Tuesday, 10 June, 2008

அனானியின் கருத்துக்களுக்கு என் பதில், இங்கு பதிவாக

இதற்கு தொடர்பான பதிவு இங்கே:
http://vettiaapiser.blogspot.com/2008/06/blog-post_10.html

அனானி அவர்களே, ஞாநி சொல்ற எல்லா கருத்துக்களையும் நான் எதிர்க்கல. எனக்கும் ஐயர் வைத்து பண்ற திருமணங்களில் நம்பிக்கை இல்லை. அது ஏன் என பிறருக்கு விளக்க வேண்டும், அவர்கள் ஏற்றுக்கொண்டால் சரி, இல்லையென்றால் விட்டுவிட வேண்டும், அதுதான் கருத்து சுதந்திரம்.தந்தை பெரியார் செய்ததும் சொன்னதும் அதைத்தான். நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் என்றுமே திணித்தல் கூடாது. அது எதிர் விளைவையே ஏற்படுத்தும்.

அடுத்த முட்டாள்தனமான கருத்து திருமண மண்டபங்களை பற்றியது.நான் திருமண பந்தத்திலேயே நம்பிக்கைல்லாதவர்களை பற்றி பேச வில்லை. சுயமரியாதை திருமணமாகட்டும், மதச் சடங்குகள் கொண்ட திருமணமாகட்டும் அனைத்து வகை திருமணங்களையும் நடத்த ஏற்ற வசதியான சமுதாயக்கூடங்களும், விழாமண்டபங்களும்தான் திருமண மண்டபம் என வெகுஜன மக்களால் அழைக்கப் படுகிறது.என்னை பொறுத்தவரை நம் நாட்டில் உள்ளதிலயே மிக நல்ல விஷயம் திருமண மண்டபங்கள்தான்.மதச் சார்பின்மை அங்குதான் ஓர் அளவேனும் சினிமா திரையரங்கங்களுக்கு பிறகு நடைமுறையில் கடைபிடிக்கப்படுகிறது.

ஐயர் மற்றும் பிற மத குறியீடு கொண்ட திருமணச் சடங்குகளே கூடாது என வாதிடும் திரு.ஞாநி பின்னர் எங்கு திருமணங்கள் நடைபெற வேண்டும் என்கிறார்? கோயிலிலா, மசூதியிலா, தேவாலயத்திலா? அவ்வாறு நடைபெற்றால் அங்கு மதக் குறியீடு இல்லாமல் நடத்த இயலுமா? சரி அவரவர் வீட்டில் நடத்த வேண்டியதுதானே என்றால், எல்லாரும் என்ன அம்பானி போல பெரிய மாளிகையா கட்டி வைத்துள்ளார்கள்?

அது மட்டுமல்லாமல் அங்கு எல்லாரும் எல்லா விழாக்களும் நடத்துகிறார்கள். விழாக்கள் மட்டுமா, பல்வேறு கூட்டங்கள் நடத்துகிறார்கள். மற்றுமொரு கூற்று, விழாவிற்கு வருபவர்கள் அனைவரும் உள்ளூரிளிருந்தே வருவார்களா? வெளியூரிலிருந்து வருபவர்கள் எங்கு தங்குவார்கள்? அனைவருக்குமே விடுதிகளில் தங்கும் வசதியிருக்குமா இல்லை விழா ஏற்பாட்டாளர்கள் இதற்கும் தனியாக செலவு செய்ய வேண்டுமா? சரி ஏன் பிரச்சினை, எதற்கு இவர்களை எல்லாம் அழைக்கிறீர்கள், யாரையுமே அழைக்காமல் விழா நடத்த வேண்டியதுதானே என்றால்,எப்பொழுதுதான் அனைவரும் ஒன்று கூடுவது. அதற்கு விழாக்கள்தானே இன்றைய துரித வாழ்வில் உதவி புரிகின்றன.

அடுத்தது அம்பானியாக இருந்தாலும் ஆடம்பரம் கூடாதென்பது. இது ஏட்டிற்கு உதவலாம், நடைமுறைக்கு சாத்தியப்படுமா என்பதை விட வசதிப்படுமா எனப் பாருங்கள். பணக்காரர்களின் எளிமை எப்பொழுதும் எல்லா விஷயங்களிலும் நல்ல விளைவை ஏற்படுத்தாது. உதாரணமாக நான் என் திருமணத்தை ஒரு சாதாரண திருமண மண்டபத்தில் செய்ய முயல்கிறேன்; அம்பானியும் தன் மகள் திருமணத்தை மிகச் சாதரணமாக நடத்த எண்ணி அதே மிகச் சாதாரண மண்டபத்திர்கு வருகிறார். இதன்மூலம் என்னாகும், டிமாண்ட் ஜாஸ்தியாகி ஒன்று அந்த மண்டபத்தின் வாடகை உயர்ந்து விடும் இல்லை அம்பானியே கேட்கிறார் என எனக்கு அளிக்க மாட்டார்கள். எப்படியும் பாதிக்க படப்போவது ஏழையாகிய நான்தான். இதுதான் மறைமுக ஆடம்பரம். சரி என் மண்டபத்திற்கு வராமல் ராஜா முத்தையா மண்டபத்தில், கதர் உடுத்தி பழையது போட்டு விழாவை நடத்துகிறார் என்றால், அதற்கு பெயர் எளிமையா?

நேரிடையான ஆடம்பரம் என்னவென்றால்,தலைவர்கள் நடத்தும் விழாக்கள், கூட்டங்களை சொல்லலாம். இது ஏன் ஆடம்பரம் என்றால் அவர்கள் பிறரை அடித்து, மிரட்டி பணம்பார்த்து அதில் விழா நடத்துகிறார்கள். சரி, அப்படியென்றால் பணக்காரர்களும் மக்கள் வரிப் பணத்தை ஏமாற்றித்தானே பணம் சேர்த்தார்கள் என்றால், அதற்கு அவர்கள் மட்டுமா காரணம்? அதற்கு நம்மிலிருந்து வரும் அதிகாரிகளிலிருந்து, வக்கீல்களிலிருந்து, பத்திரிக்கைகளிலிருந்து, நம்மால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகளிலிருந்து சமுதாயத்தின் நான்கு தூண்களுமே காரணம். இப்படி ஆடம்பர விழாக்களில் அவர்கள் செலவிடவில்லை என்றால் அது அவர்களிடமே தேங்கி மேலும் கேட்டிற்குதான் வழிவகுக்கும்.மேலும் பலத் தொழிலதிபர்களின் வரி ஏய்ப்பு கையும் களவுமாகப் பிடிபடும் இடம் இதுதான்.
நான் இங்கு சொல்ல வருவதை புரிந்து கொள்ளுங்கள். நான் ஒன்றும் அம்பானி எளிமையான விழா நடத்தினால் அதை எதிர்த்து, நீங்கள் ஆடம்பரமாகத்தான் நடத்த வேண்டும் என்றோ இல்லை அனைவரும் வளர்ப்பு மகன் திருமணத்தை போல் கடன்வாங்கியாவது,கந்துவட்டி வாங்கியாவது நடத்தவேண்டும் என்றோ சொல்லவில்லை. அவரவர் அவரவர் சக்திக்கு ஏற்றார்போல நடத்த வேண்டியதுதானே? அம்பானியின் ஆடம்பரம் என்ன என்று யாரால் கூற முடியும், என்னுடைய எளிமை என்ன என்று எதை சுட்டமுடியும்? அம்பானியின் எளிமையும் ஒரு சாமானியனின் கண்களுக்கு ஆடம்பரமாக தெரியக்கூடிய சாத்தியக்கூறுகள்தானே அதிகம்! என்னுடைய அத்தியாவசியத்தேவை இன்னொருவருடைய ஆடம்பரத் தேவையாக இருக்கிறது. என் அத்தியாவசித்தேவை என் சக்திக்கு உட்பட்டு ஞாயமானதெனில் அதை நான் ஏன் அதை குற்ற உணர்ச்சியுடன் அனுபவிக்க வேண்டும்?

அவர் அந்த விழாவில் ஜாஸ்தி வருத்தப்பட்டது மதச் சடங்குகளுக்கோ, ஜாதிச் சடங்குகளுக்கோ இல்லை, விழாவின் ஆடம்பரமாக அவர் எண்ணிய விஷயங்களுக்குத்தான். முதலில் ஒன்றை இங்கு புரிந்து கொள்ள வேண்டும். நாம் பேசுவது வெறும் தியாகிகளை பற்றியோ பெரும் தலைவர்களை பற்றியோ மட்டும் அல்ல. அனைத்து ஆசாபாசங்களுக்கும் உட்பட்ட பொதுஜனங்களை பற்றித்தான். நீங்கள் மற்றுமொருமுறை அந்த பதிவை சாமானியனின் கண்ணோட்டத்தில் இருந்து படியுங்கள்.

அனானி அவர்களே, நான் இங்கு மிக personal ஆன கருத்துக்களை தவிர்க்க விரும்பினேன். ஆனால் நீங்கள் ஞாநியை பற்றி, அவர் வெறும் உண்மைகளை மட்டுமே கூறுபவர் போலவும், நிஜ வாழ்வில் ஒழுக்கத்தின் உச்ச நிலையை அடைந்தவர் போலவும் கூறுவதால் நான் இப்பொழுது இதை கூறுகிறேன். அவரை பற்றி எனக்கு மிக மிக நன்றாகத் தெரியும். என் மிக நெருங்கிய உறவினர் ஆனந்த விகடனில் வேலை பார்த்தவர். அதனால் அவர் தன்னை பற்றி தானே பத்திரிகைகளில் எழுதுவதை நான் துளி கூட நம்பத் தயாரில்லை. மேலும் அவர் தாழ்த்தப்பட்ட பெண்மணிக்கு இனாமாக குடுக்கவில்லையே. நாமும்தான் எத்தனயோ விஷயங்களில் சிலக் கொள்ககைகளை கடைபிடிக்கின்றோம். அதற்காக அதை கடைபிடிக்காதவர்கள் சரியில்லையா. நான் என் நாட்டின் அனைத்து சட்ட திட்டங்களையும் கடைபிடிப்பவள், ஆனால் நான் என் வீட்டை ஒருவருக்கு ஜாதி என்னவென்று பாராமல் விற்றுவிட்டேன், இன்னொருவர் எல்லா கேப்மாரி வேலைகளையும் செய்து விட்டு வீட்டை மட்டும் ஒரு நல்ல கொள்கையோடு விற்றுவிட்டார் என்றால், அவர் புனிதராகிவிடுவாரா இல்லை நான்தான் ஜாதி வெறிப் பிடித்தவளாகி விடுவேனா? வாதத்திற்காக தயவுசெய்து உளறாதீர்கள்.
வெளிநாட்டுத் திருமணங்கள் விழாக்கள் பற்றிய எனது அடுத்த பதிவை நாளை நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள்.

21 comments:

புருனோ Bruno said...

//அம்பானியின் ஆடம்பரம் என்ன என்று யாரால் கூற முடியும், என்னுடைய எளிமை என்ன என்று எதை சுட்டமுடியும்? அம்பானியின் எளிமையும் ஒரு சாமானியனின் கண்களுக்கு ஆடம்பரமாக தெரியக்கூடிய சாத்தியக்கூறுகள்தானே அதிகம்! என்னுடைய அத்தியாவசியத்தேவை இன்னொருவருடைய ஆடம்பரத் தேவையாக இருக்கிறது. என் அத்தியாவசித்தேவை என் சக்திக்கு உட்பட்டு ஞாயமானதெனில் அதை நான் ஏன் அதை குற்ற உணர்ச்சியுடன் அனுபவிக்க வேண்டும்?//

உண்மை

rapp said...

ரொம்ப நன்றி திரு.புருனோ. அவருக்கு புத்தகம் வாங்குவது அத்தியாவசியத் தேவை, ஆனால் அதுவே எத்தனையோ மக்களுக்கு ஆடம்பர விஷயம்.

ambi said...

ம்ம், சிந்திக்க வைக்கும் பதிவுகள் வர ஆரம்பிச்சுருக்கு போல,

வெரி குட். (போன பதிவையும் பார்த்தேன்) :))

rapp said...

நம்ப தேங்க்ஸ் அண்ணே. எனக்கு இப்டி ஓவரா அன்றாட வாழ்க்கையையே ஒரு குற்ற உணர்ச்சியோட மத்தவங்க நடத்தனும்னு எதிர்பார்க்கிற ஆளுங்களை பார்த்தால் ஆச்சர்யமா இருக்கு.

பரிசல்காரன் said...

கூல் டவுன் rapp .. எல்லாம் தெரிந்தும் நடிக்கும் சிலருக்கு எதற்கு இத்தனை விளக்கம்? கொஞ்ச நேரம் போய் ஊஞ்சல் ஆடிட்டு வாங்க!

யோசிப்பவர் said...

Good Arguements. I agree with all of your points(regarding this Adampara kuuththu).

rapp said...

அப்டி இல்ல கிருஷ்ணா, நெறைய பேர் உதவி பண்ணனும்ங்கர கருத்தை வலியுறுத்தாமல், நீ அனுபவிக்கிற சின்ன சின்ன சந்தோஷங்களும்(அதையும் இவங்களே முடிவு செய்திட்டு) தப்பு, நீ உடுத்திர டிரஸ் விலைக்கு பத்து ஏழைங்களுக்கு துணி எடுத்து குடுக்கலாம்ங்கர ரேஞ்சுல பிதற்றி, ஒருத்தனுக்குரிய அடிப்படை சந்தோஷங்களிலும் உறுத்தலை புகுத்தறது தப்புதானேங்க. மாறாக நீ ஒரு உடை வாங்கும்போது உனக்கு தெரிந்த, செல்வத்தின் பொருட்டு வலிமை குறைந்தவருக்கும் எடுத்து கொடு என கூறுவதுதான் சரியாகும், நீண்ட நாட்களுக்கு நீடிக்கும். மாறாக நீ உன் அத்தியாவசியமும், மற்றொருவரின் ஆடம்பரமுமாகப்பட்டதை முற்றிலுமாக அனுபவிக்கவே கூடாது என்றால், சிறிது காலத்திலயே அந்த நபரிடம் உதவும் மனப்பான்மை துப்புரவாக நீங்கிவிடும்.

rapp said...

ரொம்ப நன்றி யோசிப்பவர். மீண்டும் நேரமுள்ளபோது வரவும்.

கிரி said...

//என்னுடைய அத்தியாவசியத்தேவை இன்னொருவருடைய ஆடம்பரத் தேவையாக இருக்கிறது.//

ஒத்துக்கொள்கிறேன் மற்றும் சிறப்பான வாக்கியம்.

ஆடம்பரம் என்பது குப்பையில் தூக்கி எறியும் ஒரு பத்திரிக்கைக்கு 5000 ருபாய் செலவு செய்வது (சிறு எடுத்துக்காட்டு), அதற்காக போஸ்ட் கார்டு சைஸ் ல் போட சொல்லவில்லை, ஒரு புத்தக அளவில் போட வேண்டாமே என்று தான் நினைக்கின்றேன். இதற்க்கு எனக்கு அளவு தெரியவில்லை.

இலையில் இருக்கும் அனைத்து உணவையும் ஒருவர் கண்டிப்பாக சாப்பிட முடியாது என்று தெரிந்தும், ஐட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது.

நல்லா விவாதம் வாழ்த்துக்கள்.

கிரி said...

//ஏழைங்களுக்கு துணி எடுத்து குடுக்கலாம்ங்கர ரேஞ்சுல பிதற்றி,//

உண்மை தான்..இவங்க சொல்வது படி நடந்தால் ஜட்டி கூட போட முடியாது.

rapp said...

மிக மிக நன்றி கிரி, உங்கள் அத்தனை கருத்துக்களையும் நான் அப்படியே வழிமொழிகிறேன். நீங்கள் கூறுவதுபோல் சிறுபிள்ளைத்தனமான ஆடம்பர விஷயங்களை செய்பவர்கள் எனக்குத் தெரிந்து குறைவுதான். போலிகௌரவத்திர்காக அவ்வாறு செய்பவர்களை நாம் என்றுமே எந்த விஷயத்திலுமே மாற்ற முடியாது.இவர்கள் இவ்வகை இல்லை என்றால் மற்றொரு வகை கண்டுபிடித்து பல விநோதங்களை செய்வார்கள். உங்கள் வருகைக்கு மீண்டும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் நேரம் கிடைக்கும் போது வருக.

rapp said...

ஏங்க திரு.அனானி அவர்களே நேற்று வந்தீங்களே, இன்னைக்கு உங்களுக்கு இவ்ளோ பெரிய பதிவயே பதிலா போட்டும் எங்கேங்க ஆளக் காணோம்.

மோகன் கந்தசாமி said...

அற்புதமாக அடித்து ஆடுகிறீர்கள், தொடரட்டும் உங்கள் பணி, -:)

ஆங்..அப்பறம், என் பதிவ பாத்திங்களா? ஆப்லெட் தெரியுதா உங்களுக்கு?

rapp said...

இப்போதாங்க பார்த்தேன். ரொம்ப ரொம்ப சூப்பர். அதுல என்னை வேற சேர்த்து இருக்கீங்க. ரொம்ப ரொம்ப நன்றி. இப்டியே போட்டு தாக்குங்க. வெள்ளி விழா வாழ்த்துக்கள்.

மங்களூர் சிவா said...

அருமையா சொல்லிருக்கீங்க!

தொடர்ந்து கலக்குங்க!

rapp said...

நெம்ப நன்றி சிவா, வந்ததுக்கும் உங்க கருத்துக்களை பதிஞ்சதுக்கும்.

நகைச்சுவை ‍ அரசர். said...

///////////ஒருத்தனுக்குரிய அடிப்படை சந்தோஷங்களிலும் உறுத்தலை புகுத்தறது தப்புதானேங்க. /////////

அருமையாச் சொன்னீங்க.. இந்த சொற்றொடர் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குங்க.

ஆரம்பத்துல படிச்சப்போ, அஞ்ஞானிக்கும், அனானிக்கும் இவ்வளவு மதிப்பு கொடுத்து நீங்க பதிவு போடணுமான்னு நெனச்சேன்.ஆனா அதில் இருக்கும் கருத்தாக்கம் என்னை ரொம்ப யோசிக்க வச்சுது.

நன்றி.

rapp said...

வந்து உங்க கருத்துக்களை தெரிவிச்சதுக்கு நெம்ப நன்றிங்க நகைச்சுவை அரசர்.

babu said...

ஆடம்பரம் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும்"
ஒத்துகொள்கிறேன்.
"என் அத்தியாவசித்தேவை என் சக்திக்கு உட்பட்டு ஞாயமானதெனில் அதை நான் ஏன் அதை குற்ற உணர்ச்சியுடன் அனுபவிக்க வேண்டும்"
சரிதான் ,
ஆனால் திருமணங்களில் செய்யும் செலவுகளை எல்லாம் மன நிறைவோடுதான் செய்கிறார்களா என்பதுதான் கேள்வி.
உறவினர்கள்,நண்பர்கள் என்று எல்லோரையும் இது போல் திருமணங்களில் சந்திக்கிறோம்,ஆனால் மனம் விட்டு பேசகூட முடிவதில்லை ,மெல்லிசை நிகழ்ச்சி
என்ற பெயரில் நான்கு தெருவிற்கு கேட்கும் அளவிற்கு சத்தமாக வைகிறார்கள்.
வாசலில் நின்று வரவேற்பதற்கு கூட முடியாமல் ஒரு பொம்மையை நிறுத்தி வைத்து நம்மையும் வெறுப்பு ஏத்தி அதற்கும் தெண்ட செல்வவு செய்கிறார்கள்
இது போன்று யாருக்கும் பயன்படாத செலவுகளை குறைக்கலாம் அல்லவா.

rapp said...

பாபு நீங்களும் என் கருத்தைத்தான் கூறுகிறீர்கள் ஆனால் வேறொரு வகையில். என்னுடைய ஆடம்பரம் எது என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டுமே அன்றி திரு ஞாநி அவர்கள் முடிவு செய்து குற்றச்சாட்டுகளை வீசக் கூடாது. மெல்லிசை கச்சேரி வைக்க வேண்டுமென்பது எதாவது சடங்கா என்ன, சடங்குகளையே நம் வசதிக்கேற்றவாறு மாற்றி கொள்ளும் காலமிது. என் திருமணம் உட்பட நான் சமீபத்தில் சென்ற பலத் திருமணங்களிலும் இனிய வாத்தியக் கச்சேரிகள் வைத்திருந்தார்கள். இது அனநித்து நாடுகளிலும் பின்பற்றப்படும் ஒரு விஷயம். நமக்கு மனமகிழ்ச்சி தராத செலவை நாம் ஏன் செய்ய வேண்டும்? அந்தளவிற்குக் கூட அட்ஜஸ்ட் செய்யாத இடங்களில் ஏன் சம்பந்தம் செய்ய வேண்டும்? அப்படிப்பட்ட நெருக்கடியுளிள்ளவர்களைப் பற்றிக் கூட அவர் தன் வாதத்தில் எடுத்துக்கொள்ளவில்லை

விஜய் said...

ஞானிக்கும்
அனானிக்கும்
சரியான பதில்.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com