Tuesday, 10 June 2008

அஞ்'ஞாநி'

ஞாநி சார் குமுதத்துல ஒரு கருத்தை எழுதி இருக்கார். என்னன்னா அவருக்கு இந்த தலைமுறை மேல இருந்த நம்பிக்கையை அவரோட நண்பர்கள் வீட்டு ஆடம்பர விழாக்கள் குறைச்சிடுச்சாம். வெளிநாடுகள்ள திருமண மண்டபங்களே இல்லைன்னு கொள்கை சிங்கம் ரபி பெர்னாட் சொன்னாராம். அவரோட புரபசர் தன் திருமண நாள் காலையில் கூட கல்லூரிக்கு வந்திருந்தாராம்.

ஒரு விழாவை ஆடம்பரமாக, அதை செய்ய கூடிய சக்தி உடையவர்கள் செய்வது எப்படி தவறாகும்? இந்த கருத்து எவ்வளவு தவறானது! ஒரு விழாங்கறது ஒரே ஒருத்தரோ இல்லை ஒரு குடும்பமோ குழுவோ சம்பந்தப்பட்ட ஒரு விஷயமா? அதன் பயனாளிகள் அதில் நேரிடையாக பங்கேற்பவர்கள் மட்டுமா? ஒரு கதை நாம எல்லாரும் சின்ன வயசுல படிச்சிருப்போம். ஒரு ஊரில வறுமை தலை விரிச்சாடுச்சாம், அங்க எல்லாரும் வாழ்க்கையே வெறுத்து போய் எப்படா சாவு வருமென்று காத்து இருந்தாங்களாம். சொந்த குழந்தைகளையே வெறுத்து ஒதுக்கறதும், புருஷன் பொண்டாட்டி எந்நேரமும் சண்டை போடருதும்,ஊரில் ஒருத்தருக்கொருத்தர் முகம் குடுத்து பேசிக்காமலும் இருந்தாங்களாம். அப்போ பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிச்சி வந்த பைத்தியம் ஒன்னு ஒரு இனிப்பு கடைக்காரர் கிட்ட போய் ஒரு பெரிய மென்பஞ்சு திடமாக்கூழ்( cake தாங்க.நன்றி:மறைந்த திரு.தமிழ்குடிமகன்) ஆடர் பண்ணுச்சாம்.உடனே அவர் பலசரக்கு கடைகாரர் கிட்ட தான் சேமித்து வைத்த தொகையிலிருந்து இதற்கு தேவையான சாமான்களை வாங்கினாராம். உடனே பலசரக்கு கடைகாரர் இந்த தொகைய வச்சு தன் குழந்தை ஆசையா கேட்ட பொம்மைய வாங்கி குடுத்தாராம். அதை வெச்சி இவரும் துணி வாங்க அந்த ஊருல இருந்த ஒரே பணக்காரருக்கு மானப் பிரச்சினையாகி அவரு நிறைய துணி, இனிப்புகள், பொருட்கள் வாங்க போக ஊரே விழாக்கோலம் பூண்டிச்சாம். அதை பாத்து பக்கத்து ஊர்ல இருந்தெல்லாம் இங்க வந்து எல்லாரும் பொருட்கள் வாங்க, ஆனா முதமுதல்ல இதை ஆரம்பிச்சு வச்ச பைத்தியம் வந்து அந்த cakeஐ வாங்காததுக்கூட அந்த இனிப்பு கடைக்காரர் கவனிக்கலயாம். இதுதான் வாழ்க்கை நியதி.

ஒரு விழா பண்டிகைன்னா அதை ஒவ்வொருத்தரும் அவரவர் விருப்பப்படி கொண்டாடுவதில் என்ன தவறு? நான் இந்த வருடம் இந்தியா வந்த போது ஒரு உறவினர் திருமணத்தின் பொருட்டு இராஜா முத்தையா மண்டபத்திருக்கு சென்றிருந்தேன். அங்கு எல்லாமும் ஆடம்பரம்தான். ஆனால் இதனால் லாபம் அடைந்தது வெறும் திருமண வீட்டினரும் மண்டப உரிமையாளரும் மட்டுமா? அங்கு உபயோகப் படுத்தப்பட்ட பூவில் இருந்து, அலங்காரத்தில் இருந்து, உணவு பரிமாறுபவர்கள் வரை அன்று எல்லாருமே பயனாளிகள்தானே, ஒரு நல்ல மகிழ்ச்சியான விழாவிற்கு செலவழிப்பது ஒரு வகையில் பலருக்கு மறைமுகமாக வேலை அளிப்பதுதானே! இவற்றை அனைவருமே மிக மிக எளிமையாக கொண்டாடினால் எப்படி சமூகம் வாழும்?வளம்பெறும்? இதென்ன கள்ளச்சாரயமா இல்லை இலாட்டிரி டிக்கெட்டா நிறுத்துவதற்கு.

இன்னொரு விஷயம் இதில் கூர்ந்து கவனித்தீர்களானால் எல்லோருக்குமே உள்ளுக்குள் ஒரு வகை ஈகோ இருக்கும். தான் ஏதாவது ஒரு சபையில் முந்தி இருக்க வேண்டும் என்பது. இது ஒரு அறிஞருக்கோ, செல்வந்தருக்கோ, கலைஞர்களுக்கோ கிடைத்து விடுகிறது. மற்ற மிக மிக சராசரியான பெருவாரியான மக்கள் தொகை என்ன செய்யும்? இவ்வகை விழாக்கள் ஒவ்வொருவரின் ஈகோக்கு சிறு துளி அளவாவது தீனி இடுகிறது. இவரே பல முறை கூறியுள்ள ஒரு விஷயம், எல்லா மனிதரிடமும் மனித குணமும் உண்டு மிருக குணமும் உண்டு. இது 100% உண்மை. அவ்வகை குணங்களுக்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ மறைமுகமாகவோ சின்ன வகையிலாவது தீனி இட்டுத்தான் கட்டுக்குள் வைத்திருக்கிறோம். எப்படி தமிழர்கள் தங்கள் ஆர்வத்தை போரிலிருந்து திசை திருப்புவதற்காக ஜல்லிக்கட்டு, வேட்டை என சென்றார்களோ அவ்வாறுதான் இதுவும். அனைத்து மனிதருக்கும் தன் வாழ்நாளில் அவ்வப்பொழுது சபையில் முந்தி இருக்க கிடைக்கும் தருணங்களும்.

இதில் எதிர் வாதமாக எடுத்து வைக்கப்படும் விஷயம், இருப்பவர்கள் செய்வார்கள் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற வகையில் கொண்டாடுகிறார்கள். இதில் எடுத்து வைக்கப்படும் இன்னொரு விஷயம் இதற்கு செலவிடும் பணத்தை ஒரு அநாதை விடுதிக்கோ ஏழை மாணவர்கோ கொடுக்கலாமே என்று. இது முற்றிலும் தவறான ஒன்று. எல்லோரும் அப்படி செய்ய ஆரம்பித்தால் இது மேலும் பல வாழ வழி தெரியாத ஏழை மாணவர்களையும், எழ்மையையும்தான் ஏற்படுத்தும். பின்னே யாருக்கும் தொழிலோ வருமானமோ வாழ்கையில் ஆர்வமோ இல்லையென்றால் வேறென்ன ஆகும். எல்லோரும் தன்னால் முடிந்த அளவுக்கு உதவ வேண்டும் என்று தான் கூறவேண்டுமேயன்றி, மற்றவை ஆதார கூர்ருக்கே ஆப்பு வைத்துவிடும். இதில் தனக்கு என்ன சக்தி உள்ளது அதற்கு எவ்வாறு செலவு செய்ய முடியும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். தன் சம்பந்தியிடமும், மற்ற சொந்தங்களிடமும் தன் வாதத்தை எடுத்து வைக்க முடியாதவர்கள், அதற்கு ஒத்துவராதவர்களை ஒதுக்கிவிட்டு தன் நிலையை செயல்படுத்தாதவர்கள் மற்றும் போலிகௌரவத்திற்காக வாழ்பவர்கள் இவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து நாம் வாழ்வில் கிடைக்கும் சில சந்தோஷங்களையும் தியாகம் செய்ய முடியுமா. ஞாநி மாதிரி பட்டவர்கள் சாதாரண நியாயமான மகிழ்ச்சிகளை அனுபவிப்பவர்கள் மனதில் ஏதோ தவறு செய்வதை போன்ற உறுத்தலை ஏற்படுத்தும் சாடிஸ்ட் போக்கை விட்டு பிறவகை ஆட்களுக்கு அறிவுரை கூறினால் நன்றாக இருக்கும்! இந்த பதிவே நிரம்ப பெரிதாகிவிட்டதால் ரபி பெர்நாடின் அறிய கூற்றை பற்றி அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

இதன் தொடர்ச்சி இங்கே:http://vettiaapiser.blogspot.com/2008/06/blog-post_5058.html

29 comments:

களப்பிரர் - jp said...

//வெளிநாடுகள்ள திருமண மண்டபங்களே இல்லைன்னு கொள்கை சிங்கம் ரபி பெர்னாட் சொன்னாராம். // இந்த பதிவே நிரம்ப பெரிதாகிவிட்டதால் ரபி பெர்நாடின் அறிய கூற்றை பற்றி அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.//

அது எப்படி ?? எல்லாத்தையும் நீங்களே எழுதுவீங்க... ?? எனக்கும் போர் அடிக்குதுள்ள ...

அன்புள்ள ரபி பெர்னார்ட் அவர்களே,

வெளிநாடுகளில் திருமணம் மண்டபம் இல்லை. ஏனெனில் அங்கு திருமணம் சர்ச் அல்லது ஹோட்டல் லில் நடக்கிறது.

தாங்களுக்கு வெகு சமீபத்தில் நடந்த கூகுளின் நிறுவனர் லாரி பேஜ் அவர்களின் திருமண விழா செய்தியை இணைக்கிறேன்.

http://www.nypost.com/seven/12052007/gossip/pagesix/pagesix.htm

ஞானியோ , பெர்நார்டோ , தினமலமோ, ஆவியோ ... எல்லோரும் அவர்களது சொந்த கருத்துக்களை நேரடியாக சொல்லாமல், எளிதில் மற்றவர் நம்பும்படி ஒரு செய்தியை சொல்லி, அதன் மூலம் ஒரு கருத்தை திணிக்கிறார்கள்..

யாத்ரீகன் said...

how can they mean that weddings at foreign countries aren't money spending ones...

rapp said...

ரொம்ப நன்றி களப்பிரர்! நீங்கள் சொல்லி இருக்கும் கருத்துக்கு மேலும் வலு சேர்க்க நான் வெளிநாட்டில் நடைபெறும் திருமணம் மற்றும் பிற விழாக்கள் பற்றி ஒரு பதிவும், ரபி பெர்நாடின் உன்னத கருத்துக் குறித்து(அது அவர் எந்த விதத்தில் கூறினாரோ, ஞாநி அதை எப்படி திரித்தாரோ, யாருக்கோ தெரியும்) சில வாதங்களையும் முன் வைக்க போகிறேன். நமக்குள்ள என்னங்க, நீங்க கொஞ்சம் எழுதுங்க நான் கொஞ்சம் எழுதறேன். தினமலரை தினமலம்னு வேணும்னே எழுதினீங்களா இல்லை எழுத்துப்பிழையா? ஹீ ஹீ ஹீ

rapp said...

ரொம்ப நன்றி யாத்திரீகன். உங்க கருத்தை நானும் ரொம்ப ஆதரிக்கிறேன். அதெல்லாம் வேணும்னே அவங்க பரப்புற செய்திங்க. இதப் பத்தி நான் அடுத்த பதிவு போடறேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்க.

Anonymous said...

You are missing the point here.

அவரவர் தேவைக்கு ஏத்த செலவு என்பது வேறு. ஆடம்பரம் என்பது வேறு.

வெளிநாட்டில் சர்ச்சில் திருமணம் நடைபெறுகிறது என்றால் நம் நாட்டில் கோவிலில் நடைபெறலாம் இல்லையா? அல்லது community hall என்று சொல்லப்படும் பொது நிகழ்ச்சிகள் நடைபெறும் மண்டபங்கள் இருக்கின்றன அல்லவா?

இங்கு ஞானி சொல்வது 'திருமணம்' என்ற சடங்கிற்காக மட்டும் மண்டபம் கட்டுவதும் அதை சார்ந்து மட்டும் பல செலவுகள் செய்வதும்தான்.

சற்று ஆழ்ந்து பாருங்கள். நமது நாட்டில் திருமணம் என்ற சடங்கு எப்படி எதிர்கொள்ளப் படுகிறது? அங்கு சம்பந்தப் பட்ட இருவரின் மண வாழ்க்கையை மட்டும் கருத்து கொண்டா? இல்லையே. ஊர்வலம், சாப்ப்பாடு, வைதீக சடங்குகள், வரதட்சிணை என்று பல்வேறு செலவுகள். கூர்ந்து பார்த்தால் இந்த செலவுகளில் அடிப்படை தேவை தவிர ஆடம்பரமே மேலோங்கி இருக்கும். இந்த ஆடமபரச் செலவுகள் தேவை இல்லாத ego trip-தானே. அடுத்தவனுக்கு சமமாக, அவரை விட மேலாக செல்வு செய்ய எல்லாரும் ஆசைப்படுவது எதனால்?

நம்மூரில் திருமண விழாக்கள். வேறு நாடுகளில் வெவ்வேறு பார்டிகள் மற்றும் வேறு வகை செலவினங்கள். கறுப்பு பணம் தண்ணீராக செலவிடப்படும்.

அம்பானி தனது சொத்தான் 40 பில்லியன் டாலரில் 2 பில்லியன் டாலருக்கு வீடு கட்டுகிறார். அவர் சக்திக்கு தகுந்து அவர் செய்கிறார் என்று நினைப்பீர்களா? அதனால் பலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. தொடர்ந்து கிடைத்து கொண்டுதான் இருக்கும். அதையும் கூட நியாயப் படுத்துவீர்கள் போல.

அவரவர் சக்திக்கு செலவிடுவது என்பதை விட, தேவைக்கு செலவிடுவது சாலச் சிறந்தது. திருமண விழாக்களை தனது சமூக அந்தஸ்தை பறைசாற்றும் சந்தர்ப்பமாக எண்ணாமல் அதனுடைய தேவைக்கு தகுந்த முறையில் செய்யலாம்.

லாரி பேஜ் செய்தாலும் அது டாம்பீகம்தான். டாம்பீகங்கள் சமச்சீரான சமூக சூழலுக்கு எதிரானவைதான்.

Jackiesekar said...

ஞானிக்கிட்ட பணம் இருந்துச்சின்னா அதே போல் தான திருமணம் பண்ணி இருப்ாபர் கேட்டால் மறுதல் மட்டுமே மாறாதது என்று எழுதுவார், பாவம் ஸ்டாலின் கல்யானம் முன்பே நடந்து விட்டது இல்லை யென்றால் கலைஞர் குடும்பத்தை வம்புக்கு இழுத்து இருப்பார்,

பெத்தராயுடு said...

இதே குற்றச்சாட்டுதான் மென்பொருள் பொறியாளர் மீதும் வைக்கப்படுகிறது.

Anonymous said...

----ஞானிக்கிட்ட பணம் இருந்துச்சின்னா அதே போல் தான திருமணம் பண்ணி இருப்ாபர்----

அவர் அப்படி செய்யவில்லை என்பதையும் அவரே ஆனந்தவிகடனில் எழுதியிருந்தார். அவருடைய வீட்டை விற்ற பொழுது அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு, தனது நன்பரின் மகளுக்குதான் விற்றார். காரணம் அந்த பெண் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண் என்ற ஒரே காரணத்திற்காகத்தான். அதனால் அவருக்குதான் பண நட்டம்.

----பாவம் ஸ்டாலின் கல்யானம் முன்பே நடந்து விட்டது இல்லை யென்றால் கலைஞர் குடும்பத்தை வம்புக்கு இழுத்து இருப்பார்,-----

இன்றைய திமுக தொண்டர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் எந்த அளவுக்கு மரத்து போய்விட்டார்கள் என்று இங்குள்ள பின்னூட்டங்கள் காண்பிக்கின்றன.

ஊழல் (டி.ஆர்.பாலுவின் ஒப்புதல் வாக்குமூலம்),
ஆடம்பரம் (பணம் இருந்தா செலவு செய்யத்தான் செய்வாங்க என்று வக்காலத்து வாங்கும் மனப்பாண்மை),
பொறாமை (சன் டிவி தன்னை மீறி வளர்து விட்டதால் தன் பெயரிலேயே இன்னொரு தொலைக்காட்சி சேனல் துவங்குதல். ஒரு முதலமைச்சருக்கு வேறு முக்கிய வேலைகளே இல்லையா?),
தொழில் போட்டி (சுமங்க்லி நெட்வொர்க்கை உடைக்க புதிய நெட்வொர்க்கை திமுக என்னும் கட்சி பலம் கொண்டு நடத்துவது. சாதாரண குடிமகன் என்ன பொழுது போக்கு நிகழ்ச்சிகள் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்வது ஒரு அரசாங்கத்தில் உள்ள கட்சி)
தாதா அரசியல் (கட்சியில் தான் பெரிய ஆள் என்று காட்ட ஒரு கருத்து கணிப்பு. அதனால் பாதிப்படைந்தவர்கள் அந்த கருத்து கணிப்பின் மேல் கட்டவிழ்த்துவிட்ட அராஜகம். அதனால் போன உயிர்கள்).
அடிமை மனப்பாங்கு (கட்சிக்கு உழைப்பது தொண்டன். ஆனால் தலைவனாவதோ குடும்ப உறுப்பினர்கள்தான். ஸ்டாலின் அடுத்த தலைவராக பல ஆண்டுகளாக அடையாளம் காட்டிவிட்டு... இன்று அழகிரி அவருக்கு போட்டி. இரண்டு கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கிட்டத்தட்ட எல்லா பத்திரிகைகளாலும் தீர்ப்பளிக்கப் பட்டவர் தந்தை பாசத்தால் அடுத்த வாரிசாக அடையாளம் காட்டப் படுகிறார். இரண்டு கோடி மக்களை தொண்டர்களாக கொண்ட கட்சிக்கு மேல்சபை உறுப்பினராக தலைவரின் மகள்தான் தகுதி பெறுகிறார்.)... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இதில் பல குற்றசாட்டுகளும் அதிமுக போன்ற அடிப்படை சனநாயகம் கூட இல்லாத கட்சியில் காணக் கிடைப்பதுத்தான்.

ஆக மொத்தம் எவன் கொள்ளையடித்தால் என்ன...

rapp said...

http://vettiaapiser.blogspot.com/2008/06/blog-post_5058.html
அனானி அவர்களே, உங்களுக்கு என் அடுத்த பதிவையே பதிலாக்கி இருக்கிறேன். தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

rapp said...

ரொம்ப சரி jackiesekar , அப்படியே இது சம்பந்தமான என் அடுத்த பதிவுக்கும் வந்து பாருங்க. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

rapp said...

நன்றி பெத்த ராயுடு. அப்படியே இது சம்பந்தமான என் அடுத்த பதிவுக்கும் வந்து பாருங்க. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
http://vettiaapiser.blogspot.com/2008/06/blog-post_5058.html

முரளிகண்ணன் said...

முகூர்த்த நாள் என்று ஒன்று இல்லாவிட்டால் மண்டப வாடகை, காய்கறி விலையேற்றம், போக்குவரத்து நெரிசல் என பலவற்றை தவிர்க்கலாம்.

rapp said...

ரொம்ப கரெக்ட் முரளிகண்ணன், அது பிழைப்புக்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்று. அதை ஏன் வர வர இப்போதெல்லாம் பிற மதத்தினரும் பின்பற்ற ஆரம்பித்துள்ளார்கள் எனத் தெரியவில்லை.

Athisha said...

உங்கள் கருத்தை நான் வழிமொழிகிறேன்

கிரி said...

ஆடம்பரமாக செலவு செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு வேலை கொடுப்பதிலோ, வியாபார உதவி செய்வதிலோ உங்கள் கருத்தில் மாற்று கருத்து இல்லை.

rapp said...

ரொம்ப நன்றி ஆதிஷா, நேரம் கிடைக்கும்போது மீண்டும் வரவும். உங்கள் ஆதரவுக்கு மகிழ்ச்சியோடு நன்றி தெரிவிக்கிறேன்.

rapp said...

மிக நன்றி கிரி, எனக்கும் ஆடம்பரத்தில் நம்பிக்கை கிடையாது, ஆனால் என் ஆடம்பரத்தை யார் வரையறுக்க வேண்டும் என்று ஒரு கூற்று உள்ளது. மற்றபடி ஒருவருக்கு எவ்வாறு விருப்பமுள்ளதோ அவ்வாறு விட்டுவிட வேண்டும். நமக்கு திருமணத்திற்கும் பட்டு உடுத்த பிடிக்காது என்பதால், அதனை உடுத்துபவர்களை குறை கூறுவது போல் உள்ளது ஞாநி அவர்களின் கருத்து. இதில் மற்றுமொரு முக்கிய விவாதம் முன் வைக்கலாம். என்னால் பல வகை பட்டை வாங்க முடியும், ஆனால் நான் மறுக்கிறேன். அதே வறுமையான ஒரு பெண் தன் திருமண நாளில் மட்டுமே உடுத்த வாய்ப்பு கிடைக்கும் அந்த பட்டை, அவள் ஆசையோடு கஷ்டப்பட்டு வாங்கி உடுத்துவது ஆடம்பரமாகுமா? இந்த சந்தர்பத்தை விட்டால் அவளுக்கு அதற்குரிய வயதில் தான் உடுத்திப் பார்க்க ஆசைப்பட்டதை நிறைவேற்றிக்கொள்ள சந்தர்ப்பமே கிடைக்காமல் போக வாய்ப்புண்டல்லவா. அந்த விதத்தில்தான் நான் கூறுகிறேன். உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. நேரமுள்ளபோது மீண்டும் வரவும்.

கிரி said...

//வாய்ப்பு கிடைக்கும் அந்த பட்டை, அவள் ஆசையோடு கஷ்டப்பட்டு வாங்கி உடுத்துவது ஆடம்பரமாகுமா? இந்த சந்தர்பத்தை விட்டால் அவளுக்கு அதற்குரிய வயதில் தான் உடுத்திப் பார்க்க ஆசைப்பட்டதை நிறைவேற்றிக்கொள்ள சந்தர்ப்பமே கிடைக்காமல் போக வாய்ப்புண்டல்லவா. //

200% ஒத்துக்கொள்கிறேன். இதை போல ஆசைகளை நிறைவேற்றுவது கூட ஆடம்பரம் என்றால், அதற்கு என்னிடம் பதில் இல்லை.

ஆனால் அதே சமயம் இந்த ஆசை அல்லது ஆடம்பரம் அந்த பெண்ணின் குடும்பத்தை பாதிக்கும் என்றால் அல்லது இதனால் மிக பெரிய கஷ்டத்தை அவர்கள் சந்திக்கிறார்கள் என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம். வாழ்க்கையில் குடும்பத்தினரின் சந்தோசத்திற்காக நம்மால் முடிய கூடிய சந்தோசங்களை இழக்கலாம். இது என் தனிப்பட்ட கருத்து.

ஆனால் அவர்கள் குடும்பத்தில் ஒரு பிரச்சனையையும் இல்லை, மற்றவர்கள் எதாவது சொல்வார்கள் என்றால் என் ஆதரவு அதற்கு இல்லை. ஏனென்றால் நம் சமூகம் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும். இவர்களை எந்த காலத்திலும் திருப்தி படுத்த முடியாது. நம் மனதிற்கு சரி என்று படுவதை நம் மனசாட்சி படி செய்வது தவறாக எனக்கு தோன்றவில்லை.

//நேரமுள்ளபோது மீண்டும் வரவும்.//

கண்டிப்பாக :-)

rapp said...

உங்களின் பங்களிப்பு மிகுந்த உற்சாகம் அளிக்கிறது கிரி. நன்றி.

மோகன் கந்தசாமி said...

///எல்லோருக்குமே உள்ளுக்குள் ஒரு வகை ஈகோ இருக்கும். தான் ஏதாவது ஒரு சபையில் முந்தி இருக்க வேண்டும் என்பது. இது ஒரு அறிஞருக்கோ, செல்வந்தருக்கோ, கலைஞர்களுக்கோ கிடைத்து விடுகிறது. மற்ற மிக மிக சராசரியான பெருவாரியான மக்கள் தொகை என்ன செய்யும்? இவ்வகை விழாக்கள் ஒவ்வொருவரின் ஈகோக்கு சிறு துளி அளவாவது தீனி இடுகிறது/////

மிகத்தெளிவான விவரிப்பு. மற்றபடி ஞானியைப் பற்றி சொல்ல வேண்டுமானால், 'மொழி' திரைப்படத்தின் வெற்றிவிழா நாள் விவாதத்தில் இயக்குனர் அமீர் ஞானியின் சில கருத்துக்களை மறுத்து பேசியிருந்தார். அது மானப்பிரச்சினையாக அவருக்கு போய்விட்டது போல, அமீரை குமுதத்தில் பேட்டி எடுத்து கலாய்த்து விட்டார். விழா நாள் விவாதத்தின் தொடர்ச்சி போல்தான் அந்தப் பேட்டி இருந்தது. இரண்டையும் பார்த்தவர்களுக்கு அது தெரியும். ஆகவே ஞானியும் ஈகோவிற்கு தீனி போடுபவர்தான் மற்றெல்லோரையும் போல. பெரிய ஞானி மாதிரி சில சமயங்களில் அவர் பேசுவது சகிக்கல. முன்னொரு காலத்தில் உண்மையான பெரியார் கொள்கைப்பிடிப்பில் அவர் இருந்தபோது இந்த அச்சு பிச்சு உளறல், சப்பைக் கட்டுக்கள் எல்லாம் அவரிடம் இருந்ததில்லை எனக்கூறுவார்கள் ஞானியைப் பற்றி தெரிந்த எனது நண்பர்கள் சிலர். எப்படி இருந்த ஞானி இப்படி ஆயிட்டரே!

rapp said...

நான் கூட பார்த்தேங்க. பொதுவா நல்லா விவாதம் பண்ற அமீரும் அன்னைக்கு என்னமோ கொஞ்சம் அசந்துட்டார். அவரு நான் வேறு ஒரு வகை உலகத்தை, வேறு வகை மனிதர்களை அவர்களின் வாழ்க்கையை பதிவு பண்றேன். இதற்கும் மொழி போன்ற திரைப்படங்களுக்கும் சம்பந்தமே இல்லைனு அடிச்சு சொல்லாம விட்டுட்டார். இதை ஞாநி அழகா சாதகமாக்கிகிட்டார். ரொம்ப நன்றி மோகன்.

புதுகை.அப்துல்லா said...

மிகமிக நல்ல பதிவு.உங்க ஒவ்வொறு வார்த்தையோடும் நான் உடன்படுகிறேன்.

rapp said...

நெம்ப நன்றி அப்துல்லா.

M.Rishan Shareef said...

//வெளிநாடுகள்ள திருமண மண்டபங்களே இல்லைன்னு கொள்கை சிங்கம் ரபி பெர்னாட் சொன்னாராம். //

ஞானியின் இந்தக் கருத்தை நானும் பார்த்தேன்.எனது தாய்நாட்டிலும்,நான் இப்பொழுது தொழில் புரியும் மத்திய கிழக்கு நாட்டிலும்,இதனைச் சூழ்ந்த நாடுகளிலும் கூடத் திருமண மண்டபங்கள் வாடகைக்குக் கிடைக்கின்றன.திரு.ரபி பெர்னாட் ஏன் அப்படிச் சொன்னார் என்றுதான் புரியவில்லை.

rapp said...

நெம்ப நன்றி ரிஷான், இதுக்காகவே நான் இன்னொரு பதிவு போட்ருக்கேன் பாருங்க

புருனோ Bruno said...

நம் நாட்டில் திருமண மண்டபங்கள் திருமணத்திகாக மட்டும் உபயோகிக்கப்படுகிறதா.

பெயர் சூட்டு விழாவிலிருந்து, பூனூல் போடுவது, (கிருத்தவர்களுக்கு புனித நற்கருனை), பூப்பெய்வது, நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், அறுபதாம் கல்யாணம், ஏன் இறந்த பின் புகைப்படம் திறப்பது என்று கூட சடங்கு வைத்திருக்கிறோமே

(வேலை நிறுத்த சமயம் மொத்தமாக கைது செய்து அடைப்பது. கூட்டங்கள் நடத்துவது, போன்ற விஷயங்களும் இருப்பது வேறு விஷயம்)
வெளிநாடுகளில் திருமண மற்றும் இதர விழாக்கள் ஹோட்டல்களில் நடத்தப்படுகின்றன -

ஹோட்டலில் நடத்துவது திருமண மண்டபத்தில் நடத்துவதை விட அதிக செலவு பிடிக்கும் விஷயம் தானே

ஞாநி என்ன கூற வருகிறார். மண்டபத்தில் நடத்த வேண்டாம். ஹோட்டலில் நடத்த வேண்டும் என்றா. ???

அப்படி யெறால் அது அதிக செலவு பிடிக்கும் விஷயம் அல்லவா.

அப்படியில்லை என்றால் திருமணம் செய்ய வேண்டாம் என்றா. அப்படி சொல்வது ஞாநியின் தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும், அதற்காக வெளிநாட்டில் “அப்படி” என்று தவறான தகவல் தரக்கூடாது

rapp said...

உங்கள் கருத்துக்களை நானும் வழிமொழிகிறேன் புருனோ சார்.

கோவை விஜய் said...

ஞானியின் "ஓ பக்கங்கள்" முன்பு ஆ.விகடனில் வந்தது.

பின் பிரச்சனையால் இப்போது "குமுதத்தில் " எழுதுகிறார்.

இது மாதிரி விவாதங்கள் தொடரட்டும்.

மூத்த பதிவர்கள் தங்கள் பதிவுக்கு வருகை புரிந்து கருத்து சொன்னதிற்கு பாரட்டுக்கள்.

சாதனை தொடர வாழ்த்துக்கள்.
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

Anonymous said...

I'm a follower of your blog, got a chance to read this post today.

Certain writers try to make the readers believe their ideas and opinions as facts, and sometimes the readers never try to find out the truth but just accept or start thinking that whatever the writer has written is true!
I used to read "O" Pakkangal, there you can see that Gnani always tries to give us an image that whatever he writes is the fact or the idea of the majority of the society!
I have seen him supporting a particular political party all along his series! But he tries to maintain an outward show that he's a diplomat!

Akkaa, this is a superb post, I would seriously agree with each word of yours, and I wish that Gnani should read this once:)

Keep on rocking!

-Mathu