Tuesday, 14 July, 2009

நான் கூட விருது வாங்கிட்டேன்.


இந்த விருது கொடுத்த முல்லைக்கு ரொம்ப ரொம்ப நன்றி:):):)

நான் கொடுக்கப் போற மொதல் விருது முத்துவுக்கு. இவங்களோட போஸ்ட்ல நான் மொதல்ல படிச்சது 'சாட்ட சாட்ட'தான். நம்ம வீட்ல நடக்குற விஷயமாத்தான் இருக்கும். ஆனா, நாம சரியா நோட் பண்ணிருக்க மாட்டோம். அதயெல்லாம் சும்மா சூப்பரா போட்டிருவாங்க. பெருசா மெனக்கெடாம, சிம்பிளா அப்டியே சொல்ல வந்தத சொல்லிட்டு போவாங்க. வர வர புதுக் காமிரா வாங்குனதுலருந்து, இந்தப் போட்டோங்களப் போட்டு ஓவரா சீன் காமிக்கறாங்க. நான் அதப் புடிங்கி பாலு மகேந்திரா எபெக்ட்ல நாலு படம் எடுத்தா சரியாகிடும்.

அம்பி அண்ணன். ஹி ஹி, இப்போல்லாம் இவர பதிவு எழுத வெக்குறதுன்னா விருதெல்லாம் கொடுக்கணும் போலருக்கு. அப்பப்போ வந்து ஜம்புக் கதைகள எடுத்துவிட்டா நல்லாருக்கும். இல்லைன்னா அட்லீஸ்ட் ஒரு கோபிகா போஸ்டாவது போட்டு தாக்கனும். ஆஹா ஆஹா, அது ஒரு அழகிய கனாக்காலம்.

டுபுக்கு அண்ணன். ஒரே நாள்ல இவரோட மொத்தப் பதிவுகளும் படிச்சிருக்கேன். வீணாப் போனவங்க, அது இதுன்னு வெளங்காத கணக்கஎல்லாம் வெச்சு பரீட்சைல காண்டாக்குறத்துக்கு பதில், இவரு பதிவுகள வெச்சு, கேள்விக் கேட்டா, நான் சூர்யவம்சம் தேவயானி கணக்கா கலெக்டராகி, பிளயிட் டிக்கட் கொடுத்து, மாமனார இந்தியா வரவெச்சு, பேப்பர் வெயிட்ட அவர் கால்ல தூக்கி போட்டு, அத எடுக்குறாப்டி காலத் தொட்டுக் கும்பிட்டு, பெருவெரல முறுக்கி, பிராக்ச்சராக்கிடுவேன். எங்க நம்ம நாடு முன்னேறுறது.

சென்ஷி அண்ணன். இவரு ஏதோ இந்த பின்நவீனத்துவ அறிவுஜீவி ஆளுன்னு ரொம்ப நாளா நெனச்சிட்டிருந்தேன். பாத்தா பின்னூட்டத்துல வேற எபெக்ட் காட்டுகிறார், அம்பி அந்நியனாட்டம். மீரா ஜாஸ்மின் போஸ்ட் பாத்தாலே தெரியுமே. ஆயில்ஸ் ஊர்ல இருந்து வந்தவுடன், சீக்கிரம் எல்லாரும் சேர்ந்து அப்டி ஒன்னு போடனும்னு நேயர் விருப்பம். இவரு முப்பத்திரண்டுக் கேள்விக்கு தான் பதில் சொன்னத விட, கோபிண்ணனுக்கு கோபியன்ணன் கணக்கா பதில் போட்டு கலக்கலா கலாய்ச்சத போல எக்கச்சக்கமா எதிர்பாக்கறோம்.

கானாஸ். இவரையும் ரொம்ப நாளா வெறும் பாட்டுக்கள் சம்பந்தமான இடுகைகள் மட்டும்தான் போடுவாருன்னு நெனச்சிருந்தேன். எனக்கு ஏன் இப்டி ஒரு வினோத காமாலக் கண்ணுன்னு தெர்ல, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............ அப்புறம் இவரோட கம்போடியா டிரிப் பத்தினப் பதிவுகள்தான் எனக்கு பர்ஸ்ட் தெரிஞ்சது(யாரும் துப்பாதீங்கப்பா என்னைய). இவரு சோக்கா ஒரு போட்டோ போட்டிருக்காரே அழகிகளோட, அதுலப் பாத்தா நம்ம சந்தானம் மாதிரி இல்ல, கி கி கி.

நான் ஆதவன். இவரோட பின்னூட்டங்களால தான் பர்ஸ்ட் பர்ஸ்ட் இவரு வலைப்பூக்கு போக ஆரம்பிச்சேன். பஞ்ஜி ஜம்பிங்க்ள பெங்களூர்ல ஒரு விபத்து நடந்தப்போக் கரெக்டா இவரோட அந்த இடுகயப் பாத்து பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...... ஆகிட்டேன். எந்தப் பதிவுலையும் இவரோட பின்னூட்டங்கள் செம ஜாலி. ஏசி ரூம்ல இருந்து, நெறயப் பதிவு எழுதி, கையையும் சேர்த்து வெத்தல சாராட்டம் செவக்க வெச்சிக்கணும்னு இந்த விருதக் கொடுக்கிறேன்.