Wednesday 27 May, 2009

மொக்கைச் செய்திகள்

சில சமயம் பெரிய பெரிய ஆளுங்கல்லாம் பல்பு வாங்கும்போது, அடடா பாவமேன்னு இருக்கும். அப்டித்தான் சமீபத்துல பெரிய பெரிய எழுத்துலக ஆட்களெல்லாம் பல்பு வாங்கி பல்பத்தை முழுங்கினப்போ அச்சச்சோன்னு இருந்திச்சி. அதுலயும் அநியாயத்துக்கு சிறுவர் மலர் , அம்புலி மாமா, லட்சுமி, ரமணி சந்திரனோடல்லாம் கம்பேர் பண்ணப்போ சிரிப்பும் பரிதாபமும் சேர்ந்து வந்துச்சி. ஆனா, ரெண்டு நாளா இவங்க தன் தெறமய காட்டு காட்டுன்னு காட்றத பாத்தா..................................................................ஏதோ பிரான்ஸ் பத்தி மட்டும்தான் ஒன்னும்புரியாம அக்கிரமமா காமடி பண்ணுவாங்கன்னா, இப்போ ட்ராஜிக்கல் காமடியும் ட்ரை பண்றாப்டியோ?

ராகுல் காந்திக்கும், பத்து மாசத்திலருந்து ஒன்றரை வயசுவரையுள்ள குழந்தைகளின் நடைக்கும் ஒரு ஒத்துமை இருக்கு. என்னான்னு கண்டுப் பிடிச்சவங்க மனசோட வெச்சிக்கங்க:):):)

கேன்ஸ் பெஸ்டிவலுக்கு வந்ததிலிருந்து ரெண்டுநாள்வரை ஐஸ்வர்யா ராய்,அந்தக் கடுகடுன்னு இருந்தாங்க. என்னாக் கடுப்போ தெர்ல. இது வெறும் பிரென்ச் மீடியாகிட்டயா இல்லை அவங்க மூடே நல்லால்லையா யாருக்குத் தெரியும்? Franck Duboscங்கற நடிகர நல்லா வெளிப்படையாவே கலாய்ச்சாங்க. அதோட இவங்களுக்கு போய் டேன் மேக்கப் போடற அதிபுத்திசாலிங்கள என்னத்த சொல்ல.

டா வின்சி கோட் பார்த்து நொந்தவங்க, பயப்படாம போய் ஏஞ்சல்ஸ் அண்ட் டேமன்ஸ் பாருங்க. ஆனா கேள்வியெல்லாம் கேக்கக் கூடாது. எப்டி புஸ்தகத்த மதிமயங்கிப் போய் படிச்சோமோ அப்டியே பாக்கணும். அதே டமுக்கு டிப்பா டிப்பாதான்னாலும், ஜாலியா போகுது. புக்கைப் படிக்காதவங்களுக்குக் கதைச்சுருக்கம் என்னன்னா, தலையச் சுத்தி மூக்கை தொடுற கலையை விளக்கும் படம். கூடுதலா, ரோமுக்கு விசிட்டடிச்சவங்க டீமா போய், ஹேய் இது நாம அப்போ பார்த்தமே, என்னப்பா கூட்டம் இம்மாத்தூண்டு இருக்குங்கங்கற ரேஞ்சில பட்டயக் கெளப்பி, பக்கத்துல இருக்கவங்களை சதாய்க்கலாம்.


தமிழ்நாட்ல பன்னெண்டாம் கிளாஸ்ல ஸ்டேட் பர்ஸ்ட்லருந்து, பார்டர்ல பாசானவங்க வரைக்கும் எல்லாத்துக்கும் காரணம் நம்ம gaptain தான். பின்ன, அவரு எலெக்ஷனுக்கு குடும்ப சகிதமா ஊர் சுத்தலைன்னா, அவரு புள்ள ஸ்டேட் பர்ஸ்ட் வந்து, டெக்னிக்கலா தமிழ்நாட்லருக்க அத்தன ஸ்டூடன்சோட மார்க்கையும் பிரிச்சி, பெயிலாக்கி, அதகளமா சாதிச்சி, அல்லு கெளப்பிருப்பாப்ல. ஆனா பாருங்க, இந்த மைனாரிட்டி கருணாநிதி கவர்மென்ட் அடுத்த நாள் எலெக்ஷன் கவுண்டிங்க்ல கூட சரியா கவனம் செலுத்தாம, பன்னெண்டு தொகுதி, ஓட்டிங் மெஷினையும் கரெக்ட் பண்ணாம, ராவோட ராவா நம்ம ஜூனியர் gaptainஐ பெயிலாக்குற வேலைய செஞ்சி பழிவாங்கியிருக்குது. இதுக்கெல்லாம் ஒரு நாள் பிரேமலதா மேடம்க்கு ராஜாத்தி அம்மா, அவங்க பர்னிச்சர் கடைல வெச்சே பதில் சொல்ற காலம் வரும்னு எச்சரிக்கிறேன், ஆமா!

Tuesday 19 May, 2009

!!!!!!!!!!!!!

சில உண்மையான வார்த்தைகள்

Monday 11 May, 2009

கல்லூரிச் சாலை - 2

டிஸ்கி: இந்தப் பதிவு முழுக்க, 'சுயகழிவிரக்கம், இப்போ இதுலருந்து என்ன சொல்ல வர்றே' போன்ற எண்ணங்களே தலைதூக்கும் என்று எச்சரிக்கை செய்கிறேன்(அது வழக்கம்தானேன்னு இறுமாப்போட வர்றவங்க வாங்க). இப்டியாக ஒண்ணுமில்லாதத வெச்சி சீன் போட்டிருக்கும் என் கலைத்திறமையை நினைச்சு ஆச்சர்யமா ஆயாசமா இருந்தாலும், இதைப் படிச்சு முடிக்கும்போது உங்களோட 'இதுக்கு கோலங்களே பாத்திருப்பனே', மனநிலையை எண்ணி ஆனந்தப்படுகிறேன்.

அது இப்போ இருக்க மாதிரியே ஒரு கிரைசிஸ் டயம். ஒய்டுகே முடிஞ்சு, பாய்சன பாயாசமா நெனச்சு சப்டவங்கல்லாம் சர்வசாதாரணமா கதையல்ல நிஜமாகிட்டு இருந்தாங்க. நான் பிளஸ்டூ ஆரம்பிக்கும்போதே சனியன் சகடை கணக்கா எங்க டிபாட்மென்டை பாத்தவங்க நெறயப் பேர்(அது நீ இருந்ததாலன்னு சொல்றவங்களுக்கு இந்தப் பதிவை சமர்பிக்கிறேன்).

ரிசல்ட் வர்றதுக்கு முன்னயே நாங்களா முடிவு பண்ணி, பிரபு சம்பந்தி சேலத்துல வெச்சிருக்க காலேஜ்ல உத்தமமா சேர முடிவுப் பண்ணியாச்சு. அது ஏன் அந்த காலேஜுக்கு போனோம்னா, அந்த டைம்ல சேலம் சைட் காலேஜ்களில்தான் ஐந்து வருட எம்எஸ்சி கோர்ஸ் இருந்திச்சி (கல்யாண பத்திரிக்கைக்காக இல்லாட்டாலும், ஒரேடியா, சேந்திட்டா அஞ்சு வருஷம் பிரச்சினயில்லாமப் போகும்னு). ஆனா, ரிசல்ட் வந்தப்புறம் பாத்தா, தங்கபாலுவோட காலேஜ்லருந்து, வாரியார் சொந்தக்காரங்க கல்லூரி வரை, பொறியியல் கல்லூரிகள் பலது சீட் கொடுக்க போட்டி போடுற கலிகாலம். எங்க செட்லருந்து, பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும்னு அறிவிப்பு வேற. திமுககாரங்களா இருந்திட்டு, எதுக்கு அண்ணாவை கேவலப்படுத்தனும்னு யோசனையில் இருந்தேன். ஆனா, அதுக்கு இடம்கொடுக்காதளவுக்கு இவங்க நக்கலும் ஓவரு, அந்த காலேஜுக்கே இசிஇ தரமாட்டேன்னு அடம்.

இவங்கல்லாம் திடீர் மானஸ்தனுங்கன்னு புரிஞ்சு, சரி ஒரு மாஸ்டர் டிகிரியாவது, டிகிரி காப்பி கணக்கா சுளுவா கெடைக்குதேன்னு சேலம் போகலாம்னு இருந்தப்போ, இங்க எங்க காலேஜ் பத்தி அக்கா நண்பர்கள் மூலமா தெரிய வந்துச்சி, அதே எம்எஸ்சி சென்னைப் பல்கலைக்கழகம் கீழ புதுசா வருதுன்னு.

கிண்டில போய் பீசெல்லாம் கட்டிட்டு, அட்மிஷன் சம்பந்தமா எதையோ வாங்க காத்திருந்தா, எங்கண்ணனோட நண்பர் வந்து எதிர்ல காட்சிக் கொடுக்குறார். அவருதான் ஆடிட்டிங் பாக்குறேன்னு சொன்னதால, எங்கப்பா, எப்டிப்பா காலேஜ் ஒகேவான்னா, 'என்ன சார் இங்கயா சேத்தீங்க, அந்த காலேஜ் ஊருக்குள்ள ஒன்றர கிலோமீட்டர் நடந்தால்ல கண்ல தட்டுப்படும், அதுவும் ஒரு பஸ்சும் அங்க நிக்காது, காலேஜும் ஆரம்பிச்சு, நாலு வருஷம்தான் ஆகுது, இப்டி பண்ணிட்டீங்களேன்னு' கபீர் கெளப்புறார்.

ஏற்கனவே பிரபு சம்பந்தி, பொண்ணு கல்யாணத்துக்கு பந்தி செலவுக்கு சேத்து வெக்கனும்னு எங்கக்கிட்டருந்து அம்பதாயிரம் மொய் வாங்கினதால, இங்கக் கெரகம் கரகம் ஆடட்டும்னு விட்டுட்டோம்.

இது நடந்தது, ஜூன் மாசம், அப்போதான், வீட்ல பொருளாதார நெருக்கடிகள் ஆரம்பமாகியிருந்தன. நாங்க கட்ட ஆரம்பித்திருந்த புதிய வீடு பற்றினக் கவலை. அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தது. அப்பா வினோதமாக விஜய் படங்களை பாக்க ஆரம்பிச்சார். எங்க கல்லூரிக்கு போயிட்டு வர சர்வசாதாரணமா, ஒரு நாளைக்கு அஞ்சு மணிநேரம் ஆகலாம், என்கிற திகில் தகவல். அக்காக்கு குழந்தை பிறந்தால் எப்டி வளக்கிறதுன்னு பயம். படிச்சு முடிச்சாலும் கணினித்துறையில் எதிர்காலமுண்டா என்று பயப்பட வைத்த காலக்கட்டம். எங்க ஏரியாவில் உச்சகட்ட தண்ணீர் பஞ்சம். என் மார்க் வெச்சு அப்பா சைட்ல எல்லா சொந்தக்காரங்களும் ஏகத்துக்கும் நக்கலடிச்சு வெறுப்பேத்துற வேலைய, சொந்த வேலய விட அதிகமாப் பாத்தாங்க. இப்டி ஒன்னு பத்தாகி, பத்தே பரமசிவமானக் ('தல'யோட பரமசிவம் பாத்தா கணக்கான்னு கூட வெச்சுக்கலாம்)காலக்கட்டம்.

ஒரு சனிக்கிழமை காலைல வீல்னு ஒரு சத்தம், அம்மாதான். என்னமோ ஏதோன்னு பதறி எழுந்தா, அப்பா டிவியப் பாருங்கறார். கலைஞர் கைது பத்தின செய்திகள்.

அன்னைக்கு சாயந்திரம் டிவியப் பாத்துகிட்டே எங்கம்மா சீரியஸா சொல்றாங்க, 'நீ என்னைக்கு அஞ்சு வருஷம் படிச்சு முடிக்கிறது, அதிமுக ஆட்சி போறது, வீட்டை கட்டி முடிக்கிறது, குழந்தைக்கு அஞ்சு வயசாகுறது, மத்த பிரச்சினைகள் சரியாகுறதுன்னு'. அந்த டைம்ல நான் இருந்த ஒரு மனநிலைக்கு வாழ்க்கையில் என்றுமே திரும்பக் கூடாதுன்னு இன்னிவரைக்கும் நெனைக்கிறதுண்டு.

ஆனால் எப்டி விக்கிரமன் படத்துல, ஒரு லாலாலாவுல எல்லாம் சரியாகிடுமோ, அதாட்டமே எல்லாம் பாசிடிவ்வா மாறுச்சின்னு இப்போ வரைக்கும் எனக்கு அதிசயமா இருக்கும்.

இதோட என் பேஜாரு ஒப்பாரி முடிஞ்சு, அடுத்த பாகத்திலிருந்து நிஜக் கல்லூரிக் காலம் தொடரும்.

Wednesday 6 May, 2009

பொது அறிவுத் தகவல்கள்

1) பாக்யராஜோட சின்னவீடு படம் பாத்தவங்க, அதுல கல்பனா தம்பியா வர்ற அமுல் பேபி, சக்கி என்ற சக்கரவர்த்திய ஞாபகம் வெச்சிருக்கீங்களா? அவருதான இப்போ கமலோட உன்னைப்போல ஒருவன் பட இயக்குனர்?

2) நம்ம வக்கீலுங்கத் தொரத்தி தொரத்தி ஒதைச்சும், இந்த என்டிடிவிக்காரங்களுக்கு நக்கலு கொறயல. நமக்கும் வேணும், செரங்குப் பிடிச்ச கொரங்குக்கு சீப்பால வைத்தியம் பாத்தாப்ல, அவங்க கம்முன்னு அம்பானி, டாட்டா மாதிரி தேசத்தந்தைகளுக்கு இந்த நாடு என்ன செஞ்சிருக்குன்னு அக்கறையா, ஆதங்கமா செய்திகளைப் போட்டுக்கிட்டு இருக்கும்போது, 'நீ ஏன் அத்த காட்ல, நீ ஏன் இத்தக் கிழிக்கலன்னு' கொரலு விட்டுக்கிட்டிருந்தோம், இப்ப என்னடான்னா, அவங்க 'இன்னைக்கு செத்தா நாளைக்குப் பாலாம்ல'ன்னு சீதை கணவருக்குப் போட்டியா கடுப்பேத்துறாங்க. பேசாம, நான் அடுத்த பிளைட்ல வந்து, ஒரு நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு சாவடிச்சாத்தான் சரியா வரும்போல.
வடஇந்திய மீடியாக்காரங்கதான், டக்கின் பண்ண டாபர்னு தெரியும்ல, அப்புறம் என்னாத்துக்கு, இவங்கெல்லாம் அங்கப்போய் விவாதத்துல பங்கேற்குறாங்க. என்னைய மாதிரி வெட்டியானவங்கதான் அங்க போய் உக்காந்து சாம்பார் செய்யும் ரெசிப்பியை கத்துக்கிட்டோம்னா, இவங்களுமா? இட ஒதுக்கீடுலருந்து எல்லாத்துலயும் ஒரு முன்முடிவோட வந்து ஒக்காந்துக்கிட்டு, அம்பேத்கரே வந்தாலும் மைக்கால மூக்கை ஒடைக்கப் பாக்குறவங்களாச்சே, தெரிஞ்சுமா போகணும்?
விவாதத்துலப் பங்கேற்க கே.எஸ்.இராதாகிருஷ்ணன் மாதிரி ஆட்கள் இல்லைன்னா, போகாம இருக்கிறது நல்லது.
சரி போறவங்களாவது இனிமேட்டெல்லாம், இந்த அண்டப்புளுகு ஆகாசப்புளுகு கோச்சிங்குக்கு கோவப்படாமப் பேச டோப்படிச்சிட்டு போனாத்தான் உண்டுன்னு பொது அறிவோட இருக்காங்களான்னா, அதுவும் இல்லை.
பப்பு யாதவ் கிட்டப் போய் பம்மிப்பதுங்கி ஹிந்தில பேசுறது, ஆனா, நம்மூர்ல கொஞ்சூண்டு ஆங்கிலப் புலமை கொறஞ்சாப்டி தெரிஞ்சிச்சுன்னா அவங்கள ஓட்டுறது.
ஜெயந்தி நடராஜன் கிட்ட ஒரு சந்தேகம் கேக்கணும், 'நீங்க கடைசியா ஒருத்தர்கிட்ட சொன்ன அதே வரியை வடக்குல யார்கிட்டயாவது சொல்வீங்களாமா'ன்னு?
இந்தத் 'தாய் மண்ணே வணக்கம்' கோஷ்டிங்க இம்சை வேற இந்த விவாதங்கள்ல தாங்க முடியல, என் சமையல நானே சாப்டறத விடக் கொடுமையா இருக்கு.
விவாத நாயகர்களில், ரெண்டு மூணு பேர் டார்ச்சராகி,'நீ இங்க சொகமா ஒக்காந்திட்டு பேசக்கூடாதுன்னு' சொல்றது தேவையில்லாததுன்னு தோனுது. களத்துல இருக்கவங்களத் தவிர மத்தவங்கல்லாம் அக்கறைப்பட்டாலும் சொகமாத்தான இருக்கோம்.

3) நம்மூர்ல சன் டிவி, கலைஞர் டிவிக்கே காண்டாவுறவங்க, இத்தாலிக்குப் போனா செமக் காமடியாயிருக்கும்னு நெனைக்கிறேன். காரணம் அவங்க பிரதமர்னு புரிஞ்சிக்கிட்டிருப்பீங்க. யப்பா, அநியாயத்துக்கு அவரு தொட்டதெல்லாம் (உயிருள்ளதோ/ஜடமோ) அவருக்கே சொந்தம்ங்கற ரேஞ்சுல ஒரே ஜாலிதான். நம்ம அம்மா விடுற அறிக்கைகளுக்கு டப் கொடுக்கக் கூடிய செமத் தெறமசாலி அவரு. அந்த பூகம்பம் வந்தப்போ, நாங்க ரோம்ல தான் இருந்தோம்(நான் அப்போ டான்ஸ் பிராக்டீஸ் பண்ணல, எனக்கும் அதுக்கும் தொடர்பில்ல). நான் கூட கட்டில் அந்த ஆட்டம் ஆடுன ஒடனே, ஆர்.சி.சக்தி பட காதல் காட்சிதான் கனவுல வந்திருச்சோன்னு நெனச்சிக்கிட்டிருந்தேன், பாத்தா பூகம்பம். அதுக்கு தல விட்ட அறிக்கை இருக்கே, சூப்பர். ஆனா, ஒரு வகைல அது உண்மையும் கூட. இங்கெல்லாம் நெறயப்பேர் கேம்பிங் போறேன் பேர்விழின்னு, விடுமுறைக் காலங்களில் இப்டித்தான் படாதபாடுப்படுத்திக்கிட்டும், பட்டுகிட்டும் இருப்பாங்க.

4) ஒய்.ஜி.மகேந்திரன் இன்னும் இதே மாதிரி காமடியா தொகுத்து வழங்கறேன் பேர்விழின்னு மொக்கை போட்டுக்கிட்டிருந்தா, பேசாம தேசியப் பாதுகாப்புச் சட்டத்துல தூக்கி உள்ள போட்டிறனும், விட்டா நான் டாக்குடரு.வி.ஜி.சந்தோஷத்தோட ('பல்லாக்கு தூக்கினவன் பல் டாக்டர்னா, புல்லு புடிங்கினவன் புல் டாகா'ங்குற என் கவுஜைக்கே டப் கொடுக்கக் கூடிய தெறமசாலி)கவுஜைகளயே படிச்சிடுவேன் போலருக்கு.

5) குங்குமப்பூவும் கொஞ்சும்புராவும் படத்து ஹீரோதான, ஸ்னேஹாவுக்கு, வாய்ல சுளுக்கு வரவெச்ச, ஏப்ரல் மாதத்தில் அப்டின்ற படத்துல, கூழாங்கல்லை முழுங்கின ஸ்ரீகாந்துக்கு நண்பனா வந்து, எக்ஸ்பிரஷனக் காட்டி கொழந்தைங்கள பப்பு மம்மம் சாப்ட வெச்சவரு?(மத்த டீட்டெயில்சை உறுதிப்படுத்துற சூட்டிகையும், பொதுஅறிவும் இல்லாட்டியும் , அதுல நடிச்சவர்தானான்னு மட்டுமாச்சும் யாராவது சொல்லுங்க)

Tuesday 5 May, 2009

கோட்டானுக்குக் கோட்டயக் கொடுத்தவனும், பாட்டனுக்குக் கடல பர்பியக் கொடுத்தவனும்

1) கொய்யாலக்கா, கொய்யாலக்கா, சக்சேனாவா சன் பிக்சர்சான்னு பாடறளவுக்கு, ஒரே ஆனந்தக்கூத்தாடுது மனசு. அயன் படத்தோட புரோமோஷனுக்கு, ஷங்கர் மாதிரி ட்ரூலி பாரின் டைரடக்கர(அதாவது முடிஞ்சளவுக்கு நமக்குத் தெரிஞ்ச பாரின் படங்களாப் பாத்து மட்டுமே காப்பியடிக்கிறவர்) எல்லாம் செவுள்லப் போட்டுத் தூக்கியாந்து, உக்காத்திவெச்சு, 'அந்தப் படத்த இப்டிக்காப் பாத்தப்பவே ஒரு பீலிங், அப்டிக்கா பாக்கும்போது சீலிங் பேனுக்கே விசிறின பீலிங், ஆஹா ஒவ்வொரு மனுஷனுக்கும் எத்தனப் பீலிங்கு'ன்னு வெற்றிகரமா பொலம்ப வெச்ச தெறமைக்கே மத்திய சென்னைய தாரைவார்க்கலாம்.

பொதுவா அஜீத் விஜய், சிம்பு படங்கள கொஞ்சூண்டு பாத்தாலே, விஜயகாந்த் படத்துல, அவரு வல்லவரு நல்லவரு வடிக்கட்டுன (உத்த)மருன்னு நாலஞ்சு சீரியல் ஆர்ட்டிஸ்டை விட்டு பேச வெச்சு டிராஜடியையும் காமடியாக்குவாங்கள்ல, அதுல சீரியல் ஆர்ட்டிஸ்டுக்கு பதிலா இவங்களப் போட்டு டிராஜடி சீனை, கிரைம் இல்லைன்னா சயன்ஸ் பிக்ஷன் ஆக்கனும்னு தோணும். அதையே இப்போ சன் பிக்சர்ஸ் இன்னொரு விதத்துல பண்ணிக்கிட்டு இருக்கு. சீக்கிரமே மணிரத்தினம், ராஜீவ் மேனன், கவுதம் மேனன் மாதிரியாப்பட்ட டாபர் பாய்சயெல்லாம், புத்தம் புதுசாக் கெளம்பி, தான் ஹீரோவா நடிச்ச படத்தால கானகத்த கிடுகிடுக்க வெச்ச டாக்டர். இராமோடப் புதுப் படங்களைப் பத்தி பாராட்டி பேச வெக்கனும்னு அழகிரி அண்ணனை அடம்பிடிக்க சொல்லணும்.

2) இனிமேட்டு நான் ஷாப்பிங் போக மாட்டேன்.
பிரியாணியேத் திங்க மாட்டேன்.
எங்கயும் பராக்குப் பாக்க மாட்டேன்.
தப்புதப்பா போட்டோ எடுத்துட்டு, பாலுமகேந்திராவே சொல்லிருக்கார், மனித முகம் இல்லாதப் புகைப்படம் மண்ணுக்கு சமம்னு, அதாலத்தான் வானவில்லை விட்டுட்டு, பக்கத்துல நிக்கிற தாத்தாவ படம் புடிச்சேன்னு சொல்லமாட்டேன்.
பீட்சாவுக்கு மாவை அரமணிநேரத்துக்கு முன்ன பெசஞ்சிட்டு, ஹ்யுமிடிட்டி பத்தலைன்னு ஏதாச்சும் பேத்த மாட்டேன்.
தமிழ் பண்பாடு, ஹிந்து, கலாச்சாரம் அப்டி இப்டின்னு இஷ்டத்துக்கு புருடா விடாம, போர்க் பிடிக்காது, அதால சாப்டமாட்டேன்னு இங்கிருக்க நண்பர்கள்கிட்ட உண்மையச்சொல்வேன்.
தமிழைத் தமிழா எழுதுவேன்.
கடைக்குப் போனா பிரெஞ்சுத் தெரியாத டூரிஸ்ட் மாதிரியே சீன் போட்டு கடக்காரங்கள சாவடிக்க மாட்டேன்.

அம்மா தேர்தல்ல ஜெயிச்சா என்னென்னமோ வாங்கித் தருவேன்னு சொன்னதை நம்புறவங்க, மேலே சொன்னதையும் நம்பிடனும்.

3)ஆண்டவா, பன்னிக் காய்ச்சல்லருந்து(ஒன்னுக்குள்ள ஒன்னுதான) கூடக் காப்பாத்த வேணாம், ஆனா இந்த நசுங்கின கொசுக்களோட இம்சைலருந்து ஜாமீனாவது வாங்கிக் கொடுன்னு கதறனும் போலருக்கே.

இந்தத் தமிழ்'குடி'தாங்கி ஐ(ஜ)யா தொல்லையத் தாங்க முடியல. இத்தன நாளா தயாநிதி, கலாநிதியப் பாத்து பொதுமக்களுக்கு பாதகமில்லாமப் பொறாமையில பொசுங்கிக்கிட்டுக் கெடந்தாரு. இப்ப என்னடான்னா, முழுசா வேகறத்துக்கு முன்னயே குதிச்சு வந்துட்டு, ஸப்பாஆஆ........

தயாநிதி காப்பி வித்த அனுவோட நிகழ்ச்சியில வந்தா, இவரு போட்டிக்கு புள்ளயாண்டான் கண்ணாலம் கட்டினக் கதைல குடும்பத்தை கோத்துவுடறார். அன்புமணி தனக்கு பால விவாகம் நடந்துட்டதா பொலம்பினது காலக் கொடுமைன்னா, பேட்டி முழுக்க தான் பேசுனதுல தானே டபுள் மீனிங் கண்டுப்பிடிச்சி அதத் திருத்துனதுதான், கொடும இன்பினிட்டி. இதுவரைக்கும் மத்தவங்களைத்தான் இப்டில்லாம் பேசுவாங்க, அப்புறம் எங்கப் புரியாமப் போய்டுமோன்னு திருத்துறாப்டி இன்னும் தெளிவாக்குவாங்க, ஆனா இவரு தன் குடும்பத்துக்கே இப்டி ஆப்படிக்கிறாரே.

4)பொதுவாவே பாராளுமன்றத் தேர்தல்னா, இந்தத் தொழிலதிபருங்க தொல்லையத் தாங்க முடியாது. இந்தவாட்டியும் ஆரூண்லருந்து, சரத்பாபு வரைக்கும் இந்தியாவ வல்லரசாக்குறக் க்யூ நீண்டுக்கிட்டே போகுது. எப்டியோ தமிழ்நாட்ல 'லாட்ரி' அடிக்காம இருந்தா சரி. ஒருவகைல இவங்களையும் பாராட்டனும், தேர்தல் மூலமா பாராளுமன்றம் போக முயற்சி பண்றாங்களே.

5)பழைய தூர்தர்ஷன் நாட்களை எண்ணி ஏக்கம் கொள்பவர்கள், அந்த ஏக்கமே முத்தி, செவ்வாய்க்கிழமை நாடகத்தைக் கூட சிலாகிக்கிறவங்களுக்கு ஒரு நற்செய்தி. ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில், காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் இரண்டரை மணிநேர தூர்தர்ஷன் ஸ்பெஷல் செவ்வாய்க்கிழமை நாடகம் சென்ற மாதம் வெளியிடப்பட்டுள்ளது. நாடகத்தின் பெயர், ஆனந்தத் தாண்டவம். சுஜாதா என்ற எழுத்தாளரை பலதரப்பட்ட சினிமாக் கலைஞர்கள் கூட்டாக இயங்கி பழி தீர்க்கும் கதை.

Sunday 3 May, 2009

வாரணம் ஆயிரம் பார்ட் 2 / மரியாதை

சமீபத்துல ஒருக் கருத்துச் செறிவுள்ளப் படத்தப் பாத்தேன். ஆனாக் கீழே அதோட விமர்சனப் பின்னூட்டங்களப் பாத்தா, அடாசுப் படம் அது இதுன்னு அசிங்க அசிங்கமா திட்டிருந்தாங்க. இப்டி நாக்குப் பிடிங்கிக்கிற மாதிரி திட்டினவங்களை நெஜமாவே அந்தப் படத்தோட ஹீரோ முன்னாடி நிக்க வெச்சி, அவரு நாக்குத் துறுத்தி முழிய உருட்டுறத குளோசப்புல பாக்க வெச்சி ஜன்னி வரவெச்சா சரியாப் போயிடும்.

வாரணம் ஆயிரம் படத்தையே கொஞ்சம் நம்புற மாதிரி, வசனத்தை தமிழ்ல வெச்சு, காப்பியடிக்கவே அவசியமில்லாத கண்றாவியான பாட்டுகளோட, (வாரணம் ஆயிரம்)படத்தோட டைரடக்கரே படத்துக்கு வில்லனான மாதிரியில்லாம, (ஆனா கவுதம மாதிரியே) சப்பையான வில்லன் கேரக்டர வெச்சு என்னமா எடுத்திருக்காங்க, பேருக்கேத்தாப்ல இப்டியொரு மரியாதையான படத்தை மானங்கெட்ட படம்னெல்லாம் திட்டறது சரியில்லைங்கறேன்.

அதுல எப்டி அப்பா சூர்யா, புள்ள சூர்யாவை தன் போக்குல விட்டு வளத்து, தீவிரவியாதிகளயெல்லாம் கொன்னு ஒசாமா பின் லேடனுக்கே சவால் விட்டிருவாரோன்னு யோசனை பண்ண வெச்சாப்ல, இதுலயும் gaptain தன் புள்ளைய சூட்டிகையா வளத்து , சொத்தை தாரவாக்க வெச்சு, ஊர் பணத்துல கிரீன் ஹவுஸ் அமைச்சு, பத்து லச்சம் வெச்சிருக்கவங்கல்லாம் பசுமைப் புரட்சியப் பண்ணனும்னு கருத்து சொல்றார்.

என்னத்த பெருசா சூர்யா சிக்ஸ் பேக் வெச்சுட்டாரு, ஸ்கூல் பேக் தூக்கிட்டாருன்னு பீத்தறாங்க, இதுல பாருங்க நம்ம gaptainனோட ரெண்டு கன்னத்துலருந்தும் தொங்குற சதையயே, பசங்க ஆலமர விழுதுக்குப் பதிலா இழுத்து புடிச்சு தொங்கி வெள்ளாடலாம். நாங்க சின்ன வயசுல கோதுமை மாவை உருண்டையாக்கி கூரை மேல அடிச்சு, அது கொஞ்சம் கொஞ்சமா தொங்கி கீழே விழுறதைப் பாத்து அதிசயப்பட்டு கூத்தடிப்போம். இந்தப் படத்துல குறிப்பிட்டு சொல்ற அம்சமா, இவரு கன்ன சதை கூரைலருந்து விழுற மாவுருண்டயாட்டமே இருக்குறது சூப்பரா இருக்கு.

என்னமோ மாசக் கணக்கா பட்டினிக் கெடந்தாராம் சூர்யா, அப்பா புள்ளன்னு வித்தியாசம் காட்டறத்துக்கு. இதுல gaptain தன் மீசை அடர்த்திய வெச்சும், வாய்ஸ் மாடுலேஷன வெச்சும் ஒரு வித்தியாசத்தைக் காட்டிருக்கார் பாருங்க யப்பா !!!

ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் எந்தவித ஏற்றத்தாழ்வும் காட்டக்கூடாதுன்னு பிரம்மப் பிரயத்தனப்பட்டு, மீரா ஜாஸ்மின், மீனாவயெல்லாம் தன்னை விட ஜாஸ்தி புஜப்பலப் பராக்கிரமத்தோட காட்டிருக்கார். நாய கல்லால அடிச்சுக் கொல்னும்னா, அதுக்கு வெறி பிடிச்சிருச்சின்னு சொல்வாங்கல்ல, அதுமாதிரி விக்ரமன் படத்துல அட்டு ஹீரோவ, உதாசீனப்படுத்தி கிளைமேக்ஸ்ல திருந்துற ரோலை ஒரு மார்க்கெட் போன ஹீரோயின் செஞ்சா, அதுதான் அவங்க கலைச்சேவைக்கு சங்குன்னு பிரியா ராமன், வினிதா வரிசையில் மீனா உறுதிப்படுத்திருக்காங்க.

அதுல அஞ்சல பாட்டுக்கு என்னாத்துக்கு அவ்ளோ நல்ல பேருன்னு புர்ல. இந்தப் படத்துல மீனாப் பாடறப்போ ஆடறதாகட்டும், அப்புறம் மீரா ஜாஸ்மினோட டூயட்டாகட்டும் ஸ்பாஅஆ , கடவுள் நம்பிக்கை இல்லாதவங்களுக்கு கடவுள் நம்பிக்கையும், விஞ்ஞானத்தை நம்பாதவங்களுக்கு விஞ்ஞானத்துலையும் நம்பிக்கைப் பொங்கும்.

அதுல எப்டி ஒரே பாட்டுல சூர்யா, பிரெண்டோட புராஜக்டை வெச்சு, பணம் சம்பாதிச்சு, கடன் தீர்த்து, வீட்டைக் கட்டி, பாட்டுப் பாடி காம்படிஷனும் ஜெயிச்சு, அமெரிக்கா போறாரோ, அதுப் போலவே இதுலயும் gaptain செய்றார். என்ன, கவுதமால இங்கிலிபீசுல தான் சிந்திக்க முடியும், சனியன் புடிச்ச தமிழ்ல ஒன்னியும் வெளிப்படுத்த முடியாததுனால அதை தம்மாத்தூண்டுக் கூட என்னாதுன்னு சொல்லலை. இதுல அகிலாண்ட நாயகனுக்குப் போட்டியா, இனிவரும் காலங்களில், gaptain டப் பைட் கொடுக்கணும்னு, திட்டத்தையும், அதுக்கான முதலீடு கெடச்ச விதத்தையும் வெளக்குமாறால வெளுத்தெடுக்குற மாதிரி வெளக்குறாங்க.

நம்மள பதைபதைக்க வெக்குற திருப்புமுனயானக் கதாப்பாத்திரத்துல குண்டான் கணக்கா மெரட்டிருக்காங்க மீனா. மீரா ஜாஸ்மின் இந்தப் படத்துக்கப்புறம், சமீபத்துல நடிக்க வந்திருக்க அவங்க அக்காவுக்கு செமப் போட்டியா இருப்பாங்கன்னு நெனைக்கிறேன். இப்டி வித்தியாசமா தேர்ந்தெடுத்து நடிச்சாதான் அம்பிகாவாட்டம் சீக்கிரம் ஆக முடியும்.

அதுல சூர்யா காதலை சென்னைலையும் அமெரிக்காலயும் வெளிப்படுத்தின விதத்தைப் போய், க்யூட்டா இருக்கு அது இதுன்னு, இஷ்டத்துக்கு அள்ளிவிட்டவங்க, இதுல ராஜ் டிவிக்கே போய் gaptain துறுதுறுன்னு துருப்பிடிச்ச இரும்புக் கணக்கா காதலை வெளிப்படுத்தறார் பாருங்க.

டைரெக்டர் விக்ரமன், காலேஜ்ல தலைவாசல் விஜயோட சீனியர்னு நெனைக்கிறேன். ஆனா இந்தப் படத்துக்கப்புறமாவது விஜயை ராகிங் பண்றதை விக்ரமன் நிறுத்திடனும்.

மீனா - சம்பத் நிச்சயத்தை gaptain நிறுத்துற காட்சியில இருக்க லாஜிக் இருக்கே, தெய்வமேன்னு கதறனும் போலிருக்கும். அதுல சூர்யா நெனச்சவுடன் ஆர்மில சேர்ந்து அப்டியே உயர உயரப் போகுற லாஜிக்குக்கே போட்டி.

படத்துல வர்ற காதல் காட்சிகள், ரமேஷ் கண்ணாவின் காட்சிகளுக்குக் கடும் சவால். ஒரு சொலவடை இருக்குல்ல, சீப்பை ஒளிச்சு வெச்சிட்டா கல்யாணம் நின்னிடுமான்னு, ஆனா எனக்கொரு தீவிர சந்தேகம். குமுதம், விகடன் மாதிரியான பத்திரிக்கைகள்ல இருக்கிற ஜோக்கெல்லாம் திடீர்னு மறைஞ்சிட்டா, விக்ரமன் படமெடுக்கிறதயே நிறுத்திடுவாரோன்னு.

இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு, கோவம், அதிர்ச்சி, காதல்/நகைச்சுவைன்னு எந்த நிலையிலையும் தன் உணர்ச்சியைக் காட்டிக்காம, காசியில மப்புல திரிவாங்களாமே ஞானிங்க, அது மாதிரியே, ஒரே வித முகபாவத்தோட எல்லா சவால்களையும் சந்திக்கிற gaptain முத்தலமைச்சரானா, நமக்கெல்லாம் எம்புட்டு பெரிய விடிவுகாலம் மற்றும் அதிர்ஷ்டம் பாருங்க.

இவ்ளோத்துக்கப்புறம் இதையும் forrest gump தழுவல்னு மானசாட்சயில்லாம பொரளிக் கெளப்புனாக்கா, ஒன்னு tom hanks லெட்டரெழுதி வெச்சிட்டு தூக்கு மாட்டிப்பாராம், இல்லைன்னா Angels & Demons படத்துக்கு ரிலீசப்போ அண்டசராசர நாயகன் டி.ஆரோடவும் அவர் புள்ளயோடவும் பாக்கறத்துக்கு டிக்கட் ரிசர்வ் பண்ணிடுவாராம். இதை வாரணம் ஆயிரத்தை தன் படத்தோட தழுவல்னு சொன்னதக் கேட்டு கொலவெறியோட திரியுற forrest gump பட இயக்குனர் சொன்னதா சமீபத்துல என்டிடிவில சொன்னாங்க(இப்போல்லாம் நாம அவங்க சொல்ற கேனத்தனமான செய்திகளத்தானப் பாத்து தான புளகாங்கிதப்படுறோம்).