Thursday, 12 June, 2008

வெளிநாட்டுத் திருமணங்கள், விழாக்கள், பண்டிகைகள்

வெளிநாட்டுத் திருமணங்கள் விழாக்கள் பத்தி ஒரு சின்ன பதிவுங்க. சிலப்பேர் இங்க என்ன சொல்றோம், நம்ம ஊரில்தான் எல்லாத்துக்கும் விழா எடுத்து காச கரியாக்குராங்கன்னுதானே. அப்டித்தான் இல்லை.நான் இப்டி விழா எடுத்தாத்தான் சரின்னு சொல்ல வரல.அப்படி விழா எடுக்கிறவங்களுக்கு வக்காலத்து வாங்கவும் இல்லை. அது அவரவர் சொந்த விருப்பம், உரிமை.ஆனா நம்மள்ல சிலப் பேர் எப்போ பார்த்தாலும் வெளிநாட்ல பார்த்தீங்களா எவ்ளோ சூப்பரா எளிமையா இருக்காங்க, நாம இப்டி இருக்கோம்னு ஜார்ஜ் புஷ்ஷுக்கு போட்டியா உளருகிறார்களே அவர்களுக்குத் தான் இந்த பதிவு.

சரி நான் முன்னாடி எழுதின பதிவுகளோட இதற்கு தொடர்பு உண்டென்பதால் முதலில் குடும்ப விழாக்களை பார்ப்போம். இங்க திருமணங்களை எடுத்துக்கிட்டீங்கன்னா, முதலில் மணமகன்(காதலன்) தன் திருமண விருப்பத்தை(காதலி)மணமகளிடம் கூறும்போதே நிச்சய மோதிரத்தை போட்டுவிடுவார். ஆனாலும் பின்னர் ஒரு பெரிய பார்ட்டி இதை கொண்டாடுவதற்கே, ஒன்று இவர்களால் அல்லது இவர்களின் பெற்றோர்,நண்பர்களால் கண்டிப்பாக நடத்தப்படும். அடுத்தது 'ரிஹர்சல் டின்னர்' . அது மட்டுமல்லாமல் மணப்பெண் தன் உடை தேர்வு செய்வதற்கு எடுத்துக்கொள்ளும் நாட்கள், நேரம், இதற்கெல்லாம் மேலாக அதன் விலைஎல்லாம் நம்மூருக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. இது மணமகன் மற்றும் திருமண வீட்டாருக்கும் பொருந்தும்.பின்னர் தோழிப்பெண்கள்,மாப்பிள்ளை தோழர்கள் தேர்வு என அதகளப்படும். இவர்களும் மணமக்களை போலவே ஆடையணிகலன்களுக்கு நேரமும் பொருளும் செலவிடுவார்கள். நம்மோரை விட திருமணங்களை நம்பி வெளிநாடுகளில்தான் பல தொழில்கள் உள்ளன. நாம் இந்தியாவில் கல்யாணக் காண்டிராக்டர் எனக் கூறி பல சமயம் பொறுப்புகளை அளிக்கிறோம் இல்லையா,அதுபோலவே இங்கும் wedding plannerகள் பலர் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் உள்ளனர்.

இது தவிர்த்து bachelor பார்ட்டி, ஹென் நைட் எல்லாம் தனியா இருக்கும். திருமணம் ஒவ்வொரு விதமாக நடக்கும். சர்ச், ஹோட்டல்,பிரைவேட் ரிசார்ட், அந்த கால அரண்மனைகள்(castle) இப்படி எல்லா இடங்களிலும் நடக்கும். இதில் சர்ச் மட்டும்தான் அவ்வளவாக செலவு பிடிக்காது. ஆனால் இங்கு திருமணம் நடத்துவதோடு முடியாது, பின்னர் ஒரு பெரிய விருந்து கொடுப்பதுதான் மரபு. சர்ச்ஐ தவிர்த்து மற்ற இடங்களில் நடக்கும் திருமணங்களுக்காகும் செலவை கேட்டால் மயக்கமே வரும். சிலர் இதற்காக மற்றும் திருமண, நிச்சய மோதிரங்களுக்காக தன் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவிடுவார்கள். நாம் போடும் ஐம்பது சவரன் நகைகளும் அந்த ஒரு மோதிரமும் ஒரே விலையிலிருக்கும். நமக்கு பார்க்கும் போது எளிமையாக தோற்றம் தரும் அவ்வளவுதான்.

இங்கும் திருமணம் சம்பந்தப்பட்ட பல (மூட)நம்பிக்கைகள் உள்ளன. திருமணம் முடிந்தபின் மணப்பெண்ணின் மலர்கொத்தை பிடிக்கும் பெண்ணுக்கு விரைவில் திருமணம் நடக்கும், ஒரு பெண் தோழிப்பெண்ணாக மூன்று முறைக்கு மேல் இருக்கக் கூடாது. இப்படிப் பல உள்ளன.
அதுமட்டுமல்லாமல் நாம் செய்வது போல சீர் செய்வதும் உள்ளது. மணமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களின் பட்டியலை பிரபல நகைக்கடைகள், வீட்டு உபயோகப்பொருட்கள் கடை என எல்லா வகை கடைகளிலும்(ஒவ்வொரு கடையிலும் இதற்கென்றே தனிப் பிரிவு இருக்கும்) மணமக்களே பதிவு செய்துவிடுவார்கள். இவர்களின் திருமனத்தேதி அறிவிக்கப்பட்டவுடன், உறவினர்களும் நண்பர்களும் அவர்களிடம் எந்த கடை எனக் கேட்டு,அந்த பட்டியலில் இருந்து தன்னால் முடிந்ததை வாங்கிக் கொடுப்பார்கள். இது குழந்தையின் பேர் சூட்டு விழாக்களிலும் அப்படியே நடைமுறைபடுத்தப்படும். மன விழாவில் தந்தை தாரைவார்த்துக் கொடுக்கும் சடங்கும் உள்ளது.

பின்னர் தேன்நிலவு. இதை ஒவ்வொருத்தரும் வித்தியாசமாக கொண்டாடுவார்கள். சிலர் நாள்கணக்கு, வாரக்கணக்கிலும் இன்னும் சிலர் ஒரு வருடம் முழுவதும் கூட கொண்டாடுவார்கள். இதில் பொருளாதார வித்தியாசங்களே கிடையாது. பின்னர் அந்த பெண் கர்பமாக இருக்கும் போது நம்மூரில் நடத்துவது போல் சீமந்தமும்(baby shower) உண்டு. பிரசவத்துக்கு தாய் வீட்டுக்கும் போகலாம், கணவர் வீட்டிலும் இருக்கலாம், நம் தாயை நம்முடனேயும் வைத்து கொள்ளலாம்(தாய் சம்மதிக்கும் பட்சத்தில்) .

குழந்தை பிறந்த பின்னும் மிக கிராண்டாக விழா உண்டு.குழந்தையின் முதல் பிறந்த நாளிலோ/ பெயர் சூட்டு விழாக்களிலோ அந்த குழந்தையின் god father, god mother (நம் ஊரில் தாய் மாமன் சடங்கு போல, வித்தியாசம் என்னவென்றால் இங்கு நண்பர்களையும் அவ்வாறு அறிவிப்பார்கள்) யார் என அறிவிக்கப் படுவார்கள். இது தவிர தனிப்பட்ட முறையில் கொண்டாடப்படும் பிறந்த நாள்,திருமண நாள் இதையெல்லாம் சொல்லவே வேண்டாம்,அவ்வளவு அழகாக அவரவர் சக்திக்கு ஏற்றாற்போல் கொண்டாடுவார்கள். நம் ஊரை போலவே வெள்ளிவிழா, பொன்விழா ஆண்டுகளை ஆடம்பரமாக கொண்டாடுவார்கள்.

இதைத் தவிர பண்டிகைகளை கொண்டாடும் விதமே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். கிருஸ்துமஸ் காலங்களில் இங்குள்ள கேலரீஸ் லாஃபையட், BHV, பிரிண்டாம்ப்ஸ், மற்றும் élysee தெருவில் உள்ள அனைத்து ரக அங்காடிகளிலும் கடைகளிலும், தீநகர் ரங்கநாதன் தெருவில் நடப்பதை விட கர்ண கொடூரமான அடிதடி ஷாப்பிங் நடைபெறும். ஈஸ்டர் காலங்களில் விற்கப்படும் chocolateகளுக்கு அளவென்பதே கிடையாது. இதில் வேடிக்கை என்னவென்றால் சிறிதும் கடவுள் நம்பிக்கையில்லாத என் கணவரை போன்றோரும் இத்தகைய கொண்டாட்டங்களில் மிக உற்சாகமாக பங்கேற்பார்கள். சரி ஆண்டுக்கு மூன்று நான்கு பண்டிகைகள்தானே என்றால், அதற்குக் காரணம் இங்கு கோடை விடுமுறை ஒரு மாதம், வசந்த கால விடுமுறை 2 வாரம், குளிர்கால விடுமுறை 3 வாரம். நம் ஊரில் அது சாத்தியப்படுமா? அதன் பொருட்டே எல்லோரும் கூடி மகிழ இப்படி பண்டிகை விழாக்களை நம் ஊரில் அறிமுகப்படுத்தினார்கள். இப்பொழுது பிற வகை கேளிக்கைகள் நமக்கு அறிமுகமாகிவிட்டதினால் நமக்கு பழைய சம்பிரதாயங்களில் ஆர்வம் குறைந்து விட்டது. அதனால் என்ன, ஏதோ ஒரு வகையில் கொண்டாட்டங்கள் கொண்டாட்டங்கள்தானே.

சரி இப்பொழுது ரபி பெர்னார்ட் அவர்களின் கூற்றுக்கு வருவோம். வெளிநாட்டில் பெரும்பான்மையானவர்கள் நம்மைப் போலவே திருமணத்திற்கு பதற்றமாக காத்திருந்து, திருமணத்திற்கு குறைந்தபட்சம் 2 நாட்கள் முன்னராவது விடுமுறை எடுப்பார்கள். இன்னும் சிலர் 2 வாரங்கள் கூட எடுப்பார்கள். அது அவர் அவர் வேலை செய்யும் துறை, அவரவர் சொந்த விருப்பம், மனப் பதற்றம், வசதியைப் பொறுத்து அமையும். நான் இந்தியாவிலும் பலர் திருமணத்திற்கு முந்தின நாள் வரையிலும் பின்னர் திருமணமான அடுத்த நாளிலிருந்தும் வேலைக்கு செல்பவர்கள் எனப் பார்த்திருக்கிறேன். இதில் பெருமை பட என்ன இருக்கிறது? திருமணத்திற்கு முந்தின நிமிடம் வரை அவர் வேலைக்கு செல்வது அவரின் சொந்த விருப்பம். அவருக்கு முக்கிய பணிகள் இருக்கலாம், அவர் எதற்கும் பதற்றப்படாதவராக இருக்கலாம். ஆனால் மற்றவர் பதற்றமுடயவராக இருக்கலாம், அப்பொழுது விடுமுறை கிடைத்திருக்கலாம், இதற்கெல்லாம் மேலாக அவரின் சொந்த விருப்பத்தின் பேரில் முன்னமே அனைத்தையும் முடித்து விட்டு திருமண நாளை ஆவலோடு எதிர்நோக்கி இருக்கலாம். இதில் அவர் பிறருக்கு இடைஞ்சலாகவோ, பிறர் பணியை கெடுக்காவண்ணமும் விடுமுறை எடுத்தால் என்ன தவறு? இல்லை அப்படி முந்தின நாள் வரை வேலைக்கு வருபவர்கள் எவ்வகையில் தியாகியாகிறார்கள்?

எல்லா நாட்டிலுமே பெரியவர்கள் திருமணத்திற்கு முன்னர் விடுமுறை எடுக்கும்படி வற்புறுத்துகிறார்கள். ஏன்? அனாவசியமான பிரச்சினைகள், விபத்துக்கள், மற்றும் தேவையான ஓய்வு இதற்காகத்தான். இதில் என்ன பத்தாம்பசிலித்தனம் இருக்கிறது. மற்ற நிகழ்வுகளை விட திருமணத்திற்கு எல்லா நாடுகளிலும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்குக் காரணம் அது தனிப்பட்ட ஒருவரின் விருப்பு வெறுப்பு சம்பந்தப்பட்டதில்லை, அதில் இருவரின் விருப்பு வெறுப்பு சம்பந்தப்படுவதுதான் காரணம்.

இனிமேலாவது தயவுசெய்து வெளிநாட்டை பற்றி தவறான புரிதல்களை மக்கள் மனதில் ஏற்படுத்தவேண்டாம் எனக்கேட்டுக்கொள்கிறேன். இங்குள்ள மக்களும் அனைத்து வகை உணர்ச்சிகளும் உள்ள மக்கள். ஒரு சிலர் கூறுவதை போன்ற இயந்திர வாழ்க்கை வாழ்பவர்கள் இல்லை. இவர்களும் குடும்ப, சமூக மற்றும் மனித உணர்வுகளுக்கு மிகுந்த மதிப்பளிப்பவர்கள். பெரியார் சொன்ன ஒரு விஷயம் இந்த இடத்தில் மிகப் பொருத்தமாகும். அது என்னவென்றால் 'ஒரு மொழியில் ஒரு வார்த்தை உள்ளதென்றால், அந்த சமூகத்திலும், அவ்வார்த்தைக்குரிய பொருள் வழக்கத்திலும் நடைமுறையிலும் உள்ளது'. அதனால் இனிமேல் தெரியாத விஷயங்களில் தெரிந்த மாதிரி மேலெழுந்தவாரியாகக் கருத்துக்களை பரப்புவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

இதன் முதல் பாகம்:
http://vettiaapiser.blogspot.com/2008/06/blog-post_10.html
இதன் இரண்டாம் பாகம்:
http://vettiaapiser.blogspot.com/2008/06/blog-post_5058.html

54 comments:

Anonymous said...

Really nice post.

rapp said...

ரொம்ப நன்றி அனானி. நேரம் கிடைக்கும் போது மீண்டும் வந்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

மஞ்சூர் ராசா said...

பலவித நிகழ்ச்சிகளையும் ஒப்பிட்டு நன்றாக அலசியுள்ளீர்கள்.

பொதுவாகவே இக்கரைக்கு அக்கரை பச்சை என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.

மஞ்சூர் ராசா said...

மற்ற பகுதிகளையும் விரைவில் படித்துவிட்டு கருத்து சொல்கிறேன்.

நன்றி.

rapp said...

ரொம்ப நன்றி மஞ்சூர் ராசா, உங்களின் பங்களிப்பு மிக்க மகிழ்ச்சி தருகிறது. மீண்டும் நேரம் கிடைக்கும்போது வருக. உங்களின் கருத்துக்களை மற்ற பகுதிகளிலும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

மோகன் கந்தசாமி said...

ஹாய் வெட்டி ஆபிசர்,
////பெரும்பான்மையானவர்கள் நம்மைப் போலவே திருமணத்திற்கு பதற்றமாக காத்திருந்து, திருமணத்திற்கு குறைந்தபட்சம் 2 நாட்கள் முன்னராவது விடுமுறை எடுப்பார்கள்.////
என் தங்கை திருமண பதட்டத்தில் வேலை செய்ய முடியவில்லை என்று சொல்லி வேலையையே விட்டாள். மாறாக என் தந்தை தன் திருமண நிகழ்வின் சில மணி நேரங்கள் முன்பு வரை, முந்தய இரவு முழுக்க "ரா மெட்டீரியல் அன்-லோடிங்" பணியை மேற்பார்வை இட்டுக்கொண்டிருந்தார் என கூறியிருக்கிறார்.

மேலும், இங்கு சில வகைத் திருமணங்கள் வெளிநாடுகளில் உள்ள "கரண்ட் பேஷன்" -ஐ காப்பி அடிக்கும் வகையில் உள்ளன. எனவே வெளிநாட்டிலும் ஆடம்பர திருமணம் உண்டு. ஆனால் பெண்களுக்கு சிரமம், கட்டாய வரதட்சினை, இவையெல்லாம் இருக்குமா என்று தெரியவில்லை.

rapp said...

ஆமாங்க அது சரிதான், இப்போ பெண்கள் நல்லா சம்பாதிக்க ஆரம்பிச்சவுடனே,ஓரளவுக்கு எல்லா மட்டத்துலையும் வரதட்சணை பிரச்சனை நெறய கொரஞ்சிருக்குன்னு நினைக்கறேன். தனியா பெண்கள் வாழுவதற்கு தயார்ங்கர நிலை வந்துச்சுன்னா வரதட்சணயே சுத்தமா அழிஞ்சிடும். மத்தபடி நான் இங்க சொல்ல வர்றது விழாக்கள் கொண்டாடப்படற முறைகள் பத்திதான். நெம்ப நன்றி மோகன் வந்ததுக்கு.

இலவசக்கொத்தனார் said...

நல்லா எழுதி இருக்கீங்க. கொஞ்சம் எழுத்துப் பிழைகள் இல்லாம எழுதப் பழகிக்குங்க. இன்னுமே நல்லா இருக்கும்.

rapp said...

நெம்ப நன்றி இலவசக்கொத்தனார், நேரம் கிடைக்கும் போது அப்பப்ப வந்துட்டு போங்க.

துளசி கோபால் said...

நல்லா எழுதி இருக்கீங்க.


வரதட்சிணை, சீர் இப்படி டிமாண்ட் வைக்கரதில்லை என்றது ரொம்ப ஆறுதல்.


கல்யாணத்துக்குச் செலவு ஆகாம இருக்குமா? அதுக்குப் பெற்றோர்கள் கிட்டே எதுவும் எதிர்பார்க்காமல் தானே காசு சேர்த்துக்கறாங்க இன்றைய இளைய தலைமுறைகள்.

அதனாலேயே கல்யாணம் தள்ளிப்போய்க்கிட்டு இருக்கு பல இடங்களில்( என் மகள் உட்பட)

தாய்தகப்பன் செலவு செய்யறோமுன்னு சொன்னாலும் கேட்டால்தானே?

கிரி said...

துண்டு போட்டுட்டு போறேன் ..திரும்ப வரேன் :-)

சிறில் அலெக்ஸ் said...

Good one.

rapp said...

நெம்ப நன்றி துளசி மேடம். உங்க பெண் போலத்தான் என் அக்காவும், ஆனா நான் அப்படியே நேர்மாறானவ. முதல் முதலா வந்து இருக்கீங்க , ரொம்ப சந்தோஷம். அடிக்கடி வந்துட்டு போங்க.

rapp said...

நெம்ப நன்றி சிறில்.முதல் முதலா வந்து இருக்கீங்க , ரொம்ப சந்தோஷம். அடிக்கடி வந்துட்டு போங்க.

rapp said...

ஓகே கிரி. எப்ப முடியுதோ அப்ப வந்துட்டு போங்க. நமக்கு தேவை ஒரு சின்ன பின்னூட்டம் தானே. நீங்க வந்து பொறுமையா படிச்சதே நெம்ப நிறைவா இருக்கு.

பரிசல்காரன் said...

//இங்குள்ள மக்களும் அனைத்து வகை உணர்ச்சிகளும் உள்ள மக்கள். ஒரு சிலர் கூறுவதை போன்ற இயந்திர வாழ்க்கை வாழ்பவர்கள் இல்லை//

அனுபவித்து நீங்கள் சொல்லும் உண்மை! வழிமொழிகிறேன்!

rapp said...

நெம்ப நன்றி பரிசல்காரன்(கிருஷ்ணா).

rapp said...

ஆஹா இன்னைக்கு ரெண்டு புதுப் பதிவு போட்ருக்கீங்களா கிருஷ்ணா? அதானப் பார்த்தேன் ஏன் திடீர்னு அர்த்த ராத்திரியில பின்னூட்டமிடறாருன்னு!

rapp said...

கோச்சுக்காதீங்க, சும்மா பின்னூட்டத்தை அதிகப்படுத்திக்கத்தான்.

கிரி said...

//ஆனா நம்மள்ல சிலப் பேர் எப்போ பார்த்தாலும் வெளிநாட்ல பார்த்தீங்களா எவ்ளோ சூப்பரா எளிமையா இருக்காங்க, நாம இப்டி இருக்கோம்னு ஜார்ஜ் புஷ்ஷுக்கு போட்டியா உளருகிறார்களே அவர்களுக்குத் தான் இந்த பதிவு. //

நமக்கும் அடி விழுது :-)))) நான் ரொம்ப நல்லவங்க உண்மைய ஒத்துப்போம் :-D

//சிலர் இதற்காக மற்றும் திருமண, நிச்சய மோதிரங்களுக்காக தன் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவிடுவார்கள்//

நம்மை விட கேனயனுகளா இருக்காங்க :-)

//மலர்கொத்தை பிடிக்கும் பெண்ணுக்கு விரைவில் திருமணம் நடக்கும்//

அங்கெல்லாம் திருமணத்தை முக்கிய விசயமாக கருதுகிறார்களா?

//இது குழந்தையின் பேர் சூட்டு விழாக்களிலும் அப்படியே நடைமுறைபடுத்தப்படும்//

இந்த விழாவெல்லாம் நடக்குதா என்ன? நீங்க எந்த நாட்டை மனசுல வைத்து பேசுறீங்க?

//சிறிதும் கடவுள் நம்பிக்கையில்லாத என் கணவரை போன்றோரும் இத்தகைய கொண்டாட்டங்களில் மிக உற்சாகமாக பங்கேற்பார்கள்.//

அப்ப நீங்க வெட்டி ஆப்பீசரியா :-)))

//இப்பொழுது பிற வகை கேளிக்கைகள் நமக்கு அறிமுகமாகிவிட்டதினால் நமக்கு பழைய சம்பிரதாயங்களில் ஆர்வம் குறைந்து விட்டது//

கில்லாடியா விசயத்தை பிடித்து விட்டீங்க :-) உங்கள் கருத்தை நான் வழிமொழிகிறேன்

//முந்தின நாள் வரை வேலைக்கு வருபவர்கள் எவ்வகையில் தியாகியாகிறார்கள்//

நியாயமான கேள்வி தான்?

//எல்லா நாட்டிலுமே பெரியவர்கள் திருமணத்திற்கு முன்னர் விடுமுறை எடுக்கும்படி வற்புறுத்துகிறார்கள். ஏன்? அனாவசியமான பிரச்சினைகள், விபத்துக்கள், மற்றும் தேவையான ஓய்வு இதற்காகத்தான்//

நீங்கள் கூறுவது சரி தான். ஓய்வு இல்லை என்றால் புகைப்படங்களில் மிக கேவலமாக இருக்கும் (இருக்கிறது தான் வரும் என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்ல:D)

//இனிமேல் தெரியாத விஷயங்களில் தெரிந்த மாதிரி மேலெழுந்தவாரியாகக் கருத்துக்களை பரப்புவதை குறைத்துக் கொள்ள வேண்டும்//

தப்புங்க. நிறுத்தி கொள்ள வேண்டும்.

அப்புறம் அருமையா பதிவு எழுதறீங்க....நீங்கள் எழுதும் பதிவுகளை படித்து பின்னூட்டம் குறைவாக வருவதாக வருத்தப்படுகிறீர்கள். முதலில் அப்படி தான் இருக்கும், மனம் தளராமல் தொடர்ந்து எழுதுங்கள். நிறைய பேர் படிப்பாங்க பின்னூட்டம் இடுவாங்க.

நீங்கள் தொடர்ந்து பட்டய கிளப்ப என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

rapp,
நம்முடைய பொருளாதாரம் விவசாயம் சார்ந்ததாக இருந்த காலகட்டத்தில் மக்களுக்கு நிறைய நேரம் இருந்தது.திருமணம் போன்ற விழாக்களுக்கு வரும் உறவினர்கள் பல நாட்கள் இருப்பார்கள்.காரணம் தொலைதொடர்பு வசதி இல்லாத அன்றைக்கு ஒருவரை பார்க்கும் நேரத்தில் பகிர்ந்து கொள்ள நாட்கணக்கில் விஷயம் இருக்கும். நாட்கணக்கில் இருப்பவர்களுக்கு போர் அடிக்காமல் இருக்க சடங்குகளும் நாட்கணக்கில் நீண்டது. இப்படி நீண்ட சடங்குகளின் செலவும் நிறையத்தான் இருக்கும். அந்த எச்சம் இன்றும் தொடருகிறது.நீங்களே சொன்னபடி அது அவரவர் விருப்பம்.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

உண்மையிலேயே கிரி சொன்னமாதிரி ரொம்ப நல்லா எழுதுறீங்க. தொடர்ந்து எழுதி கலக்குங்க.

ambi said...

ரொம்ப லேட்டா வந்ததுக்கு ஒரு மாப்பு, மன்னிப்பு.

ambi said...

நல்லாவே அலசி இருக்கீங்க ராப். பல புதிய விஷயங்களை தெரிந்து கொண்டேன் உங்க தயவுல.

இவ்ளோ செலவு பண்ணி அவங்க செய்யற கல்யாணம் பல சமயங்களில் ஒரு வருடம் கூட தாக்கு பிடிப்பதில்லைனு கேள்விபட்ருக்கேன். ரெம்ப வருத்தபட வேண்டிய விஷயம் இல்லையா?

இரண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கறது தான் ரெம்ப முக்யம். அதுக்கப்புறம் தான் இந்த கேளிக்கை எல்லாம்! என்பது என் சொந்த கருத்து.

ambi said...

நானே ஒரு குவாட்டர் செஞ்சுரி அடிச்சுட்டு போறேன். :)

rapp said...

இல்லைங்க கிரி, எல்லா ஐரோப்பிய நாட்லயும் பேர்சூட்டுவிழா உண்டுங்க. எப்படி நம்ம நாட்ல கொஞ்சம் பேர் நடத்தறாங்க,கொஞ்சம் பேர் நடத்தறதில்லயோ, அதே மாதிரித்தான் இங்கயும். இங்க அந்த சடங்கின்போதுதான் godfather,godmother இவங்க யாருன்னு அறிவிப்பாங்க. இதுக்கு பெரிய போட்டியே நடக்கும்.
அதேப்போல இங்கெல்லாம் திருமணத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கறாங்க, அதுல தோத்துடுவோமோங்கர பயத்திலயே அதை தள்ளிப்போடுறாங்க. மத்தபடி பொருளாதாரமும் ஒரு காரணம். நிறையப் பேர் பொருளாதார(பிளாட் இல்லாமத் தனி வீடு தோட்டத்தோட,......) ரீதியா ஸ்திரப் படுத்திக்கணும்னு நெனைப்பாங்க. அதனால நிறையப் பேர் திருமணத்தத் தள்ளிப் போடுகிறார்கள். ஆனா இங்க நீங்க ஒரு விஷயத்தக் கவனிக்கணும், இப்போ இந்தியாவிலும் இந்தப் போக்கு வேகமா பரவிக்கிட்டு வருதுப் பார்த்தீங்களா? இத நான் சரின்னு சொல்லல, ஆனா இது தானா நடக்கிற ஒரு விஷயம்.

rapp said...

நெம்ப நன்றிங்க கிரி, வந்து சொன்ன மாதிரியே பின்னூட்டமிட்டதுக்கு. அடடா சும்மா ஜாலியா சொன்ன விஷயங்கதான் குறைவானப் பின்னூட்டங்களைப் பத்தி எழுதினது. அதெல்லாம் ஸீரியஸ்ஸா எடுத்துக்காதீங்க. பாத்தீங்களா அப்டி ஒரு பிட்டப் போட்டவுடனே எக்ஸ்ட்ராவா அஞ்சு ஆறு பின்னூட்டங்க வந்திடுச்சி. ஹி ஹி ஹி

rapp said...

ஹை, முத முதல்லா வந்திருக்கீங்க அப்துல்லா. நெம்ப நன்றி. நேரம் கிடைக்கும்போது அடிக்கடி வந்துட்டுப் போங்க. உங்க கருத்துக்களுக்கு நெம்ப நன்றி.

rapp said...

அண்ணே நீங்க முன்னமே சொன்ன மாதிரி குடும்பம் தான் முதல்ல. குழந்தைக்கு பெயர்சூட்டு விழா முக்கியமா, என்னோட மொக்கைக்கு பின்னூட்டமிடறது முக்கியமா? நீங்க இப்ப வந்து பின்னூட்ட போட்டது நெம்ப சந்தோஷம்.

rapp said...

அண்ணே நாம நினைக்கிறது ரொம்பத் தப்பு, இதோ நான் இவர கட்டிக்கிட்டு வந்து ரெண்டு வருஷமாகுது.இன்னும் விவாகரத்தான ஒருத்தர கூட நான் இன்னும் பார்க்கல.அதுக்காக விவாகரத்து பண்றவங்க கெட்டவங்கன்னு நான் சொல்ல வரலை. அது அவங்கவங்க பிரச்சினைகள், சூழ்நிலைகளைப் பொறுத்தது. யாருமே மேலெழுந்தவாரியா கருத்து சொல்ல முடியாது. இதுல முக்கியமான விஷயம் பார்த்தீங்கன்னா இங்கல்லாம் பெண்கள் பொருளாதார ரீதியா ஓரளவுக்கு நல்லா இருக்கிறதுதான். இப்போ இந்தியாலையும் விவாகரத்து அதிகரிச்சிருக்கறது பார்த்தீங்களா, காரணம், பெண்கள் கொஞ்சம் கொஞ்சமா பொருளாதார ரீதியா ச்திரமாகிட்டு வர்றதுதான். இப்ப ஆண்கள் தங்களை நிறைய மாத்திகிட்டாத்தான் இனிமேல் திருமணங்கள் நிலைச்சு இருக்கும். இனிமேலும் இனிப்பான வார்த்தைகளை பேசி நீ தியாகியானாத்தான் நம் குடும்பம் தழைக்கும், அப்போத்தான் நீ பத்தினின்னு சொல்லி ஏமாத்த முடியாது.

இவரோட மாமா தன் மனைவி இறந்தப் பின் இருபது வருஷமா கல்யாணமே செய்துக்காம தனியா இருக்கார். அதோட தன் தொன்னூத்தி மூணு வயசுத் தாயையும் இவரே பார்த்துக்கறார். அதுக்காக இதெல்லாம் பண்ணாதவங்கக் கெட்டவங்கன்னு நான் சொல்லலை. ஆனா எல்லா இடத்துலயும் எல்லாமும் உண்டு.

நீங்க மீடியா மக்களை(சினிமா, தொலைகாட்சி, மாடலிங்....) இந்த மாதிரி துறைகள்ல நடக்கிற விஷயங்களை மட்டும் வச்சே நாம அங்க இருக்கிற பொதுமக்களை எடைபோட முடியாதில்லையா? இந்தியால மட்டும் இந்தத் துறையைச் சேர்ந்தவங்க வாழ்க்கை இப்டித்தானே இருக்கு.

ஒரு விஷயம் ஞாபகம் வெச்சிக்கங்க ஒரு நாட்ல ஒரு வார்த்தை புழக்கத்திலிருந்தா, ஒரு கொண்டாட்டம் வழக்கத்திலிருந்தா அந்த மக்களிடமும் அவங்க கலாச்சாரத்திலயும் அது இன்னமும் உயிரோட்டத்தோட இருக்குன்னுதான் அர்த்தம். இங்க எல்லா எடத்திலயும் கடைகளிலும் இருபத்தைந்தாவது திருமண நாள் வாழ்த்தட்டைகள், பரிசுகள், ஐம்பதாவது திருமண நாள் வாழ்த்தட்டைகள், பரிசுகள் எல்லாமும் எக்கச்சக்கமா கிடைக்கும்.இப்படிப்பட்டவர்கள் இல்லாமலா இங்கு இவைகளெல்லாம் கிடைக்கும்.இங்கு பார்க்கிற இடங்களிலேலாம் வயதான தம்பதியர்களை சர்வ சாதாரணமாக காணலாம். அவர்களெல்லாம் பின் யார்?

rapp said...

வெளிநாட்டில் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்காம வாழராங்கன்னு நாம எப்டி சொல்ல முடியும். நான் இங்க பார்த்த வரைக்கும் எந்த வித குறையும் இல்லை. சிலப் பேர் தன்னை பெரிய கலாச்சாரக் காவலனா காண்பிச்சிக்க மத்த நாட்ட பத்தி இஷ்டத்துக்கு பொய் சொல்றாங்க. நீங்க அதை எல்லாம் நம்பாதீங்க. அதுசரி, நீங்க என்ன இப்டி சொல்லிட்டீங்க? அம்பது வருஷம் சேர்ந்து வாழ்ந்துட்டா மட்டும் அவங்க ரெண்டுப் பேரும் பயங்கரமா புரிஞ்சி வாழறதா அர்த்தமா? இது சுத்த பேத்தலான வாதம்ணே. நாம நமக்கு உண்மையா வாழணும். அவ்ளவுதான். இங்கே நான் இந்த பதிவுலப் போட்ட விஷயத்தை நிறையப் பேர் புரிஞ்சிக்கலைப் போலருக்கு. இங்க விஷயம் எந்த ஊரில் குடும்ப உறவுகள் சிறந்து விளங்குதுங்கறது இல்லை. எல்லா இடத்துலயும் எல்லாவித கொண்டாட்டமும் இருக்கு. இதுல ஆடம்பரம்ங்கர விஷயத்தையோ எளிமைங்கர விஷயத்தயோ நாம் மற்றவர்கள் மேல் திணிக்கக் கூடாதுங்கரதுதான்.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

//ஹை, முத முதல்லா வந்திருக்கீங்க அப்துல்லா. நெம்ப நன்றி. நேரம் கிடைக்கும்போது அடிக்கடி வந்துட்டுப் போங்க.//

கண்டிப்பா வந்து போறேன்.

//இங்கு பார்க்கிற இடங்களிலேலாம் வயதான தம்பதியர்களை சர்வ சாதாரணமாக காணலாம். அவர்களெல்லாம் பின் யார்?//

நல்லா உரைக்கிற மாதிரி நச்சுனு சொன்னீங்க.நான் வெளிநாடு போகும் ஓவ்வொரு முறையும் விமானத்தில் அதிகம் பார்ப்பது வயதான தம்பதியினரே!

ambi said...

My view:
//இரண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கறது தான் ரெம்ப முக்யம். அதுக்கப்புறம் தான் இந்த கேளிக்கை எல்லாம்! என்பது என் சொந்த கருத்து.
//

Your ans:
//வெளிநாட்டில் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்காம வாழராங்கன்னு நாம எப்டி சொல்ல முடியும். //

நான் வெளி நாட்டுல ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்காம வாழ்றாங்கனு சொல்லவே இல்லையம்மா.

என் வரிகள் ஆண்/பெண் எந்த நாடு, எந்த மதமென்றாலும் பொருந்தும். :)

rapp said...

அப்டின்னா என் வோட்டு உங்களுக்குத்தான். தப்பாஎடுத்துக்காதீங்க.நெம்ப நன்றி அண்ணே. ஹை பின்னூட்டக்கணக்கு முப்பதை தாண்டிடுச்சி.

rapp said...

அப்துல்லா திரும்ப வந்ததுக்கு நெம்ப நன்றி. நிறைய பேரு இந்த மாதிரி வெளிநாட்டைப் பத்தி, மக்களைப் பத்தி தப்பான விஷயங்களா பரப்பிட்டாங்க. அதனால் நெறைய பேர் மனசுல அது ஆழமா பதிஞ்சிடுச்சி. அதான் எனக்குள்ள வருத்தம்.

கார்த்திகேயன். கருணாநிதி said...

ரப்ப் ( ஆமா Rapp ன்ன என்ன அர்த்தம் ?)

மொத்தமும் படித்தேன்
ஒரு படி தேன்..

கலைஞர் கருணாநிதி சொன்னதுதான் !
இருந்தலும் இந்த பிலகுக்கு பொருத்தமாக இருக்கும் !

நிறைய எழுதுங்க !!

அன்புடன்
கருணாகார்த்திக்கேயன்

rapp said...

ராப் என் கணவரோட குடும்பப் பெயர்ங்க. நெம்ப நன்றி கார்த்திகேயன் கருணாநிதி. நேரம் கிடைக்கும் போது அப்பப்போ இந்தப் பக்கம் வந்துட்டுப் போங்க.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அன்பு தங்கை,
go and see my new postings
http://pudugaitamil.blogspot.com/2008/06/blog-post_16.html

பரிசல்காரன் said...

ராப்.. என்ன இது இன்னும் புதுப் பதிவொண்ணும் காணோம்?

கார்த்திகேயன். கருணாநிதி said...

என்னங்க ரபப்...
// நீங்க இதெல்லாம் வேற எழுதுவீங்களா? //
என்ன இப்படி கேட்டுடிங்க... எனக்கும் கொஞ்சம் எழுதவரும்..
by the way..
வந்தமைக்கும் , வாழ்த்தியமைகும் நன்றி !
அன்புடன்
கார்த்திகேயன்

rapp said...

அப்டி இல்லைங்க, நீங்க வெறும் ஜாலியாத்தான் எழுதுவீங்கன்னு நினைச்சேன்.

புருனோ Bruno said...

தகவல்களை ஆதாரத்துடன் தந்துள்ளீர்கள்.

வெளிநாட்டினர் மணமகளுக்கு எடுக்கும் திருமண உடையை அந்த நாளில் மட்டுமே உபயோகப்படுத்த முடியும். அதன் செலவை கேட்டால் நம்மவர்கள் மயக்கம் போட்டு விழுந்து விடுவார்கள் :) :)

ஆனால் நம் நாட்டில் எடுக்கப்படும் பட்டுசேலையை அனைவரும் குறைந்தது 25 முதல் 30 முறையாவது உபயோகிக்கிறார்கள்.

துளசி கோபால் said...

டாக்டர் புரூனோ சொன்னது ரொம்பச் சரி. ஆனால் சில சமயம் தினசரிகளில் for sale பத்திகளில் கல்யாண உடுப்பின் அளவு, மற்ற விவரங்களோடு விற்பனைக்கு வருகின்றது.

நம்மூரில் கல்யாணப் புடவையை வித்துருவாங்களா?

பி.கு: என் கல்யாணத்துக்குப் புதுப்புடவைன்னு ஒன்னும் வாங்கிக்கலை. சாதாரண நைலக்ஸ் புடவைதான் கட்டி இருந்தேன்.

rapp said...

சரியாகச் சொன்னீர்கள் புருனோ. மிக்க நன்றி வந்து உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு.அதன் காரணமாகத்தான் இப்பொழு இங்கு பலர் திருமண உடைகளை வாடகைக்கு எடுக்கிறார்கள்.

rapp said...

அப்படியா மேடம்? ஆனால் நைலக்ஸ் புடவை கல்யாணத்திற்கு ஆபத்து மேடம், நெருப்புக் குண்டம் பக்கத்தில் உட்காருகிறோம் இல்லையா, அதனால் சொன்னேன்.

துளசி கோபால் said...

அட! சார்பதிவாளர் அலுவலகத்தில் நெருப்புக் குண்டமெல்லாம் இப்ப இருக்கா?

நம்மது 34 வருசம் முந்தி.

அதெல்லாம் அப்ப இல்லையே(-:

:-))))

முரளிகண்ணன் said...

very informative. continue the good work

SanJai said...

//பின்னர் தேன்நிலவு. இதை ஒவ்வொருத்தரும் வித்தியாசமாக கொண்டாடுவார்கள். சிலர் நாள்கணக்கு, வாரக்கணக்கிலும் இன்னும் சிலர் ஒரு வருடம் முழுவதும் கூட கொண்டாடுவார்கள்.//

கதையில் இந்த சீன் ரொம்ப பிரமாதம்.. :P

rapp said...

நான் இந்தப் பதிவுல ஜாஸ்தி சமய சம்பிரதாயங்கள் உள்ள திருமணங்களை பற்றி எழுதினதாலே இதை மறந்துட்டேன் மேடம். சிலக் கல்யாணங்கள்ல கூரை புடவை கதர்ல இருக்கறது மரபுங்கறது மாதிரி நினைச்சுட்டேன். தெளிவுப்படுத்தினத்துக்கு நெம்ப நன்றி மேடம்.

rapp said...

நெம்ப நன்றி முரளிக்கண்ணன் ஐயா.

rapp said...

நெம்ப நன்றிங்க சஞ்சய்.

லேகா said...

உங்கள் கூற்று முழுக்க முழுக்க உண்மையே..படித்து பண் பட்ட இன்றைய சமூகத்தில் விழாக்கள் சடங்குகள் குறித்த சரியான விழிப்புணர்வு இல்லை..தொடர்ந்து சிறந்த கருத்துக்கள் சொல்ல வாழ்த்துக்கள்..

பிரியமுடன்
லேகா
http://yalisai.blogspot.com/

rapp said...

வந்து உங்க கருத்துக்களை தெரிவிச்சதுக்கு நெம்ப நன்றிங்க லேகா.

விஜய் said...

//கிரி said
அப்புறம் அருமையா பதிவு எழுதறீங்க....நீங்கள் எழுதும் பதிவுகளை படித்து பின்னூட்டம் குறைவாக வருவதாக வருத்தப்படுகிறீர்கள். முதலில் அப்படி தான் இருக்கும், மனம் தளராமல் தொடர்ந்து எழுதுங்கள். நிறைய பேர் படிப்பாங்க பின்னூட்டம் இடுவாங்க.//

இது நிதர்சனமான உண்மை.முதல் பதிவில் ""அம்பி" பரிசல்காரன் இருவர் மட்டும் இப்போது அனைத்து முன்னணி பதிவர்களின் பின்னூட்டங்கள்.

இன்று காலை 04.30 தொடங்கி உங்களின் அனைத்து பதிவுகளையும் அதன் அனைத்து பின்னூட்டங்களையும் படித்த பின் என் கருத்து.

மிக அருமையாய் எழுதுகிறிர்கள்
முற்போக்கு சிந்தனைகள் மிளிர்கின்றன

வெளி நாட்டு திருமணம் பற்றிய பல தகவல்கள்.நன்றி

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com