Monday 23 June, 2008

மக்களே, பெண்கள் சீரியல் பார்ப்பது கொலைவெறி செயலா?

என்னக் காரணத்தாலோ தமிழ்மண ப்ளாகர் பதிவுப்பட்டை செயலிழந்தமையால், மறுமுறை உங்கள் பார்வைக்கு இதனை வைக்கிறேன்.
பெண்கள் ஏன் சீரியல் பார்க்க ஆரம்பித்தார்கள்? முதலில் பொதுவான சிலக் காரணங்களை பட்டியலிட்டுவிட்டு பின்னர் சிறிது வித்தியாசமானக் காரணத்தைக் காணலாம்.

முதல் காரணம், அவை பெண்களை மையப்படுத்தியே எடுக்கப்படுகின்றது. சரி, ஆனால் இவர்கள்தான் தன்னுடைய பார்வையாளர்களாக இருப்பார்கள் என்ற தீர்மானத்திற்கு எவ்வாறு வந்தார்கள்? அது அடுத்த காரணத்தை நோக்கி நம்மை செலுத்துகிறது. இரண்டாவதுக் காரணம் பெண்களுக்கானத் திரைப்படங்கள் குறைந்து போயின. சரி ஏன் பெண்களுக்கான திரைப்படங்கள் குறைந்தன? அது மூன்றாம் காரணத்தை வெளிக்கொணருகிறது. அது என்னவென்றால் திரையரங்குகளில் நுழைவுச்சீட்டின் விலை கூடிப் போனதுதான். இதன் காரணமாக பெண்களுக்கானத் திரைப்படங்களின் தயாரிப்புக் குறைந்து போனது.

தன்னை பற்றிய,தன் குமுறல்களை பற்றிய ஒரு வாசல் மூடியவுடன், திறந்த மற்றொரு வாசலை நோக்கி பெண்களின் கவனம் திரும்பியது. அதனால் பெண்கள் சீரியல் பார்க்க ஆரம்பித்தார்கள்.எல்லாம் சரி, இந்தப் போக்கு ஆரம்பித்த பொழுது ஓரளவிற்கு நல்ல நல்லத் தொடர்கள், குறைதபட்சம் இப்பொழுது காட்டப்படும் அதீத வன்முறை மற்றும் ஆபாசம் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது இவை இந்தளவிற்குக் கூடியிருப்பதற்குக் காரணம், சில ஆண்டுகளாக ஆண்களும் பெரும்பான்மையாக சீரியல்களை நோக்கித் திரும்பியதுதான் என நினைக்கிறேன். இவ்விடத்தில் தயவுசெய்து யாரும் வீட்டில் ஒரு டிவி தானே இருக்கு, வேறுவழி இல்லாமல் பார்க்கிறேன் எனக் கூறவேண்டாம். பார்க்க பிடிக்காதப் பலர் வேறு எத்தனையோ வழிகளில் தவிர்க்கின்றனர்.

இந்த இடத்தில் நான் சீரியல் பார்ப்பவர்களை எந்த விதத்திலும் குறை கூற முயலவில்லை. எதை பார்ப்பது, எதை பார்க்காமல் இருப்பது என்பது வயதுவந்த ஒவ்வொருவரின் உரிமை. பின் ஆண்கள்(இவர்களும் அதனை பார்க்கும்போது) ஏன் பெண்கள் சீரியல் பார்ப்பதை ஒரு குற்றத்தை செய்வதை போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயலுகிறார்கள்? என்னைப் பொறுத்த வரை எப்பொழுதும் பெண்களை மட்டம் தட்ட ஒரு விஷயம் வேண்டும் என்ற மனப்போக்குத்தானே காரணம்? இதனை பெண்களோடு சேர்ந்து குழந்தைகளும் பார்க்கின்றார்களாம், அதனால் இதனை தவிர்க்க வேண்டுமாம். இதனை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இதே காரணத்திற்காக குறைந்தபட்சம் குழந்தைகளின் முன் புகைபிடிப்பதயாவது நிறுத்தி இருப்பார்களா, இல்லை தன் மனைவியை மட்டம் தட்டுவதயாவது நிறுத்தி இருப்பார்களா? சரி விடுங்கள், பெண்கள் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டால் குழந்தைகள் கெட்ட விஷயங்களை கற்றுக் கொள்ளவே மாட்டார்களா?

இன்று குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளிலிருந்து எல்லாவற்றிலும் வன்முறை நிறைந்திருக்கிறது. எப்பொழுது மீடியா என்ற ஊடகம், பரபரப்பும் வியாபரமும் எங்களின் தலையாயக் குறிக்கோள் என முடிவு செய்ததோ, அன்றே அத்துணை ஊடகச் சம்பந்தப்பட்ட பொழுதுப்போக்குச் சாதனங்களிலும் வன்முறையும் ஆபாசமும் தவிர்க்கமுடியாதவயாகின்றன. வெகுஜனப் பொழுதுபோக்கு என்பது அனைவரையும் சார்ந்து இருப்பது. இதில் பெண்கள் மட்டும் எப்படி பொறுப்பாளிகளாகிறார்கள்? வயது வந்த பெண்கள் எதை பார்க்க வேண்டும் என்று கூற ஆண்களுக்கு யார் உரிமை கொடுத்தது? நாங்கள் ஆலோசைகள்தான் கூறினோம் என்றால் பிரச்சினை இல்லை.

இதெல்லாவற்றையும் விடுங்கள், நான் மேற்கூறிய கடைசிக் காரணத்திற்கு வருவோம்.என்னுடைய தாயார் பொதுவாக நகைச்சுவை தன்மையுள்ள நிகழ்ச்சிகளையே பார்க்க விரும்புவார்கள், அத்தன்மையுள்ளவற்றையே படிக்கவும் விரும்புவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென சீரியல் பார்க்கத் தொடங்கினார்கள். அதுவும் ஒன்பது மணிக்கு மேல் ஆரம்பிக்கும் சீரியல்களை மட்டுமே விரும்பினார்கள். நானும் அப்பொழுதுதான் பிரபலமானவை வரும் நேரம் என்பதால் அவ்வாறு செய்கிறார் என நினைத்தேன். ஆனால் தான் பார்த்து வந்த தொடரின் நேரத்தை மாற்றினாலும் சரி, அந்த சமயத்திற்கு வேறொரு சீரியல் வந்தாலும் சரியென அவர்களின் போக்கு வித்தியாசமானதாக இருந்தது. அந்தச்சமயம் நான் கல்லூரிக்கு(வெகு தொலைவில் இருந்தது) சென்றுகொண்டிருந்த காரணத்தால் சீக்கிரம் தூங்கப் போய்விடுவேன். அவர் தொடர்கள் பார்க்கும் பொழுது தூங்கித் தூங்கி வழிவார். பார்க்கின்ற தொடர்களை பற்றியும் மிக எரிச்சலுடனே குறிப்பிடுவார். சீக்கிரம் தூங்கச் சொன்னாலும் செல்ல மாட்டார். எந்த விதத்திலும் தனக்கு பிடிக்காத ஒன்றை இவர் எதற்காகச் செய்கிறார் என எனக்கு கவலை மேலோங்க, ஒரு நாள் வற்புறுத்தி கேட்டபொழுது, "நான் என்ன செய்வது? எனக்கு பத்து மணிவரை முழித்திருக்க ஒரு காரணம் தேவைபடுகிறது. நாற்பது வயதிற்குப் பின் வாழ்க்கையில் இனி என்ன இருக்கிறது என்ற வெறுப்பு, பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பதற்றம், எங்களின் வயோதிகம் எப்படி இருக்குமோ என்ற பயம் எல்லாம் சேர்ந்து, இரவில் சீக்கிரம் படுத்தால் நடுஇரவில் விழிப்பு ஏற்படுத்திவிடுகிறது அதுதான். சரி உன்னிடம் பேசிக்கொண்டிருக்கலாம் என்றால் நீ போய் வரும் தூரத்திற்கு உன்னை எவ்வளவு நேரம் விழித்திருக்கச் சொல்வது? சரி என அவரிடம் பேசச் சென்றால் எது பேசினாலும் சரியான பதில் கூறுவதில்லை. நான் ஒரு வகை இடையூறு செய்வது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. அப்படியே பேசினாலும் ஏதாவது தெரியாமல் சொல்லப் போய் அதனை அவர் குற்றமாய் எடுத்துக்கொண்டு , என வாழ்க்கை மேலும் கடினமாகிறது. நான் எப்படி பேசும் ஒவ்வொரு வார்த்த்யையும் கணவரிடம் கூட யோசித்தே பேச முடியும், இல்லை செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் என் புத்திசாலித்தனத்தை புகுத்த முடியும்? சரி படிக்கலாம் என்றால் வீட்டில் உள்ள எனக்குப் பிடித்த எல்லா புத்தகங்களையும் படித்தாயிற்று, அதுமட்டுமல்லாமல் எவ்வளவு நேரம்தான் படிப்பது? அதுதான் யாரையும் தொந்தரவுப் படுத்தாமல் எதையோ பார்க்கிறேன்" என்றார்.

இதனை சரிசெய்ய என் தந்தையிடம் பேசியபோது அவருக்கு தான் கொண்டிருந்த அதீத எதிர்பார்ப்புகள் சாத்தியமில்லை என்பதே தெரியவில்லை. தான் கொண்டுள்ள கருத்துக்களில் உள்ளக் குறைகள், குறைகள் என்றே அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் மனைவிக்கு தான் விரும்புகிற அனைத்தும் பிடித்திருக்க வேண்டும் என்ற போக்கு தவறானது என்பதை அவருக்கு சிறிது சிறிதாக விளக்கி பிரச்சினையின் வேரை சரிசெய்தோம். பின்னர் அனைத்தும் ஓரளவிற்கு சரியாகியது. என் தந்தை பிள்ளைகளின் பேச்சை காதுக் கொடுத்து கேட்பவராதலால் பிரச்சினைக்கு தீர்வுக் காண முடிந்தது. வீட்டிலுள்ள யாருக்குமே காது கொடுக்காத ஆண்களின் விஷயத்தில் என்ன செய்வது?

என் தாயார் கூறியது எவ்வளவு உண்மையானக் கருத்து. என்னைப் பொறுத்த வரை பெரும்பாலானப் பெண்கள் இந்தக் காரணத்தாலேயே நெடுந்தொடர்கள் பார்க்கிறார்களோ என எனக்கொரு சந்தேகம். ஏனென்றால் நாம் விரும்பிச் செய்யும் விஷயங்களை நாம் பெரும்பாலான நேரங்களில் மறப்பதில்லை. ஆனால் நிறையப் பேர் முக்கால்வாசி தொடர்களின் கதையை(கதை இருக்கானு கேக்கக்கூடாது) கூட ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை. அப்படி விருப்பமும் இல்லாத, நிர்பந்தமும் இல்லாத விஷயத்தை அவர்கள் தொடர்ந்து செய்ய காரணம் என்ன? தயவு செய்து ஆண்கள் கோபிக்க வேண்டாம். காரணம் கணவர்கள்தான்(எத்தனையோ single status பெண்கள் பார்க்கிறார்களே எனலாம், உங்கள் கேள்வியிலேயே பதில் உள்ளது. அவர்களுக்கு வாழ்க்கைத் துணை இல்லை என்பதே காரணம்)

ஏன் பல கணவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் மனைவியுடன் ஊர் சுற்றவோ, பொதுவாக அரட்டை அடிக்கவோ தயங்குகிறார்கள். ஊர் சுற்றினாலும் மனைவியின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை? அப்படியே ஊர் சுற்றினாலும் எதற்காக சொந்த பந்தங்களின் வீட்டிற்கு செல்லவே(பல சமயம் பார்ப்பதற்கு பெண்கள்தான் அவ்வாறு விரும்புவதுபோல் தோற்றமளித்தாலும் எந்த பெண்ணும் கணவன் ஷாப்பிங் செல்லலாம் என்றோ, சினிமா செல்லலாம் என்றோ கூறும்போது, இல்லை அண்ணன் வீட்டிற்குத்தான் போக வேண்டும் எனச் சொல்வதில்லை. மாறாக கணவனின் சொந்தங்களின் வீட்டிற்குதான் செல்ல வேண்டும் என வற்புறுத்தும்போதுதான் இவ்வாறு கூறுகிறார்கள்) விரும்புகிறார்கள்? நான் சொல்லும் இடத்திற்கு நீ நாலு தடவை வந்தாயானால், நீ விரும்புகிற இடத்திற்கு நான் ஒரு தடவை வருவேன் என்ற போக்கு அவர்களின் மத்தியில் நிலவக் காரணம் என்ன?

நாம் நூறுதடவை ஒரு செயலை திரும்பத் திரும்பச் செய்கிறோம், அதனால் அதனை 101வது தடவை கண்டிப்பாக சரியாகச் செய்வோம் என்ற உறுதியுண்டா? பின்னர் பெண்கள் மட்டும் எப்படி திருமணமாகி பத்து வருடங்கள் ஆகிவிட்டபடியால் அனைத்தையும் மிகச் சரியாக செய்ய முடியும்? இதெல்லாவற்றையும் விட எரிச்சலான விஷயம், பெண்களுக்கு திருமணத்தின்போது சொல்லப்படும் அறிவுரை. அது என்னவென்றால்,"புகுந்த வீட்டில் பார்த்து புத்திசாலிதனமாக நடந்துக்கோ". இதென்ன யுத்தக் களமா இல்லை போட்டித் தேர்வா, நம் புத்திசாலித்தனங்களை காட்ட என நான் கூற வரவில்லை. ஆரம்பத்தில் ஒருத்தருக்கொருத்தர் முழுமையாகத் தெரியாததால் இவ்வாறு நடந்து கொள்வது அல்லது நடத்து கொள்ளச் சொல்வது சரி. ஆனால் பிள்ளைகள் பெரியவர்களானப் பின்னும் பல குடும்பங்களில் பெண்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதின் காரணம், ஆண்கள் தாங்கள் முட்டாளாக்கப்படுவதை மிகவும் விரும்புகிறார்களா இல்லை நானாக உன் விருப்பங்களுக்கு செவிமடுக்க மாட்டேன், நீயாக உன் மூளையை பயன்படுத்தி நிறைவேற்றிக்கொள் என்னும் மனப்பாங்கா? ஒரு பெண் கண் விழித்திருக்கும் அத்துனை நேரமும் தன் புத்திசாலித்தனத்தை பறைசாற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு கொடூரமான சிந்தனை?

இதை படிக்கும் பெரும்பாலான ஆண்களுக்கு மிகவும் எரிச்சல் வரும். நான் என் சொந்த அனுபவத்தை பொதுக் கருத்தாக்க முயல்வதாக குற்றம் சாட்டுவர். இது அவரவரின் மனசாட்சியை பொறுத்த விஷயம். நான் கூறும் விஷயம் வேறெங்கும் நடப்பதே இல்லை என்றால், இவர்களிடம் வாதிடுவதில் பயனில்லை. இன்னும் இவ்வகை குறைகள் இல்லாத சில ஆண்கள் நான் அப்படி இல்லையே எனக் கூறுவர்.இவர்களுக்கு என் பதில், அப்படிஎன்றால் மிகவும் நல்லது.இதில் குறிப்பிடப்படும் வகையைச் சேராதவர் நீங்கள். உங்களின் துணை நிறைவாக வாழ்வார் என்பதாகும்.மொத்தத்தில் இந்தப் பதிவு, தான் செய்வது தவறென்றே உரைக்காமல் தவறு செய்யும் ஆண்களுக்காகவும், தன் துணையிடம் தான் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் மிக மிக அதிகம் என்பதை உணராத ஆண்களுக்காகவும்தான். நாங்களும் பெண்களால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்கிற ஆண்களா, தாராளமாக நீங்களும் உங்கள் வலைபதிவில் தெரிவியுங்கள். நான் ஒரு பெண், அதனால் எங்களின் பிரச்சினைகளை கூறுகிறேன். அதனால் தயவுசெய்து யாரும் நீ ஏன் இவற்றை குறித்து மட்டும் எழுதுகிறாய் என்ற அர்த்தமற்ற கேள்வியை எழுப்ப வேண்டாம் என வேண்டுகிறேன். யார் மனதாவது புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

இவ்விஷயத்தில் இன்னும் பல முக்கிய கூற்றுகள் இருந்தாலும் பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டு மற்ற பிரச்சினைகளை வேறொரு சமயம் விவாதத்திற்கு எடுக்கலாம் என இத்துடன் முடிக்கிறேன்.

71 comments:

rapp said...

இது முந்தையப் பதிவின் மறுபதிப்புதான். தமிழ்மண பதிவர் பட்டையில் ஏற்பட்ட கோளாறினால் மறுமுறை பதிவிடுகிறேன்.

ராமலக்ஷ்மி said...

நன்றாக இந்தப் பிரச்சனையை ஆராய்ந்து உங்கள் கருத்துக்களை முன் வைத்திருக்கிறீர்கள். உங்கள் வீட்டிலே கண்ட தீர்வையும் கூறி,// என் தந்தை பிள்ளைகளின் பேச்சை காதுக் கொடுத்து கேட்பவராதலால் பிரச்சினைக்கு தீர்வுக் காண முடிந்தது. வீட்டிலுள்ள யாருக்குமே காது கொடுக்காத ஆண்களின் விஷயத்தில் என்ன செய்வது?//எனக் கேள்வியும் எழுப்பியுள்ளீர்கள். நல்ல பதிவு.
இதே போன்ற கருத்தில் இப்பிரச்சனைக்குத் தீர்வும் கூறி திண்ணை இணைய தளத்தில் 2003-ல் நான் எழுதிய கவிதையை விரைவில் வலையேற்றுகிறேன்.[லக்கிலுக்கின் மெகா தொடர்-10 கட்டளைகளின் பின்னூட்டதிலும் கூறியிருந்தேன்]

rapp said...

மிகவும் நல்ல விஷயம் ராமலக்ஷ்மி , விரைவில் வலையேற்ற என் வாழ்த்துக்கள். நீங்கள் வந்தமைக்கும், கருத்துக்கள் தெரிவித்தமைக்கும் மிகவும் நன்றி.

மங்களூர் சிவா said...

சீரியல் பாக்கலாமா கூடாதா???

மங்களூர் சிவா said...

சீரியல் பாக்கலாமா கூடாதா???

இல்லை டிவியே பாக்க கூடாதா???

மங்களூர் சிவா said...

/
பெண்கள் சீரியல் பார்க்க ஆரம்பித்தார்கள்.எல்லாம் சரி, இந்தப் போக்கு ஆரம்பித்த பொழுது ஓரளவிற்கு நல்ல நல்லத் தொடர்கள், குறைதபட்சம் இப்பொழுது காட்டப்படும் அதீத வன்முறை மற்றும் ஆபாசம் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது இவை இந்தளவிற்குக் கூடியிருப்பதற்குக் காரணம், சில ஆண்டுகளாக ஆண்களும் பெரும்பான்மையாக சீரியல்களை நோக்கித் திரும்பியதுதான் என நினைக்கிறேன்.
/

சபாஷ்

ஆண்கள் சீரியல் டைரக்டர்களாக இருக்கும்வரை இப்படித்தான் இருக்கும்.

மங்களூர் சிவா said...

/
பின் ஆண்கள்(இவர்களும் அதனை பார்க்கும்போது) ஏன் பெண்கள் சீரியல் பார்ப்பதை ஒரு குற்றத்தை செய்வதை போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயலுகிறார்கள்?
/

அப்படியா????

மங்களூர் சிவா said...

/
என்னைப் பொறுத்த வரை எப்பொழுதும் பெண்களை மட்டம் தட்ட ஒரு விஷயம் வேண்டும் என்ற மனப்போக்குத்தானே காரணம்? இதனை பெண்களோடு சேர்ந்து குழந்தைகளும் பார்க்கின்றார்களாம், அதனால் இதனை தவிர்க்க வேண்டுமாம். இதனை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இதே காரணத்திற்காக குறைந்தபட்சம் குழந்தைகளின் முன் புகைபிடிப்பதயாவது நிறுத்தி இருப்பார்களா, இல்லை தன் மனைவியை மட்டம் தட்டுவதயாவது நிறுத்தி இருப்பார்களா?
/

அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன் இது யார் விவேக் காமெடி டயலாக்கா இல்ல இருக்கு
:))))

மங்களூர் சிவா said...

/
வயது வந்த பெண்கள் எதை பார்க்க வேண்டும் என்று கூற ஆண்களுக்கு யார் உரிமை கொடுத்தது?
/

தனியா இருக்கும் பெண்கள் எந்த "கருமத்தை" வேண்டுமானாலும் பார்த்துவிட்டு போகட்டும் அம்மிணி.

குடும்பம் என்ற கட்டமைப்புக்குள் இருக்கும் ஒருவர் ஆணோ / பெண்ணோ கொஞ்சம் அப்படி இப்படி விட்டுகொடுத்துதான் போகவேண்டும். அதுக்கு பேர்தான் அட்ஜஸ்மெண்ட்.

மங்களூர் சிவா said...

/
நாற்பது வயதிற்குப் பின் வாழ்க்கையில் இனி என்ன இருக்கிறது என்ற வெறுப்பு, பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பதற்றம், எங்களின் வயோதிகம் எப்படி இருக்குமோ என்ற பயம் எல்லாம் சேர்ந்து, இரவில் சீக்கிரம் படுத்தால் நடுஇரவில் விழிப்பு ஏற்படுத்திவிடுகிறது
/

:((((((((

ரொம்ப வருத்தமா இருக்கு

மங்களூர் சிவா said...

/
அப்படி விருப்பமும் இல்லாத, நிர்பந்தமும் இல்லாத விஷயத்தை அவர்கள் தொடர்ந்து செய்ய காரணம் என்ன? தயவு செய்து ஆண்கள் கோபிக்க வேண்டாம். காரணம் கணவர்கள்தான
/

:))))))))))))))))
எனக்கு சிப்பு சிப்பா வருது மேடம்!!

மங்களூர் சிவா said...

/
எந்த பெண்ணும் கணவன் ஷாப்பிங் செல்லலாம் என்றோ, சினிமா செல்லலாம் என்றோ கூறும்போது, இல்லை அண்ணன் வீட்டிற்குத்தான் போக வேண்டும் எனச் சொல்வதில்லை.
/

நல்லது


/
மாறாக கணவனின் சொந்தங்களின் வீட்டிற்குதான் செல்ல வேண்டும் என வற்புறுத்தும்போதுதான் இவ்வாறு கூறுகிறார்கள
/

இது ஏன் கொழுப்புதானே

மங்களூர் சிவா said...

/
நான் சொல்லும் இடத்திற்கு நீ நாலு தடவை வந்தாயானால், நீ விரும்புகிற இடத்திற்கு நான் ஒரு தடவை வருவேன் என்ற போக்கு அவர்களின் மத்தியில் நிலவக் காரணம் என்ன?
/

எல்லாத்துக்கும் இடம் பொருள் ஏவல் இருக்கும் அம்மிணி

வீட்டோட மாப்பிளைகளும் நாட்டில நிறைய இருக்காங்க.

அப்படி வராம இருக்கவங்களுக்கு என்னென்ன இன்கன்வினியன்ஸ் இருக்குன்னு மொதல்ல பாருங்க.

மங்களூர் சிவா said...

/
"புகுந்த வீட்டில் பார்த்து புத்திசாலிதனமாக நடந்துக்கோ".
/

முட்டாள்தனமாக நடந்து கெட்ட பெயர் வாங்காதே என அர்த்தம் எடுத்துக்கங்களேன். சொல்றது யார் பெண்ணை பெற்றவங்கதானே


/
ஒரு பெண் கண் விழித்திருக்கும் அத்துனை நேரமும் தன் புத்திசாலித்தனத்தை பறைசாற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு கொடூரமான சிந்தனை?
/

:)))))))))))

சின்னப் பையன் said...

ஏன் பெண்களெல்லாம் சீரியல் பார்க்கின்றனர், அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்ப்பதற்காக, ஆண்களும் அதை பார்க்கின்றனர்.

எப்படி 'தம்' அடிப்பதை வெளியே சொல்லாமல் மறைக்கிறார்களோ, அப்படி சீரியல் பார்ப்பதையும் ஆண்கள் மறைக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

சின்னப் பையன் said...

//வீட்டிலுள்ள யாருக்குமே காது கொடுக்காத ஆண்களின் விஷயத்தில் என்ன செய்வது?
//

அதே காதை நல்லா திருகி கேட்க வைக்கணும்...

கூடுதுறை said...

எங்கே இருந்து காப்பி செய்தீர்கள்?

கிரி said...

//இவர்கள்தான் தன்னுடைய பார்வையாளர்களாக இருப்பார்கள் என்ற தீர்மானத்திற்கு எவ்வாறு வந்தார்கள்?//

தற்போது தான் வேலைக்கு போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, இதுவரை வீட்டிலேயே இருந்து வந்தார்கள் வாய்ப்பு கிடைக்காமல். இதனால் வீட்டில் இருக்கும் போது அவர்களுக்கு வேற என்ன பொழுது போக்கு? அதுவே அவர்கள் பார்ப்பதற்கு காரணம். அதுவுமில்லாமல் ஆண்களை விட பெண்களுக்கு இந்த செண்டிமெண்ட் சமாச்சாரங்களில் ஆர்வம் அதிகம், ஆண்களை ஒப்பிடும் போது.

//சரி ஏன் பெண்களுக்கான திரைப்படங்கள் குறைந்தன? அது மூன்றாம் காரணத்தை வெளிக்கொணருகிறது. அது என்னவென்றால் திரையரங்குகளில் நுழைவுச்சீட்டின் விலை கூடிப் போனதுதான். இதன் காரணமாக பெண்களுக்கானத் திரைப்படங்களின் தயாரிப்புக் குறைந்து போனது.//

நான் அவ்வாறு கருதவில்லை. நம் சமூகத்தில் பெண்களுக்கான உயர்வை ஒத்துக்கொள்ளும் மனப்பான்மை கிடையாது. பெண்களை உயர்த்தி கூறி படமெடுத்தால் அதற்க்கு பெண்களே ஆதரவு தருவதில்லை. ஆண்களை பற்றி கேட்கவே வேண்டாம். புதுமை பெண், இந்திரா போன்ற படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எத்தனை பெண்கள் இந்தியாவில் நடக்கு பெண்கள் கிரிக்கெட் க்கு ஆதரவு தந்து இருக்கிறார்கள்?

//தன் குமுறல்களை பற்றிய ஒரு வாசல் மூடியவுடன், திறந்த மற்றொரு வாசலை நோக்கி பெண்களின் கவனம் திரும்பியது//

நீங்கள் சொல்வது சரி தான். இது தான் மனித இயல்பு. தனக்கு பிடித்த ஒன்று கிடைக்கவில்லை என்றால், அது கிடைக்கும் இடம் அல்லது ஓரளவு சமாதனம் அடைய கூடிய அளவுக்காவது உள்ள இடம் நோக்கி செல்வது. இது பெண்கள் மட்டும் இல்லை அனைவருக்கும் பொதுவான ஒன்று தான்.

//இந்தப் போக்கு ஆரம்பித்த பொழுது ஓரளவிற்கு நல்ல நல்லத் தொடர்கள், குறைதபட்சம் இப்பொழுது காட்டப்படும் அதீத வன்முறை மற்றும் ஆபாசம் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது இவை இந்தளவிற்குக் கூடியிருப்பதற்குக் காரணம், சில ஆண்டுகளாக ஆண்களும் பெரும்பான்மையாக சீரியல்களை நோக்கித் திரும்பியதுதான் என நினைக்கிறேன்//

இதை நான் மறுக்கிறேன். ஆண்கள் பார்க்க ஆரம்பித்து சீரியல்களை மாற்றும் அளவுக்கு இன்னும் நிலைமை வரவில்லை, வரவே வராது என்று கூறவில்லை.

//பார்க்க பிடிக்காதப் பலர் வேறு எத்தனையோ வழிகளில் தவிர்க்கின்றனர்//

தவிர்ப்பவர்கள் எவ்வாறு தவிர்ப்பார்கள் கூறுங்கள்? ஒன்று அவர்கள் வீட்டில் இல்லாமல் வெளியே செல்ல வேண்டும். அல்லது வேறு எங்காவது தொலைக்காட்சி இருக்க வேண்டும், அல்லது நண்பர்களோடு ஊர் சுத்த வேண்டும் இல்லை என்றால் அலுவலகத்தில் இருந்து தாமதமாக வர வேண்டும். இந்த முறைகள் எதுவுமே குடும்பத்துக்கு நல்லது இல்லை.

//ஏன் பெண்கள் சீரியல் பார்ப்பதை ஒரு குற்றத்தை செய்வதை போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயலுகிறார்கள்? //

பெரும்பான்மை மட்டுமே காரணம். ஒரு பெண்ணை ஆண் பார்த்தால் அவன் தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறான் என்று ஏன் அனைவரும் முடிவு செய்கிறார்கள்? காரணம் பெரும்பான்மையானவர்கள். ஆண்கள் பார்ப்பவர்கள் அனைவரும் தவறான கண்ணோட்டத்தில்யே தான் பார்க்க வேண்டுமா? நல்ல எண்ணங்களை கொண்டவர்களும் அதிகம் இருக்கிறார்கள். அதை போலவே தான் இதுவும். எண்ணிக்கை அதிகம் என்பதால் கண்ணோட்டமும் அவ்வாறாகி விட்டது. ஏன் அனைத்து பெண்களுமா சீரியல் பார்க்கிறார்கள்? எத்தனையோ பேர் அந்த பக்கமே தலை வைத்து படுக்காமல் இருக்கிறார்களே.

//எப்பொழுதும் பெண்களை மட்டம் தட்ட ஒரு விஷயம் வேண்டும் என்ற மனப்போக்குத்தானே காரணம்? //

மட்டம் தட்டுபவர்கள் எந்த வழியிலும் மட்டம் தட்டுபவர்களே..இது மட்டுமே காரணம் இல்லை.

//குறைந்தபட்சம் குழந்தைகளின் முன் புகைபிடிப்பதயாவது நிறுத்தி இருப்பார்களா, இல்லை தன் மனைவியை மட்டம் தட்டுவதயாவது நிறுத்தி இருப்பார்களா? //

இவர்களை பற்றி எல்லாம் இந்த மாதிரி கேள்வி கேட்கவே தேவையில்லை. எனென்றால் இவர்கள் எல்லாம் எப்படி கூறினாலும் தங்கள் செயலுக்கு நியாயம் கற்பிப்பவர்கள்.

//பெண்கள் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டால் குழந்தைகள் கெட்ட விஷயங்களை கற்றுக் கொள்ளவே மாட்டார்களா?//

நீங்க எதை நிறுத்தினாலும் குழந்தைகள் எதையும் நிறுத்த மாட்டார்கள்.. எனென்றால் காலம் அப்படி. இங்கே கிடைக்கவில்லை என்றால் வேறு இடம் பார்க்க துவங்கி விடுவார்கள்.

//எப்பொழுது மீடியா என்ற ஊடகம், பரபரப்பும் வியாபரமும் எங்களின் தலையாயக் குறிக்கோள் என முடிவு செய்ததோ, அன்றே அத்துணை ஊடகச் சம்பந்தப்பட்ட பொழுதுப்போக்குச் சாதனங்களிலும் வன்முறையும் ஆபாசமும் தவிர்க்கமுடியாதவயாகின்றன.//

உண்மை தான்.

//வயது வந்த பெண்கள் எதை பார்க்க வேண்டும் என்று கூற ஆண்களுக்கு யார் உரிமை கொடுத்தது? //

நம் சமூகம் தான். காலங்காலமாக அப்படியே பழகி வந்தவர்கள் எப்படி உடனே மாறுவார்கள். மாறவும் முடியாது. தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறார்கள். சிறு உதாரணம் தற்போது புழங்கும் நைட்டி, ஜீன்ஸ், பெண்கள் வேலைக்கு போவது, பல நிலைகளில் சம உரிமை போன்றவை. இதை ஒரு விசயமாக கூறவில்லை. முந்தய காலத்தில் எப்படி இருந்தது இப்பொழுது எவ்வாறு மாறி இருக்கிறது என்பது. பல நூறு ஆண்டுகளாக ரத்தத்தில் ஊறியது உடனே மாற வாய்ப்பே இல்லை. இன்னும் பல பெண்களே நீங்கள் கூறுவதை கூறி கொண்டு இருக்கும் போது ஆண்கள் ஏமாத்திரம்.. எனவே மாற்றங்கள் வரும் ஆனால் தாமதாமாக. அதுவரை நீங்கள் கூறும் உரிமை பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.

//எவ்வளவு நேரம்தான் படிப்பது? அதுதான் யாரையும் தொந்தரவுப் படுத்தாமல் எதையோ பார்க்கிறேன்" என்றார்//

இதை போலவே பல பெண்களின் நிலை. இந்த காலத்து பெண்ணான உங்களுக்கே உங்கள் அம்மாவின் நிலை உடனே பிடிபடவில்லை, நீங்களும் அது வரை உங்கள் அம்மாவுக்கு ஆதரவாக அல்லது அவர்கள் மனது சந்தொசப்ப்படும்படி நடந்து கொள்ள்ளவில்லை என்பதை உணரவில்லை, என்று உங்கள் அம்மாவின் கூற்று சொல்கிறது. அப்படி இருக்க அனைவரின் மீதுமே தவறு இருக்கிறது.

//இதனை சரிசெய்ய என் தந்தையிடம் பேசியபோது அவருக்கு தான் கொண்டிருந்த அதீத எதிர்பார்ப்புகள் சாத்தியமில்லை என்பதே தெரியவில்லை. தான் கொண்டுள்ள கருத்துக்களில் உள்ளக் குறைகள், குறைகள் என்றே அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.//

பலரின் நிலை இது தான் இன்னமும். மனைவியின் ஆசைகளை எண்ணங்களை எதிர்பார்ப்புகளை புரிந்து கொள்ளாதவர்களாகவே பல கணவன்மார்கள் இருக்கிறார்கள்.

//வீட்டிலுள்ள யாருக்குமே காது கொடுக்காத ஆண்களின் விஷயத்தில் என்ன செய்வது?//

விதி தான். வேறு ஒன்றும் செய்ய முடியாது.

//என் தாயார் கூறியது எவ்வளவு உண்மையானக் கருத்து. என்னைப் பொறுத்த வரை பெரும்பாலானப் பெண்கள் இந்தக் காரணத்தாலேயே நெடுந்தொடர்கள் பார்க்கிறார்களோ என எனக்கொரு சந்தேகம்//

சந்தேகம் எல்லாம் பட வேண்டாம், இது தான் உண்மை.

//ஊர் சுற்றினாலும் மனைவியின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை? //

அதற்க்கு எண்ணங்கள் உயர வேண்டும். அவை மிக மெதுவாக நடந்து கொண்டு இருப்பது கசப்பான உண்மை.

//புகுந்த வீட்டில் பார்த்து புத்திசாலிதனமாக நடந்துக்கோ//

இதற்கும் காரணம் சமூகம் தான். ஏற்கனவே விரிவாக கூறி விட்டேன்.

-------------------------------------------------------------------------------------

நான் உங்களுக்கு கூறவிரும்புவது. பிரச்சனை ஆண்களிடம் இல்லாமல் இல்லை, ஆனால் ஆண்களை மட்டுமே குறை கூறுவதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. பெண்களும் இவ்வகை பிரச்சனைகளில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். உங்கள் பதிவுகளை மற்றும் பின்னூட்டங்களை வாய்ப்பு கிடைக்கும் போது பார்த்து வருகிறேன், நீங்கள் பெண்கள் மீது கொண்டுள்ள அன்பையும் அவர்களுக்காக குரல் கொடுப்பதும், தவறாக தோன்றினால் கேள்வி கேட்பதும் நல்ல விசயமே. ஆனால் நீங்கள் எதிலும் கோபத்திலும் அவசரத்திலுமே பேசுவதாக எனக்கு தோன்றுகிறது. கோபம் வேண்டும், ஆனால் அது ஆராய்ந்த பிறகு நன்கு யோசித்த பிறகு வரும் கோபமாக இருக்க வேண்டும். அனைத்திற்கும் கோபப்பட்டால் அல்லது அவசரப்பட்டால் வாழ்வில் எதுவுமே தவறாக தான் தோன்றும். பிரச்சனை இல்லாத மனிதர்கள் யார்? தவறு செய்யாத மனிதர்கள் யார்? அனைத்தையுமே சரியாக செய்யும் மனிதர்கள் இருகிறார்களா? குறைகள் இல்லாத மனிதர்கள் கிடையாது, அந்த குறைகளையும் நிறைகளாக மாற்ற தெரிந்தவர்களே வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். அது தெரியாதவர்கள் தன் நிலை கண்டு வருந்தி கொண்டே இருக்கிறார்கள்.

பின் குறிப்பு

பதிவு பட்டை சரி இல்லைன்னு மூன்று பதிவு பட்டையை போட்டு வைத்து இருக்கீங்க? :-))

Jackiesekar said...

நன்றாக அற்புதமாக ஆராய்சி செய்துள்ளீர்கள்

ஜி said...

:)) Good One...

kadaisila potta disclaimer thevai illainu nenakiren :)))

rapp said...

ஜி, கடைசிலனா எதை சொல்றீங்கன்னு சரியா தெரியலங்க. நீங்க வந்ததுக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி. நேரம் கிடைக்கும்போது அடிக்கடி வரவும்.

rapp said...

நெம்ப நன்றிங்க ஜாக்கி சேகர். நேரம் கிடைக்கும்போது என் பதிவிற்கு வந்து செல்லுங்கள்.

rapp said...

சிவா உங்களுக்கு இருபத்தோரு வயசாகிடுச்சா? அப்ப உங்களுக்குன்னு சுயபுத்தி இருக்கும்னு அரசாங்கம் சொல்லுது(அப்பப்ப நம்ப முடியாத விஷயங்களையும் நம்ப வைக்கிறது அரசாங்கம்). உங்க மனைவிக்கு இருபத்தோரு வயசாகிடுச்சா? ரெண்டு பேரும் அவங்கவங்களுக்கு பிரியமான விஷயங்களை செய்யுங்கள். நீ இதை செய்யணும், அதை செய்யக்கூடாதுன்னு ஒருத்தருக்கொருத்தர் பிரச்சினை செய்யாதீங்க. உங்க மனைவி சீரியல் பார்ப்பவரா இருந்து உங்களுக்காக அதனை பார்க்காமல் விடும்போது நீங்களும் அதற்கு பதிலாக அவர்களுக்கு உங்களிடம் பிடிக்காத ஒரு விஷயத்தை விடத்தான் வேண்டும். இல்லைனா அவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன் கதைதான் நடக்கும். எனக்கு சுத்தமா புடிக்காத விஷயம் தனிப்பட்ட ஒருத்தர் வாழ்க்கைக்கு ஒன்னுமே புரியாம விஷயம் தெரியாம பஞ்சாயத்து பண்றது, அதையும் உங்களுக்காக செய்துட்டேன். உங்களுக்கு மேலும் சந்தேகம் இருந்துச்சுன்னா, நான் இன்னொரு பதிவருக்கு போட்ட பின்னூட்டத்தை திருப்பி போடுறேன். பொறுமை இருந்தா, நேரம் கிடைச்சா இதயாச்சும் முழுசா படிக்க முயற்சி பண்ணுங்க.

rapp said...

சீரியல் பார்க்கும் பெண்களை மூன்று வகையாகப் பார்க்கலாம். சிலர் இயல்பிலேயே உணர்ச்சிவசப்படும் சுபாவமோ அல்லது ஒரு சண்டை சச்சரவென்றால் பஞ்சாயத்து செய்வதுமாக இருப்பவர்களாவர். இவர்களுக்கு நிஜமாகவே சீரியல் பார்ப்பது பிடித்திருக்கிறது. அவர்கள் அதை விரும்பியே பார்க்கிறார்கள். இவர்களை பொதுவாக ஆண்கள் ஏதோ ஒருத் தீய பழக்கம் உள்ளவர்களை போல சித்தரிக்க முயல்கிறார்கள். அது மிகவும் தவறு என்கிறேன். அவரவர் விருப்பப்பட்டபடி யாருடைய சுதந்திரத்திற்கும் இடையூறாக இல்லாமல், தன் போக்கில் ஒருவர்(வயது வந்தவர்) இருந்தால் எண்ணத் தவறு? அவர்களை ஏன் அநாவசியமாகக் குறை கூறுகிறார்கள்?

இரண்டாவது வகைப் பெண்கள் இதில் என்ன இருக்கிறதென்று, சும்மா உட்காரும்போது, தனக்கு பிடித்த வேறொரு விஷயம் இல்லையெனும்போது பார்ப்பவர்கள். இவர்களை நான் மேற்குறிப்பிட்ட விமர்சனம் பாதிப்பதில்லை.

மூன்றாம் வகைப் பெண்கள் தனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், வேறு எவ்வாறு நேரம் கடத்துவது எனத் தெரியாமல், வீட்டிலுள்ளவர்களை நாடியும் பயனில்லாமல் ஒரு வித விருப்பமின்மையுடன் சீரியல் பார்க்கிறார்கள். இதில் இளைய தலைமுறையை குற்றம் சாட்டுவது எல்லா விதத்திலும் சரி வராது. வாழ்க்கை துணை என ஒருவர் இருக்கும்போது அவர் பகிர்ந்துக் கொள்ளும் தன்மையுடன் இருக்க வேண்டுமல்லவா? குழந்தைகள் என்ன செய்ய முடியும்? அவர்கள் என்ன பெற்றோரை பிடித்து தனித் தனி அறையில் அடைத்தா வைத்திருக்கிறார்கள். தன் வீட்டில்,தன் மனைவியிடம் மனம்விட்டுப் பேச, கலகலப்பாக இருக்க திடீர் என தயக்கம் வருவதேன்? பிடித்த விஷயங்களை செய்வதற்கு நேரம் காலம் ஒரு பொருட்டா? இல்லை மனைவி பிடிக்காத ஒருவராகிவிட்டாரா? மாற்றத்துக்கு மனதுதான் தேவை

நான்தான் சட்டத்திற்குட்பட்ட விஷயங்கள்னு திரும்ப திரும்ப சொல்லிருக்கேன். நீங்க நீலப் படம்னு சொன்னா அது சட்டத்திற்கு உட்பட்ட ஒன்றா? அதேப்போல் வயது வந்த ஒருவரென்னும் போது அவர் இருபத்தொரு வயதிற்கு மேற்பட்ட வயதுடையவர். இதையும் நான் திரும்ப திரும்ப கூறியுள்ளேன் . என் மகன் சிறுவனாக இருக்கும்வரைதான் அவனுக்கு நான் நல்லது கெட்டதை சொல்லிப் புரியவைக்க முடியும்.இருபத்திரண்டு வயதில் நான் அந்த வேலையே செய்தால், கண்டிப்பாக குளியலறையை எட்டிப்பார்ப்பது போலத்தான். நீங்கள் வசதியாக நான் சொன்னவற்றை எல்லாம் புறம்தள்ளிவிட்டு வாதம் செய்யலாமா?

அதுமட்டுமன்றி சட்டத்திற்குட்பட்ட ஒரு பொழுதுபோக்கை சட்டத்திற்கு புறம்பான விஷயங்களோடு ஒப்பிடுவது எவ்வாறு சரியாகும்.

உங்கள் தாயாகி விடுவதாலோ, மனைவியாகி விடுவதாலோ உங்கள் விருப்பங்கள் அனைத்தும் அவர்களின் விருப்பமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ரெண்டாவது, பிரச்சினை உங்கள் தாயை பற்றியோ, என் தாயை பற்றி மட்டுமோ அல்ல, பெரும்பான்மையானவர்களை பற்றி

rapp said...

சிவா இன்னமும் உங்களுக்கு சந்தேகம் இருந்துச்சுன்னா திரும்பி கேளுங்க விளக்க முயல்கிறேன்.

rapp said...

ச்சின்னப்பையன் ,//ஏன் பெண்களெல்லாம் சீரியல் பார்க்கின்றனர், அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்ப்பதற்காக, ஆண்களும் அதை பார்க்கின்றனர்//அட அட அடா என்னமா சமாளிக்கிறீங்க. இதுக்காகவே உங்களை நம்ம மன்றத்து தலைவராக்கலாம்.
//எப்படி 'தம்' அடிப்பதை வெளியே சொல்லாமல் மறைக்கிறார்களோ, அப்படி சீரியல் பார்ப்பதையும் ஆண்கள் மறைக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்//
ஆஹா இதுதான் ஆண்களோட ரகசியமா செய்யிற ஸ்டைலா? இவங்கள நம்பி எப்படிங்க உளவுத்துறை சம்பந்தப்பட்ட வேலைகளை கொடுக்கிறாங்க? யப்பா நெம்ப நல்ல இருக்கு போங்க ஆண்களோட ரகசிய செய்கைகள்

rapp said...

//அதே காதை நல்லா திருகி கேட்க வைக்கணும்//
அப்படிப் போடுங்க அரிவாளை.

rapp said...

//எங்கே இருந்து காப்பி செய்தீர்கள்?//
நீங்க பதிவை பற்றித்தானே சொல்லறீங்க? அதுப்பத்திதான் என்றால், போங்க நீங்க, எனக்கு வெக்க வெக்கமா வருது. பதிவு அவ்வளவு நல்லாவா இருக்கு? நெம்ப நன்றிங்க கூடுதுறை. என்ன இருந்தாலும் இவ்வளவு புகழ வேண்டாம்.

rapp said...

வாங்க கிரி அண்ணே வாங்க, என் சீரியலுக்கு போட்டியா நீங்க திடீர் வைக்கோவா மாறி ஒரு காமடியான நடைபயணத்தையே நடத்தி இருக்கீங்க.//தற்போது தான் வேலைக்கு போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, இதுவரை வீட்டிலேயே இருந்து வந்தார்கள் வாய்ப்பு கிடைக்காமல். இதனால் வீட்டில் இருக்கும் போது அவர்களுக்கு வேற என்ன பொழுது போக்கு? அதுவே அவர்கள் பார்ப்பதற்கு காரணம். அதுவுமில்லாமல் ஆண்களை விட பெண்களுக்கு இந்த செண்டிமெண்ட் சமாச்சாரங்களில் ஆர்வம் அதிகம், ஆண்களை ஒப்பிடும் போது//என்னங்க நீங்க ஒன்னும் தெரியாதப் பச்சப் புள்ளயா இருக்கீங்க. பெண்கள் அறுபதுகளோட இறுதியிலயே பரவலா வேலைக்குப் போக ஆரம்பிச்சாச்சு. ஆனா இப்போ கொஞ்ச நாளாத்தான் பெரிய எம்என்சிக்களிளும் இன்ன பிறத் துறைகளிலும் உயர் பதவிகளை அதிகளவில் அடைகின்றனர் என வேண்டுமானால் கூறலாம்.

rapp said...

//பெண்களை உயர்த்தி கூறி படமெடுத்தால் அதற்க்கு பெண்களே ஆதரவு தருவதில்லை. ஆண்களை பற்றி கேட்கவே வேண்டாம். புதுமை பெண், இந்திரா போன்ற படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்//அடப் போங்க நீங்க, கருத்து மட்டும் படத்தில் நல்லா இருந்தால் போதுமா? படமும் பாக்க சகிக்க்கணும்ல. புதுமை பெண் படம் பாரதிராஜாவா டைரக்ட் பண்ணாருன்னு இருக்கும். இந்திரா படம் ஓடலைனு எப்படி சொல்றீங்க, அது நல்லாத்தானே ஓடுச்சி.

rapp said...

பெண்கள் கிரிக்கட்டை பார்க்கணும்னா இன்னைய தேதிக்கு நல்ல விளம்பரம் தேவை. இப்போ 20/20 கிரிக்கட்டெல்லாம் பார்த்தீங்கள்ள? அப்படி விளம்பரம் கொடுத்து பெண்கள் கிரிக்கட்டை முன்னேத்த விடுமா நம்ம பண முதலைகளால் ஆன கிரிக்கட் வாரியம்? சானியா மிர்சா கொஞ்சம் தோத்தப்போ என்னமா அட்வைஸ்(விளம்பரத்துல நடிக்க வேண்டாம்னு) மழை பொழிஞ்சாங்க எல்லா மீடியாக்காரங்களும், ஆனா இந்திய கிரிக்கட் ப்லேயர்களை மட்டும் உலகக் கோப்பய கேவலமா தோக்குற வரைக்கும் ஒன்னுமே சொல்லல. அப்புறம் வேற வழியில்லாம குய்யோ முய்யோனு கத்தனாங்க.

rapp said...

//நீங்கள் சொல்வது சரி தான். இது தான் மனித இயல்பு. தனக்கு பிடித்த ஒன்று கிடைக்கவில்லை என்றால், அது கிடைக்கும் இடம் அல்லது ஓரளவு சமாதனம் அடைய கூடிய அளவுக்காவது உள்ள இடம் நோக்கி செல்வது. இது பெண்கள் மட்டும் இல்லை அனைவருக்கும் பொதுவான ஒன்று தான்//எங்க நான் எப்பங்க இதெல்லாம் மத்தவங்களுக்கில்லைனு சொன்னேன். பதிவோட கடைசிலதான் தெளிவாக சொல்லிருக்கனே, இந்தப் பதிவு வெறும் பெண்களை பற்றிய பதிவுன்னு. அதனால இங்கு, இந்த விஷயத்தில், என்னோட focus பெண்கள் அதுவும் முக்கியமாக சீரியல் பார்க்கும் பெண்கள்தான். மத்தவங்களுக்கு பொதுவாக இருக்கிற குணாதிசயங்களை பற்றியதில்லை.

rapp said...

//இதை நான் மறுக்கிறேன். ஆண்கள் பார்க்க ஆரம்பித்து சீரியல்களை மாற்றும் அளவுக்கு இன்னும் நிலைமை வரவில்லை//
நீங்க வேறங்க அதெல்லாம் எப்பவோ வந்திடுச்சி, நீங்கதான் அறியாப்புள்ளயா இருக்கீங்க. எங்க இங்கு நான் எப்படி எல்லா வயதுப் பெண்களையும் பெண்கள் என்றே குறிப்பிட்டுள்ளேனோ, அதுப் போலவே எல்லா வயது ஆண்களையும் ஆண் என்றே குறிப்பிட்டுள்ளேன். என்ன மேஜர் சுந்தர்ராஜன் எபெக்ட கொண்டு வந்துட்டேனா? அதாவது யாரையும் இளமையான கேட்டகிரின்னோ, முதுமயானக் கேட்டகிரின்னோ பிரிக்கலை. அதனால நீங்க வாலிப வயது ஆண்களை மட்டும் வெச்சுகிட்டு விவாதம் பண்ணாதீங்க. முக்கால்வாசி முதமை நிலையை அடைந்த ஆண்கள் பெண்களுக்குமேல் சீரியல் பார்க்கின்றனர். இவர்களுக்கு சின்ன வயசிலிருந்து பார்த்த ஆக்ஷன் மற்றும் சோப், மசாலாப் படங்களின் எபெக்டை ஏற்படுத்தி, இவர்களை கவரும் பொருட்டே இந்தப் போக்கு சீரியல்களில் ஆரம்பித்தது.

rapp said...

//தவிர்ப்பவர்கள் எவ்வாறு தவிர்ப்பார்கள் கூறுங்கள்? ஒன்று அவர்கள் வீட்டில் இல்லாமல் வெளியே செல்ல வேண்டும். அல்லது வேறு எங்காவது தொலைக்காட்சி இருக்க வேண்டும், அல்லது நண்பர்களோடு ஊர் சுத்த வேண்டும் இல்லை என்றால் அலுவலகத்தில் இருந்து தாமதமாக வர வேண்டும். இந்த முறைகள் எதுவுமே குடும்பத்துக்கு நல்லது இல்லை//
ஆஹா முதல் மீனு தூண்டில்ல மாட்டிடுச்சி. இப்படி விவாதிப்பீங்கன்னுதான் இந்த பிட்டை போட்டேன். இப்ப வந்தீங்களா வழிக்கு. இத்தனை சாக்கு சொல்லத்தெரியுதில்லை சீரியல் பார்ப்பதற்கு. அப்படி உங்களுக்கு அது அவ்வளவு பிடிக்கலைனா, உங்க மனைவியும் அதை வேண்டா வெறுப்போடு பாக்கிறாங்கன்னா நீங்க தாராளமா உங்க மனைவியோடு பேசி சிரித்தோ, எங்காவது அருகில் உள்ள இடங்களுக்கு சென்றோ காலம் கழிக்கலாம். இல்லை அவங்க நிஜமாகவே சீரியல்களை பார்த்து ரசிக்கராங்களா? விட்டுக் கொடுங்க, அவங்களுக்குப் பிடிச்சதை அவங்க பார்க்கட்டும். வாழ்க்கையில விட்டு கொடுத்து வாழணும்னு நிறைய ஆண்கள் பெண்களுக்கு அட்வைஸ் பண்ணுவதோட நிறுத்திக்காம அவங்களும் அதை செஞ்சு காட்டணும். சீரியல் பார்க்காம உபயோமுள்ள ஒன்றிற்கு அந்த நேரத்தை செலவிடுங்கன்னு பெண்களுக்கு சொல்ற பலர், தான் ஏன் அதை அந்த சமயத்தில் செய்துவிட்டு ஒஹோனு வாழ்க்கையில உசந்துடக் கூடாது?

rapp said...

//பெரும்பான்மை மட்டுமே காரணம். ஒரு பெண்ணை ஆண் பார்த்தால் அவன் தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறான் என்று ஏன் அனைவரும் முடிவு செய்கிறார்கள்? காரணம் பெரும்பான்மையானவர்கள். ஆண்கள் பார்ப்பவர்கள் அனைவரும் தவறான கண்ணோட்டத்தில்யே தான் பார்க்க வேண்டுமா? நல்ல எண்ணங்களை கொண்டவர்களும் அதிகம் இருக்கிறார்கள். அதை போலவே தான் இதுவும். எண்ணிக்கை அதிகம் என்பதால் கண்ணோட்டமும் அவ்வாறாகி விட்டது//இங்க நீங்க என்ன சொல்ல வரீங்க, நிறையப் பேர் ஒரு விஷயத்தை செய்தால் அது தப்பாகிடும்னா? நாலு பேறு சீரியல் பார்த்தா இவங்களுக்கென்ன, நாற்பது பேர் பார்த்தால் இவங்களுக்கென்ன? எனக்கு நீங்க சொல்ல வர்றது புரியல.

rapp said...

//ஏன் அனைத்து பெண்களுமா சீரியல் பார்க்கிறார்கள்? எத்தனையோ பேர் அந்த பக்கமே தலை வைத்து படுக்காமல் இருக்கிறார்களே//
ஏங்க பதிவே சீரியல் பார்க்கும் பெண்களைப் பத்தினதுதான். இதுல இப்படி மொக்கக் கேள்விய கேட்டா நான் என்னங்க பண்றது?நான் இங்க எல்லாப் பெண்களும் சீரியல் பார்க்கிறார்கள்னா எழுதிருக்கேன்? பாக்கலைனா அந்தப் பெண்கள் இந்தப் பதிவின் கீழ் வரவில்லைன்னு அர்த்தம்.

rapp said...

//மட்டம் தட்டுபவர்கள் எந்த வழியிலும் மட்டம் தட்டுபவர்களே..இது மட்டுமே காரணம் இல்லை//
தப்பு செய்யரவன இவன் திருந்தமாட்டனு சொல்லி தப்பிக்கவிட்டுட்டு, அவங்க பாட்டுக்கு இருக்கிறப் பெண்களை போட்டு காய்ச்சு காய்ச்சுனு காய்ச்சற வேலதான இது. ஒருத்தர் தப்பு செஞ்சா நாலு பேர் சுட்டிக்காட்டத் தான் செய்வார்கள். அவன்திருந்த மாட்டங்கிறதுக்காக நாங்க சுட்டாம இருக்க முடியுமா?
////குறைந்தபட்சம் குழந்தைகளின் முன் புகைபிடிப்பதயாவது நிறுத்தி இருப்பார்களா, இல்லை தன் மனைவியை மட்டம் தட்டுவதயாவது நிறுத்தி இருப்பார்களா? //

இவர்களை பற்றி எல்லாம் இந்த மாதிரி கேள்வி கேட்கவே தேவையில்லை. எனென்றால் இவர்கள் எல்லாம் எப்படி கூறினாலும் தங்கள் செயலுக்கு நியாயம் கற்பிப்பவர்கள்.

//பெண்கள் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டால் குழந்தைகள் கெட்ட விஷயங்களை கற்றுக் கொள்ளவே மாட்டார்களா?//

நீங்க எதை நிறுத்தினாலும் குழந்தைகள் எதையும் நிறுத்த மாட்டார்கள்.. எனென்றால் காலம் அப்படி. இங்கே கிடைக்கவில்லை என்றால் வேறு இடம் பார்க்க துவங்கி விடுவார்கள்////
அமாங்க யாரும் எதையும் நிறுத்த மாட்டாங்க ஆனால் பெண்கள் மட்டும் எல்லாத்தையும், அது தீயப் பழக்கமோ நல்ல பழக்கமோ, மத்தவங்களுக்கு பிடிக்கலைனா விட்டுடனும். அதான் சரி. நான் வேற ஒருத்தி தப்பு தப்பா எழுதுறேன்.

rapp said...

//இந்த காலத்து பெண்ணான உங்களுக்கே உங்கள் அம்மாவின் நிலை உடனே பிடிபடவில்லை, நீங்களும் அது வரை உங்கள் அம்மாவுக்கு ஆதரவாக அல்லது அவர்கள் மனது சந்தொசப்ப்படும்படி நடந்து கொள்ள்ளவில்லை என்பதை உணரவில்லை, என்று உங்கள் அம்மாவின் கூற்று சொல்கிறது. அப்படி இருக்க அனைவரின் மீதுமே தவறு இருக்கிறது//
ஆமாங்க நான் கவனிக்காம போயித்தான் எங்கம்மா பிரச்சினை தீர்ந்துச்சா? நான்தான் தெளிவா எழுதிருக்கேனே என்னோட கல்லூரி எங்க வீட்டிலிருந்த ரொம்ப ரொம்ப தொலைவில் இருந்துச்சின்னு. மூணு பஸ் மாறணும், பயண நேரம் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரமாகும். அப்போ பார்த்துக்கங்க ஏழு மணி நேரம் பயணம் அதோட பொறியாளர் படிப்புன்னு இருக்கறச்சே நான் தூங்க வேணாமா? நான் என்னவானாலும் எங்கம்மா கூடத்தான் இரவு உணவு அப்போல்லாம் சாப்பிடுவேன். இதுக்கு மேல எங்கம்மா கூட உக்கார்ந்து பேச எனக்கும் ஆசையாகத்தான் இருந்தது, ஆனால் அது அவங்களுக்கே பிடிக்காது. போய் படிச்சி ரெஸ்ட் எடுக்கத்தான் சொல்வாங்க. ஆனால் எங்கப்பாக்கு இந்த மாதிரி இல்லை. மேலும் ஒரு புருஷன்கிட்ட பேசி பகிர்ந்துக்கறதும், விடலை பருவத்து மகள்கிட்ட பகிர்ந்துக்கறதும் ஒண்ணா? எப்பொழுதுமே பிள்ளைகள் ஓரளவிற்குத் தான் செய்ய முடியும். வாழ்க்கைத் துணை தானே எல்லாத்துலயும் கூட இருந்து நல்லது கெட்டதை பேசி பகிர்ந்துக்கணும்.

rapp said...

//நான் உங்களுக்கு கூறவிரும்புவது. பிரச்சனை ஆண்களிடம் இல்லாமல் இல்லை, ஆனால் ஆண்களை மட்டுமே குறை கூறுவதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. பெண்களும் இவ்வகை பிரச்சனைகளில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்//
நான் எப்பங்க எல்லாப் பிரச்சினைக்கும் ஆண்கள்தான் காரணம்னு சொன்னேன். பெரும்பான்மையானப் பிரச்சினைகளுக்கு ஆண்கள் காரணம்னு சொன்னேன்.

rapp said...

//நீங்கள் எதிலும் கோபத்திலும் அவசரத்திலுமே பேசுவதாக எனக்கு தோன்றுகிறது. கோபம் வேண்டும், ஆனால் அது ஆராய்ந்த பிறகு நன்கு யோசித்த பிறகு வரும் கோபமாக இருக்க வேண்டும். அனைத்திற்கும் கோபப்பட்டால் அல்லது அவசரப்பட்டால் வாழ்வில் எதுவுமே தவறாக தான் தோன்றும்//
ஆஹா இதுக்கும் மேல ஒரு சான்றே தேவை இல்லை. பதிவு மேட்டர் எப்படி நிரூபனமாகிடுச்சி பார்த்தீங்களா? நாட்டமைனு விளையாட்டுக்குச் சொன்னேங்க, அத சீரியஸா எடுத்துக்கிட்டீங்களா?

rapp said...

நீங்க எதை வெச்சி சொல்றீங்கன்னு புரியுது. அந்த மேட்டர்ல அவரு ஒரு பெரிய மனுஷன் எறங்கி வந்து வருத்தம் தெரிவிச்சாரே, அவர் மனசு புண்படக் கூடாதுன்னுதான் நான் அவரிடம் பதிலுக்கு வருத்தம் தெரிவிச்சேன். நீங்க பார்த்தீங்கன்னா எல்லாத்துலயுமே அவர் மனச புண்படுத்தினதுக்கு மட்டும்தான் வருத்தம் தெரிவிச்சிருக்கேன். ஆனால் அங்கு நான் கூறிய கருத்துக்களில் இருந்து நான் மாறவில்லை. அவர் மனசுல என்ன இருந்துச்சிங்கறதோ, அவர் தனிப்பட்ட வாழ்வில் எப்படிப்பட்டவர் என்றோ எனக்கெப்படித் தெரியும்? அவர் எழுதுவதை வைத்துத்தானே நான் பதில் கூற முடியும்.என்னை திரும்ப அது இதுனு கூப்பிடுங்க, நீங்க கோயம்பத்தூர்காரரானாலும் என்னிடமிருந்து அப்படியொரு பதில்தான் வரும். அவரு வட்டார வழக்கயாவது முழுசா அந்தப் பதிவுல போட்டிருக்கணும். வெறும் பெண்பால் வருகின்ற இடத்தில் பிரயோகித்தால் எனக்கெப்படி விளங்கும்? என்ன ஆனாலும் அவர் தன் தரப்பு விளக்கத்தை கூறியவுடன் ஏத்துக்கிட்டேனா இல்லையா? இதுக்கு மேல என்ன செய்ய முடியும்? எனக்குத் தெரிஞ்சு நான் வேறு யார்கிட்டயும் கோவமா பேசினதேயில்லை. இவர்கிட்ட கோவப்பட்டதிலையும் தப்பில்லை, ஏன்னா அவரு எழுதினது அப்படி. அதையே புடிச்சிகிட்டு விதண்டாவாதம் பண்ணாத்தான் தப்பு. அவர்கிட்ட வம்படியா குதர்க்கமா பேசினேனா?

rapp said...

//பதிவு பட்டை சரி இல்லைன்னு மூன்று பதிவு பட்டையை போட்டு வைத்து இருக்கீங்க//
முழுசா பார்த்திட்டு சொல்ல மாட்டீங்களா? இதே பதிவு நேத்து வலையேத்தினப்போ தமிழ்மண பதிவுப் பட்டை வரவில்லை. அங்கு ஏதோ கோளாறு. இது ஏற்கனவே ஏற்பட்டுள்ளதால் வழக்கம் போல் இன்று மறுமுறை வலையேத்தினேன். நேத்தைய பதிவுல பாருங்க பதிவு பட்டையே இருக்காது. இது நான் கோவத்தில் அவசரப் பட்டு ஏதோ பண்ணி தமிழ்மணத்துல பட்டய எடுத்துட்டாங்கன்னு நினைக்காதீங்க. இது பலருக்கு அடிக்கடி ஏற்படும் பிரச்சினை. அப்படி மறுபடி தமிழ்மணப் பதிவுபட்டையை போடும்போது பழையவைகள் அழியாமல் வருகிறது.

கிரி said...

என் கருத்து தவறாக அல்லது ஒப்புக்கொள்ள கூடிய முறையில் இல்லை என்றால் நீங்கள் அதற்க்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் முறை என்று ஒன்று இருக்கிறது, நீங்கள் அதற்க்கு பயன்படுத்தும் வார்த்தைகள் எனக்கு ஒப்புக்கொள்ள கூடியதாக இல்லை. கருத்து வேறுபாடுகள் என்பது அனைவருக்கும் உண்டு, கேள்வி எவ்வாறு கேட்கிறார்களோ அந்த முறையிலேயே சென்று விவாதிக்க வேண்டும். நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்னிடம் பத்தி உண்டு. நீங்கள் இவ்வாறு பதில் கூறுவது எனக்கு பதில் கூற தோன்றாமல் எரிச்சலையே தருகிறது. அப்படியே கூறினாலும் அதற்க்கு பயன் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

நீங்கள் கூறுவது சரி என்றே வைத்துக்கொள்ளுங்கள், எனக்கு அதை பற்றி கவலையில்லை. நான் விவாதத்திற்கு வரவில்லை. இதை போல பதிவு நீங்கள் போட்டீர்கள் என்றால் திரும்ப வருவேன் சந்தேகம் வேண்டாம். ஆனால் நான் சொல்ல வரும் கருத்துக்கள் இனி வேறு மாதிரி இருக்கும்.

இப்படி போனா எப்படின்னு கேட்டா? அது அப்படி தான்.

அன்புடன்
கிரி

rapp said...

//அவசரப்பட்டால் வாழ்வில் எதுவுமே தவறாக தான் தோன்றும். பிரச்சனை இல்லாத மனிதர்கள் யார்? தவறு செய்யாத மனிதர்கள் யார்? அனைத்தையுமே சரியாக செய்யும் மனிதர்கள் இருகிறார்களா? குறைகள் இல்லாத மனிதர்கள் கிடையாது, அந்த குறைகளையும் நிறைகளாக மாற்ற தெரிந்தவர்களே வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். அது தெரியாதவர்கள் தன் நிலை கண்டு வருந்தி கொண்டே இருக்கிறார்கள் //
நீங்க ஏங்க அவசரப்பட்டு சென்னைக்கு போய் அங்கயும் சும்மால்லாம தண்ணியப் போட ஹோட்டலுக்கு போய், அங்கிருந்த பெண்களின் நடவடிக்கைகளை பார்த்து கோவப்பட்டு, பின்னர் ஒரு பதிவை போட்டு வருத்தப்பட்டீங்க? எல்லாரும் குறை உள்ளவர்கள்தானே, உங்களுக்கெதற்கு அப்படி ஒரு அவசரமானக் கோவம்? அதே காரணங்கள்தான் எனக்கும். நான் யார் பதிவுல போய் அவசரப்பட்டு கோவமா பின்நூட்டமிட்டேனு சொல்லுங்க. ஒரு ஆர்வந்தான், ஏன்னா அவங்களோட பதில் என்னன்னு தெரிஞ்சிக்கணும்ல

rapp said...

ஏங்க இப்படி நகைச்சுவை உணர்ச்சியே இல்லாம இருக்கீங்க? இப்படி இருந்தீங்கன்னா மனசு கஷ்டப்ப்படும்ங்க. தாராளமா வாங்க தாராளமா பதில் எப்படியும் போட்டுக்கங்க, நான் எப்ப தடுத்தேன்? அப்பத்தான் விவாதம் நல்லா போகும்.

ராமலக்ஷ்மி said...

'சொன்னபடி "மெகா முதலைகள்" -யை வலையேற்றியிருக்கிறேன். நேரமிருக்கையில் வந்து பாருங்கள்'
எனச் சொல்ல வந்தேன். பின்னூட்ட காரசார விவாதங்களைக் கண்டு பயந்து விடுகிறேன் ஜூட்..:(!

ambi said...

நேத்து நான் போட்ட கமண்ட் எங்க? :(

சரி, மறுபடி,

பிரான்ஸுல ஏதேனும் நெடுந்தொடர் வருதா? :p

பின்னூட்ட பகுதில ஒரே அதிதடி போல. :))

மங்களூர் சிவா said...

/
rapp said...
சிவா உங்களுக்கு இருபத்தோரு வயசாகிடுச்சா?
/
30 வயசாகீடுச்சு

/
அப்ப உங்களுக்குன்னு சுயபுத்தி இருக்கும்னு அரசாங்கம் சொல்லுது
/

ரொம்ப லேட்டா தெரிஞ்சிகிட்டிருக்கு அரசாங்கம்

/
(அப்பப்ப நம்ப முடியாத விஷயங்களையும் நம்ப வைக்கிறது அரசாங்கம்).
/
அதுதான் அரசாங்கத்தோட வேலை
:)))
பயங்கர உள்குத்தோட எழுதறீங்க
:))))))))))


/
உங்க மனைவிக்கு இருபத்தோரு வயசாகிடுச்சா?
/
இனிமேதான் தேடி கண்டுபிடிக்கனும்
:)))

/
ரெண்டு பேரும் அவங்கவங்களுக்கு பிரியமான விஷயங்களை செய்யுங்கள். நீ இதை செய்யணும், அதை செய்யக்கூடாதுன்னு ஒருத்தருக்கொருத்தர் பிரச்சினை செய்யாதீங்க. உங்க மனைவி சீரியல் பார்ப்பவரா இருந்து உங்களுக்காக அதனை பார்க்காமல் விடும்போது நீங்களும் அதற்கு பதிலாக அவர்களுக்கு உங்களிடம் பிடிக்காத ஒரு விஷயத்தை விடத்தான் வேண்டும். இல்லைனா அவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன் கதைதான் நடக்கும்.
/

அதைத்தான் நான் என் பின்னூட்டத்திலேயெ சொல்லீருக்கேன் "அட்ஜஸ்ட்மெண்ட்" வேணும் இல்லைனா கல்யாணம் பண்ணிக்க தேவையில்லை அப்படின்னு திரும்ப ஒருதடவை பாத்திருங்க!!

/
எனக்கு சுத்தமா புடிக்காத விஷயம் தனிப்பட்ட ஒருத்தர் வாழ்க்கைக்கு ஒன்னுமே புரியாம விஷயம் தெரியாம பஞ்சாயத்து பண்றது, அதையும் உங்களுக்காக செய்துட்டேன்.
/

ஹி ஹி நன்றி ஆனா இப்போதைக்கு தேவைப்படலை

/
உங்களுக்கு மேலும் சந்தேகம் இருந்துச்சுன்னா, நான் இன்னொரு பதிவருக்கு போட்ட பின்னூட்டத்தை திருப்பி போடுறேன். பொறுமை இருந்தா, நேரம் கிடைச்சா இதயாச்சும் முழுசா படிக்க முயற்சி பண்ணுங்க.
/

யாரு கிரிக்கு போட்ட பின்னூட்டமா???

rapp said...

நெம்ப நன்றி சிவா. வந்து உங்க பதில்களை போட்டதுக்கு. இல்லைங்க இது இதே பதிவுக்கு(22/06/2008) வந்த பின்னூட்டத்துக்கான பதில்ங்க. அன்னைக்கு தமிழ்மண பட்டையில் ஒரு பிரச்சினை. அதால நேத்தைக்கு திரும்ப போட்டேன். அதில்தான் நெறைய பின்னூட்டங்கள் இருக்கு. அதை இங்க வேணா காப்பி பண்ணி போடறேன்.

மங்களூர் சிவா said...

/
இதே பதிவுக்கு(22/06/2008) வந்த பின்னூட்டத்துக்கான பதில்ங்க. அன்னைக்கு தமிழ்மண பட்டையில் ஒரு பிரச்சினை. அதால நேத்தைக்கு திரும்ப போட்டேன். அதில்தான் நெறைய பின்னூட்டங்கள் இருக்கு. அதை இங்க வேணா காப்பி பண்ணி போடறேன்.
/

please

rapp said...

//நேத்து நான் போட்ட கமண்ட் எங்க?//
22/06/2008 அன்னைக்கு போட்ட பதிவுக்குத்தான் அண்ணே நீங்க பின்னூட்டமிட்டது. அன்னைக்கு தமிழ்மண பட்டையில் ஒரு பிரச்சினை. அதால நேத்தைக்கு திரும்ப அதே பதிவை போட்டேன். பழையப் பதிவில் உங்க பின்னூட்டமும் என் பதிலும் இருக்கண்ணே. அதை இங்க காப்பி பண்ணி போடறேன். //பிரான்ஸுல ஏதேனும் நெடுந்தொடர் வருதா?//
கண்டிப்பா அண்ணே, நெறைய இருக்கு. ஆனா என்ன வித்தியாசம்னா எல்லா சேனலும் அதை மட்டுமே நம்பி இல்லாம, இன்னும் பல விதமான நிகழ்ச்சிகளுக்கான சேனல்கள் இருக்கு. நம்ம ஊர்லயும் இன்னும் ரெண்டு வருசத்தில அப்படி ஆரம்பிப்பாங்கன்னு நினைக்கிறேன். லோக்கல் நெட்வர்க் மக்கள் ஆரம்பிக்கலைனா, வேற பல இண்டர்நேஷனல் ஊடகங்கள் கண்டிப்பா ஆரம்பிக்க காத்துகிட்டிருக்காங்கனு நாமதான் கேள்விப்படறோமே.


//பின்னூட்ட பகுதில ஒரே அதிதடி போல//

போங்கண்ணே ரொம்ப புகழாதீங்க. ஒரே வெக்க வெக்கமா வருது. நம்ம கிரி என்னப் பதிவுலகில் பெரியாளாக்காம போறதில்லைனு முடிவு பண்ணிருக்காராம். அவரோட இந்த உதவிக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.

rapp said...

//'சொன்னபடி "மெகா முதலைகள்" -யை வலையேற்றியிருக்கிறேன். நேரமிருக்கையில் வந்து பாருங்கள்'
எனச் சொல்ல வந்தேன். பின்னூட்ட காரசார விவாதங்களைக் கண்டு பயந்து விடுகிறேன் ஜூட்//
அப்ப நான் உங்க பதிவுக்கு வந்து பின்னூட்டம் போடலாமா, கூடாதா?

rapp said...

சிவா நீங்க சொல்லி நான் செய்யாம விட்டுடுடுவேனா? ஒரு அஞ்சு நிமிஷம் காத்துகிட்டிருங்க, please.

rapp said...

//கேள்வி எவ்வாறு கேட்கிறார்களோ அந்த முறையிலேயே சென்று விவாதிக்க வேண்டும். நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்னிடம் பத்தி உண்டு. நீங்கள் இவ்வாறு பதில் கூறுவது எனக்கு பதில் கூற தோன்றாமல் எரிச்சலையே தருகிறது. அப்படியே கூறினாலும் அதற்க்கு பயன் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை//
நேத்தைக்கு முழுசா உங்களுக்கு பின்னூட்டம் போட்டு முடிக்கல, பன்னெண்டு மணியாகிடுச்சி. இப்போ மீதியை போடறேன்.
ஏங்க நீங்க என்ன இது பள்ளிக்கூடம்னு நெனச்சிட்டீங்களா? நான் என் பாணிலதான் விளக்கம் கொடுக்க முடியும். நீங்க எதிர்பார்க்கிற(பாணி) மாதிரி நான் பதில் போடணும்னு ஏங்க எதிர்பார்க்கறீங்க. உங்களுக்கு எரிச்சல் வந்தா நான் என்ன செய்ய முடியும்? உங்களுக்கு விவாதம் பண்ண போரடிச்சாலும் நான் ஒன்னும் செய்ய முடியாது. எனக்கெப்படி விவாதம் பண்ண வருதோ அப்படித்தான் பண்ண முடியும். நான் உங்களை தரமில்லாத வார்த்தைகளால ஏதாவது சொல்லி இருந்தால் வருத்தம் தெரிவிச்சிக்கிறேன். மத்தபடி என்னால மாத்திக்க முடியாது.

rapp said...

//இதை போல பதிவு நீங்கள் போட்டீர்கள் என்றால் திரும்ப வருவேன் சந்தேகம் வேண்டாம். ஆனால் நான் சொல்ல வரும் கருத்துக்கள் இனி வேறு மாதிரி இருக்கும்//
ஐயோ ரொம்ப பயமா இருக்குங்க. என்னங்க இப்படி மெரட்டுறீங்க. நான் வேற ரொம்ப பயந்திடறேன். இனிமேல் இப்படி ஒரு பதிவு போடணும்னு நெனைச்சாலே கை காலெல்லாம் நடுங்குது. இருந்தாலும் நீங்க இப்படி எல்லாம் பயமுறுத்தக்கூடாது.

rapp said...

https://www.blogger.com/comment.g?blogID=2873011552606990630&postID=436426574060215561

rapp said...

பழைய பதிப்பு பின்னூட்டங்கள்லாம் இங்க இருக்கு. நேரம் இருக்கும்போது இங்கு வந்து பாருங்க. பழைய பதிப்புல பின்னூட்டம் போட்டவங்க பேஜாராகிடாதீங்க. இங்க இருக்கு அதோட பதில்கள்.
https://www.blogger.com/comment.g?blogID=2873011552606990630&postID=436426574060215561

NewBee said...

ராப்,

நான் கீழே, எடுத்திக்காட்டியிருக்கும் உங்கள் வரிகள், நிதர்சனம்.

இப்பொழுது தான் ராமலக்ஷ்மியின் tamilamudam-மில், ஒரு பின்னூட்டம் இட்டேன்.Self motivation இருந்தால் தான் பெண்கள், சீரியல் பார்ப்பதை விட்டு வேறு செயல்களில் ஆர்வம் காட்ட முடியும்.அதற்கு, குடும்பத்தார்கள் ஒத்துழைப்பு மிக அவசியம் என்று.

நீங்கள் சொல்லியிருப்பது அடிப்படைக் காரணம்.சரி செய்யப் படவேண்டிய ஒன்று
//நான் என்ன செய்வது? எனக்கு பத்து மணிவரை முழித்திருக்க ஒரு காரணம் தேவைபடுகிறது. நாற்பது வயதிற்குப் பின் வாழ்க்கையில் இனி என்ன இருக்கிறது என்ற வெறுப்பு, பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பதற்றம், எங்களின் வயோதிகம் எப்படி இருக்குமோ என்ற பயம் எல்லாம் சேர்ந்து, இரவில் சீக்கிரம் படுத்தால் நடுஇரவில் விழிப்பு ஏற்படுத்திவிடுகிறது அதுதான். சரி உன்னிடம் பேசிக்கொண்டிருக்கலாம் என்றால் நீ போய் வரும் தூரத்திற்கு உன்னை எவ்வளவு நேரம் விழித்திருக்கச் சொல்வது? சரி என அவரிடம் பேசச் சென்றால் எது பேசினாலும் சரியான பதில் கூறுவதில்லை. நான் ஒரு வகை இடையூறு செய்வது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. அப்படியே பேசினாலும் ஏதாவது தெரியாமல் சொல்லப் போய் அதனை அவர் குற்றமாய் எடுத்துக்கொண்டு , என வாழ்க்கை மேலும் கடினமாகிறது. நான் எப்படி பேசும் ஒவ்வொரு வார்த்த்யையும் கணவரிடம் கூட யோசித்தே பேச முடியும், இல்லை செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் என் புத்திசாலித்தனத்தை புகுத்த முடியும்? சரி படிக்கலாம் என்றால் வீட்டில் உள்ள எனக்குப் பிடித்த எல்லா புத்தகங்களையும் படித்தாயிற்று, அதுமட்டுமல்லாமல் எவ்வளவு நேரம்தான் படிப்பது? அதுதான் யாரையும் தொந்தரவுப் படுத்தாமல் எதையோ பார்க்கிறேன்//

rapp said...

நெம்ப நன்றி newbee. உங்க கருத்துக்களுக்கும் ஆதரவிற்கும் நன்றி. நேரம் கிடைக்கும் போது அடிக்கடி வந்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.

Ramya Ramani said...

\\சில ஆண்டுகளாக ஆண்களும் பெரும்பான்மையாக சீரியல்களை நோக்கித் திரும்பியதுதான் என நினைக்கிறேன்\\
நீங்க வேற எங்க அப்பா தான் இந்த சீரியல் எல்லாம் பாக்கராரு :(

\\ என் தந்தை பிள்ளைகளின் பேச்சை காதுக் கொடுத்து கேட்பவராதலால் பிரச்சினைக்கு தீர்வுக் காண முடிந்தது.\\

துணை என்றால் அவரிடம் நீ நீயாகவே இருக்கனும், வெளிப்படைய்யா பேசனும் - இது என் கருத்து. உங்க அப்பா புரிஞ்சுகிட்டாரே சந்தோஷம்!

உங்களோட கருத்துக்களை நல்லாவே வெளிப்படுத்தி இருக்கீங்க வாழ்துக்கள் :)

rapp said...

நெம்ப நன்றி ரம்யா ரமணி. நீங்க நேரம் கிடைக்கறப்போ அடிக்கடி வந்து பார்த்திட்டு போங்க.

Natty said...

எழுத வேணுமா வேண்டாமா என்று ரொம்ப யோசிட்சி, சரி போடா என்ன இருக்குன்னு எழுதுனது.. :)

உங்களோட தசாவதாரம் என்ட்ரி சூப்பர்.

ஆனா பெண்கள் ... டாபிக் வந்தாலே... என்னவோ தவறான சிந்தனைகள் ... கற்பனைகள் ... சரியான மொழி நடையில் இருக்குன்னு தோன்றது.

ஊரில் உள்ள எல்லா தமிழ் பெண்களையும் நீங்களும் பார்க்கவில்லை... நானும் பார்க்கவில்லை... நிறைய வீட்டில் கணவனும் மனைவியும் நண்பர்களாக ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாக இருக்கிறவர்கள் நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன்.
ஆண்களை குறை சொல்றது feminism என்றோ, பெண்மையை control செய்வது machosim (is there a word? ;) ) என்றோ தயவு செய்து கருத்தில் கொள்ள வேண்டாம்..
எத்தனையோ முறை என்னோட அம்மாவுக்கு பழைய படம் பிடிக்கும் என்பதற்காக என்னோட அப்பா football matches பாக்காம இருந்திருக்காரு..
ஆண்மையில் பெண்மையும், பெண்மையில் ஆண்மையும் இருப்பதுதான் காதல் , இல்லறம் , அன்பு etc etc., உணர்வுகளை அறிவு பூர்வமா analyze பண்ணாதீங்க


உங்களுடைய எழுத்து / நடை சூப்பர். தொடர்ந்து எழுதுங்க ...

rapp said...

natty,
நான் பெண்ணியவாதி எல்லாம் இல்லங்க. அந்த அளவுக்கெல்லாம் விஷய ஞானம் இல்லைங்க. நானும் எல்லாப் பெண்களும் அப்படி, எல்லா ஆண்களும் இப்படி என்று எழுதலைங்களே. இந்த மாதிரியும் நடக்குதுன்னுதான் எழுதிருக்கேன். இப்படி எல்லா விஷயத்திலயும் ரெண்டு பக்கம் இருக்கும். நாம பெரும்பான்மையான நிகழ்வுகள வெச்சி சில சமயம் எழுதறோம். அதேமாதிரி ஜாஸ்தி கவனிக்கப்படாமல் ஆனால் முக்கியமான சில விஷயங்கள் இருக்கும். அதப் பத்தி எழுதினா நல்ல விஷயம்தானே. உங்களுக்கு இதில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். நீங்களும் உங்கள் குடும்பத்தை சேர்ந்த எல்லாரும் நல்ல முதிர்ச்சியோடு நடந்து கொள்ளலாம். ஆனா எல்லா இடத்திலும் அப்படி இல்லங்களே. நான் இதே மாதிரி பிரச்சினைகளை நெறைய இடத்தில் பார்த்திருக்கேன். அதனால எழுதறேன். நான் சொல்றது ஒரு விவாதப் பொருளாக்கமைக்காகத்தான். இதில் எல்லாரும் உடன்படணும்னு அவசியமே இல்லை. நான் பார்த்தவைகளை, நான் உணர்ந்தவைகளை பிறரோடு பகிர்ந்துக்கத்தான் இந்த ப்ளாக். மற்றபடி இது வேறொன்றுமில்லை.

கயல்விழி said...
This comment has been removed by the author.
rapp said...

ரொம்ப நன்றி கயல்விழி. சரியா சொன்னீங்க. நான் இதுல ஒன்னே ஒண்ணுதான் சொல்ல வரேன், அது என்னன்னாங்க கயல்விழி, நிறையப் பேர் நக்கல் அடிக்கறாங்க, அறிவுரை சொல்றாங்க, திட்டறாங்க ஆனா ஆக்கப்பூர்வமா மாத்த எதையுமே செய்யறதில்லை. மனநல மருத்துவர் ஷாலினி சொல்ற மாதிரி இதை போன்ற சோப்கள், எமோஷனல் டிராமாக்கள் எல்லாத்தையும் ரசிக்கும் தன்மை பெண்களோட ஜீன்களிலேயே இருக்கும் விஷயங்கள். ஆனால் தொடர்ந்து மொனாட்டினசானா விஷயங்களை பார்ப்பது எல்லாருக்குமே எல்லாவகையிலும் கெடுதல்.அப்படி இருக்கும்போது ஒன்று அவர்களுக்கு நிஜமாகவே பிடித்துதான் பார்க்கிறார்களானு கொஞ்சம் கவினிக்கணும், இரண்டாவது ஆரோக்கியமான மற்ற விஷயங்களை அறிமுகப்படுத்தணும். நிறைய பேர் இப்படி செய்கிறார்கள். ஆனால் மீதிப் பேர் கூட உட்கார்ந்து பார்த்துவிட்டு வெளியே வந்து நொட்டை சொல்கிறார்கள். இதைத்தான் நான் இங்கு விளக்க முயற்சி செய்தேன். இந்தப் பதிவுல ஒரு வரியே இந்தப் பதிவு இப்படிப்பட்டவர்களுக்காத்தான்னு சொல்லிருக்கேன். பதிவின் நீளம் கருதி நெறயப் பேர் படிக்கலப் போல. ஆனால் இவ்வளவு பெரிய பதிவை முழுசா பொறுமையா படிச்சி, உங்கக் கருத்துக்களை சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க கயல்விழி .

ராஜ நடராஜன் said...

மனவியலை நன்றாகவே ஆராய்ந்துள்ளீர்கள்.பதிவினை முழுதாகப் படித்தும் பின்னூட்டங்கள் மிக நீளமாக இருப்பதால் அனைத்துப் பின்னூட்டங்களையும் ஆராய நேரமில்லை.மறுமுறை வருகிறேன்.

rapp said...

உங்க கருத்துக்களை பதிஞ்சதுக்கு ரொம்ப நன்றிங்க ராஜ நடராஜன்.

கோவை விஜய் said...

பெண்கள் ஏன் சின்னத் திரை சீரியல் அதிகம் பார்க்கிறார்கள் ஒரு புது அணுகுமூறை.

தி.விஜய்

http://pugaippezhai.blogspot.com

Unknown said...

அக்கா இப்போதான் முதல்முதலா உங்க ப்ளாக்குக்கு வரேன்..மே மாதத்திலிருந்து நீங்க போட்ட எல்லாப் பதிவையும் (பின்னூட்டம் உட்பட)படிச்சேன். முதலில் எதை எழுதனு ஆரம்பிச்சு ரொம்ப அழகா முன்னேறி இருக்கீங்க..எல்லாப் பதிவையும் படிச்சிட்டு உங்க A ஃபார் ஆப்பிள்‍ல மட்டும் பின்னூட்டம் போடலாம்னு நினைத்தவள் தலைல நல்லா கொட்டு வைத்தது இந்தப் பதிவு. முதலில் பதிவின் நீளம் பார்த்து அப்பறமா படிக்கலாம்னு நினைத்தேன்.. நல்லவேளை இப்போவேப் படித்தேன்.. இல்லையென்றால் ஒரு நல்ல பதிவை மிஸ் பண்ணியிருப்பேன். பதிவைப் படித்தப்பிறகு நீங்கள் இதை எழுதியதின் அவசியத்தையும், வலியையும் உணர்ந்தேன். என் வீட்டில் நாங்கள் இருக்கும் வரை என் அம்மா சீரியல் பார்த்ததில்லை, இப்பவும் பார்ப்பதில்லை முடிந்த வரை அவர் தன்னை ஏதாவதொரு வேளையில் பிஸியாக வைத்துக்கொள்கிறார். எந்த வேளையும் இல்லை என்றாலும் வேறு ஏதாவது பார்ப்பாரே ஒழிய சீரியல் பார்ப்பதில்லை.ஆனால் இப்பொழுதெல்லாம் டி.வி ய தொடவே பயமா இருக்கு அவ்ளோ சீரியல்ஸ்.. இதை நினைத்தால் பயமாகத்தான் இருக்கு..!! :-(

rapp said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றிங்க விஜய்

rapp said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப சந்தோஷங்க ஸ்ரீ. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............. நீங்க பின்னூட்டம் உட்பட எல்லாத்தையும் படிச்சீங்களா? ரொம்ப நல்லவரா இருக்கீங்களே. உங்க பாராட்டுக்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க :):):)