டிஸ்கி: இந்தப் பதிவு முழுக்க, 'சுயகழிவிரக்கம், இப்போ இதுலருந்து என்ன சொல்ல வர்றே' போன்ற எண்ணங்களே தலைதூக்கும் என்று எச்சரிக்கை செய்கிறேன்(அது வழக்கம்தானேன்னு இறுமாப்போட வர்றவங்க வாங்க). இப்டியாக ஒண்ணுமில்லாதத வெச்சி சீன் போட்டிருக்கும் என் கலைத்திறமையை நினைச்சு ஆச்சர்யமா ஆயாசமா இருந்தாலும், இதைப் படிச்சு முடிக்கும்போது உங்களோட 'இதுக்கு கோலங்களே பாத்திருப்பனே', மனநிலையை எண்ணி ஆனந்தப்படுகிறேன்.
அது இப்போ இருக்க மாதிரியே ஒரு கிரைசிஸ் டயம். ஒய்டுகே முடிஞ்சு, பாய்சன பாயாசமா நெனச்சு சப்டவங்கல்லாம் சர்வசாதாரணமா கதையல்ல நிஜமாகிட்டு இருந்தாங்க. நான் பிளஸ்டூ ஆரம்பிக்கும்போதே சனியன் சகடை கணக்கா எங்க டிபாட்மென்டை பாத்தவங்க நெறயப் பேர்(அது நீ இருந்ததாலன்னு சொல்றவங்களுக்கு இந்தப் பதிவை சமர்பிக்கிறேன்).
ரிசல்ட் வர்றதுக்கு முன்னயே நாங்களா முடிவு பண்ணி, பிரபு சம்பந்தி சேலத்துல வெச்சிருக்க காலேஜ்ல உத்தமமா சேர முடிவுப் பண்ணியாச்சு. அது ஏன் அந்த காலேஜுக்கு போனோம்னா, அந்த டைம்ல சேலம் சைட் காலேஜ்களில்தான் ஐந்து வருட எம்எஸ்சி கோர்ஸ் இருந்திச்சி (கல்யாண பத்திரிக்கைக்காக இல்லாட்டாலும், ஒரேடியா, சேந்திட்டா அஞ்சு வருஷம் பிரச்சினயில்லாமப் போகும்னு). ஆனா, ரிசல்ட் வந்தப்புறம் பாத்தா, தங்கபாலுவோட காலேஜ்லருந்து, வாரியார் சொந்தக்காரங்க கல்லூரி வரை, பொறியியல் கல்லூரிகள் பலது சீட் கொடுக்க போட்டி போடுற கலிகாலம். எங்க செட்லருந்து, பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும்னு அறிவிப்பு வேற. திமுககாரங்களா இருந்திட்டு, எதுக்கு அண்ணாவை கேவலப்படுத்தனும்னு யோசனையில் இருந்தேன். ஆனா, அதுக்கு இடம்கொடுக்காதளவுக்கு இவங்க நக்கலும் ஓவரு, அந்த காலேஜுக்கே இசிஇ தரமாட்டேன்னு அடம்.
இவங்கல்லாம் திடீர் மானஸ்தனுங்கன்னு புரிஞ்சு, சரி ஒரு மாஸ்டர் டிகிரியாவது, டிகிரி காப்பி கணக்கா சுளுவா கெடைக்குதேன்னு சேலம் போகலாம்னு இருந்தப்போ, இங்க எங்க காலேஜ் பத்தி அக்கா நண்பர்கள் மூலமா தெரிய வந்துச்சி, அதே எம்எஸ்சி சென்னைப் பல்கலைக்கழகம் கீழ புதுசா வருதுன்னு.
கிண்டில போய் பீசெல்லாம் கட்டிட்டு, அட்மிஷன் சம்பந்தமா எதையோ வாங்க காத்திருந்தா, எங்கண்ணனோட நண்பர் வந்து எதிர்ல காட்சிக் கொடுக்குறார். அவருதான் ஆடிட்டிங் பாக்குறேன்னு சொன்னதால, எங்கப்பா, எப்டிப்பா காலேஜ் ஒகேவான்னா, 'என்ன சார் இங்கயா சேத்தீங்க, அந்த காலேஜ் ஊருக்குள்ள ஒன்றர கிலோமீட்டர் நடந்தால்ல கண்ல தட்டுப்படும், அதுவும் ஒரு பஸ்சும் அங்க நிக்காது, காலேஜும் ஆரம்பிச்சு, நாலு வருஷம்தான் ஆகுது, இப்டி பண்ணிட்டீங்களேன்னு' கபீர் கெளப்புறார்.
ஏற்கனவே பிரபு சம்பந்தி, பொண்ணு கல்யாணத்துக்கு பந்தி செலவுக்கு சேத்து வெக்கனும்னு எங்கக்கிட்டருந்து அம்பதாயிரம் மொய் வாங்கினதால, இங்கக் கெரகம் கரகம் ஆடட்டும்னு விட்டுட்டோம்.
இது நடந்தது, ஜூன் மாசம், அப்போதான், வீட்ல பொருளாதார நெருக்கடிகள் ஆரம்பமாகியிருந்தன. நாங்க கட்ட ஆரம்பித்திருந்த புதிய வீடு பற்றினக் கவலை. அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தது. அப்பா வினோதமாக விஜய் படங்களை பாக்க ஆரம்பிச்சார். எங்க கல்லூரிக்கு போயிட்டு வர சர்வசாதாரணமா, ஒரு நாளைக்கு அஞ்சு மணிநேரம் ஆகலாம், என்கிற திகில் தகவல். அக்காக்கு குழந்தை பிறந்தால் எப்டி வளக்கிறதுன்னு பயம். படிச்சு முடிச்சாலும் கணினித்துறையில் எதிர்காலமுண்டா என்று பயப்பட வைத்த காலக்கட்டம். எங்க ஏரியாவில் உச்சகட்ட தண்ணீர் பஞ்சம். என் மார்க் வெச்சு அப்பா சைட்ல எல்லா சொந்தக்காரங்களும் ஏகத்துக்கும் நக்கலடிச்சு வெறுப்பேத்துற வேலைய, சொந்த வேலய விட அதிகமாப் பாத்தாங்க. இப்டி ஒன்னு பத்தாகி, பத்தே பரமசிவமானக் ('தல'யோட பரமசிவம் பாத்தா கணக்கான்னு கூட வெச்சுக்கலாம்)காலக்கட்டம்.
ஒரு சனிக்கிழமை காலைல வீல்னு ஒரு சத்தம், அம்மாதான். என்னமோ ஏதோன்னு பதறி எழுந்தா, அப்பா டிவியப் பாருங்கறார். கலைஞர் கைது பத்தின செய்திகள்.
அன்னைக்கு சாயந்திரம் டிவியப் பாத்துகிட்டே எங்கம்மா சீரியஸா சொல்றாங்க, 'நீ என்னைக்கு அஞ்சு வருஷம் படிச்சு முடிக்கிறது, அதிமுக ஆட்சி போறது, வீட்டை கட்டி முடிக்கிறது, குழந்தைக்கு அஞ்சு வயசாகுறது, மத்த பிரச்சினைகள் சரியாகுறதுன்னு'. அந்த டைம்ல நான் இருந்த ஒரு மனநிலைக்கு வாழ்க்கையில் என்றுமே திரும்பக் கூடாதுன்னு இன்னிவரைக்கும் நெனைக்கிறதுண்டு.
ஆனால் எப்டி விக்கிரமன் படத்துல, ஒரு லாலாலாவுல எல்லாம் சரியாகிடுமோ, அதாட்டமே எல்லாம் பாசிடிவ்வா மாறுச்சின்னு இப்போ வரைக்கும் எனக்கு அதிசயமா இருக்கும்.
இதோட என் பேஜாரு ஒப்பாரி முடிஞ்சு, அடுத்த பாகத்திலிருந்து நிஜக் கல்லூரிக் காலம் தொடரும்.
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
:-)) அப்புறம்...?!
//(அது நீ இருந்ததாலன்னு சொல்றவங்களுக்கு இந்தப் பதிவை சமர்பிக்கிறேன்)//
அப்ப நான் இந்த பதிவு எனக்காகன்னு நினைச்சுக்கறேன் ;-)))
முதல் பகுதி ஓக்க்கே!
அடுத்த பார்ட்டுக்கு வெயிட்டீஸ்!!
படிக்கிறவங்க சொல்லவேண்டியதெல்லாம் மனசைப்படிச்சாப்ப்ல சொல்றீங்களே.. ம் ..:)
@ சென்ஷி எல்லாரும் இந்த பதிவு எங்களுகாகன்னு சண்டைக்கு போகவேண்டாம்.. படிக்கிற அத்தனை பேருக்கும் சமர்ப்பண்மாவே இருக்கட்டும் இந்த பதிவு..
\\முத்துலெட்சுமி/muthuletchumi said...
படிக்கிறவங்க சொல்லவேண்டியதெல்லாம் மனசைப்படிச்சாப்ப்ல சொல்றீங்களே.. ம் ..:)
@ சென்ஷி எல்லாரும் இந்த பதிவு எங்களுகாகன்னு சண்டைக்கு போகவேண்டாம்.. படிக்கிற அத்தனை பேருக்கும் சமர்ப்பண்மாவே இருக்கட்டும் இந்த பதிவு..
\\
இதுக்கு ஒரு ரீப்பிட்டே ;;))
அடுத்து எப்போ??
சேலத்துலயா படிச்சீங்க தாயி எனக்கு சூப்பர் சீனியரா இருப்பீங்க போல!
நல்லா எழுதியிருக்கீங்க!
//அப்பா வினோதமாக விஜய் படங்களை பாக்க ஆரம்பிச்சார். //
:))))))
//@ சென்ஷி எல்லாரும் இந்த பதிவு எங்களுகாகன்னு சண்டைக்கு போகவேண்டாம்.. //
அக்கா சொன்னதால ஒ.கேய்
அக்செப்ட்டட் :))
பதிவு போட்டா தயவுசெய்து எனக்கு ஒரு மெயில்வுடு :)
என்ன தல.. பதிவு போட்டா மெயில் பண்ண மாட்டிங்களா? ஒரு ஜாலிப் பதிவை மிஸ் பண்ணிட்டேனே.
:)
பிறகு நீங்க படிச்சீங்களா இல்லியான்னு எப்ப சொல்வீங்க....
After two months... officer!
அப்புறம்...?!
Post a Comment