொம்ப நன்றிங்க, எனக்கு அமெரிக்க மாப்பிள்ளையோட நிலை என்னாகும்ங்கர சஸ்பன்ஸ் தாங்கல, தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன்

ஜி said...

இன்னைக்கு ஆஃபிஸ்ல உக்காந்து உங்க பதிவதான் படிச்சிட்டு இருந்தேன். எல்லா பதிவும் செமையா இருக்குதுங்க... அங்கங்க காமெடிய கலக்கி, கருத்தையும் சொருகி அசத்துறீங்க... இனி தொடர்ந்து வர முயற்சி பண்றேன்... ஆணி புடுங்குற எடத்துல ஆப்படிக்காம இருந்தா :)))

ஜி said...

//எனக்கு அமெரிக்க மாப்பிள்ளையோட நிலை என்னாகும்ங்கர சஸ்பன்ஸ் தாங்கல, தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன்
//

அதிவிரைவில் போட்டுடலாம் :))

ஜி said...

அப்புறம் தலைவர் ஜே.கே. ரித்திஷுக்கு இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்குறது எனக்கு இது வரைக்கும் தெரியாம போச்சு... இன்னைக்கே போய் கானல் நீர் படத்தப் பாத்துட்டு அவரோட பரம ரசிகனாகலாம்னு முடிவு பண்ணிட்டேன் :))

ஜி said...

வந்ததுக்கு ஒரு அம்பது அடிச்சிட்டு போயிடுறேன் :))

பாரி.அரசு said...

//
வால்பையனுக்கு,
ஃஃ
நானும் உங்க பக்கம் தான் நண்பா!
அணு உலை திட்டத்தை எதிர்த்தால் நம்மை மனிதனாக பார்க்க மாட்டார்கள்
கம்யூனிஸ்டாக பார்ப்பார்கள். அது தான் ஏனென்று புரியவில்லை
ஃஃ

கம்யூனிஸ தலைமைகள் போலியாகி பல்லிளித்தாலும்... அதன் கடைக்கோடி தொண்டர்கள்... இன்னும் பல இடங்களில் மக்கள் பிரச்சினைகளை கையிலெடுத்து போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்!

எப்பொழுதெல்லாம் மக்கள் பிரச்சினைகள் பேசப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் கம்யூனிஸ்டுகளை தவிர்க்க இயலாது!
//

//
இந்த அணுசக்தி விஷயத்தில் கம்யூனிஸ்டுகள் புதிய அணு விஞ்ஞானக் கொள்கையைத்தான் எதிர்க்கிறார்களே அன்றி, புது அணு உலைகளையே எதிர்க்கவில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை புது அணு உலைகளே இந்த உலகிற்கு தேவை இல்லை என்பதுதான் :)
//

ஒரு சிறிய விளக்கம்...மன்னிக்கவும்!

நான் குறிப்பிட்டது வால்பையனுக்கு! ஏன் பிரச்சினைகளை பேசும் நீ கம்யூனிஸ்டா! என்கிற கேள்வி எழுவதற்கான விளக்கம்!

மற்றபடி,
அணுஉலை, அணுசக்தி தொடர்பான உங்களுடைய கேள்விகள் நியாயமானது!

மோகன் கந்தசாமி said...

எமெர்ஜென்சி பதிவு-2: வாஸ்த்தவங்கள்.

-என்ற தலைப்பில் ஒரு பதிவு தயார் செய்து கொண்டிருக்கிறேன் வெட்டி ஆபிசர்.

rapp said...

ஹி ஹி ரொம்ப நன்றிங்க ஜி, இப்படி கொஞ்சம் ஏத்திவிட்ட ஒரே காரணத்தாலத் தான் பலர் இன்னைக்கு என்கிட்டே பாடுபடுகின்றனர்(அதாவது இப்படி ஒரு வார்த்தை நல்லாருக்குன்னிட்டா, ஒடனே அடுத்த தடவயிலிரிந்து அவங்கக் கிட்டப் போய் புதுப் பதிவு போட்டிருக்கேன், ஹி ஹி கொஞ்சம் பின்னூட்டம் போடுங்கன்னு டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிடுவேன்) இனி இப்போ அந்த லிஸ்ட்ல நீங்களும் இருப்பீங்க:):):)

rapp said...

ஸ்பெஷல் நன்றி ஜி, அம்பதாக்கினதுக்கு:):):)

rapp said...

தவறிற்கு வருந்துகிறேன் பாரி அரசு, உங்களின் பங்களிப்புக்கும், இந்தக் கருத்தை ஆதரிக்கும் முடிவிற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்

rapp said...

மோகன் நீங்க ஒரே ஒரு ஸ்மைலி போட்டு போனாக் கூட போதும்:):):)

வழிப்போக்கன் said...

ஃஃநாட்டில் மேலும் மேலும் அணு உலைகள்(அது அமெரிக்க உதவியினாலாகட்டும், இல்லை பிரான்சு உதவியினாலாகட்டும் இல்லை நாமே யார் உதவியும் இன்றி ஏற்படுத்துபவைகளாகட்டும்) அமைப்பதனால் நாட்டின் எதிர்காலமே சூனியமாகாதா?
ஃஃ

நியாயமான கேள்விதான்..

வழிப்போக்கன் said...

ஃஃஃ நாம் நம் நாட்டில் நிலவுகின்ற சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தானே முடிவெடுக்க வேண்டும். அதிலும் இறந்த காலத்தில் பிற நாடுகளில் செய்தவற்றை வைத்து எப்படி நம் நாட்டிற்கு நிகழ்கால மற்றும் எதிர்கால முடிவுகள் எடுக்க முடியும்? இந்த விஷயத்திற்கு எப்படி பிரான்சை முன்னுதாரணமாகக் கொள்ள முடியும்,

ஃஃஃ

பிரான்சில் 85 % வரை அணுசக்தி பயன்படுத்துகிறார்கள். நாம் அவ்வளவு செய்ய போவதில்லை. இன்றைய சூழ்நிலையில் அணுசக்தி என்பது ஒரு ஆப்சன். நாளை வேறு கண்டுபிடித்தால் இதை விட்டுவிடலாம் பிரான்சு போல.

வழிப்போக்கன் said...

பிரான்சு சிலதை நிறுத்திவிட்டார்கள் என்று சொன்னிர்கள், அதற்கான மாற்று மின்சாரம் எங்கே இருந்து வருகிறது இப்போது ??

வழிப்போக்கன் said...

ஃஃநம்முடைய முக்கிய ஆதார தொழிலான விவசாயம் முற்றிலும் அழிவுப்பாதையில் சென்றுவிடாதா? இதனால் நாட்டின் பொருளாதாரமே ஆட்டம் கண்டுவிடாதா? அனைத்து தொழில்களும் பலவீனமடயாதா?ஃஃஃ

இது எப்படி சாத்தியம் ??

இப்போதுள்ள கிட்டதட்ட அனைத்து மின்ஆலையுமே கடலோரத்திலேயே உள்ளது..இனிமேலும் அவ்வாறே நடக்கும்...

வழிப்போக்கன் said...

நேரம் கிடைத்தால்

http://jyovramsundar.blogspot.com/2008/07/blog-post_13.html

பார்க்கவும்...

இந்த பதிவும் 100 அடிக்க வாழ்த்துக்கள்..

rapp said...

//இன்றைய சூழ்நிலையில் அணுசக்தி என்பது ஒரு ஆப்சன். நாளை வேறு கண்டுபிடித்தால் இதை விட்டுவிடலாம் பிரான்சு போல//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........
பிரான்ஸில் விட்டுட்டாங்களா? நான் அப்படி சொல்லலைங்க. இங்க இன்னமும் முழுசா பயன்படுத்திக்கொண்டுதான் இருக்காங்க

மோகன் கந்தசாமி said...

////மோகன் நீங்க ஒரே ஒரு ஸ்மைலி போட்டு போனாக் கூட போதும்:):):)////

மன்னிக்க வேண்டும் ராப்,
தொண்ணூறு சதம் உங்கள் கருத்துக்களுடன் மாறுபடுகிறேன். அனேகமாக என் கருத்துக்களுக்கு ஆதரவு இருக்காது என நினைக்கிறேன். இருப்பினும், ஞாயம் என நான் நினைக்கும் சிலவற்றை தனிப்பதிவாக போடுகிறேன். உங்கள் எழுத்துநடை மெருகேறி பல நாட்களாகிவிட்டது இப்பதிவு உணர்த்துகிறது. அதற்காக பொறாமையுடன் ஒரு ஸ்மைலி. :-)))

rapp said...

//பிரான்சு சிலதை நிறுத்திவிட்டார்கள் என்று சொன்னிர்கள், அதற்கான மாற்று மின்சாரம் எங்கே இருந்து வருகிறது இப்போது ??//
இரண்டாம் உலகப்போருக்கும் அப்புறமும் கோல்ட் வாரின்போதும் முன்னேறிய நாடுகள் அனைத்தும் தங்களோட பலத்தை நிரூபிக்க நெறைய விஷயங்களை அதோட சாதக பாதகம் பார்க்காம வீம்புக்கும், எப்படியாவது நம்பர் ஒன்னாகனும்னும் செஞ்சுட்டாங்க. இப்போ ஆப்பசைத்த குரங்கு கதை கேள்விப்பட்டிருக்கீங்களா, அதேப் போல முழிக்கிறாங்க. இப்போ பிரான்ஸில் சில உலைகளை மூடினாலும்(போன வாரம் கூட மிக மிகச் சிறு அணுக கசிவு இண்டெர்ணலாக ஏற்பட்டுச்சுன்னு ஒரு உலையை மூடிட்டாங்க) இன்னும் செயல்பட்டுகிட்டு இருக்க உலைகளை வெச்சு ரொம்ப காலம் ஓட்டலாம். பிரான்சோட பெரிய வருமானங்கள்ள ஒன்னு இந்த மின்சாரத்தை பிற ஐரோப்பிய நாடுகளுக்கு விற்கிரதுதான். மேலோட்டமா பார்க்க ஆஹா எவ்வளவு பயன்கள்னு தோணினாலும், நிஜத்தில் பல அணு உலைகள் உள்ள பிரான்சின் தெற்குப் பகுதியில் சென்று பாருங்கள், இதோட நிஜ பாதிப்பென்னன்னு தெரியும். அங்குள்ள புள் பூண்டை சாப்பிடற ஆடு மாடுக்குக் கூட பாதிப்பிருக்குமொன்னு பயப்படுகிறார்கள். அங்கு விளையும் விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில்லை. இப்போ பிரான்சு அரசாங்கம் மாற்று செய்யனும்னு நினைத்தாலும் ஒன்னுமே செய்ய முடியல, உலகத்தில் உள்ள எல்லா நாடுகளையும் விட இந்த அரசாங்கம் இதுக்கு எக்கச்சக்க ஆராய்ச்சியில் ஈடுபடறதுக்கு இதுவும் மிக முக்கிய காரணம். ஆனா குறைந்தபட்சம் இன்னும் இருபத்து ஆண்டுகளுக்காவது இதோட பாதகங்களில் இருந்து மீள்வதற்கு வழி கண்டுபிடிக்கப்பட இயலாதுங்கறாங்க. அது வரைக்கும் காத்துகிட்டு இருக்க முடியாத அளவு பாதிப்புகள் எக்கச்சக்கம்.

rapp said...

//இப்போதுள்ள கிட்டதட்ட அனைத்து மின்ஆலையுமே கடலோரத்திலேயே உள்ளது..இனிமேலும் அவ்வாறே நடக்கும்//
பிரான்சிலும் பல உலைகள் கடலோரத்தில் உள்ளன, நான் கூறுவது மேம்போக்காக பார்க்க வேண்டுமானால், விவசாயத்தை பாதிக்காது போல் இருக்கலாம். ஆனால் நம் நாட்டில் பெரும்பான்மையாக விவசாயம் நிலத்தடி நீர், சிறு சிறு நதிகள், நீராதாரங்களை நம்பித்தான் உள்ளது, ஆனால் எங்கு அணு உலைகள் அமைந்தாலும் அது முதலில் அங்குள்ள இம்மூன்றயும்தான் பாதிக்கும். ஒரு உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமென்றால், கன்யாகுமரி மாவட்டம் கடற்கரை மாவட்டம் தான். ஆனால் அங்கு எக்கச்சக்க விவசாயப் பொருட்கள் விளைகின்றன, ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கு ஏற்கனவே ஒரு அணு உலை சம்பந்தமான சின்ன ஆலை இருக்கிறது. ஆனால் அது ஒரு சிறிய ஆலை. சரி விஷயத்துக்கு வருவோம், இங்கு ஒரு மிகப் பெரிய அணு உலையை அமைக்கிறோம்னு வெச்சுக்கங்க, அப்போ அங்கு விவசாயத்தின் நிலை என்னாகும் என கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். அதேப் போல நமக்கு பிரான்சை விட கடலோர பாதுகாப்பு மிக மிக மிக அத்தியாவசியமாகிறது, ஏன்னா நமக்கு அண்டை நாடுகள்ல நிலவற அரசியல் குழப்ப நிலையினால்தான். அப்படி இருக்கையில் நாம் இப்படி அமைக்கும் அணு உலைகளுக்கு எவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவேண்டி வரும். அதற்கு ஆகும் செலவு யோசித்துப் பாருங்கள். அதோடு இன்னொன்று, பிரான்ஸில் ஒரு சின்ன, கொஞ்சம் கூட பெரிய பாதிப்பு ஏற்படுத்தாத கசிவுக்கே, மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுத்து ஒரு உலையை மூடிட்டாங்க. ஆனா நம்ம ஊரில் போபால் விஷ வாயு கசிவுக்கு காரணமான ஆட்களுக்கு மறுபடியும் லைசன்ஸ் கொடுக்க முயற்சி பண்ணாங்க. அதோட இன்று வரைக்கும் அதில் பாதிக்கப்பட்டவங்களுக்கு உரிய இழப்பீடு கூட தரவில்லை.

rapp said...

ஹி ஹி ரொம்ப நன்றி மோகன்

மங்களூர் சிவா said...

/
ambi said...
//மின்சார விளக்கோட ஸ்விட்சை போடுவதற்கு கண், கை, கால் செயல்பாடுகளும் நல்லா இருக்கணும்னு நினைக்கறது தானே பரந்த நோக்கமுடைய சிந்தனை?//

அருமையான கேள்வி. ஆனா பதில் மட்டும் யார்கிட்டயும் வரவே வராது.

நமக்கு ஓட்டு போடறதோட நம் கடமை(?) முடிஞ்சு போயிடுது. மத்ததெல்லாம் அவங்க தான் முடிவு செய்வாங்க. :(
/

rippeatey

மங்களூர் சிவா said...

கதிரியக்கம், அணுக்கழிவுகளால் அபாயம் பற்றி திரு ஜெயபாரதன் அவர்கள் வலைப்பூவில் இன்னும் மிக மிக விவரமாக அறியலாம்

http://jayabarathan.wordpress.com/

rapp said...

ரொம்ப நன்றிங்க சிவா, கண்டிப்பா சென்று பார்க்கிறேன், வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி

Dubukku said...

யெக்கோவ்...கலக்கறீங்க...நல்ல கருத்தை முன்வைத்திருக்கீங்க...நான் சொல்ல நினைத்ததை நிறைய பேர் அல்ரெடி சொல்லிட்டாங்க...
நீங்க சொன்ன மாதிரி இதோட சைட் எபெக்ட் என்னா...அதுக்கு என்ன வழி பார்த்திர்க்கோம்ன்னு யோசிக்கவே மாட்டேங்கிறாங்க...

Again கலக்கல் போஸ்ட்

rapp said...

ஹை டுபுக்கண்ணனா, ரொம்ப ரொம்ப சந்தோஷம் அண்ணே, நீங்க முழுசா படிச்சி பின்னூட்டமும் போட்டதுக்கு ரொம்ப சந்தோஷம், ஏன்னா பதிவு கொஞ்சம் பெரிசாகிடுச்சா(வழக்கம்போல), அதான் பயந்தேன்:):):)

கார்த்திகேயன். கருணாநிதி said...

இந்த மாதிரி சூழ்நிலையில
வாழ்ந்து வாழ்ந்து தொண்ணுறு
சதவிதம் இந்தியர்கள் TV பார்த்துகிட்டு
நாட்டை திட்டுறதும் இல்ல ப்லோக் எழுதுறதும்தான் மிச்சம் .. நீங்க வேற ராப்ப்.. இத பத்தி
எழுதுறதுக்கு பதிலா... வேற வேலை பார்க்கலாம் !!

செவிடன் காதுல ஊதுன சங்கு மாதிரிதான் !

rapp said...

வந்து உங்க கருத்துக்களை பதிஞ்சதுக்கு ரொம்ப நன்றிங்க கார்த்திகேயன்

வழிப்போக்கன் said...

ராப்..

ரொம்ப நன்றிங்க. மிகத் தெளிவா விரிவா பதில் சொன்னதுக்கு..

அந்த அஞ்"ஞாநி" வாதத்தை விட நீங்கள் சொல்லும் கருத்துக்குள் ஏற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது.

இவை அனைத்தும் தீர்க்கபட வேண்டிய பிரச்சனைகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


ஆனா பாருங்க அணுசக்தி இன்றைய சூழ்நிலையில் நம்முடைய முன்னேற்றத்திற்கு நிச்சயம் தேவைபடுகிறது அப்படிங்கிறது என்னோட கருத்து. நாம் மெதுவாக முன்னேறினால் மற்றவர்கள் நம்மை மிதித்துச் செல்லும் அபாயம் உள்ளது.

Globalisation has made us to Run faster than we could. Otherwise we would definitely fall.

வழிப்போக்கன் said...

அணுசக்தி தேவையா??என்பதை

இன்றைய பொருளாதாரம் முன்னேற்றம்..மக்கள் வாழ்க்கைதர உயர்வு..வேலை வாய்ப்பு...நம்மிடம் கையிருப்பில் உள்ள எரிசக்தி...வருங்கால தேவைகள்...இவை அனைத்தையும் கொண்டே முடிவு செய்ய முடியும்.


கடந்த 3 மாதங்களில் மின்சார பற்றாக்குறையினால் மட்டும் நம்முடைய வளர்ச்சி 2% குறைந்துவிட்டது தெரியுமா ??


தமிழ்நாட்டில் அனைத்து தொழிற்சாலைகளும் வாரம் ஒருநாள் விடுமுறை விட்டது.


நம்மில் எத்தனை பேர் இன்று இந்தியா இருக்கும் நிலையை சந்தோசமாக ஏற்றுக்கொள்கிறோம் ??

விரைவான முன்னேற்றம் வேண்டுமென்றால் சிறிது துன்பத்தையும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் வேற வழி எனக்கு தெரியலங்க..

rapp said...

//ஆனா பாருங்க அணுசக்தி இன்றைய சூழ்நிலையில் நம்முடைய முன்னேற்றத்திற்கு நிச்சயம் தேவைபடுகிறது அப்படிங்கிறது என்னோட கருத்து. நாம் மெதுவாக முன்னேறினால் மற்றவர்கள் நம்மை மிதித்துச் செல்லும் அபாயம் உள்ளது.//
உங்க கருத்துக்களுக்கு நன்றிங்க வழிப்போக்கன். ஆனா நாம அணு உலைகள் அமைச்சு மின்சாரத்தில் மட்டுமே தன்னிறைவடைஞ்சா போதும்னு நான் நினைக்கல, அனைவரும், அனைத்துத் தொழில்களும் ஆரோக்கியமாக தழைத்து வாழ வேண்டும் என்பது என் ஆசை :):):) இதனால் நாம் பின்தங்கிடுவோம் என்றும் நான் நம்பல

rapp said...

வழிப்போக்கன்,நீங்க அரசாங்கத்தின் அலட்சியப்போக்கால் விளையும் தீமைகள், நிர்வாக சீர்கேட்டால் விளையும் தீமைகள், சட்டத்தை சரியாக பிரோயோகிக்காததால் தொடரும் தீமைகள் போன்றவற்றை காரணம்காட்டி அணு உலைகள் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்னு சொல்றீங்க, இது வாதத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம், உண்மையான நிலை வேறு:):):)

rapp said...

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மின்சார பற்றாக்குறைக்கு உண்மையானக் காரணம் வேறுன்னு கேள்விப்பட்டேன் :):):)

வழிப்போக்கன் said...

வேற காரணமாமாமாமாமாமா ???

சொல்லுங்க..சொல்லுங்க..சொல்லுங்க..

கயல்விழி said...

//உங்க கருத்துக்களுக்கு நன்றிங்க வழிப்போக்கன். ஆனா நாம அணு உலைகள் அமைச்சு மின்சாரத்தில் மட்டுமே தன்னிறைவடைஞ்சா போதும்னு நான் நினைக்கல, அனைவரும், அனைத்துத் தொழில்களும் ஆரோக்கியமாக தழைத்து வாழ வேண்டும் என்பது என் ஆசை :):):) இதனால் நாம் பின்தங்கிடுவோம் என்றும் நான் நம்பல
//

ஆனால் ராப் அவர்களே,

இங்கே தான் முக்கியமான பிரச்சினை, நீங்கள் குறிப்பிடும் அனைத்து தொழில் வளர்ச்சிக்கும் அடிப்படை மின்சாரம். அது இல்லாமல் எந்த வளர்ச்சியும் அடையவே முடியாது.

rapp said...

//
இங்கே தான் முக்கியமான பிரச்சினை, நீங்கள் குறிப்பிடும் அனைத்து தொழில் வளர்ச்சிக்கும் அடிப்படை மின்சாரம். அது இல்லாமல் எந்த வளர்ச்சியும் அடையவே முடியாது.
//

மின்சாரத் தன்னிறைவை நான் கூடாதுன்னு சொல்லலைங்க கயல்விழி, அதுக்கு அணு உலைகளில் இருந்து மட்டுமே மின்சாரம் எடுக்கணும்னும் இல்லை, இதற்கு செலவாகும் பொருளாதாரத்தை கொஞ்சம் மாற்று வழிமுறைகளிலும் செலவிட்டாலே அடிப்படை மின்சார தேவைகள் நமக்குக் கிட்டிவிடும். எல்லா நாடுகளும் சொல்வதைப் போல அவர்கள் பயங்கர உத்தமமாக வெறும் ஆக்க சக்திக்கு மட்டுமே இவைகளை பயன்படுத்துவதும் இல்லை, இவைகளை செயல்படுத்த ஆகும் செலவு, காலம், மற்றும் பாதுகாப்பிற்கு ஆகும் செலவு, அணுசக்தி அமைப்புகளின் கட்டாயத்தால் சில செய்தேஆகவேண்டிய அடிப்படை பிரிவென்டிவ் மெஷர்ஸ், அதற்காகும் செலவு இப்படி கணக்கிட்டுக் கொண்டே போகலாம். எதிர்காலத்தில் கழிவுகளை அகற்ற மாற்று வழி கண்டுபிடிக்க மாட்டார்களா, பிற ஆபத்துக்களுக்கும் மாற்று வழி கண்டுபிடிக்க மாட்டார்களா என்பது உங்களின் மற்றொரு கேள்வி, அதையே நான் திருப்பி கேட்கிறேன், இதே நம்பிக்கையை ஏன், பாதிப்புகள் குறைந்த மாற்று வழியில், மின்சாரத்தை எதிர்காலத்தில் தயாரிக்க மாட்டார்களா, என யோசித்து காத்திருக்கக் கூடாது. அதற்குள் நாம் ஒன்றும் இழந்துவிடவும் முடியாது, சாதித்து விடவும் முடியாது, ஏனென்றால் ஒரு அணு உலையை உருவாக்கி அதன் பயனை அனுபவிப்பதற்கு நீண்ட காலம் ஆகும். ஆனால் அதே உலையின் பாதிப்புகள் பயனடையும் முன்னரே தீவிரமாக தாக்கும்

rapp said...

பொதுவாக இப்படிப்பட்ட இயற்கையை பாதிக்கும் விஷயங்களை இரண்டு வகை படுத்தலாம். நிறைய பாதிப்புகளை அதன் கேடு உணர்ந்த உடன் எதனால் ஏற்படுகிறதோ அதை நிறுத்தினால் அல்லது அழித்தால் அதிலிருந்து மீளலாம். அணு உலைகள், கதிர் வீச்சு போன்ற பாதிப்புகள் நாம பயன்பாட்டை நிறுத்தினாலும் தொடர்ந்து கிட்டேதான் இருக்கும். இவைகளை அழிக்கவும் முடியாது எனும்பொழுது இதன் தாக்கத்தை புரிந்து கொள்ளுங்கள் :):):)

கயல்விழி said...

ராப்,

நீங்கள் குறிப்பிடும் மாற்று வழிகள் மிகவும் எக்ஸ்பென்சிவ், அணு சக்தியை விட பலமடங்கு அதிகம். மேலும் உற்பத்தியும் குறைவு.

மேலும் அந்த மாற்று சக்திகளும் நிச்சயமாக சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான எரிபொருட்கள் இல்லை.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

a post about thalai.go fast
//
https://www.blogger.com/comment.g?blogID=2515805102904586704&postID=1889137962558188233//

rapp said...

//நீங்கள் குறிப்பிடும் மாற்று வழிகள் மிகவும் எக்ஸ்பென்சிவ், அணு சக்தியை விட பலமடங்கு அதிகம். மேலும் உற்பத்தியும் குறைவு.

மேலும் அந்த மாற்று சக்திகளும் நிச்சயமாக சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான எரிபொருட்கள் இல்லை.
//ஹா ஹா ஹா, ரொம்ப நன்றிங்க கயல்விழி :):):)
நான் சொன்னது மின்சார அடிப்படை தேவைகள் பூர்த்தியாவது பற்றி, தன்னிறைவை பற்றியில்லை. மின்சார அடிப்படை தேவைகள் பூர்த்தியாவதற்கு இப்பொழுதுள்ள முறைகளோடு சூர்ய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் போன்றவற்றை ஊக்குவித்து, மின்சாரத் திருட்டை தடுத்தாலே போதும். கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரத்தில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு நம் நாடு இரண்டாயிரத்து இருபதில் ஆரோக்கியமான தலைமுறையை கொண்டு நல்ல முறையில் முன்னேறினால் போதும் :):):) நம் நாட்டோட பிரச்சினை மின்சார தன்னிறைவை முழுமையாக அடையாது இல்லைங்க, அடிப்படை தேவை கூட பல இடங்களில் பூர்த்தியாவாததுதான்

வெண்பூ said...

ரொம்ப நல்ல பதிவு வெட்டியாப்பீசர். நான் இதை எப்படி படிக்காமல் தவற விட்டேன் என்று தெரியவில்லை.

கண்ணீர் அஞ்சலி பதிவுக்கு பிறகு வெட்டியாப்பீசரிடமிருந்து எதுவுமே காணோமே, உங்களை தமிழ்மணத்தில் இருந்து விலக்கி விட்டார்களா என்ற சந்தேகம் (மற்றும் சந்தோசத்துடன்..ஹி..ஹி) வந்து பார்த்தால், இந்த பதிவு கண்ணில் பட்டது.

உங்கள் பக்கக் கருத்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். நானும் உங்கள் பக்கம்தான் (இந்த ஒப்பந்தம் வேண்டாம்), காரணம் வேறு:

1. ஆட்சியை விட ஒப்பந்தம் முக்கியம் என்று ஒரு இந்திய அரசியல்வாதி சொல்வதாலேயே அந்த ஒப்பந்தம் மக்களுக்கு நன்மை பயக்கப் போவதில்லை என்பது தெளிவாகிறது
2. அணு உலை அமைக்க ஆகும் அதிக பட்ச செலவு. அதை மற்ற மரபுசாரா மின் திட்டம் & ஆராய்ச்சிக்கு செலவிட்டால் நீண்டகால பயன் கிடைக்கும்.

நீங்கள் 'இணைய பத்திரிக்கையாளர்'(அது என்னா இணைய ஜர்னலிஸ்ட்?? Pattu Saree மாதிரி) என்று ஏற்கனவே சொன்னதை கிண்டலடித்திருப்பேன். ஆனால் இந்த கட்டுரையின் மூலம் என் முகத்தில் சாணியடித்து விட்டீர்கள். Hats off rapp!!!

வெண்பூ said...

//கயல்விழி said...
இங்கே தான் முக்கியமான பிரச்சினை, நீங்கள் குறிப்பிடும் அனைத்து தொழில் வளர்ச்சிக்கும் அடிப்படை மின்சாரம். அது இல்லாமல் எந்த வளர்ச்சியும் அடையவே முடியாது.
//

"கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிவது" என்ற கிராமத்துப் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது கயல்.

நமக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காக ஒரு அணுகுண்டை எந்நேரமும் மடியில் சுமக்க முடியுமா?

ஒரு 100,000 டாலர் ப்ராஜக்ட் செய்யும்போது கூட ஆல்டர்னேட் ஆப்சன்ஸை பார்த்து முடிவு செய்கிறோம். ஆனால் இது போன்ற பல பில்லியன் டாலர் திட்டங்களுக்கான மாற்றுவழிகளை நமது அரசியல்வாதிகள் ஆராய்ந்து இருப்பார்களா? அப்படி இருந்தால் அதை வெளியிடுவார்களா?

தனக்கு வரும் சம்பளத்துக்கு 10,000 ரூபாய் வாடகை தரலாம் என்றாலும் அதை செய்யாமல் சொந்த வீடு வாங்கி இ.எம்.ஐ. கட்டினால் 20 வருடத்தில் நமக்கு வீடு சொந்தமாக இருக்கும் என்ற சராசரி குடிமகனின் நீண்டகால திட்டமிடலைக் கூட நாட்டையே ஆளும் அதி புத்திசாலிகள் செய்யாமல் இருப்பது கவலையளிக்கிறது. அப்படி அவர்கள் செய்திருந்தால், வாரத்தில் ஒருநாள் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை, தினமும் 1 மணிநேர மின்வெட்டு என்ற அறிவிப்புகள் வந்திருக்கவே வந்திருக்காது.

வால்பையன் said...

இது கூட அணு மின்சாரத்துக்கு முக்கியமான காரணம்னு சொல்றாங்க கொஞ்சம் பாருங்க

வால்பையன்

கையேடு said...

ரிலாக்ஸ் ப்ளீஸ் பக்கத்திலும் உங்கள் உரையாடலைப் பார்த்தேன். உங்கள் கருத்துக்களில் தெரியும் ஆதங்கமும், கோபமும் மிகவும் நியாயமானவை. உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.


http://kaiyedu.blogspot.com/2007/10/blog-post.html

http://www.anawa.org.au/india/india.PDF

rapp said...

ரொம்ப நன்றிங்க வெண்பூ, நான் போட்டதே ஓசை செல்லா சாரோட இடுகையை கிண்டல் பண்ணித்தான். அதால நீங்க என்னை கிண்டலே பண்ணலை முதல்ல :):):)
அணு சக்தி எனும்போது ஒரு விஷயத்தை இங்க நாம புரிஞ்சிக்கணும். அது கிட்டத் தட்ட நம்ம நாட்ல ஆரம்பத்தில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு செஞ்ச பசுமை புரட்சி மாதிரித்தான். இப்போ அந்த குறைபாடுகளால நாம எவ்வளவு பாடுபடுகிறோம். அதோட இங்க இன்னொரு முக்கிய விஷயம் இதில் நம் வின்னனிகள் ஆராய்ச்சி செஞ்சுகொண்டிருக்கும் மற்றொரு முக்கிய செக்டரும், அந்த ஆராய்ச்சியில் வெற்றிபெற்றாலும் ஏற்கனவே அணுக்கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளையும் அதன் இன்ன பிற பாதிப்புகளையும் முழுமையாக நீக்க முடியுமா என்று சந்தேகப்படுகின்றனர், பாதிப்புகள் தன்மைகளுக்கேற்ப சில சமயம் பற்பல ஆண்டுகள் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனனர். மற்றொரு ப்ளாகில் குறிப்பிட்டுள்ள பூமியில் புதைக்கும் விஷயத்தில் தோல்வி ஏற்பட வாய்ப்புள்ளது. ஜெர்மனியில் அவ்வாறு செய்யும்போது லீக் ஏற்பட்டு நீரில் கலந்ததா படிச்ச ஞாபகம். எப்பவுமே அறிவியல் சார்ந்த விஷயங்களில் தியரிட்டிகலா என்ன சொல்லிருக்காங்கன்னு மட்டும் பார்க்கக் கூடாது. பிராக்டிகலா அவர்கள் சொல்வது முழுக்க சாத்தியப் பட்டுச்சா, அவர்களின் கூற்றுக்கள் உண்மையா என்றும் பார்க்கணும் என்பது என் கருத்து

rapp said...

வால்பையன் நான் எப்பவோ அந்தப் பதிவில் வந்து என் பின்னூட்டம் போட்டுட்டேன், நீங்களும் அதற்கு பதில் போட்டுட்டீங்க :):):)

rapp said...

ரொம்ப நன்றிங்க கையேடு. ஒரு விஷயத்தை நிறையப் பேர் புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க. பிரான்சுல இருப்பது மாதிரி பல மடங்கு நெறைய அணு உலைகள் ஏற்படுத்தினாத் தான் நம்ம நாட்டில் கொஞ்சமாவது மின்சார தன்னிறைவு அடைய முடியும். ஆனா நம்முடைய நாட்டின் அமைப்புக்கும், மக்கள்தொகைக்கும் அது சாத்தியமும் இல்லை, சுற்றுச்சூழலுக்கு நல்லதும் இல்லை. உங்களின் பின்னூட்டங்களை பதிஞ்சதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க கையேடு.

கையேடு said...

//நம்முடைய நாட்டின் அமைப்புக்கும், மக்கள்தொகைக்கும் அது சாத்தியமும் இல்லை, சுற்றுச்சூழலுக்கு நல்லதும் இல்லை.//

இங்கே சாத்தியப்பாடுகளைவிட உண்மைநிலை மோசமானது.

ஒரு அனுமானத்திற்காக ஒருவேளை..!!?? இவ்வாற்றல் வழிமுறையிலுள்ள அனைத்து தீங்கிற்கும் நம்மிடம் தீர்வுஇருக்கிறது என்று வைத்துக்கொண்டால் கூட.

அணுசக்திக்கான மூலமே(தாதுக்களே) நம்மிடம் போதிய அளவிலில்லையே அதற்கென்ன செய்வது??

தற்போதைய 3.5% ல் இருந்து 2015 ல் 7% ஆக (முன் மொழியப்பட்ட எண், உண்மை நிலை என்னவாக இருக்குமென்று தெரியாது) மாற்றவே நாம் தாதுக்களை இறக்குமதி செய்யவேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட இவ்வாற்றல் வழிமுறையை மேலும் விரிவுபடுத்தி தன்னிறைவும் வளர்ச்சியும் அடைய விரும்புபவர்களை கண்டால் வருத்தமாக இருக்கிறது. (இதுவரை முன்மொழியப்பட்ட சதவிகிதத்திற்கும் குறைவான அளவே இந்திய அணு சக்தித் துறையால் உற்பத்திசெய்ய முடிந்தது என்பதற்குப் பல சான்றாதாரங்கள் உண்டு.)

தமிழகத்திலிருப்பவர் மூன்றுவேளையும் ஆப்பிள் பழங்களை மட்டும் உண்ணத் துவங்கலாம் என்பது உணவு பற்றாக்குறைக்கானத் தீர்வல்ல.

தீர்வு பற்றியும் வேறுவழியில்லை என்பது பற்றியும் பேசும் பலர் ஒன்றை மறந்து விடுகின்றனர். ஆற்றலைப் பொறுத்த வரை, இந்தியா முழுமைக்குமான ஒரே தீர்வு அல்லது ஒரே வழிமுறை என்பது கிடையாது. இனிமேல் இருக்கவும் முடியாது.

மிகப்பெரிய அணைகளை நிறுவுதல் என்பதைக் கனவாகக் கொண்டார் நேரு, அதனால், நாமும் பெரும் அணைகளை நிறுவுதல் என்று பல ஐந்தாண்டுத்திட்டங்களில் தொலைந்து போயிருந்தபோது, உலகம் முழுவதும் அவற்றின் தீமையையும் நட்டத்தையும் உணர்ந்து கொண்டு மைக்ரோ அணைகளுக்குத் தாவினர். ஆனால், விடாப்பிடியாக சமீப காலம் வரை தொங்கிக் கொண்டிருந்தது இந்தியா,விளைவு.. பல கோடிகள் நட்டம், பல இயற்கை வளங்களின் இழப்பு, இறுதியில், மின்சாரத்தேவையையும் பூர்த்தி செய்து கொள்ளமுடியவில்லை..

அதனால், அந்தந்த மாநிலங்களையும் நிலப்பரப்புகளையும் கருத்தில் கொண்டு ஆற்றலை பாதுகாப்பான எல்லா வழிமுறைகளிலும் இடத்திற்கேற்றார்போல் உற்பத்தி செய்து பயன்படுத்த வேண்டியது அவசியம். சாண எரிவாயுவினால், அரசாங்கத்தை எதிர்பாராமல் ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு மட்டும் மின்னுற்பத்தி செய்து கொள்ளமுடிகிறதா கண்டிப்பாக ஊக்குவிக்கலாம். (Think Locally Solve globally)

இதன்மூலம் 4 ஆண்டுகளிலேயே ஒரு அசுர வளர்ச்சியில்லாமல் இருக்கலாம், ஆனால், ""தன்னிறைவான, பாதுகாப்பான, மிதமான வளர்ச்சி சாத்தியமே.""

மிகமுக்கியமாக நிரந்தரமாகக் கையேந்தவேண்டிய சூழலே வராது. ஏனெனில், தேவை, உற்பத்தி, வளர்ச்சி எல்லாமே நமது கட்டுக்குள் இருக்கும்.

மேலேயுள்ள அனுமானத்தை மீண்டும் நினைவில் கொள்வது நல்லது. இப்போது வேண்டுமானால் அந்த அனுமானத்தையும் நீக்கிவிட்டு யோசித்துப் பாருங்கள்.. :(

எனக்கு மாத சிறுசேமிப்பு போதும், உடனடி லாட்டரி தேவையில்லை (ஒருவேளை பரிசு விழுந்தாலும் கூட).. :)

rapp said...

நீங்க சொல்லியுள்ள அனைத்து விஷயங்களும் மிக மிக சரியான கருத்துக்கள் கையேடு.

//மிகப்பெரிய அணைகளை நிறுவுதல் என்பதைக் கனவாகக் கொண்டார் நேரு, அதனால், நாமும் பெரும் அணைகளை நிறுவுதல் என்று பல ஐந்தாண்டுத்திட்டங்களில் தொலைந்து போயிருந்தபோது, உலகம் முழுவதும் அவற்றின் தீமையையும் நட்டத்தையும் உணர்ந்து கொண்டு மைக்ரோ அணைகளுக்குத் தாவினர். ஆனால், விடாப்பிடியாக சமீப காலம் வரை தொங்கிக் கொண்டிருந்தது இந்தியா,விளைவு.. பல கோடிகள் நட்டம், பல இயற்கை வளங்களின் இழப்பு, இறுதியில், மின்சாரத்தேவையையும் பூர்த்தி செய்து கொள்ளமுடியவில்லை.. //
இதை நானும் படித்துள்ளேன். இந்தப் பதிவில் இவை குறித்தெல்லாம் ஏன் எழுதவில்லை என்றால், நீளம் மிக மிக அதிகமாகி யாரும் படிக்க முடிவதில்லை. மேலும் சமீப காலங்களில் நிறையப் பேர் பிரான்சை ஒப்பிட்டு பேசியதால், அதனை இவ்விடத்தில் விவாதத்திற்கு வைத்தேன்.

//(Think Locally Solve globally)//
மிக சரியான விஷயம். அழிவிற்கு வழியுள்ள ஒரு விஷயத்திற்கு வக்காலத்து வாங்குவோர், ஆக்கப்பூர்வமான வழிகளுக்கு ஆதரவு அளிப்பதில்லை. இதில் மேலும் மேலும் வெளிப்படையாக குற்றச்சாட்டுகளையும் வைக்க முடியாது. ஏனென்றால் எதனையும் அபீஷியலான ஆதாரங்களாக நம்மால் குறிப்பிடவும் முடியாது.
அறிவியலின் அனைத்துக் கூறுகளையும் தியரிட்டிக்கலாக பார்க்காமல், கொஞ்சம் நிஜ நடைமுறைகளையும் அறிந்து கொள்ள முற்படுவதே நீங்கள் கூறுவது போல் நல்லது.

தங்களின் விளக்கமான பின்னூட்டத்திற்கு மிக மிக நன்றி கையேடு :):):)

விஜய் said...

அணுசக்தி ஒப்பந்தம் நமக்கு தரப் போகும் விஷங்களை தெளிவாக்கியுள்ளீர்கள்.

தி.விஜய்
pugaippezhai.blogspot.com
வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 20 மறுமொழிகள் | விஜய்

rapp said...

தங்களின் பின்னூட்டத்தை பதிஞ்சமைக்கு ரொம்ப நன்றிங்க விஜய்

தஞ்சாவூரான் said...

//ஆனா ஒரு விஷயம் சுய புத்தி உள்ள எல்லாருக்குமே தெரியும், அது என்னன்னா, மின்சாரம் இல்லாமலோ, இல்ல அரைகுறையான மின்சார வசதிகளோடோ கூட மனிதன் வாழ்ந்திடலாம், ஆனா புற்றுநோய், தோல் வியாதிகள், மேலும் பல பிறவிக் குறைபாடுகளோட காலம் கடத்துவதுதான் நரகத்திலும் கொடூர நரகம்.//

நச்சைப் பத்தி ஒரு நச கருத்து்!
அப்பிடியே, நம்ம வீட்டுக்கும் வாங்க. இது பத்தின ஒரு பயங்கர சதியை கண்டுபிடுச்சு சொல்லியிருக்கேன் :)

http://thanjavuraan.blogspot.com/2008/07/blog-post_12.html

rapp said...

உங்கள் கருத்துக்களை பதிஞ்சதுக்கு ரொம்ப நன்றிங்க தஞ்சாவூரான், கண்டிப்பா நாளைக்கு உங்க பதிவுக்கு வரேன்

விஜய் said...

//Voice on Wings said...
உலகிலேயே மிக அதிக அளவில் அணுசக்தியைப் பயன்படுத்தும் ஃபிரான்ஸிலிருந்து இதை நீங்கள் பதிவு செய்திருப்பது கவனத்திற்குரியது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்தப் பதிவுக்கு எனது பாராட்டுக்கள்.//

well said

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

ஹையா 100 வது நானு

rapp said...

வந்ததற்கும் பின்னூட்டமிட்டதற்கும், ரொம்ப நன்றிங்க விஜய்.

அடடே நூறு, அதுவும் நம்ம அப்துல்லா அண்ணன். ரொம்ப ரொம்ப நன்றிண்ணே :):):)

ராஜ நடராஜன் said...

வணக்கம் ராப் கவிதாயினி!கல்பாக்கம் ஒரு செய்தியாளனின் அனுபவங்கள் பதிவிலிருந்து வருகை.