Wednesday 15 October, 2008

சினிமா தொடர்

என்னை இந்தத் தொடருக்காக அழைத்த முரளிக்கண்ணன் அவர்களுக்கும், முத்துலெட்சுமி கயல்விழி அவர்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி:):):)

1 - அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

நான் பிறக்கறத்துக்கு முன்ன இருந்தே வீட்ல டிவி இருந்ததால ரொம்ப சின்னக் குழந்தைல இருந்தே சினிமா பாக்க ஆரம்பிச்சிட்டேன். எனக்கு நியாபகம் இருக்கறது, தலைவரோட பராசக்தி படம்தான். அப்போல்லாம் எங்க தெருவில் எங்க வீட்ல மட்டும்தான் டிவி இருந்ததால, நெறயப் பேர் டிவி பார்க்க வருவாங்க. பராசக்திக்காக, பொதுவா வராத சிலப் பேர் கூட வந்திருந்தாங்க. நான், குழந்தையை ஆத்துல போடும் சீனைப் பார்த்து நிஜம்னு நினைச்சு, 'பே'ன்னு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி, படத்தோட முக்கியமான கோர்ட் காட்சியை யாரையும் பாக்க விடாம செஞ்சிட்டேன். இன்னும்கூட சிலப்பேர் அதை நியாபகம் வெச்சிக்கிட்டு என் கஷ்டத்தை குறைப்பாங்க(என்னக் கஷ்டம்னா, நானா ஏதாவது யோசிச்சு கடுப்பேத்துறத்துக்குள்ள தானே கடுப்பாகிடுவாங்க)

1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

தியேட்டர்லன்னு வெச்சுக்கலாம். கணபதிராம் தியேட்டர்னு அடையார்ல ஒரு சரித்திரப் புகழ்வாய்ந்த தியேட்டர் இருக்கு இல்லையா, அங்கதான் ராஜாதி ராஜா பார்த்தேன். எங்க மாமா தாத்தா(அத்தைப் பாட்டி மாதிரி) வீட்டு விசேஷத்துக்கு போகனும்னு, அங்க வர விருப்பமில்லாத கசின்சோட என்னையும் சேர்த்து படத்துக்கு அனுப்பிட்டாங்க(நான் அங்க வந்தா தொந்தரவு கொடுப்பேனாம்!!!) சோகமா போன நான் அப்டியே செம ஜாலியாகிட்டேன். இவ்ளோ பேரோட படம் பாக்கறோம்ங்கற பீலே குஷியாக்கிடுச்சி. கொஞ்ச நாளில திருப்பி நான் தொந்தரவு கொடுத்ததால அபூர்வ சகோதரர்கள் கூட்டிட்டு போனாங்க(அதே தியேட்டர்). அதுல குள்ள கமல் சாரை நிஜமாகவே வேற ஒரு ஆள்னு ரொம்ப நாள் நினைச்சுக்கிட்டு இருந்தேன்:):):) இதுல ஸ்பெஷாலிட்டி என்னன்னா, ரெண்டுமே டபுள் ஆக்ஷன் படங்கள்.

1 - இ. என்ன உணர்ந்தீர்கள்?

வேற என்ன, விசிலடிக்கறதுங்கறது ஒரு தனி கலை. சின்ன வயசுலயே அதை கத்துக்க சரியான குரு கெடைக்கலன்னா இருபத்து நாலு வயசானாலும் தேற முடியாதுங்கற உண்மையைத்தான்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

பீமா, மாயாஜால் தியேட்டரில் பார்த்தது. இந்த வருஷம் ஆரம்பத்துல (ஜனவரி) இந்தியா வந்திருந்தப்ப நானும் என் ரங்கமணியும் போனோம். அங்க பிரிவோம் சந்திப்போம், பீமா ரிலீசாகி இருந்துச்சி. பிரிவோம் சந்திப்போம்ல குத்துப் பாட்டு இல்லைங்கறதால, என் ரங்கமணி வர மாட்டேன்னுட்டார். சரின்னு பீமா போனோம்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

என் பழக்கமே, வீட்ல ஏதாவது ஒரு படம் போட்டு விட்டுட்டு வலையில் சுத்திக்கிட்டு இருக்கறதுதான். இன்னைக்கு கடைசியா கர்ணன் போட்டுட்டு சுத்திக்கிட்டு இருந்தேன். படம் சூப்பர், ஆனா ஏன் தோல்விப்படமா ஆச்சுன்னு சிலக் காரணங்கள் தோனுச்சி. எல்லாருக்கும் ஒரு மினி பூதம் கணக்கா மேக்கப் போட்டு, உடம்பை கொஞ்சம் குறைக்கச் சொல்லாம, கர்ணனை விட அவர் மனைவி புஜபல பராக்கியாமச்சாலியாக தெரியறது, திருவிளையாடல், கந்தன் கருணை மாதிரி ஒரு புளோ இல்லாம, குட்டிக்கதைகளா(நோ கற்பனை ஓட்டம் பிளீஸ்) எடுத்திருக்கறது, முக்கியமா 'ப' வரிசைப் பீல் குட் செண்டிமெண்ட் படங்களுக்கு டிமான்ட் எகிறனப்போ ஹீரோ சாகிறாமாரி காட்னதுன்னு(மகாபாரதம்தான்,ஆனா டைமிங் முக்கியமில்ல சினிமாக்கு) எக்கச்சக்க காரணங்கள் தோனுச்சி. (சரி, நஷ்டத்தை சரிக் கட்ட எடுத்த பலே பாண்டியா எப்டி ஓடுச்சின்னு யாராவது பின்னூட்டத்துல சொல்லுங்களேன்). புதுப்படம்னா, சரோஜா. சூப்பரா இருந்தது. நான் கிட்டத்தட்ட பிரேம்ஜியும் மிர்ச்சி சிவாவும் கலந்தக் கலவை(அதப் பத்தி ஒரு தனிப் பதிவே போடறேன்)

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

நல்ல தம்பி(என்.எஸ்.கே), பசி, அன்பே சிவம், கண்ட நாள் முதல், மொழி, சென்னை 28, மகளிர் மட்டும், சந்தியா ராகம், முதல் மரியாதை, பாமா விஜயம், நரசிம்மா.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?

சம்பவம் நடந்தப்போ நான் பிறக்கலைன்னாலும் லக்ஷ்மிகாந்தன் கொலைவழக்கும், கீழே இருக்குற வழக்கும் இன்னிவரைக்கும் என்னை ரொம்ப அட்ராக்ட் பண்ணிக்கிட்டு இருக்கு.

எம்.ஆர். ராதா சார் எம்.ஜி.ஆரை சுட்டது. அச்சம்பவம் எப்படி, மதுரை முத்து ரேஞ்சில கட்சில இருந்தவரை வேறு தளத்திற்குக் கொண்டுசென்றது, அந்த சமயத்தில் அது எப்படி செம பரபரப்பாக பேசப்பட்டிருக்கும்ங்கற ஒருவித திரில், அதுக்குப் பின்னணியா சொல்லப்படற ரெண்டு முக்கியக் காரணங்கள், சம்பவத்திற்கு அப்புறம் ராதா சார் அடிச்ச கமெண்ட்ஸ், கேஸ்ல வாதாடுனது எங்க நெருங்கின உறவினர், இப்படி பலக் காரணங்கள் உண்டு. இன்னொரு சோகமான விஷயம் இந்த ஒரு சம்பவத்தாலே, அவ்ளோ பெரிய திறமைசாலிக்கு பெரிய அளவுல வெளிப்படையா அரசாங்கம் எந்த மரியாதயுமே செய்ய முடியாமப் போனது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

ரெண்டு அபூர்வ சகோதரர்களும் என்னை ரொம்ப பிரம்மிக்க வெக்கும். (எம்.கே.ராதா நடிச்சது)அந்தக் காலக்கட்டத்துலயே, நமக்கு உறுத்தாம ரெட்டை வேஷத்தை அழகா எடுத்திருப்பாங்க (எல்லாத்தையும் வெச்சுக்கிட்டு ஷங்கர் ஜீன்ஸ் எடுத்து எரிச்சல்படுத்தினாரே:(:(:()புது அபூர்வ சகோதரர்கள் அப்பு கமலும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

கண்ல படற அத்தனை சினிமா சம்பந்தப்பட்ட நியூசும் வாசிப்பேன். மொதோ மொதோ படிச்சது குமுதம்ல வர்ற லைட்ஸ் ஆன்தான்னு நினைக்கறேன். கிசுகிசு ரொம்பப் பிடிக்கும். நம்ம சினிமா கிசுகிசு மட்டும்தான் கொஞ்சமாவது விடை தெரியும்.

7. தமிழ்ச்சினிமா இசை?

இதைப்பத்தி நான் ஒரு தனிப்பதிவே போட்டிருக்கேன்.
எங்கம்மா எனக்கு பாடுன தாலாட்டே சினிமாப் பாட்டுங்கதான். ஆனா அப்புறம் ஒரு காலத்துல நான் இல்லாத பியூரிட்டான் வேல செஞ்சுக்கிட்டு இருப்பேன். வெறும் கர்நாட்டிக் மியூசிக் பாடறது, கேக்குறதுன்னு. மினி சைஸ் அவ்வையார் மாதிரி கொடுமைப் பண்ணுவேன். அப்புறம் அது தானா ஒம்போது பத்து வயசானப்போ சரியாகி, இப்போ தமிழ்ல சினிமாப் பாட்டைத்தவிர வேறெதுவும் கேக்குறதில்லை.

என்னைப் பொறுத்தவரை தமிழ் சினிமா இசைக்கு மூணு கோல்டன் பீரியட் இருந்துச்சு. முதல் பீரியட் ஐம்பதுகளின் இறுதியில் இருந்து, அறுபதுகளின் இறுதிவரை ஒரு காலக்கட்டம், எண்பதுகள் முழுசா, இன்னொரு காலக்கட்டம், தொன்னூத்தி ரெண்டுல இருந்து தொன்னூத்தி ஏழுவரைக்கும் அடுத்த காலக் கட்டம். மத்ததெல்லாம் அவ்ளோ பிடிக்காது, காரணம், ஒண்ணு, கதாநாயகன், நாயகி கொடுமயாத் தோன்றும் காலக்கட்டம்(திரிசூலம், உரிமைக்குரல், ஜக்கம்மா ரேஞ்ச் படங்கள்), இன்னொன்னு யார் இசையமைச்சிருக்காங்கன்னு தெரிஞ்சிக்கும் ஆவல் கூட தோணாத மாதிரி ஒரு பீரியட்:(:(:(

8. அ. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?

படத்துக்கு நான் மொழியே பாக்கறதில்லை. தெலுங்கு கிருஷ்ணா படங்கள் குழந்தையா இருக்கறச்சே பார்த்தது. அப்புறம் ஷங்கர் நாக் இறந்தப்போ அவர் படம் ரெண்டு மூணு பாத்திருக்கேன். ஹிந்தி படம் நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து பாக்கறேன். ஞாயிறு மதியம் போடற பெங்காலிப் படங்கள் ஒன்னு ரெண்டு பாத்து கொஞ்சநாள் மிதுன் பிடிச்சிருந்தது. அதே நேரத்தில் போடும் மலையாளப் படங்களைப் பார்த்து வெறுத்துப்போயி இனி மலையாளப் படமே பாக்கைக் கூடாதுன்னு நெனச்சிருந்தேன், அப்புறம் எங்கக்கா பாதிப்புல பாக்க ஆரம்பிச்சு இப்போ நெறைய பாக்கறேன். ஹாலிவுட் படங்கள் பாக்க ஆரம்பிச்சது வில்ஸ்மித் பைத்தியம் புடிச்சு அலஞ்சதால. இப்போ நெறைய பிரெஞ்சுப் படங்கள் பாக்கறேன். பிரெஞ்சு சினிமாக்கள் மிக மிக வித்தியாசமான தளங்களை மிக வித்தியாசமா டீல் செய்வது ரொம்ப நல்லா, பிரஷா இருக்கு.

8. ஆ. அதிகம் தாக்கிய படங்கள்?

தெலுங்குல ஷிவா,பிரேமா, தொலி பிரேமா
மலையாளம்ல இன் ஹரிஹர் நகர், காட்பாதர், akale, பிரியதர்ஷன் சார் படங்கள்.
ஹிந்தில ஜங்க்லீ, shree 420, அனாரி, பாவர்ஜி, பாதோன் பாதோன் மே, பியா கா கர், கட்டா மீட்டா, சாத் சாத், guddi,கபி ஹான் கபி நா, ஹெச்ஏஹெச்கே, டிடிஎல்ஜே.
ஹாலிவுட்ல எனக்கு தெரிஞ்சதெல்லாம் ரொமாண்டிக் காமடி வகைகளும், பாண்டசி வகைகளும் மட்டும்தான், அதால ரொம்ப ரொம்பப் பிடிச்சப் படங்கள் மட்டும் சொல்றேன். Independence Day, Bridget Jones' Diary (ரெண்டு பாகமும்), when harry met sally, monster in law, how to lose a guy in 10 days, what a girl wants, jingle all the way இப்படிப்பட்ட படங்கள்தான்.
பிரெஞ்சுல நான் பார்த்தவரை எனக்குப் பிடிச்சது டேனி பூனின் Bienvenue chez le ch'tis, La Maison du bonheur மற்றும் Louis de Funèsஇன் அனைத்து படங்களும். நெஞ்சைத் தொட்டு மனசை லேசாக்கும் காமடிக்கு முன்னவர் படங்க, லாஜிக் இல்லாமல், சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்களையும், அவலங்களையும், விநோதங்களையும் வித்தியாசமானக் காமடியோடு கூறுவது பின்னவர் படங்கள்(உதாரணத்திற்குக் கூறவேண்டுமானால் இதேப் போல இருக்கும்).

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நெறயப் பேரை தெரியும்(அவங்களுக்கும் என்னைத் தெரியும்), அப்பாவோட ஸ்டூடண்ட்ஸ் பாதிப்பேர், மீதிப்பேர் நண்பர்களாவோ உறவினர்களாவோ இருக்கறதால, அவங்க எதிர்ல சீன் போட்டு பொழப்பு நடத்தறதே பெரும்பாடு. தெரிஞ்சவங்க எல்லாரும் மிக மிக நல்ல நிலைமையில் இருப்பதால், அவங்களை தொந்தரவு பண்ணாம இருக்கறதே பெரும் சேவைன்னு நினைக்கறேன். நான் உப்புமா கிண்டி ஏதாவது ஆகிடுச்சுன்னா:(:(:(ஆனா ரொம்ப மனசைக் கஷ்டப்படுத்துற ஒரே ஒருத்தர் எங்கப்பாவோட பால்யகால நண்பர் பாடலாசிரியர் சிதம்பரநாதன் அவர்கள்தான்:(:(:(

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கலக்கலா இருக்கும்னு நினைக்கறேன். காப்பி அடிச்சு எடுத்தாலும் அழகா எடுக்கணும். வெங்கட்பிரபுவ நக்கல் அடிக்கறவங்க குசேலனை நினைச்சுப் பாக்கணும். வெங்கட்பிரபு, அமீர், பூபதி பாண்டியன், ராதா மோகன்னு சூப்பர் ஆளுங்க இருக்காங்க:):):) ரீமேக் மற்றும் ரீமிக்ஸ் மேனியா போச்சுன்னா ரொம்ப நிம்மதியா இருக்கும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

மத்த மொழிப்படங்களைப் பார்ப்பேன். சினிமால நான் மொழி பாக்கறதில்லை. அதால பெருசா போரடிக்காது. எக்கச்சக்கமா, சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் வரும். வழக்கம்போல ஆற்காட்டார் 'தயவிருந்தா', ஏதாவது நாடகம், இசை சம்பந்தமான நிகழ்ச்சிகள், கைவேலைப்பாடுகள், விளையாட்டுகளில் பொழுதுபோக்குவோம். சினிமா அடிக்ஷன் இப்போ பெரும்பான்மையா இருக்கிறா மாதிரி தெரியலை. அப்புறம் நாம இதை ஒரு பெரிய வரலாறா மாத்தி, அடுத்த தலைமுறைக்கிட்ட என்னமோ எமர்ஜென்சி பீரியட் கணக்கா பில்டப் கொடுக்கலாம். எனக்கு வருத்தம்னா, அடிமட்ட மக்கள் சிறிது நேரமாவது ஆனந்தமாக தங்களை மறந்து பொழுதை கழிக்கும் விஷயம் திரைப்படம்(குறிப்பாக திரையரங்குகளில்). திரைப்படத்துறையை நம்பி இருக்கறவங்க மாதிரியே இவங்களும் பாதிப்படைவாங்கன்னு நினைக்கறேன்.

நான் இதைத் தொடர அழைப்பது,

அப்துல்லா அண்ணா.
அம்பி அண்ணா.
மங்களூர் சிவா.
சஞ்சய் .
எஸ்கே .
தருமி அவர்கள்.
இவன்.

318 comments:

«Oldest   ‹Older   1 – 200 of 318   Newer›   Newest»
ambi said...

me the first. :)

விஜய் ஆனந்த் said...

:-)))...

me the second!!

விஜய் ஆனந்த் said...

15 நிமிஷம் ஆச்சி...படிச்சி முடிக்க...

அவ்வ்வ்வ்வ்..

விஜய் ஆனந்த் said...

// குழந்தையை ஆத்துல போடும் சீனைப் பார்த்து நிஜம்னு நினைச்சு, 'பே'ன்னு கத்தி //

ஏன்???அப்போ உங்களுக்கு பேச்சு வரலியா???

விஜய் ஆனந்த் said...

// இன்னும்கூட சிலப்பேர் அதை நியாபகம் வெச்சிக்கிட்டு என் கஷ்டத்தை குறைப்பாங்க(என்னக் கஷ்டம்னா, நானா ஏதாவது யோசிச்சு கடுப்பேத்துறத்துக்குள்ள தானே கடுப்பாகிடுவாங்க) //

மத்தவங்களை கடுப்பேத்துறத ஒரு தொழிலாவே பண்ணிகிட்டு இருக்கீங்களா???

விஜய் ஆனந்த் said...

// இதுல ஸ்பெஷாலிட்டி என்னன்னா, ரெண்டுமே டபுள் ஆக்ஷன் படங்கள். //

சூப்பர் ஸ்பெஷாலிட்டி...

வெண்பூ said...

//
எனக்கு நியாபகம் இருக்கறது, தலைவரோட பராசக்தி படம்தான்
//

அடிப்பாவி.. அந்த படம் வந்து 60 வருசம் ஆகப்போவுதே.. அவ்ளோ வயசானவுங்களா நீங்க? சாரி மேடம்.. :))))

ambi said...

//15 நிமிஷம் ஆச்சி...படிச்சி முடிக்க...
//

அதான் நான் முதல்ல கமண்ட போட்டுட்டு படிக்க ஆரம்பிச்சேன். :p

ambi said...

பதிவுல பல இடங்களில் சிரித்தேன். எந்த இடம்?னு குறுக்கு கேள்வி எல்லாம் கேக்ககூடாது. :))


சரி, டேக் எழுத ட்ரை பண்றேன்.

ambi said...

Roundaa 10 :)

rapp said...

//me the first//



அம்பி அண்ணே, ரொம்ப சந்தோஷம், ஆனா, ஒருதடவைக் கூட நான் உங்க பதிவில் என்னோட கடமே ஆத்த முடியலயே:(:(:(

//
அதான் நான் முதல்ல கமண்ட போட்டுட்டு படிக்க ஆரம்பிச்சேன்//



நான் அதைவிட பெரிய தில்லாலங்கடி ஆச்சே:):):) மீ த பர்ஸ்ட் போட்டுட்டு, அப்புறம் ரொம்ப நேரம் கழிச்சு வந்து பொறுமையா பதிவை படிச்சு கமெண்டுவேனே:):):)

//எந்த இடம்?னு குறுக்கு கேள்வி எல்லாம் கேக்ககூடாது//

கிர்ர்ர்ர் :):):)

rapp said...

//15 நிமிஷம் ஆச்சி...படிச்சி முடிக்க...
//
விஜய் ஆனந்த், அதுக்குத்தான் லேபிள்ல ஒரு முக்கியமான எச்சரிக்கை கொடுத்திருக்கேனே, பாக்கலையா?:):):)

//ஏன்???அப்போ உங்களுக்கு பேச்சு வரலியா???//

அப்போ நான் மழலைப் பேசும் பப்புக்குட்டி பாப்பா:):):) ஆனா, அப்டி பேயாட்டம் கத்தறது, என்னோட ஸ்பெஷாலிட்டி. இப்போக் கூட இந்த மாதிரி கலைகளால தான் பொழப்ப ஓட்டறேன், கொஞ்ச நாள் முன்னாடி இங்கக் கூட சீன் போட்டேனே பாக்கல?:):):)

//மத்தவங்களை கடுப்பேத்துறத ஒரு தொழிலாவே பண்ணிகிட்டு இருக்கீங்களா???//

அதுல உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருக்கா? அப்போ நான் என் கடமைய சரியா செய்யலையா நியூ பாதர்?:(:(:( நியூ பாதர், நியூ பாதர் நான் போன வாரம் ராம் சார் பதிவை படிச்சேன், அதுக்கு முந்தின வாரம் கோவி சார் பதிவை படிச்சேன்:):):)

narsim said...

நல்லா எழுதியிருக்கீங்க..

4வது கேள்விக்கு கடைசியா சொன்ன படம் வெறும் தாக்கலா இடி தாக்கலானு சொல்லலியே..

நர்சிம்

rapp said...

//அடிப்பாவி.. அந்த படம் வந்து 60 வருசம் ஆகப்போவுதே.. அவ்ளோ வயசானவுங்களா நீங்க? சாரி மேடம்.. :))))//
இண்டேலிஜென்ட்லி ஆஸ்க்கிங் எ கொஸ்டீன் சம்மந்தி வெண்பூ? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........... கொஞ்சமாவது பதிவ படிங்க சார்(இது சரோஜா பட சார்). நைசா அத மட்டும் படிச்சு எஸ்கேப்பாகிட்டீங்களா?

rapp said...

//4வது கேள்விக்கு கடைசியா சொன்ன படம் வெறும் தாக்கலா இடி தாக்கலானு சொல்லலியே//

ஹி ஹி,நரசிம் சார் இது ஒரு நல்லக் கேள்வி(தூர்தர்ஷன் நல்லதம்பி சார் வாய்சில் படிங்க). அந்த படத்தோட டைரடக்கர் எப்டி விபத்துல மாட்னார்னு படம் பார்த்தப்போ புரிஞ்சது. படத்தோட டப்பிங் வேலை முடிச்சிட்டு கெளம்பினாராம். விஜயகாந்த் ஏன்தான் இப்படி யார் பெத்த பிள்ளைகள எல்லாம் பழிவாங்கராருன்னு பண்றாருன்னு புரியல, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:(:(:(

கார்க்கிபவா said...

// சினிமா, பிளேடு போடும் கலை, முத்துலெட்சுமி கயல்விழி, முரளிக்கண்ணன்
//

லேபிளே பேசுதே.. நான் என்னத்த சொல்ல? மீ த 16th

rapp said...

ஹி ஹி ரொம்ப நன்றிங்க கார்க்கி. சரி எப்போ பதிவ பாதியாவது படிக்கறதா உத்தேசம்?:):):)

CA Venkatesh Krishnan said...

நல்லாருக்கு

ரொம்ப கஷ்டப்பட்டு பதிவ சுருக்கிப் போட்டாப்பல இருக்கு.:(

கரெக்டா?

சென்ஷி said...

அட்டன்டண்ஸ் பின்னூட்டம் :)

சென்ஷி said...

// கார்க்கி said...
// சினிமா, பிளேடு போடும் கலை, முத்துலெட்சுமி கயல்விழி, முரளிக்கண்ணன்
//

லேபிளே பேசுதே..
//

பேசறதுன்னு முடிவு செஞ்சப்புறம் எதையும் விட்டு வைக்காதது அக்கா பாலிசி :)

சென்ஷி said...

//விசிலடிக்கறதுங்கறது ஒரு தனி கலை. சின்ன வயசுலயே அதை கத்துக்க சரியான குரு கெடைக்கலன்னா இருபத்து நாலு வயசானாலும் தேற முடியாதுங்கற உண்மையைத்தான்.//

தத்துவம் நம்பர் 10001 :)

சென்ஷி said...

//மகாபாரதம்தான்,ஆனா டைமிங் முக்கியமில்ல சினிமாக்கு//

அதானே..

கர்ணன் ரீ மேக் தளபதியில சிவாஜி கேரக்டர்ல "ரஜினி" வந்தப்ப தளபதி படத்துல‌ல நம்ம மக்க கெட்ட துரியோதனனை மம்முட்டியா மாத்தி போட்டுத்தள்ளியாச்சுல்ல :))

தமிழனா.. கொக்கா :)

சென்ஷி said...

//சரி, நஷ்டத்தை சரிக் கட்ட எடுத்த பலே பாண்டியா எப்டி ஓடுச்சின்னு யாராவது பின்னூட்டத்துல சொல்லுங்களேன்//

சூப்பர் ஹிட்டுன்னு பேப்பர்ல படிச்சுருக்கேன்.. :)

பரிசல்காரன் said...

// சென்ஷி said...

அட்டன்டண்ஸ் பின்னூட்டம் :)//

ரிப்பீட்டேய்ய்.

பரிசல்காரன் said...

வர வர வீட்டுப்பக்கமே வர்றதில்ல. பயங்கரக் கடுப்புல இருக்கேன் நான்!

வெண்பூ said...

//
இண்டேலிஜென்ட்லி ஆஸ்க்கிங் எ கொஸ்டீன் சம்மந்தி வெண்பூ? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........... கொஞ்சமாவது பதிவ படிங்க சார்(இது சரோஜா பட சார்). நைசா அத மட்டும் படிச்சு எஸ்கேப்பாகிட்டீங்களா?
//

ஹி..ஹி..ஹி.. தெரிஞ்சி போச்சா? இருங்க முழுசும் படிச்சிட்டு சொல்றேன்.. :))

வெண்பூ said...

சான்ஸே இல்லங்க வெட்டியாப்பீசர்.. நிஜமாவே உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு பதிவு எதிர்பார்க்கல.. சினிமா பத்தி நல்ல அலசல். ஹாட்ஸ் ஆஃப். இந்த தொடர்ல‌ நான் படிச்சதிலயே இந்த பதிவு ஒன் ஆஃப் தி பெஸ்ட்.. அருமை.. அருமை..

படிக்க ஆரம்பித்த பின் பதிவின் நீளம் ஒரு பிரச்சினையாகவே இல்லை. உங்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பதிவு இது ராப்.. கலக்கீட்டீங்க.

rapp said...

//ரொம்ப கஷ்டப்பட்டு பதிவ சுருக்கிப் போட்டாப்பல இருக்கு//

சரியா சொல்லிட்டீங்க, இளைய பல்லவன். நான் எடிட் பண்ணாம டைப்பின நீளத்துலயே போட்டிருந்தா இவங்கெல்லாம் என்னா செஞ்சிருப்பாங்க, சொல்லுங்க:):):) ஒரே சின்னப்புள்ளத்தனமா முழுசா படிக்கனும்னு ஆசைப்படறாங்க:):):)

rapp said...

//அட்டன்டண்ஸ் பின்னூட்டம்//
சென்ஷி அண்ணே, late கம்மர்சுக்கு பைன் போடப்போறேன் அடுத்த பதிவில் இருந்து:):):)

//பேசறதுன்னு முடிவு செஞ்சப்புறம் எதையும் விட்டு வைக்காதது அக்கா பாலிசி //

கிர்ர்ர்ர்ர்ர்ர் அடுத்த பதிவும் லேபிளும் உங்கள வெச்சு ரெடி பண்ணாத்தான் சரிபடுவீங்க:):):)

//தத்துவம் நம்பர் 10001//
என்னோட முந்தைய பத்தாயிரம் தத்துவங்களையும் ஒரு புக்கா வெளியிடப் போறதா சொன்னீங்களே, வேல எல்லாம் ஒழுங்கா நடக்குதா. இந்தப் பதிப்பகக்காரங்களே இப்படித்தான், என் புக்குன்னா அடிச்சிப் பிடிச்சிப்பாங்க. நீங்க அசராம முறைப்படி டெண்டர் விட்டுடுங்க:):):)

//தமிழனா.. கொக்கா//
ஸ்பெல்லிங் மிஷ்டேக் இருக்கா மக்கா?:):):)

//சூப்பர் ஹிட்டுன்னு பேப்பர்ல படிச்சுருக்கேன்//
எனக்கும் பிடிக்கும், என்ன நம்ம ஊருல காமடியா எடுக்கிற இந்த மாதிரிப் படங்கள் தோக்கிறதும், திரிசூலம் மாதிரி படங்களை மக்களே காமடின்னு முடிவு பண்ணி ஓட்டறதும் சில சமயம் சந்தேகம் வந்திடுது:):):)

rapp said...

//வர வர வீட்டுப்பக்கமே வர்றதில்ல. பயங்கரக் கடுப்புல இருக்கேன் நான்!//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கிருஷ்ணா, அட்டெண்டஸ் குடுத்தா, அதை அக்னாலெட்ஜ் பண்ணனும். நான் கம்முன்னு வந்து நல்லா பொண்ணா படிச்சிட்டு, சைலெண்டா எஸ்சாகுறேன்:):):)

தருமி said...

மொத்தம் அஞ்சு பேரைமட்டும்தான் அழைக்கணும்னு சொல்லப்பட்டதாலும், அழைக்கப்பட்ட ஏழு பேரில் நான் ஆறாவதாக இருப்பதாலும் -

- நான் இந்தப் பட்டியலிலிருந்து வெளிநடப்பு செய்கிறேன்.

அதோடு தோழமைக் 'கட்சிக்காரரான' இவன் அவர்களையும் என்னோரு தோளோடு தோள் நின்று வெளிநடப்பு செய்யும்படி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

:-)

rapp said...

//16 October, 2008 1:46 AM//
//16 October, 2008 1:55 AM//

சகலகலா சம்மந்தி வெண்பூ அவர்களே, வாங்க நாம ரெண்டு பேரும் சேர்ந்து, நியூ பாதர் விஜய் ஆனந்தை கலாய்ப்போம். உங்களுக்கு படிச்சு, பின்நூட்டமிடறத்துக்கும் சேர்த்தே ஒம்போது நிமிஷம்தான் தேவைப்பட்டிருக்கு, ஆனா அவருக்கு பதினஞ்சு நிமிஷம் ஆச்சாம். ஷேம் ஷேம் பப்பி ஷேம்:):):)

//நிஜமாவே உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு பதிவு எதிர்பார்க்கல//

கிர்ர்ர்ர்ர்ர்ர் இதை நான் எப்படி பாராட்டா எடுத்துக்கறது, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................

//படிக்க ஆரம்பித்த பின் பதிவின் நீளம் ஒரு பிரச்சினையாகவே இல்லை//

ஹி ஹி, எனக்கும் எழுத ஆரம்பிச்சிட்டா நீளம் ஒரு பொருட்டே இல்ல. நீங்க உற்சாகப்படுத்தறதால, அடுத்தப் பதிவில் இருந்து, ஒரிஜினலா, எழுதுனதயே நீளம் குறைக்காம உண்மைத்தமிழன் சாருக்கு போட்டியா போடலாமான்னு இருக்கேன். என்ன சொல்றீங்க:):):) (உங்க வீட்டுக்கு ஆட்டோ வந்தா நான் பொறுப்பில்லே)

//ஹாட்ஸ் ஆஃப். இந்த தொடர்ல‌ நான் படிச்சதிலயே இந்த பதிவு ஒன் ஆஃப் தி பெஸ்ட்//

பாராட்டும்பொழுது கொழுப்புப் பேச்சி பேசி சீன் போடாம ஏத்துக்கனும்தான். ஆனா இதைப் படிக்கும்போதுதான் சின்ன சந்தேகம் வருது(நீங்க நெசமாத்தான் முழுசா படிச்சீங்களான்னு):):):)(இதுக்கு என்ன அர்த்தம்னா நான் தன்னடக்கமான, பெண்குலத்தின் பொன்விளக்காக்கும்:):):))

கார்க்கிபவா said...

//app said...
ஹி ஹி ரொம்ப நன்றிங்க கார்க்கி. சரி எப்போ பதிவ பாதியாவது படிக்கறதா உத்தேசம்?:):)://

என்ன அப்படி நினைச்சிட்டிங்களா? மனப்பாடமா சொல்லவா????????????

rapp said...

தருமி சார், அப்துல்லா அண்ணனை, நரசிம் சார் ஏற்கனவே கூப்பிட்டதை கவனிக்கலை. அதால நீங்க தானாவே ஐந்தாம் ஆளா ஆகிட்டீங்க. (ஏன் சார், இதே கேள்விகளோட எழுதறது பிடிக்கலையா உங்களுக்கு? அப்போ சரி. இல்லைன்னா நீங்க ஒரு பதிவை போடுங்க சார்:):):)) கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 'இவன்'னையும் எதுக்கு ஜோடி சேக்கறீங்க:):):)

கார்க்கிபவா said...

//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கிருஷ்ணா, அட்டெண்டஸ் குடுத்தா, அதை அக்னாலெட்ஜ் பண்ணனும். நான் கம்முன்னு வந்து நல்லா பொண்ணா படிச்சிட்டு, சைலெண்டா //

அவரு மூத்த பதிவர் ஆயிட்டாருக்கா.. அப்படித்தான்..

கார்க்கிபவா said...

//பரிசல்காரன் said...
வர வர வீட்டுப்பக்கமே வர்றதில்ல. பயங்கரக் //

என்ன சொல்றீங்க பரிசல்.. வர வரனு சொல்றீங்க.. ஆனா வரலனு சொல்றீங்க..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இதுவரை யாரும் லேபிளில் என் பேரு போட்டாங்களான்னு நினைவு இல்லை.. ஆனா ஒரு ப்ளேடு பக்கத்துல என்பேரு வந்திருக்கே எல்லாரும் உண்மையை தெரிஞ்சுக்குவாங்களேன்னு நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு. ;)

உனக்கு கலை உலகில் அத்தனை பேரைத்தெரிந்தும் ப்ரான்ஸ்ல உக்காந்து வேலை தேடற சோகத்தை என்ன சொல்ல?

rapp said...

//என்ன அப்படி நினைச்சிட்டிங்களா? மனப்பாடமா சொல்லவா//

அககா அககா(கவுண்டர் வாய்சில் படிங்க), நம்மகிட்டயேவா கார்க்கி. நாங்கெல்லாம் ஏற்கனவே தீட்டப்பட்ட மரமாக்கும். டவுட்டுன்னா ச்சின்னப் பையன் சாரை கேளுங்க:):):)

புதுகை.அப்துல்லா said...

என்னைய ஏற்கனவே நர்சிம் அண்ணன் கூப்ட்டாரு...நீ லேட்டு சிஸ்டர் :(

SK said...

//
//பரிசல்காரன் said...
வர வர வீட்டுப்பக்கமே வர்றதில்ல. பயங்கரக் //

என்ன சொல்றீங்க பரிசல்.. வர வரனு சொல்றீங்க.. ஆனா வரலனு சொல்றீங்க.. //


பரிசல், வர வர வீடு எப்படி பக்கம் வரும். நீங்க தான் வீட்டுக்கு பக்கம் போகணும் :-)

சின்ன புள்ள தனமால்ல இருக்கு.

SK said...

என் இன்னைக்கு கிர்ர்ர் கிர்ர்ர் ரொம்ப ஆட்டோ ஓட்டுறீங்க.

SK said...

அப்துல்லா அண்ணே, தேர்வு எப்படினே இருந்திச்சு ஒரு பதிவு போடுங்கண்ணே அதை பத்தி.

SK said...

எப்படி படம் எல்லாம் முழுசா பாப்பீங்களா ??? என்னால ஒரு படம் கூட இப்போ எல்லாம் ஓட்டாம பாக்க முடியறது இல்லை. தியேட்டர் எல்லாம் போன ரொம்ப கஷ்டமா இருக்கு.

SK said...

/// வேற என்ன, விசிலடிக்கறதுங்கறது ஒரு தனி கலை. சின்ன வயசுலயே அதை கத்துக்க சரியான குரு கெடைக்கலன்னா இருபத்து நாலு வயசானாலும் தேற முடியாதுங்கற உண்மையைத்தான். ///

Same pinch yaa :( :(

வெண்பூ said...

//rapp said...
//16 October, 2008 1:46 AM//
//16 October, 2008 1:55 AM//

சகலகலா சம்மந்தி வெண்பூ அவர்களே, வாங்க நாம ரெண்டு பேரும் சேர்ந்து, நியூ பாதர் விஜய் ஆனந்தை கலாய்ப்போம். உங்களுக்கு படிச்சு, பின்நூட்டமிடறத்துக்கும் சேர்த்தே ஒம்போது நிமிஷம்தான் தேவைப்பட்டிருக்கு, ஆனா அவருக்கு பதினஞ்சு நிமிஷம் ஆச்சாம். ஷேம் ஷேம் பப்பி ஷேம்:):):)
//

என்ன விஜய் இது.. ஷேம் ஷேம் பப்பி ஷேம் :)))

SK said...

// நான் கிட்டத்தட்ட பிரேம்ஜியும் மிர்ச்சி சிவாவும் கலந்தக் கலவை(அதப் பத்தி ஒரு தனிப் பதிவே போடறேன்) //

ஆகட்டும் ஆகட்டும்

SK said...

// என்ன விஜய் இது.. ஷேம் ஷேம் பப்பி ஷேம் :))) //

நீங்க முழுசா படிச்சீங்கள அதை சொல்லுங்க பாஸ்.

முரளிகண்ணன் said...

அசத்தல் ஆபிசர்

rapp said...

//இதுவரை யாரும் லேபிளில் என் பேரு போட்டாங்களான்னு நினைவு இல்லை.. ஆனா ஒரு ப்ளேடு பக்கத்துல என்பேரு வந்திருக்கே எல்லாரும் உண்மையை தெரிஞ்சுக்குவாங்களேன்னு நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு//

ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், முத்து கவனிக்க மாட்டீங்கன்னு நெனச்சேன். இது கூகிளோட பயங்கர சதிங்கறேன் நான்:):):)

//உனக்கு கலை உலகில் அத்தனை பேரைத்தெரிந்தும் ப்ரான்ஸ்ல உக்காந்து வேலை தேடற சோகத்தை என்ன சொல்ல//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அவங்களை தெரிஞ்சி வெச்சிருக்கறத்துக்கும் எனக்கு வேலை கெடைக்கரத்துக்கும் என்ன சம்மந்தம்? ப்ளஸ் சொந்தக்காரங்களா, பேமிலி பிரெண்டா இருந்தா நாங்கெல்லாம் ஷோக்கா மெயின்டெயின் பண்ணுவோம்ல:):):)

SK said...

// ஆனா ரொம்ப மனசைக் கஷ்டப்படுத்துற ஒரே ஒருத்தர் எங்கப்பாவோட பால்யகால நண்பர் பாடலாசிரியர் சிதம்பரநாதன் அவர்கள்தான்:(:(:( //

அதுக்கு என் இம்புட்டு பீலிங்க்ஸ்.

SK said...

மீ த பிப்டி யு நோ :-)

rapp said...

//என்னைய ஏற்கனவே நர்சிம் அண்ணன் கூப்ட்டாரு...நீ லேட்டு சிஸ்டர்//

அப்துல்லா அண்ணே, நான் பதிவ போட்டதே லேட்டுண்ணே:(:(:(

rapp said...

//அப்துல்லா அண்ணே, தேர்வு எப்படினே இருந்திச்சு ஒரு பதிவு போடுங்கண்ணே அதை பத்தி//

sk நானும் வழிமொழிகிறேன். ஹி ஹி, வர வர அவர் தானா விரும்பி ஒரு பதிவும் எழுத முடியாதுன்னு நினைக்கறேன்:):):)

//எப்படி படம் எல்லாம் முழுசா பாப்பீங்களா //

ஹா ஹா ஹா, இந்தக் கேள்வியை 'வெட்டியாபீசரின் இம்சையால் முழுசா படம் பார்க்க முடியாத பரிதாபமானவர்களின்' சங்கத்துக்கு பார்வேட் பண்ணிடுறேன்:):):)

rapp said...

//என்ன விஜய் இது.. ஷேம் ஷேம் பப்பி ஷேம் :)))//

ஹி ஹி ரொம்ப சந்தோஷங்க சம்மந்தி:):):) இப்போதான் நீங்க பேக் டு பாரம்:):):)

rapp said...

ரொம்ப நன்றிங்க முரளிக்கண்ணன் சார்:):):)

rapp said...

//நீங்க முழுசா படிச்சீங்கள அதை சொல்லுங்க பாஸ்.//

எஸ்கே, அவர் இருக்கட்டும், நீங்க எப்படி?:):):)



//அதுக்கு என் இம்புட்டு பீலிங்க்ஸ்//

அவர் ரொம்ப நல்ல மனுஷன், ஆனா இந்தத் துறைக்கு சரிப்படாத அளவு வீணான சுயமரியாதை :(:(:(

//மீ த பிப்டி யு நோ//
வாழ்த்துக்கள்:):):)

SK said...

ஹலோ raap

வரிக்கு வரி பதில் போட்டு இருக்கேன். என்ன கேள்வி இது எல்லாம்.

SK said...

அம்மணி ராப்

மெயில் பாத்துகிட்டு இருக்கீங்களா ??

சென்ஷி said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
இதுவரை யாரும் லேபிளில் என் பேரு போட்டாங்களான்னு நினைவு இல்லை.. ஆனா ஒரு ப்ளேடு பக்கத்துல என்பேரு வந்திருக்கே எல்லாரும் உண்மையை தெரிஞ்சுக்குவாங்களேன்னு நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு. ;)
//

எங்கள் சிங்கம், தங்கத்தமிழன், அண்ணன் முரளிக்கண்ணனை ப்ளேடு என்று அழைத்திருக்கும் முத்துக்காவை எதிர்த்து சார்ஜாவில் நாளை டீ குடிக்கும் போராட்டம் நடத்தப்படும். ஆதரவு தரும் அடலேறுகளுக்கு நான் சென்னை வரும் போது நடத்தப்படும் டீ பார்ட்டியில் ஒரு டீ எக்ஸ்ட்ரா உண்டு என்பதையும் சந்தோஷமாய் தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிர்கருத்து வெளியிடுபவர்களின் கை, காலை கட்டி வைத்தாவது ராப் அக்கா மூலம் கருப்பனின் காதலி திரைப்படம் முழுமையாக போட்டுக்காட்டப்படும் :)

இப்படிக்கு

வம்புச்சண்ட இழுக்கும் பொழுது போகாதோர் சங்கம்.

சென்ஷி said...

////முத்துலெட்சுமி-கயல்விழி said...
இதுவரை யாரும் லேபிளில் என் பேரு போட்டாங்களான்னு நினைவு இல்லை.. ஆனா ஒரு ப்ளேடு பக்கத்துல என்பேரு வந்திருக்கே //

நான்கூட ஒரு தபா லேபிள்ல உங்க பேர யூஸ் செஞ்சிருக்கேன். பிளேடோட பதிவிலயும் வந்திருக்கீங்கன்னு சொல்ல வந்தேன் :)

MyFriend said...

me the enteruuuuu....

சென்ஷி said...

//முரளிகண்ணன் said...
அசத்தல் ஆபிசர்
//

அட இவரு கூட பதிவு சுவாரசியத்துல கமெண்ட் ஏதும் படிக்கலை போலருக்கு. நாமதான் எல்லாத்தையும் விளக்கி ஆரம்பிச்சு சண்டைக்கு இழுக்கணுமா :)

SK said...

// அட இவரு கூட பதிவு சுவாரசியத்துல கமெண்ட் ஏதும் படிக்கலை போலருக்கு. நாமதான் எல்லாத்தையும் விளக்கி ஆரம்பிச்சு சண்டைக்கு இழுக்கணுமா :) //

:-) :-) :-)

சென்ஷி said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
me the enteruuuuu....
//

வா தங்கச்சி வா. நீயே இந்த கொடுமைய படிச்சு ஒரு நல்ல நியாயத்தை சொல்லிட்டு போ :)

SK said...

சென்ஷி அண்ட் மை பிரண்டு

சீகரம் ஒரு முப்பது பதில் போடுங்க, அடுத்து நூறு போடனுமல்ல :-) :-)

சென்ஷி said...

// SK said...
// அட இவரு கூட பதிவு சுவாரசியத்துல கமெண்ட் ஏதும் படிக்கலை போலருக்கு. நாமதான் எல்லாத்தையும் விளக்கி ஆரம்பிச்சு சண்டைக்கு இழுக்கணுமா :) //

:-) :-) :-)
//

அட இன்னொருத்தர் கூட இதை ரசிச்சு சிரிச்சுட்டு இருந்திருக்காருப்போ.. நாம நெறைய்ய பேருக்கு கறுப்பு கொடி காட்டணும் போல :)

சென்ஷி said...

//SK said...
சென்ஷி அண்ட் மை பிரண்டு

சீகரம் ஒரு முப்பது பதில் போடுங்க, அடுத்து நூறு போடனுமல்ல :-) :-)
//

நாங்க இங்க கொதிச்சு போய் நீதி கேட்டு நின்னா நீங்க கும்மிக்கு வழிய காட்டுறீங்க.. :)

SK said...

// வா தங்கச்சி வா. நீயே இந்த கொடுமைய படிச்சு ஒரு நல்ல நியாயத்தை சொல்லிட்டு போ :) //

பதிவை கொடுமைன்னு சொல்லுறீங்களா பின்னூட்டத்தை கொடுமைன்னு சொல்லுறீங்களா :-) :-)

நாராயணா நாராயணா

சென்ஷி said...

// rapp said...
ரொம்ப நன்றிங்க முரளிக்கண்ணன் சார்:):):)
//

தங்கச்சிக்கா இந்த விஷயத்த கவனிக்காம விட்டதின் ரகசியமென்ன்ன :)

சென்ஷி said...

//SK said...
// வா தங்கச்சி வா. நீயே இந்த கொடுமைய படிச்சு ஒரு நல்ல நியாயத்தை சொல்லிட்டு போ :) //

பதிவை கொடுமைன்னு சொல்லுறீங்களா பின்னூட்டத்தை கொடுமைன்னு சொல்லுறீங்களா :-) :-)

நாராயணா நாராயணா
//

ஆஹா.. எல்லோருமே ஸ்டடியாத்தான்யா இருக்காங்க.. சென்ஷி ஸ்டடியாகிக்கோ. எப்பவேணா ஓட வேண்டி வரும். :)

SK said...

// அட இன்னொருத்தர் கூட இதை ரசிச்சு சிரிச்சுட்டு இருந்திருக்காருப்போ.. நாம நெறைய்ய பேருக்கு கறுப்பு கொடி காட்டணும் போல :)//

அண்ணே ரசிக்கலை

உங்களுக்கு ந்யாயம் கெடைக்குமான்னு பாத்துட்டு இருக்கேன்.

SK said...

// தங்கச்சிக்கா இந்த விஷயத்த கவனிக்காம விட்டதின் ரகசியமென்ன்ன :) //

அந்த தாங்க்ஸ் கவனிக்காம விட்டதுக்கு தான் :-) :-)

புதுகை.அப்துல்லா said...

அண்ணே எஸ்.கே இங்கயா சுத்திகிட்டு இருக்கீங்க?

சென்ஷி said...

//வெண்பூ said...
சான்ஸே இல்லங்க வெட்டியாப்பீசர்.. நிஜமாவே உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு பதிவு எதிர்பார்க்கல.. சினிமா பத்தி நல்ல அலசல். ஹாட்ஸ் ஆஃப். இந்த தொடர்ல‌ நான் படிச்சதிலயே இந்த பதிவு ஒன் ஆஃப் தி பெஸ்ட்.. அருமை.. அருமை..

படிக்க ஆரம்பித்த பின் பதிவின் நீளம் ஒரு பிரச்சினையாகவே இல்லை. உங்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பதிவு இது ராப்.. கலக்கீட்டீங்க.
//


எதைப்பத்தியும் யோசிக்காம இந்த பின்னூட்டத்த மட்டும் ஒரு 5 தபா படிச்சு பாருங்கோ ஆப்பிசர்.. இவரு உங்கள கன்னாபின்னான்னு கலாய்ச்சிருக்காருங்கோ ஆப்பிசர் :)

புதுகை.அப்துல்லா said...

அண்ணே எஸ்.கே இங்கயா சுத்திகிட்டு இருக்கீங்க?

சென்ஷி said...

me the 75th

SK said...

// அண்ணே எஸ்.கே இங்கயா சுத்திகிட்டு இருக்கீங்க? //

ஆமாம்னே :-) :-)

SK said...

// me the 75th //

just miss yaa..

சென்ஷி said...

ஒரு நம்பர்ல மிஸ்(டர்ரு) ஆகிடுச்சு :(

புதுகை.அப்துல்லா said...

ஒரு 5 தபா படிச்சு பாருங்கோ ஆப்பிசர்.. இவரு உங்கள கன்னாபின்னான்னு கலாய்ச்சிருக்காருங்கோ ஆப்பிசர் :)
//

நல்லா பாருங்க ஆபிஸர்...நீங்க ஓருவாட்டி படிச்சாலே புரியும். ஆனா 5 தபா படிக்கசொல்லி உங்கள அறிவில்லாதவருன்னு கலாய்க்கிறாரு சென்ஷி அண்ணே :)))))

சென்ஷி said...

//விஜய் ஆனந்த் said...
// குழந்தையை ஆத்துல போடும் சீனைப் பார்த்து நிஜம்னு நினைச்சு, 'பே'ன்னு கத்தி //

ஏன்???அப்போ உங்களுக்கு பேச்சு வரலியா???
//

அது குழந்தைய பயமுறுத்துறதுக்காக செஞ்சது. இல்லீங்கக்கா :)

SK said...

// நல்லா பாருங்க ஆபிஸர்...நீங்க ஓருவாட்டி படிச்சாலே புரியும். ஆனா 5 தபா படிக்கசொல்லி உங்கள அறிவில்லாதவருன்னு கலாய்க்கிறாரு சென்ஷி அண்ணே :))))) //

இப்படி எல்லாம சொல்லுவாங்க :-) :-)

யு டூ சென்ஷி

MyFriend said...

//ambi said...

me the first. :)//

இதுக்கெல்லாம் கரேக்ட்டா வந்துடுங்க ;-)

SK said...

ராபக்கா ராபக்கா

எங்கக்கா இருகீங்கக்கா. இதுலே யார் சொல்லுறது நிஜம்.

MyFriend said...

//விஜய் ஆனந்த் said...

15 நிமிஷம் ஆச்சி...படிச்சி முடிக்க...

அவ்வ்வ்வ்வ்..//

அவ்வ்வ்வ்ளோ நீட்ட்ட்ட்டாஆ?

புதுகை.அப்துல்லா said...

SK said...
ஆமாம்னே :-) :-)

//

வாங்க..வாங்க ரொம்ப நாளாச்சு உங்ககூட ஜாய்ண்ட போட்டு. ஆனா உங்க கூட சேர பயமா இருக்குண்ணே. ஏன்னா நீங்க ரொம்ப கோவக்காரு...என்னையவும் அழுச்சுட்டீங்கன்னா???

MyFriend said...

// ambi said...

//15 நிமிஷம் ஆச்சி...படிச்சி முடிக்க...
//

அதான் நான் முதல்ல கமண்ட போட்டுட்டு படிக்க ஆரம்பிச்சேன். :p//

சமத்து. ;-)

MyFriend said...

//சென்ஷி said...

அட்டன்டண்ஸ் பின்னூட்டம் :)//

ரிப்பீட்டேய். ;-)

SK said...

// இதுக்கெல்லாம் கரேக்ட்டா வந்துடுங்க ;-) //

மை பிரண்டு

பொய் பதிவை படிச்சிட்டு வந்தா போல இருக்கு. :-) ரொம்ப தப்பு ரொம்ப தப்பு.

புதுகை.அப்துல்லா said...

அட மைபிரண்டு கூட இங்க இருக்காங்க ஆச்சரியமா இருக்கு????

MyFriend said...

// சென்ஷி said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
me the enteruuuuu....
//

வா தங்கச்சி வா. நீயே இந்த கொடுமைய படிச்சு ஒரு நல்ல நியாயத்தை சொல்லிட்டு போ :)//

நான் இன்னும் பதிவு படிக்கல.. அதனால கமேண்டை கமேண்ட் பண்ணிட்டே இருக்கேன். :-)

MyFriend said...

இன்னைக்கு இங்கண கும்மின்னு முடிவாச்சு.. கலக்குவோம்.. :-)

MyFriend said...

// SK said...

சென்ஷி அண்ட் மை பிரண்டு

சீகரம் ஒரு முப்பது பதில் போடுங்க, அடுத்து நூறு போடனுமல்ல :-) :-)//

ஆஹா ஸ்கே.. உங்க வாய் முகூர்த்தம் பலிக்க போகுது.:-)

MyFriend said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

இதுவரை யாரும் லேபிளில் என் பேரு போட்டாங்களான்னு நினைவு இல்லை.. ஆனா ஒரு ப்ளேடு பக்கத்துல என்பேரு வந்திருக்கே எல்லாரும் உண்மையை தெரிஞ்சுக்குவாங்களேன்னு நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு. ;)//

யப்பா.. :-)

MyFriend said...

//பரிசல்காரன் said...

வர வர வீட்டுப்பக்கமே வர்றதில்ல. பயங்கரக் கடுப்புல இருக்கேன் நான்!//

உங்களுக்கு பின்னூட்ட பயம் வந்துடுச்சுன்னு தெரிது பரிசலண்ணா. :-)

rapp said...

சென்ஷி அண்ணே, நானும் இதைத்தான் நினைச்சேன், ஆனா, சொன்னா முத்து ஒதப்பாங்க இல்ல:):):)

MyFriend said...

ஹய்யா.. 100

வெண்பூ said...

100

rapp said...

hey me the 100 ya

புதுகை.அப்துல்லா said...

99

MyFriend said...

// rapp said...

சென்ஷி அண்ணே, நானும் இதைத்தான் நினைச்சேன், ஆனா, சொன்னா முத்து ஒதப்பாங்க இல்ல:):):)//

சொந்த வூட்டுலேயே 100 போட்டவரை பாருங்கப்பா. :-(

சென்ஷி said...

//புதுகை.அப்துல்லா said...
ஒரு 5 தபா படிச்சு பாருங்கோ ஆப்பிசர்.. இவரு உங்கள கன்னாபின்னான்னு கலாய்ச்சிருக்காருங்கோ ஆப்பிசர் :)
//

நல்லா பாருங்க ஆபிஸர்...நீங்க ஓருவாட்டி படிச்சாலே புரியும். ஆனா 5 தபா படிக்கசொல்லி உங்கள அறிவில்லாதவருன்னு கலாய்க்கிறாரு சென்ஷி அண்ணே :)))))
//

நான் அப்படில்லாம் சொல்லல ஆப்பிசர்.. அப்துல்லா அண்ணா மனசுல்ல இருக்கறத அப்படியே சொல்லிட்டாருங்க ஆப்பிசர் :)

புதுகை.அப்துல்லா said...

அட வீட்டம்மாவே 100 அடிச்சுருச்சுப்பா

விஜய் ஆனந்த் said...

ஆஹா....ஆப்பீசரே 100 போட்டுட்டாங்களே....

SK said...

// வாங்க..வாங்க ரொம்ப நாளாச்சு உங்ககூட ஜாய்ண்ட போட்டு. ஆனா உங்க கூட சேர பயமா இருக்குண்ணே. ஏன்னா நீங்க ரொம்ப கோவக்காரு...என்னையவும் அழுச்சுட்டீங்கன்னா??? //

எனக்கு கோவமே வராதுன்னே.

அது ஒரு வருத்ததுலே வர கோவம், அதுனாலே, அழுச்சிடேன். .

வெண்பூ said...

//
rapp said...
சென்ஷி அண்ணே, நானும் இதைத்தான் நினைச்சேன், ஆனா, சொன்னா முத்து ஒதப்பாங்க இல்ல:):):)
//

இதுதான் 100.. தன் பதிவுல தானே 100 அடிச்ச ராப் அவர்களை கண்டித்து... என்னா பண்ணலாம்.. எதுவும் பண்ணவேணாம்.. அப்புறம் அவங்க கவுஜ எழுதிட்டா பிரச்சினை.. :)

புதுகை.அப்துல்லா said...

விருந்தினருக்கு வழி விடாத ராப்பை என்ன பண்ணலாம்???

MyFriend said...

//rapp said...

சென்ஷி அண்ணே, நானும் இதைத்தான் நினைச்சேன், ஆனா, சொன்னா முத்து ஒதப்பாங்க இல்ல:):):)/

தலையும் புரியல.. வால்ம் புரியல.. திரும்ப ஒரு தடவை படிச்சுட்டு வாரேன்.. பின்னூட்டத்தை படிச்சுட்டு வாரேன்..

MyFriend said...

//புதுகை.அப்துல்லா said...

விருந்தினருக்கு வழி விடாத ராப்பை என்ன பண்ணலாம்???//

தீர்ப்பு சொல்ல நாட்டாமையை கூப்பிடுங்கப்பா..

புதுகை.அப்துல்லா said...

அப்புறம் அவங்க கவுஜ எழுதிட்டா பிரச்சினை.. :)
//

வெண்பூ அண்ணே என் வார்த்தைய நான் வாபஸ் வாங்கிக்கிறேன்

சென்ஷி said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
// rapp said...

சென்ஷி அண்ணே, நானும் இதைத்தான் நினைச்சேன், ஆனா, சொன்னா முத்து ஒதப்பாங்க இல்ல:):):)//

சொந்த வூட்டுலேயே 100 போட்டவரை பாருங்கப்பா. :-(
//

same blood :)

விஜய் ஆனந்த் said...

// வெண்பூ said...

இதுதான் 100.. தன் பதிவுல தானே 100 அடிச்ச ராப் அவர்களை கண்டித்து... என்னா பண்ணலாம்.. எதுவும் பண்ணவேணாம்.. அப்புறம் அவங்க கவுஜ எழுதிட்டா பிரச்சினை.. :) //

ரிப்பீட்டேய்...

SK said...

என்னடான்னு பாத இங்கிட்டு 110'ல வந்து நிக்குது..

MyFriend said...

//புதுகை.அப்துல்லா said...

அட மைபிரண்டு கூட இங்க இருக்காங்க ஆச்சரியமா இருக்கு????//

ஆச்சர்யமா? எதுக்கு?

MyFriend said...

// SK said...

// இதுக்கெல்லாம் கரேக்ட்டா வந்துடுங்க ;-) //

மை பிரண்டு

பொய் பதிவை படிச்சிட்டு வந்தா போல இருக்கு. :-) ரொம்ப தப்பு ரொம்ப தப்பு.//

ஹாஹாஹாஹா

rapp said...

ஹா ஹா ஹா, சென்ஷி அண்ணே, மை பிரெண்டு, அப்துல்லா அண்ணா, எஸ்கே கலக்கு கலக்குன்னு கலக்கறீங்க.

சென்ஷி said...

//வெண்பூ said...
//
rapp said...
சென்ஷி அண்ணே, நானும் இதைத்தான் நினைச்சேன், ஆனா, சொன்னா முத்து ஒதப்பாங்க இல்ல:):):)
//

இதுதான் 100.. தன் பதிவுல தானே 100 அடிச்ச ராப் அவர்களை கண்டித்து... என்னா பண்ணலாம்.. எதுவும் பண்ணவேணாம்.. அப்புறம் அவங்க கவுஜ எழுதிட்டா பிரச்சினை.. :)
//

யக்கா.. உன்னைய திரும்ப திரும்ப கலாய்க்கறாரு வெண்பூ. நீ பேசாம அவர் பேரு பக்கத்துல பெரிய ரம்பம்ன்னு லேபிள்ல போட்டு எப்பவும் போடுற கவுஜயயே போட்டுடு :)

புதுகை.அப்துல்லா said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
//புதுகை.அப்துல்லா said...

அட மைபிரண்டு கூட இங்க இருக்காங்க ஆச்சரியமா இருக்கு????//

ஆச்சர்யமா? எதுக்கு?

//

பொதுவா உங்கள இந்த நேரத்தில் கும்மில பார்க்க முடியாது அதுனால சொன்னேன்

rapp said...

ஐயோ, ஒரு கமென்ட் டைப்பரத்துக்குள்ள நீங்கல்லாம் இவ்ளோ ஸ்பீடா பின்நூட்டிடறீங்களே:):):)

rapp said...

me the 125TH

MyFriend said...

// சென்ஷி said...

//SK said...
சென்ஷி அண்ட் மை பிரண்டு

சீகரம் ஒரு முப்பது பதில் போடுங்க, அடுத்து நூறு போடனுமல்ல :-) :-)
//

நாங்க இங்க கொதிச்சு போய் நீதி கேட்டு நின்னா நீங்க கும்மிக்கு வழிய காட்டுறீங்க.. :)//

அட வந்த வேலை மறந்துபோச்சு..
நாங்க இங்க கொதிச்சுதான் வந்திருக்கோம். எங்க மேலே பட்ட தண்ணியெல்லாம் சுடுத்தண்ணியா மாறிடுச்சுன்னா பாருங்களேன். :-)

SK said...

இன்னைக்கு இது எங்க போய் நிக்கும்னு தெரியலை.

விஜய் ஆனந்த் said...

இந்த தடவை அண்ணாச்சி வின்னர்!!!!!

புதுகை.அப்துல்லா said...

நல்லவேளை இந்த அக்கா 125 ஆவது ந்ம்பள போட விட்டுச்சே :)

MyFriend said...

//rapp said...

me the 125TH//

வூட்டுக்காரம்மாவை நாடு கடத்துங்கப்பா..

சென்ஷி said...

//rapp said...
ஹா ஹா ஹா, சென்ஷி அண்ணே, மை பிரெண்டு, அப்துல்லா அண்ணா, எஸ்கே கலக்கு கலக்குன்னு கலக்கறீங்க.
//

ஆளுக்கொரு மூலையிலேந்து கலக்குறோம் அக்கா :)

MyFriend said...

// விஜய் ஆனந்த் said...

இந்த தடவை அண்ணாச்சி வின்னர்!!!!!//

ஓ.. இவருதான் பஞ்சாயத்து நாட்டாமையா?

MyFriend said...

//SK said...

இன்னைக்கு இது எங்க போய் நிக்கும்னு தெரியலை.//

மூனு காலு முக்காலி போட்டு குந்தினு இருக்கு :-)

புதுகை.அப்துல்லா said...

SK said...
இன்னைக்கு இது எங்க போய் நிக்கும்னு தெரியலை.


//

யாரோ அறிவாரோ :))

சென்ஷி said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
//rapp said...

me the 125TH//

வூட்டுக்காரம்மாவை நாடு கடத்துங்கப்பா..
//

தங்கச்சிய சலிக்க வைக்கற அளவுக்கு கமெண்டு போட்டுக்கற தங்கச்சிக்காவ என்னத்த சொல்றது :)

SK said...

தொடர்ந்து மூன்றாவது முறையாக 200 பின்னோட்டங்கள் வாங்க இருக்கும் ராப் அவர்களை பாராட்ட விழைகிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏ அப்பா சென்ஷி ஏன் ஏன் இப்படி.. அக்கா நல்லாருக்கறது பிடிக்கலையா..
ராப் நீயும் நினைச்சியா.. இப்படி எத்தன பேரு கிளம்பி இருக்கீங்க...?
முரளிகண்ணன் நம்பாதீங்க ... நீங்க சூப்பரா சினிமாக்கட்டுரை எழுதறீங்க.. :)

விஜய் ஆனந்த் said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...
// விஜய் ஆனந்த் said...

இந்த தடவை அண்ணாச்சி வின்னர்!!!!!//

ஓ.. இவருதான் பஞ்சாயத்து நாட்டாமையா? //

ஏன்ன்ன்ன் இப்படி???

ஏற்கனவே பப்பி ஷேம் ஆகி ஒக்காந்திருக்கேன் நானு...

MyFriend said...

/// புதுகை.அப்துல்லா said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
//புதுகை.அப்துல்லா said...

அட மைபிரண்டு கூட இங்க இருக்காங்க ஆச்சரியமா இருக்கு????//

ஆச்சர்யமா? எதுக்கு?

//

பொதுவா உங்கள இந்த நேரத்தில் கும்மில பார்க்க முடியாது அதுனால சொன்னேன்///


போன வாரம்.. அதுக்கு முந்தின வாரம் எல்லாம் இந்நேரத்துல ஓடுன கும்மியை மிஸ் பண்ணிட்டீங்க.அதான் தெரியல உங்களுக்கு. :-)

rapp said...

ஆஹா, இந்த ஸ்பீடுக்கு ஈடு கொடுக்க முடியலயே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

சென்ஷி said...

//அட வந்த வேலை மறந்துபோச்சு..
நாங்க இங்க கொதிச்சுதான் வந்திருக்கோம். எங்க மேலே பட்ட தண்ணியெல்லாம் சுடுத்தண்ணியா மாறிடுச்சுன்னா பாருங்களேன். :-)//

அய்யய்யோ தங்கச்சி.. அர்ஜண்டுக்கு வாங்கி வச்சிருந்த ஆசிட்ட ஊத்திருயிருக்கப்போறாங்க. கவனமா யிரு :)

புதுகை.அப்துல்லா said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
// விஜய் ஆனந்த் said...

இந்த தடவை அண்ணாச்சி வின்னர்!!!!!//

ஓ.. இவருதான் பஞ்சாயத்து நாட்டாமையா?

//

வேனாந்தாயி அது நான் இல்ல... நாட்டாமை மாதிரி வேஷ்டி கூட கட்டிருவேன் ஆனா அந்த கூஜா சொம்ப வாயில கவுத்து தண்ணி மட்டும் குடிக்க வராது
:))))))))))))

MyFriend said...

// rapp said...

ஆஹா, இந்த ஸ்பீடுக்கு ஈடு கொடுக்க முடியலயே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....//

ஃஓ க்ரையிங்.. சிங் இன் தி ரெயின்.... :-)))

SK said...

கார்க்கி மற்றும் வால் பையன் தான் கம்மி ஆகுறாங்க.

rapp said...

வெண்பூ, அப்புறம் ஆதர்ஷுக்கு பொண்ணு கொடுக்க வரதட்சணை கேப்பேன் ஆமாம்:):):)

rapp said...

me the 150?:):):)

புதுகை.அப்துல்லா said...

போன வாரம்.. அதுக்கு முந்தின வாரம் எல்லாம் இந்நேரத்துல ஓடுன கும்மியை மிஸ் பண்ணிட்டீங்க.அதான் தெரியல உங்களுக்கு. :-)
//

ஊர் சுத்தப் போய்ட்டேன்( நம்ப பொறுக்கிதான ஹி..ஹி..ஹி..)

புதுகை.அப்துல்லா said...

150

விஜய் ஆனந்த் said...

150!!!!!

MyFriend said...

// சென்ஷி said...

//அட வந்த வேலை மறந்துபோச்சு..
நாங்க இங்க கொதிச்சுதான் வந்திருக்கோம். எங்க மேலே பட்ட தண்ணியெல்லாம் சுடுத்தண்ணியா மாறிடுச்சுன்னா பாருங்களேன். :-)//

அய்யய்யோ தங்கச்சி.. அர்ஜண்டுக்கு வாங்கி வச்சிருந்த ஆசிட்ட ஊத்திருயிருக்கப்போறாங்க. கவனமா யிரு :)//

நம்ம மேலே ஊத்திருவாங்களா? வரட்டும்.. ஒரு கை பார்க்கிறேன்.. இல்ல ஒரு காலை வெட்டி எடுத்து கறி செஞ்சிடலாம்.. என்ன சொல்றீங்.... :-)

புதுகை.அப்துல்லா said...

150

SK said...

// ஏ அப்பா சென்ஷி ஏன் ஏன் இப்படி.. அக்கா நல்லாருக்கறது பிடிக்கலையா..
ராப் நீயும் நினைச்சியா.. இப்படி எத்தன பேரு கிளம்பி இருக்கீங்க...?
முரளிகண்ணன் நம்பாதீங்க ... நீங்க சூப்பரா சினிமாக்கட்டுரை எழுதறீங்க.. :) //

இப்படி சொல்லிட்டா விட்டுடுவோமா நாங்க

சென்ஷி எவளோ பீல் பண்றாரு. :-) :-)

MyFriend said...

// புதுகை.அப்துல்லா said...

போன வாரம்.. அதுக்கு முந்தின வாரம் எல்லாம் இந்நேரத்துல ஓடுன கும்மியை மிஸ் பண்ணிட்டீங்க.அதான் தெரியல உங்களுக்கு. :-)
//

ஊர் சுத்தப் போய்ட்டேன்( நம்ப பொறுக்கிதான ஹி..ஹி..ஹி..)//

அப்போ நீங்க ஊர் சுற்றும் வாலிபனா? :-)

புதுகை.அப்துல்லா said...

விஜய் ஆனந்த் 150 வின்னர் :)

MyFriend said...

// முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஏ அப்பா சென்ஷி ஏன் ஏன் இப்படி.. அக்கா நல்லாருக்கறது பிடிக்கலையா..
ராப் நீயும் நினைச்சியா.. இப்படி எத்தன பேரு கிளம்பி இருக்கீங்க...?
முரளிகண்ணன் நம்பாதீங்க ... நீங்க சூப்பரா சினிமாக்கட்டுரை எழுதறீங்க.. :)//

முத்துக்கா பாருங்க.. நான் மட்டும்தான் இங்கண நல்ல பிள்ளை.. நோட் தி பாயிண்ட்.. ;-)

புதுகை.அப்துல்லா said...

rapp said...
வெண்பூ, அப்புறம் ஆதர்ஷுக்கு பொண்ணு கொடுக்க வரதட்சணை கேப்பேன் ஆமாம்:):):)

//

பையன நேர்ல பார்த்துருக்கியா? அப்புறம் இப்படி சொல்ல மாட்ட :)

விஜய் ஆனந்த் said...

//
புதுகை.அப்துல்லா said...
விஜய் ஆனந்த் 150 வின்னர் :) //

நா ஜெயிச்சுட்டேன்!!!!

MyFriend said...

// SK said...

தொடர்ந்து மூன்றாவது முறையாக 200 பின்னோட்டங்கள் வாங்க இருக்கும் ராப் அவர்களை பாராட்ட விழைகிறேன்./

நடத்திடலாம்.. :-)

விஜய் ஆனந்த் said...

// புதுகை.அப்துல்லா said...
rapp said...
வெண்பூ, அப்புறம் ஆதர்ஷுக்கு பொண்ணு கொடுக்க வரதட்சணை கேப்பேன் ஆமாம்:):):)

//

பையன நேர்ல பார்த்துருக்கியா? அப்புறம் இப்படி சொல்ல மாட்ட :) //

அப்போ அவரு கேப்பாரா???

புதுகை.அப்துல்லா said...

ஆதர்ஷ் அவங்க அப்பா மாதிரி இல்லை...ரொம்ப நல்ல பையன் :)

MyFriend said...

//புதுகை.அப்துல்லா said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
// விஜய் ஆனந்த் said...

இந்த தடவை அண்ணாச்சி வின்னர்!!!!!//

ஓ.. இவருதான் பஞ்சாயத்து நாட்டாமையா?

//

வேனாந்தாயி அது நான் இல்ல... நாட்டாமை மாதிரி வேஷ்டி கூட கட்டிருவேன் ஆனா அந்த கூஜா சொம்ப வாயில கவுத்து தண்ணி மட்டும் குடிக்க வராது
:))))))))))))//

எனக்கொரு ஜந்தேகம்.. விஜயை சொன்னா அப்துல்லா பதில் சொல்றாரு..

என்ன நடக்குது இங்கே?????

MyFriend said...

// புதுகை.அப்துல்லா said...

ஆதர்ஷ் அவங்க அப்பா மாதிரி இல்லை...ரொம்ப நல்ல பையன் :)//

என்னை விடவா? :-)

SK said...

150 போட இவளோ போட்டியா

கார்க்கிபவா said...

மே ஐ கம் இன்?

விஜய் ஆனந்த் said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...
//புதுகை.அப்துல்லா said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
// விஜய் ஆனந்த் said...

இந்த தடவை அண்ணாச்சி வின்னர்!!!!!//

ஓ.. இவருதான் பஞ்சாயத்து நாட்டாமையா?

//

வேனாந்தாயி அது நான் இல்ல... நாட்டாமை மாதிரி வேஷ்டி கூட கட்டிருவேன் ஆனா அந்த கூஜா சொம்ப வாயில கவுத்து தண்ணி மட்டும் குடிக்க வராது
:))))))))))))//

எனக்கொரு ஜந்தேகம்.. விஜயை சொன்னா அப்துல்லா பதில் சொல்றாரு..

என்ன நடக்குது இங்கே????? //

ஹா ஹா....அண்ணாச்சிக்கு முன்னாடியே நா பதில் சொல்லிட்டேன்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மை ப்ரண்ட் அதான் யோசிச்சிட்டே நல்லா உத்து உத்து படிச்சேன்
எங்க்யாச்சும் நீ ஆமாம்ஞ்சாமி
போட்டிருக்கியான்னு? நல்ல பொண்ணு

புதுகை.அப்துல்லா said...

தொடர்ந்து மூன்றாவது முறையாக 200 பின்னோட்டங்கள் வாங்க இருக்கும் ராப் அவர்களை பாராட்ட விழைகிறேன்./
//

எனைக்கு 200 எல்லாம் வேணாம் 90 போதும் :))

rapp said...

இப்போ எத்தனாவது?

SK said...

// எனக்கொரு ஜந்தேகம்.. விஜயை சொன்னா அப்துல்லா பதில் சொல்றாரு..

என்ன நடக்குது இங்கே????? //

கும்மி உச்சில இருக்குன்னு அர்த்தம் :-)

rapp said...

173

புதுகை.அப்துல்லா said...

ராப் அக்கா இருக்கது நெப்போலியன் ஊரு :)

புதுகை.அப்துல்லா said...

175

விஜய் ஆனந்த் said...

// கார்க்கி said...
மே ஐ கம் இன்? //

என்னாதிது ச்சின்னப்புள்ளத்தனமா கேட்டுகிட்டு???

கம்ம்மோ கம்மின்.....

புதுகை.அப்துல்லா said...

175

SK said...

// மே ஐ கம் இன்? //

இங்கே இருக்கற நிலைமைல இது எல்லாம் படிபாங்கள தெரியலை .-)

யு ஸ்டார்ட் த முசிக்

கார்க்கிபவா said...

/ sk said...
தொடர்ந்து மூன்றாவது முறையாக 200 பின்னோட்டங்கள் வாங்க இருக்கும் ராப் அவர்களை பாராட்ட விழைகிறேன்.
//

மறுக்கா கூவு... ஊரார் பதிவ ஊட்டி வளர்த்தா தன் பதிவு தானா வளரும்னு சும்மாவா சொன்னாங்க வலையோர்

விஜய் ஆனந்த் said...

175-க்கு... அண்ணாச்சி த வின்னர்!!!!

புதுகை.அப்துல்லா said...

ஹையா நாந்தான் 175

rapp said...

கார்க்கி, திஸ் தொறந்த வீடு, யு கமின் யா:):):)

புதுகை.அப்துல்லா said...

கார்க்கி said...
மே ஐ கம் இன்?

//

என்னாது ஓரு பெரிய மனுசன் சின்ன புள்ள தன்மா கேள்வி கேட்டுகிட்டு :)))))

கார்க்கிபவா said...

//விஜய் ஆனந்த் said...
// கார்க்கி said...
மே ஐ கம் இன்? //

என்னாதிது ச்சின்னப்புள்ளத்தனமா கேட்டுகிட்டு???

கம்ம்மோ கம்மின்....//

ஓ உங்களுக்கு கும்மி அடிக்க தெஇர்யுமா? வெறும் ஸ்மைலிதான் போடுவ்விங்கனு நினைச்சேன்

MyFriend said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

மை ப்ரண்ட் அதான் யோசிச்சிட்டே நல்லா உத்து உத்து படிச்சேன்
எங்க்யாச்சும் நீ ஆமாம்ஞ்சாமி
போட்டிருக்கியான்னு? நல்ல பொண்ணு//

ஹீஹீ.. நன்றி ஹை..


நல்ல பெயருடன் இன்றைய கும்மியிலிருந்து விடைபெறுகிறேன். மீண்டும் மற்றுமொரு அருமையான கும்மியில் சந்திப்போம்.. அன்புடன் விடைப்பெறுவது,

உங்கள்,
.:: மை ஃபிரண்ட் ::.

கார்க்கிபவா said...

//rapp said...
கார்க்கி, திஸ் தொறந்த வீடு, யு கமின் யா:):):)//

அதனாலதான் ராப் கேட்டு வர்றேன்.. கிகிகிகிகிகி

விஜய் ஆனந்த் said...

// புதுகை.அப்துல்லா said...
தொடர்ந்து மூன்றாவது முறையாக 200 பின்னோட்டங்கள் வாங்க இருக்கும் ராப் அவர்களை பாராட்ட விழைகிறேன்./
//

எனைக்கு 200 எல்லாம் வேணாம் 90 போதும் :)) //

அண்ணாச்சி....தாமிரா அங்கிள் கூட சேராதீங்கன்னா கேக்கறீங்களா??? இப்போ பாருங்க...90 'போதும்'-ன்னு சொல்றீங்க...

SK said...

ராப்க்கா

இங்கே போடற எல்லா பின்னோடத்துக்கும் நீங்க பதில் சொல்லி ஆகணும்.. ஆமா சொல்லிபுட்டேன்.

கார்க்கிபவா said...

//புதுகை.அப்துல்லா said...
கார்க்கி said...
மே ஐ கம் இன்?

//

என்னாது ஓரு பெரிய மனுசன் சின்ன புள்ள தன்மா கேள்வி கேட்டுகிட்டு :)))))

16 //


யாரு யாரு யாரு பெரிய மனுஷன்?

புதுகை.அப்துல்லா said...

போய்ட்டு வாங்க மைபிரண்டு :)

கார்க்கிபவா said...

நான் தான் 200 அடிப்பேன்..

SK said...

மை பிரண்டு

இன்னும் பத்தே பாத்து பின்னோட்டம் தான் முடிச்சிட்டு கெளம்புங்க. .-)

புதுகை.அப்துல்லா said...

யாரு யாரு யாரு பெரிய மனுஷன்?

//

நீங்க நீங்க நீங்க தான் பெரிய மனுஷன் அண்ணே

கார்க்கிபவா said...

//புதுகை.அப்துல்லா said...
போய்ட்டு வாங்க மைபிரண்டு :)
//

அண்ணே தீபாவளிக்கு சென்னையில இருப்பிங்களா?

rapp said...

//எனைக்கு 200 எல்லாம் வேணாம் 90 போதும்//

அண்ணி செல் நம்பர் அனுப்புங்க, அப்புறம் பேசிக்கறேன்:):):)

புதுகை.அப்துல்லா said...

192

கார்க்கிபவா said...

hellooo

rapp said...

me the 200?

கார்க்கிபவா said...

me

SK said...

போன பின்னோடதுக்கும்

அடுத்த பின்னோட்டம் போடறதுக்கும் நடுவுலே பத்து பின்னோட்டம் விழுது :-) :-)

விஜய் ஆனந்த் said...

நாந்தான்...நாந்தான் 200!!!!

கார்க்கிபவா said...

ராப்பே 200 அடிக்கிறது நல்லயில்ல... இது போங்கு ஆட்டம்

SK said...

அட பாவி மக்க

திரும்ப ஜெயிச்ச ராப் அவர்களை என்ன செய்யலாம்னு நாட்டாமை தீர்ப்பு எழுதுங்க .-)

விஜய் ஆனந்த் said...

// கார்க்கி said...
ராப்பே 200 அடிக்கிறது நல்லயில்ல... இது போங்கு ஆட்டம் //

ரிப்பீட்டேய்...

புதுகை.அப்துல்லா said...

அண்ணி செல் நம்பர் அனுப்புங்க, அப்புறம் பேசிக்கறேன்:):):)
//

ச்சே அண்ணிக்கெல்லாம் வேண்டாம் எனக்கு மட்டும் போதும் ஹி...ஹி...ஹி..

SK said...

அட அட அட அட என்ன போட்டி

இப்படி இல்லை இருக்கனும் .-)

எங்கே சென்ஷி காணாம போய்ட்டாரு, கயல்விழி அக்கா வேற காணும் .-)

புதுகை.அப்துல்லா said...

சொந்த வீட்டுலயே 200 போடுறவங்க பேரு அல்பமாம் ஹி...ஹி...ஹி...

கார்க்கிபவா said...

வீர தீர கலைவாணி
வலையுலகின் யுவராணி
கும்மி சங்க மகராணி
கருத்து காமாட்சி ராப் ராணி
பராக் பராக் பராக்..

எல்லோரும் சொல்லுங்க.. ரிப்பீட் போடக் கூடாது.. காப்பி செய்யக் கூடாது.. டைப் செய்யுங்க..

«Oldest ‹Older   1 – 200 of 318   Newer› Newest»