சமீபத்துல ஒருக் கருத்துச் செறிவுள்ளப் படத்தப் பாத்தேன். ஆனாக் கீழே அதோட விமர்சனப் பின்னூட்டங்களப் பாத்தா, அடாசுப் படம் அது இதுன்னு அசிங்க அசிங்கமா திட்டிருந்தாங்க. இப்டி நாக்குப் பிடிங்கிக்கிற மாதிரி திட்டினவங்களை நெஜமாவே அந்தப் படத்தோட ஹீரோ முன்னாடி நிக்க வெச்சி, அவரு நாக்குத் துறுத்தி முழிய உருட்டுறத குளோசப்புல பாக்க வெச்சி ஜன்னி வரவெச்சா சரியாப் போயிடும்.
வாரணம் ஆயிரம் படத்தையே கொஞ்சம் நம்புற மாதிரி, வசனத்தை தமிழ்ல வெச்சு, காப்பியடிக்கவே அவசியமில்லாத கண்றாவியான பாட்டுகளோட, (வாரணம் ஆயிரம்)படத்தோட டைரடக்கரே படத்துக்கு வில்லனான மாதிரியில்லாம, (ஆனா கவுதம மாதிரியே) சப்பையான வில்லன் கேரக்டர வெச்சு என்னமா எடுத்திருக்காங்க, பேருக்கேத்தாப்ல இப்டியொரு மரியாதையான படத்தை மானங்கெட்ட படம்னெல்லாம் திட்டறது சரியில்லைங்கறேன்.
அதுல எப்டி அப்பா சூர்யா, புள்ள சூர்யாவை தன் போக்குல விட்டு வளத்து, தீவிரவியாதிகளயெல்லாம் கொன்னு ஒசாமா பின் லேடனுக்கே சவால் விட்டிருவாரோன்னு யோசனை பண்ண வெச்சாப்ல, இதுலயும் gaptain தன் புள்ளைய சூட்டிகையா வளத்து , சொத்தை தாரவாக்க வெச்சு, ஊர் பணத்துல கிரீன் ஹவுஸ் அமைச்சு, பத்து லச்சம் வெச்சிருக்கவங்கல்லாம் பசுமைப் புரட்சியப் பண்ணனும்னு கருத்து சொல்றார்.
என்னத்த பெருசா சூர்யா சிக்ஸ் பேக் வெச்சுட்டாரு, ஸ்கூல் பேக் தூக்கிட்டாருன்னு பீத்தறாங்க, இதுல பாருங்க நம்ம gaptainனோட ரெண்டு கன்னத்துலருந்தும் தொங்குற சதையயே, பசங்க ஆலமர விழுதுக்குப் பதிலா இழுத்து புடிச்சு தொங்கி வெள்ளாடலாம். நாங்க சின்ன வயசுல கோதுமை மாவை உருண்டையாக்கி கூரை மேல அடிச்சு, அது கொஞ்சம் கொஞ்சமா தொங்கி கீழே விழுறதைப் பாத்து அதிசயப்பட்டு கூத்தடிப்போம். இந்தப் படத்துல குறிப்பிட்டு சொல்ற அம்சமா, இவரு கன்ன சதை கூரைலருந்து விழுற மாவுருண்டயாட்டமே இருக்குறது சூப்பரா இருக்கு.
என்னமோ மாசக் கணக்கா பட்டினிக் கெடந்தாராம் சூர்யா, அப்பா புள்ளன்னு வித்தியாசம் காட்டறத்துக்கு. இதுல gaptain தன் மீசை அடர்த்திய வெச்சும், வாய்ஸ் மாடுலேஷன வெச்சும் ஒரு வித்தியாசத்தைக் காட்டிருக்கார் பாருங்க யப்பா !!!
ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் எந்தவித ஏற்றத்தாழ்வும் காட்டக்கூடாதுன்னு பிரம்மப் பிரயத்தனப்பட்டு, மீரா ஜாஸ்மின், மீனாவயெல்லாம் தன்னை விட ஜாஸ்தி புஜப்பலப் பராக்கிரமத்தோட காட்டிருக்கார். நாய கல்லால அடிச்சுக் கொல்னும்னா, அதுக்கு வெறி பிடிச்சிருச்சின்னு சொல்வாங்கல்ல, அதுமாதிரி விக்ரமன் படத்துல அட்டு ஹீரோவ, உதாசீனப்படுத்தி கிளைமேக்ஸ்ல திருந்துற ரோலை ஒரு மார்க்கெட் போன ஹீரோயின் செஞ்சா, அதுதான் அவங்க கலைச்சேவைக்கு சங்குன்னு பிரியா ராமன், வினிதா வரிசையில் மீனா உறுதிப்படுத்திருக்காங்க.
அதுல அஞ்சல பாட்டுக்கு என்னாத்துக்கு அவ்ளோ நல்ல பேருன்னு புர்ல. இந்தப் படத்துல மீனாப் பாடறப்போ ஆடறதாகட்டும், அப்புறம் மீரா ஜாஸ்மினோட டூயட்டாகட்டும் ஸ்பாஅஆ , கடவுள் நம்பிக்கை இல்லாதவங்களுக்கு கடவுள் நம்பிக்கையும், விஞ்ஞானத்தை நம்பாதவங்களுக்கு விஞ்ஞானத்துலையும் நம்பிக்கைப் பொங்கும்.
அதுல எப்டி ஒரே பாட்டுல சூர்யா, பிரெண்டோட புராஜக்டை வெச்சு, பணம் சம்பாதிச்சு, கடன் தீர்த்து, வீட்டைக் கட்டி, பாட்டுப் பாடி காம்படிஷனும் ஜெயிச்சு, அமெரிக்கா போறாரோ, அதுப் போலவே இதுலயும் gaptain செய்றார். என்ன, கவுதமால இங்கிலிபீசுல தான் சிந்திக்க முடியும், சனியன் புடிச்ச தமிழ்ல ஒன்னியும் வெளிப்படுத்த முடியாததுனால அதை தம்மாத்தூண்டுக் கூட என்னாதுன்னு சொல்லலை. இதுல அகிலாண்ட நாயகனுக்குப் போட்டியா, இனிவரும் காலங்களில், gaptain டப் பைட் கொடுக்கணும்னு, திட்டத்தையும், அதுக்கான முதலீடு கெடச்ச விதத்தையும் வெளக்குமாறால வெளுத்தெடுக்குற மாதிரி வெளக்குறாங்க.
நம்மள பதைபதைக்க வெக்குற திருப்புமுனயானக் கதாப்பாத்திரத்துல குண்டான் கணக்கா மெரட்டிருக்காங்க மீனா. மீரா ஜாஸ்மின் இந்தப் படத்துக்கப்புறம், சமீபத்துல நடிக்க வந்திருக்க அவங்க அக்காவுக்கு செமப் போட்டியா இருப்பாங்கன்னு நெனைக்கிறேன். இப்டி வித்தியாசமா தேர்ந்தெடுத்து நடிச்சாதான் அம்பிகாவாட்டம் சீக்கிரம் ஆக முடியும்.
அதுல சூர்யா காதலை சென்னைலையும் அமெரிக்காலயும் வெளிப்படுத்தின விதத்தைப் போய், க்யூட்டா இருக்கு அது இதுன்னு, இஷ்டத்துக்கு அள்ளிவிட்டவங்க, இதுல ராஜ் டிவிக்கே போய் gaptain துறுதுறுன்னு துருப்பிடிச்ச இரும்புக் கணக்கா காதலை வெளிப்படுத்தறார் பாருங்க.
டைரெக்டர் விக்ரமன், காலேஜ்ல தலைவாசல் விஜயோட சீனியர்னு நெனைக்கிறேன். ஆனா இந்தப் படத்துக்கப்புறமாவது விஜயை ராகிங் பண்றதை விக்ரமன் நிறுத்திடனும்.
மீனா - சம்பத் நிச்சயத்தை gaptain நிறுத்துற காட்சியில இருக்க லாஜிக் இருக்கே, தெய்வமேன்னு கதறனும் போலிருக்கும். அதுல சூர்யா நெனச்சவுடன் ஆர்மில சேர்ந்து அப்டியே உயர உயரப் போகுற லாஜிக்குக்கே போட்டி.
படத்துல வர்ற காதல் காட்சிகள், ரமேஷ் கண்ணாவின் காட்சிகளுக்குக் கடும் சவால். ஒரு சொலவடை இருக்குல்ல, சீப்பை ஒளிச்சு வெச்சிட்டா கல்யாணம் நின்னிடுமான்னு, ஆனா எனக்கொரு தீவிர சந்தேகம். குமுதம், விகடன் மாதிரியான பத்திரிக்கைகள்ல இருக்கிற ஜோக்கெல்லாம் திடீர்னு மறைஞ்சிட்டா, விக்ரமன் படமெடுக்கிறதயே நிறுத்திடுவாரோன்னு.
இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு, கோவம், அதிர்ச்சி, காதல்/நகைச்சுவைன்னு எந்த நிலையிலையும் தன் உணர்ச்சியைக் காட்டிக்காம, காசியில மப்புல திரிவாங்களாமே ஞானிங்க, அது மாதிரியே, ஒரே வித முகபாவத்தோட எல்லா சவால்களையும் சந்திக்கிற gaptain முத்தலமைச்சரானா, நமக்கெல்லாம் எம்புட்டு பெரிய விடிவுகாலம் மற்றும் அதிர்ஷ்டம் பாருங்க.
இவ்ளோத்துக்கப்புறம் இதையும் forrest gump தழுவல்னு மானசாட்சயில்லாம பொரளிக் கெளப்புனாக்கா, ஒன்னு tom hanks லெட்டரெழுதி வெச்சிட்டு தூக்கு மாட்டிப்பாராம், இல்லைன்னா Angels & Demons படத்துக்கு ரிலீசப்போ அண்டசராசர நாயகன் டி.ஆரோடவும் அவர் புள்ளயோடவும் பாக்கறத்துக்கு டிக்கட் ரிசர்வ் பண்ணிடுவாராம். இதை வாரணம் ஆயிரத்தை தன் படத்தோட தழுவல்னு சொன்னதக் கேட்டு கொலவெறியோட திரியுற forrest gump பட இயக்குனர் சொன்னதா சமீபத்துல என்டிடிவில சொன்னாங்க(இப்போல்லாம் நாம அவங்க சொல்ற கேனத்தனமான செய்திகளத்தானப் பாத்து தான புளகாங்கிதப்படுறோம்).
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
ராப்..ROTFL!
/அதுல அஞ்சல பாட்டுக்கு என்னாத்துக்கு அவ்ளோ நல்ல பேருன்னு புர்ல. இந்தப் படத்துல மீனாப் பாடறப்போ ஆடறதாகட்டும், அப்புறம் மீரா ஜாஸ்மினோட டூயட்டாகட்டும் ஸ்பாஅஆ , கடவுள் நம்பிக்கை இல்லாதவங்களுக்கு கடவுள் நம்பிக்கையும், விஞ்ஞானத்தை நம்பாதவங்களுக்கு விஞ்ஞானத்துலையும் நம்பிக்கைப் பொங்கும்.//
:-))))) சிரிச்சுக்கிட்டே இருக்கேன்....
லேபிள்..:-))))
செம லேபிள்..சான்ஸே இல்ல..!
லேபில் சூப்பர்:))
ஸ்ஸப்பா ரெண்டு தனி பதிவா எழுதப்பிடாதா??
படிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆவுது
:)
லேபில் ஜூப்பரு!
:-))))
சூப்பருருரு..
யக்காவ் லேபிளுக்காக உட்காந்து யோசிப்பீங்களோ?? கலக்கல் :))
// நாங்க சின்ன வயசுல கோதுமை மாவை உருண்டையாக்கி கூரை மேல அடிச்சு, அது கொஞ்சம் கொஞ்சமா தொங்கி கீழே விழுறதைப் பாத்து அதிசயப்பட்டு கூத்தடிப்போம். இந்தப் படத்துல குறிப்பிட்டு சொல்ற அம்சமா, இவரு கன்ன சதை கூரைலருந்து விழுற மாவுருண்டயாட்டமே இருக்குறது சூப்பரா இருக் //
என் வீட்டில் எல்லோர்கிட்டயும் படிச்சு சொல்லி சிரிச்சுட்டே இருக்கோம். லேபில் ரொம்ப சூப்பர். .
அக்கா.., ரொம்ப நல்லா யோசிச்சு இருக்கீங்க...
உங்கள மாதிரியே இந்த இடத்திலயும் யோசிக்கறாங்க. படிச்சிட்டு பாராட்டிட்டு வாங்க
:-))))
இருந்தாலும் மீரா சாஸ்மினை பத்தி ஒரு வார்த்த கூட சொல்லலியேக்கா நீயி!
லேபிள் அட்டகாசம்!!!
அத ரண களப் படுத்திட்டீங்க :-))
ராப் பின்னி பெடலெடுத்திட்டீங்க.
வரிக்கு வரி செம லந்து. லேபிளையும் விட்டு வைக்கிறதில்ல போலிருக்கே.
:)எப்படில்லாம் இருக்கும்ன்னு நானே ஒரு கற்பனை செய்திருந்தேன் படம் போஸ்டர் பாத்தே.. இனி அதைக்கூட பாக்க பயம்மா இருக்கும்போலயே..
\\\இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு, கோவம், அதிர்ச்சி, காதல்/நகைச்சுவைன்னு எந்த நிலையிலையும் தன் உணர்ச்சியைக் காட்டிக்காம, காசியில மப்புல திரிவாங்களாமே ஞானிங்க, அது மாதிரியே,\\
கலக்கல் தாயி..கலக்கல்..
வூடு கட்டி அடிக்கிறீங்க !!!!!!!!!
எங்க gaப்டன் முதலமைச்சரா வந்து உங்களை ரவுண்டு கட்டப் போறாரு,ஆமா...
பதிவை விடுங்க...லேபிள் தான் அட்டகாசம்க்கா ;))
rapp rocks...
சான்சே இல்லை
செம காமெடி!
ஆனாலும் உங்களுக்கு தெகரியம் ஜாஸ்திதான்... இந்த போஸ்ட்ட எழுதனும்னே படத்த பாத்தீங்களாக்கும்?? ;))
வரிக்கு வரி அட்டகாசம்.. எதைன்னு எடுத்துச்சொல்றது? ஆபீஸ்ன்னும் பார்க்காம சிரிச்சிக்கிட்டிருந்தேன்.. இப்போ இன்னொரு வாட்டியும் படிச்சு சிரிச்சுக்கிட்டிருக்கேன்.. பிரமாதம்.! கலக்கல்.! ROTFL..
ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்திதான் ராப். கேப்டன் படத்தை எல்லாம் பாக்கறீங்க போல.
மீ த பர்ஸ்ட் பதிவரே!எங்கே போயிட்டீங்க?களத்திலேயே காணோம்?
நல்லா எழுதி இருக்கீங்க மேடம்
Post a Comment