Friday 6 June, 2008

பேர்வெல் டே

உங்களுக்கெல்லாம் ஞாபகம் இருக்குதா? ஒரு காலத்துல எக்கச்சக்கமா கல்லூரி காதல் சம்பந்தமா படங்கள் வரும். இது எல்லாத்துலயும் ஒரு பேர்வெல் டே பாட்டு இருக்கும்(அதாங்க சார்லி,சின்னி ஜெயந்தெல்லாம் முரளி, அப்பாஸ் வகையறா சொங்கி கதாநாயகனுக்கெல்லாம் பிரண்ட்சா நடிச்சு, அம்மா அப்பால்லாம் பசங்கள காலேஜ் அனுப்பவே பயப்படுற அளவுக்கு மாமா வேல பாக்குற வெண்ணிராடை மூர்த்தி எல்லாம் புரபசரா வருவாங்களே அந்த கால கட்டம்) அந்த படங்களோட எபெக்ட்டுல எப்படா நாம பத்தாம் கிளாசு வருவோம், நாமளும் ஒரு "முஸ்தபா" பாட்டு பாடலாம்னு காத்துகிட்டு இருந்தா, எங்க கிளாசுல இருக்க சில வீணா போன பாவிங்க நாங்க ஒம்பதாம் கிளாசு படிக்கும்போது பத்தாம் கிளாசு படிக்கிற பசங்களுக்கு குடுக்கிற பார்ட்டிக்கு கொஞ்ச நாள் முன்னால பத்தாம் கிளாசு பசங்களோட லவ்வுன்னு ஊர் சுத்தின விஷயமும், சில பேர் கொஞ்சம் மேல போய் எங்க கிளாசுக்குள்ளயே ஜோடிப்புறாவா திரிஞ்சது எல்லாம் கரெக்டா H.M சிஸ்டருக்கு அப்போன்னு பாத்து தெரிய வந்து பேர்வெல் டேயும் கிடையாது ஒரு மண்ணும் கிடயாதுன்னுட்டாங்க. (இந்த விஷயம் நாலஞ்சு செட்டா நடந்துக்கிட்டு இருந்தாலும், அவங்களுக்கு எங்க செட்டுன்னா சுத்தமா ஆகாது,ஏன்னா நாங்க அவங்க பண்ணிக்கிட்டு இருந்த பல உள்ளடி வேலைகள வெட்ட வெளிச்சம் ஆக்கிட்டோம், இன்னொன்னு என்னன்னா அது ஏனோ தெரியாது அவங்களுக்கு எந்த கிளாசும் ஒற்றுமையா இருக்கறது சுத்தமா பிடிக்காது, பசங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் இடையில ஒரு விதமான ஈகோவ உருவாக்கிடுவாங்க, ஆனா எங்கக்கிட்ட அது நடக்கல) எங்க மேல இருந்த கடுப்புல அவங்க எங்கள மட்டும் தண்டிக்கறதா நினைச்சு 10ஆம் கிளாசு பசங்களையும் சேர்த்து தண்டிச்சிட்டாங்க.

இதோட விட்டாங்களா அடுத்த வருஷமும் எங்களுக்கு குடுக்க இருந்த பார்ட்டிய கேன்சல் பண்ணிட்டு, நாங்க டீச்சருங்களுக்கு குடுக்கிற தேங்க்ஸ்கிவ்விங் பார்ட்டிய மட்டும் நடத்த சொல்லிட்டாங்க.அதுலயும் ஒரு பேராபத்து இருக்கு.எங்க ஸ்கூல் டீச்சர்ஸ் நல்லவங்கதான்னாலும், ஒண்ணும் ஜாஸ்தி கலாய்க்க முடியாது. அடுத்த வருஷம் +1 அங்க தான படிக்கணும்.

இப்டியாக சினிமால காமிக்கிற அழுகாச்சியும் இல்ல, பிரண்ஷிப்பின் மகத்துவத்தை உணர்த்தும் காண்டில் லைட் பாட்டும் இல்ல(அதாங்க விஜய்யும் நடிப்பும்(சேராதிருப்பது) மாதிரி இருந்தவங்க விஜய்யும் மொக்க பஞ்ச் டயலாக்(சேர்ந்தே இருப்பது) மாதிரி ஆறது) அப்டியே பேர்வெல் டே நடந்திருந்தாலும் நாங்க இப்டியெல்லாம் செஞ்சிருக்க மாட்டோங்கறது வேற விஷயம்,ஏன்னா முக்காவாசிப்பேர் அங்கதான் +1 சேருவோம்னு தெரியும். சோ ஜென்ம விரோதங்கள் தொடர்ந்தன.
அடுத்த வருஷம் ஒரு வழியா அந்த சிஸ்டர் டிரான்ஸ்பர் ஆகிட்டாங்காளா, அதனால +1ல நாங்க பார்ட்டி கொடுக்க பிரச்சினை இல்லை(அப்போ +1, +2ல வெறும் பொண்ணுங்க மட்டும்தான் படிச்சாங்கங்கறது வேற விஷயம்) அப்போதான் முதல்வன் ரிலீஸ் ஆகி 6 மாசமாச்சு. உப்பு கருவாடு பாட்டு, டோலு பாஜே, உல்டா ஸ்கூலு, ஸ்கிட், ஆட்ஸாப்னு ஏதோ எங்களுக்கு கெடைச்ச 2 மணி நேரத்தில ஒப்பேத்திட்டோம். சரி,கடைசீல எல்லாரும் அழனுமேனு நாங்க அவங்கள deliberateஆ அழவைக்க இருட்டுல மெழுகுவர்த்தி கொளுத்தி கைல குடுத்திட்டு காத்திருக்கோம், அப்பவும் ஒருத்தியும் அழல,சரின்னு விடா முயற்சியா சோக பேர்வெல் டே பாட்டு எபெக்ட குடுக்கறோம்,ம்ஹூம் கொஞ்சம் விசும்ப கூட இல்ல. அப்புறம்தான் கவனிச்சா எந்த பேக்கோ அவங்களுக்குள்ள இருக்கிற department விரோதத்த(ஒருத்தர்க்கு ஒருத்தர் சூனியம் வச்சிக்காததுதாங்க குறை) மறந்துட்டோ இல்ல தன்னை ஐ.நா சபைனு நெனைச்சோ எல்லார்க்கும் கலந்துகட்டி சீட் போட்டு உக்காரவச்சிருக்கா. ஐ.நா சபை எப்டி சொதப்புமோ அதே மாதிரி சுதப்பியாச்சு. கடசீவரைக்கும் ஒருத்தரும் ஒரு துளி தண்ணிய கண்ணுல காட்டல. சரி நாம நாம அடுத்த வருஷம் சேத்து வச்சி அழுவோம்னு தீர்மானம் பண்ணிகிட்டோம். அப்போ எங்க தெரிஞ்சது விதி வலியதுன்னு!

அடுத்த வருஷமும் வந்தது, பேர்வெல் டே டேட்டையும் முடிவுபண்ணிட்டோம். பப்ளிக் எக்ஸாமுக்கு படிக்கறத விட வித விதமா பேர்வெல் டே பாட்டுக்கள பார்த்து(எபெக்டுக்கு) அழணும்னு பயங்கரமா தயார் பண்ணிக்கிட்டு ஆவலா அன்னைக்கு மத்தியானம் புடவைய(இதுக்குன்னே புதுசா புடவைய வாங்கிட்டு, ஏதோ அப்போ கைல கெடச்சத எடுத்து கட்டிக்கிட்டு வந்ததா பீலா உடுறதுதான் மரபு) பக்கத்து அக்கத்து வீட்ல உதவி கேட்டு கட்டிக்கிட்டு கண்ணாடில நூத்தி அறுபத்தி மூணாந்தரம் casual look ஏற்படுத்த, பத்து வகை மேக்கப்பும் இருபது வகை ஹேர் ஸ்டைலும் மாத்திட்டும் பாத்துகிட்டும் இருக்கும் போதுதான் போன் அடிக்கிது,என்னான்னு திகிலோட எடுத்தா(நமக்கும் இதுக்கும் இருக்கிற ராசிதான் உங்களுக்கு வெளங்கிருக்குமே) பயந்த மாதிரியே ஆகிடுச்சி. யாரோ குரங்கு குமார்னு ஒரு ரவுடிய போட்டு தள்ளிட்டாங்களாம், அதனால தாம்பரம் வரைக்கும் எல்லா ஸ்கூலும் மூடிட்டாங்கன்னு. இதுல என்ன கொடுமைனா அது ஒரு வதந்தீங்க. அவர இப்போதான் 6 மாசத்துக்கு முன்னாடி போட்டு தள்ளினாங்க. எங்களுக்கு எப்டி இருந்திருக்கும். அப்றம் ஏனோ தானோன்னு எக்சாம்க்கு 2 நாள் முன்னாடி வச்சாங்க.அப்போ என்னத்த பண்றது, எந்த சோகத்தை(புடவயில ஐஸ்க்ரீம் கறைபட்டத நினைச்சா இல்ல நாளன்னைக்கு எப்டி எக்சாம் இருக்கும்னு நினைச்சா) நினைச்சு அழறதுனு தெரியாம, ஒரு மாதிரி குழம்பி என்னமோ நட்டு கழண்ட மாதிரி சிரிச்சி கெலாட்டா பண்ணிட்டு வந்துட்டோம்.

சரி காலேஜ்லயாவது இதையெல்லாம் பண்ணனும்னு போனா, தனியார் பொறியியல் கல்லூரிகள்ள கேம்பஸ் இண்டெர்வியூ, பிளேஸ்மென்ட், அமெரிக்க மாப்பிள்ளையோட நிச்சயதார்த்தம் அப்டின்னு முக்கிய பணிகள் 3rd இயர்லயே ஆரம்பிச்சிடரதால இதிலெல்லாம் யாரு எத்தனை சதவிகிதம் சாதிச்சிருக்காங்க, எப்டி அவங்க உருப்படாம போவாங்கன்னு ஆண் பெண் வித்தியாசம் இல்லாம பொறாமபட்டுகிட்டே இருக்கறதால,பேர்வெல் பார்ட்டி கலாச்சாரம் 2000க்கு முன்னாடியே(அநேகமா 1998ல இருக்கும்னு நெனைக்கிறேன்,எங்கக்கா செட்தான் கடைசீன்னு நெனைக்கிறேன்) அழிஞ்சு போச்சுன்னு தெரிஞ்சிகிட்டேன். ஆஹா என்னடா இது பேர்வெல் பார்ட்டிகளுக்கு தனியார் பொறியியல் கல்லூரிகள்ள வந்த சோதனைன்னு நெனைச்சி, சரி நாமும் இந்த ஜோதில ஐக்கியமாகிடுவோம்னு எல்லாரையும் போல பொறாமப்பட்டு, புறம் பேசி, கடைசியா எடுக்கிற காலேஜ் மேகசீன் போட்டோக்கு பாதி பேர் வராம, நானும் இவர கல்யாணம் பண்ணி சிலபல பேர எரிச்சல் படுத்திட்டு(பின்ன 5 வருஷம் காதலிச்சும் ஒருத்தர்கிட்டையும் மூச்சு விடலன்னா) வித்தியாசமான பேர்வெல் டேவ என் கல்யாண ரிசப்ஷன்ல கொண்டாடினேன்.

30 comments:

Anonymous said...

another good one :)

Anonymous said...

Kalakeeteenga. I like the way you write. ( Pavam Actor vijay ) Actor vijay Blog ellam padippaaraa.

rapp said...

ஹாய் அம்பி அண்ணா, தேங்க்ஸ்!!

rapp said...

நெம்ப தேங்க்ஸ் படிப்பவன், அவருக்கு ப்ளோக் படிக்கிற பழக்கம் இருந்தா இந்நேரத்துக்கு நாண்டுகிட்டு... அத வேற ஏன் என் வாயால சொல்லணும்.

Anonymous said...

நல்லா எழுதறிங்க.

ஆனாலும் விஜய் பாவங்க. அவர் கேட்டகிரியே வேற.

நாமதான் ஒரு கழுதையப் பிடிச்சுவைச்சுகிட்டு அது குதிரை மாதிரி இல்லை என்று குறை சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.

rapp said...

thanks, அண்ணே எல்லாத்துக்கும் ஒரு அளவிருக்கு, ஆனா விஜய், விஜயகாந்த், டி.ஆர் இவங்கெல்லாம் லிமிட்ட தாண்டி கடுப்பேத்தறாங்க.

பரிசல்காரன் said...

நல்ல முன்னேற்றம் உங்கள் பதிவுகளில்! எங்கேயோ...ஓஓ... போய்ட்டீங்க!

rapp said...

தேங்க்ஸ் கிருஷ்ணா

முரளிகண்ணன் said...

அனுபவிச்சு எழுதி இருக்கீங்க. இதே மாதிரி தொடருங்க.

rapp said...

ரொம்ப நன்றி முரளிக்கண்ணன். அடிக்கடி வந்து பாருங்க. ஆமாங்க எனக்கு இந்த மாதிரி ரொம்ப எதிர்பாக்குற விஷயங்கள் சிலது நடக்காம, காமடியா போய்டுது.

rapp said...

ரொம்ப நன்றி சின்னப்பையன். அடிக்கடி வாங்க.

தருமி said...

//பின்ன 5 வருஷம் காதலிச்சும் ஒருத்தர்கிட்டையும் மூச்சு விடலன்னா)..//

இந்தக் கதையைப் பற்றி எப்போ இங்க "மூச்சுவிடப்" போறீங்க?

rapp said...

சீக்கிரத்திலயே ஒரு ரெண்டு மூணு பதிவ இந்த காதல் மொக்கைய போட்டு ஓட்டிடடலாம்னு இருக்கேங்க தருமி சார். உங்க புரோபைல் போட்டோல இருக்கிற ரெண்டு சின்னப் பசங்களில் நீங்க யாரு

லதா said...

//அதனால +1ல நாங்க பார்ட்டி கொடுக்க பிரச்சினை இல்லை(அப்போ +1, +2ல வெறும் பொண்ணுங்க மட்டும்தான் படிச்சாங்கங்கறது வேற விஷயம்) அப்போதான் முதல்வன் ரிலீஸ் ஆகி 6 மாசமாச்சு. //

உங்கள் வயதை நீங்களே சொல்லிவிட்டீர்கள். ;-))

தருமி said...

//உங்க புரோபைல் போட்டோல இருக்கிற ரெண்டு சின்னப் பசங்களில் நீங்க யாரு//


நல்லா பாருங்க .. என் profile-ல் மூணு சின்னப் பசங்கல்ல இருக்கிறோம். நடுவில இருக்கிறதுதான் நானு :)

ஆனாலும் உங்களுக்கு செம sense of humour!

rapp said...

லதா மேடம் இதயெல்லாம் நோட் பண்ணக்கூடாது:):):)

rapp said...

//நல்லா பாருங்க .. என் profile-ல் மூணு சின்னப் பசங்கல்ல இருக்கிறோம். நடுவில இருக்கிறதுதான் நானு //
சூப்பர் பதில்

யாத்ரீகன் said...

:-))) very nice

rapp said...

ரொம்ப நன்றிங்க யாத்திரீகன்

சென்ஷி said...

//பரிசல்காரன் said...
நல்ல முன்னேற்றம் உங்கள் பதிவுகளில்! எங்கேயோ...ஓஓ... போய்ட்டீங்க!
//

ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிப்பீட்டே :))

rapp said...

ரொம்ப நன்றிங்க சென்ஷி:):):)

வெட்டிப்பயல் said...

:-))

rapp said...

ரொம்ப நன்றிங்க வெட்டிப்பயல்

கோவை விஜய் said...

பிரிவு உபசாரப் பதிவு நல்ல எழுதியிருக்கீங்க.

பொறியியல் கல்லுரிகலில் தான் "பேர்வெல்" அம்பேல்

ஆனால் கலை அறிவியல் கல்லுரிகளில் இது முன்னைவிட சிறப்பாயிருக்கு.

அதுவும் சென்னை,கோவை,திருச்சி,மதுரை,சேலம்,நெல்லை கல்லுரிகளில் செம கொண்டாட்டங்கள்.தொடர்கின்றன.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

ராஜ நடராஜன் said...

சந்தேகமுன்னு தலைப்போட தலையில குட்டினா போர்வெல்:) டே யில கொண்டுவந்து விட்டுடுச்சு.நான் அப்புறம் வந்து போர்வெல் தண்ணி எத்தன பேர் குடிச்சாங்கன்னுப் பார்க்கிறேன்.

சந்தனமுல்லை said...

ம்ம்..நல்லாயிருக்கு உங்க பதிவு!!
என் தம்பி காலேஜ்-ல, ஹோட்டல் ஹால் புக் பண்ணி கொண்டாடினாங்க..போன வருஷம்!!
ஆனா, போட்டோஸ் பார்த்தா யாரும் அழுத மாதிரி தெரியல..ஏன்னா பாதி பேர் ஒரே கம்பெனில ப்ளேஸ்டு!

வல்லிசிம்ஹன் said...

ஃபேர்வெல் சொல்ல ஃபேர்வலுக்கே இஷ்டமில்லையோ என்னவொ ராப்:0)

rapp said...

வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க ராஜ நடராஜன்

rapp said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றிங்க சந்தனமுல்லை. நான் முடிச்சது 2006ல, ஒரு வருஷத்தில் பசங்கல்லாம் திருந்திட்டாங்க போலருக்கு :):):) ப்ளஸ் ஜூனியர்கள் அகராதி கேசுங்களா இல்லாம இருக்கறது முக்கியாமில்லைங்களா :):):)

rapp said...

அடடே, வல்லிசிம்ஹன் மேடம் உங்களோட வருகைக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க மேடம். இது எனக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் :):):)