டிஸ்கி 1: கிருஷ்ணா(பரிசல்காரன்), மங்களூர் சிவா, (யுகபாரதி வேற எழுதறார் இல்ல) இவங்களோட பதிவயெல்லாம் பார்த்திட்டு அத மாதிரியான கவிதைகள எதிர்பார்த்து வந்திருந்தீங்கன்னா இப்பவே கழண்டுக்கங்க, அப்பாலிக்கா ஏற்படுற பாதிப்புக்கு நான் பொறுப்பில்லீங்கோ.
டிஸ்கி 2: இந்தப் பதிவு என்னோட ஆசான்களான டி.ராஜேந்தருக்கும், பேரரசுவுக்கும் சமர்ப்பணம்.
இவங்க ரெண்டு பேரும் எனக்குள்ள தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க. இனி இந்த எலியோட இம்சையான மலரும் நினைவுகள கேட்டு காண்டானீங்கன்னா, என் பதில் ஒண்ணுதான். வாயில வந்ததெல்லாம் (வாந்தியா இருந்தாக்கூட) கவிதைனு கற்பனை பண்ணிக்கிட்டு, பல மசாலா ஹீரோக்களோட வாழ்க்கைக்கு சூனியம் வெக்க வந்திருக்க பேரரசோட அழிச்சாட்டியத்த நிறுத்தச் சொல்லுங்க, நான் நிறுத்தறேன். ரைமிங்கா பேசினாலே அதுக்குப் பேரு கவிதைனு ரெண்டு மூணுத் தலைமுறையயே நம்ப வெச்சு கழுத்தறுத்துகிட்டிருக்காரே டி.ராஜேந்தர் அவர நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்தறேன். இருங்க இருங்க, கவலைப்படாதீங்க, இப்படில்லாம் நான் சொல்லப்போறதில்லை, அரசன்(என் கதைல வர்ற பிரண்டு) என்னை அன்றே கொன்னுட்டான்(அப்ப நீ ஆவியானெல்லாம் கேட்டீங்கன்னா அப்புறம் தேவர் பிலிம்ஸ் படம் மாதிரி விளக்கமா எழுதி மத்த பதிவுகள்ல போட்ட பிளேடத் திருப்பிப் போடுவேன்), அதாவது வன்முறையில் நம்பிக்கையில்லாதக் காரணத்தால்(தேவையான ஆப்பு அப்போதே வைக்கப்பட்டமையால்) இந்த பாதகத்தை நான் எப்பவோ நிறுத்திட்டேன், ஆனாலும் மேலே குறிப்பிட்டுள்ள என் ஆசான்களின் பாதிப்பு தமிழ்நாட்ட என்னமா ஆட்டிப் படைக்குதுன்னு மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தத்தான் இந்தப் பதிவு.
ஏற்கனவே என்னோட பேர்வெல் டே அனுபவங்களை இங்கே http://vettiaapiser.blogspot.com/2008/06/blog-post_06.html பதிஞ்சுருக்கேன். அதுல +2ல கொண்டாடின ஏனோத்தானோ பேர்வெல் டே பத்தி சொல்லிருந்தேன்ல, அந்த பேர்வெல் டேல, மரபு மாறாம சீனியர்களான எங்கள பழிவாங்க வழக்கம்போல சீட்டுக் குலுக்கிப் போட்டு, யாருக்கு எது வராதோ அதையே செய்யச் சொல்லி கட்டக் கடசியா இந்த ஜூனியர்ஸ் ரேக் பண்ணுவாங்கல்ல, அத மாதிரி எனக்கு ஆப்படிக்கறதா நெனச்சு அவங்க தன் சொந்தக் காசிலயே சூனியம் வெச்சுகிட்டாங்க.
என்னோட கவிதை அலர்ஜி கிட்டத்தட்ட எங்க பள்ளிக்கூடத்துல எல்லாருக்குமே தெரியும். இதை இந்த புத்திசாலிங்க பயன்படுத்திக்கிட்டு அதையே எனக்கு வரமாதிரி பாத்துகிட்டாங்க. நாங்க யாரு? விடுவமா, அங்கயே ஒரு கவிதைய எடுத்துவிட்டேன். அது என்னன்னா,
கும்ப்ளே
நீ ஒரு ஆம்பளே
உங்க அம்மா ஒரு பொம்பளே.
இதெப்படி இருக்கு! இதக் கேட்டு அந்தப் புத்திசாலிங்களோட சேர்த்து பரீட்சை பயத்துல ஒரு மார்கமா இருந்த எங்கக் கிளாசு பசங்களும் (புத்திபேதலிச்சுப் போய்டுச்சோ இல்ல விட்டா அடுத்த கவிதைய ஆரம்பிச்சிடப்போறாங்கிற பயத்திலயோ) கன்னாமுன்னானு தட்டோ தட்டுன்னு(கையத்தாங்க) தட்டுறாங்க. கீழ எறங்கினா ஒரே பாராட்டுமழை. சிலப் பேர் சீரியஸா மூஞ்ச வெச்சுகிட்டு,"உன்னோட இந்தத் திறமைய இவ்ளோ நாள் ஏன் வீணாக்கினேனு" கேட்டுட்டாங்க.
விடுவனா நானு. அடுத்தக்கட்ட தாக்குதலுக்கு வியூகம் வகுக்க ஆரம்பிச்சேன். பாராட்டுன அப்பாவிங்க அதோடப் போக வேண்டியதுதானே. ஒரு பலியாடு கடசீ பரீட்சை முடிஞ்சப்புறம் நேரா பலிப்பீடத்துக்கு(அதாவது என்கிட்டே) வர, என்ன ஏதுன்னு நானும் நல்லபுள்ளயாட்டமா கேட்டேன். அந்தப் பலியாடும் தன் கழுத்துல தானே மாலைப் போட்டுக்கறதப் பத்தின தெளிவில்லாம என்கிட்டே ஆட்டோகிராப் புக்க நீட்டப் போக, என்னோட கவிதை ஏவுகணைய ஏவினேன்.அதென்னன்னா
மேலப் பார்த்தா வானம்
கீழப் பார்த்தா பூமி
உங்கம்மா எல்லார்க்கும் மாமி
இப்படி எழுதி என் கையெழுத்தும் போட்டுக் குடுத்திட்டேன். அந்தப் பொண்ணும் ரோபோ படத்துக்கு முத நாள் முத ஷோ டிக்கட் கெடச்சா மாதிரி பெருமையாகி ஓடுனா. இங்க நீங்க கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, அந்தப் பொண்ணு பிராமண பொண்ணு. அவங்கம்மா எல்லார்கிட்டயும் ரொம்ப அன்பா பழகுவாங்க. நாங்களும் அவங்கக்கிட்ட மாமி, மாமின்னு ரொம்ப ஒட்டுதலா இருப்போம். அத மனசுல வெச்சுத்தான் நான் அப்படி எழுதினேன். மாமாவோடப் பொண்டாட்டி மாமிங்கறது சுத்தமா மறந்துப்போச்சு. இதுப் புரியாதவங்க அந்தப் பொண்ணுகிட்ட நான் டபுள் மீனிங்க்ல அவள நக்கல் பண்ணிட்டதா போட்டுக் குடுத்துட்டாங்க(ஏன்னா அந்தப் பொண்ணு அப்பப்போ யாரையாவது லவ் பண்றேன்னு சொல்லி உளறுவா, ஆனா அவ இன்பாச்சுவேஷன்ல ஜாலியா சொல்றான்னு நாங்க யாரும் எப்பவுமே அதை சீரியஸா எடுத்துக்கலை)
அன்னிலேருந்து அவ செமக் காண்டா ஒரு மாசத்துக்குத் திரிஞ்சா, ஏன்னா அதுவரைக்கும் எனக்கு விஷயம் புரியவே இல்லை. கடசியா ஒரு நல்ல உள்ளம் என் ட்யூப் லைட்டுத்தனம் தாங்க முடியாம விளக்கப்போக, அப்புறம் என்னோட கவிதை ஆர்வத்தை தூக்கி குப்பைதொட்டிலப் போட்டுட்டு அவகிட்டப் போய் விளக்கம் சொல்லி சமாதானப்படுத்தினேன். ஏற்கனவே என் கலை மற்றும் கவிதையார்வத்தை பத்தி அவளுக்கு முழுசா தெரிஞ்சதால ஆப்பு அத்தோட முடிஞ்சுது. இன்னைக்கு அவளும் இந்தப் பதிவ படிச்சுக்கிட்டுருக்கா, இந்த மொக்கைய படிக்கறச்சே அவ முகம் எப்படி மாறுங்கறத உங்களோட கற்பனைக்கே விட்டுடறேன்.
110 comments:
//கும்ப்ளே
நீ ஒரு ஆம்பளே
உங்க அம்மா ஒரு பொம்பளே.//
இளைய தளபதி டாக்டரு விசய்க்கு சிஷ்ய கோடியா நீங்க?
வாங்க வேலன். நானெல்லாம் கவித எழுதினா வேறப்படிங்க இருக்கும். இப்படித்தான இருக்கும். ஆனா நான் என்னைக்கும் என் தானைத் தலைவர் ஜே.கே.ரித்தீஷ் மன்றத்திலேருந்து விலகவே மாட்டேன். விஜய் என்னங்க விஜய், எங்க தலயோட திறமை கிட்டக் கூட நெருங்க முடியுமா அவரால?
ராப், எப்படிங்க இப்படி... கவிதைங்க (!!) சான்ஸே இல்லை... சிரிச்சி சிரிச்சி சிரிச்சிக்கிட்டே இருக்கேன். இன்னும் நிறைய எழுதுங்க...
எங்கங்க ச்சின்னபையன், இப்போல்லாம் எக்கச்சக்க போட்டி ஆகிடுச்சி. அது மட்டும் இல்லாம மக்கள் முழுசா வன்முறையின் மேல் நம்பிக்கை இழக்காம அப்பப்போ கொலை, ஆள் வைத்து அடித்தல்னு அகிம்சை பாதையை விட்டு விலகிட்டு இருக்காங்க. நாம வேற ஏன் அவங்கள ஊக்குவிக்கும் விதமா, கவிதை எழுதி வன்முறையில் இறங்கத் தூண்டணும்னு என் ஆர்வத்தை அடக்கிட்டேங்க.
நீங்க அப்ப நிறுத்தியிருக்க கூடாது... உங்களை மாதிரி போட்டிக்கு யாரும் இல்லைனு தான் இந்த பேரரசு இப்படி பாட்டு எழுதிட்டு திரியறார்...
நீங்க மறுபடியும் ஆரம்பிங்க ;)
//கும்ப்ளே
நீ ஒரு ஆம்பளே
உங்க அம்மா ஒரு பொம்பளே.//
இளைய தளபதி டாக்டரு விசய்க்கு சிஷ்ய கோடியா நீங்க?//
இப்போ இதெல்லாமா முக்கியம் அத விட ரொம்ப முக்கியமான விஷயம் ஒன்னு சொல்லி இருக்கரில்ல
//இன்னைக்கு அவளும் இந்தப் பதிவ படிச்சுக்கிட்டுருக்கா,//
யாருங்க அது ஒழுங்கா முன்னுக்கு வந்திருங்க நாங்க rappக்கு கும்மி அடிக்கனும்.... அதனால முன்னுக்கு வந்திருங்க
//கும்ப்ளே
நீ ஒரு ஆம்பளே
உங்க அம்மா ஒரு பொம்பளே.
//
சரி தாம்லே!
கலக்கறே ராப்
என்னால சிரிப்பை கட்டுபடுத்தவே முடியலை. சும்மா மறுபடி ஷ்டார்ட் மியூஜிக் போடுங்க. :))
ஹி ஹி, வன்முறை கலாச்சாரத்தை ஊக்குவிக்கக் கூடாதுங்கற உயர்ந்த எண்ணம் தான் வெட்டிப்பயல் சார். இப்போக்கூட நான் தயாராத்தான் இருக்கேன். உங்க மனசுல இந்தக் கொடுமைய தாங்கிக்கற தைரியம் இருக்கானு சொல்லுங்க. உடனே நேயர் விருப்பக் கவிதைகள ஆரம்பிச்சிடுறேன்.
//யாருங்க அது ஒழுங்கா முன்னுக்கு வந்திருங்க நாங்க rappக்கு கும்மி அடிக்கனும்.... அதனால முன்னுக்கு வந்திருங்க//
இவன் சார்,
அவ ப்ளாக் எழுதறதில்லை. ஆனா என்னால அன்பான முறையில் (என் ப்ளாக தினமும் படிச்சாகணும்னு) ப்லாக்மயில் பண்ணப்படற ஆட்கள்ல ஒருத்தி. இந்த லிஸ்ட்ல என் கணவர், பெற்றோர், அக்கா,அக்காக் கணவர், கசின்ஸ், ஸ்கூல் காலேஜ் பிரண்ட்ஸ்னு, இவங்க எல்லாரும் உண்டு. இதுல சின்னதா ஒரு நெருடல்னா என் கணவருக்கும், எங்கக்கா கணவருக்கும் தமிழ் படிக்கத் தெரியாது.
அதுக்காக நான் விட்ற முடியுமா? நாங்கெல்லாம் யாரு?
//சரி தாம்லே!
கலக்கறே ராப்
என்னால சிரிப்பை கட்டுபடுத்தவே முடியலை. சும்மா மறுபடி ஷ்டார்ட் மியூஜிக் போடுங்க//
ஹி ஹி, நெம்ப நன்றி அம்பி அண்ணே. அப்போ திருப்பி இப்படிப்பட்ட கொலைவெறிக் கவிதைகள ஆரம்பிச்சிடலாங்கறீங்களா? ஆனா இன்னைக்கு குமுதம் டாட் காம்ல மனநல மருத்துவர் ஷாலினி கொடுத்த பேட்டியில, ஏற்கனவே நெறயப் பேர் தற்கொலை எண்ணத்தோட இருக்காங்கன்னு சொன்னாங்க. அதான் யோசிக்கிறேன், ஏன் ஊரார் வயித்தெரிச்சலை கொட்டிக்கணும்னு?
////கும்ப்ளே
நீ ஒரு ஆம்பளே
உங்க அம்மா ஒரு பொம்பளே.///
குபீர் -னு சிரிச்சிட்டேன் ப்பா. என்ன அழிச்சாட்டியம்! ம்ம்ம் ம்ம் :-)))
///கணவருக்கும், எங்கக்கா கணவருக்கும் தமிழ் படிக்கத் தெரியாது.
அதுக்காக நான் விட்ற முடியுமா? நாங்கெல்லாம் யாரு?///
இதெல்லாம் ரொம்ப ஓவரு! அப்பாவிகள் மீதான கொடுமைகள் இனியும் தொடர்ந்தால் நேட்டோ படைகள் பாரிஸ் நோக்கி விரையும்!
சொன்னா நம்ப மாட்டீங்க மோகன், என் பிரண்டு ஒருத்தி இந்தக் கவிதைய வீட்ல போய் சொல்லிருக்கா, அத அவங்கண்ணன் கேட்டு அதிர்ச்சியாகி இந்தக் கவிதையோட தீவிர தாக்கத்தால இதையும் என்னையும் மறக்காம இருந்திருக்கார். என் நேரக் கொடும பாருங்க அவர் எனக்கு காலேஜ்ல சீனியர். ரேகிங்கின்போது எந்த ஸ்கூல், எந்த ஏரியானெல்லாம் கேட்டுகிட்டே வந்தவரு, அப்போ என் தங்கையத் தெரியுமான்னு கேக்கப்போக, நானும் தெரியும்னு சொல்ல, அப்போ 'அவளா நீயுன்னு' ஜெர்க்காகி, சகல மரியதைகளோட(அதாவது மானத்தை வாங்கிட்டாருன்னு அர்த்தம்) அனுப்பி வெச்சார். ஸ்ஸ்ஸ் அப்பா இப்ப நெனச்சாலும் கண்ண கட்டுது.
//இதெல்லாம் ரொம்ப ஓவரு! அப்பாவிகள் மீதான கொடுமைகள் இனியும் தொடர்ந்தால் நேட்டோ படைகள் பாரிஸ் நோக்கி விரையும்//
இதுக்கெல்லாம் அசருவமா, எந்தப் படை வந்தாலும் எங்க தல ரித்தீஷோட படத்தை போட்டு காட்டி நடுநடுங்க வெச்சி ஓட்டிருவோம்ல.
:-))))
நன்றி கிரி.
//////கும்ப்ளே
நீ ஒரு ஆம்பளே
உங்க அம்மா ஒரு பொம்பளே.///
//
ஆஹா!!!
இப்படி ஒரு பொருள் பொதிந்த கவிதையை வாழ்நாளில் படித்ததே இல்லை ராப். :) :) :)
You made my day.
//இப்படி ஒரு பொருள் பொதிந்த கவிதையை வாழ்நாளில் படித்ததே இல்லை ராப்//
நாங்கெல்லாம் யாருங்க கயல்விழி? ஜே.கே.ரித்தீஷின் தொண்டர்கள், பேரரசுவின் ரசிகர்கள், சாம் ஆண்டர்சனின் படங்களுக்கு டப் பைட் கொடுப்பவர்கள், மொத்தத்தில் வருங்காலத்தில் டாக்டர்.விஜய் படங்களுக்கு பாடல்கள் எழுதும் வல்லமை படைத்தவர்கள்.
\\ கும்ப்ளே
நீ ஒரு ஆம்பளே
உங்க அம்மா ஒரு பொம்பளே \\
இப்படி ஒரு கவுஜ எழுதிருக்கீங்கனு
கும்பிளேவுக்கு தெரிஞ்சா
அப்படியே புளங்காகிதம் அடஞ்சுருவாரு
;-))))
நெம்ப நன்றிங்க அதிஷா.
//இப்படி ஒரு கவுஜ எழுதிருக்கீங்கனு
கும்பிளேவுக்கு தெரிஞ்சா
அப்படியே புளங்காகிதம் அடஞ்சுருவாரு
//
ஒரு வகைல பார்த்தா நான் அவர யாருமே பாராட்டாத மாதிரி ஒரு வித்தியாசமானக் கோணத்தில் பாராட்டிருக்கேன்ல, பாருங்க எனக்கே இத்தனை நாளா இதுத் தோணாமப் போய்டுச்சி.
டாக்டர் விஜய்க்கு பாடல் எழுதப்போறீங்களா? தெய்வமே ஏன் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை?? இருக்கிறவங்க பண்ணும் தொல்லையே தாங்க முடியவில்லை, இதில நீங்க வேறயா?
//டாக்டர் விஜய்க்கு பாடல் எழுதப்போறீங்களா? தெய்வமே ஏன் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை?? இருக்கிறவங்க பண்ணும் தொல்லையே தாங்க முடியவில்லை, இதில நீங்க வேறயா?//
அவரு உண்மையா படிச்சி டாக்டர் பட்டம் வாங்கினவங்க, அப்புறம், நாட்டுக்கு நிஜமாவே சேவை செய்து கௌரவ டாக்டர் பட்டம் வாங்கினவங்களைப் பத்தில்லாம் கவலைப் படறாரா, சொல்லுங்க கயல்விழி சொல்லுங்க. அதான் அந்த நல்லவர்களின் சார்பாக ஒரு வித்தியாசமான டார்ச்சரப் போட்டு அவர நடுநடுங்க வைக்கப் புறப்பட்டுட்டேன்.
//கிருஷ்ணா(பரிசல்காரன்), மங்களூர் சிவா, (யுகபாரதி வேற எழுதறார் இல்ல) இவங்களோட பதிவயெல்லாம் பார்த்திட்டு அத மாதிரியான கவிதைகள எதிர்பார்த்து வந்திருந்தீங்கன்னா இப்பவே கழண்டுக்கங்க,//
என்னாங்க இது.. நானொண்ணும் அவ்ளோ பெரிய கவிஞன் கிடையாது (இப்ப யாரு உன்ன அப்படிச் சொன்னா? ங்கறிங்களா?) ஆனா நல்ல கவிதையை ஓரளவு ரசிக்கத் தெரியும்.. அந்த அனுபவத்துல கவிதைங்கற பேர்ல ஏதோ எழுதறேன்!
சீரியஸா ஒண்ணு சொல்லட்டுமா.. என்னடா இந்தப் பதிவு அதுக்குள்ள முடிஞ்சுடுச்சே-ன்னு (ரொம்ப நாளைக்குப் பிறகு) உங்க இந்தப் பதிவைப் பார்த்து நெனச்சேன்!
ர்ர்ர்ர்யல்ல்ல்லி சூப்பர்ப்! பல இடங்கள்ல (என்னது, ஒரு பதிவை எத்தனை இடத்துலேர்ந்து படிச்சீங்க-ன்னு கேக்கறிங்களா? அதாவது பதிவுல பல இடங்கள்ல) என்னையுமறியாம சிரிச்சேன்! !
//என்னாங்க இது.. நானொண்ணும் அவ்ளோ பெரிய கவிஞன் கிடையாது//
கிருஷ்ணா, நீங்க இப்படித்தான் சொல்லணும், இல்லைனா உங்களுக்குத் தலைக்கனம்னு சொல்லுவாங்க. அதுக்காக நான் உண்மைய சொல்லாம இருக்க முடியுமா?உங்க பாராட்டுக்களுக்கு ரொம்ப நன்றி.
// rapp said...
ஹி ஹி, வன்முறை கலாச்சாரத்தை ஊக்குவிக்கக் கூடாதுங்கற உயர்ந்த எண்ணம் தான் வெட்டிப்பயல் சார். இப்போக்கூட நான் தயாராத்தான் இருக்கேன். உங்க மனசுல இந்தக் கொடுமைய தாங்கிக்கற தைரியம் இருக்கானு சொல்லுங்க. உடனே நேயர் விருப்பக் கவிதைகள ஆரம்பிச்சிடுறேன்.//
இந்த பதிவை படிச்சிட்டு பின்னூட்டம் போடறேனா தெரிய வேண்டாம்... எதையும் தாங்கும் இதையும் நம்மோடது...
அடுத்த கவுஜ எப்போ?
//கும்ப்ளே
நீ ஒரு ஆம்பளே
உங்க அம்மா ஒரு பொம்பளே//
சூப்பரூ!!!!
இதுக்கெல்லாம் நாங்க அசந்துருவமா? இந்த மாதிரி எத்தனப் பேர் எங்கக் கிட்டல்லாம் போட்டு வாங்கி, எச்சில் சுரப்பியே வறண்டு போரளவுக்குக் காறி காறி துப்பிருக்காங்க.
//இந்த பதிவை படிச்சிட்டு பின்னூட்டம் போடறேனா தெரிய வேண்டாம்... எதையும் தாங்கும் இதையும் நம்மோடது//
வெட்டிப்பயல் சார்,
இதுக்கெல்லாம் நாங்க அசந்துருவமா? இந்த மாதிரி எத்தனப் பேர் எங்கக் கிட்டல்லாம் போட்டு வாங்கி, எச்சில் சுரப்பியே வறண்டு போரளவுக்குக் காறி காறி துப்பிருக்காங்க.
ரொம்ப நன்றி வழிப்போக்கன்.
:)))
இன்று முதல் "வலையுலக கவுஜாயினி"ன்னு செல்லமாக அழைக்கபடுவீர்களாக..... :)))
ரொம்ப நன்றிங்க இராம்.
//இன்று முதல் "வலையுலக கவுஜாயினி"ன்னு செல்லமாக அழைக்கபடுவீர்களாக//
இந்தப் பட்டத்துக்காக எத்தனை பேர வேணும்னாலும் கொடுமைப் படுத்தலாம்னு தோணுது, ஆனாலும் ஆட்டோ, உருட்டுக்கட்டை இப்படிப்பட்ட வார்த்தைகள கேக்கும்போது பயமா இருக்கு. நடுநடுவுல மானே,தேனேனெல்லாம் போட்டு கொஞ்சம் கௌரதயா திட்டுங்க. ஹி ஹி ஹி.
வாங்கம்மா வாங்க உங்களுக்கு ஒரு பதிவு போட்டத்தான் சரியா வருவீங்க!!
இது நானில்லை! வெட்டிபயல் பாலாஜியும் , ராயல் ராமும்!!!கூடவே நானும்:-))))
//இது நானில்லை! வெட்டிபயல் பாலாஜியும் , ராயல் ராமும்!!!கூடவே நானும்//
அபி அப்பா, எனக்கு புரியலீங்களே. அந்த மெயில் ஐடி உங்க மூணு பேரோடதா இல்ல இந்தப் பதிவப் பத்தி சொல்லிருக்கீங்களா? நான்தான் ஒரு ட்யூப்லைட்டுன்னு சொல்லிருக்கேனே, ஹி ஹி, அதால இன்னும் கொஞ்சம் விளக்கமா (அதாவது டைரக்டா) சொல்லுங்களேன்.
//நீங்க அப்ப நிறுத்தியிருக்க கூடாது... உங்களை மாதிரி போட்டிக்கு யாரும் இல்லைனு தான் இந்த பேரரசு இப்படி பாட்டு எழுதிட்டு திரியறார்...//
நான் சொல்ல வந்தத வெட்டி சொல்லிட்டார்...இப்பவும் ஒன்னும் மோசம் இல்ல இந்த போஸ்ட் URL பேரரசுக்கு FWD பண்ண வேண்டியதுதான்... :-)
//இன்று முதல் "வலையுலக கவுஜாயினி"ன்னு செல்லமாக அழைக்கபடுவீர்களாக..... :)))//
ராயலு இப்படியே ஏத்திவிட்டு ஏத்திவிட்டு நம்மள எல்லாம் ரணகளம் ஆக்காம விட மாட்டீங்க போல... :-)
உங்க அக்கிரமம், அராஜகம், அழிச்சாட்டியம் இதுக்கெல்லாம் அளவே இல்லாம போச்சி. நேத்து உங்கள பேரரசு தேடிட்டு இருந்தாரு. அவரோட அடுத்தப் படத்துக்கு உங்களத்தான் பாட்டு எழுத சொல்லப்போறாராம்.
ஸ்யாம் அண்ணே, நாங்கெல்லாம் கைப்புள்ள(வின்னர் பட) ஜாதி. பேரரசு, டாக்டர்.விஜய், அரசியல் ஆசையில சுத்திகிட்டுருக்கவரும், சொந்த மகனுக்கே சூனியம் வெக்கிற வல்லமை படைச்சவருமான அவங்கப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படி யார் வந்தாலும் நாங்க அசந்துற மாட்டோம்ல. இப்படை(ஜே.கே.ரித்தீஷின்) தோற்கின் எப்படை வெல்லும்? இந்தக் கவிதைய நீங்கல்லாம் இவிங்க கம்பிநேஷன்ல கேக்கும் நாள் வெகு தொலைவில் இல்லைன்னு உங்கள உஷார்படுத்தரேன். நேத்திலேருந்து எக்கச்சக்க போன்கால்ஸ் வருது பேரரசுவின் லேட்டஸ்ட் பேவரிட்டான ஸ்ரீகாந்த் தேவாகிட்டேர்ந்து. சூதானமா இருந்து பொழச்சிக்கிடுங்க.
//உங்க அக்கிரமம், அராஜகம், அழிச்சாட்டியம் இதுக்கெல்லாம் அளவே இல்லாம போச்சி. நேத்து உங்கள பேரரசு தேடிட்டு இருந்தாரு. அவரோட அடுத்தப் படத்துக்கு உங்களத்தான் பாட்டு எழுத சொல்லப்போறாராம்//
வெண்பூ, இதென்னங்க பிரமாதம், இந்த மாதிரி ஒரு கவிதாயினி உருவாகி இருக்கும் விஷயம் அகில உலக டாக்டர்.விஜய் ரசிகர் மன்றத்துக்காரங்களுக்கு தெரிஞ்சி போய், நான்தான் அடுத்த படத்தோட பாடலாசிரியர்னு நம்பிட்டு, என் திறமைய பார்த்து பிரம்மிச்சி, அவரோட படத்துக்கு பாட்டோட, கதை(அப்படி ஒன்னு இருக்குதுங்களா), திரைக்கதை வசனத்தையும் எழுதனும்னு சொல்லி ஒரே அடம். விஷயம் பிரெஞ்சு அரசாங்கத்துக்கு தெரிஞ்சி, முக்கிய அதிகாரிகல்லாம் வீட்டுக்கு வந்து, 'வேணாம் விட்டுரு, அழுதுருவோம்' ஒரே கெஞ்சல். சரின்னு நாக்க முக்கா பாட்ட போட்டு சமாதானப்படுத்தி அனுப்பி வெச்சேன். என்னத்த பண்றது, இப்படி என்னை மாதிரி சிலப் பேர மட்டும் ஆண்டவன் எக்கச்சக்க திறமையோடவும், அதையும் தாண்டிய கருணையுள்ளத்தோடவும் படைச்சிட்டான்.
//கும்ப்ளே
நீ ஒரு ஆம்பளே
உங்க அம்மா ஒரு பொம்பளே.//
உங்க கவிதையை தமிழக அரசு
இலக்கிய பரிசுக்கு கண்டிப்பா
பரிந்துரை பண்ணுறேன் ..பரிசு உங்களுக்குதான்
ராப்...
( நோ நோ அழக்குடது.... இது என் கடமை ...)
அன்புடன்
கார்த்திகேயன்
போட்டிக்கு பேரரசு இல்லைனா என்னை அடிச்சிக்க ஆளே கிடையாதுன்னு தெரியும் கார்த்தி. நெம்ப நன்றி கார்த்தி.
Superuu கவுஜ...
ரொம்ப நன்றிங்க sen22
இத்தனை நாளா எங்கருந்தப்பா ராப்.. திறமைய வேஸ்ட் பண்ணாதப்பா ..ஒரு ப்ளாக்குக்கு மூணு ப்ளாக்குனாலும் ஆரம்பிச்சு (ப்ரீதானே) இப்படி கவுஜக்கு.. காமெடிக்கு ..ன்னு அசத்துப்பா அசத்து..
சிரிச்சு சிரிச்சு தொண்டை கட்டிக்கிச்சு.. :))) நல்லா இருக்கனும் நீ..
ரொம்ப நன்றிங்க மேடம்.
//ஒரு ப்ளாக்குக்கு மூணு ப்ளாக்குனாலும் ஆரம்பிச்சு (ப்ரீதானே) இப்படி கவுஜக்கு.. காமெடிக்கு ..ன்னு அசத்துப்பா அசத்து//
ஆரம்பிச்சிட வேண்டியதுதான் மேடம், ஆனால் எனக்கு எல்லார் ப்ளாகையும் படிச்சிகிட்டிருக்கவே நேரம் சரியா இருக்கும். ஏதோ ரெண்டு மணியாகி இருக்கும்னு பார்த்தா அதுக்குள்ள நாலு மணி ஆகிடும். கடுப்பாகிடும். முதல்ல எல்லாம் ப்ரீ டைம்ல என்ன பண்ணலாம்னு யோசிச்சது போய், இப்போ எப்போப் பார்த்தாலும் தமிழ்மணமும் லேப்டாப்புமா இருக்கேன்.
நல்ல காமெடியான பதிவு. ரசித்து படித்தேன் நண்பரே...!
ரொம்ப நன்றி சினிமா நிருபர். இப்போ நெனச்சு பார்க்க காமடியா இருந்தாலும் அப்போ நான் இதெல்லாம் நல்ல கவிதைனு சீரியஸா நம்பினேங்க.
நன்னாயிருக்கு
ரொம்ப நன்றிங்க கூடுதுறை.
// rapp said...
//இது நானில்லை! வெட்டிபயல் பாலாஜியும் , ராயல் ராமும்!!!கூடவே நானும்//
அபி அப்பா, எனக்கு புரியலீங்களே. அந்த மெயில் ஐடி உங்க மூணு பேரோடதா இல்ல இந்தப் பதிவப் பத்தி சொல்லிருக்கீங்களா? நான்தான் ஒரு ட்யூப்லைட்டுன்னு சொல்லிருக்கேனே, ஹி ஹி, அதால இன்னும் கொஞ்சம் விளக்கமா (அதாவது டைரக்டா) சொல்லுங்களேன்.//
எனக்கும் பிரியல...
அண்ணே,
என்ன சொல்றீங்கனு தெளிவா சொல்லுங்க ;)
//எனக்கும் பிரியல...
அண்ணே,
என்ன சொல்றீங்கனு தெளிவா சொல்லுங்க//
அவர் நான் மெயில் அனுப்பின ஐடி பத்தி சொல்றாருன்னு நினைக்கிறேன்.
//கும்ப்ளே
நீ ஒரு ஆம்பளே
உங்க அம்மா ஒரு பொம்பளே//
சான்சே இல்லைங்க. கலக்கல்.கவிமடத்துல தலைவரே ஆயிடுவீங்க போல?
நிலா அப்பா, ரொம்ப நன்றிங்க.
//சான்சே இல்லைங்க. கலக்கல்.கவிமடத்துல தலைவரே ஆயிடுவீங்க போல?//
ஏத்திவிடுங்க, ஏத்திவிடுங்க, எனக்கொண்ணும் இல்லப்பா, இதயெல்லாம் நான் திடீர்னு உண்மைனு நம்பி, வியூகம் வகுக்க ஆரம்பிச்சிடுவேன். நான் வியூகம் வகுத்தேன்னா என்ன மாதிரி கவிதைகள போட்டு தாக்குவேன்னு தெரியுமில்ல:):):) அப்புறம் நீங்க எல்லாரும் அந்த வியூகத்தில் மாலையப் போட்டுக்கிட்டு இருக்கப் போறீங்க:):):)
//இவன் சார்,
அவ ப்ளாக் எழுதறதில்லை. ஆனா என்னால அன்பான முறையில் (என் ப்ளாக தினமும் படிச்சாகணும்னு) ப்லாக்மயில் பண்ணப்படற ஆட்கள்ல ஒருத்தி. இந்த லிஸ்ட்ல என் கணவர், பெற்றோர், அக்கா,அக்காக் கணவர், கசின்ஸ், ஸ்கூல் காலேஜ் பிரண்ட்ஸ்னு, இவங்க எல்லாரும் உண்டு. இதுல சின்னதா ஒரு நெருடல்னா என் கணவருக்கும், எங்கக்கா கணவருக்கும் தமிழ் படிக்கத் தெரியாது.
அதுக்காக நான் விட்ற முடியுமா? நாங்கெல்லாம் யாரு?//
உங்களுக்கு வருத்தம்... அவங்களுக்கு?? அதுசரி தய்வு செய்து என்ன சார் என்னு மட்டும் கூப்பிடாதீங்க ஏதோ பெருச கூப்பிடுற மாதிரி இருக்கு... நான் எல்லாம் சின்னப்பையன்ங்க
உங்களை சார் போட்டு கூப்பிட எனக்கும் பிடிக்கலை, ஆனா இவன் அப்டின்னு எழுதவும் ஒரு மாதிரியா இருக்கு அதான்.வேற வழியில்லாம இப்படிக் கூப்பிடறேன். சரி இனிமேல் இவன் அப்படின்னே சொல்றேன்.
லேட்டா வந்தாலும் லேட்ட்ஸ்டுதான் நாங்க.....
ராப்பு, நீங்க கவுஜங்களை வுட்டு காடசுங்க.
ஆப்பு வைக்க அலையறவங்க அடாசுங்க.
(உங்க லெவலுக்கு இல்லன்னாலும் ஏதோ கத்துகிறோம்ல)
முந்தய பின்னூட்டத்தில் //கவுஜங்களை வுட்டு காடசுங்க// என்பதற்கு "கவிதைகளை மழையாய் பொழிக" என கருத்து கொள்க.
கவுஜக்கி ஒரு "ராப்"பு
கவுஜாட்டி வரும் ஆப்பு.
ஏல்லோரும் போடுறது சோப்பு.
(எப்பிடி? நான் தேறுவேனா?)
இதில் "கவுஜாட்டி" என்பதற்கு "கவிதை எழுதவில்லை என்றால்" என்றே பொருள் கொள்வீர்கள் என தெரியும். :P
rapp
perla iruku trap
unga area irukarathentha map
aiaayao..kuninja chicken vyathi mari padicha udanaye paravuthay...posta suthi marunthadinga...
phirstu time here...thappi thavari intha posta namekingo ila kingindharo paathanganna adutha pada title song ingenthay sutruvanga..ethukum usaara irungo
//உங்களை சார் போட்டு கூப்பிட எனக்கும் பிடிக்கலை, ஆனா இவன் அப்டின்னு எழுதவும் //
ivan plus saar isikoltu ivarnu kooptu pongalen :d epuuudi
sollamarenten..unga dasavathara postum paathen..switzerland kanakka semma neutrala adichi aadirukenga...more sensible than mine :))
ஆஹா விஜய் எனக்குப் போட்டியா எத்தனப் பேரு இப்படி கெளம்பிருக்கீங்க:):):)
ரொம்ப நன்றி விஜய் வந்து கருத்துக்களை பதிஞ்சதுக்கு.
//ivan plus saar isikoltu ivarnu kooptu pongalen :d epuuudi//
இனி அப்படியே கூப்பிட்டுடரேன் gils
//sollamarenten..unga dasavathara postum paathen//
ரொம்ப நன்றி gils . கூடிய சீக்கிரம் உங்கப் பதிவுக்கு வரேன். இன்னைக்கு எக்கச்சக்க வேலை இருக்கு(அதிசயமா), அதான் பதில் கூட சீக்கிரமா போட முடியல.
//rapp
perla iruku trap
unga area irukarathentha map//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... விஜய் தான் அப்படி கெளம்பிட்டாருன்னா, நீங்களுமா
ராப், சான்சே இல்ல. கலக்குங்க. நிறைய 'நெம்புகோல்' கவிதைகளைவிட உங்க கவிதையை - சாரி - கவுஜையை ரசித்தேன்.
அனுஜன்யா
ரொம்பப் புகழாதீங்க(அதாவது எச்சில் சுரப்பிக்கு ஜாஸ்தி வேலை கொடுத்துடாதீங்க, அவ்வ்வ்வ்வ்....) அனுஜன்யா. எனக்கு வெக்க வெக்கமா வருது
எங்கேயிருந்து வருது இந்த மாதிரி ஊத்த மொக்கை வரிகள் ?? இதை கவிதைன்னு வேற சொல்லி பெருமை பட்டுக்குறீங்க ?? இத்த படிச்சா , தமிழாசிரியர்கள், தமிழ் அறிஞர்கள்..முக்கியமா மு.க..போன்றோருக்கு..நெஞ்சு வலியே வரும் போலிருக்கு.. யாராவது சாகக்கிடக்குராங்கன்னா அங்கன போயி நீங்க இந்த மாதிரி ரெண்டு கவிதை பாடுங்க.. ரிசல்ட்..ஒன்னு உங்கள போட்டு தள்ளிடுவாங்க.. இல்லேங்க இழுத்துட்டிருக்கிற உயிர் உடனே போயிடும்.. கூழுக்கு ஆசை பட்டு மீசையை செரைச்சி கிட்ட மாதிரி இருக்கு முயற்ச்சி..
ஐயா தங்கமுத்து. நகைச்சுவைன்னா என்னான்னே தெரியாம எப்படி ஐயா? இப்புடி சீரியசாவே எல்லாத்தியும் பாத்தீங்கன்னா கஷ்டம்தான். உம்ம எப்படி குடும்பத்துல சகிச்சுக்கறாங்கன்னு தெரியலய்யா
ஏம்ப்பா நொல்லை கிறுக்குமுத்து, நீ என்னமோ ட்ரை பண்ணிருக்கியே அதுக்கு பேர் என்னப்பா? தயவுசெஞ்சு சொல்லிட்டு செய்ங்கப்பா, நானெல்லாம் உங்களைவிட பயங்கர ட்யூப்லைட்டு.
பயங்கரமா சிரிக்க வைச்சுட்டீங்க.. :)))
//வெட்டிப்பயல் said...
நீங்க அப்ப நிறுத்தியிருக்க கூடாது... உங்களை மாதிரி போட்டிக்கு யாரும் இல்லைனு தான் இந்த பேரரசு இப்படி பாட்டு எழுதிட்டு திரியறார்...
நீங்க மறுபடியும் ஆரம்பிங்க ;)
//
சூப்பர் ரிப்பீட்டே....
அப்பாலிக்கா.. இந்த மாதிரி அனானி குமரிமுத்துங்க நிறைய்ய உலாவர்ற பூமிங்கறதால முடிஞ்ச வரைக்கும் கமெண்ட் மாடரேசன் போட்டு பாதுகாப்பா இருங்க..
எங்கேர்ந்து தான் கெளம்பி வர்றானுங்களோ. இவனும் கவிதய சொல்ல மாட்டேங்குறான். சொல்றவங்களையும் வுட மாட்டேங்குறான்.
வந்து உங்க கருத்துக்களை பதிஞ்சதுக்கு ரொம்ப நன்றி சென்ஷி.
அனானிங்க பிரச்சினையெல்லாம் மூத்த பதிவர்களுக்குத்தான் வரும்னு நினைச்சேன், எனக்கே போடறாங்கன்னா அவங்க எம்புட்டு காஞ்சுபோயிருப்பாங்களோ பாவம்.
வெட்டி ஆபிசர் ங்கற பேரில் என்னாடி முனியம்மா கேட்டது நீங்களா.. என்றால் அது பப்ளிஷ் ஆகிவிட்டது தேன்கிண்ணத்தில் சிறு தவறால் அது காற்றினிலே வரும் கீதம் என்கிற பெயரில் த்மிழமணத்தில் காண்பிக்கிறது..
//அனானிங்க பிரச்சினையெல்லாம் மூத்த பதிவர்களுக்குத்தான் வரும்னு நினைச்சேன், எனக்கே போடறாங்கன்னா அவங்க எம்புட்டு காஞ்சுபோயிருப்பாங்களோ பாவம்.//
இதுக்கு ஒரு பதிவு போட்ருக்கேன் வந்து பாருங்க.
:))))))!
டி.ராஜேந்தர் வாழ்க!
ரொம்ப நன்றி ராமலக்ஷ்மி மேடம்.
துளசிதளத்துல விளம்பரம் பண்ணியிருந்தீங்களா, வந்து பார்த்தேன்(அதுனால எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது). எப்படியோ, கையில ஒரு ஆயுதம் தயாரா வச்சிருக்கீங்க.
வருகைக்கு நன்றி சாமான்யன்
என்னங்க புது பதிவு ஒன்னும் காணும். கவுஜ எழுதின பட்டர்ப்ளை எபெக்டா?
அதான் எழுதற லட்சணத்த பாத்தா தெரியுதே.."கூரை ஏறி கோழி புடிக்க முடியாதவன் , வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.." உங்கள மாதிரி "ஆர்வ கோளாறுகளுக்கு" இலவசமா எழுத வலைபூவில "கூகிள்" காரன் இடம் குடுத்தான் பாரு, அவன திட்டணும்... இந்த லட்சணத்துல கமெண்ட் வேற இதுக்கு.. நாக்க தொங்க போட்டுகினே அலையுது ஒரு கூட்டம்..
நாதாரி தனமா ஒரு பதிவு.. இதுக்கு பத்து நாதாரிங்க..(என்னையும் சேத்து) பின்னூட்டம் வேற... போயி எங்காவது "பெரியார்" கோவில்ல சூரத்தேங்காய் உடைப்பாங்க.. எல்லோரும் போயி கும்பலா பொறுக்குங்க..
ஆஹா..ஆஹா...இப்படி ஒரு கவிஜையை எழுதி என் தங்கச்சின்னு ஃபுரூப் பண்ணிட்டியேமா...ஒனக்க்கு இந்த அண்ண என்னம்மா கைமாறு பண்ணப்போறேன்
(தல டி.ஆர் ஸ்டைலில் படிக்கவும்)
நீங்க எப்போ அடுத்த பதிவு போட போறீங்க...வெட்டிஆப்பீசர்ர்ர்ர்ர்...????????
என்னங்க,
புதுப் ப்திவு ஒன்னும் காணல.
எழுதுனா கவுஜ தான் எழுதுவேன்னு முடிவா?
//நெல்லை தங்கமுத்து said...
நாதாரி தனமா ஒரு பதிவு.. இதுக்கு பத்து நாதாரிங்க..(என்னையும் சேத்து) பின்னூட்டம் வேற... போயி எங்காவது "பெரியார்" கோவில்ல சூரத்தேங்காய் உடைப்பாங்க.. எல்லோரும் போயி கும்பலா பொறுக்குங்க..//
அங்கயாவது தேங்கா பொறுக்க விடுவீங்களா...இல்ல அங்கயும் குறுக்க வந்து...இது ஒரு பொழப்பா குஷ்பு கோயில்ல போயி குப்புற படுத்துகுங்கனு சொல்வீங்களா... :-)
//அங்கயாவது தேங்கா பொறுக்க விடுவீங்களா...இல்ல அங்கயும் குறுக்க வந்து...இது ஒரு பொழப்பா குஷ்பு கோயில்ல போயி குப்புற படுத்துகுங்கனு சொல்வீங்களா... :-)//
ரிப்பீட்ட்ட்ட்ட்டேடேடேய்ய்ய்ய்ய் :))
சொல்லப் போனா வெட்டியாப்பீஸரோட கவிஜய விட இந்த பின்னூட்டம் அதிக சிரிப்பை வரவழைக்கிறது.
ரொம்ப நன்றிங்க அப்துல்லா. பயணமெல்லாம் எப்படி இருந்தது?
ஏய் நாதாரி கொரங்கு, நொல்லை கிறுக்குமுத்து. நீ வீணாப் போன நேரத்துல போய் பொறுக்க வேண்டியதுதான, இதுக்கு மேல எனக்கு கேடுகெட்டத்தனமா எழுதத் தெரியும்(எம் பதிவ படிச்சிருக்கேல்ல) , உன்ன மாதிரி கெரகம் புடிச்ச டுபுக்கெல்லாம் ஒழுங்கா முகத்த காமிச்சி வர்ற மத்த பதிவருங்கள நக்கல் அடிக்கறது அவங்கள அவமானப் படுத்தறா மாதிரின்னு இனி அனானி கமன்ட் ஆப்ஷன எடுத்துட்டேன். இத படிச்சி என்னத்தையோ சாதிச்சா மாதிரி இளிக்கிற உன் கேண புத்தி தெரிஞ்சாலும் ஒழுங்கானவங்களுக்கு மதிப்பு கொடுத்து இதை செய்யறேன்.
ரொம்ப நன்றிங்க ஸ்யாம். நான் அனானி ஆப்ஷன எடுத்திட்டேன், இனி அந்த எருமையோட தொல்லை இருக்காது
ரொம்ப நன்றிங்க வெண்பூ. நான் அனானி ஆப்ஷன எடுத்திட்டேன், இனி அந்த எருமையோட தொல்லை இருக்காது
வெட்டிஆபிசர், டென்ஷன் ஆகாதீங்க. இந்த மாதிரி பாதி வெந்த பார்ட்டிகள் (அரை வேக்காடு, ஹாஃப் பாயில்டு இதுக்கு தமிழ் வார்த்தை) எல்லாம் இருந்தாதான் நமக்கும் கொஞ்சம் பொழுது போகும். நீங்க நிறுத்தாதீங்க.. இங்க எத்தன பேரு உங்களோட அடுத்த கவுஜக்கி வெயிட் பண்ணீட்டு இருக்கோம் தெரியுமா?
ரொம்ப நன்றிங்க வெண்பூ, ஆனாலும் எனக்கும் இப்படி யாரையாவது திட்டணும்னு ரொம்ப நாளா ஆசை. அத அந்த கிறுக்குப் பயல வெச்சு தீத்துக்கிட்டேன்
பயணம் ரொம்பவும் நல்லா இருந்தது.நீ கேட்ட படி மறக்காமல் உனக்கும் சேர்த்து வேண்டிக்கொண்டேன். யார்யாருக்கெல்லாம் பிராத்திக்க வேண்டும் என்று நான் பேப்பரில் எழுதி வைத்து இருந்தேன். என் அம்மா உன் பேரைப் பார்த்து ஒரிஜினல் பெயரைக் கேட்ட போது எனக்கு சொல்லத் தெரியவில்லை
:(
ராப்
கவிதை டாப்
கேட்டவங்கலாம் ஆப்
என்னங்க rapp இது? உங்க 'உலகநாயகன்' பதிவைப் படிச்சிட்டு இந்தப் பதிவுக்கு வந்தால் .. இப்ப உங்க எல்லா பதிவைப் படிக்கவேண்டிய
"கட்டாயத்தை" உண்டு பண்ணிட்டீங்களே .. ம்ம் .. என் தலையெழுத்து. வாசிச்சிர்ரேன், என்ன பண்றது?!
ரொம்ப நன்றிங்க முரளிக்கண்ணன், பாருங்க உங்களுக்குள்ள தூங்கிக்கிட்டுருந்த மிருகத்த நான் தட்டி எழுப்பிட்டேன்:):):)
அப்துல்லா, என் nom rapp தான்
ரொம்ப நன்றிங்க தருமி
ஆஹா கவிதை வெள்ளம் பெருக்கெடுத்து ஓஓஓஓஓஓஓஓடுடுடுடுடுது.... வாழ்க..இது போல் என்றென்றும்,,கவுஜ மழை பொழிய என் உள்ளம் கனிந்த வாழ்துக்கள் அக்கோவ் ;)
ஆகா இன்னைக்கு எனக்கு ஒரு சான்ஸ்
சென்ச்சுரி அடிச்சு ரொம்ப நாள் ஆட்சு...
அடிச்சிட்டோம்ல 100 :-)
ரொம்ப நன்றிங்க ஸ்யாம், வந்ததற்கும், பின்னூட்டத்தை நூறாக்கினத்துக்கும்:):):)
ரொம்ப நன்றிங்க ரம்யா ரமணி
Enung'kka intha kolaveri??
நிஜமா சொல்றேன், விழுந்து விழுந்து சிரித்தேன்
கும்ப்ளே தான் பாவம்
ரொம்ப நன்றிங்க ஜி:):):)
ரொம்ப நன்றிங்க பாபு
தலைய பத்தி தப்பாச் சொல்லிட்டாய்ங்க..சீக்கிரமா இங்க போய் பாரு
https://www.blogger.com/comment.g?blogID=8369569858390503964&postID=5664581780557864367
கவிதைகள் தொடரட்டும்.
வாழ்த்துக்கள்.
தமிழ்ப் பிரியன் பதிவை பார்த்து.காலை 04.30 தொடங்கி 0800 மணிவரை அனைத்து பதிவுகளையும் பின்னூடங்களையும் வரி விடாமல் படித்தேன்.
முதலில் பார்த்தது A பார் ஆப்பிள்
congrats.
wishing you all the best
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com
பின்ன இவங்கெல்லாம் எழுதும்போது நாம ஏன் எழுதக்கூடாதுன்னு தோணும்ல
http://mohideen44.blogspot.com
ரொம்ப நன்றிங்க விஜய் :):):)
கண்டிப்பா வருகிறேன் புதுகைச் சாரல் :):):)
Post a Comment