Wednesday, 4 June, 2008

குத்துப் பாடல்கள், மெலடி பாடல்கள்

எனக்கு சின்ன வயசில இருந்தே குத்து பாடல்கள்னா ரொம்ப இஷ்டம். நான் முறைப்படி கர்நாடக சங்கீதம் கத்துகிட்டேன். கொஞ்சம் நல்லாவே பாடுவேன். எனக்கு எல்லா வகை பாடல்களுமே நிரம்ப பிடிச்சாலும் குத்து பாட்டுன்னா எங்கம்மா, அக்கா, நான், இப்போ எங்கக்கா பையன்னு எல்லோர்க்கும் மிகவும் இஷ்டம். நானும் என் வீட்டுக்காரரும் 5 வருஷமா காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டாலும் அவருக்கு மேற்கத்திய க்லாசிகல் சங்கீதம் ரொம்ப பிடிக்கும்ங்கற காரணத்தால குத்து பாட்டு வகையராக்கள் கண்டிப்பா புடிக்காதுன்னு முடிவு பண்ணிக்கிட்டேன். கல்யாணத்துக்கப்புறம் பாத்தா என்னோட சேர்ந்து தமிழ் படம் பாக்க ஆரம்பிச்சவரு பயங்கர குத்து பாட்டு ரசிகராகி இப்போ அநியாயத்துக்கு தெலுங்கு பட குத்து பாட்டெல்லாம் தரவிறக்கி பாக்கிற அளவுக்கு அழிச்சாட்டியம் பண்றாரு. அவரோட சேர்ந்து அவரோட நண்பர்களும் இப்போ முமைத் கான் ஹிட்ஸ், விஜய் ஹிட்ஸ் வாங்குற அளவுக்கு ஆகிட்டாங்க.

நம்ம தமிழ்நாட்டுல இந்த so called அறிவு ஜீவிகள் சிலர்கிட்ட ஒன்ன கவனிச்சீங்கன்னா குத்து பாட்ட ஏதோ ஒரு குறிப்பிட்ட சமூகத்தோட குறியீடு மாதிரி அழகா வாழப் பழத்துல ஊசி ஏத்துற மாதிரி நமக்கே தெரியாம நம்ம மனசுல பதிய வைக்க முயற்சிய செய்தாங்க , ஏன் இன்னமும்தான் செய்றாங்க. அது மறைந்த சுஜாதா சாரா இருக்கட்டும், சில பத்திரிக்கைகளா இருக்கட்டும்,இல்லை இசைத் துறையிலேயே இருக்கிற சிலரா இருக்கட்டும். இப்போ இவ்வகை பாடல்களுக்கு மென்பொருள் , கார்ப்பரேட் , மேலும் நல்ல வருமானமுள்ள பிற துறைகளில் உள்ளவர்கள் மற்றும் இவர்கள் அதிகமாக புழங்கும் பப்களில் நல்ல வரவேற்பு இருப்பதால் இப்பொழுது நிலைமை மாறி இருக்கு.

இப்போ மெலடி பாட்டுக்களுக்கு வருவோம் . எனக்கென்னவோ இப்போல்லாம் நெறைய பேரு எதாவது பாட்டு பல்லவி,சரணம்னு வித்தியாசம் இல்லாம ஒரே மாதிரி அழுமூஞ்சி மெட்டுல ஹரிஹரனோ, உன்னி கிருஷ்ணனோ, சாதனா சர்கமோ மூக்கால பாடிட்டா அது மெலடி பாட்டுன்னு நெனச்சிக்கிறாங்கன்னு தோணுது. என்னை பொருத்த வரைக்கும் அதெல்லாம் பாட்டு வகையிலயே சேத்தி கிடையாது. ஓலம்னு தான் சொல்லணும். எனக்கு ஸ்கூல் படிக்கும்போதே ஹரிஹரனயெல்லாம் பாத்தா அப்டியே பத்திகிட்டு வரும். அப்புறம் அவர கொஞ்சமாவது புடிச்சிதுன்னா கலோனியல் கசின்ஸ்லாம் கேட்டப்புறம்தான். இந்த ஸ்டைலுக்கு ஒரு சிறந்த உதாரணம்னா "தாஜுமகாலே" னு ஒரு ப்ளேடு பாட்டு(பிரபுவோட இருண்ட காலத்தில் வந்த படம்)

மெலடி பாட்டுன்னா என்னாங்க? "வளையோசை கல கல கலவென" , " அந்தி மழை பொழிகிறது", "பேசுகிறேன் பேசுகிறேன்" இந்த வகையெல்லாம்தான். இன்னொரு கொடுமை ஒரு பத்து வருஷமா இம்மாதிரி மெட்டுகளுக்கு எழுதப்படுற வரிகள்தான். இந்த பாட்ட எல்லாம் கேட்டீங்கன்னா ஒரே கவிஞர் எழுதுன மாதிரி இருக்கும். கற்பனை வளமே இல்லாமே எட்டாங்கிளாசு பையனோட காதல் கவிதை மாதிரியோ, யாரயோ பாத்து பிட்டடிச்சு எழுதினது போலவோ இருக்கும்.

எப்படி தமிழ் சினிமால அடக்கமான அப்பாவியான குடும்பம், பொண்ணு அப்டின்னா பிராமண குடும்பத்தையே பிரதானப் படுத்துவாங்களோ( மத்த வீட்லஎல்லாம் பொண்ணுங்க கட்டப்பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருக்க மாதிரி) அதே மாதிரி ஒரு செட்டு ஆளுங்க என்னமோ குத்து பாட்டு ரசிக்கிரவங்க ஏதோ அடிப்படை இசையறிவோ, ரசனையோ இல்லாதவங்க மாதிரியும் இவங்கல்லாம் மேன்மையான ரசனயுள்ளவங்க போலவும், யப்பா.

இன்னொரு விஷயமும் இங்க கவனிக்கணும். என்னன்னா குத்து பாட்டு வேற ஐட்டம் பாடல்கள் வேற. ரெண்டையும் போட்டு குழப்பிக்க கூடாது. ஐட்டம் பாடல்கள்னா "பளிங்கினால் ஒரு மாளிகை", "தூது வருமா" இதெல்லாம்தான். குத்து பாட்டுன்னா "கத்தாழங் கண்ணாலே", "மாமா மாமா" இதெல்லாம். டப்பாங்குத்துன்னா எல்லா விஜய் பாடல்களும்தான்.இதுல குத்து பாடல்களோட பாடல் வரிகள் முக்கால்வாசி கேலியும் கிண்டலும், ஒரு உள்ளர்த்தமும் இருக்கும்.ஆனா எல்லோர்க்கும் புரியறமாதிரி இருக்காது. இதில் தப்பும் இல்லை. ஏன்னா இது பாடப் படும் சூழ்நிலை அப்படித்தான் இருக்கும். ஆனா டப்பாங்குத்து கொஞ்சம் வெளிப்படையா எழுதப்பட்டிருக்கும்(பேரரசு பாட்டு மாதிரி).
கீழே எல்லாத்துக்கும் ஏத்த மாதிரி பாடல்கள் போட்ருக்கேன், பாத்து ரசியுங்கள்.

6 comments:

Mohan Kandasamy said...

/////இந்த ஸ்டைலுக்கு ஒரு சிறந்த உதாரணம்னா "தாஜுமகாலே" னு ஒரு ப்ளேடு பாட்டு//////
அடடே! இந்தப்பாட்டு உங்களுக்கு பிடிக்காதா?

////சாதனா சர்கமோ மூக்கால பாடிட்டா அது மெலடி பாட்டுன்னு நெனச்சிக்கிறாங்கன்னு /////
அப்படின்னா சாதனா சர்க்கமும் பிடிக்காதா?

/////குத்து பாட்ட ஏதோ ஒரு குறிப்பிட்ட சமூகத்தோட குறியீடு மாதிரி அழகா வாழப் பழத்துல ஊசி ஏத்துற மாதிரி நமக்கே தெரியாம நம்ம மனசுல பதிய வைக்க முயற்சிய செய்தாங்க //////
ரொம்ப சரி...

/////அதே மாதிரி ஒரு செட்டுஆளுங்க என்னமோ குத்து பாட்டு ரசிக்கிரவங்க ஏதோ அடிப்படை இசையறிவோ, ரசனையோ இல்லாதவங்க மாதிரியும் இவங்கல்லாம் மேன்மையான ரசனயுள்ளவங்க போலவும், யப்பா.
/////
டபரா செட்டு தயிர் பசங்கன்னு சொல்லுங்கோ.

ambi said...

//பயங்கர குத்து பாட்டு ரசிகராகி இப்போ அநியாயத்துக்கு தெலுங்கு பட குத்து பாட்டெல்லாம் தரவிறக்கி பாக்கிற அளவுக்கு அழிச்சாட்டியம் பண்றாரு. //

ஹஹா! ரொம்பவே ரசித்தேன்.

rapp said...

பாத்தீங்களா மோகன், நாமளே திருப்பி அப்டி ஒரு குறிப்பிட்ட சமூகத்த மொத்தமா சொல்றோம். ஏன்னா எங்க க்ளாஸ்ல ஒரு பையன் இருந்தான். இந்த சாவுல அடிப்பாங்க தெரியுமா ஒரு டண்டனக்கா மேளம் அத அப்டியே சூப்பரா அடிச்சி காமிப்பான்(உபாயம்: வீட்ல அனுப்பின மிருதங்க கிளாஸ்)அவங்க வீட்ல இல்லாத வேலையெல்லாம் செய்வாங்க. ஆனா பையன் பயங்கரமான தில்லாலங்கடி. தண்ணி அடிக்கிறதில் இருந்து எல்லா வேலையும் ஜாலியா செஞ்சிட்டு வீட்ல எப்டி ஏமாத்த போறென்னும் சொல்வான். அதனால இந்த தலைமுறையில் அவங்க பசங்க ஜாலியாத்தான் இருக்காங்க. ஆனா இன்னும் சினிமால காட்ற அடக்கமான அப்பாவியான பொண்ணு, நேர்மையான இளைஞன்னா காட்டப்படற ஆண் இவங்கெல்லாம் யாரு, இதை செய்ற சினிமாக்காரங்க எல்லாம் பிராமண சமூகமா(ex: சேது(பாலா), ஆழ்வார், யாரடி நீ மோஹினி) அதனால மக்கள் மனசுல ஏற்படுற எண்ணம், இதுக்கெல்லாம் காரணம் என்ன, அவங்க மட்டுமே நெனைச்சா செய்யக்கொடிய வேலையா இது? இப்போ அவங்ககிட்ட இருக்கிற ஒரு தெளிவு மத்தவங்க கிட்ட இருக்கா? இப்படி silentஆ செய்ற வேலை இதெல்லாம் செரியா?

rapp said...

நீங்க வேற அண்ணே, இப்போ முமைத் கான் நடிச்ச மைசம்மா ஐ.பி.எஸ் படத்தோட dvd கிடைக்கிலன்னு ஒரே சோகமா இருக்காரு.

முரளிகண்ணன் said...

கலக்கலா எழுதியிருக்கீங்க. இந்த அளவுக்கு எதிர்பார்க்கலை

விஜய் said...

மிருதங்கம் வேற படிச்சிங்களா சகோதரி.

குத்துப் பாட்டு இப்போ எல்லோருக்கும் பிடிகிறதாலே தான் சில பாட்டுக்கள் ஹிட் ஆகுது.

அதுவும் அந்த "வாழை மீன்" பாட்டு
ஒரு கலக்கு கல்க்கீட்டுது இல்லையா?

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com