Wednesday 25 June, 2008

கமல், தசாவதாரம், உலகத்தரம், ஹாலிவுட் தரம்

தசாவதாரத்தை பத்தி எல்லாரும் எழுதி, தான் படம் பார்த்தாச்சுன்னு பீத்திகிட்டு இருக்காங்க, சரி நாமும் பார்த்தத எழுதினாத்தான ஒரு பெருமையா இருக்கும்னு இதை எழுதுகிறேன்.

நம்பி ஏன் அழுக்கு வேஷ்டி கட்டிக்கலை, அசின் ஏன் பட்டுப் புடவை கட்டிக்கிட்டு வந்து அழுறாங்கன்னு கேக்குறவங்களுக்கு, கமல் அந்த சிலைய தூக்க அந்த பாடு படும்போது ஆகாத அழுக்கா முன்னாடி இருந்திருக்கப் போகுது,அசின் மேட்டர்ல எனக்கொரு பயங்கர சந்தேகம்: ஏங்க புருஷன கொல்லப்போறாங்கன்னு தெரிஞ்சவுடன் ஒரு பொண்டாட்டி அலறி அடிச்சிகிட்டு அப்டியேத்தான ஓடி வருவா? நாம கட்டிருக்கறது பட்டுப் புடவயாச்சே, இந்த சோகக் காட்சியில அது ஒத்துவராதுன்னு பொறுமையா கழட்டி வெச்சிட்டு பழைய புடவைய தேடி எடுத்து மாத்தி கட்டிகிட்டா வருவாங்க? இல்ல அவங்க கிட்ட பட்டு புடவையே இல்லைன்னு அந்தக் காலத்து சுவடு ஏதும் சொல்லுதா? நெறயப் பேரு நெப்போலியன நக்கல் பண்ணிருக்காங்க, ஆனா எனக்கு அவரு நல்லா நடிச்சிருக்கா மாதிரித்தான் தெரியுது. இத்தனைக்கும் அவர்கிட்ட இருந்து பிரிக்க முடியாத மதராஸ் பாஷை(இத்தனைக்கும் அவரு திருச்சிக்காரராமே) வாசனை அடிக்கலைங்களே!

அப்புறம், அமெரிக்கால ஏன் முக்கிய மீட்டிங்க்ல தமிழ்க்காரங்க எல்லாரும் தமிழ்ல பேசிக்கறாங்கனு கேக்குறாங்க, இந்த பழக்கம் தமிழ்நாட்ட விட்டு வெளிய வந்த உடனே எல்லார்கிட்டயும் ஒட்டிக்கிற விஷயம்தான். அப்படி பேசினா அந்த மீட்டிங்க்ல கோவம் வந்து புரியாதவங்க திட்டுவாங்க, இந்த படத்துலயும் அதே மாதிரி ஒருத்தர் திட்டறாரு.

அடுத்து அசினோட காட்சிகள் செமக் கடுப்பா இருந்தாலும், அதே மாதிரி நார்மலான சிலப் பேரு கூட சில சமயம் அப்படி நடந்துக்கறத பார்த்திருக்கேன். ஆனா அவங்க அப்படி சுத்தறதுக்கான காரணம்தான் நம்ப முடியல. சாமி சிலைக்காக ஒருத்தங்க இம்புட்டு ரிஸ்க் எடுப்பாங்களா?
அடுத்து நெறைய பேரு திட்டுற விஷயம், அத்தனைப் பேரு சுனாமில செத்துக் கெடக்கும்போது கமலும் அசினும் எப்படி காதல் வசனம் பேசறாங்கங்கறது. ஒரு விஷயம் எல்லாரும் கவனிச்சிருக்கீங்களா, கல்யாண வீட்ல முறுக்கிட்டு திரியறவங்கக் கூட சாவு வீட்ல ஒன்னு மண்ணா கலந்திருப்பாங்க. பொதுவா மரணம்ங்கறது மனுஷங்களுக்குள்ள இருக்கிற ஈகோவ தற்காலிகமாகவாவது தள்ளி வெச்சிடுதுங்கறது என்னோட தாழ்மையான கருத்து. அதேப்போல நமக்குள்ள இருக்கிற தயக்கங்களை தள்ளி வெச்சிட்டு விஷயத்தை போட்டு உடைக்கறதுக்கும்(நாளைக்கென்ன நடக்குமோன்னு தெரியாத ஒருவித இனம்புரியா பயத்தை ஏற்படுத்தும்) தெகிரியத்தை கொடுக்கும். அசாதாரணமான சூழ்நிலைகள்ள ஏற்படுற தைரியம், 'இடம் பொருள் ஏவல் ஆள் பேரு ஊரு', இப்படி எதையும் பார்த்து வராதுங்க. என்னை பொறுத்த வரைக்கும் அந்த காட்சி மிக யதார்த்தமா இருக்குங்க.

புஷ்ஷையும் அமரிக்காவையும் நக்கலடிச்சிருக்கறது செம சூப்பரா இருக்குங்க. அதேப் போல பல்ராம் நாய்டு மற்றும் பாட்டி வர்ற காட்சிகளும் டாப். கொஞ்ச நாளா சினிமால நெம்ப விளக்கமான நகைச்சுவை காட்சிங்க தொடர்ந்து வந்து போரடிச்சிட்டதால இந்த படத்தில் வர்ற நகைச்சுவை ரொம்ப ரசிக்க வைக்குதுங்க.

பூவராகன் காரக்டர் பேசுற தமிழ் பத்தி இருவேறு கருத்துக்கள் சொல்றாங்க. எனக்கு அந்த விஷயத்தில் சுத்தமா ஞானம் இல்லாததால என்னோட ஒரு குறையை மட்டும் சொல்லிடுறேன். இவர் வர்ற காட்சிகள், பேசுற வசனங்கள் எல்லாரையும் ஜாஸ்தி கவனிக்க வைக்குது. இப்படிப்பட்ட இடத்துல எப்படிங்க, வாசு இவர்கிட்ட சொல்ற, மீதியையும் பார்த்துட்டு போங்கர வசனத்தோட தொடர்ச்சியை காட்சியாக்காம விட்டாங்க?

ஏன் நாகேஷையும், கே.ஆர்.விஜயாவையும் அந்த எடத்துல போட்டிருக்காங்கன்னு கேக்குறாங்க. இந்தப் படத்துல கவனிச்சீங்கன்னா, முடிஞ்சவரைக்கும் எல்லா கமலோடவும் குறைந்தபட்சம் ஒரு பிரபலமானவராவது நடிச்சிருப்பாங்க. நம்பியோட அசின், நெப்போலியன், பாடகரான சீக்கிய கமலோட ஜெயப்பிரதா,பூவராகனோட கவிஞர் கபிலன், டைரக்டர் வாசு, ஃப்ளெட்சரோட மல்லிகா ஷெராவத்,பல்ராம் நாய்டுவோட நடன இயக்குனர் ரகுராம், பாட்டியோட அசின், கலிபுல்லா கானோட நாகேஷ்,கே.ஆர்.விஜயா, புஷ் கமலோட கலைஞர், மன்மோகன் சிங்(கொஞ்சம் ஜாஸ்தியா கற்பனைய தட்டிட்டேனோ) ஹீரோ கோவிந்த் படம் முழுக்க எல்லாரோடவும் கலந்துகட்டி வர்றதாலையும், அவர்தான் ஹீரோனு சொல்லிட்டதாலையும் பிரச்சினை இல்லை. ஆனா ஜப்பான் கமல் கூடத்தான் பிரபலமான யாரும் தனிச்சு வரலை. சிட்டிபாபு, வையாபுரி,ஹேமா பாஸ்கர் இவங்கெல்லாம் தமிழ் ரசிகர்கள் அந்நியப்பட்டு போயிடக் கூடாதுன்னு சேர்த்திருப்பாருன்னு நினைக்கிறேன்(சிவாஜில சாலமன் பாப்பையா சார் பண்ற 'பழகுங்க' காமடிக்கு சிரிப்பே வரலன்னாலும்,அவரு வந்து சொன்னா அதுக் காமடி சீனா இருக்கும்னு நம்பிட்டாங்கல்ல,அது மாதிரி). இது இப்படிப்பட்ட எல்லாப் படத்துலயும் செய்யற விஷயம்தான். ஒவ்வொரு கமல் காரக்டரையும் தனிச்சி காட்ட பல வழிகள்ல இதுவும் ஒண்ணுன்னு நான் நினைக்கிறேன். ஏற்கனவே குரங்கா கூட கமலே நடிச்சிருக்கலாமேனு நக்கல் பண்றாங்கல்லைங்க, அப்படி படம் முழுக்க கமலே வியாபிச்சி ஒருவித அயர்ச்சி ஏற்படும்போது சின்ன ரிலீப் மாதிரித்தான் இவங்களை படத்துல நடிக்க வெச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன்.

இதுல கமல் அவர் சாயலே இல்லாம எதுக்கு சில காரக்டர்களுக்கு மேக்கப் போட்டுகிட்டார்னு எனக்குப் புரியல. கொஞ்சம் நல்லா சாயல் இருந்தாத்தானே அவரோட நடிப்புல உள்ள வித்தியாசத்தை தூக்கி காமிக்க முடியும். அதே மாதிரி மேக்கப் சரியில்லேங்கும்போது எதுக்கு இவ்வளவு க்ளோஸ் அப் ஷாட்ஸ் வெச்சாருன்னு புரியல.

அப்புறம் எப்படி ஃப்ளெட்சர், ப்ளேன்ல இருந்து இறங்கின உடனே தமிழ்நாட்ல உள்ள சந்து பொந்தெல்லாம் பூந்து சேஸ் பண்றாருங்கறாங்க. ஏங்க இது உங்களுக்கே அடுக்குமா, அவரு கடைசி அரைமணிநேரம் வரைக்கும் ஹேமா பாஸ்கரோட தானே சுத்தராரு? அதோட அவரு பழைய சிஐஏ ஏஜெண்டா வேற வராரு, அவிங்கெல்லாம் அத்துவானக் காட்ல விட்டாக் கூட வழி கண்டுபிடிப்பாங்களாமே. உடனே ரா அதிகாரி(பல்ராம் நாயுடு) இப்படியா சுத்திகிட்டிருப்பாருங்கறீங்க, ஏங்க படத்துல ரவிக்குமார் ஒன்னுமே செய்ய மாட்டாருன்னு நெனச்சீங்களா? அவரு சில இடத்துல தன் முத்திரைய பதிச்சிட்டாரு. நம்மள்ல சிலப் பேர் ஓவரா விவாதம் பண்ணப்போய், ஏன் அந்தக் காட்சியில லாஜிக் இல்லைங்கறத விட்டுட்டு, ஏன் அந்தக் காட்சியில லாஜிக் இருக்கு, அதெப்படி அந்தக் காட்சியில லாஜிக் வெக்காதவங்க, இந்தக் காட்சியில மட்டும் லாஜிக் வெக்கலாம்னு பழக்கதோஷத்துல திட்டிடுறாங்க.
இதுல இன்னொரு விஷயமும் நெம்ப ரசிக்கணுங்க. இந்தப் படம் பார்த்திட்டு வந்த எல்லாரையும் திருப்தி படுத்திடுத்து. கேவலமா திட்டணும்னு நினைக்கறவங்களுக்கு நெறைய விஷயம் இருக்கு, சூப்பரா இருக்குன்னு பாராட்ட நினைக்கறவங்களுக்கும் விஷயம் இருக்கு, நாத்திகம் பேசுறவங்களுக்கும் விஷயம் இருக்கு, ஆத்திகம் பேசுறவங்களுக்கும் விஷயம் இருக்கு, பெரும்பான்மையினருக்கும் விஷயம் இருக்கு, சிறுபான்மையினருக்கும் விஷயம் இருக்கு.

ஏங்க, கமலும் ரவிக்குமாரும் எப்பவாவது இந்த படம் சத்தியஜித்ரே, குரசோவா படங்களுக்கு போட்டின்னு சொன்னாங்களா? ரவிக்குமார டைரக்டரா போடும்போதே கமல் இது ஒரு பக்கா கமர்ஷியல் பாண்டசி படம்னு தெளிவுப்படுத்திட்டார். இதுக்கும் மேல டெலிபுரேட்டா எப்படிங்க சொல்ல முடியும். அவரு தன் கருத்தை மட்டுமே சொல்லணும்னு படம் எடுத்திருந்தா ஒப்புக்குச் சப்பாணியா சுரேஷ் கிருஷ்ணாவத்தான போட்டிருப்பாரு. நெறயப் பேரு தானே ஒரு பிம்பத்தை உருவாக்கி வெச்சுகிட்டு இல்லாததை இருக்குறாப் போல நினைச்சுகிட்டு தைய்யா தக்கான்னு குதிக்கறாங்க. அப்போ இது ஹாலிவுட் தரமா இல்லையா, ரவிக்குமார் அப்படி சொல்லிருக்காரேங்கரவங்களுக்கு, ஆமா, ஹாலிவுட் தரத்தில் தான் இருக்கு. ஏங்க ஹாலிவுட்ல ஒழுங்கா நகைச்சுவை, பாண்டசி, காதல், ரொமேன்டிக் காமடி, ஆக்ஷன், டிராமா, சயன்ஸ் பிக்ஷன், அட்வென்ச்சர், வார், ஹாரர் அது இதுனு தரம் பிரிச்சு வெச்சு அதுப்படி தானே விமர்சனம் பண்றாங்க. இங்க மட்டும் ஏங்க எல்லாத்தையும் சேர்த்து போட்டு உலகத்தரம், ஹாலிவுட் தரம், ஆஸ்கார் தரம்னு கலந்து கட்டி கும்மி அடிக்கறீங்க? இது ஒரு நல்ல பாண்டஸி வகை படங்கறது என்னோட கருத்து.
இந்த காச்சு காச்சரவங்கள எல்லாம் லேட்டஸ்ட் இந்தியானா ஜோன்ஸ் படத்துக்கு அனுப்பி வெச்சிடணும்.

பின்குறிப்பு: நான் ஒரு கமல் ரசிகை அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எங்களோட தல ஜே.கே.ரித்தீஷுக்கு கமல் தீவிர போட்டியாளரா இருந்தாலும் ஒரு உண்மையான கலைஞனின் உழைப்பை பாராட்ட வேணும்ங்கற காரணத்துக்காகவே இந்தப் பதிவு.

தசாவதாரம், கமல், உலகத்தரம், ஹாலிவுட் தரம்

நண்பர்களே, மறுபடி தமிழ்மண பட்டை பிரச்சினை காரணமாக இந்த பதிவு இங்கு
http://vettiaapiser.blogspot.com/2008/06/blog-post_2984.html
மறுபதிப்பு செய்யப்படுகிறது. இங்கு போடப்பட்ட பின்னூட்டங்கள் காப்பி செய்து புதிய பதிப்பில் போடுகிறேன். இடையூறுக்கு மன்னிக்கவும்.

Monday 23 June, 2008

மக்களே, பெண்கள் சீரியல் பார்ப்பது கொலைவெறி செயலா?

என்னக் காரணத்தாலோ தமிழ்மண ப்ளாகர் பதிவுப்பட்டை செயலிழந்தமையால், மறுமுறை உங்கள் பார்வைக்கு இதனை வைக்கிறேன்.
பெண்கள் ஏன் சீரியல் பார்க்க ஆரம்பித்தார்கள்? முதலில் பொதுவான சிலக் காரணங்களை பட்டியலிட்டுவிட்டு பின்னர் சிறிது வித்தியாசமானக் காரணத்தைக் காணலாம்.

முதல் காரணம், அவை பெண்களை மையப்படுத்தியே எடுக்கப்படுகின்றது. சரி, ஆனால் இவர்கள்தான் தன்னுடைய பார்வையாளர்களாக இருப்பார்கள் என்ற தீர்மானத்திற்கு எவ்வாறு வந்தார்கள்? அது அடுத்த காரணத்தை நோக்கி நம்மை செலுத்துகிறது. இரண்டாவதுக் காரணம் பெண்களுக்கானத் திரைப்படங்கள் குறைந்து போயின. சரி ஏன் பெண்களுக்கான திரைப்படங்கள் குறைந்தன? அது மூன்றாம் காரணத்தை வெளிக்கொணருகிறது. அது என்னவென்றால் திரையரங்குகளில் நுழைவுச்சீட்டின் விலை கூடிப் போனதுதான். இதன் காரணமாக பெண்களுக்கானத் திரைப்படங்களின் தயாரிப்புக் குறைந்து போனது.

தன்னை பற்றிய,தன் குமுறல்களை பற்றிய ஒரு வாசல் மூடியவுடன், திறந்த மற்றொரு வாசலை நோக்கி பெண்களின் கவனம் திரும்பியது. அதனால் பெண்கள் சீரியல் பார்க்க ஆரம்பித்தார்கள்.எல்லாம் சரி, இந்தப் போக்கு ஆரம்பித்த பொழுது ஓரளவிற்கு நல்ல நல்லத் தொடர்கள், குறைதபட்சம் இப்பொழுது காட்டப்படும் அதீத வன்முறை மற்றும் ஆபாசம் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது இவை இந்தளவிற்குக் கூடியிருப்பதற்குக் காரணம், சில ஆண்டுகளாக ஆண்களும் பெரும்பான்மையாக சீரியல்களை நோக்கித் திரும்பியதுதான் என நினைக்கிறேன். இவ்விடத்தில் தயவுசெய்து யாரும் வீட்டில் ஒரு டிவி தானே இருக்கு, வேறுவழி இல்லாமல் பார்க்கிறேன் எனக் கூறவேண்டாம். பார்க்க பிடிக்காதப் பலர் வேறு எத்தனையோ வழிகளில் தவிர்க்கின்றனர்.

இந்த இடத்தில் நான் சீரியல் பார்ப்பவர்களை எந்த விதத்திலும் குறை கூற முயலவில்லை. எதை பார்ப்பது, எதை பார்க்காமல் இருப்பது என்பது வயதுவந்த ஒவ்வொருவரின் உரிமை. பின் ஆண்கள்(இவர்களும் அதனை பார்க்கும்போது) ஏன் பெண்கள் சீரியல் பார்ப்பதை ஒரு குற்றத்தை செய்வதை போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயலுகிறார்கள்? என்னைப் பொறுத்த வரை எப்பொழுதும் பெண்களை மட்டம் தட்ட ஒரு விஷயம் வேண்டும் என்ற மனப்போக்குத்தானே காரணம்? இதனை பெண்களோடு சேர்ந்து குழந்தைகளும் பார்க்கின்றார்களாம், அதனால் இதனை தவிர்க்க வேண்டுமாம். இதனை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இதே காரணத்திற்காக குறைந்தபட்சம் குழந்தைகளின் முன் புகைபிடிப்பதயாவது நிறுத்தி இருப்பார்களா, இல்லை தன் மனைவியை மட்டம் தட்டுவதயாவது நிறுத்தி இருப்பார்களா? சரி விடுங்கள், பெண்கள் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டால் குழந்தைகள் கெட்ட விஷயங்களை கற்றுக் கொள்ளவே மாட்டார்களா?

இன்று குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளிலிருந்து எல்லாவற்றிலும் வன்முறை நிறைந்திருக்கிறது. எப்பொழுது மீடியா என்ற ஊடகம், பரபரப்பும் வியாபரமும் எங்களின் தலையாயக் குறிக்கோள் என முடிவு செய்ததோ, அன்றே அத்துணை ஊடகச் சம்பந்தப்பட்ட பொழுதுப்போக்குச் சாதனங்களிலும் வன்முறையும் ஆபாசமும் தவிர்க்கமுடியாதவயாகின்றன. வெகுஜனப் பொழுதுபோக்கு என்பது அனைவரையும் சார்ந்து இருப்பது. இதில் பெண்கள் மட்டும் எப்படி பொறுப்பாளிகளாகிறார்கள்? வயது வந்த பெண்கள் எதை பார்க்க வேண்டும் என்று கூற ஆண்களுக்கு யார் உரிமை கொடுத்தது? நாங்கள் ஆலோசைகள்தான் கூறினோம் என்றால் பிரச்சினை இல்லை.

இதெல்லாவற்றையும் விடுங்கள், நான் மேற்கூறிய கடைசிக் காரணத்திற்கு வருவோம்.என்னுடைய தாயார் பொதுவாக நகைச்சுவை தன்மையுள்ள நிகழ்ச்சிகளையே பார்க்க விரும்புவார்கள், அத்தன்மையுள்ளவற்றையே படிக்கவும் விரும்புவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென சீரியல் பார்க்கத் தொடங்கினார்கள். அதுவும் ஒன்பது மணிக்கு மேல் ஆரம்பிக்கும் சீரியல்களை மட்டுமே விரும்பினார்கள். நானும் அப்பொழுதுதான் பிரபலமானவை வரும் நேரம் என்பதால் அவ்வாறு செய்கிறார் என நினைத்தேன். ஆனால் தான் பார்த்து வந்த தொடரின் நேரத்தை மாற்றினாலும் சரி, அந்த சமயத்திற்கு வேறொரு சீரியல் வந்தாலும் சரியென அவர்களின் போக்கு வித்தியாசமானதாக இருந்தது. அந்தச்சமயம் நான் கல்லூரிக்கு(வெகு தொலைவில் இருந்தது) சென்றுகொண்டிருந்த காரணத்தால் சீக்கிரம் தூங்கப் போய்விடுவேன். அவர் தொடர்கள் பார்க்கும் பொழுது தூங்கித் தூங்கி வழிவார். பார்க்கின்ற தொடர்களை பற்றியும் மிக எரிச்சலுடனே குறிப்பிடுவார். சீக்கிரம் தூங்கச் சொன்னாலும் செல்ல மாட்டார். எந்த விதத்திலும் தனக்கு பிடிக்காத ஒன்றை இவர் எதற்காகச் செய்கிறார் என எனக்கு கவலை மேலோங்க, ஒரு நாள் வற்புறுத்தி கேட்டபொழுது, "நான் என்ன செய்வது? எனக்கு பத்து மணிவரை முழித்திருக்க ஒரு காரணம் தேவைபடுகிறது. நாற்பது வயதிற்குப் பின் வாழ்க்கையில் இனி என்ன இருக்கிறது என்ற வெறுப்பு, பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பதற்றம், எங்களின் வயோதிகம் எப்படி இருக்குமோ என்ற பயம் எல்லாம் சேர்ந்து, இரவில் சீக்கிரம் படுத்தால் நடுஇரவில் விழிப்பு ஏற்படுத்திவிடுகிறது அதுதான். சரி உன்னிடம் பேசிக்கொண்டிருக்கலாம் என்றால் நீ போய் வரும் தூரத்திற்கு உன்னை எவ்வளவு நேரம் விழித்திருக்கச் சொல்வது? சரி என அவரிடம் பேசச் சென்றால் எது பேசினாலும் சரியான பதில் கூறுவதில்லை. நான் ஒரு வகை இடையூறு செய்வது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. அப்படியே பேசினாலும் ஏதாவது தெரியாமல் சொல்லப் போய் அதனை அவர் குற்றமாய் எடுத்துக்கொண்டு , என வாழ்க்கை மேலும் கடினமாகிறது. நான் எப்படி பேசும் ஒவ்வொரு வார்த்த்யையும் கணவரிடம் கூட யோசித்தே பேச முடியும், இல்லை செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் என் புத்திசாலித்தனத்தை புகுத்த முடியும்? சரி படிக்கலாம் என்றால் வீட்டில் உள்ள எனக்குப் பிடித்த எல்லா புத்தகங்களையும் படித்தாயிற்று, அதுமட்டுமல்லாமல் எவ்வளவு நேரம்தான் படிப்பது? அதுதான் யாரையும் தொந்தரவுப் படுத்தாமல் எதையோ பார்க்கிறேன்" என்றார்.

இதனை சரிசெய்ய என் தந்தையிடம் பேசியபோது அவருக்கு தான் கொண்டிருந்த அதீத எதிர்பார்ப்புகள் சாத்தியமில்லை என்பதே தெரியவில்லை. தான் கொண்டுள்ள கருத்துக்களில் உள்ளக் குறைகள், குறைகள் என்றே அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் மனைவிக்கு தான் விரும்புகிற அனைத்தும் பிடித்திருக்க வேண்டும் என்ற போக்கு தவறானது என்பதை அவருக்கு சிறிது சிறிதாக விளக்கி பிரச்சினையின் வேரை சரிசெய்தோம். பின்னர் அனைத்தும் ஓரளவிற்கு சரியாகியது. என் தந்தை பிள்ளைகளின் பேச்சை காதுக் கொடுத்து கேட்பவராதலால் பிரச்சினைக்கு தீர்வுக் காண முடிந்தது. வீட்டிலுள்ள யாருக்குமே காது கொடுக்காத ஆண்களின் விஷயத்தில் என்ன செய்வது?

என் தாயார் கூறியது எவ்வளவு உண்மையானக் கருத்து. என்னைப் பொறுத்த வரை பெரும்பாலானப் பெண்கள் இந்தக் காரணத்தாலேயே நெடுந்தொடர்கள் பார்க்கிறார்களோ என எனக்கொரு சந்தேகம். ஏனென்றால் நாம் விரும்பிச் செய்யும் விஷயங்களை நாம் பெரும்பாலான நேரங்களில் மறப்பதில்லை. ஆனால் நிறையப் பேர் முக்கால்வாசி தொடர்களின் கதையை(கதை இருக்கானு கேக்கக்கூடாது) கூட ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை. அப்படி விருப்பமும் இல்லாத, நிர்பந்தமும் இல்லாத விஷயத்தை அவர்கள் தொடர்ந்து செய்ய காரணம் என்ன? தயவு செய்து ஆண்கள் கோபிக்க வேண்டாம். காரணம் கணவர்கள்தான்(எத்தனையோ single status பெண்கள் பார்க்கிறார்களே எனலாம், உங்கள் கேள்வியிலேயே பதில் உள்ளது. அவர்களுக்கு வாழ்க்கைத் துணை இல்லை என்பதே காரணம்)

ஏன் பல கணவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் மனைவியுடன் ஊர் சுற்றவோ, பொதுவாக அரட்டை அடிக்கவோ தயங்குகிறார்கள். ஊர் சுற்றினாலும் மனைவியின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை? அப்படியே ஊர் சுற்றினாலும் எதற்காக சொந்த பந்தங்களின் வீட்டிற்கு செல்லவே(பல சமயம் பார்ப்பதற்கு பெண்கள்தான் அவ்வாறு விரும்புவதுபோல் தோற்றமளித்தாலும் எந்த பெண்ணும் கணவன் ஷாப்பிங் செல்லலாம் என்றோ, சினிமா செல்லலாம் என்றோ கூறும்போது, இல்லை அண்ணன் வீட்டிற்குத்தான் போக வேண்டும் எனச் சொல்வதில்லை. மாறாக கணவனின் சொந்தங்களின் வீட்டிற்குதான் செல்ல வேண்டும் என வற்புறுத்தும்போதுதான் இவ்வாறு கூறுகிறார்கள்) விரும்புகிறார்கள்? நான் சொல்லும் இடத்திற்கு நீ நாலு தடவை வந்தாயானால், நீ விரும்புகிற இடத்திற்கு நான் ஒரு தடவை வருவேன் என்ற போக்கு அவர்களின் மத்தியில் நிலவக் காரணம் என்ன?

நாம் நூறுதடவை ஒரு செயலை திரும்பத் திரும்பச் செய்கிறோம், அதனால் அதனை 101வது தடவை கண்டிப்பாக சரியாகச் செய்வோம் என்ற உறுதியுண்டா? பின்னர் பெண்கள் மட்டும் எப்படி திருமணமாகி பத்து வருடங்கள் ஆகிவிட்டபடியால் அனைத்தையும் மிகச் சரியாக செய்ய முடியும்? இதெல்லாவற்றையும் விட எரிச்சலான விஷயம், பெண்களுக்கு திருமணத்தின்போது சொல்லப்படும் அறிவுரை. அது என்னவென்றால்,"புகுந்த வீட்டில் பார்த்து புத்திசாலிதனமாக நடந்துக்கோ". இதென்ன யுத்தக் களமா இல்லை போட்டித் தேர்வா, நம் புத்திசாலித்தனங்களை காட்ட என நான் கூற வரவில்லை. ஆரம்பத்தில் ஒருத்தருக்கொருத்தர் முழுமையாகத் தெரியாததால் இவ்வாறு நடந்து கொள்வது அல்லது நடத்து கொள்ளச் சொல்வது சரி. ஆனால் பிள்ளைகள் பெரியவர்களானப் பின்னும் பல குடும்பங்களில் பெண்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதின் காரணம், ஆண்கள் தாங்கள் முட்டாளாக்கப்படுவதை மிகவும் விரும்புகிறார்களா இல்லை நானாக உன் விருப்பங்களுக்கு செவிமடுக்க மாட்டேன், நீயாக உன் மூளையை பயன்படுத்தி நிறைவேற்றிக்கொள் என்னும் மனப்பாங்கா? ஒரு பெண் கண் விழித்திருக்கும் அத்துனை நேரமும் தன் புத்திசாலித்தனத்தை பறைசாற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு கொடூரமான சிந்தனை?

இதை படிக்கும் பெரும்பாலான ஆண்களுக்கு மிகவும் எரிச்சல் வரும். நான் என் சொந்த அனுபவத்தை பொதுக் கருத்தாக்க முயல்வதாக குற்றம் சாட்டுவர். இது அவரவரின் மனசாட்சியை பொறுத்த விஷயம். நான் கூறும் விஷயம் வேறெங்கும் நடப்பதே இல்லை என்றால், இவர்களிடம் வாதிடுவதில் பயனில்லை. இன்னும் இவ்வகை குறைகள் இல்லாத சில ஆண்கள் நான் அப்படி இல்லையே எனக் கூறுவர்.இவர்களுக்கு என் பதில், அப்படிஎன்றால் மிகவும் நல்லது.இதில் குறிப்பிடப்படும் வகையைச் சேராதவர் நீங்கள். உங்களின் துணை நிறைவாக வாழ்வார் என்பதாகும்.மொத்தத்தில் இந்தப் பதிவு, தான் செய்வது தவறென்றே உரைக்காமல் தவறு செய்யும் ஆண்களுக்காகவும், தன் துணையிடம் தான் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் மிக மிக அதிகம் என்பதை உணராத ஆண்களுக்காகவும்தான். நாங்களும் பெண்களால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்கிற ஆண்களா, தாராளமாக நீங்களும் உங்கள் வலைபதிவில் தெரிவியுங்கள். நான் ஒரு பெண், அதனால் எங்களின் பிரச்சினைகளை கூறுகிறேன். அதனால் தயவுசெய்து யாரும் நீ ஏன் இவற்றை குறித்து மட்டும் எழுதுகிறாய் என்ற அர்த்தமற்ற கேள்வியை எழுப்ப வேண்டாம் என வேண்டுகிறேன். யார் மனதாவது புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

இவ்விஷயத்தில் இன்னும் பல முக்கிய கூற்றுகள் இருந்தாலும் பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டு மற்ற பிரச்சினைகளை வேறொரு சமயம் விவாதத்திற்கு எடுக்கலாம் என இத்துடன் முடிக்கிறேன்.

Sunday 22 June, 2008

மக்களே, பெண்கள் சீரியல் பார்ப்பது கொலைவெறி செயலா?

எண்ணக் காரணத்தாலோ தமிழ்மண ப்ளாகர் பதிவுப்பட்டை செயலிழந்தமையால், மறுமுறை உங்கள் பார்வைக்கு இதனை வைக்கிறேன். பெண்கள் ஏன் சீரியல் பார்க்க ஆரம்பித்தார்கள்? முதலில் பொதுவான சிலக் காரணங்களை பட்டியலிட்டுவிட்டு பின்னர் சிறிது வித்தியாசமானக் காரணத்தைக் காணலாம்.

முதல் காரணம், அவை பெண்களை மையப்படுத்தியே எடுக்கப்படுகின்றது. சரி, ஆனால் இவர்கள்தான் தன்னுடைய பார்வையாளர்களாக இருப்பார்கள் என்ற தீர்மானத்திற்கு எவ்வாறு வந்தார்கள்? அது அடுத்த காரணத்தை நோக்கி நம்மை செலுத்துகிறது. இரண்டாவதுக் காரணம் பெண்களுக்கானத் திரைப்படங்கள் குறைந்து போயின. சரி ஏன் பெண்களுக்கான திரைப்படங்கள் குறைந்தன? அது மூன்றாம் காரணத்தை வெளிக்கொணருகிறது. அது என்னவென்றால் திரையரங்குகளில் நுழைவுச்சீட்டின் விலை கூடிப் போனதுதான். இதன் காரணமாக பெண்களுக்கானத் திரைப்படங்களின் தயாரிப்புக் குறைந்து போனது.

தன்னை பற்றிய,தன் குமுறல்களை பற்றிய ஒரு வாசல் மூடியவுடன், திறந்த மற்றொரு வாசலை நோக்கி பெண்களின் கவனம் திரும்பியது. அதனால் பெண்கள் சீரியல் பார்க்க ஆரம்பித்தார்கள்.எல்லாம் சரி, இந்தப் போக்கு ஆரம்பித்த பொழுது ஓரளவிற்கு நல்ல நல்லத் தொடர்கள், குறைதபட்சம் இப்பொழுது காட்டப்படும் அதீத வன்முறை மற்றும் ஆபாசம் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது இவை இந்தளவிற்குக் கூடியிருப்பதற்குக் காரணம், சில ஆண்டுகளாக ஆண்களும் பெரும்பான்மையாக சீரியல்களை நோக்கித் திரும்பியதுதான் என நினைக்கிறேன். இவ்விடத்தில் தயவுசெய்து யாரும் வீட்டில் ஒரு டிவி தானே இருக்கு, வேறுவழி இல்லாமல் பார்க்கிறேன் எனக் கூறவேண்டாம். பார்க்க பிடிக்காதப் பலர் வேறு எத்தனையோ வழிகளில் தவிர்க்கின்றனர்.

இந்த இடத்தில் நான் சீரியல் பார்ப்பவர்களை எந்த விதத்திலும் குறை கூற முயலவில்லை. எதை பார்ப்பது, எதை பார்க்காமல் இருப்பது என்பது வயதுவந்த ஒவ்வொருவரின் உரிமை. பின் ஆண்கள்(இவர்களும் அதனை பார்க்கும்போது) ஏன் பெண்கள் சீரியல் பார்ப்பதை ஒரு குற்றத்தை செய்வதை போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயலுகிறார்கள்? என்னைப் பொறுத்த வரை எப்பொழுதும் பெண்களை மட்டம் தட்ட ஒரு விஷயம் வேண்டும் என்ற மனப்போக்குத்தானே காரணம்?

இதனை பெண்களோடு சேர்ந்து குழந்தைகளும் பார்க்கின்றார்களாம், அதனால் இதனை தவிர்க்க வேண்டுமாம். இதனை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இதே காரணத்திற்காக குறைந்தபட்சம் குழந்தைகளின் முன் புகைபிடிப்பதயாவது நிறுத்தி இருப்பார்களா, இல்லை தன் மனைவியை மட்டம் தட்டுவதயாவது நிறுத்தி இருப்பார்களா? சரி விடுங்கள், பெண்கள் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டால் குழந்தைகள் கெட்ட விஷயங்களை கற்றுக் கொள்ளவே மாட்டார்களா? இன்று குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளிலிருந்து எல்லாவற்றிலும் வன்முறை நிறைந்திருக்கிறது. எப்பொழுது மீடியா என்ற ஊடகம், பரபரப்பும் வியாபரமும் எங்களின் தலையாயக் குறிக்கோள் என முடிவு செய்ததோ, அன்றே அத்துணை ஊடகச் சம்பந்தப்பட்ட பொழுதுப்போக்குச் சாதனங்களிலும் வன்முறையும் ஆபாசமும் தவிர்க்கமுடியாதவயாகின்றன. வெகுஜனப் பொழுதுபோக்கு என்பது அனைவரையும் சார்ந்து இருப்பது. இதில் பெண்கள் மட்டும் எப்படி பொறுப்பாளிகளாகிறார்கள்? வயது வந்த பெண்கள் எதை பார்க்க வேண்டும் என்று கூற ஆண்களுக்கு யார் உரிமை கொடுத்தது? நாங்கள் ஆலோசைகள்தான் கூறினோம் என்றால் பிரச்சினை இல்லை.

இதெல்லாவற்றையும் விடுங்கள், நான் மேற்கூறிய கடைசிக் காரணத்திற்கு வருவோம்.என்னுடைய தாயார் பொதுவாக நகைச்சுவை தன்மையுள்ள நிகழ்ச்சிகளையே பார்க்க விரும்புவார்கள், அத்தன்மையுள்ளவற்றையே படிக்கவும் விரும்புவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென சீரியல் பார்க்கத் தொடங்கினார்கள். அதுவும் ஒன்பது மணிக்கு மேல் ஆரம்பிக்கும் சீரியல்களை மட்டுமே விரும்பினார்கள். நானும் அப்பொழுதுதான் பிரபலமானவை வரும் நேரம் என்பதால் அவ்வாறு செய்கிறார் என நினைத்தேன். ஆனால் தான் பார்த்து வந்த தொடரின் நேரத்தை மாற்றினாலும் சரி, அந்த சமயத்திற்கு வேறொரு சீரியல் வந்தாலும் சரியென அவர்களின் போக்கு வித்தியாசமானதாக இருந்தது. அந்தச்சமயம் நான் கல்லூரிக்கு(வெகு தொலைவில் இருந்தது) சென்றுகொண்டிருந்த காரணத்தால் சீக்கிரம் தூங்கப் போய்விடுவேன்.

அவர் தொடர்கள் பார்க்கும் பொழுது தூங்கித் தூங்கி வழிவார். பார்க்கின்ற தொடர்களை பற்றியும் மிக எரிச்சலுடனே குறிப்பிடுவார். சீக்கிரம் தூங்கச் சொன்னாலும் செல்ல மாட்டார். எந்த விதத்திலும் தனக்கு பிடிக்காத ஒன்றை இவர் எதற்காகச் செய்கிறார் என எனக்கு கவலை மேலோங்க, ஒரு நாள் வற்புறுத்தி கேட்டபொழுது, "நான் என்ன செய்வது? எனக்கு பத்து மணிவரை முழித்திருக்க ஒரு காரணம் தேவைபடுகிறது. நாற்பது வயதிற்குப் பின் வாழ்க்கையில் இனி என்ன இருக்கிறது என்ற வெறுப்பு, பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பதற்றம், எங்களின் வயோதிகம் எப்படி இருக்குமோ என்ற பயம் எல்லாம் சேர்ந்து, இரவில் சீக்கிரம் படுத்தால் நடுஇரவில் விழிப்பு ஏற்படுத்திவிடுகிறது அதுதான். சரி உன்னிடம் பேசிக்கொண்டிருக்கலாம் என்றால் நீ போய் வரும் தூரத்திற்கு உன்னை எவ்வளவு நேரம் விழித்திருக்கச் சொல்வது? சரி என அவரிடம் பேசச் சென்றால் எது பேசினாலும் சரியான பதில் கூறுவதில்லை. நான் ஒரு வகை இடையூறு செய்வது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. அப்படியே பேசினாலும் ஏதாவது தெரியாமல் சொல்லப் போய் அதனை அவர் குற்றமாய் எடுத்துக்கொண்டு , என வாழ்க்கை மேலும் கடினமாகிறது. நான் எப்படி பேசும் ஒவ்வொரு வார்த்த்யையும் கணவரிடம் கூட யோசித்தே பேச முடியும், இல்லை செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் என் புத்திசாலித்தனத்தை புகுத்த முடியும்? சரி படிக்கலாம் என்றால் வீட்டில் உள்ள எனக்குப் பிடித்த எல்லா புத்தகங்களையும் படித்தாயிற்று, அதுமட்டுமல்லாமல் எவ்வளவு நேரம்தான் படிப்பது? அதுதான் யாரையும் தொந்தரவுப் படுத்தாமல் எதையோ பார்க்கிறேன்" என்றார்.

இதனை சரிசெய்ய என் தந்தையிடம் பேசியபோது அவருக்கு தான் கொண்டிருந்த அதீத எதிர்பார்ப்புகள் சாத்தியமில்லை என்பதே தெரியவில்லை. தான் கொண்டுள்ள கருத்துக்களில் உள்ளக் குறைகள், குறைகள் என்றே அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் மனைவிக்கு தான் விரும்புகிற அனைத்தும் பிடித்திருக்க வேண்டும் என்ற போக்கு தவறானது என்பதை அவருக்கு சிறிது சிறிதாக விளக்கி பிரச்சினையின் வேரை சரிசெய்தோம். பின்னர் அனைத்தும் ஓரளவிற்கு சரியாகியது. என் தந்தை பிள்ளைகளின் பேச்சை காதுக் கொடுத்து கேட்பவராதலால் பிரச்சினைக்கு தீர்வுக் காண முடிந்தது. வீட்டிலுள்ள யாருக்குமே காது கொடுக்காத ஆண்களின் விஷயத்தில் என்ன செய்வது?

என் தாயார் கூறியது எவ்வளவு உண்மையானக் கருத்து. என்னைப் பொறுத்த வரை பெரும்பாலானப் பெண்கள் இந்தக் காரணத்தாலேயே நெடுந்தொடர்கள் பார்க்கிறார்களோ என எனக்கொரு சந்தேகம். ஏனென்றால் நாம் விரும்பிச் செய்யும் விஷயங்களை நாம் பெரும்பாலான நேரங்களில் மறப்பதில்லை. ஆனால் நிறையப் பேர் முக்கால்வாசி தொடர்களின் கதையை(கதை இருக்கானு கேக்கக்கூடாது) கூட ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை. அப்படி விருப்பமும் இல்லாத, நிர்பந்தமும் இல்லாத விஷயத்தை அவர்கள் தொடர்ந்து செய்ய காரணம் என்ன? தயவு செய்து ஆண்கள் கோபிக்க வேண்டாம். காரணம் கணவர்கள்தான்(எத்தனையோ single status பெண்கள் பார்க்கிறார்களே எனலாம், உங்கள் கேள்வியிலேயே பதில் உள்ளது. அவர்களுக்கு வாழ்க்கைத் துணை இல்லை என்பதே காரணம்)

ஏன் பல கணவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் மனைவியுடன் ஊர் சுற்றவோ, பொதுவாக அரட்டை அடிக்கவோ தயங்குகிறார்கள். ஊர் சுற்றினாலும் மனைவியின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை? அப்படியே ஊர் சுற்றினாலும் எதற்காக சொந்த பந்தங்களின் வீட்டிற்கு செல்லவே(பல சமயம் பார்ப்பதற்கு பெண்கள்தான் அவ்வாறு விரும்புவதுபோல் தோற்றமளித்தாலும் எந்த பெண்ணும் கணவன் ஷாப்பிங் செல்லலாம் என்றோ, சினிமா செல்லலாம் என்றோ கூறும்போது, இல்லை அண்ணன் வீட்டிற்குத்தான் போக வேண்டும் எனச் சொல்வதில்லை. மாறாக கணவனின் சொந்தங்களின் வீட்டிற்குதான் செல்ல வேண்டும் என வற்புறுத்தும்போதுதான் இவ்வாறு கூறுகிறார்கள்) விரும்புகிறார்கள்? நான் சொல்லும் இடத்திற்கு நீ நாலு தடவை வந்தாயானால், நீ விரும்புகிற இடத்திற்கு நான் ஒரு தடவை வருவேன் என்ற போக்கு அவர்களின் மத்தியில் நிலவக் காரணம் என்ன?

நாம் நூறுதடவை ஒரு செயலை திரும்பத் திரும்பச் செய்கிறோம், அதனால் அதனை 101வது தடவை கண்டிப்பாக சரியாகச் செய்வோம் என்ற உறுதியுண்டா? பின்னர் பெண்கள் மட்டும் எப்படி திருமணமாகி பத்து வருடங்கள் ஆகிவிட்டபடியால் அனைத்தையும் மிகச் சரியாக செய்ய முடியும்?

இதெல்லாவற்றையும் விட எரிச்சலான விஷயம், பெண்களுக்கு திருமணத்தின்போது சொல்லப்படும் அறிவுரை. அது என்னவென்றால்,"புகுந்த வீட்டில் பார்த்து புத்திசாலிதனமாக நடந்துக்கோ". இதென்ன யுத்தக் களமா இல்லை போட்டித் தேர்வா, நம் புத்திசாலித்தனங்களை காட்ட என நான் கூற வரவில்லை. ஆரம்பத்தில் ஒருத்தருக்கொருத்தர் முழுமையாகத் தெரியாததால் இவ்வாறு நடந்து கொள்வது அல்லது நடத்து கொள்ளச் சொல்வது சரி. ஆனால் பிள்ளைகள் பெரியவர்களானப் பின்னும் பல குடும்பங்களில் பெண்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதின் காரணம், ஆண்கள் தாங்கள் முட்டாளாக்கப்படுவதை மிகவும் விரும்புகிறார்களா இல்லை நானாக உன் விருப்பங்களுக்கு செவிமடுக்க மாட்டேன், நீயாக உன் மூளையை பயன்படுத்தி நிறைவேற்றிக்கொள் என்னும் மனப்பாங்கா? ஒரு பெண் கண் விழித்திருக்கும் அத்துனை நேரமும் தன் புத்திசாலித்தனத்தை பறைசாற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு கொடூரமான சிந்தனை?

இதை படிக்கும் பெரும்பாலான ஆண்களுக்கு மிகவும் எரிச்சல் வரும். நான் என் சொந்த அனுபவத்தை பொதுக் கருத்தாக்க முயல்வதாக குற்றம் சாட்டுவர். இது அவரவரின் மனசாட்சியை பொறுத்த விஷயம். நான் கூறும் விஷயம் வேறெங்கும் நடப்பதே இல்லை என்றால், இவர்களிடம் வாதிடுவதில் பயனில்லை. இன்னும் இவ்வகை குறைகள் இல்லாத சில ஆண்கள் நான் அப்படி இல்லையே எனக் கூறுவர்.இவர்களுக்கு என் பதில், அப்படிஎன்றால் மிகவும் நல்லது.இதில் குறிப்பிடப்படும் வகையைச் சேராதவர் நீங்கள். உங்களின் துணை நிறைவாக வாழ்வார் என்பதாகும்.மொத்தத்தில் இந்தப் பதிவு, தான் செய்வது தவறென்றே உரைக்காமல் தவறு செய்யும் ஆண்களுக்காகவும், தன் துணையிடம் தான் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் மிக மிக அதிகம் என்பதை உணராத ஆண்களுக்காகவும்தான். நாங்களும் பெண்களால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்கிற ஆண்களா, தாராளமாக நீங்களும் உங்கள் வலைபதிவில் தெரிவியுங்கள். நான் ஒரு பெண், அதனால் எங்களின் பிரச்சினைகளை கூறுகிறேன். அதனால் தயவுசெய்து யாரும் நீ ஏன் இவற்றை குறித்து மட்டும் எழுதுகிறாய் என்ற அர்த்தமற்ற கேள்வியை எழுப்ப வேண்டாம் என வேண்டுகிறேன். யார் மனதாவது புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

இவ்விஷயத்தில் இன்னும் பல முக்கிய கூற்றுகள் இருந்தாலும் பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டு மற்ற பிரச்சினைகளை வேறொரு சமயம் விவாதத்திற்கு எடுக்கலாம் என இத்துடன் முடிக்கிறேன்.

Thursday 19 June, 2008

இதனால இந்த ப்ளாக் உலகைச் சேர்ந்தவங்களுக்கெல்லாம் சொல்லறது என்னன்னா....

மோகனோட ப்ளோக்ல என்னோட புதுப் பதிவு வந்திருக்கு, எல்லாரும் வந்து பாருங்க.
http://mohankandasami.blogspot.com/
வந்துப் பார்த்ததோடப் போகாம அப்டியே உங்க கருத்துக்களையும் பதிவு செஞ்சுடுங்க. உங்க ஆதரவை வேண்டிக் கேட்டுக்கிறேன்.

Thursday 12 June, 2008

வெளிநாட்டுத் திருமணங்கள், விழாக்கள், பண்டிகைகள்

வெளிநாட்டுத் திருமணங்கள் விழாக்கள் பத்தி ஒரு சின்ன பதிவுங்க. சிலப்பேர் இங்க என்ன சொல்றோம், நம்ம ஊரில்தான் எல்லாத்துக்கும் விழா எடுத்து காச கரியாக்குராங்கன்னுதானே. அப்டித்தான் இல்லை.நான் இப்டி விழா எடுத்தாத்தான் சரின்னு சொல்ல வரல.அப்படி விழா எடுக்கிறவங்களுக்கு வக்காலத்து வாங்கவும் இல்லை. அது அவரவர் சொந்த விருப்பம், உரிமை.ஆனா நம்மள்ல சிலப் பேர் எப்போ பார்த்தாலும் வெளிநாட்ல பார்த்தீங்களா எவ்ளோ சூப்பரா எளிமையா இருக்காங்க, நாம இப்டி இருக்கோம்னு ஜார்ஜ் புஷ்ஷுக்கு போட்டியா உளருகிறார்களே அவர்களுக்குத் தான் இந்த பதிவு.

சரி நான் முன்னாடி எழுதின பதிவுகளோட இதற்கு தொடர்பு உண்டென்பதால் முதலில் குடும்ப விழாக்களை பார்ப்போம். இங்க திருமணங்களை எடுத்துக்கிட்டீங்கன்னா, முதலில் மணமகன்(காதலன்) தன் திருமண விருப்பத்தை(காதலி)மணமகளிடம் கூறும்போதே நிச்சய மோதிரத்தை போட்டுவிடுவார். ஆனாலும் பின்னர் ஒரு பெரிய பார்ட்டி இதை கொண்டாடுவதற்கே, ஒன்று இவர்களால் அல்லது இவர்களின் பெற்றோர்,நண்பர்களால் கண்டிப்பாக நடத்தப்படும். அடுத்தது 'ரிஹர்சல் டின்னர்' . அது மட்டுமல்லாமல் மணப்பெண் தன் உடை தேர்வு செய்வதற்கு எடுத்துக்கொள்ளும் நாட்கள், நேரம், இதற்கெல்லாம் மேலாக அதன் விலைஎல்லாம் நம்மூருக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. இது மணமகன் மற்றும் திருமண வீட்டாருக்கும் பொருந்தும்.பின்னர் தோழிப்பெண்கள்,மாப்பிள்ளை தோழர்கள் தேர்வு என அதகளப்படும். இவர்களும் மணமக்களை போலவே ஆடையணிகலன்களுக்கு நேரமும் பொருளும் செலவிடுவார்கள். நம்மோரை விட திருமணங்களை நம்பி வெளிநாடுகளில்தான் பல தொழில்கள் உள்ளன. நாம் இந்தியாவில் கல்யாணக் காண்டிராக்டர் எனக் கூறி பல சமயம் பொறுப்புகளை அளிக்கிறோம் இல்லையா,அதுபோலவே இங்கும் wedding plannerகள் பலர் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் உள்ளனர்.

இது தவிர்த்து bachelor பார்ட்டி, ஹென் நைட் எல்லாம் தனியா இருக்கும். திருமணம் ஒவ்வொரு விதமாக நடக்கும். சர்ச், ஹோட்டல்,பிரைவேட் ரிசார்ட், அந்த கால அரண்மனைகள்(castle) இப்படி எல்லா இடங்களிலும் நடக்கும். இதில் சர்ச் மட்டும்தான் அவ்வளவாக செலவு பிடிக்காது. ஆனால் இங்கு திருமணம் நடத்துவதோடு முடியாது, பின்னர் ஒரு பெரிய விருந்து கொடுப்பதுதான் மரபு. சர்ச்ஐ தவிர்த்து மற்ற இடங்களில் நடக்கும் திருமணங்களுக்காகும் செலவை கேட்டால் மயக்கமே வரும். சிலர் இதற்காக மற்றும் திருமண, நிச்சய மோதிரங்களுக்காக தன் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவிடுவார்கள். நாம் போடும் ஐம்பது சவரன் நகைகளும் அந்த ஒரு மோதிரமும் ஒரே விலையிலிருக்கும். நமக்கு பார்க்கும் போது எளிமையாக தோற்றம் தரும் அவ்வளவுதான்.

இங்கும் திருமணம் சம்பந்தப்பட்ட பல (மூட)நம்பிக்கைகள் உள்ளன. திருமணம் முடிந்தபின் மணப்பெண்ணின் மலர்கொத்தை பிடிக்கும் பெண்ணுக்கு விரைவில் திருமணம் நடக்கும், ஒரு பெண் தோழிப்பெண்ணாக மூன்று முறைக்கு மேல் இருக்கக் கூடாது. இப்படிப் பல உள்ளன.
அதுமட்டுமல்லாமல் நாம் செய்வது போல சீர் செய்வதும் உள்ளது. மணமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களின் பட்டியலை பிரபல நகைக்கடைகள், வீட்டு உபயோகப்பொருட்கள் கடை என எல்லா வகை கடைகளிலும்(ஒவ்வொரு கடையிலும் இதற்கென்றே தனிப் பிரிவு இருக்கும்) மணமக்களே பதிவு செய்துவிடுவார்கள். இவர்களின் திருமனத்தேதி அறிவிக்கப்பட்டவுடன், உறவினர்களும் நண்பர்களும் அவர்களிடம் எந்த கடை எனக் கேட்டு,அந்த பட்டியலில் இருந்து தன்னால் முடிந்ததை வாங்கிக் கொடுப்பார்கள். இது குழந்தையின் பேர் சூட்டு விழாக்களிலும் அப்படியே நடைமுறைபடுத்தப்படும். மன விழாவில் தந்தை தாரைவார்த்துக் கொடுக்கும் சடங்கும் உள்ளது.

பின்னர் தேன்நிலவு. இதை ஒவ்வொருத்தரும் வித்தியாசமாக கொண்டாடுவார்கள். சிலர் நாள்கணக்கு, வாரக்கணக்கிலும் இன்னும் சிலர் ஒரு வருடம் முழுவதும் கூட கொண்டாடுவார்கள். இதில் பொருளாதார வித்தியாசங்களே கிடையாது. பின்னர் அந்த பெண் கர்பமாக இருக்கும் போது நம்மூரில் நடத்துவது போல் சீமந்தமும்(baby shower) உண்டு. பிரசவத்துக்கு தாய் வீட்டுக்கும் போகலாம், கணவர் வீட்டிலும் இருக்கலாம், நம் தாயை நம்முடனேயும் வைத்து கொள்ளலாம்(தாய் சம்மதிக்கும் பட்சத்தில்) .

குழந்தை பிறந்த பின்னும் மிக கிராண்டாக விழா உண்டு.குழந்தையின் முதல் பிறந்த நாளிலோ/ பெயர் சூட்டு விழாக்களிலோ அந்த குழந்தையின் god father, god mother (நம் ஊரில் தாய் மாமன் சடங்கு போல, வித்தியாசம் என்னவென்றால் இங்கு நண்பர்களையும் அவ்வாறு அறிவிப்பார்கள்) யார் என அறிவிக்கப் படுவார்கள். இது தவிர தனிப்பட்ட முறையில் கொண்டாடப்படும் பிறந்த நாள்,திருமண நாள் இதையெல்லாம் சொல்லவே வேண்டாம்,அவ்வளவு அழகாக அவரவர் சக்திக்கு ஏற்றாற்போல் கொண்டாடுவார்கள். நம் ஊரை போலவே வெள்ளிவிழா, பொன்விழா ஆண்டுகளை ஆடம்பரமாக கொண்டாடுவார்கள்.

இதைத் தவிர பண்டிகைகளை கொண்டாடும் விதமே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். கிருஸ்துமஸ் காலங்களில் இங்குள்ள கேலரீஸ் லாஃபையட், BHV, பிரிண்டாம்ப்ஸ், மற்றும் élysee தெருவில் உள்ள அனைத்து ரக அங்காடிகளிலும் கடைகளிலும், தீநகர் ரங்கநாதன் தெருவில் நடப்பதை விட கர்ண கொடூரமான அடிதடி ஷாப்பிங் நடைபெறும். ஈஸ்டர் காலங்களில் விற்கப்படும் chocolateகளுக்கு அளவென்பதே கிடையாது. இதில் வேடிக்கை என்னவென்றால் சிறிதும் கடவுள் நம்பிக்கையில்லாத என் கணவரை போன்றோரும் இத்தகைய கொண்டாட்டங்களில் மிக உற்சாகமாக பங்கேற்பார்கள். சரி ஆண்டுக்கு மூன்று நான்கு பண்டிகைகள்தானே என்றால், அதற்குக் காரணம் இங்கு கோடை விடுமுறை ஒரு மாதம், வசந்த கால விடுமுறை 2 வாரம், குளிர்கால விடுமுறை 3 வாரம். நம் ஊரில் அது சாத்தியப்படுமா? அதன் பொருட்டே எல்லோரும் கூடி மகிழ இப்படி பண்டிகை விழாக்களை நம் ஊரில் அறிமுகப்படுத்தினார்கள். இப்பொழுது பிற வகை கேளிக்கைகள் நமக்கு அறிமுகமாகிவிட்டதினால் நமக்கு பழைய சம்பிரதாயங்களில் ஆர்வம் குறைந்து விட்டது. அதனால் என்ன, ஏதோ ஒரு வகையில் கொண்டாட்டங்கள் கொண்டாட்டங்கள்தானே.

சரி இப்பொழுது ரபி பெர்னார்ட் அவர்களின் கூற்றுக்கு வருவோம். வெளிநாட்டில் பெரும்பான்மையானவர்கள் நம்மைப் போலவே திருமணத்திற்கு பதற்றமாக காத்திருந்து, திருமணத்திற்கு குறைந்தபட்சம் 2 நாட்கள் முன்னராவது விடுமுறை எடுப்பார்கள். இன்னும் சிலர் 2 வாரங்கள் கூட எடுப்பார்கள். அது அவர் அவர் வேலை செய்யும் துறை, அவரவர் சொந்த விருப்பம், மனப் பதற்றம், வசதியைப் பொறுத்து அமையும். நான் இந்தியாவிலும் பலர் திருமணத்திற்கு முந்தின நாள் வரையிலும் பின்னர் திருமணமான அடுத்த நாளிலிருந்தும் வேலைக்கு செல்பவர்கள் எனப் பார்த்திருக்கிறேன். இதில் பெருமை பட என்ன இருக்கிறது? திருமணத்திற்கு முந்தின நிமிடம் வரை அவர் வேலைக்கு செல்வது அவரின் சொந்த விருப்பம். அவருக்கு முக்கிய பணிகள் இருக்கலாம், அவர் எதற்கும் பதற்றப்படாதவராக இருக்கலாம். ஆனால் மற்றவர் பதற்றமுடயவராக இருக்கலாம், அப்பொழுது விடுமுறை கிடைத்திருக்கலாம், இதற்கெல்லாம் மேலாக அவரின் சொந்த விருப்பத்தின் பேரில் முன்னமே அனைத்தையும் முடித்து விட்டு திருமண நாளை ஆவலோடு எதிர்நோக்கி இருக்கலாம். இதில் அவர் பிறருக்கு இடைஞ்சலாகவோ, பிறர் பணியை கெடுக்காவண்ணமும் விடுமுறை எடுத்தால் என்ன தவறு? இல்லை அப்படி முந்தின நாள் வரை வேலைக்கு வருபவர்கள் எவ்வகையில் தியாகியாகிறார்கள்?

எல்லா நாட்டிலுமே பெரியவர்கள் திருமணத்திற்கு முன்னர் விடுமுறை எடுக்கும்படி வற்புறுத்துகிறார்கள். ஏன்? அனாவசியமான பிரச்சினைகள், விபத்துக்கள், மற்றும் தேவையான ஓய்வு இதற்காகத்தான். இதில் என்ன பத்தாம்பசிலித்தனம் இருக்கிறது. மற்ற நிகழ்வுகளை விட திருமணத்திற்கு எல்லா நாடுகளிலும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்குக் காரணம் அது தனிப்பட்ட ஒருவரின் விருப்பு வெறுப்பு சம்பந்தப்பட்டதில்லை, அதில் இருவரின் விருப்பு வெறுப்பு சம்பந்தப்படுவதுதான் காரணம்.

இனிமேலாவது தயவுசெய்து வெளிநாட்டை பற்றி தவறான புரிதல்களை மக்கள் மனதில் ஏற்படுத்தவேண்டாம் எனக்கேட்டுக்கொள்கிறேன். இங்குள்ள மக்களும் அனைத்து வகை உணர்ச்சிகளும் உள்ள மக்கள். ஒரு சிலர் கூறுவதை போன்ற இயந்திர வாழ்க்கை வாழ்பவர்கள் இல்லை. இவர்களும் குடும்ப, சமூக மற்றும் மனித உணர்வுகளுக்கு மிகுந்த மதிப்பளிப்பவர்கள். பெரியார் சொன்ன ஒரு விஷயம் இந்த இடத்தில் மிகப் பொருத்தமாகும். அது என்னவென்றால் 'ஒரு மொழியில் ஒரு வார்த்தை உள்ளதென்றால், அந்த சமூகத்திலும், அவ்வார்த்தைக்குரிய பொருள் வழக்கத்திலும் நடைமுறையிலும் உள்ளது'. அதனால் இனிமேல் தெரியாத விஷயங்களில் தெரிந்த மாதிரி மேலெழுந்தவாரியாகக் கருத்துக்களை பரப்புவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

இதன் முதல் பாகம்:
http://vettiaapiser.blogspot.com/2008/06/blog-post_10.html
இதன் இரண்டாம் பாகம்:
http://vettiaapiser.blogspot.com/2008/06/blog-post_5058.html

Tuesday 10 June, 2008

அனானியின் கருத்துக்களுக்கு என் பதில், இங்கு பதிவாக

இதற்கு தொடர்பான பதிவு இங்கே:
http://vettiaapiser.blogspot.com/2008/06/blog-post_10.html

அனானி அவர்களே, ஞாநி சொல்ற எல்லா கருத்துக்களையும் நான் எதிர்க்கல. எனக்கும் ஐயர் வைத்து பண்ற திருமணங்களில் நம்பிக்கை இல்லை. அது ஏன் என பிறருக்கு விளக்க வேண்டும், அவர்கள் ஏற்றுக்கொண்டால் சரி, இல்லையென்றால் விட்டுவிட வேண்டும், அதுதான் கருத்து சுதந்திரம்.தந்தை பெரியார் செய்ததும் சொன்னதும் அதைத்தான். நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் என்றுமே திணித்தல் கூடாது. அது எதிர் விளைவையே ஏற்படுத்தும்.

அடுத்த முட்டாள்தனமான கருத்து திருமண மண்டபங்களை பற்றியது.நான் திருமண பந்தத்திலேயே நம்பிக்கைல்லாதவர்களை பற்றி பேச வில்லை. சுயமரியாதை திருமணமாகட்டும், மதச் சடங்குகள் கொண்ட திருமணமாகட்டும் அனைத்து வகை திருமணங்களையும் நடத்த ஏற்ற வசதியான சமுதாயக்கூடங்களும், விழாமண்டபங்களும்தான் திருமண மண்டபம் என வெகுஜன மக்களால் அழைக்கப் படுகிறது.என்னை பொறுத்தவரை நம் நாட்டில் உள்ளதிலயே மிக நல்ல விஷயம் திருமண மண்டபங்கள்தான்.மதச் சார்பின்மை அங்குதான் ஓர் அளவேனும் சினிமா திரையரங்கங்களுக்கு பிறகு நடைமுறையில் கடைபிடிக்கப்படுகிறது.

ஐயர் மற்றும் பிற மத குறியீடு கொண்ட திருமணச் சடங்குகளே கூடாது என வாதிடும் திரு.ஞாநி பின்னர் எங்கு திருமணங்கள் நடைபெற வேண்டும் என்கிறார்? கோயிலிலா, மசூதியிலா, தேவாலயத்திலா? அவ்வாறு நடைபெற்றால் அங்கு மதக் குறியீடு இல்லாமல் நடத்த இயலுமா? சரி அவரவர் வீட்டில் நடத்த வேண்டியதுதானே என்றால், எல்லாரும் என்ன அம்பானி போல பெரிய மாளிகையா கட்டி வைத்துள்ளார்கள்?

அது மட்டுமல்லாமல் அங்கு எல்லாரும் எல்லா விழாக்களும் நடத்துகிறார்கள். விழாக்கள் மட்டுமா, பல்வேறு கூட்டங்கள் நடத்துகிறார்கள். மற்றுமொரு கூற்று, விழாவிற்கு வருபவர்கள் அனைவரும் உள்ளூரிளிருந்தே வருவார்களா? வெளியூரிலிருந்து வருபவர்கள் எங்கு தங்குவார்கள்? அனைவருக்குமே விடுதிகளில் தங்கும் வசதியிருக்குமா இல்லை விழா ஏற்பாட்டாளர்கள் இதற்கும் தனியாக செலவு செய்ய வேண்டுமா? சரி ஏன் பிரச்சினை, எதற்கு இவர்களை எல்லாம் அழைக்கிறீர்கள், யாரையுமே அழைக்காமல் விழா நடத்த வேண்டியதுதானே என்றால்,எப்பொழுதுதான் அனைவரும் ஒன்று கூடுவது. அதற்கு விழாக்கள்தானே இன்றைய துரித வாழ்வில் உதவி புரிகின்றன.

அடுத்தது அம்பானியாக இருந்தாலும் ஆடம்பரம் கூடாதென்பது. இது ஏட்டிற்கு உதவலாம், நடைமுறைக்கு சாத்தியப்படுமா என்பதை விட வசதிப்படுமா எனப் பாருங்கள். பணக்காரர்களின் எளிமை எப்பொழுதும் எல்லா விஷயங்களிலும் நல்ல விளைவை ஏற்படுத்தாது. உதாரணமாக நான் என் திருமணத்தை ஒரு சாதாரண திருமண மண்டபத்தில் செய்ய முயல்கிறேன்; அம்பானியும் தன் மகள் திருமணத்தை மிகச் சாதரணமாக நடத்த எண்ணி அதே மிகச் சாதாரண மண்டபத்திர்கு வருகிறார். இதன்மூலம் என்னாகும், டிமாண்ட் ஜாஸ்தியாகி ஒன்று அந்த மண்டபத்தின் வாடகை உயர்ந்து விடும் இல்லை அம்பானியே கேட்கிறார் என எனக்கு அளிக்க மாட்டார்கள். எப்படியும் பாதிக்க படப்போவது ஏழையாகிய நான்தான். இதுதான் மறைமுக ஆடம்பரம். சரி என் மண்டபத்திற்கு வராமல் ராஜா முத்தையா மண்டபத்தில், கதர் உடுத்தி பழையது போட்டு விழாவை நடத்துகிறார் என்றால், அதற்கு பெயர் எளிமையா?

நேரிடையான ஆடம்பரம் என்னவென்றால்,தலைவர்கள் நடத்தும் விழாக்கள், கூட்டங்களை சொல்லலாம். இது ஏன் ஆடம்பரம் என்றால் அவர்கள் பிறரை அடித்து, மிரட்டி பணம்பார்த்து அதில் விழா நடத்துகிறார்கள். சரி, அப்படியென்றால் பணக்காரர்களும் மக்கள் வரிப் பணத்தை ஏமாற்றித்தானே பணம் சேர்த்தார்கள் என்றால், அதற்கு அவர்கள் மட்டுமா காரணம்? அதற்கு நம்மிலிருந்து வரும் அதிகாரிகளிலிருந்து, வக்கீல்களிலிருந்து, பத்திரிக்கைகளிலிருந்து, நம்மால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகளிலிருந்து சமுதாயத்தின் நான்கு தூண்களுமே காரணம். இப்படி ஆடம்பர விழாக்களில் அவர்கள் செலவிடவில்லை என்றால் அது அவர்களிடமே தேங்கி மேலும் கேட்டிற்குதான் வழிவகுக்கும்.மேலும் பலத் தொழிலதிபர்களின் வரி ஏய்ப்பு கையும் களவுமாகப் பிடிபடும் இடம் இதுதான்.
நான் இங்கு சொல்ல வருவதை புரிந்து கொள்ளுங்கள். நான் ஒன்றும் அம்பானி எளிமையான விழா நடத்தினால் அதை எதிர்த்து, நீங்கள் ஆடம்பரமாகத்தான் நடத்த வேண்டும் என்றோ இல்லை அனைவரும் வளர்ப்பு மகன் திருமணத்தை போல் கடன்வாங்கியாவது,கந்துவட்டி வாங்கியாவது நடத்தவேண்டும் என்றோ சொல்லவில்லை. அவரவர் அவரவர் சக்திக்கு ஏற்றார்போல நடத்த வேண்டியதுதானே? அம்பானியின் ஆடம்பரம் என்ன என்று யாரால் கூற முடியும், என்னுடைய எளிமை என்ன என்று எதை சுட்டமுடியும்? அம்பானியின் எளிமையும் ஒரு சாமானியனின் கண்களுக்கு ஆடம்பரமாக தெரியக்கூடிய சாத்தியக்கூறுகள்தானே அதிகம்! என்னுடைய அத்தியாவசியத்தேவை இன்னொருவருடைய ஆடம்பரத் தேவையாக இருக்கிறது. என் அத்தியாவசித்தேவை என் சக்திக்கு உட்பட்டு ஞாயமானதெனில் அதை நான் ஏன் அதை குற்ற உணர்ச்சியுடன் அனுபவிக்க வேண்டும்?

அவர் அந்த விழாவில் ஜாஸ்தி வருத்தப்பட்டது மதச் சடங்குகளுக்கோ, ஜாதிச் சடங்குகளுக்கோ இல்லை, விழாவின் ஆடம்பரமாக அவர் எண்ணிய விஷயங்களுக்குத்தான். முதலில் ஒன்றை இங்கு புரிந்து கொள்ள வேண்டும். நாம் பேசுவது வெறும் தியாகிகளை பற்றியோ பெரும் தலைவர்களை பற்றியோ மட்டும் அல்ல. அனைத்து ஆசாபாசங்களுக்கும் உட்பட்ட பொதுஜனங்களை பற்றித்தான். நீங்கள் மற்றுமொருமுறை அந்த பதிவை சாமானியனின் கண்ணோட்டத்தில் இருந்து படியுங்கள்.

அனானி அவர்களே, நான் இங்கு மிக personal ஆன கருத்துக்களை தவிர்க்க விரும்பினேன். ஆனால் நீங்கள் ஞாநியை பற்றி, அவர் வெறும் உண்மைகளை மட்டுமே கூறுபவர் போலவும், நிஜ வாழ்வில் ஒழுக்கத்தின் உச்ச நிலையை அடைந்தவர் போலவும் கூறுவதால் நான் இப்பொழுது இதை கூறுகிறேன். அவரை பற்றி எனக்கு மிக மிக நன்றாகத் தெரியும். என் மிக நெருங்கிய உறவினர் ஆனந்த விகடனில் வேலை பார்த்தவர். அதனால் அவர் தன்னை பற்றி தானே பத்திரிகைகளில் எழுதுவதை நான் துளி கூட நம்பத் தயாரில்லை. மேலும் அவர் தாழ்த்தப்பட்ட பெண்மணிக்கு இனாமாக குடுக்கவில்லையே. நாமும்தான் எத்தனயோ விஷயங்களில் சிலக் கொள்ககைகளை கடைபிடிக்கின்றோம். அதற்காக அதை கடைபிடிக்காதவர்கள் சரியில்லையா. நான் என் நாட்டின் அனைத்து சட்ட திட்டங்களையும் கடைபிடிப்பவள், ஆனால் நான் என் வீட்டை ஒருவருக்கு ஜாதி என்னவென்று பாராமல் விற்றுவிட்டேன், இன்னொருவர் எல்லா கேப்மாரி வேலைகளையும் செய்து விட்டு வீட்டை மட்டும் ஒரு நல்ல கொள்கையோடு விற்றுவிட்டார் என்றால், அவர் புனிதராகிவிடுவாரா இல்லை நான்தான் ஜாதி வெறிப் பிடித்தவளாகி விடுவேனா? வாதத்திற்காக தயவுசெய்து உளறாதீர்கள்.
வெளிநாட்டுத் திருமணங்கள் விழாக்கள் பற்றிய எனது அடுத்த பதிவை நாளை நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள்.

அஞ்'ஞாநி'

ஞாநி சார் குமுதத்துல ஒரு கருத்தை எழுதி இருக்கார். என்னன்னா அவருக்கு இந்த தலைமுறை மேல இருந்த நம்பிக்கையை அவரோட நண்பர்கள் வீட்டு ஆடம்பர விழாக்கள் குறைச்சிடுச்சாம். வெளிநாடுகள்ள திருமண மண்டபங்களே இல்லைன்னு கொள்கை சிங்கம் ரபி பெர்னாட் சொன்னாராம். அவரோட புரபசர் தன் திருமண நாள் காலையில் கூட கல்லூரிக்கு வந்திருந்தாராம்.

ஒரு விழாவை ஆடம்பரமாக, அதை செய்ய கூடிய சக்தி உடையவர்கள் செய்வது எப்படி தவறாகும்? இந்த கருத்து எவ்வளவு தவறானது! ஒரு விழாங்கறது ஒரே ஒருத்தரோ இல்லை ஒரு குடும்பமோ குழுவோ சம்பந்தப்பட்ட ஒரு விஷயமா? அதன் பயனாளிகள் அதில் நேரிடையாக பங்கேற்பவர்கள் மட்டுமா? ஒரு கதை நாம எல்லாரும் சின்ன வயசுல படிச்சிருப்போம். ஒரு ஊரில வறுமை தலை விரிச்சாடுச்சாம், அங்க எல்லாரும் வாழ்க்கையே வெறுத்து போய் எப்படா சாவு வருமென்று காத்து இருந்தாங்களாம். சொந்த குழந்தைகளையே வெறுத்து ஒதுக்கறதும், புருஷன் பொண்டாட்டி எந்நேரமும் சண்டை போடருதும்,ஊரில் ஒருத்தருக்கொருத்தர் முகம் குடுத்து பேசிக்காமலும் இருந்தாங்களாம். அப்போ பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிச்சி வந்த பைத்தியம் ஒன்னு ஒரு இனிப்பு கடைக்காரர் கிட்ட போய் ஒரு பெரிய மென்பஞ்சு திடமாக்கூழ்( cake தாங்க.நன்றி:மறைந்த திரு.தமிழ்குடிமகன்) ஆடர் பண்ணுச்சாம்.உடனே அவர் பலசரக்கு கடைகாரர் கிட்ட தான் சேமித்து வைத்த தொகையிலிருந்து இதற்கு தேவையான சாமான்களை வாங்கினாராம். உடனே பலசரக்கு கடைகாரர் இந்த தொகைய வச்சு தன் குழந்தை ஆசையா கேட்ட பொம்மைய வாங்கி குடுத்தாராம். அதை வெச்சி இவரும் துணி வாங்க அந்த ஊருல இருந்த ஒரே பணக்காரருக்கு மானப் பிரச்சினையாகி அவரு நிறைய துணி, இனிப்புகள், பொருட்கள் வாங்க போக ஊரே விழாக்கோலம் பூண்டிச்சாம். அதை பாத்து பக்கத்து ஊர்ல இருந்தெல்லாம் இங்க வந்து எல்லாரும் பொருட்கள் வாங்க, ஆனா முதமுதல்ல இதை ஆரம்பிச்சு வச்ச பைத்தியம் வந்து அந்த cakeஐ வாங்காததுக்கூட அந்த இனிப்பு கடைக்காரர் கவனிக்கலயாம். இதுதான் வாழ்க்கை நியதி.

ஒரு விழா பண்டிகைன்னா அதை ஒவ்வொருத்தரும் அவரவர் விருப்பப்படி கொண்டாடுவதில் என்ன தவறு? நான் இந்த வருடம் இந்தியா வந்த போது ஒரு உறவினர் திருமணத்தின் பொருட்டு இராஜா முத்தையா மண்டபத்திருக்கு சென்றிருந்தேன். அங்கு எல்லாமும் ஆடம்பரம்தான். ஆனால் இதனால் லாபம் அடைந்தது வெறும் திருமண வீட்டினரும் மண்டப உரிமையாளரும் மட்டுமா? அங்கு உபயோகப் படுத்தப்பட்ட பூவில் இருந்து, அலங்காரத்தில் இருந்து, உணவு பரிமாறுபவர்கள் வரை அன்று எல்லாருமே பயனாளிகள்தானே, ஒரு நல்ல மகிழ்ச்சியான விழாவிற்கு செலவழிப்பது ஒரு வகையில் பலருக்கு மறைமுகமாக வேலை அளிப்பதுதானே! இவற்றை அனைவருமே மிக மிக எளிமையாக கொண்டாடினால் எப்படி சமூகம் வாழும்?வளம்பெறும்? இதென்ன கள்ளச்சாரயமா இல்லை இலாட்டிரி டிக்கெட்டா நிறுத்துவதற்கு.

இன்னொரு விஷயம் இதில் கூர்ந்து கவனித்தீர்களானால் எல்லோருக்குமே உள்ளுக்குள் ஒரு வகை ஈகோ இருக்கும். தான் ஏதாவது ஒரு சபையில் முந்தி இருக்க வேண்டும் என்பது. இது ஒரு அறிஞருக்கோ, செல்வந்தருக்கோ, கலைஞர்களுக்கோ கிடைத்து விடுகிறது. மற்ற மிக மிக சராசரியான பெருவாரியான மக்கள் தொகை என்ன செய்யும்? இவ்வகை விழாக்கள் ஒவ்வொருவரின் ஈகோக்கு சிறு துளி அளவாவது தீனி இடுகிறது. இவரே பல முறை கூறியுள்ள ஒரு விஷயம், எல்லா மனிதரிடமும் மனித குணமும் உண்டு மிருக குணமும் உண்டு. இது 100% உண்மை. அவ்வகை குணங்களுக்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ மறைமுகமாகவோ சின்ன வகையிலாவது தீனி இட்டுத்தான் கட்டுக்குள் வைத்திருக்கிறோம். எப்படி தமிழர்கள் தங்கள் ஆர்வத்தை போரிலிருந்து திசை திருப்புவதற்காக ஜல்லிக்கட்டு, வேட்டை என சென்றார்களோ அவ்வாறுதான் இதுவும். அனைத்து மனிதருக்கும் தன் வாழ்நாளில் அவ்வப்பொழுது சபையில் முந்தி இருக்க கிடைக்கும் தருணங்களும்.

இதில் எதிர் வாதமாக எடுத்து வைக்கப்படும் விஷயம், இருப்பவர்கள் செய்வார்கள் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற வகையில் கொண்டாடுகிறார்கள். இதில் எடுத்து வைக்கப்படும் இன்னொரு விஷயம் இதற்கு செலவிடும் பணத்தை ஒரு அநாதை விடுதிக்கோ ஏழை மாணவர்கோ கொடுக்கலாமே என்று. இது முற்றிலும் தவறான ஒன்று. எல்லோரும் அப்படி செய்ய ஆரம்பித்தால் இது மேலும் பல வாழ வழி தெரியாத ஏழை மாணவர்களையும், எழ்மையையும்தான் ஏற்படுத்தும். பின்னே யாருக்கும் தொழிலோ வருமானமோ வாழ்கையில் ஆர்வமோ இல்லையென்றால் வேறென்ன ஆகும். எல்லோரும் தன்னால் முடிந்த அளவுக்கு உதவ வேண்டும் என்று தான் கூறவேண்டுமேயன்றி, மற்றவை ஆதார கூர்ருக்கே ஆப்பு வைத்துவிடும். இதில் தனக்கு என்ன சக்தி உள்ளது அதற்கு எவ்வாறு செலவு செய்ய முடியும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். தன் சம்பந்தியிடமும், மற்ற சொந்தங்களிடமும் தன் வாதத்தை எடுத்து வைக்க முடியாதவர்கள், அதற்கு ஒத்துவராதவர்களை ஒதுக்கிவிட்டு தன் நிலையை செயல்படுத்தாதவர்கள் மற்றும் போலிகௌரவத்திற்காக வாழ்பவர்கள் இவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து நாம் வாழ்வில் கிடைக்கும் சில சந்தோஷங்களையும் தியாகம் செய்ய முடியுமா. ஞாநி மாதிரி பட்டவர்கள் சாதாரண நியாயமான மகிழ்ச்சிகளை அனுபவிப்பவர்கள் மனதில் ஏதோ தவறு செய்வதை போன்ற உறுத்தலை ஏற்படுத்தும் சாடிஸ்ட் போக்கை விட்டு பிறவகை ஆட்களுக்கு அறிவுரை கூறினால் நன்றாக இருக்கும்! இந்த பதிவே நிரம்ப பெரிதாகிவிட்டதால் ரபி பெர்நாடின் அறிய கூற்றை பற்றி அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

இதன் தொடர்ச்சி இங்கே:http://vettiaapiser.blogspot.com/2008/06/blog-post_5058.html

Friday 6 June, 2008

பேர்வெல் டே

உங்களுக்கெல்லாம் ஞாபகம் இருக்குதா? ஒரு காலத்துல எக்கச்சக்கமா கல்லூரி காதல் சம்பந்தமா படங்கள் வரும். இது எல்லாத்துலயும் ஒரு பேர்வெல் டே பாட்டு இருக்கும்(அதாங்க சார்லி,சின்னி ஜெயந்தெல்லாம் முரளி, அப்பாஸ் வகையறா சொங்கி கதாநாயகனுக்கெல்லாம் பிரண்ட்சா நடிச்சு, அம்மா அப்பால்லாம் பசங்கள காலேஜ் அனுப்பவே பயப்படுற அளவுக்கு மாமா வேல பாக்குற வெண்ணிராடை மூர்த்தி எல்லாம் புரபசரா வருவாங்களே அந்த கால கட்டம்) அந்த படங்களோட எபெக்ட்டுல எப்படா நாம பத்தாம் கிளாசு வருவோம், நாமளும் ஒரு "முஸ்தபா" பாட்டு பாடலாம்னு காத்துகிட்டு இருந்தா, எங்க கிளாசுல இருக்க சில வீணா போன பாவிங்க நாங்க ஒம்பதாம் கிளாசு படிக்கும்போது பத்தாம் கிளாசு படிக்கிற பசங்களுக்கு குடுக்கிற பார்ட்டிக்கு கொஞ்ச நாள் முன்னால பத்தாம் கிளாசு பசங்களோட லவ்வுன்னு ஊர் சுத்தின விஷயமும், சில பேர் கொஞ்சம் மேல போய் எங்க கிளாசுக்குள்ளயே ஜோடிப்புறாவா திரிஞ்சது எல்லாம் கரெக்டா H.M சிஸ்டருக்கு அப்போன்னு பாத்து தெரிய வந்து பேர்வெல் டேயும் கிடையாது ஒரு மண்ணும் கிடயாதுன்னுட்டாங்க. (இந்த விஷயம் நாலஞ்சு செட்டா நடந்துக்கிட்டு இருந்தாலும், அவங்களுக்கு எங்க செட்டுன்னா சுத்தமா ஆகாது,ஏன்னா நாங்க அவங்க பண்ணிக்கிட்டு இருந்த பல உள்ளடி வேலைகள வெட்ட வெளிச்சம் ஆக்கிட்டோம், இன்னொன்னு என்னன்னா அது ஏனோ தெரியாது அவங்களுக்கு எந்த கிளாசும் ஒற்றுமையா இருக்கறது சுத்தமா பிடிக்காது, பசங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் இடையில ஒரு விதமான ஈகோவ உருவாக்கிடுவாங்க, ஆனா எங்கக்கிட்ட அது நடக்கல) எங்க மேல இருந்த கடுப்புல அவங்க எங்கள மட்டும் தண்டிக்கறதா நினைச்சு 10ஆம் கிளாசு பசங்களையும் சேர்த்து தண்டிச்சிட்டாங்க.

இதோட விட்டாங்களா அடுத்த வருஷமும் எங்களுக்கு குடுக்க இருந்த பார்ட்டிய கேன்சல் பண்ணிட்டு, நாங்க டீச்சருங்களுக்கு குடுக்கிற தேங்க்ஸ்கிவ்விங் பார்ட்டிய மட்டும் நடத்த சொல்லிட்டாங்க.அதுலயும் ஒரு பேராபத்து இருக்கு.எங்க ஸ்கூல் டீச்சர்ஸ் நல்லவங்கதான்னாலும், ஒண்ணும் ஜாஸ்தி கலாய்க்க முடியாது. அடுத்த வருஷம் +1 அங்க தான படிக்கணும்.

இப்டியாக சினிமால காமிக்கிற அழுகாச்சியும் இல்ல, பிரண்ஷிப்பின் மகத்துவத்தை உணர்த்தும் காண்டில் லைட் பாட்டும் இல்ல(அதாங்க விஜய்யும் நடிப்பும்(சேராதிருப்பது) மாதிரி இருந்தவங்க விஜய்யும் மொக்க பஞ்ச் டயலாக்(சேர்ந்தே இருப்பது) மாதிரி ஆறது) அப்டியே பேர்வெல் டே நடந்திருந்தாலும் நாங்க இப்டியெல்லாம் செஞ்சிருக்க மாட்டோங்கறது வேற விஷயம்,ஏன்னா முக்காவாசிப்பேர் அங்கதான் +1 சேருவோம்னு தெரியும். சோ ஜென்ம விரோதங்கள் தொடர்ந்தன.
அடுத்த வருஷம் ஒரு வழியா அந்த சிஸ்டர் டிரான்ஸ்பர் ஆகிட்டாங்காளா, அதனால +1ல நாங்க பார்ட்டி கொடுக்க பிரச்சினை இல்லை(அப்போ +1, +2ல வெறும் பொண்ணுங்க மட்டும்தான் படிச்சாங்கங்கறது வேற விஷயம்) அப்போதான் முதல்வன் ரிலீஸ் ஆகி 6 மாசமாச்சு. உப்பு கருவாடு பாட்டு, டோலு பாஜே, உல்டா ஸ்கூலு, ஸ்கிட், ஆட்ஸாப்னு ஏதோ எங்களுக்கு கெடைச்ச 2 மணி நேரத்தில ஒப்பேத்திட்டோம். சரி,கடைசீல எல்லாரும் அழனுமேனு நாங்க அவங்கள deliberateஆ அழவைக்க இருட்டுல மெழுகுவர்த்தி கொளுத்தி கைல குடுத்திட்டு காத்திருக்கோம், அப்பவும் ஒருத்தியும் அழல,சரின்னு விடா முயற்சியா சோக பேர்வெல் டே பாட்டு எபெக்ட குடுக்கறோம்,ம்ஹூம் கொஞ்சம் விசும்ப கூட இல்ல. அப்புறம்தான் கவனிச்சா எந்த பேக்கோ அவங்களுக்குள்ள இருக்கிற department விரோதத்த(ஒருத்தர்க்கு ஒருத்தர் சூனியம் வச்சிக்காததுதாங்க குறை) மறந்துட்டோ இல்ல தன்னை ஐ.நா சபைனு நெனைச்சோ எல்லார்க்கும் கலந்துகட்டி சீட் போட்டு உக்காரவச்சிருக்கா. ஐ.நா சபை எப்டி சொதப்புமோ அதே மாதிரி சுதப்பியாச்சு. கடசீவரைக்கும் ஒருத்தரும் ஒரு துளி தண்ணிய கண்ணுல காட்டல. சரி நாம நாம அடுத்த வருஷம் சேத்து வச்சி அழுவோம்னு தீர்மானம் பண்ணிகிட்டோம். அப்போ எங்க தெரிஞ்சது விதி வலியதுன்னு!

அடுத்த வருஷமும் வந்தது, பேர்வெல் டே டேட்டையும் முடிவுபண்ணிட்டோம். பப்ளிக் எக்ஸாமுக்கு படிக்கறத விட வித விதமா பேர்வெல் டே பாட்டுக்கள பார்த்து(எபெக்டுக்கு) அழணும்னு பயங்கரமா தயார் பண்ணிக்கிட்டு ஆவலா அன்னைக்கு மத்தியானம் புடவைய(இதுக்குன்னே புதுசா புடவைய வாங்கிட்டு, ஏதோ அப்போ கைல கெடச்சத எடுத்து கட்டிக்கிட்டு வந்ததா பீலா உடுறதுதான் மரபு) பக்கத்து அக்கத்து வீட்ல உதவி கேட்டு கட்டிக்கிட்டு கண்ணாடில நூத்தி அறுபத்தி மூணாந்தரம் casual look ஏற்படுத்த, பத்து வகை மேக்கப்பும் இருபது வகை ஹேர் ஸ்டைலும் மாத்திட்டும் பாத்துகிட்டும் இருக்கும் போதுதான் போன் அடிக்கிது,என்னான்னு திகிலோட எடுத்தா(நமக்கும் இதுக்கும் இருக்கிற ராசிதான் உங்களுக்கு வெளங்கிருக்குமே) பயந்த மாதிரியே ஆகிடுச்சி. யாரோ குரங்கு குமார்னு ஒரு ரவுடிய போட்டு தள்ளிட்டாங்களாம், அதனால தாம்பரம் வரைக்கும் எல்லா ஸ்கூலும் மூடிட்டாங்கன்னு. இதுல என்ன கொடுமைனா அது ஒரு வதந்தீங்க. அவர இப்போதான் 6 மாசத்துக்கு முன்னாடி போட்டு தள்ளினாங்க. எங்களுக்கு எப்டி இருந்திருக்கும். அப்றம் ஏனோ தானோன்னு எக்சாம்க்கு 2 நாள் முன்னாடி வச்சாங்க.அப்போ என்னத்த பண்றது, எந்த சோகத்தை(புடவயில ஐஸ்க்ரீம் கறைபட்டத நினைச்சா இல்ல நாளன்னைக்கு எப்டி எக்சாம் இருக்கும்னு நினைச்சா) நினைச்சு அழறதுனு தெரியாம, ஒரு மாதிரி குழம்பி என்னமோ நட்டு கழண்ட மாதிரி சிரிச்சி கெலாட்டா பண்ணிட்டு வந்துட்டோம்.

சரி காலேஜ்லயாவது இதையெல்லாம் பண்ணனும்னு போனா, தனியார் பொறியியல் கல்லூரிகள்ள கேம்பஸ் இண்டெர்வியூ, பிளேஸ்மென்ட், அமெரிக்க மாப்பிள்ளையோட நிச்சயதார்த்தம் அப்டின்னு முக்கிய பணிகள் 3rd இயர்லயே ஆரம்பிச்சிடரதால இதிலெல்லாம் யாரு எத்தனை சதவிகிதம் சாதிச்சிருக்காங்க, எப்டி அவங்க உருப்படாம போவாங்கன்னு ஆண் பெண் வித்தியாசம் இல்லாம பொறாமபட்டுகிட்டே இருக்கறதால,பேர்வெல் பார்ட்டி கலாச்சாரம் 2000க்கு முன்னாடியே(அநேகமா 1998ல இருக்கும்னு நெனைக்கிறேன்,எங்கக்கா செட்தான் கடைசீன்னு நெனைக்கிறேன்) அழிஞ்சு போச்சுன்னு தெரிஞ்சிகிட்டேன். ஆஹா என்னடா இது பேர்வெல் பார்ட்டிகளுக்கு தனியார் பொறியியல் கல்லூரிகள்ள வந்த சோதனைன்னு நெனைச்சி, சரி நாமும் இந்த ஜோதில ஐக்கியமாகிடுவோம்னு எல்லாரையும் போல பொறாமப்பட்டு, புறம் பேசி, கடைசியா எடுக்கிற காலேஜ் மேகசீன் போட்டோக்கு பாதி பேர் வராம, நானும் இவர கல்யாணம் பண்ணி சிலபல பேர எரிச்சல் படுத்திட்டு(பின்ன 5 வருஷம் காதலிச்சும் ஒருத்தர்கிட்டையும் மூச்சு விடலன்னா) வித்தியாசமான பேர்வெல் டேவ என் கல்யாண ரிசப்ஷன்ல கொண்டாடினேன்.

Wednesday 4 June, 2008

குத்துப் பாடல்கள், மெலடி பாடல்கள்

எனக்கு சின்ன வயசில இருந்தே குத்து பாடல்கள்னா ரொம்ப இஷ்டம். நான் முறைப்படி கர்நாடக சங்கீதம் கத்துகிட்டேன். கொஞ்சம் நல்லாவே பாடுவேன். எனக்கு எல்லா வகை பாடல்களுமே நிரம்ப பிடிச்சாலும் குத்து பாட்டுன்னா எங்கம்மா, அக்கா, நான், இப்போ எங்கக்கா பையன்னு எல்லோர்க்கும் மிகவும் இஷ்டம். நானும் என் வீட்டுக்காரரும் 5 வருஷமா காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டாலும் அவருக்கு மேற்கத்திய க்லாசிகல் சங்கீதம் ரொம்ப பிடிக்கும்ங்கற காரணத்தால குத்து பாட்டு வகையராக்கள் கண்டிப்பா புடிக்காதுன்னு முடிவு பண்ணிக்கிட்டேன். கல்யாணத்துக்கப்புறம் பாத்தா என்னோட சேர்ந்து தமிழ் படம் பாக்க ஆரம்பிச்சவரு பயங்கர குத்து பாட்டு ரசிகராகி இப்போ அநியாயத்துக்கு தெலுங்கு பட குத்து பாட்டெல்லாம் தரவிறக்கி பாக்கிற அளவுக்கு அழிச்சாட்டியம் பண்றாரு. அவரோட சேர்ந்து அவரோட நண்பர்களும் இப்போ முமைத் கான் ஹிட்ஸ், விஜய் ஹிட்ஸ் வாங்குற அளவுக்கு ஆகிட்டாங்க.

நம்ம தமிழ்நாட்டுல இந்த so called அறிவு ஜீவிகள் சிலர்கிட்ட ஒன்ன கவனிச்சீங்கன்னா குத்து பாட்ட ஏதோ ஒரு குறிப்பிட்ட சமூகத்தோட குறியீடு மாதிரி அழகா வாழப் பழத்துல ஊசி ஏத்துற மாதிரி நமக்கே தெரியாம நம்ம மனசுல பதிய வைக்க முயற்சிய செய்தாங்க , ஏன் இன்னமும்தான் செய்றாங்க. அது மறைந்த சுஜாதா சாரா இருக்கட்டும், சில பத்திரிக்கைகளா இருக்கட்டும்,இல்லை இசைத் துறையிலேயே இருக்கிற சிலரா இருக்கட்டும். இப்போ இவ்வகை பாடல்களுக்கு மென்பொருள் , கார்ப்பரேட் , மேலும் நல்ல வருமானமுள்ள பிற துறைகளில் உள்ளவர்கள் மற்றும் இவர்கள் அதிகமாக புழங்கும் பப்களில் நல்ல வரவேற்பு இருப்பதால் இப்பொழுது நிலைமை மாறி இருக்கு.

இப்போ மெலடி பாட்டுக்களுக்கு வருவோம் . எனக்கென்னவோ இப்போல்லாம் நெறைய பேரு எதாவது பாட்டு பல்லவி,சரணம்னு வித்தியாசம் இல்லாம ஒரே மாதிரி அழுமூஞ்சி மெட்டுல ஹரிஹரனோ, உன்னி கிருஷ்ணனோ, சாதனா சர்கமோ மூக்கால பாடிட்டா அது மெலடி பாட்டுன்னு நெனச்சிக்கிறாங்கன்னு தோணுது. என்னை பொருத்த வரைக்கும் அதெல்லாம் பாட்டு வகையிலயே சேத்தி கிடையாது. ஓலம்னு தான் சொல்லணும். எனக்கு ஸ்கூல் படிக்கும்போதே ஹரிஹரனயெல்லாம் பாத்தா அப்டியே பத்திகிட்டு வரும். அப்புறம் அவர கொஞ்சமாவது புடிச்சிதுன்னா கலோனியல் கசின்ஸ்லாம் கேட்டப்புறம்தான். இந்த ஸ்டைலுக்கு ஒரு சிறந்த உதாரணம்னா "தாஜுமகாலே" னு ஒரு ப்ளேடு பாட்டு(பிரபுவோட இருண்ட காலத்தில் வந்த படம்)

மெலடி பாட்டுன்னா என்னாங்க? "வளையோசை கல கல கலவென" , " அந்தி மழை பொழிகிறது", "பேசுகிறேன் பேசுகிறேன்" இந்த வகையெல்லாம்தான். இன்னொரு கொடுமை ஒரு பத்து வருஷமா இம்மாதிரி மெட்டுகளுக்கு எழுதப்படுற வரிகள்தான். இந்த பாட்ட எல்லாம் கேட்டீங்கன்னா ஒரே கவிஞர் எழுதுன மாதிரி இருக்கும். கற்பனை வளமே இல்லாமே எட்டாங்கிளாசு பையனோட காதல் கவிதை மாதிரியோ, யாரயோ பாத்து பிட்டடிச்சு எழுதினது போலவோ இருக்கும்.

எப்படி தமிழ் சினிமால அடக்கமான அப்பாவியான குடும்பம், பொண்ணு அப்டின்னா பிராமண குடும்பத்தையே பிரதானப் படுத்துவாங்களோ( மத்த வீட்லஎல்லாம் பொண்ணுங்க கட்டப்பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருக்க மாதிரி) அதே மாதிரி ஒரு செட்டு ஆளுங்க என்னமோ குத்து பாட்டு ரசிக்கிரவங்க ஏதோ அடிப்படை இசையறிவோ, ரசனையோ இல்லாதவங்க மாதிரியும் இவங்கல்லாம் மேன்மையான ரசனயுள்ளவங்க போலவும், யப்பா.

இன்னொரு விஷயமும் இங்க கவனிக்கணும். என்னன்னா குத்து பாட்டு வேற ஐட்டம் பாடல்கள் வேற. ரெண்டையும் போட்டு குழப்பிக்க கூடாது. ஐட்டம் பாடல்கள்னா "பளிங்கினால் ஒரு மாளிகை", "தூது வருமா" இதெல்லாம்தான். குத்து பாட்டுன்னா "கத்தாழங் கண்ணாலே", "மாமா மாமா" இதெல்லாம். டப்பாங்குத்துன்னா எல்லா விஜய் பாடல்களும்தான்.இதுல குத்து பாடல்களோட பாடல் வரிகள் முக்கால்வாசி கேலியும் கிண்டலும், ஒரு உள்ளர்த்தமும் இருக்கும்.ஆனா எல்லோர்க்கும் புரியறமாதிரி இருக்காது. இதில் தப்பும் இல்லை. ஏன்னா இது பாடப் படும் சூழ்நிலை அப்படித்தான் இருக்கும். ஆனா டப்பாங்குத்து கொஞ்சம் வெளிப்படையா எழுதப்பட்டிருக்கும்(பேரரசு பாட்டு மாதிரி).
கீழே எல்லாத்துக்கும் ஏத்த மாதிரி பாடல்கள் போட்ருக்கேன், பாத்து ரசியுங்கள்.