Wednesday, 6 May, 2009

பொது அறிவுத் தகவல்கள்

1) பாக்யராஜோட சின்னவீடு படம் பாத்தவங்க, அதுல கல்பனா தம்பியா வர்ற அமுல் பேபி, சக்கி என்ற சக்கரவர்த்திய ஞாபகம் வெச்சிருக்கீங்களா? அவருதான இப்போ கமலோட உன்னைப்போல ஒருவன் பட இயக்குனர்?

2) நம்ம வக்கீலுங்கத் தொரத்தி தொரத்தி ஒதைச்சும், இந்த என்டிடிவிக்காரங்களுக்கு நக்கலு கொறயல. நமக்கும் வேணும், செரங்குப் பிடிச்ச கொரங்குக்கு சீப்பால வைத்தியம் பாத்தாப்ல, அவங்க கம்முன்னு அம்பானி, டாட்டா மாதிரி தேசத்தந்தைகளுக்கு இந்த நாடு என்ன செஞ்சிருக்குன்னு அக்கறையா, ஆதங்கமா செய்திகளைப் போட்டுக்கிட்டு இருக்கும்போது, 'நீ ஏன் அத்த காட்ல, நீ ஏன் இத்தக் கிழிக்கலன்னு' கொரலு விட்டுக்கிட்டிருந்தோம், இப்ப என்னடான்னா, அவங்க 'இன்னைக்கு செத்தா நாளைக்குப் பாலாம்ல'ன்னு சீதை கணவருக்குப் போட்டியா கடுப்பேத்துறாங்க. பேசாம, நான் அடுத்த பிளைட்ல வந்து, ஒரு நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு சாவடிச்சாத்தான் சரியா வரும்போல.
வடஇந்திய மீடியாக்காரங்கதான், டக்கின் பண்ண டாபர்னு தெரியும்ல, அப்புறம் என்னாத்துக்கு, இவங்கெல்லாம் அங்கப்போய் விவாதத்துல பங்கேற்குறாங்க. என்னைய மாதிரி வெட்டியானவங்கதான் அங்க போய் உக்காந்து சாம்பார் செய்யும் ரெசிப்பியை கத்துக்கிட்டோம்னா, இவங்களுமா? இட ஒதுக்கீடுலருந்து எல்லாத்துலயும் ஒரு முன்முடிவோட வந்து ஒக்காந்துக்கிட்டு, அம்பேத்கரே வந்தாலும் மைக்கால மூக்கை ஒடைக்கப் பாக்குறவங்களாச்சே, தெரிஞ்சுமா போகணும்?
விவாதத்துலப் பங்கேற்க கே.எஸ்.இராதாகிருஷ்ணன் மாதிரி ஆட்கள் இல்லைன்னா, போகாம இருக்கிறது நல்லது.
சரி போறவங்களாவது இனிமேட்டெல்லாம், இந்த அண்டப்புளுகு ஆகாசப்புளுகு கோச்சிங்குக்கு கோவப்படாமப் பேச டோப்படிச்சிட்டு போனாத்தான் உண்டுன்னு பொது அறிவோட இருக்காங்களான்னா, அதுவும் இல்லை.
பப்பு யாதவ் கிட்டப் போய் பம்மிப்பதுங்கி ஹிந்தில பேசுறது, ஆனா, நம்மூர்ல கொஞ்சூண்டு ஆங்கிலப் புலமை கொறஞ்சாப்டி தெரிஞ்சிச்சுன்னா அவங்கள ஓட்டுறது.
ஜெயந்தி நடராஜன் கிட்ட ஒரு சந்தேகம் கேக்கணும், 'நீங்க கடைசியா ஒருத்தர்கிட்ட சொன்ன அதே வரியை வடக்குல யார்கிட்டயாவது சொல்வீங்களாமா'ன்னு?
இந்தத் 'தாய் மண்ணே வணக்கம்' கோஷ்டிங்க இம்சை வேற இந்த விவாதங்கள்ல தாங்க முடியல, என் சமையல நானே சாப்டறத விடக் கொடுமையா இருக்கு.
விவாத நாயகர்களில், ரெண்டு மூணு பேர் டார்ச்சராகி,'நீ இங்க சொகமா ஒக்காந்திட்டு பேசக்கூடாதுன்னு' சொல்றது தேவையில்லாததுன்னு தோனுது. களத்துல இருக்கவங்களத் தவிர மத்தவங்கல்லாம் அக்கறைப்பட்டாலும் சொகமாத்தான இருக்கோம்.

3) நம்மூர்ல சன் டிவி, கலைஞர் டிவிக்கே காண்டாவுறவங்க, இத்தாலிக்குப் போனா செமக் காமடியாயிருக்கும்னு நெனைக்கிறேன். காரணம் அவங்க பிரதமர்னு புரிஞ்சிக்கிட்டிருப்பீங்க. யப்பா, அநியாயத்துக்கு அவரு தொட்டதெல்லாம் (உயிருள்ளதோ/ஜடமோ) அவருக்கே சொந்தம்ங்கற ரேஞ்சுல ஒரே ஜாலிதான். நம்ம அம்மா விடுற அறிக்கைகளுக்கு டப் கொடுக்கக் கூடிய செமத் தெறமசாலி அவரு. அந்த பூகம்பம் வந்தப்போ, நாங்க ரோம்ல தான் இருந்தோம்(நான் அப்போ டான்ஸ் பிராக்டீஸ் பண்ணல, எனக்கும் அதுக்கும் தொடர்பில்ல). நான் கூட கட்டில் அந்த ஆட்டம் ஆடுன ஒடனே, ஆர்.சி.சக்தி பட காதல் காட்சிதான் கனவுல வந்திருச்சோன்னு நெனச்சிக்கிட்டிருந்தேன், பாத்தா பூகம்பம். அதுக்கு தல விட்ட அறிக்கை இருக்கே, சூப்பர். ஆனா, ஒரு வகைல அது உண்மையும் கூட. இங்கெல்லாம் நெறயப்பேர் கேம்பிங் போறேன் பேர்விழின்னு, விடுமுறைக் காலங்களில் இப்டித்தான் படாதபாடுப்படுத்திக்கிட்டும், பட்டுகிட்டும் இருப்பாங்க.

4) ஒய்.ஜி.மகேந்திரன் இன்னும் இதே மாதிரி காமடியா தொகுத்து வழங்கறேன் பேர்விழின்னு மொக்கை போட்டுக்கிட்டிருந்தா, பேசாம தேசியப் பாதுகாப்புச் சட்டத்துல தூக்கி உள்ள போட்டிறனும், விட்டா நான் டாக்குடரு.வி.ஜி.சந்தோஷத்தோட ('பல்லாக்கு தூக்கினவன் பல் டாக்டர்னா, புல்லு புடிங்கினவன் புல் டாகா'ங்குற என் கவுஜைக்கே டப் கொடுக்கக் கூடிய தெறமசாலி)கவுஜைகளயே படிச்சிடுவேன் போலருக்கு.

5) குங்குமப்பூவும் கொஞ்சும்புராவும் படத்து ஹீரோதான, ஸ்னேஹாவுக்கு, வாய்ல சுளுக்கு வரவெச்ச, ஏப்ரல் மாதத்தில் அப்டின்ற படத்துல, கூழாங்கல்லை முழுங்கின ஸ்ரீகாந்துக்கு நண்பனா வந்து, எக்ஸ்பிரஷனக் காட்டி கொழந்தைங்கள பப்பு மம்மம் சாப்ட வெச்சவரு?(மத்த டீட்டெயில்சை உறுதிப்படுத்துற சூட்டிகையும், பொதுஅறிவும் இல்லாட்டியும் , அதுல நடிச்சவர்தானான்னு மட்டுமாச்சும் யாராவது சொல்லுங்க)

23 comments:

சென்ஷி said...

செம்ம கலக்கல் ரீஎண்ட்ரி :-))

மீ த ஃபஷ்டுதானே நான்!

சென்ஷி said...

/ஜெயந்தி நடராஜன் கிட்ட ஒரு சந்தேகம் கேக்கணும், 'நீங்க கடைசியா ஒருத்தர்கிட்ட சொன்ன அதே வரியை வடக்குல யார்கிட்டயாவது சொல்வீங்களாமா'ன்னு?
இந்தத் 'தாய் மண்ணே வணக்கம்' கோஷ்டிங்க இம்சை வேற இந்த விவாதங்கள்ல தாங்க முடியல, என் சமையல நானே சாப்டறத விடக் கொடுமையா இருக்கு.
விவாத நாயகர்களில், ரெண்டு மூணு பேர் டார்ச்சராகி,'நீ இங்க சொகமா ஒக்காந்திட்டு பேசக்கூடாதுன்னு' சொல்றது தேவையில்லாததுன்னு தோனுது. களத்துல இருக்கவங்களத் தவிர மத்தவங்கல்லாம் அக்கறைப்பட்டாலும் சொகமாத்தான இருக்கோம்.///

ROTFL :-))))

சென்ஷி said...

கவுஜை ரசிகர்களுக்காக உங்களோட ஃபேவரைட் கவுஜை என்னாச்சு???

அடுத்த பதிவிலாவது கண்டிப்பாய் கவுஜை மழையை எதிர்பார்க்கின்றோம் :)

ஆயில்யன் said...

மீ த நாலு :)

ஆயில்யன் said...

/(நான் அப்போ டான்ஸ் பிராக்டீஸ் பண்ணல, எனக்கும் அதுக்கும் தொடர்பில்ல).//


நம்பிட்டோம் !

நம்பிட்டோம்!!

சென்ஷி said...

//பாக்யராஜோட சின்னவீடு படம் பாத்தவங்க, அதுல கல்பனா தம்பியா வர்ற அமுல் பேபி, சக்கி என்ற சக்கரவர்த்திய ஞாபகம் வெச்சிருக்கீங்களா? அவருதான இப்போ கமலோட உன்னைப்போல ஒருவன் பட இயக்குனர்?//

அவரோட கேர்ள் பிரண்ட்ஸ் கூப்பிடுற "பம்ப்ளிமாஸ்" பட்டப்பெயரை எழுதாமல் விட்டதற்கு அவருடைய ரசிகர் மன்றம் சார்பாயும் கண்டனங்கள்!

ஆயில்யன் said...

அவ்வப்போது எண்ட்ரீ கொடுத்து இது போன்ற அறிவார்ந்த தகவல்களினை பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்!
:)

ஆயில்யன் said...

//சென்ஷி said...

//பாக்யராஜோட சின்னவீடு படம் பாத்தவங்க, அதுல கல்பனா தம்பியா வர்ற அமுல் பேபி, சக்கி என்ற சக்கரவர்த்திய ஞாபகம் வெச்சிருக்கீங்களா? அவருதான இப்போ கமலோட உன்னைப்போல ஒருவன் பட இயக்குனர்?//

அவரோட கேர்ள் பிரண்ட்ஸ் கூப்பிடுற "பம்ப்ளிமாஸ்" பட்டப்பெயரை எழுதாமல் விட்டதற்கு அவருடைய ரசிகர் மன்றம் சார்பாயும் கண்டனங்கள்!///

அண்ணே அந்த காலத்து பார்ட்டீ நல்லா ஞாபகத்துல வைச்சிருக்கு ! :)

சென்ஷி said...

//பேசாம, நான் அடுத்த பிளைட்ல வந்து, ஒரு நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு சாவடிச்சாத்தான் சரியா வரும்போல.//

தப்பா டைப் அடிச்சுட்டீங்க...

நான் அடுத்த பிளைட்ல வந்து, ஒரு நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு "பேசாம" சாவடிச்சாத்தான் சரியா வரும்போல.

சென்ஷி said...

/ஆயில்யன் said...

அவ்வப்போது எண்ட்ரீ கொடுத்து இது போன்ற அறிவார்ந்த தகவல்களினை பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்!
:)//

ரிப்பீட்டே :)

சென்ஷி said...

// ஆயில்யன் said...

//சென்ஷி said...

//பாக்யராஜோட சின்னவீடு படம் பாத்தவங்க, அதுல கல்பனா தம்பியா வர்ற அமுல் பேபி, சக்கி என்ற சக்கரவர்த்திய ஞாபகம் வெச்சிருக்கீங்களா? அவருதான இப்போ கமலோட உன்னைப்போல ஒருவன் பட இயக்குனர்?//

அவரோட கேர்ள் பிரண்ட்ஸ் கூப்பிடுற "பம்ப்ளிமாஸ்" பட்டப்பெயரை எழுதாமல் விட்டதற்கு அவருடைய ரசிகர் மன்றம் சார்பாயும் கண்டனங்கள்!///

அண்ணே அந்த காலத்து பார்ட்டீ நல்லா ஞாபகத்துல வைச்சிருக்கு ! :)//

கண்ணா. அது என் ஃபேவரைட் படத்துல ஒண்ணு. தப்பா நினைக்கப்படாது

ஆயில்யன் said...

//கண்ணா. அது என் ஃபேவரைட் படத்துல ஒண்ணு. தப்பா நினைக்கப்படாது/

நினைக்கல

நினைக்கமாட்டேன் இனி

நினைச்சதை அழிச்சுப்புடறேன்!

கோபிநாத் said...

\பாக்யராஜோட சின்னவீடு படம் பாத்தவங்க, அதுல கல்பனா தம்பியா வர்ற அமுல் பேபி, சக்கி என்ற சக்கரவர்த்திய ஞாபகம் வெச்சிருக்கீங்களா? அவருதான இப்போ கமலோட உன்னைப்போல ஒருவன் பட இயக்குனர்?\\\

இவரை தசாவதராத்தில கூட கமலே பிரண்டாக (அந்த கொரியர் அனுப்பும் போது) வந்திருப்பார்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கொஞ்சமும் பொது அறிவு இல்லை போல எனக்கு :(

ராஜ நடராஜன் said...

மறுபடியும் மறுபடியும் வந்துட்டீகளா!வாழ்த்துக்கள்.

நான் ஆதவன் said...

நான் கொஞ்சம் வீக்கு...பொது அறிவுல :)

வால்பையன் said...

தகவல்களெல்லாம் பட்டய கிளப்புதே!

எங்கேயும் me the first அ பார்க்கமுடிவதில்லையே?

ஆதிமூலகிருஷ்ணன் said...

செம்ம டாப்பு.. அதுவும் குறிப்பா 4.!

நசரேயன் said...

எல்லாமே கலக்கல்.. அடிகடி இப்படி எங்களுக்கு தகவல் கொடுங்க

முரளிகண்ணன் said...

அசத்தல் நடை மற்றும் உவமானங்கள். இன்னும் நிறைய எதிர்பார்த்து

மங்களூர் சிவா said...

/
அந்த பூகம்பம் வந்தப்போ, நாங்க ரோம்ல தான் இருந்தோம்(நான் அப்போ டான்ஸ் பிராக்டீஸ் பண்ணல, எனக்கும் அதுக்கும் தொடர்பில்ல)
/

OK OK
:))

பாலராஜன்கீதா said...

//அதுக்கு தல விட்ட அறிக்கை இருக்கே, சூப்பர்.//
அறிக்கையில் என்ன சொல்லியிருந்தாருங்க ? சுட்டி ஏதேனும் கிடைக்குமா ?

வித்யா said...

நடத்துங்க மேடம்.