Tuesday, 8 July, 2008

கமலுக்கு உலகநாயகன் பட்டத்தை உறுதி செய்யும் அதி முக்கிய பதிவு

டிஸ்கி 1: ரஜினி, விஜய், விஜயகாந்த், சரத்குமார் ரசிகர்கள் மன்னிக்கவும். இந்தப் பதிவை பார்த்து நான் கமல் ரசிகை என யாரும் எண்ண வேண்டாம். நான் ஜே.கே.ரித்தீஷ் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவள் என இவ்விடத்தில் எல்லோருக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன்.


டிஸ்கி 2: வழக்கமாக எல்லோரையும் கைல கால்ல விழுந்தாவது ஒரு பின்னூட்டம் போடுங்க சாமின்னு கேக்குற நானு, இந்தப் பதிவுக்கு கேக்கல(அவங்களை தர்மசங்கடப்படுத்த வேண்டாமேன்னுதான்)


டிஸ்கி 3: ஏன் இந்த கொழுப்பெடுத்த வேலைனு திட்ட நினைக்கிறவங்க தாராளமா திட்டலாம், ஏன் எங்க பதிவெல்லாம் சூடான இடுகைல வரணும்னு எங்களுக்கெல்லாம் ஆசையிருக்காதா?ஆமாங்க ஆமாம், அந்த ஒரே காரணத்துக்காகத் தான் இந்தப் பதிவு.


நான் நேற்று மாலை வழக்கமாக செல்லும் பால் ரெஸ்டாரெண்டில் (பாரிஸ், லக்ஸம்பெர்க், gibert ஜோஸப் புத்தகக் கடை அருகில் உள்ள கிளை, மிகப் பிரபலமான லேண்ட்மார்க்).நான் சென்றபோது உணவகத்தில் ஒரே வெளிநாட்டினர் மயம்(ஏன்னா இது அவங்க ஊர்). சிலருடன் பேச்சுக் கொடுத்தேன். முதலாமவர் ஒரு ஜெர்மானியர். அவரது பெண் தோழியின் முதுகில் கைகளால் கோலம் போட்டுக்கொண்டே சிரித்தமுகத்துடன் ஹலோ சொன்னார்(எனக்கு நாகரிகம் இல்லைனா, அவருக்குமா இருக்காது? பின்ன அவரு கடல போடும்போதுப் போய் மூக்க நொழைக்க தனி அநாகரிகச் சிந்தனை வேணும்ல). நானும் என்னை ஒரு இணைய ஜர்னலிஸ்ட் என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவர் அங்குள்ள அல்டெனா எனும் இடத்தை சேர்ந்தவர் என்றும் தான் தற்போது சுவிசர்லாந்தில் உள்ள cern லேபில் வேலை செய்யும் ஆராய்ச்சியாளர்(விஞ்ஞானி) என்றும் சொன்னார். சரி விசயத்துக்கு வருவோம் என்று ”உங்களுக்கு உலகத்தின் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளரான டாக்டர் விஜயை தெரியுமா" என்றேன். பேந்தப் பேந்த முழித்தவர் சொன்ன பதில், “நான் நிறைய ஆராய்ச்சியாளர்களை சந்திப்பவன், அப்படி ஒரு பெயரை கேள்விப்பட்டதேயில்லையே”. மருத்துவரான அவரது தோழியும் தோள்பட்டையை உயர்த்தி உதட்டைப் பிதுக்கி “தெரியவில்லை” என்று உடல்மொழியால் சொன்னார். சரி உங்களுக்குபிடித்த ஒரு க்ளாசிகல் ஆராய்ச்சியாளர் பெயரை சொல்லுங்கள் என்றேன்.. 'professor andrew wallard' என்று சொன்னார். உங்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தெரியுமா என்று பக்கத்தில் நின்றிருந்த ஒரு ஹாலந்து நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளரை கேட்டேன், ம்ஹூம் தெரியவே தெரியாது என்றார்.சரி சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரயாவது தெரியுமா என்றேன், அதற்கும் உதட்டை பிதுக்கினார். சரி மூடர்களுக்கென்ன தெரியும்னு அடுத்து நின்ன ஜப்பான் நாட்டு கப்பல் கேப்டனிடம், உங்களுக்கு கேப்டன் விஜயகாந்த் தெரியுமா எனக் கேட்டேன், கொழுப்பப் பாருங்க, அவரும் உதட்டைப்பிதுக்கினார். அவனவன் இங்கே 100 கோடி, 1000 படம், என்று ஒரே டெசிமல் நம்பர்களாகபுகழும் இவர்களுக்கா இந்த சோதனை என்று வேதனைப்படலாமா வேண்டாமா என யோசிக்க ஆரம்பிக்கும்போது அங்கிருந்த ஊழியர்கள் ஏதோ மனநலம் பிழன்றவள் எனக் கருதி போலிசை கூப்பிட ஆயத்தமாவதை பார்த்ததால் அங்கிருந்து வெளியேறினேன்.


இத்தோட விட்டேனா, வீட்டிற்கு வந்ததும் முதலில் அமரிக்க டாக்டரான எங்கக்கா கணவரை தொலைபேசியில் அழைத்தேன். அவரிடம் "உங்களுக்கு கமல்ஹாசன் என்ற நடிகரை தெரியுமா" என்றேன். அவர் உடனே, "தெரியுமே, தசாவதாரம் நேத்துதான் ரெண்டாவது முறை எல்லாரும் பார்த்தோம்" என்றார். அவரின் பெற்றோருக்கு(கணவர் பெரிய வீட்டலங்கார சாமான் மற்றும் பர்னிச்சர் கடை வைத்திருப்பவர், மனைவி சமூக சேவை மையத்தில் வாலண்டரி சர்வீஸ் செய்பவர்) போன் செய்தேன். அவர்களும் அதையே கூறினர். அடுத்தது பிரெஞ்சுக்காரர்களான என் மாமியார் வீட்டிற்கு(மாமனார் ஆர்க்கிடெக்ட், மாமியார் ஹோம் மேக்கர்) போன் செய்தேன். அவர்களும் 'சென்ற வாரம் பாரிஸ் வந்தப்போ எல்லாரும் சேர்ந்து தியேட்டரில் பார்த்தோமே தசாவதாரம், அதில் நடித்து சாதனை புரிந்த கமல்தானே' என்றனர், நான் ஆமாம் எனவும், அவரைப் போய் எங்களுக்கெப்படி தெரியாமல் இருக்கும் எனக் கோபப்பட்டனர். சரி என அவர்களை சமாதானப்படுத்திவிட்டு விஞ்ஞானியான என் கணவரிடம் அதே கேள்வியை கேட்டேன், 'வேற வேலை இல்லைனா வழக்கம்போல ப்ளாக் எழுதி மொக்கப் போடறதுதான, இன்னைக்கு நான்தானா கெடைச்சேன்னு' கடுப்பானவர கூல் பண்ணி அதிமுக்கிய கருத்துக்கணிப்புக்காக கேக்கிறேன்னு சொல்லவும், 'கமலைத்தான, நல்லாவேத் தெரியும், கேட்டுக்க, அவரோட முதல் படம் களத்தூர் கண்ணம்மா, முதல் மனைவி வாணி கணபதி, இப்போதய கேர்ள் பிரண்டு கௌதமி, மகள்கள் பேரு சுருதி, அக்ஷரா. ஷூட்டிங் பார்த்திடாத இங்கிலாந்து ராணி முதல் முதலா பார்க்க ஆசைப் பட்டது இவரோட பட ஷூட்டிங்கைத்தான். இப்போதைக்கு இதப் பத்தி நீ கண்டிப்பா ஒரு பதிவ போடுவ, ஏன்னா இன்னைய தேதிக்கு எக்கச்சக்க பிரபலமான ப்ளாகர் ஆகணும்னா, அவரைப் பத்தி ஒரு வரி எழுதினாப் போதும்' அப்படீன்னு அடுக்கிட்டே போறாருங்க. எனக்கு ஒரு மாதிரி ஷாக் ஆகிடுச்சி. சரி இப்படி உலகத்தில் உள்ள விஞ்ஞானி, ஆர்க்கிடெக்ட், லங் ஸ்பெஷலிஸ்ட், பெரிய பிசினஸ்மேன், சமூக சேவகி, இல்லத்தரசின்னு எல்லாப் பிரிவினரிடையும் பயங்கர அறிமுகத்தோட இருக்கும் கமல் ஒரு பட்டத்துக்கு ரொம்ப பொருத்தமானவர். அது என்னன்னா,


உலகநாயகன்


கடைசி டிஸ்கி: இந்தப் பதிவில் நான் என் குடும்ப பேக்ரௌண்டை சொல்லி பீத்திக்கிரேன்னு நினைச்சீங்கன்னா, ரொம்ப சரியா கணிச்சிருக்கீங்க. இப்பல்லாம் அதுதான் டிரன்ட். இதை நான் தெரிஞ்சேதான் செஞ்சேன், :):):)

124 comments:

Analyzt said...

Awesome!!!! சூடான பதில்... சூடான இடுக்கைல இடம் கியாரண்டி..

“சாதுர்யம் பேசாதடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி”

சபாஷ் சரியான போட்டி...(நான் பி.யு.சின்னப்பா இல்லீங்கோ!!!)

ச்சின்னப் பையன் said...

//நான் ஜே.கே.ரித்தீஷ் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவள் என இவ்விடத்தில் எல்லோருக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன்.
//

தலைப்பை பார்த்தவுடன் பயந்துட்டேன்...
தலையை பார்த்தவுடன் சரின்னுட்டேன்...

ச்சின்னப் பையன் said...

//உங்களுக்கு உலகத்தின் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளரான டாக்டர் விஜயை தெரியுமா"//

டக்குன்னு டாக்டரோட டிவிடிகளை கொடுத்திருக்கவேண்டும்....

rapp said...

//சபாஷ் சரியான போட்டி...(நான் பி.யு.சின்னப்பா இல்லீங்கோ!!!)//
அட என்னாங்க நீங்க,அது பி.எஸ். வீரப்பாங்க. அவர் பேரப் போய் இவரோட கொழப்பிட்டீங்களே. ஏன்னா அவர் என்னோட பேவரிட் வில்லன்.
//சூடான இடுக்கைல இடம் கியாரண்டி//
ரொம்ப நன்றிங்க. இதையே உங்க ஆசீர்வாதமா எடுத்துக்கறேன் :):):)

rapp said...

//தலைப்பை பார்த்தவுடன் பயந்துட்டேன்...
தலையை பார்த்தவுடன் சரின்னுட்டேன்//
இது இது இதுதாங்க நம்ம மன்றத்தாளுங்கக் கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம்

rapp said...

//டக்குன்னு டாக்டரோட டிவிடிகளை கொடுத்திருக்கவேண்டும்//
கொடுத்திருக்கலாம்தான் ஆனா, அவர டார்ச்சர் பண்ண வந்த சைக்கோன்னு உள்ள புடிச்சி போட்டுட்டா என்னப் பண்றதுன்னுதான், விட்டுட்டேன்

Syam said...

மொக்கை நடிகர்கள் பேரு எல்லாம் கேட்டு இருக்கீங்க...நம்ம தலை ஜே.கே.ரித்தீஷ் பத்தி கேட்டு இருந்தீங்கனா எல்லோருக்கு தெரிஞ்சு இருக்கும்... :-)

rapp said...

இந்தப் பதிவுல வெளியிட்டிருக்க பட்டியல் வெறும் உப்புமா நாயகர்கள் பத்திதாங்க, நம்ம தல மாதிரி அகிலாண்ட நாயகனைப் பத்தியெல்லாம் கருத்துக் கணிப்பு எடுத்தா தெரிஞ்சுக்கணும்?

லக்கிலுக் said...

:-))))))))))))

அடி பின்னுறீங்களே? :-)

வெண்பூ said...

//'வேற வேலை இல்லைனா வழக்கம்போல ப்ளாக் எழுதி மொக்கப் போடறதுதான, இன்னைக்கு நான்தானா கெடைச்சேன்னு' //

அவருக்கும் தெரிஞ்சி போச்சா?

//நானும் என்னை ஒரு இணைய ஜர்னலிஸ்ட் என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். //

ஹி..ஹி..ஹி..

rapp said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க லக்கிலுக், மோஹனுக்கு குடுத்தா மாதிரி எனக்கும் ஒரு விளம்பரம் கொடுத்தீங்கன்னா புண்ணியமா போகும்

rapp said...

ரொம்ப நன்றிங்க வெண்பூ.

//அவருக்கும் தெரிஞ்சி போச்சா?//
ஒரு நாள் நடுராத்திரி பொழுது போகலைனு ப்ளாக் எழுத ஆரம்பிச்சதால அவருக்கு ரொம்ப நல்லாவே தெரியும்

//
//நானும் என்னை ஒரு இணைய ஜர்னலிஸ்ட் என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். //

ஹி..ஹி..ஹி..//
இப்படில்லாம் நம்பாத மாதிரி சிரிச்சீங்கன்னா அப்புறம் அதை நிரூபிக்க இன்னொரு பதிவு போட்டு சாவடிப்பேன். என் கவுஜய பார்த்தும் இன்னும் நீங்க பயப்படாம இருக்கறீங்களா, புதுக் கவுஜய ரெடி பண்ணிட வேண்டியதுதான்:):):)

இராம்/Raam said...

செல்லா'காசு பதிவுக்கு எதிர்வினை பதிவா.... :)

போட்டு தாக்குங்க..... :)))

இராம்/Raam said...

/Awesome!!!! சூடான பதில்... சூடான இடுக்கைல இடம் கியாரண்டி..

“சாதுர்யம் பேசாதடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி”//

கன்னபின்னான்னு ரீபிட்டே போட்டு தொலைக்கிறேன்.... :))

சரவணகுமரன் said...

//ஏன்னா இது அவங்க ஊர்

:-)

சரவணகுமரன் said...

பாவங்க கமல் :-(

rapp said...

ஹி ஹி, இல்லைங்க ராம், எந்தளவுக்கெல்லாம் என்னால கேவலமா மொக்க போட முடியும்னு ஒரு சுய பரிசோதனை செய்யறேன்:):):) மத்தபடி அவங்களோட போட்டி போடற அளவுக்கு எனக்கு திறமை இருக்கான்னு தெரியல.

rapp said...

//பாவங்க கமல்//
ஹை, அவருக்கு பாவம் பார்த்தா, நாங்கெல்லாம் எப்படி எங்க மொக்க போடற பொழப்ப நடத்துறதாம்:):):)

rapp said...

//கன்னபின்னான்னு ரீபிட்டே போட்டு தொலைக்கிறேன்//
ஹி ஹி ரொம்ப நன்றிங்க

தம்பி said...

//நான் ஜே.கே.ரித்தீஷ் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவள் என இவ்விடத்தில் எல்லோருக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன்.//

:)))
முக்கறவங்களுக்கெல்லாமா பதவி தராங்க. :)

இவ்வளவு வெளிநாட்டுக்காரங்கள ஏமாத்திருக்காரு நம்ம கமலு. சோ உண்மையான உலக நாயகன் அவருதான்.

இவன் said...

//நான் ஜே.கே.ரித்தீஷ் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவள் என இவ்விடத்தில் எல்லோருக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன்.//

பாவம் அந்தாளு நடிக்க வந்தாப்பிறகு உங்க கையில மாட்டி என்னேன்ன பாடு படுறாரு போன ஜென்ன்மத்தில என்ன பாவம் பண்ணினாரோ??

//வழக்கமாக எல்லோரையும் கைல கால்ல விழுந்தாவது ஒரு பின்னூட்டம் போடுங்க சாமின்னு கேக்குற நானு, இந்தப் பதிவுக்கு கேக்கல//

அப்படியும் விடுறதா இல்ல நாங்க, போடுவோமில்ல

இவன் said...

//ஏன் இந்த கொழுப்பெடுத்த வேலைனு திட்ட நினைக்கிறவங்க தாராளமா திட்டலாம், ஏன் எங்க பதிவெல்லாம் சூடான இடுகைல வரணும்னு எங்களுக்கெல்லாம் ஆசையிருக்காதா?ஆமாங்க ஆமாம், அந்த ஒரே காரணத்துக்காகத் தான் இந்தப் பதிவு.//

நானும் இதுக்காகத்தான் என் நேரங்களை அர்பணித்து இருக்கிறேன் ஆனா எப்படி சூடான இடுகையில வரவைக்கிறது என்னுதான் தெரி்யல

இவன் said...

//நானும் என்னை ஒரு இணைய ஜர்னலிஸ்ட் என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன்.//

இது எப்பவுல இருந்து சொல்லவே இல்ல

//”உங்களுக்கு உலகத்தின் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளரான டாக்டர் விஜயை தெரியுமா"//

அடப்பாவிகளா இது எனக்கே பெரிய அதிர்ச்ச்சி, குருவிய மட்டும் அந்தாள் பாத்திருந்தான் அவ்வளவ்வுதான் செத்தே போயிருப்பான்

//அங்கிருந்த ஊழியர்கள் ஏதோ மனநலம் பிழன்றவள் எனக் கருதி போலிசை கூப்பிட ஆயத்தமாவதை//

இன்னமும் கூப்பிடலயா ரொம்பத்தான் நல்ல மணசு படைச்சவங்க போல இருக்கு

இவன் said...

//சரி இப்படி உலகத்தில் உள்ள விஞ்ஞானி, ஆர்க்கிடெக்ட், லங் ஸ்பெஷலிஸ்ட், பெரிய பிசினஸ்மேன், சமூக சேவகி, இல்லத்தரசின்னு எல்லாப் பிரிவினரிடையும் பயங்கர அறிமுகத்தோட இருக்கும் கமல் ஒரு பட்டத்துக்கு ரொம்ப பொருத்தமானவர். அது என்னன்னா,


உலகநாயகன்//


முடியலலலலல

//இந்தப் பதிவில் நான் என் குடும்ப பேக்ரௌண்டை சொல்லி பீத்திக்கிரேன்னு நினைச்சீங்கன்னா, ரொம்ப சரியா கணிச்சிருக்கீங்க. இப்பல்லாம் அதுதான் டிரன்ட். இதை நான் தெரிஞ்சேதான் செஞ்சேன், :):):)//

உங்களுக்கு நாங்க என்னங்க பாவம் செஞ்சோம்??

rapp said...

//முக்கறவங்களுக்கெல்லாமா பதவி தராங்க//
ஒலகத்தில முக்காதவங்களுக்கு மட்டும்தான் பதவி கொடுக்கனும்னா பிணத்துக்கும், கருவில இருக்கும் சிசுவுக்கும் மட்டும்தானேங்க கொடுக்க முடியும்:):):)
//இவ்வளவு வெளிநாட்டுக்காரங்கள ஏமாத்திருக்காரு நம்ம கமலு. சோ உண்மையான உலக நாயகன் அவருதான்//
ஆமாங்க நான் கூட நம்ம இங்கிலாந்து ராணிகிட்ட(ஏன்னா என்னையெல்லாம் பொறுத்த வரை அவங்க தான் என் கொலதெய்வம்) இதப்பத்தி புகார் மனு எழுதி அனுப்பலாம்னு இருக்கேங்க, அவருக்கு என்னாத் தெனாவட்டு இருந்தா அவங்களையும் சேர்த்து ஏமாத்திருப்பாரு

rapp said...

//பாவம் அந்தாளு நடிக்க வந்தாப்பிறகு உங்க கையில மாட்டி என்னேன்ன பாடு படுறாரு போன ஜென்ன்மத்தில என்ன பாவம் பண்ணினாரோ?//
இவன், அப்படின்னா நீங்க எங்க மன்றத்தில சேர்றதா உத்தேசம் இல்லையா:(:(:(

////நானும் என்னை ஒரு இணைய ஜர்னலிஸ்ட் என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன்.//
இது எப்பவுல இருந்து சொல்லவே இல்ல//
இதெல்லாம் நீங்க நம்பித்தான் ஆகோணும். இல்லைனா அத நிரூபிக்க அடுத்த பதிவ போட்டு கொடைவேன்

rapp said...

//நானும் இதுக்காகத்தான் என் நேரங்களை அர்பணித்து இருக்கிறேன் ஆனா எப்படி சூடான இடுகையில வரவைக்கிறது என்னுதான் தெரி்யல//
அர்ப்பணிப்புங்கர வார்த்தை எல்லாம் கொஞ்சம் ஜாஸ்திங்கோ:):):)

//இன்னமும் கூப்பிடலயா ரொம்பத்தான் நல்ல மணசு படைச்சவங்க போல இருக்கு//
நூத்துல ஒரு வார்த்தை சொன்னீங்க

//உங்களுக்கு நாங்க என்னங்க பாவம் செஞ்சோம்?//
இதெல்லாம் இந்த ப்ளாகர் வாழ்க்கையில சாதாரணமுங்க இவன், இதுக்கே அசந்துபோய்(கடுப்பாகி) உக்காந்துட்டா எப்படி:):):)

ARUVAI BASKAR said...

இருங்க , உங்களுக்கு எங்க டாக்டர் நடித்த குருவி படத்தின் DVD அனுப்பி வைக்கிறேன் !

பரத் said...

Super !!!
:))))

தமிழ்ப்பறவை said...

ஙே... மொக்கை நல்லா இருந்ததுங்க...

rapp said...

பாஸ்கரண்ணே நான் பதிலுக்கு கானல்நீர் பட dvdய அனுப்பி வெக்கிறேன், சவாலுக்குத் தயாரா? எப்படி என்னோட பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம்:):):)

ஜோ / Joe said...

:))))))))))

rapp said...

வந்ததற்கும் பின்னூட்டமிட்டதற்கும் ரொம்ப நன்றிங்க பரத்

rapp said...

தமிழ்ப்பறவை வந்ததற்கும் பின்னூட்டமிட்டதற்கும் ரொம்ப நன்றிங்க

rapp said...

வந்ததற்கும் பின்னூட்டமிட்டதற்கும் ரொம்ப நன்றிங்க ஜோ

முரளிகண்ணன் said...

அருமையான எதிர்வினை பதிவு. கலக்கல்

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

நான் ஜே.கே.ரித்தீஷ் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவள் //

அம்மாடி ஒனக்கு ஒரு விஷயம் தெரியுமா? தலைவன் ரித்தீஷ் தி.மு.க. வுல இருக்கதால்தான் நான் தி.மு.க அபிமானியா இருக்கேன்

நானும் என்னை ஒரு இணைய ஜர்னலிஸ்ட் என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

ஹைய்யா! அப்ப நானும் இனைய ஜர்னலிஸ்டா?

rapp said...

ரொம்ப நன்றி முரளிக்கண்ணன் சார், வந்ததற்கும் பின்னூட்டமிட்டதற்கும்

rapp said...

//அம்மாடி ஒனக்கு ஒரு விஷயம் தெரியுமா? தலைவன் ரித்தீஷ் தி.மு.க. வுல இருக்கதால்தான் நான் தி.மு.க அபிமானியா இருக்கேன்//

அடடே நான் கூட அந்தக் காரணத்துக்காகத்தான் தி.மு.க அபிமானியா இருக்கேண்ணே.

//ஹைய்யா! அப்ப நானும் இனைய ஜர்னலிஸ்டா//

இதில் சந்தேகமென்ன உங்களுக்கு? கண்டிப்பா.

மருதநாயகம் said...

நல்லா நையாண்டி பண்றீங்க

rapp said...

ரொம்ப நன்றி மருதநாயகம் சார், வந்ததற்கும் பின்னூட்டமிட்டதற்கும்

வெட்டிப்பயல் said...

1980ல வந்த நாயகன் படத்தோட நாயகன் "உலக நாயகன்" ஆகிட்டார்.

2008ல வர நாயகன் படத்தோட நாயகனுக்கு (உங்க JK ரித்திஷ்) என்ன பட்டம் கொடுக்கலாம்???

rapp said...

நாங்க ஏற்கனவே அறிவிச்சிட்டோமே, உங்களுக்குத் தெரியாதா? எங்க தலையோட அடைமொழி என்னன்னா 'அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ்'

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

kindly go and see the fow.ing url
http://maraneri.blogspot.com/2008/07/blog-post_01.html

மோகன் கந்தசாமி said...

ஹலோ ராப்,
பின்றீங்க போங்க!,
என்ன ஒரு வருத்தம்னா பீலா பதிவுக்கெல்லாம் நாம ஒரு பதில் பதிவு போட வேண்டியிருக்கேன்னு தான். பிலிம் இன்ஸ்டிடியூட் பசங்க திருட்டு வீ.சி.டி -ல வெளங்காத படம் பாக்கும்போது எட்டிப்பாத்தவங்கல்லாம் ஜர்ணலிஸ்ட் -ன்னா கேட்கறவன் லூசா இல்ல சொல்றவன் லூசா இல்ல ஜர்ணலிஸ்ட்டுங்க லூசா, வலையுலக சுப்ரமணிய சாமி அறிக்கை மாதிரி இருந்துச்சு அந்த பதிவு.

கலக்கல் பதிவுங்க வெட்டி ஆபிசர்.
குடும்பமே சயின்டிஸ்ட் -கள் போல இருக்கு. ஆராய்ச்சி மாணவி உங்களையும் சேர்த்தால் முழுமை பெரும்.
நன்றி.

rapp said...

அண்ணே நான் ஏற்கனவே இதனை படிச்சிட்டேன். நீங்க சொல்றதைத்தான் நானும் நினைக்கிறேன். என்னைப்பொறுத்தவரை இதற்கு மிகத் தெளிவான ஒரு விளக்கமுண்டு. ஆனால் அதை சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள், அதே சமயம் தவறாகவும் புரிந்து கொள்வார்கள். ஆனால் உண்மை நிலையை புரிந்துக் கொள்ளவும் மாட்டார்கள்

rapp said...

மோகன் ரொம்ப நன்றிங்க. நீங்க பிசியா இருப்பீங்கன்னு நினைச்சேன்.

//குடும்பமே சயின்டிஸ்ட் -கள் போல இருக்கு//
என் வீட்டுக்காரர் மட்டும்தான் சைன்டிஸ்ட் மோகன், எங்கக்கா வீட்டுக்காரர் மருத்துவர். பின்ன என்னங்க பதிவெழுத வந்துட்டு மத்தவங்கள தன் படிப்ப வெச்சு நக்கல் பண்றது எனக்கு தப்பா தெரிஞ்சது,இங்க எல்லாரும் சக பதிவர்கள்தானேங்க. அதான் இப்படி பண்ணேன்.

//ஆராய்ச்சி மாணவி உங்களையும் சேர்த்தால் முழுமை பெரும்//
நான்தானே, நல்லாவே:):):)

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

கடைசியா அவர் கேட்ட கேள்விக்கும் பதில் போட்டேன்.அதை இன்னும் அவர் வெளியிடவில்லை. நாளைக்கு அதை வெளியிட்டு வேற என்னவெல்லாம் கேக்குறாரு பார்ப்போம்.

rapp said...

கண்டிப்பா அண்ணே

வழிப்போக்கன் said...

//ரஜினி, விஜய், விஜயகாந்த், சரத்குமார் ரசிகர்கள் மன்னிக்கவும்.//

மன்னிப்பு எனக்கு தமிழ்ல புடிக்காத ஒரே வார்த்தை...உங்களுக்கு மன்னிப்பே கிடையாது...

வழிப்போக்கன் said...

இது ஒரு குடும்ப கருத்துகணிப்பு..

எப்படிங்க ரஜினி, விஜய், விஜயகாந்த், சரத்குமார் பத்தியெல்லாம் வெள்ளக்காரனுக கிட்ட கேப்பீங்க..

ஒலக (உருண்ட) நாயகன் பத்தி உங்க குடும்பத்துல கேட்டு போட்ரூவீங்களா ??

வழிப்போக்கன் said...

//அவனவன் இங்கே 100 கோடி, 1000 படம், என்று ஒரே டெசிமல் நம்பர்களாகபுகழும் இவர்களுக்கா இந்த சோதனை என்று வேதனைப்படலாமா வேண்டாமா என யோசிக்க //

சூப்பரூ.....

வழிப்போக்கன் said...

//'கமலைத்தான, நல்லாவேத் தெரியும், கேட்டுக்க, அவரோட முதல் படம் களத்தூர் கண்ணம்மா, முதல் மனைவி வாணி கணபதி, இப்போதய கேர்ள் பிரண்டு கௌதமி, மகள்கள் பேரு சுருதி, அக்ஷரா. ஷூட்டிங் பார்த்திடாத இங்கிலாந்து ராணி முதல் முதலா பார்க்க ஆசைப் பட்டது இவரோட பட ஷூட்டிங்கைத்தான். //

இது 2 மச்...அவரு பாவங்க..

நீங்க இந்த மாதிரி கேப்பீங்கனு Wikipediaல படிச்சுட்டாரு போல...

:-)))

(அவருக்கு பக்கத்து வீட்டுல இருக்கிறவங்க பேரு எல்லாம் தெரியுமானு நான் கேட்டதா சொல்லுங்க)

rapp said...

//இது ஒரு குடும்ப கருத்துகணிப்பு..
எப்படிங்க ரஜினி, விஜய், விஜயகாந்த், சரத்குமார் பத்தியெல்லாம் வெள்ளக்காரனுக கிட்ட கேப்பீங்க.
ஒலக (உருண்ட) நாயகன் பத்தி உங்க குடும்பத்துல கேட்டு போட்ரூவீங்களா ?//
பிரச்சினை வெள்ளைக்காரங்களுக்குத் தெரியுமா தெரியாதாங்கறதுதானே( அஸ்கு புஸ்கு), அவங்க என் குடும்பத்துல உறுப்பினரா இருக்கக்கூடாதுங்கறது இல்லையே:):):) நான் சொல்லிருக்க அத்தனைப் பேரும் வெள்ளக்காரங்கதான்

rapp said...

//இது 2 மச்...அவரு பாவங்க..

நீங்க இந்த மாதிரி கேப்பீங்கனு Wikipediaல படிச்சுட்டாரு போல...

:-)))

(அவருக்கு பக்கத்து வீட்டுல இருக்கிறவங்க பேரு எல்லாம் தெரியுமானு நான் கேட்டதா சொல்லுங்க)//

நீங்க ஆரம்பத்தில் வந்த என் பதிவுகளைப் படிச்சா தெரிஞ்சுடும் அவரு எப்படின்னு:):):)
நாங்க எங்க பில்டிங்கல இருக்க எல்லாரோடவும் நல்லா சகஜமாத்தான் பழகறோம். ஏங்க எனக்கொரு சந்தேகம், பக்கத்து வீட்டுக்காரங்க பேரு தெரியலைனா வேற யாரப் பத்தியும் தெரிஞ்சி வெச்சிருக்கக் கூடாதா? பயங்கர புரட்சிகர கருத்தா இருக்கே:):):)

வழிப்போக்கன் said...

//நான் சொல்லிருக்க அத்தனைப் பேரும் வெள்ளக்காரங்கதான்
//

இது அப்பாவி மக்களை திசை திருப்பும் முயற்சி...

ஜனங்களே !! யாரும் இந்த பதிவை சீரியஸாக எடுத்துக்கொண்டு உலக(உருண்ட) நாயகன் பட்டத்தை உறுதி செய்ய வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்..

இந்த கருத்துகணிப்பு சென்ற வருடம் தினகரனில் வந்ததை போன்றே உள்ளது....

வழிப்போக்கன் said...

//பயங்கர புரட்சிகர கருத்தா இருக்கே:):):)
//

புரட்சிதமிழன்...புரட்சிகலைஞர்..புரட்சிதளபதி போன்ற மாபெரும் மக்கள் வாழும் நாட்டில் இருந்து வந்தவன்..

கயல்விழி said...

கவிதாயினி ராப் அவர்களே(கும்ப்ளே கவிதைக்காக உங்களுக்கு இந்த பட்டம்): உங்களுடைய பதிவை பார்த்து சிரித்து சிரித்து என் வயிறே புண்ணாகிவிட்டது. நகைச்சுவை என்பது மிகப்பெரிய கிஃப்ட் உங்களுக்கு அது ரொம்ப நன்றாக வருகிறது. தொடர்ந்து பதிக்கவும்.

பி.கு: உங்க கணவர் ப்ரென்சுக்காரரா?

கயல்விழி said...

கவிதாயினி ராப் அவர்களே(கும்ப்ளே கவிதைக்காக உங்களுக்கு இந்த பட்டம்): உங்களுடைய பதிவை பார்த்து சிரித்து சிரித்து என் வயிறே புண்ணாகிவிட்டது. நகைச்சுவை என்பது மிகப்பெரிய கிஃப்ட் உங்களுக்கு அது ரொம்ப நன்றாக வருகிறது. தொடர்ந்து பதிக்கவும்.

பி.கு: உங்க கணவர் ப்ரென்சுக்காரரா?

rapp said...

நன்றிங்க கயல்விழி வந்ததற்கும் பின்னூட்டமிட்டதற்கும்.

//கவிதாயினி ராப் அவர்களே//
ரொம்ப வெக்க வெக்கமா இருக்குங்க, ஆனா பாருங்க அந்தக் கவிதைய ஒரு முறை படிச்சவங்க அத மறக்கவே மட்டேங்கராங்கங்க:):):)

ஆமாங்க அவர் பிரெஞ்சுக்காரர்தான், ராப் எங்கக் குடும்பப் பெயர்

Analyzt said...

//ஆமாங்க அவர் பிரெஞ்சுக்காரர்தான், ராப் எங்கக் குடும்பப் பெயர்//

அப்படியா!!! நான் ஏதோ ”பேட்ட ராப்” ஸ்டைல்ல கலாய்க்கிறதுக்காக வெச்சுக்கிட்டீங்களோன்னு நினைச்சேன்..

உங்க குடும்பம் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” range'la கலக்கரீங்க போங்க..

anyways.. தங்கள் சேவை மேலும் தொடர என் வாழ்த்துக்கள்..

ambi said...

//நான் சென்றபோது உணவகத்தில் ஒரே வெளிநாட்டினர் மயம்(ஏன்னா இது அவங்க ஊர்)//

:))))


ஆத்தி, தங்கச்சிக்கா, கால காட்டுங்க, என்னா நக்கல், நையாண்டி... என்னால சிரிப்பை அடக்கவே முடியலை. :))

ஜூடான இடுகைல வந்துடிச்சிமா இன்னிக்கு. :)

வழிப்போக்கன் said...

//அப்படியா!!! நான் ஏதோ ”பேட்ட ராப்” ஸ்டைல்ல கலாய்க்கிறதுக்காக வெச்சுக்கிட்டீங்களோன்னு நினைச்சேன்..
//

நான் கூட அப்படித்தான் நெனச்சேன்..

வாழ்த்துக்கள் Rapp!!!...

rapp said...

//அப்படியா!!! நான் ஏதோ ”பேட்ட ராப்” ஸ்டைல்ல கலாய்க்கிறதுக்காக வெச்சுக்கிட்டீங்களோன்னு நினைச்சேன்//
ப்ளாக் ஆரம்பிக்கும்போது அந்தளவுக்கு வெவரம் இல்லைங்க:):):)

//உங்க குடும்பம் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” range'la கலக்கரீங்க போங்க//
கரீக்கிட்டா கண்டுகிட்டீங்க,
எனக்கு கடவுள் நம்பிக்க உண்டு, ஆனா என் கணவருக்கு இருக்கக் கூடாதுங்கற ரேஞ்சில என்னோடக் காதல் & கல்யாணக் கனவுகள் இருந்தது:):):)

rapp said...

ரொம்ப நன்றி அம்பி அண்ணே

//ஜூடான இடுகைல வந்துடிச்சிமா இன்னிக்கு//

இன்னைக்குத்தான் பிறவிப் பயன அடைஞ்சா மாதிரி இருக்குண்ணே

rapp said...

//வாழ்த்துக்கள் Rapp//
நன்றிங்க

பரிசல்காரன் said...

அறுபத்தாறு பின்னூட்டமா? நான் ரொம்ப லேட் போல!
மொக்கை கேள்விக்கு பதில் யோசிச்ச்சதுல நேத்து எங்கயும் போய் படிக்க முடியல..

//உங்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தெரியுமா என்று பக்கத்தில் நின்றிருந்த ஒரு ஹாலந்து நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளரை கேட்டேன், ம்ஹூம் தெரியவே தெரியாது என்றார்.//

எப்ப இந்தியா வர்றீங்க மேடம்?

(இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு, இது (எவ்வளவு- எது?) ஆகாதுங்க.. )

கிருபா said...

//டக்குன்னு டாக்டரோட டிவிடிகளை கொடுத்திருக்கவேண்டும்....//

உலகத்தில் வேறென்ன சோதனை இருக்கு இதை
விட(!) என்ன பாவம் பன்னுனாங்க அவுங்க?

இவன் said...

////பாவம் அந்தாளு நடிக்க வந்தாப்பிறகு உங்க கையில மாட்டி என்னேன்ன பாடு படுறாரு போன ஜென்ன்மத்தில என்ன பாவம் பண்ணினாரோ?//
இவன், அப்படின்னா நீங்க எங்க மன்றத்தில சேர்றதா உத்தேசம் இல்லையா:(:(:(//


சரி சேந்திர்றேன் அப்பறம் இங்க ஆட்டோ கிடைக்கல என்னு புல்டோசர் அனுப்பீட்டிங்க என்னா என்ன செய்ய அதுதான்

////நானும் என்னை ஒரு இணைய ஜர்னலிஸ்ட் என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன்.//
இது எப்பவுல இருந்து சொல்லவே இல்ல//
இதெல்லாம் நீங்க நம்பித்தான் ஆகோணும். இல்லைனா அத நிரூபிக்க அடுத்த பதிவ போட்டு கொடைவேன்//


அய்யோ வேணாம் நாங்க நம்புறோம்...

இவன் said...

//அர்ப்பணிப்புங்கர வார்த்தை எல்லாம் கொஞ்சம் ஜாஸ்திங்கோ:):):)//

உண்மைய சொன்னா நம்பனும் நோ cross questions plz

//இதெல்லாம் இந்த ப்ளாகர் வாழ்க்கையில சாதாரணமுங்க இவன், இதுக்கே அசந்துபோய்(கடுப்பாகி) உக்காந்துட்டா எப்படி:):):)//

சத்தியமா முடியலலலலலலலல

rapp said...

ரொம்ப நன்றிங்க கிருஷ்ணா

rapp said...

வந்ததற்கும் பின்னூட்டமிட்டதற்கும் ரொம்ப நன்றிங்க கிருபா

rapp said...

வாங்க இவன் வாங்க:):):)

கயல்விழி said...

//ப்ளாக் ஆரம்பிக்கும்போது அந்தளவுக்கு வெவரம் இல்லைங்க:):):)//

இப்போ வெவரமாயிட்டீங்களா?

Vijay said...

போச்சி போங்க, ஒரு ரெண்டே ரெண்டு நாளு லேட்டா வந்தா, எதோ நூற்றாண்டுகள் காணா போய்ட்டா மாதிரி 74 பின்னூட்டம். சந்தேகமே இல்ல, நீங்க ச்ச்ச்ச்ச்ச்ச்சூஊஊஊஉடான பதிவர்தான்.

எடமே இல்லீங்க...எல்லாரும் பிரிச்சி மேஞ்சிடாங்க பதிவை. அதனால போட்டுக்கறேன் ஒரு ரீப்ப்ப்ப்பீஈடேய்ய்ய்ய்ய்ய்ய்.

செரி.....உங்க வேலய கொஞ்சம் கொறைக்க, தப்பு...தப்பு,... உங்க கிட்ட கத்துகிடற (கவுஜங்க) மாணவன்கிற நன்னிய காட்ட வெண்பூ வுக்கு நீங்க (தண்ணி)காட்றாதா இருந்த அந்த கவுஜய நானு டிரை பண்றேன். (ஏதோ பொன்னு வக்கிற எடத்துல பூவு)

அகோய் வாரும் பிள்ளாய் வெண்பூ
எங்க "ராப்" கிட்ட வச்சிக்காத வம்பூ
மொட்ட தலக்கி தேவையில்ல ஷாம்பூ

(அய்ய....கல்லூ வேணாம்பா...அட....படாத எடத்துல பட்டுற போவுதுபா ...பிளீஸ்.....)

வெண்பூ said...

//அகோய் வாரும் பிள்ளாய் வெண்பூ
எங்க "ராப்" கிட்ட வச்சிக்காத வம்பூ
மொட்ட தலக்கி தேவையில்ல ஷாம்பூ//

இந்த கவுஜய பாராட்டி விஜய்க்கு ஏன் டாக்டர் பட்டம் குடுக்கக் கூடாதுன்னு கேக்குறேன். ஏன்னா அந்த டாக்டர் விஜய் நடிச்ச குருவி படத்த விட இந்த கவுஜ மொக்கயா இருக்கு...

ம்ம்ம்ம்...எல்லாம் ஒரு குரூப்பாத்தான் திரியுரீங்க. எங்க காதுலதான் ரத்தம் வருது..

Vijay said...

வெற்றீ....வெற்றீ.....(நன்றி வெண்பூ)

ராப், அந்த பிரதம சிஷ்யன் போஸ்டு எனக்குதான? நெறைய பேரு டிரை பண்றா மாதிரி தெரியுது. நீங்க ஜஸ்ட்டு என் பேர டிக்ளேர் பண்ணிடுங்க..மீதி எல்லாம் நான் பாத்துக்கறேன்.(கல்லு படாம பில்லோ(pillow) புடிப்போம்ல)

rapp said...

நீங்க வேற கயல்விழி, ப்ளாகர்னா இப்படித்தான் கண்டபடி கேணத்தனமா பில்ட் அப் கொடுத்திடனும், இல்லைனா யாருமே கும்மி(அதாவது துப்ப) அடிக்க மாட்டாங்க

rapp said...

ஆஹா கவித கவித. இன்பத் தேன் வந்து பாஞ்சிடுச்சி விஜய். நம்மைத் திறமைய பார்த்து எல்லாருக்கும் ஒரு மாதிரி கபீர்னு ஆகிடும் பாருங்க

rapp said...

வெண்பூ எங்களோட திறமைய பார்த்து மலைச்சுப் போயிட்டீங்க போலிருக்கு:):):)

rapp said...

//ராப், அந்த பிரதம சிஷ்யன் போஸ்டு எனக்குதான?//
என்னங்க இப்படி கேட்டுட்டீங்க, உங்களுக்கு இதில சந்தேகம் வரலாமா, இன்னும் சொல்லப்போனா, இந்த கவுஜ விஷயத்தில் நீங்க தகப்பன் சாமிஆகிட்டீங்க.

//நெறைய பேரு டிரை பண்றா மாதிரி தெரியுது. நீங்க ஜஸ்ட்டு என் பேர டிக்ளேர் பண்ணிடுங்க//
உறுதியா நம்புங்க, நீங்கதான் இந்த குருவையே மிஞ்சிய பிரதம சிஷ்யர்

மீதி எல்லாம் நான் பாத்துக்கறேன்.(கல்லு படாம பில்லோ(pillow) புடிப்போம்ல)
திரும்ப திரும்ப என் கண்ல ஆனந்தக் கண்ணீர வரவழைக்கறீங்க, உங்களைப் போல சிஷ்யன் இருக்கும் வரை என்னைபோன்ற குருவெல்லாம் கவலையேப்படத் தேவையில்லை.

Kamal said...

ஹா ஹா ஹா!!!!!!!!!
ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க!!!!
சூடான இடுகைல உங்க பதிவு இப்போவாது வந்துதா???

rapp said...

ஆஹா கமல்ங்கர பேருடைய உங்க வாழ்த்து பார்த்து புல்லரிச்சுப்போயிட்டேன்.
அஞ்'ஞாநி' பதிவுல ஆரம்பிச்சு கிட்டத்தட்ட என்னோட எல்லாப் பதிவுமே தமிழ்மணத்துல சூடான இடுகைல மினிமம் ஒரு நாளாவது இருக்குதுங்க. இதுல அப்படி போட்டது சும்மா நக்கல் பண்றதுக்கு:):):)

Vijay said...

செரீஈ....

ஆனா எங்கியோ ஏதோ சரியா தெரியலையே. அவசர அவசரமா என்ன மேல தூக்கறத பார்த்தா......"ராப்" வேற ஏதும் பிரச்சன இல்லியே? தனியா, கினியா விட்டுட்டு ஓடிரமாட்டிங்களே?...ஏன் கேக்றேன்னா.... நாங்க எல்லாம் மேடைக்கி முன்னால நின்னு அதகளம் பண்ணூவோம். பீகிலு வுடுவோம்..பாச்சா காட்டுவோம்...ஆனா மேடமேல ஏத்துனீங்கக....அவ்ளோதான்... தொடை அடிக்கிற தந்தில மைக்கல் ஜாக்ஸனே பயந்துடுவாரு. குருவே உங்க நிழல்லயே வளர்றோம். ஒத்தைல விட்ராதீக...

கயல்விழி said...

//நீங்க வேற கயல்விழி, ப்ளாகர்னா இப்படித்தான் கண்டபடி கேணத்தனமா பில்ட் அப் கொடுத்திடனும், இல்லைனா யாருமே கும்மி(அதாவது துப்ப) அடிக்க மாட்டாங்க//

எனக்கும் கேணத்தனமா பில்டப் கொடுப்பது எப்படியென்ற கலையை சொல்லி கொடுக்க சிஷ்யையா சேர்த்துக்குவீங்களா?

rapp said...

என்னோட ரெண்டு மூணு பதிவை படிச்சுமா கயல்விழி உங்களுக்கு அந்தக் கலை புரிபடலை, அப்போ எனக்குத் திறமை பத்தலைங்கறீங்களா :( இல்ல நீங்க டல் ஸ்டூடண்டுங்கறீங்களா :)

rapp said...

//ஏதும் பிரச்சன இல்லியே? தனியா, கினியா விட்டுட்டு ஓடிரமாட்டிங்களே?//
கவலையே படாதீங்க விஜய். யாமிருக்கப் பயமேன். நானெல்லாம் எவ்வளவு கேவலமா திட்டினாலும் தாங்கிக்குவேன். அதுக்கெல்லாம் அசந்தா இந்த ப்ளாகர் வாழ்க்கைய நடத்த முடியுமா? ப்ளாகர் வாழ்க்கையில இதெல்லாம் சாதா'ரணம்' விஜய்

கயல்விழி said...

//இல்ல நீங்க டல் ஸ்டூடண்டுங்கறீங்களா :)
//

உங்க திறமையைப்பற்றி குறை சொல்வேனா? நான் தான் டல் ஸ்டூடண்ட் :(

Vijay said...

//தாங்கிக்குவேன். அதுக்கெல்லாம் அசந்தா இந்த ப்ளாகர் வாழ்க்கைய நடத்த முடியுமா?//

இது...இதுதான்க தலைவிக்கு அழகு. "அஞ்சா நெஞ்சி, எதையும் தாங்கும் இதயம், தியாக தீபம்"" வாழ்க....வாழ்க!!!!!

rapp said...

ரொம்ப நன்றிங்க கயல்விழி
ரொம்ப நன்றிங்க விஜய்

கயல்விழி முத்துலெட்சுமி said...

:))

கயல்விழி முத்துலெட்சுமி said...

unga id kudungalaen.. en pathivula comment la podareengala..?

Vijay said...

வாங்க வாங்க...ஓடி வாங்க.. இன்னும் ஆறே கமெண்ட்டுதான். வாங்க..வாங்க. அது என்ன ஆறுன்னு கேக்றீங்களா? இது தொண்ணுத்தி மூணா? இன்னும் ஆறு போட்ட தெண்ணுத்தி ஒம்பது ஆகிடும். அப்புறம் நானே திரும்பி வந்து சென்சுரிய கம்பிளீட் பண்ணுவேன்ல.

வெண்பூ said...

ஒண்ணு

வெண்பூ said...

ரெண்டு

வெண்பூ said...

மூணு

வெண்பூ said...

நாலு

வெண்பூ said...

அஞ்சு

வெண்பூ said...

ஆறு

வெண்பூ said...

ஏழு

வெண்பூ said...

நூறு கமெண்ட் ஆயிடுச்சா? எல்லாருக்கும் சந்தோசமா? :):)))))))

Vijay said...
This comment has been removed by the author.
Vijay said...

வெண்பூ, நீ...நீங்கதான்....ரத்தத்தின்.......

அட பாவிங்களா....நீங்களே 100 ஆ குத்திட்டிங்களா....நல்லாஆஆஆ இருங்க...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

rapp said...

ரொம்ப நன்றிங்க கயல்விழி முத்துலக்ஷ்மி மேடம்

rapp said...

விஜய் ரொம்ப ரொம்ப நன்றி, ஆனாலும் நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரா இருக்கீங்க:):):)

rapp said...

வெண்பூ ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்க

rapp said...

வெண்பூ ஸ்மைலி விட்டுப் போய்டுச்சி, அதால இங்க போட்டுக்கறேன் :):):)

வழிப்போக்கன் said...

//வெண்பூ ஸ்மைலி விட்டுப் போய்டுச்சி, அதால இங்க போட்டுக்கறேன் :):):)
//

ஸ்மைலி...புல்ஸ்டாப்னு..200 போட்றலாம்னு..பாக்றீங்களா..

Vijay said...

//விஜய் ரொம்ப ரொம்ப நன்றி, ஆனாலும் நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரா இருக்கீங்க:):):)//

//வெண்பூ ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்க//


////வெண்பூ ஸ்மைலி விட்டுப் போய்டுச்சி, அதால இங்க போட்டுக்கறேன் :):):)
//

ஸ்மைலி...புல்ஸ்டாப்னு..200 போட்றலாம்னு..பாக்றீங்களா..//

"ராப்"

ஆகா!!!! இப்பவே கண்ண கட்டுதே !!!!!

தஞ்சாவூரான் said...

உலக நாயகன் சரி, உங்களுக்கு 'மொக்கைநாயகி' பட்டம் குடுக்கலாமா?? :)

rapp said...

//உலக நாயகன் சரி, உங்களுக்கு 'மொக்கைநாயகி' பட்டம் குடுக்கலாமா//
அப்போ எனக்கின்னும் அந்தப் பட்டத்தை கொடுக்கலையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

rapp said...

//ஸ்மைலி...புல்ஸ்டாப்னு..200 போட்றலாம்னு..பாக்றீங்களா//
பிரம்ம ரகசியத்தை வெளிய சொன்னா நீங்க கடல போடற பொண்ணயே கல்யாணம் பண்ண வேண்டி வரும்:):):)

rapp said...

//ஆகா!!!! இப்பவே கண்ண கட்டுதே //
என்னோட பிரதம சிஷ்யனா இருந்துகிட்டு இதுக்கே அசந்துட்டா எப்படிங்க விஜய்

கயல்விழி said...

// வெண்பூ said...
நாலு

11 July, 2008 10:59 PM


வெண்பூ said...
அஞ்சு

11 July, 2008 11:00 PM


வெண்பூ said...
ஆறு

11 July, 2008 11:00 PM


வெண்பூ said...
ஏழு

//
Cheating! cheating ! cheating!!!

Just kidding ;)

Vijay said...

////ஆகா!!!! இப்பவே கண்ண கட்டுதே //
என்னோட பிரதம சிஷ்யனா இருந்துகிட்டு இதுக்கே அசந்துட்டா எப்படிங்க விஜய்//

இல்லீங்க ராப், இது அசரல் இல்ல அசத்தல், அப்பிடி இப்பிடி பின்னூட்டம் வந்துட்டே இருக்கணும் இல்லியா?, அதுக்கு அடுத்த ஸ்டெப்.

கயல்,

ஐய்யோ, வெண்பூ, நானு.....தலைவி எல்லாம் ஒரே குட்டை, இது இப்பிடிதான் கண்டுகாதீங்க. ஆனா வந்தா பின்னூட்டம் வைக்க மட்டும் மறந்துடாதீங்க. வெண்பூ வச்ச ஒண்ணு, ரெண்டு, முணு எல்லாம் கூட பர்ப்பஸா வச்சதுதான். நாங்க உங்க கிட்ட அந்த அளவுக்கு கூட கேக்கல, ஜஸ்ட்டு புள்ளி, கோடுன்னு மட்டும் பின்னூடம் வச்சாக்கூட அக்ஸப்ட் பண்றோம். "ராப்" கரீட்டுதானே?

ஜி said...

:))) kalakkals of Ulaga Nayagam :))

rapp said...

ரொம்ப நன்றிங்க விஜய்
ரொம்ப நன்றிங்க ஜி

குசும்பன் said...

// நான் ஜே.கே.ரித்தீஷ் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவள் என இவ்விடத்தில் எல்லோருக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன்.//

அவ்வ்வ் அம்புட்டு டேஞ்சரானா ஆளா நீங்க?

SanJai said...

//இந்தப் பதிவை பார்த்து நான் கமல் ரசிகை என யாரும் எண்ண வேண்டாம். நான் ஜே.கே.ரித்தீஷ் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவள் என இவ்விடத்தில் எல்லோருக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன்.//
ச்ச.. இப்படியா ஏமாத்துவீங்க? நீங்க கமல் ரசிகர் மன்றத்துல சேர்ந்துட்டிங்க போல.. இனி நான் தான் அகில உலக ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றத் தலைவர்னு ஆசையோட இங்க வந்தேன்.. என் ஆசைல லாரி லாரியா மண்ணள்ளி போட்டுட்டிங்களே தலைவி? :(((((

rapp said...

ஆஹா, எங்களப் பத்தி இப்பவாவது புரிஞ்சிக்கிட்டீங்களே குசும்பன். இன்னும் எங்களோட அகிலாண்ட நாயகனைப் பத்தியும் அவரோட ரசிககர்களான எங்களப் பத்தியும் போகப் போக இந்த உலகமே புரிஞ்சிக்கும்

rapp said...

சஞ்சய், அந்தப் பதவிய விட்டுத்தர நான் என்னைக்குமே முன்வர மாட்டேன். நாம ஒன்னும் சாம் ஆண்டர்சன் மன்றத்து ஆட்கள் இல்லை, அகிலாண்ட நாயகன் மன்றம்னா இப்படி எக்கச்சக்க போட்டிகள் இருக்கும் தான். ஆனா, அதை நாம பொறாமையா வளர விடக் கூடாது. என்ன சொல்றீங்க?(அனாவசியமா காரித்துப்பி உங்களோட நாக்க வறட்சியாக்கிக்காதீங்க)

விஜய் said...

வாழ்த்துக்கள்.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

திங்கள் சத்யா said...

//”உங்களுக்கு உலகத்தின் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளரான டாக்டர் விஜயை தெரியுமா" என்றேன். பேந்தப் பேந்த முழித்தவர் சொன்ன பதில், “நான் நிறைய ஆராய்ச்சியாளர்களை சந்திப்பவன், அப்படி ஒரு பெயரை கேள்விப்பட்டதேயில்லையே”. மருத்துவரான அவரது தோழியும் தோள்பட்டையை உயர்த்தி உதட்டைப் பிதுக்கி “தெரியவில்லை” என்று உடல்மொழியால் சொன்னார். சரி உங்களுக்குபிடித்த ஒரு க்ளாசிகல் ஆராய்ச்சியாளர் பெயரை சொல்லுங்கள் என்றேன்.. 'professor andrew wallard' என்று சொன்னார். உங்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தெரியுமா என்று பக்கத்தில் நின்றிருந்த ஒரு ஹாலந்து நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளரை கேட்டேன், ம்ஹூம் தெரியவே தெரியாது என்றார்.சரி சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரயாவது தெரியுமா என்றேன், அதற்கும் உதட்டை பிதுக்கினார். சரி மூடர்களுக்கென்ன தெரியும்னு அடுத்து நின்ன ஜப்பான் நாட்டு கப்பல் கேப்டனிடம், உங்களுக்கு கேப்டன் விஜயகாந்த் தெரியுமா எனக் கேட்டேன்,//

அய்யோ... சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகுதேன்னு விசனப்பட்டா, நூத்துக்கணக்கான பின்னூட்டங்களைப் பார்த்து வயிறு எரியுது. ஆங், ஆ....ங்... வயிறு எரியுதுன்னு நான் சொல்லமாட்டனே! எப்டி இப்டிலாம் திங்க் பண்றீங்க வெட்டியாபீசர். நீங்க ஒரு அறிவு ஜீவி. அப்டினா... உங்க வீட்டுக்காரர் எப்படி விஞ்ஞானி ஆனாரு. சீக்கிரம் நீங்க மெய்ஞானி ஆவுங்க. இல்லைன்னா, உங்களுக்கு 'ஞாநி'லாம் போட்டியா வந்துடுவாங்க.

rapp said...

// இல்லைன்னா, உங்களுக்கு 'ஞாநி'லாம் போட்டியா வந்துடுவாங்க//


அவரு எனக்கு ஏற்கனவே செமப் போட்டியாளரா ஆகிட்டாரு. என்ன, அவரோட எழுத்துக்கள் கொஞ்சம் ஜாஸ்தி காமடியா இருக்கும். அதுவும் அவர் ஏன் பெரும் ஞாநின்னா, தான் காமடியா எழுதறோங்கரதே அவருக்குத் தெரியறதில்லை. அதேசமயம் படிக்கிற நாம விழுந்து பொரண்டு சிரிக்கறோம், சரிதானேங்க :):):)

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றிங்க திங்கள் சத்யா