Thursday, 2 October, 2008

மீ த பர்ஸ்ட்

எல்லோருக்கும் வணக்கம். நான் வலைப்பூக்களில் முதல் முதலில் படிக்க ஆரம்பிச்சது, டுபுக்கு அண்ணாவோட பதிவுதான். மென்மையாக என்னை இழுத்துச் சென்ற நகைச்சுவை ப்ளஸ் நாஸ்டால்ஜியா ஒரே நாளில் அவரோட வலைப்பூவை முழுவதுமாக படிக்க வைத்தது. அவரோட பதிவுகள் படிச்சப்புறம் அதில் வந்த பின்னூட்டங்களை பார்த்து, அழகான கிண்டலோட இருந்த அம்பி அண்ணாவோட பதிவுகளை படிக்க ஆரம்பிச்சேன். எதையுமே ஸ்போர்டிவ்வாக எடுத்துக்கிட்டு ரொம்ப ஜாலியா டீல் பண்ணுகிற இவரோட ஸ்டைல் ரொம்பப் பிடிச்சிது. இவங்க ரெண்டு பேரோட வலைப்பூவும் ரொம்பப் பிடிச்சுப் போய் ஒரு நாளைக்கு எக்கச்சக்க தடவை இவங்களோட தளத்திற்கு சென்று புதுப் பதிவு போட்டிருக்காங்களான்னு பார்ப்பேன்.

அப்புறம் இவர்களோட சில பதிவுகளில் இருந்து வவா சங்கம் பத்தி தெரிஞ்சு அங்கே போய் பார்த்தப்போ வெட்டிப்பயல் அவர்களோட பதிவுகள் ரொம்ப கலக்கலா இருந்தது. அவரோட பெரும்பான்மையான பதிவுகள் படிச்சிருக்கேன். சரி, இப்படிப்பட்ட நகைச்சுவை பதிவுகள் வேறெங்காவது மொத்தமா திரட்டுராங்களான்னு வலையில் தேடினப்போ தமிழ்மணம் பார்த்தேன். அங்கேப் போய் வெறும் நகைச்சுவைப் பதிவுகளை படிக்க ஆரம்பிச்சேன். முதலில் படிச்சது அபி அப்பா வலைப்பூ.

இவங்க எல்லாருமே ஜாலியா கல கலன்னு எழுதிக்கிட்டு இருந்தாங்க. அப்போதான் அம்பி அண்ணாவோட மெயில் ஐடி இருக்கறது பார்த்தேன். தப்பா எதாவது எழுதிடுவேனோங்கர பயத்தோட என்ன எழுதினேன்னு எனக்கே தெரியாத(அதாவது வழக்கம்போல) ஒரு மெயில் அனுப்பினேன். ஆனா ஒரு பத்து நிமிஷத்திலேயே அவர்கிட்டயிருந்து மெயில். அப்புறம் அவர்கிட்ட கேட்டு டுபுக்கண்ணா, அபி அப்பா ஐடி வாங்கினேன்.

என்னோட சிலப் பதிவுகள் நூறு பின்னூட்டங்களுக்கு மேல வாங்கியிருக்கு, சிலப்பேர் என்கிட்டே, அவ்ளோ பெரிய ஆள், அவருக்கு ஏன் இத்தனை பின்னூட்டம் வரலை, இவ்ளோ நல்ல பதிவு நான் இன்னைக்கு போட்டிருக்கேன், இன்னைக்கு எனக்கு இத்தனை பின்னூட்டம் தான் வந்துச்சின்னு கேட்டிருக்காங்க. அதுக்கு பதில் என்னன்னா, நான் பதிவு போட்டவுடன் செய்ற முதல் வேலை, மேலேக் குறிப்பிட்டுள்ள பதிவர்களுக்கு மட்டுமல்லாது, என் பதிவில் வந்து கலகலப்பான, கிண்டலான பின்னூட்டங்கள் இடும் அத்துனை பதிவர்களின் பதிவுகளுக்கும் சென்று "புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க" என்ற டயலாக்கை போட்டுவிட்டு வருவேன். ஆரம்பத்தில் கொஞ்ச நாள் பின்னூட்டம் வேண்டும் என்ற காரணத்தால் செய்தாலும், பின்னர் அவர்கள் பின்னூட்டம் போடாவிட்டாலும் கூடப் பரவாயில்லை, சும்மா படித்தால் கூட போதும் என்ற அளவிலே இதனை தொடர்ந்தேன். இது என்னோட பழக்கம்.

என் பிறந்தநாள் நெருக்கத்தில், என் பிரெண்ட்ஸ் மட்டும் என்றில்லாமல், எனக்குத் தெரிஞ்ச அனைவருக்கும் எஸ்எம்எஸ் அனுப்பியோ, போன் செய்தோ, மெயில் அனுப்பியோ என்னை வாழ்த்தச் சொல்லி கேட்பேன், என் பெற்றோர்,அக்கா, கணவர் உட்பட எல்லோருக்கும் நினைவூட்டிக் கொண்டே இருப்பேன். இன்னும் கணவர் கிட்ட "என் பிறந்தநாள் வர்றதுக்கு இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு, எனக்கு இது வேணும், அது வேணும் அப்படி இப்படின்னு, கவுண்ட்டவுன் கொடுத்துக்கிட்டே இருப்பேன்".
பறக்காவெட்டித்தனமாக இருந்தாலும், அது என் இயல்பு. நான் மறந்துபோகும்போது எனக்கு ஒரு மாதிரி கில்டியாக இருக்கும், ப்ளஸ் எனக்கு பலரிடம் இருந்து வாழ்த்துக்கள் பெற ரொம்பப் பிடிக்கும். இதை வைத்து என் பிரெண்ட்ஸ் கலாய்தால் இன்னும் சந்தோஷமாக இருக்கும். வெகு சிலர் இதனை விரும்புவதில்லை, அப்படிப்பட்டவர்களுக்கு நான் தொல்லை கொடுப்பதில்லை.

அதேப் போல நான் 'மீ த பர்ஸ்ட்' போட ஆரம்பித்தது சும்மா ஜாலிக்காகத்தான். யாரையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கில் அல்ல. ஆரம்பத்தில் அப்துல்லா அண்ணா மற்றும் ச்சின்னப்பையன் பதிவுகளுக்கு மட்டும் போட முயற்சித்து வந்தேன், அதன் பின்னர், நகைச்சுவைப் பதிவுகள் எழுதும் பலரின் பதிவுகளில் போட ஆரம்பித்தேன். பலர் ஜாலியாக எடுத்துக்கொண்டாலும், இது சில சமயங்களில் பதிவர்களின் மனதை காயப்படுத்திவிடுகிறது போன்று தோன்றுகிறது.

நான் எழுதும்போது பேச்சுவழக்கில் எழுதிவிடுகிறேன், அதனால் பலருக்கு வேறொரு அர்த்தத்தில் படலாம். அவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு. நான் எழுதுவது தவறாக தோன்றும்படி இருக்கலாம், காரணம் நான் என் எழுத்தில் உணர்ச்சிகளை கொட்டி எழுதும் திறன் படைத்தவள் இல்லை. என்னுடைய பதிவுகள் எல்லாமே பேச்சு வழக்கிலே இருக்கும், பின்னூட்டங்களும் அவ்வாறே இருக்கும். என் பின்னூட்டங்கள் மற்றும் அதன் தொனி பிடிக்கவில்லை என்றால், அதனை இக்னோர் செய்திடுங்கள், நான் புரிந்துக்கொண்டு பின்னூட்டம் இடுவதை உங்கள் பதிவுகளில் தவிர்த்துவிடுகிறேன்.

நான் இதனை தேவையில்லா இடைவெளியை குறைத்துக் கொள்ளலாம் என்றுதான் பதிவிடுகிறேன். யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்:):):)

டிஸ்கி: நண்பர்களே, உடனே தீபாவளி நாளைக்குங்கற மாதிரி கொண்டாட்டமா ஓட வேண்டாம், அடுத்த பதிவில் இருந்து "புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க" டயலாக் புயலெனக் கிளம்பி வந்து உங்களை தாக்கும். இந்த டயலாக் பார்த்து வந்து தவறாம படிங்க, பட், பின்னூட்டம் போட்டே ஆகனும்னு அவசியமே இல்லை, ஓகே:):):)

கடைசி டிஸ்கி: சமீப காலாமாக கேரெக்டர் ஆர்ட்டிஸ்ட் அவதாரம் எடுத்துள்ள சகலகலா சம்பந்தி அவர்கள் என் பதிவுகளில் நார்மலான பின்னூட்டங்கள் இடுமாறு நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது:):):)

230 comments:

«Oldest   ‹Older   1 – 200 of 230   Newer›   Newest»
gulf-tamilan said...

me the first???
:)))

rapp said...

yes you the first:):):)

பொடியன்-|-SanJai said...

//gulf-tamilan said...

me the first???
:)))
//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :(

பொடியன்-|-SanJai said...

//எல்லோருக்கும் வணக்கம். //

வணக்கம்.. வணக்கம்..

rapp said...

//கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :(//

ஏன் இந்த ஸ்மைலி போட்டிருக்கீங்க, :) தானே போடணும் :):):)

பொடியன்-|-SanJai said...

ஓ.. இதுக்கெல்லாம் அம்பியும் டுபுக்கும் தான் காரணமா?.. அவர்கள் மீது விரைவில் கொலை வெறித் தாக்குதல் நடத்தப் படும்.. :))

rapp said...

//வணக்கம்.. வணக்கம்..//
ஹி ஹி சஞ்சய் , இப்படில்லாம் வணக்கம் வாங்கிக்கிட்டாத்தான் உண்டு:):):)

rapp said...

டுபுக்கு அண்ணனை விட, அம்பி அண்ணனுக்குத் தான் இந்தப் புண்ணியம் ஜாஸ்தி:):):)

பொடியன்-|-SanJai said...

//சிலப்பேர் என்கிட்டே, அவ்ளோ பெரிய ஆள், அவருக்கு ஏன் இத்தனை பின்னூட்டம் வரலை, இவ்ளோ நல்ல பதிவு நான் இன்னைக்கு போட்டிருக்கேன், இன்னைக்கு எனக்கு இத்தனை பின்னூட்டம் தான் வந்துச்சின்னு கேட்டிருக்காங்க.//

வயித்தெரிச்சலைக் கண்டுக்காதிங்க தல.. :).. இங்கு யார் சிறந்த பதிவு போடறாங்க அல்லது நல்ல பதிவு போடறாங்கன்னு எல்லாம் யாரும் பாக்கறதில்ல.. தமிழ்மணத்தில் சூடாண இடுகைகளை பார்த்தாலே இது புரியும்.. அதுல மொக்கைப் பதிவுகள் மட்டும் தான் வரும்.. அதாவது யாருக்கு நண்பர்கள் அதிகமோ.. அவர்களுக்கு பின்னூட்டம் அதிகமா இருக்கும்.. இதுல நல்ல பதிவு.. சிறந்த பதிவு.. உருப்படியான பதிவுக்கெல்லாம் வேலையே இல்ல..

rapp said...

me the 10th

பொடியன்-|-SanJai said...

//என் பிறந்தநாள் நெருக்கத்தில், என் பிரெண்ட்ஸ் மட்டும் என்றில்லாமல், எனக்குத் தெரிஞ்ச அனைவருக்கும் எஸ்எம்எஸ் அனுப்பியோ, போன் செய்தோ, மெயில் அனுப்பியோ என்னை வாழ்த்தச் சொல்லி கேட்பேன், என் பெற்றோர்,அக்கா, கணவர் உட்பட எல்லோருக்கும் நினைவூட்டிக் கொண்டே இருப்பேன். இன்னும் கணவர் கிட்ட "என் பிறந்தநாள் வர்றதுக்கு இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு, எனக்கு இது வேணும், அது வேணும் அப்படி இப்படின்னு, கவுண்ட்டவுன் கொடுத்துக்கிட்டே இருப்பேன்".//

நீங்க இன்னும் கொஞ்சம் வளரனும் தல.. :))..
( இதுக்கும் உங்க கணவர் உயரமா இருக்கிறதால நீங்க வளராம இருக்கிற மாதிரி தெரியுதுனு கடிக்காதிங்க.. இது மூளை வளர்ச்சி.. அதாவது மனதளவில் நீங்க இன்னும் குழந்தைப் பருவத்தை தாண்டவில்லைனு சொல்லிக்கிறேன்..) :))

rapp said...

//தமிழ்மணத்தில் சூடாண இடுகைகளை பார்த்தாலே இது புரியும்.. அதுல மொக்கைப் பதிவுகள் மட்டும் தான் வரும்.. அதாவது யாருக்கு நண்பர்கள் அதிகமோ.. அவர்களுக்கு பின்னூட்டம் அதிகமா இருக்கும்.. இதுல நல்ல பதிவு.. சிறந்த பதிவு.. உருப்படியான பதிவுக்கெல்லாம் வேலையே இல்ல..
//

ஆமாங்க, என் பதிவுகளே ஒரு நாலஞ்சு சூடான இடுகைல வந்திருக்குன்னா பாருங்களேன்:):):)

பொடியன்-|-SanJai said...

//பறக்காவெட்டித்தனமாக இருந்தாலும், அது என் இயல்பு. நான் மறந்துபோகும்போது எனக்கு ஒரு மாதிரி கில்டியாக இருக்கும், ப்ளஸ் எனக்கு பலரிடம் இருந்து வாழ்த்துக்கள் பெற ரொம்பப் பிடிக்கும். இதை வைத்து என் பிரெண்ட்ஸ் கலாய்தால் இன்னும் சந்தோஷமாக இருக்கும். வெகு சிலர் இதனை விரும்புவதில்லை, அப்படிப்பட்டவர்களுக்கு நான் தொல்லை கொடுப்பதில்லை.//

அய்யய்ய.. இன்னாமே இது? ஒரே பீலிங்க்ஸ் ஆப் பிரான்ஸா கீது? :((

இதுல கில்டியா பீல் பண்ண ஒன்னியும் இல்ல.. உங்க இஷ்டப் படி வாழ உங்களுக்கு உரிமை இருக்கு.. இதுல யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.. தொடரலாம்.. :)

பொடியன்-|-SanJai said...

//அதேப் போல நான் 'மீ த பர்ஸ்ட்' போட ஆரம்பித்தது சும்மா ஜாலிக்காகத்தான்.//
நீங்க மட்டும் இல்ல.. மீ த ஃபர்ஸ்ட்டை கண்டு பிடிச்ச மைஃப்ரண்ட் உட்பட அதை காப்பி அடிக்கிற நாங்க உட்பட எல்லோருமே இதை ஜால்லிக்காகத் தான் பன்றோம்.. யாராவது மீ த பர்ஸ்டு போட மாட்டாங்களானு எதிர் பார்க்கிற கூட்டம் ( நான் உட்பட :))இருக்கிறது உங்களுக்கு தெரியாது போல. :))


//யாரையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கில் அல்ல.//
இதுல புண்படுத்தா என்ன இருக்கு? :(( புதசெவி..

// பலர் ஜாலியாக எடுத்துக்கொண்டாலும், இது சில சமயங்களில் பதிவர்களின் மனதை காயப்படுத்திவிடுகிறது போன்று தோன்றுகிறது.//

அப்டியா.. ரொம்ப புதுசா இருக்கு.. ஒழுங்க பதிவு போட சொன்னா.. அத விட்டு இப்டி தேவ இல்லாம யோசிச்சின்னு கீரிங்க.. :((

rapp said...

//இது மூளை வளர்ச்சி.. //

ஹி ஹி இந்த மாதிரி உண்மைகள வெளிப்படையா எப்படி ஒத்துக்கறது, அவ்வ்வ்வ்வ்வ்...............

பொடியன்-|-SanJai said...

//அவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு.//

அப்போ நான் ஜூட் விட்டுக்கிறேன்.. :))

பொடியன்-|-SanJai said...

//காரணம் நான் என் எழுத்தில் உணர்ச்சிகளை கொட்டி எழுதும் திறன் படைத்தவள் இல்லை//

இந்த டகால்டி தான வேணாங்கிறது.. இதெல்லாம் இல்லாம தான் எண்டிடிவில பேச கூப்ட்டாங்களாக்கும்.. :)

rapp said...

சஞ்சய், நான்தான் லேபிளிலேயே சொல்லிருக்கேனே, இது சீன் போட்டு அட்டென்ஷன் பெறும் கலையைப் பத்தின பதிவுன்னு:):):)

பொடியன்-|-SanJai said...

//டிஸ்கி: நண்பர்களே, உடனே தீபாவளி நாளைக்குங்கற மாதிரி கொண்டாட்டமா ஓட வேண்டாம், //

இல்லையா அப்போ? :(

//அடுத்த பதிவில் இருந்து "புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க" டயலாக் புயலெனக் கிளம்பி வந்து உங்களை தாக்கும்.//
எனக்கு இந்த பதிவுக்கே வந்திருக்கே.. :)

// இந்த டயலாக் பார்த்து வந்து தவறாம படிங்க, பட், பின்னூட்டம் போட்டே ஆகனும்னு அவசியமே இல்லை, ஓகே:):):)//

அச்சச்சோ.. நான் பின்னூட்டம் போட்டுட்டேனே.. எல்லாத்தையும் அழிச்சிடட்டுமா? :))

குப்பன்_யாஹூ said...

நானும் பெரும்பாலான வலைபதிவர்கள் போல டுபுக்கு எழுத்தை படித்த பின் தான் பின்னூட்டம், வலை பதிவு என்று எல்லாம் ஆரம்பித்தேன்.

பின்பு பாலைத்திணை, யாழிசை , vaalpayyan, நானே முதல் RAAP ஆகியோர்.

I guess RAPP posted 1st comment for more than 200 postings. Let us recommend his name for guiness record.

ஆனால் சகோதரர் டுபுக்கு 2004, 2005 களில் நிறைய பயனுள்ள வேவேரானன தலைப்புகளில் பதிவு எழுதி உள்ளார். சில பதிவுகளுக்கு 1பின்னோட்டம் கூட இல்லை.

இருந்தாலும் தளராமல் எழுதிருக்கும் அவரது மனப்பாங்கு, ஆர்வம் பாராட்டுதலுக்கு உரியது.

vazthukkal rapp.

பொடியன்-|-SanJai said...

//
கடைசி டிஸ்கி: சமீப காலாமாக கேரெக்டர் ஆர்ட்டிஸ்ட் அவதாரம் எடுத்துள்ள சகலகலா சம்பந்தி அவர்கள்//
அது சரி பெருசுக்கு வயசாகுதுல.. :))..இதுக்கு முன்னாடி ஈரோவா ஆக்டு குத்துன்னு இந்தாரா? :(..

// என் பதிவுகளில் நார்மலான பின்னூட்டங்கள் இடுமாறு நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது:):):)//

அவரு எப்போவுமே அப்நார்மலா யாருக்கும் கமெண்ட் போட மாட்டாரே.. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவர் ஆச்சே.. :))

rapp said...

//இதெல்லாம் இல்லாம தான் எண்டிடிவில பேச கூப்ட்டாங்களாக்கும்//

அவுங்கக் கூப்டப்புறம்தான தெரிஞ்சிக்கிட்டாங்க:):):) அங்க நான் செஞ்ச சைலென்ட் ரேகிங்கினால், ரொம்ப நாள் அவங்க சென்னையில் நிகழ்ச்சியே நடத்தல:):):)

பொடியன்-|-SanJai said...

//rapp said...

//கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :(//

ஏன் இந்த ஸ்மைலி போட்டிருக்கீங்க, :) தானே போடணும் :):):)//

நான் மீ த பர்ஸ்ட் போடலாம்னு தானே ஓடோடி வந்தேன். அவர் முந்திகிட்டார்.. :(

பொடியன்-|-SanJai said...

//ஆமாங்க, என் பதிவுகளே ஒரு நாலஞ்சு சூடான இடுகைல வந்திருக்குன்னா பாருங்களேன்:):):)//

ஹிஹி.. ராப்..உங்களுதாவது நாலஞ்சி.. நான் போடற எல்லா பதிவுகளுமே சூடான இடுகைல இடம் புடிச்சிடும்.. :)).. அவ்ளோ மொக்கை + குப்பை :)

rapp said...

//எனக்கு இந்த பதிவுக்கே வந்திருக்கே.. :)
//


நான் சொன்னது பதிவுல போய் பிளேடு போடறதப் பத்தி மட்டும்தான்:):):) யார் யார் மெயில் ஐடி என்கிட்டே இருக்கோ அவங்களுக்கு வழக்கம்போல தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன :):):)

rapp said...

ஹை, மீ த 25?????

பொடியன்-|-SanJai said...

// rapp said...

சஞ்சய், நான்தான் லேபிளிலேயே சொல்லிருக்கேனே, இது சீன் போட்டு அட்டென்ஷன் பெறும் கலையைப் பத்தின பதிவுன்னு:):):)//

சாரி.. லேபிள் பார்க்கிற கெட்ட பழக்கம் எல்லாம் எனக்கில்லை.. வந்தமா.. கும்மி அடிச்சமா.. ஜூட் விட்டமான்னு இருக்கனும்.. தேவை இல்லாத டீட்டெய்ல்ஸ் எல்லாம் பாத்து டைம் வேஸ்ட்?! பன்றது இல்ல :))

பொடியன்-|-SanJai said...

//"மீ த பர்ஸ்ட்"// இதான் தலைப்பா?

ஹிஹி.. என்ன கொடுமை ராப் இது? தலைப்பே இப்போ தான் பார்க்கிறேன்.. :))))))

rapp said...

//அவரு எப்போவுமே அப்நார்மலா யாருக்கும் கமெண்ட் போட மாட்டாரே.. //
ம்ஹூம், கொஞ்ச நாளா அவர் ஆணி ஜாஸ்தின்னு எங்கயும் கும்மி அடிக்கலை, அதான் அவருக்கு கேரெக்டர் ஆர்ட்டிஸ்ட்னு நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது:):):)
//நான் மீ த பர்ஸ்ட் போடலாம்னு தானே ஓடோடி வந்தேன். அவர் முந்திகிட்டார்//

better luck next time, try try try but dont cry:):):)

rapp said...

me the 30th

rapp said...

//நானும் பெரும்பாலான வலைபதிவர்கள் போல டுபுக்கு எழுத்தை படித்த பின் தான் பின்னூட்டம், வலை பதிவு என்று எல்லாம் ஆரம்பித்தேன்//

அடடே குப்பன், நீங்களும் டுபுக்கண்ணா பதிவுகளை விரும்பற ஆளா? ரொம்ப ரொம்ப சந்தோஷம்:):):)

//ஆனால் சகோதரர் டுபுக்கு 2004, 2005 களில் நிறைய பயனுள்ள வேவேரானன தலைப்புகளில் பதிவு எழுதி உள்ளார். சில பதிவுகளுக்கு 1பின்னோட்டம் கூட இல்லை.
//

ஆமாங்க, நான் அவைகளையும் படிச்சிருக்கேன், அவரோட வலைப்பூவில் அனைத்து பதிவுகளையும் படிச்சிருகேன். ஆனா நான் வலைப்பூக்கள் பக்கம் திரும்பியதே இந்த வருட ஆரம்பத்தில் தான்

//Let us recommend his name for guiness record.
//
இராப் என் கணவர் பேர். ஹி ஹி ஜென்டருக்காக சொல்றேன்:):):) ஆனா உங்களோட இந்தக் கருத்தை கன்னாபின்னாவென வழிமொழிகிறேன் :):):)

T.V.Radhakrishnan said...

ராப் பின் பின்னூட்டம் இலாமல் ஒரு பதிவா...நோ..சான்ஸ்..அது பதிவே இல்லை
ஆகவே..மகா பதிவர்களே..அவரை எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் இடச் செய்ய வேண்டியது நமது கடமை>

வெண்பூ said...

அச்சச்சோ.. என்ன இது வெட்டியாப்பீஸர்??? இவ்ளோ சீரியஸான பதிவா உங்ககிட்ட இருந்து.. :(((

எனக்கென்னவோ இன்று நடந்தது கூட உங்களை காயப்படுத்தவேண்டும் என்ற நோக்கில் சொல்லப்படாமல் நகைச்சுவையாகவே சொல்லப்பட்டதாகவே நினைக்கிறேன்.

அதேநேரம் நானே உங்களிடம் சொல்ல நினைத்தது, கடந்த ஒரு மாதமாக நீங்கள் வலையில் ஆக்டிவ்வாக இல்லை, பதிவுகளும், பின்னூட்டங்களும் பழைய வீரியத்துடன் இல்லை (வெறும் ஸ்மைலி அல்லது நெம்பர்கள்தான்). ஏதேனும் சொந்த காரணங்கள் இருந்தால் அதை சரி செய்யுங்கள் முதலில். நாங்கள் காத்திருக்கிறோம்.

பழைய வேகத்துடன் வாருங்கள். கண்டிப்பாக யாரும் உங்களை தவறாக நினைக்கவும் இல்லை, நினைக்கப்போவதும் இல்லை. ஒவ்வொருவரும் யுனிக் அதனால் உங்கள் இயல்புகளை அடுத்தவர்கள் கேலி செய்வார்கள் என்று நினைக்க வேண்டாம். கேலி செய்தாலும் அதை ஸ்போர்டிவ்வாக எடுத்துக் கொள்ளுங்கள்.

வால்பையனுக்கு சொன்னதேதான் உங்களுக்கும். நாம் வலையில் இருப்பது ரிலாக்ஸேசன், ரிலாக்ஸேசன், ரிலாக்ஸேசனுக்காக மட்டுமே. அலுவலக பிரச்சினைகளை நாம் ச‌ரிசெய்தே ஆக‌ வேண்டும் (கார‌ண‌ம் அத‌ற்குதான் ச‌ம்ப‌ள‌ம்), வீட்டுப் பிர‌ச்சினைக‌ளையும் ச‌ரி செய்தே ஆக‌ வேண்டும் (கார‌ண‌ம் அதுதான் ந‌ம் ப‌ல‌ம், ப‌ல‌வீன‌த்தை தீர்மானிப்ப‌து). ஆனால் இங்கே ஒரு பிர‌ச்சினையென்றால் துடைத்துவிட்டு போய் கொண்டே இருக்க‌வேண்டிய‌துதான் (Just ignore and keep going)..

என் அடுத்த பதிவிற்கு உங்கள் மீ த பஷ்டுவை கட்டாயம் எதிர்பார்க்கிறேன்.

வெண்பூ said...

//பொடியன்-|-SanJai said...
வயித்தெரிச்சலைக் கண்டுக்காதிங்க தல.. :).. இங்கு யார் சிறந்த பதிவு போடறாங்க அல்லது நல்ல பதிவு போடறாங்கன்னு எல்லாம் யாரும் பாக்கறதில்ல.. தமிழ்மணத்தில் சூடாண இடுகைகளை பார்த்தாலே இது புரியும்.. அதுல மொக்கைப் பதிவுகள் மட்டும் தான் வரும்.. அதாவது யாருக்கு நண்பர்கள் அதிகமோ.. அவர்களுக்கு பின்னூட்டம் அதிகமா இருக்கும்.. இதுல நல்ல பதிவு.. சிறந்த பதிவு.. உருப்படியான பதிவுக்கெல்லாம் வேலையே இல்ல..
//

சூப்பர் ரிப்பீட்டேய்.... மொக்கை வாழ்க, கும்மி வாழ்க, ராப் வாழ்க, சஞ்சய் வாழ்க..

rapp said...

வாங்க வெண்பூ வாங்க, இப்படி மறுபடி மறுபடி கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் அவதாரம் எடுத்தா எப்படி, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............

வெண்பூ said...

//இது மூளை வளர்ச்சி.. //

இன்னாபா நீ... இல்லாத மேட்டரை பத்தியெல்லாம் பேசிகினு... :)))

வெண்பூ said...

//////
பொடியன்-|-SanJai said...
//
கடைசி டிஸ்கி: சமீப காலாமாக கேரெக்டர் ஆர்ட்டிஸ்ட் அவதாரம் எடுத்துள்ள சகலகலா சம்பந்தி அவர்கள்//
அது சரி பெருசுக்கு வயசாகுதுல.. :))..இதுக்கு முன்னாடி ஈரோவா ஆக்டு குத்துன்னு இந்தாரா? :(..
////

யோவ்.. உங்க ரெண்டு பேருக்கும் இன்னிக்கு நாந்தான் கெடச்சனா???

rapp said...

//எனக்கென்னவோ இன்று நடந்தது கூட உங்களை காயப்படுத்தவேண்டும் என்ற நோக்கில் சொல்லப்படாமல் நகைச்சுவையாகவே சொல்லப்பட்டதாகவே நினைக்கிறேன்.
//

போட்டதே அவர் இல்லையாம்:(:(:(


//கடந்த ஒரு மாதமாக நீங்கள் வலையில் ஆக்டிவ்வாக இல்லை,//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நானா நீங்களா? நானாவது மூணு பதிவு போட்டிருக்கேன்:):):)

//ஏதேனும் சொந்த காரணங்கள் இருந்தால் //பவ்வ்வ்வ்வ்............நான் வேலை கேட்டதனாலே அப்படி நெனச்சிட்டீங்களா, நான் கேட்டது சுத்த கெட்ட புத்தியினாலதான். அதாவது என் மாமியார் வீட்டுக்குப் போகாம லீவ் கிடைக்கலைன்னு சீன் போட்டு எஸ்கேப்பாகலாம்னுதான். இப்போ மறுபடி சோம்பேறியாகி வேலை தேடறதை நிறுத்திட்டேன்.
எனக்கு சொந்த வாழ்க்கையில பிரச்சினை இல்ல, ஆனா என் ரங்கமணிக்கு சொந்த வாழ்க்கையில் 2006இல் இருந்து ரப்ச்சர் தாங்க முடியலையாம்:):):)

//பழைய வேகத்துடன் வாருங்கள். கண்டிப்பாக யாரும் உங்களை தவறாக நினைக்கவும் இல்லை, நினைக்கப்போவதும் இல்லை. ஒவ்வொருவரும் யுனிக் அதனால் உங்கள் இயல்புகளை அடுத்தவர்கள் கேலி செய்வார்கள் என்று நினைக்க வேண்டாம். கேலி செய்தாலும் அதை ஸ்போர்டிவ்வாக எடுத்துக் கொள்ளுங்கள்.

//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........இது என்னால பாதிக்கப் பட்ட மக்களுக்கான ஆறுதல் பதிவா நெனச்சி போட்டேன், நீங்க என்னடானா சேம் சைட் கோல் அடிச்சிட்டீங்க:):):)

rapp said...

//ராப் பின் பின்னூட்டம் இலாமல் ஒரு பதிவா...நோ..சான்ஸ்..அது பதிவே இல்லை
//
ஆஹா, சார், நான் அப்படில்லாம் சொல்லவே இல்லையே, நைசா இப்படில்லாம் சொல்லி தப்பிச்சுக்க பாக்காதீங்க, நான் தொடர்ந்து பின்னூட்டம் எனும் ஆயுதத்தை ஏவிக் கொண்டுதான் இருப்பேன் :):):)

SK said...

:( :( :(

SK said...

// ஆஹா, சார், நான் அப்படில்லாம் சொல்லவே இல்லையே, நைசா இப்படில்லாம் சொல்லி தப்பிச்சுக்க பாக்காதீங்க, நான் தொடர்ந்து பின்னூட்டம் எனும் ஆயுதத்தை ஏவிக் கொண்டுதான் இருப்பேன் :):):)//

ஆனால் பின்னூட்டம் :)) :)) :)) இப்படியோ அல்லது :( :( :( இருந்தால் ஒத்துக்கொள்ள பட மாட்டாது

SK said...

/// நான் சொன்னது பதிவுல போய் பிளேடு போடறதப் பத்தி மட்டும்தான்:):):) யார் யார் மெயில் ஐடி என்கிட்டே இருக்கோ அவங்களுக்கு வழக்கம்போல தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன :):):) ///


இது பொய் பொய் பொய் :( :(

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

SK said...

என்ன கொடுமை ஆபிசர் இது. இதுக்கு உங்க அண்ணே வந்து தான் எதாவது தெளிவா பதில் சொல்லணும்

SK said...

என் டி டி வியும் நானும் பதிவை போடாமல் இந்த பதிவை போட்டதற்காக வன்மையாக கண்டிக்கிறோம்

- தொண்டன்
என் டி டி வியும் நானும் அடுத்த பாகத்தை எதிர் பார்த்து இருப்போர் சங்கம்.

rapp said...

எஸ்கே, டென்ஷனாகாதீங்க, தாக்குதல்கள் நடத்திக்கிட்டு இருக்கும்போதே பின்னூட்டங்கள் வந்ததினால், கடமையை பாதியில் நிறுத்திவிட்டு வந்துள்ளேன், இன்னும் பலருக்கு மெயில் அனுப்பவில்லை, கடமையை நான் செஞ்சி முடிக்கறதுக்குள்ள, நீங்க உங்க கடமையை ஆத்திட்டீங்க:):):)

வெட்டிப்பயல் said...

நோ பீலிங்ஸ் :)

நானும் டுபுக்கு அண்ணா வழியாத்தான் வலைப்பூ உள்ள வந்தேன் :)

விஜய் ஆனந்த் said...

47

விஜய் ஆனந்த் said...

48

rapp said...

//என் டி டி வியும் நானும் பதிவை போடாமல் இந்த பதிவை போட்டதற்காக வன்மையாக கண்டிக்கிறோம்

- தொண்டன்
என் டி டி வியும் நானும் அடுத்த பாகத்தை எதிர் பார்த்து இருப்போர் சங்கம்.

//

பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............அதை பாதி எழுதிட்டேன், மீதியை எழுத சோம்பேறித்தனம். இன்னும் நாலஞ்சுப் பதிவுகள் அப்படி இருக்கு என்கிட்டே:):):) எஸ்கே, அடுத்தப் பதிவுல வந்து மீ த பர்ஸ்ட் போட்டு ரெஜிஸ்டர் பண்ணுங்க :):):)

விஜய் ஆனந்த் said...

49

rapp said...

me the 50

விஜய் ஆனந்த் said...

50...

:-))))

விஜய் ஆனந்த் said...

மீ த 50th!!!!!!!

rapp said...

//நோ பீலிங்ஸ் :)//

ஹே வெட்டிப்பயல் நோ யா, நான் மத்தவங்களுக்கு ஆறுதல் சொல்ல ட்ரை பண்ணேன், பாத்தா வழக்கம்போல பவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஆகிடுச்சி :):):)
ப்யூச்சர் பாதர் பாலாஜி, தலை தீபாவளி வாழ்த்துக்கள் :):):)

rapp said...

ஹே நியூ பாதர் விஜய் ஆனந்த், யு த 50th? நாட் மீ? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் :):):)

SK said...

/// எஸ்கே, டென்ஷனாகாதீங்க, தாக்குதல்கள் நடத்திக்கிட்டு இருக்கும்போதே பின்னூட்டங்கள் வந்ததினால், கடமையை பாதியில் நிறுத்திவிட்டு வந்துள்ளேன், இன்னும் பலருக்கு மெயில் அனுப்பவில்லை, கடமையை நான் செஞ்சி முடிக்கறதுக்குள்ள, நீங்க உங்க கடமையை ஆத்திட்டீங்க:):):) //

இந்த பதில்கள் எல்லாம் ஒத்துக்கொள்ள பட மாட்டாது. இதற்க்கு ஒரே தீர்வு அந்த பதிவை முடித்து இன்றே வெளியிட வேண்டும்

- தொண்டன்

என் டி டி வியும் நானும் அடுத்த பாகத்தை எதிர் பார்த்து இருப்போர் சங்கம்.

SK said...

// எஸ்கே, அடுத்தப் பதிவுல வந்து மீ த பர்ஸ்ட் போட்டு ரெஜிஸ்டர் பண்ணுங்க :):):) //

ஒரு மாசமா வந்து வந்து எட்டி பாத்துட்டு போனதுக்கு எதுக்குன்னு நெனைச்சிட்டு இருக்கீங்க..

நான் கஷ்டபட்டு அடிச்சா 100'கே இன்னும் பதில் வரலை :( :( :(

SK said...

/// எனக்கென்னவோ இன்று நடந்தது கூட உங்களை காயப்படுத்தவேண்டும் என்ற நோக்கில் சொல்லப்படாமல் நகைச்சுவையாகவே சொல்லப்பட்டதாகவே நினைக்கிறேன். //

என்னா நடந்திச்சு ?

கொய்யால எவளோ பதிவு தான் எல்லாரும் படிப்பீங்க ??

விஜய் ஆனந்த் said...

யீயீயீயீயீயீ...

யூ பவ்வ்வ்வ்வ்விங் மீ அகெய்ன் காலிங் ந்யூ ஃபாதர்???

மை குட் யங் பாய் இமேஜ்...டோட்டல் ஃபுல் ட்டேமேஜ் யா.....

யூ நவ் ந்நோ ஃபீலிங்ஸ் ஆஃப் ஃப்ரான்ஸு....பட் மீ கம்ப்ளீட் ஃபீலிங்ஸூ...

rapp said...

//கொய்யால எவளோ பதிவு தான் எல்லாரும் படிப்பீங்க ??
//

நான் கிட்டத்தட்ட தமிழ்மணத்தில் வர்ற எல்லாப் பதிவுகளும் படிச்சிடுவேன்.

rapp said...

//நான் கஷ்டபட்டு அடிச்சா 100'கே இன்னும் பதில் வரலை//அவ்வ்வ்வ்வ்வ்...........இதோ போய் பாக்கறேன். நீங்க 100 போட்டது தெரியாதே, நான் என் பதிவை விட்டுட்டு பொதுச்சேவை செய்றதுல குறியா இருந்துட்டேனா, இதை மிஸ் பண்ணிட்டேன்:):):)

rapp said...

//யீயீயீயீயீயீ...

யூ பவ்வ்வ்வ்வ்விங் மீ அகெய்ன் காலிங் ந்யூ ஃபாதர்???

மை குட் யங் பாய் இமேஜ்...டோட்டல் ஃபுல் ட்டேமேஜ் யா.....

யூ நவ் ந்நோ ஃபீலிங்ஸ் ஆஃப் ஃப்ரான்ஸு....பட் மீ கம்ப்ளீட் ஃபீலிங்ஸூ...

//


ஹே விஜய் ஆனந்த் ட்யூட் மீ நாட் டாமேஜிங், கோவி சார் டாமேஜிங் ஆள் ஆப் யு யா, ஹீ புட்டிங் போட்டோ, வி சீயிங் அண்டு டிஸ்கிரைபிங் அண்டு டிஸ்டிரக்டிங் யு யா. சோ, காலிங் கோவி சார் டெல்லிங் நாட் புட்டிங் போட்டோ:):):)

SK said...

/// அவ்வ்வ்வ்வ்வ்...........இதோ போய் பாக்கறேன். நீங்க 100 போட்டது தெரியாதே, நான் என் பதிவை விட்டுட்டு பொதுச்சேவை செய்றதுல குறியா இருந்துட்டேனா, இதை மிஸ் பண்ணிட்டேன்:):):) ///

நோ சீயிங் மை ஹண்ட்ரட்.

நோ நோ நோ நோ நோநோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ

(ரகுவரன் பாணியில் படிக்கவும்.)

தாமிரா said...

மொக்கை வாழ்க, கும்மி வாழ்க, ராப் வாழ்க, சஞ்சய் வாழ்க, வெண்பூ வாழ்க, அப்துல் வாழ்க, அப்பிடியே நானும் வாழ்க‌..
வழக்கம்போல மீ த லேட்டு.!

விஜய் ஆனந்த் said...

// rapp said...

ஹே விஜய் ஆனந்த் ட்யூட் மீ நாட் டாமேஜிங், கோவி சார் டாமேஜிங் ஆள் ஆப் யு யா, ஹீ புட்டிங் போட்டோ, வி சீயிங் அண்டு டிஸ்கிரைபிங் அண்டு டிஸ்டிரக்டிங் யு யா. சோ, காலிங் கோவி சார் டெல்லிங் நாட் புட்டிங் போட்டோ:):):) //

யூ காலிங் மீ ந்யூ ஃபாதர் வெரி பெட்டர் யா...ஃபீலிங் வெரி வெரி குட்டு....நோ டாகிங் ஃபோட்டோ யா...

:-))))..

முத்துலெட்சுமி-கயல்விழி said...

மீ த 65?

விஜய் ஆனந்த் said...

// முத்துலெட்சுமி-கயல்விழி said...
மீ த 65? //

ந்நோ....தட்ஸ் மீ!!!

;-)))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆகா இல்லையா 66 ஆ! சரி.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அடப்பாவமே இது அநியாயம் விஜய்..

ஜோசப் பால்ராஜ் said...

சிங்கத்தின் சங்கத் தலைவி இப்டியெல்லாம் ஃபீலிங்ஸ் பதிவு போடுறதா? அப்துல்லா அண்ணே இல்லாததுனால அவரு சார்பா நான் இதை வன்மையாக் கண்டிக்கிறேன். உங்க மீ த ஃப்ர்ஸ்ட் கமெண்ட் இப்போ எவ்ளோ பிரபலம் தெரியுமா? சிங்கப்பூர்ல நடந்த ஒரு பதிவர் சந்திப்புல சிங்கைப் பதிவர்கள் அனைவரும் நமது பதிவர்களின் பதிவுகளுக்கு மீ த ஃப்ர்ஸ்டாவது போடனும்னு ஒரு தீர்மானமே இயற்றுனோம்.

ராப்னா ஃப்ர்ஸ்ட் நினைப்பு வர்றது மீ த ஃப்ர்ஸ்ட் தானே? இது மாதிரி ஃபீலிங்ஸ் எல்லாம் பண்ணாம ஸ்டார்ட் த ம்யூஜிக் மேடம்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

தங்காச்சி .. வர வர எமோசனல் பார்டி லிஸ்ட்ல சேர்ந்துட்டுவரியோன்னு சந்தேகமா இருக்கு..

ஆயில்யன் said...

//விஜய் ஆனந்த் said...
// rapp said...

ஹே விஜய் ஆனந்த் ட்யூட் மீ நாட் டாமேஜிங், கோவி சார் டாமேஜிங் ஆள் ஆப் யு யா, ஹீ புட்டிங் போட்டோ, வி சீயிங் அண்டு டிஸ்கிரைபிங் அண்டு டிஸ்டிரக்டிங் யு யா. சோ, காலிங் கோவி சார் டெல்லிங் நாட் புட்டிங் போட்டோ:):):) //

யூ காலிங் மீ ந்யூ ஃபாதர் வெரி பெட்டர் யா...ஃபீலிங் வெரி வெரி குட்டு....நோ டாகிங் ஃபோட்டோ யா...
///

என் இனிய சகோதர சகோதரிகளே என்னமோ ரகசியமொழியில பேசிக்கிறீங்க எனக்கும் புரியிற மாதிரி சாதாரண அஞ்சலில் கூட அனுப்பி உதவலாமே! (நானும் புரிஞ்சுக்கிட்ட மாதிரியே எம்பூட்டு நேரம்தான் நடிக்கிறது!!!)

மங்களூர் சிவா said...

me the 73rd

மங்களூர் சிவா said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

மங்களூர் சிவா said...

வணக்கம்.. வணக்கம்..

மங்களூர் சிவா said...

ஓ.. இதுக்கெல்லாம் அம்பியும் டுபுக்கும் தான் காரணமா?.. அவர்கள் மீது விரைவில் கொலை வெறித் தாக்குதல் நடத்தப் படும்.. :))

மங்களூர் சிவா said...

இங்கு யார் சிறந்த பதிவு போடறாங்க அல்லது நல்ல பதிவு போடறாங்கன்னு எல்லாம் யாரும் பாக்கறதில்ல..

மங்களூர் சிவா said...

தமிழ்மணத்தில் சூடாண இடுகைகளை பார்த்தாலே இது புரியும்..

மங்களூர் சிவா said...

அதுல மொக்கைப் பதிவுகள் மட்டும் தான் வரும்..

மங்களூர் சிவா said...

அதாவது யாருக்கு நண்பர்கள் அதிகமோ.. அவர்களுக்கு பின்னூட்டம் அதிகமா இருக்கும்..

மங்களூர் சிவா said...

இதுல நல்ல பதிவு.. சிறந்த பதிவு.. உருப்படியான பதிவுக்கெல்லாம் வேலையே இல்ல..

வால்பையன் said...

//நான் வலைப்பூக்களில் முதல் முதலில் படிக்க ஆரம்பிச்சது, டுபுக்கு அண்ணாவோட பதிவுதான்.//

அதனுடைய தாக்கும் தான் உங்க மொக்கையா

வால்பையன் said...

அடபாவமே, இது சீரியஸ் பதிவா

வால்பையன் said...

மீ த எத்தனையாவது

வால்பையன் said...

அதனால தான் கொஞ்ச நாளா எங்கேயும் உங்க பின்னூட்டத்த காணோமா

வால்பையன் said...

அதனால தான் கொஞ்ச நாளா எங்கேயும் உங்க பின்னூட்டத்த காணோமா

வால்பையன் said...

நீங்க வழக்கம் போல கும்முங்க

வால்பையன் said...

உங்கள் சேவை பிளாக் உலகிற்கு தேவை

rapp said...

ஆஹா, இங்க comment மாடரேஷன் இல்லையா?

rapp said...

அச்சச்சோ, சென்ஷி பதிவு கமெண்டை இங்கே டைப்பிட்டேனா????????

rapp said...

பதிவுலக பாக்யராஜ் அண்ணன் தாமிரா வாழ்க:):):)

rapp said...

//யூ காலிங் மீ ந்யூ ஃபாதர் வெரி பெட்டர் யா...ஃபீலிங் வெரி வெரி குட்டு....நோ டாகிங் ஃபோட்டோ யா...
//

ஹே விஜய் ஆனந்த் ட்யூட், ஐ லைக் யுவர் ஹானஸ்டி யா, ஹானஸ்டி இஸ் த பெஸ்ட் பாலிசி, ஓகே:):):)

ஹே, நியூ பாதர் அண்டு முத்து, டோன்ட் பைட், யு கெட்டிங் ஈக்குவல் சான்ஸ் டைம் த நெக்ஸ்ட்

rapp said...

//சிங்கப்பூர்ல நடந்த ஒரு பதிவர் சந்திப்புல சிங்கைப் பதிவர்கள் அனைவரும் நமது பதிவர்களின் பதிவுகளுக்கு மீ த ஃப்ர்ஸ்டாவது போடனும்னு ஒரு தீர்மானமே இயற்றுனோம்//
ஜோசப் அவர்களே, இந்த சதியினை முறியடிக்கவே, யாம் பீறிட்டு கிளம்பியுள்ளோம். இங்கு நாம் இப்பதிவளித்தது மீ த பர்ஸ்ட் பிடிக்காத ஆட்கள் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும் எனும் நல்லெண்ணத்தில்தானே தவிர, நான் என் போக்கை மாற்றி கொள்வேன் என சிங்கைப் பதிவர்கள் யாரும் பகல் கனவு, நைட் கனவு, ஏன் நைண்டி கனவு கூட காணவேண்டாம் என அறிவிக்கிறேன், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........:):):)

rapp said...

//வர வர எமோசனல் பார்டி லிஸ்ட்ல சேர்ந்துட்டுவரியோன்னு சந்தேகமா இருக்கு//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............முத்து நோ யா, அதர் பீப்பிள் பிக்கம்மிங் எமோஷனல், சோ மீ ட்ரை எக்ஸ்பிலெயினிங், அஸ் யூஷுவல் டோட்டல் டேமேஜ்:):):)

rapp said...

//என் இனிய சகோதர சகோதரிகளே என்னமோ ரகசியமொழியில பேசிக்கிறீங்க எனக்கும் புரியிற மாதிரி சாதாரண அஞ்சலில் கூட அனுப்பி உதவலாமே//

ஆயில்யன் என்ன நீங்க சின்னப் புள்ளயாவே இருக்கீங்க? இந்த மாதிரி தேவ பாஷை எல்லாம் எங்களை மாதிரி ஞானிகளுக்கு மட்டுமே புரியும், அஆன் ........:):):)

rapp said...

நியூ ஹஸ்பன்ட் சிவா, ஆனாலும் ஒரு கமெண்டுல ஒரு வார்த்தயயாவது மாத்தின உங்களின் பங்களிப்பை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன்:):):) என்கிட்டே கருப்பனின் காதலி பிரிவ்யூ ஷோ டிக்கட் இருக்கு, போயிட்டு வந்து விமர்சனம் எழுதறீங்களா:):):)

rapp said...

வால்பையன், நான் அப்பப்ப நெட்ல குமுதம், விகடன் மாதிரி பத்திரிக்கைகள படிக்கணும்ல அதான் நடுவுல ஒரு நாள் ரெண்டு நாள்னு லீவ் எடுத்துப்பேன். எனக்கு 'சேவை' செய்ய தெரியாது. உப்புமா செய்ய தெரியும், பார்சல் அனுப்பட்டுமா?:):):)

சென்ஷி said...

100

சென்ஷி said...

100

சென்ஷி said...

100

சென்ஷி said...

101

சென்ஷி said...

102

மணிகண்டன் said...

me the 101st.

சென்ஷி said...

103

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நோ நோ ராப் ..அதர் பீப்பிள் ஆர் ஆல்வேஸூ எமோசனல்.. யூ டோண்ட் டேக்கு திஸ் ஆப்போஸிட்டு ஸ்மால்..
( நானும் உன்ன மாதிரி எழுதனும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன் என் சிறுமுயற்சி (என்பதிவு இல்லை) எப்படி இருக்கு)

சென்ஷி said...

105

மணிகண்டன் said...

மீ திங்கிங் மீ த 101st ஆ இல்லாட்டி மீ த 101th ஆ

மணிகண்டன் said...

சென்ஷி - டூ பேட்டு

சென்ஷி said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
நோ நோ ராப் ..அதர் பீப்பிள் ஆர் ஆல்வேஸூ எமோசனல்.. யூ டோண்ட் டேக்கு திஸ் ஆப்போஸிட்டு ஸ்மால்..
( நானும் உன்ன மாதிரி எழுதனும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன் என் சிறுமுயற்சி (என்பதிவு இல்லை) எப்படி இருக்கு)
//

ஒய்க்கா திஸ் மர்டர் ப்ளானிங்க்
டோண்ட்யூ லைக் யுவர் பிரதர் லிவிங் :) (நான் என்னைய சொன்னேன்)

மணிகண்டன் said...

***** நோ நோ ராப் ..அதர் பீப்பிள் ஆர் ஆல்வேஸூ எமோசனல்.. யூ டோண்ட் டேக்கு திஸ் ஆப்போஸிட்டு ஸ்மால்.. *****

மேடம், யூ டூ குட். ட்ரையிங் டு இமிடேட் ராப். டூ டப்பு.

தாவு தீருது சாமி !

சென்ஷி said...

//மணிகண்டன் said...
சென்ஷி - டூ பேட்டு
//

நோ. ஐ, சென்ஷி ஒன் பேடு

சென்ஷி said...

மீ த 111த்

rapp said...

சென்ஷி அண்ணே, உங்களோட இந்த கடமையுணர்ச்சிக்கு நான் எப்படிண்ணே நன்றி செலுத்துவேன்(இதை கேவி கேவி, விக்கி விக்கி(நாட் நம்ம விக்னேஷ்) நான் சொல்றா மாதிரி படிக்கவும்)

rapp said...

நோ நோ ராப் ..அதர் பீப்பிள் ஆர் ஆல்வேஸூ எமோசனல்.. யூ டோண்ட் டேக்கு திஸ் ஆப்போஸிட்டு ஸ்மால்//
முத்து, வர வர என் கவுஜைக்கு மட்டும்தான் போட்டின்னு பார்த்தா, இப்படி தேவ பாஷையிலும் போட்டியா, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........
:):):)

சென்ஷி said...

திஸ் இஸ் 113த்

rapp said...

//மணிகண்டன் ட்யூட், யு த யா, டோன்ட் லூஸ்(ஹே டைட் ஆப்போசிட் லூஸ்) ஹோப் யா, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்:):):)

rapp said...

ஹே சென்ஷி ட்யூட் அண்டு பெல்கண்டன் ட்யூட், யு போத் வான்டிங் ஹெல்ப் இன் இம்புரூவிங் தேவ பாஷை, மீ ஆப்பரிங் ஹெல்ப்:):):)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஹேய் ராப் அண்ட் சென்ஷி யூ பீப்பிள் டெல்லிங்க் மீ ஆல்ஸோ எக்ஸ்பர்ட்டூ இன் திஸ் லேங்க்வேஜ்.. ஓ ஐ ஃப்பீல் ஸோ யங் யார்....

rapp said...

மணிகண்டன் ட்யூட், யு த 103rd யா, டோன்ட் லூஸ்(ஹே டைட் ஆப்போசிட் லூஸ்) ஹோப் யா, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்:):):)

மணிகண்டன் said...

நோ. ஐ, சென்ஷி ஒன் பேடு

ஐ + சென்ஷி டூ பேடு.

மீ ட்ய்பிங் இன் கூகிள் இன்டிக். டூ டிப்பிகல்டு. யூ ஹவிங் எனி பெட்டெர் ஐய்டியாவு

சென்ஷி said...

//rapp said...
சென்ஷி அண்ணே, உங்களோட இந்த கடமையுணர்ச்சிக்கு நான் எப்படிண்ணே நன்றி செலுத்துவேன்(இதை கேவி கேவி, விக்கி விக்கி(நாட் நம்ம விக்னேஷ்) நான் சொல்றா மாதிரி படிக்கவும்)
//

பழையபடி கஷ்டப்படுத்தாம சிவாஜி ஷ்டைல்ல படிக்கவும் :-)

அம்மா... என்ன வார்த்த சொல்லிட்டேம்மா.. நீ அழறத பார்த்தா என் நெஞ்சுல ரத்தமே வந்துடுமேம்மா... கண்ண தொடச்சுக்கம்மா.. கண்ண தொடச்சுக்கா.

எங்க பாடு.. கை வீசம்மா. கைவீசு..
கடைக்கு போலாம் கைவீசு
முட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவா திங்கலாம் கைவீசு

எனக்கும் அழுகை வருதேம்மா.. நான் என்ன செய்ய :(

rapp said...

//ஹேய் ராப் அண்ட் சென்ஷி யூ பீப்பிள் டெல்லிங்க் மீ ஆல்ஸோ எக்ஸ்பர்ட்டூ இன் திஸ் லேங்க்வேஜ்.. ஓ ஐ ஃப்பீல் ஸோ யங் யார்....//

முத்து யு ரியல் யங் யா, திஸ் சென்ஷி பிரதர் ஒன்லி மீ த டவுட்டிங் வெரி வெரி பிக்கோ பிக் யா :):):)

மணிகண்டன் said...

ராப்,

நான் புதுசா படிக்க அராம்பிச்சபோது உங்க நம்பர் பாத்து பாத்து கடுப்பு வந்தது. அப்புறம் தான் இந்த மக்கள் எழுதறத படிச்சி படிச்சி, உங்க சேவை புரிஞ்சது.

rapp said...

//அம்மா... என்ன வார்த்த சொல்லிட்டேம்மா.. நீ அழறத பார்த்தா என் நெஞ்சுல ரத்தமே வந்துடுமேம்மா... கண்ண தொடச்சுக்கம்மா.. கண்ண தொடச்சுக்கா.
//
அண்ணே, உங்க நெஞ்சுல ரத்தம் வரும்னா, நான் இருபத்து நாலுமணிநேரம் கூட அழறதுக்கு ரெடிண்ணே:):):) (சாவித்திரி வாய்சில் படிக்கவும்)

rapp said...

125

வால்பையன் said...

//சேவை' செய்ய தெரியாது. உப்புமா செய்ய தெரியும், பார்சல் அனுப்பட்டுமா?:):):) //

மீ த எஸ்கேப்பு

rapp said...

//மீ ட்ய்பிங் இன் கூகிள் இன்டிக். டூ டிப்பிகல்டு. யூ ஹவிங் எனி பெட்டெர் ஐய்டியாவு
//

சேம் ப்ளட், நெறைய இருக்கு, ஆனா எனக்கு அதை செய்ரதுக்குக் கூட சோம்பேறித்தனம்:):):)

மணிகண்டன் said...

*****மீ த எஸ்கேப்பு***

ராப் பாவம். நோ எஸ்கேப்பு

rapp said...

//நான் புதுசா படிக்க அராம்பிச்சபோது உங்க நம்பர் பாத்து பாத்து கடுப்பு வந்தது. அப்புறம் தான் இந்த மக்கள் எழுதறத படிச்சி படிச்சி, உங்க சேவை புரிஞ்சது.
//

ஹி ஹி, நீங்க கூகிள் சேட் செய்றதை நிறுத்திட்டு, பதிவுல வந்து அரட்டை அடிங்க :):):)

rapp said...

வால்பையன் அந்த பயம் இருக்கட்டும், இந்த தாக்குதல் எங்கிருந்தும் தொடரலாம்னு நினைக்கிறேன்:):):)

rapp said...

ஓகே, ஒரு ஜீவன் என்னை சாப்பாட்டுக்காக நம்பி இருக்கின்ற காரணத்தால் என்னோட சமையல் வேலைய ஆரம்பிக்கறேன், அப்பாலிக்கா வரேன்:):):)

மணிகண்டன் said...

****** ஓகே, ஒரு ஜீவன் என்னை சாப்பாட்டுக்காக நம்பி இருக்கின்ற காரணத்தால் என்னோட சமையல் வேலைய ஆரம்பிக்கறேன், அப்பாலிக்கா வரேன் ******

ராப் பாவம். நோ எஸ்கேப்பு

சென்ஷி said...

//rapp said...
//அம்மா... என்ன வார்த்த சொல்லிட்டேம்மா.. நீ அழறத பார்த்தா என் நெஞ்சுல ரத்தமே வந்துடுமேம்மா... கண்ண தொடச்சுக்கம்மா.. கண்ண தொடச்சுக்கா.
//
அண்ணே, உங்க நெஞ்சுல ரத்தம் வரும்னா, நான் இருபத்து நாலுமணிநேரம் கூட அழறதுக்கு ரெடிண்ணே:):):) (சாவித்திரி வாய்சில் படிக்கவும்)
//

டேய்.. பாசக்கார பயமக்கா.. 16 பாட்டில் ஆட்டு ரத்தம் பார்சல் வாங்கிட்டு வந்துடுங்கலே... அக்கா அழ அழ நெஞ்சுல சொட்டு சொட்டா ரத்தத்த ஊத்திக்கணும் :):):)

வடகரை வேலன் said...

//rapp said...
//அம்மா... என்ன வார்த்த சொல்லிட்டேம்மா.. நீ அழறத பார்த்தா என் நெஞ்சுல ரத்தமே வந்துடுமேம்மா... கண்ண தொடச்சுக்கம்மா.. கண்ண தொடச்சுக்கா.
//
அண்ணே, உங்க நெஞ்சுல ரத்தம் வரும்னா, நான் இருபத்து நாலுமணிநேரம் கூட அழறதுக்கு ரெடிண்ணே:):):) (சாவித்திரி வாய்சில் படிக்கவும்) //

என்னதிது பாசமலர் டைட்டில மீண்டும் வச்சு ஒரு குறும்படம் எடுக்கலாம் போலருக்கு.

சென்ஷி said...

//rapp said...
ஓகே, ஒரு ஜீவன் என்னை சாப்பாட்டுக்காக நம்பி இருக்கின்ற காரணத்தால் என்னோட சமையல் வேலைய ஆரம்பிக்கறேன், அப்பாலிக்கா வரேன்:):):)
//

நன்றி.. மீண்டும் வருக :)

சென்ஷி said...

//என்னதிது பாசமலர் டைட்டில மீண்டும் வச்சு ஒரு குறும்படம் எடுக்கலாம் போலருக்கு.//

இன்னாது.. எங்க பாசத்துக்கு எல்லை குறும்படம்தானா.. வேலண்ணே வார்த்தைய மாத்திக்குங்க.. நாங்க பெருசா நெடுந்தொடர் யோசிச்சு வச்சுருக்கோம் :)

மங்களூர் சிவா said...

//
rapp said...

நியூ ஹஸ்பன்ட் சிவா, ஆனாலும் ஒரு கமெண்டுல ஒரு வார்த்தயயாவது மாத்தின உங்களின் பங்களிப்பை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன்:):):) என்கிட்டே கருப்பனின் காதலி பிரிவ்யூ ஷோ டிக்கட் இருக்கு, போயிட்டு வந்து விமர்சனம் எழுதறீங்களா:):):)
//

காதலில் விழுந்தேன் படத்துக்கு கூட்டிகிட்டு போனதுக்கே ரெண்டு நாளைக்கு எனக்கு சோறு தண்ணி கட் இதுல இது வேறயா :((((

வடகரை வேலன் said...

//இன்னாது.. எங்க பாசத்துக்கு எல்லை குறும்படம்தானா.. வேலண்ணே வார்த்தைய மாத்திக்குங்க.. நாங்க பெருசா நெடுந்தொடர் யோசிச்சு வச்சுருக்கோம் :) //

ஆமாமா, நெடுந்தொடருக்குத்தான் கதை ஏதும் தேவையில்லை.

சென்ஷி said...

//காதலில் விழுந்தேன் படத்துக்கு கூட்டிகிட்டு போனதுக்கே ரெண்டு நாளைக்கு எனக்கு சோறு தண்ணி கட் இதுல இது வேறயா :((((//

காதலில் விழுந்ததுக்கே இப்படியா :)

சென்ஷி said...

//வடகரை வேலன் said...
//இன்னாது.. எங்க பாசத்துக்கு எல்லை குறும்படம்தானா.. வேலண்ணே வார்த்தைய மாத்திக்குங்க.. நாங்க பெருசா நெடுந்தொடர் யோசிச்சு வச்சுருக்கோம் :) //

ஆமாமா, நெடுந்தொடருக்குத்தான் கதை ஏதும் தேவையில்லை.
//

கதையா.. அப்படின்னா :(

புதசெவி

rapp said...

//டேய்.. பாசக்கார பயமக்கா.. 16 பாட்டில் ஆட்டு ரத்தம் பார்சல் வாங்கிட்டு வந்துடுங்கலே... அக்கா அழ அழ நெஞ்சுல சொட்டு சொட்டா ரத்தத்த ஊத்திக்கணும்//

அண்ணே, எங்க பாட்டி வீட்ல ஆட்டு ரத்தத்தை எடுத்து சமைப்பாங்க:):):)

மோகன் கந்தசாமி said...

என்னங்க ராப்,
எதுக்கு இந்த சீரியஸ் பதிவு? ஏதேனும் சம்பந்தி தகராறா?

கமென்ட்ஸ் இன்னும் படிக்கல, கமெண்ட்ஸ்ல ஏற்கனவே பதில் சொல்லிட்டிங்களா?

வடகரை வேலன் said...

சென்ஷி,

கதை என்பது நெடுந்தொடரில் மாய யதார்த்த வாதம். இருக்கும் ஆனா இல்லை. இல்லாத மாதிரி ஆனா ஏதோ இருப்பது மாதிரி இருக்கும்.

rapp said...

////என்னதிது பாசமலர் டைட்டில மீண்டும் வச்சு ஒரு குறும்படம் எடுக்கலாம் போலருக்கு.//
இன்னாது.. எங்க பாசத்துக்கு எல்லை குறும்படம்தானா.. வேலண்ணே வார்த்தைய மாத்திக்குங்க.. நாங்க பெருசா நெடுந்தொடர் யோசிச்சு வச்சுருக்கோம் :)
////
வேலன் சார், நெடுந்தொடர் மட்டுமா, டிஆர் கருப்பனின் காதலி முடிச்சவுடன், இதை திரைப்படமா எடுக்க அனுமதி கேட்டிருக்கார். வசனம் மட்டும் அவர் பாத்துப்பாராம், கதையை அண்ணன் சென்ஷி வழக்கம்போல (சிம்பிளான கதையை) யாருக்கும் புரியாதமாதிரி எழுதிடுவார், கவுஜ நான் எழுதறேன், மீசிக் ஏ.ஆர்.ரெஹ்மான் :):):)

rapp said...

145

சென்ஷி said...

// rapp said...
//டேய்.. பாசக்கார பயமக்கா.. 16 பாட்டில் ஆட்டு ரத்தம் பார்சல் வாங்கிட்டு வந்துடுங்கலே... அக்கா அழ அழ நெஞ்சுல சொட்டு சொட்டா ரத்தத்த ஊத்திக்கணும்//

அண்ணே, எங்க பாட்டி வீட்ல ஆட்டு ரத்தத்தை எடுத்து சமைப்பாங்க:):):)
//

அண்ணன் வூட்ல அத நெஞ்சுல பூசிக்கிட்டு ரத்தத்த காட்டுவோம். டெர்ரர் பேமிலில்ல :)

வடகரை வேலன் said...

//அண்ணே, எங்க பாட்டி வீட்ல ஆட்டு ரத்தத்தை எடுத்து சமைப்பாங்க:):):)//

எங்க ஊரு SKP ஹோட்டல்ல அது இலவசம்.

rapp said...

//காதலில் விழுந்தேன் படத்துக்கு கூட்டிகிட்டு போனதுக்கே ரெண்டு நாளைக்கு எனக்கு சோறு தண்ணி கட் இதுல இது வேறயா //

ஹே நியூ ஹஸ்பன்ட் சிவா, itz all in the game, cat on the wall

rapp said...

150

rapp said...

150

சென்ஷி said...

//வடகரை வேலன் said...
சென்ஷி,

கதை என்பது நெடுந்தொடரில் மாய யதார்த்த வாதம். இருக்கும் ஆனா இல்லை. இல்லாத மாதிரி ஆனா ஏதோ இருப்பது மாதிரி இருக்கும்.
//

அப்படியா.. நான் கூட நடுவுல நான் வளர்கிறேன் மம்மின்னு ஓடி வர்றதுதான் கதைன்னு நினைச்சேன் :(

சென்ஷி said...

//வடகரை வேலன் said...
//அண்ணே, எங்க பாட்டி வீட்ல ஆட்டு ரத்தத்தை எடுத்து சமைப்பாங்க:):):)//

எங்க ஊரு SKP ஹோட்டல்ல அது இலவசம்.
//

அப்ப நீங்களே சார்ஜாவுக்கு பார்சல் கட்டி அனுப்பிடுங்களேன் :)

இல்லைன்னா ஊருக்கு வந்தாலும் உங்களுக்குத்தான் செலவு :) ஜனவரியில வரலாமுல்ல

சென்ஷி said...

//rapp said...
150
//

இப்படி வூடால பூந்து எங்க பொழப்ப கெடுக்கற தங்கச்சிக்காவுக்கு எதிர்வினை பதிவு போட வேண்டி வரும். அதுல எல்லா கமெண்டையும் நானே போட்டுடுவேன். ஜாக்கிரதை :)

சென்ஷி said...

154

சென்ஷி said...

155

rapp said...

//என்னங்க ராப்,
எதுக்கு இந்த சீரியஸ் பதிவு? ஏதேனும் சம்பந்தி தகராறா?

கமென்ட்ஸ் இன்னும் படிக்கல, கமெண்ட்ஸ்ல ஏற்கனவே பதில் சொல்லிட்டிங்களா?

//

ஹி ஹி இப்போல்லாம் இப்படி ஒரு பதிவ தட்டிவிட்டாத்தான் மோகன் கொஞ்சம் கெத்து, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....................

rapp said...

//கதை என்பது நெடுந்தொடரில் மாய யதார்த்த வாதம். இருக்கும் ஆனா இல்லை. இல்லாத மாதிரி ஆனா ஏதோ இருப்பது மாதிரி இருக்கும்//

சென்ஷி அண்ணன் கூட சேட் செய்தா இப்படித்தான் ஆகும் வேலன் சார். இதுக்கு வைத்தியம் அவரோட பின்நவீனத்துவ பதிவை ஐந்து முறை படிப்பது(அப்புறம்தான் தமிழ் சுத்தமா மறந்திடும்ல):):):):)

rapp said...

//அண்ணன் வூட்ல அத நெஞ்சுல பூசிக்கிட்டு ரத்தத்த காட்டுவோம். டெர்ரர் பேமிலில்ல :)//

அதான் அப்படியே எங்க பாட்டி வீட்டுப் பக்கம் வந்தீங்கன்னா, 'ஆட்டெலும்பும் ரத்தமும்' வெச்சு ஒரு பதார்த்தத்தை யதார்த்தமா செஞ்சிடுவாங்கன்னு சொல்ல வந்தேன் :):):)

வடகரை வேலன் said...

சென்ஷி,

சாட்டுல வாங்க.

rapp said...

//இப்படி வூடால பூந்து எங்க பொழப்ப கெடுக்கற தங்கச்சிக்காவுக்கு எதிர்வினை பதிவு போட வேண்டி வரும். அதுல எல்லா கமெண்டையும் நானே போட்டுடுவேன்.//


சென்ஷி அண்ணே என் கவுஜைக்கு ஒரு எதிர்கவுஜை எழுதிட்டு இந்தப்பேச்சை எல்லாம் இங்க பேசுங்க:):):)

சென்ஷி said...

//rapp said...
//கதை என்பது நெடுந்தொடரில் மாய யதார்த்த வாதம். இருக்கும் ஆனா இல்லை. இல்லாத மாதிரி ஆனா ஏதோ இருப்பது மாதிரி இருக்கும்//

சென்ஷி அண்ணன் கூட சேட் செய்தா இப்படித்தான் ஆகும் வேலன் சார். இதுக்கு வைத்தியம் அவரோட பின்நவீனத்துவ பதிவை ஐந்து முறை படிப்பது(அப்புறம்தான் தமிழ் சுத்தமா மறந்திடும்ல):):):):)
//

அப்படியா.. இது எனக்கு தெரியாம போச்சே. இருங்க எதுக்கும் நான் மறுக்கா நாலு தபா படிச்சு பார்க்குறேன் :)

சென்ஷி said...

//வடகரை வேலன் said...
சென்ஷி,

சாட்டுல வாங்க.
//

வந்தாச்சே :)

rapp said...

//சென்ஷி,

சாட்டுல வாங்க//


ஆஹா, இதோட பாதிப்பு நாளைக்கு வேலன் சார் பதிவுல எக்கச்சக்கமா தெரியுமே, அவ்வ்வ்வ்வ்வ்வ்.............

சென்ஷி said...

//rapp said...
//இப்படி வூடால பூந்து எங்க பொழப்ப கெடுக்கற தங்கச்சிக்காவுக்கு எதிர்வினை பதிவு போட வேண்டி வரும். அதுல எல்லா கமெண்டையும் நானே போட்டுடுவேன்.//


சென்ஷி அண்ணே என் கவுஜைக்கு ஒரு எதிர்கவுஜை எழுதிட்டு இந்தப்பேச்சை எல்லாம் இங்க பேசுங்க:):):)
///

வேணாம். அண்ணன் ஆரம்பிச்சா தமிழ்மணம் தாங்காது :)

சென்ஷி said...

//rapp said...
//சென்ஷி,

சாட்டுல வாங்க//


ஆஹா, இதோட பாதிப்பு நாளைக்கு வேலன் சார் பதிவுல எக்கச்சக்கமா தெரியுமே, அவ்வ்வ்வ்வ்வ்வ்.............
//

ஆமா.. கதம்பத்துல ஒன்றரை முழம் கம்மியாக்கிடுவாரு :)

rapp said...

//அப்படியா.. இது எனக்கு தெரியாம போச்சே. இருங்க எதுக்கும் நான் மறுக்கா நாலு தபா படிச்சு பார்க்குறேன் :)//

நோஓஓஓஓஓஓஓ (இதை அம்பிகா, ஸ்ரீதேவி கால தங்கச்சிகளின் குரலில் வாசிக்கவும்):):):)

சென்ஷி said...

//rapp said...
//அப்படியா.. இது எனக்கு தெரியாம போச்சே. இருங்க எதுக்கும் நான் மறுக்கா நாலு தபா படிச்சு பார்க்குறேன் :)//

நோஓஓஓஓஓஓஓ (இதை அம்பிகா, ஸ்ரீதேவி கால தங்கச்சிகளின் குரலில் வாசிக்கவும்):):):)
//

எனக்கு குரல் முரடு தட்டியிருக்கே. பரவாயில்லையா.. ஏன்னா அம்பிகா, ஸ்ரீதேவி கால தங்கச்சி குரலுக்கு நான் எங்கம்ம்மா போவேன். எங்க போவேன் :(

சென்ஷி said...

சரி.. நான் போய் நாளைய பதிவை ரெடி செய்யறேன்.

டேங்க்ஸ் ஃபார் த கும்மி அலவ்விங்க்

பரிசல்காரன் said...

என்ன கொடுமைங்க இது? மதியம் போட்ட பதிவுக்கு இப்பவே 168ஆ?

ஓக்கே.. மீ த 169ன்னு மட்டும் சொல்லி எஸ்கேப்பிக்கறேன்!

சென்ஷி said...

//பரிசல்காரன் said...
என்ன கொடுமைங்க இது? மதியம் போட்ட பதிவுக்கு இப்பவே 168ஆ?

ஓக்கே.. மீ த 169ன்னு மட்டும் சொல்லி எஸ்கேப்பிக்கறேன்!
//

ஒத்த கமெண்ட போட்டுட்டு ஓடுற பரிசலை கண்டிப்பது
கும்மி நல சங்க நிர்வாக பொறுப்புல எந்த வேலை வெட்டியும் இல்லாதவன் :)

குடுகுடுப்பை said...

me the first ,ஆனா ஏதோ சதி 171னு காமிக்குது

கார்க்கி said...

தாமதத்திற்கு சாரி தலைவி..

கார்க்கி said...

இதுக்குப் பின்னாடி இவ்ளோ பெரியக் கதையா????????????

பினாத்தல் சுரேஷ் said...

லேபிள்கள் அருமை :-)

கோபிநாத் said...

நானும் மீ த பர்ஸ்ட் தான்...(இப்பதான் முதல் முறை வரேன்)

அப்புறம் தல பினாத்தல் சொன்னது போல லேபில் சூப்பரு ;)

பொய்யன் said...

ME THE LAST. PUDHU PADHIVU PODA POREN. APPAPPA VANTHU PAATHUTTE IRUNKA :)

gulf-tamilan said...

176 comments !!!
:((( நல்ல கும்மியா??

SurveySan said...

என்ன கொடுமைங்க இது?


அவனவன், ஒண்ணு ரெண்டு கமெண்ட்டே வராம, கடைய விரிச்சுக்கிட்டு ஈ ஓட்டிக்கிட்டு இருக்கோம். இங்க, பட்டைய கெளப்பிக்கிட்டு இருக்கீங்க?

சில, பின்னூட்டர்களை, பாத்தி கட்டி, நம்ம பதிவுக்கு அனுப்பி விடுங்க, புண்ணியமா போவும் ;)

ambi said...

இப்படி பப்ளிக்கா என்னை போட்டு தள்ளிட்டியேமா? ஏற்கனவே எங்க ஏரியாவுல நிறைய பேரு என் வீட்டு அட்ரஸ் விசாரிச்சுட்டு இருக்காங்க. :))

உங்க பேச்சு வழக்கு நடை எனக்கு ரெம்ப பிடிக்கும். நமக்கு இப்படியெல்லாம் எழுத வருமா?ன்னு பல தடவை வியந்து போயிருக்கேன்.

பின்னூட்டங்கள் ரெம்ப சுவாரசியமா இருக்கு.

பி.கு: இன்னும் மெயில் பாக்ஸ் பாக்கலை, ஜூடான இடுகையிலிருந்து தான் இங்க வாரேன். :))

ambi said...

ஆனது ஆயி போச்சு, மீ தி 180. :))

தாரணி பிரியா said...

இப்ப எதுக்காக பீலீங்ஸ் ஆப் பிரான்ஸ் எல்லாம் விட்டுட்டு இருக்கிங்க. வலைப்பூ மக்களுக்கு தேவை உங்களது சேவை. அதனால தொடரட்டும் உங்க சேவை.

சாரி சாரி உங்களக்கு சேவை செய்ய தெரியாதுன்னு சொன்னிங்கல்ல. சரி சரி தொடரட்டும் உங்க உப்புமா

rapp said...

//கும்மி நல சங்க நிர்வாக பொறுப்புல எந்த வேலை வெட்டியும் இல்லாதவன் :)//

நிர்வாக பொறுப்பு என்னங்கறதை, அண்ணன் பருப்பு அவர்கள் பின்நவீனத்துவ பாணியில் நாளை விளக்குவார், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............................(சென்ஷி அண்ணே, எப்படி நம்ம புதுப் பட்டம்) :):):)

rapp said...

//me the first ,ஆனா ஏதோ சதி 171னு காமிக்குது//
குடுகுடுப்பை, துளசி மேடம் பதிவுல எப்பப்பார்த்தாலும், மீ த பர்ஸ்ட் போட்டு என்னை பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஆக்கறீங்க இல்ல, அதான் இங்க இப்படி செம சதியாகிடுச்சி:):):) பழிக்குப் பழி, எப்படி????????????

rapp said...

//இதுக்குப் பின்னாடி இவ்ளோ பெரியக் கதையா????????????//

கார்க்கி, எங்க வீட்ல 'கிச்சன் எங்க இருக்கு' அப்படிங்கற கேள்விக்குக் கூட, எங்க பூர்வீக கதையிலிருந்து ஆரம்பிச்சித்தான் விஷயத்துக்கு வருவோம், கேட்டவங்க இனி கேள்விங்கர வார்த்தயயே மறந்திடனும்ங்கறது மட்டுமே எங்கக் குடும்ப லட்சியம்:):):)

rapp said...

//லேபிள்கள் அருமை :-)//

சுரேஷ் சார், நீங்களாவது நோட் பண்ணி என் நோக்கத்தை புரிஞ்சிக்கிட்டீங்களே :):):)
இப்படில்லாம் பில்டப் கொடுத்துதான் அப்பப்போ சீசனுக்கு ஏத்த மாதிரி பொழப்ப ஓட்டவேண்டியிருக்கு பாருங்க, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......................:):):)

rapp said...

//நானும் மீ த பர்ஸ்ட் தான்...(இப்பதான் முதல் முறை வரேன்) //

கோபி அண்ணே, இப்படி நெறைய மீ த பர்ஸ்ட் ஆளுங்க வரணும்னுதான் இப்படில்லாம் பில்டப் கொடுக்க வேண்டியிருக்கு, அஆங் :):):)

rapp said...

ரொம்ப நன்றிங்க பொய்யன் :):):)

rapp said...

//நல்ல கும்மியா//

gulf tamilan நீங்கதான் சொல்லணும்:):):)

rapp said...

//என்ன கொடுமைங்க இது?//

அதான, சர்வேசன் சார், நானும் அதையேதான் கேக்குறேன், இங்க நான் மத்தவங்கள ஆறுதல் படுத்தனும்னு பார்த்தா, எல்லாரும் சேர்ந்து கதறக் கதற எனக்கு ஆறுதல் சொல்றாங்களே, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............:):):)

rapp said...

//இப்படி பப்ளிக்கா என்னை போட்டு தள்ளிட்டியேமா? ஏற்கனவே எங்க ஏரியாவுல நிறைய பேரு என் வீட்டு அட்ரஸ் விசாரிச்சுட்டு இருக்காங்க//

அண்ணே, ஏதோ என்னாலான தொண்டு:):):) ஜம்புவை மட்டுமா, நீங்க கன்னாபின்னான்னு உற்சாகப்படுத்தினீங்க, உங்க பதிவுலகத் தொண்டை ஊருக்கு சொல்லவேண்டாமா, அதான் ஆட்டோ சங்கத் தலைவர்களோட வேண்டுகோளுக்கிணங்க நான் இதயெல்லாம் இங்க சொல்லிட்டேன்:):):)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆமாம்ல.. சீரியஸா போட்ட மொக்கைய நான் சீரியஸா படிச்சிட்டு போனேனா..அதனால் அந்த லேபிளை படிக்க விட்டுப்போச்சு..
அதைப்பத்தி பாராட்டிக்கலாம்ன்ன்னு இந்த பின்னூட்டம்.. நல்லாருக்கு லேபிள்.

rapp said...

ஹி ஹி தாரணி பிரியா ரொம்ப நன்றிங்க.

//உங்களக்கு சேவை செய்ய தெரியாதுன்னு சொன்னிங்கல்ல. சரி சரி தொடரட்டும் உங்க உப்புமா//

நான் உப்புமா செய்யத் தெரியும்னு சொன்னேன், ஆனா சாப்டறதுக்கு நல்லா இருக்கும்னு சொன்னேனா, கிட்டத்தட்ட நான் அதை கத்தி கபடா ரேஞ்சுக்கு ஆயுதமா யூஸ் பண்றது வழக்கம் :):):)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

எப்படியோ மீத பர்ஸ்ட் இல்லாட்டியும் மீத 191 ஸ்ட் வந்துட்டென்ப்பா.. ஸ் அப்பாடா.. என்ன பாடுபட வேண்டி இருக்கு..

rapp said...

முத்து, வாட் இஸ் திஸ், சுண்டல் பத்தின அப்டேட்ஸ் எனக்கு கொடுக்கறேன்னு சொல்லிட்டு, இங்க அதை விட்டுட்டு கமென்ட் போடறீங்க. டீட்டெயில்ஸ் ப்ளீஸ்:):):)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

சுண்டலுக்கு கடலை ஊறவைக்கப்பட்டுவிட்டது.. நான்வெள்ளைக்கொண்டக்கடலையை ஊறவைக்க மகளிடம் சொல்லிவிட்டேன்..மாமியார் கொண்டக்கடலையை தேடியதில் கருப்புகிடைத்ததுன்னு அதையே ஊறப்போட்டுட்டாங்க.. நாளை பதிவு போடறேன் கொலுபற்றி...

rapp said...

சனிக்கிழமை பதிவு போடறீங்களா, அப்போ நான் எப்படி கும்மி அடிக்க வர்றதாம், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....................................

rapp said...

கருப்புக்கொண்டைக்கடலை சுண்டல் எனக்கு பேவரிட்

முத்துலெட்சுமி-கயல்விழி said...

மீத 200 த் யாரு போடபோறா தெரியலயே போட்டி போடற கேண்டிடேட் ல ராப் உண்டு தானே? நானில்லைப்பா.. எப்பவும் என் லக் பத்தி எனக்குதெரியுமே..

முத்துலெட்சுமி-கயல்விழி said...

199?

முத்துலெட்சுமி-கயல்விழி said...

200?

«Oldest ‹Older   1 – 200 of 230   Newer› Newest»