Thursday, 2 October 2008

மீ த பர்ஸ்ட்

எல்லோருக்கும் வணக்கம். நான் வலைப்பூக்களில் முதல் முதலில் படிக்க ஆரம்பிச்சது, டுபுக்கு அண்ணாவோட பதிவுதான். மென்மையாக என்னை இழுத்துச் சென்ற நகைச்சுவை ப்ளஸ் நாஸ்டால்ஜியா ஒரே நாளில் அவரோட வலைப்பூவை முழுவதுமாக படிக்க வைத்தது. அவரோட பதிவுகள் படிச்சப்புறம் அதில் வந்த பின்னூட்டங்களை பார்த்து, அழகான கிண்டலோட இருந்த அம்பி அண்ணாவோட பதிவுகளை படிக்க ஆரம்பிச்சேன். எதையுமே ஸ்போர்டிவ்வாக எடுத்துக்கிட்டு ரொம்ப ஜாலியா டீல் பண்ணுகிற இவரோட ஸ்டைல் ரொம்பப் பிடிச்சிது. இவங்க ரெண்டு பேரோட வலைப்பூவும் ரொம்பப் பிடிச்சுப் போய் ஒரு நாளைக்கு எக்கச்சக்க தடவை இவங்களோட தளத்திற்கு சென்று புதுப் பதிவு போட்டிருக்காங்களான்னு பார்ப்பேன்.

அப்புறம் இவர்களோட சில பதிவுகளில் இருந்து வவா சங்கம் பத்தி தெரிஞ்சு அங்கே போய் பார்த்தப்போ வெட்டிப்பயல் அவர்களோட பதிவுகள் ரொம்ப கலக்கலா இருந்தது. அவரோட பெரும்பான்மையான பதிவுகள் படிச்சிருக்கேன். சரி, இப்படிப்பட்ட நகைச்சுவை பதிவுகள் வேறெங்காவது மொத்தமா திரட்டுராங்களான்னு வலையில் தேடினப்போ தமிழ்மணம் பார்த்தேன். அங்கேப் போய் வெறும் நகைச்சுவைப் பதிவுகளை படிக்க ஆரம்பிச்சேன். முதலில் படிச்சது அபி அப்பா வலைப்பூ.

இவங்க எல்லாருமே ஜாலியா கல கலன்னு எழுதிக்கிட்டு இருந்தாங்க. அப்போதான் அம்பி அண்ணாவோட மெயில் ஐடி இருக்கறது பார்த்தேன். தப்பா எதாவது எழுதிடுவேனோங்கர பயத்தோட என்ன எழுதினேன்னு எனக்கே தெரியாத(அதாவது வழக்கம்போல) ஒரு மெயில் அனுப்பினேன். ஆனா ஒரு பத்து நிமிஷத்திலேயே அவர்கிட்டயிருந்து மெயில். அப்புறம் அவர்கிட்ட கேட்டு டுபுக்கண்ணா, அபி அப்பா ஐடி வாங்கினேன்.

என்னோட சிலப் பதிவுகள் நூறு பின்னூட்டங்களுக்கு மேல வாங்கியிருக்கு, சிலப்பேர் என்கிட்டே, அவ்ளோ பெரிய ஆள், அவருக்கு ஏன் இத்தனை பின்னூட்டம் வரலை, இவ்ளோ நல்ல பதிவு நான் இன்னைக்கு போட்டிருக்கேன், இன்னைக்கு எனக்கு இத்தனை பின்னூட்டம் தான் வந்துச்சின்னு கேட்டிருக்காங்க. அதுக்கு பதில் என்னன்னா, நான் பதிவு போட்டவுடன் செய்ற முதல் வேலை, மேலேக் குறிப்பிட்டுள்ள பதிவர்களுக்கு மட்டுமல்லாது, என் பதிவில் வந்து கலகலப்பான, கிண்டலான பின்னூட்டங்கள் இடும் அத்துனை பதிவர்களின் பதிவுகளுக்கும் சென்று "புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க" என்ற டயலாக்கை போட்டுவிட்டு வருவேன். ஆரம்பத்தில் கொஞ்ச நாள் பின்னூட்டம் வேண்டும் என்ற காரணத்தால் செய்தாலும், பின்னர் அவர்கள் பின்னூட்டம் போடாவிட்டாலும் கூடப் பரவாயில்லை, சும்மா படித்தால் கூட போதும் என்ற அளவிலே இதனை தொடர்ந்தேன். இது என்னோட பழக்கம்.

என் பிறந்தநாள் நெருக்கத்தில், என் பிரெண்ட்ஸ் மட்டும் என்றில்லாமல், எனக்குத் தெரிஞ்ச அனைவருக்கும் எஸ்எம்எஸ் அனுப்பியோ, போன் செய்தோ, மெயில் அனுப்பியோ என்னை வாழ்த்தச் சொல்லி கேட்பேன், என் பெற்றோர்,அக்கா, கணவர் உட்பட எல்லோருக்கும் நினைவூட்டிக் கொண்டே இருப்பேன். இன்னும் கணவர் கிட்ட "என் பிறந்தநாள் வர்றதுக்கு இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு, எனக்கு இது வேணும், அது வேணும் அப்படி இப்படின்னு, கவுண்ட்டவுன் கொடுத்துக்கிட்டே இருப்பேன்".
பறக்காவெட்டித்தனமாக இருந்தாலும், அது என் இயல்பு. நான் மறந்துபோகும்போது எனக்கு ஒரு மாதிரி கில்டியாக இருக்கும், ப்ளஸ் எனக்கு பலரிடம் இருந்து வாழ்த்துக்கள் பெற ரொம்பப் பிடிக்கும். இதை வைத்து என் பிரெண்ட்ஸ் கலாய்தால் இன்னும் சந்தோஷமாக இருக்கும். வெகு சிலர் இதனை விரும்புவதில்லை, அப்படிப்பட்டவர்களுக்கு நான் தொல்லை கொடுப்பதில்லை.

அதேப் போல நான் 'மீ த பர்ஸ்ட்' போட ஆரம்பித்தது சும்மா ஜாலிக்காகத்தான். யாரையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கில் அல்ல. ஆரம்பத்தில் அப்துல்லா அண்ணா மற்றும் ச்சின்னப்பையன் பதிவுகளுக்கு மட்டும் போட முயற்சித்து வந்தேன், அதன் பின்னர், நகைச்சுவைப் பதிவுகள் எழுதும் பலரின் பதிவுகளில் போட ஆரம்பித்தேன். பலர் ஜாலியாக எடுத்துக்கொண்டாலும், இது சில சமயங்களில் பதிவர்களின் மனதை காயப்படுத்திவிடுகிறது போன்று தோன்றுகிறது.

நான் எழுதும்போது பேச்சுவழக்கில் எழுதிவிடுகிறேன், அதனால் பலருக்கு வேறொரு அர்த்தத்தில் படலாம். அவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு. நான் எழுதுவது தவறாக தோன்றும்படி இருக்கலாம், காரணம் நான் என் எழுத்தில் உணர்ச்சிகளை கொட்டி எழுதும் திறன் படைத்தவள் இல்லை. என்னுடைய பதிவுகள் எல்லாமே பேச்சு வழக்கிலே இருக்கும், பின்னூட்டங்களும் அவ்வாறே இருக்கும். என் பின்னூட்டங்கள் மற்றும் அதன் தொனி பிடிக்கவில்லை என்றால், அதனை இக்னோர் செய்திடுங்கள், நான் புரிந்துக்கொண்டு பின்னூட்டம் இடுவதை உங்கள் பதிவுகளில் தவிர்த்துவிடுகிறேன்.

நான் இதனை தேவையில்லா இடைவெளியை குறைத்துக் கொள்ளலாம் என்றுதான் பதிவிடுகிறேன். யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்:):):)

டிஸ்கி: நண்பர்களே, உடனே தீபாவளி நாளைக்குங்கற மாதிரி கொண்டாட்டமா ஓட வேண்டாம், அடுத்த பதிவில் இருந்து "புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க" டயலாக் புயலெனக் கிளம்பி வந்து உங்களை தாக்கும். இந்த டயலாக் பார்த்து வந்து தவறாம படிங்க, பட், பின்னூட்டம் போட்டே ஆகனும்னு அவசியமே இல்லை, ஓகே:):):)

கடைசி டிஸ்கி: சமீப காலாமாக கேரெக்டர் ஆர்ட்டிஸ்ட் அவதாரம் எடுத்துள்ள சகலகலா சம்பந்தி அவர்கள் என் பதிவுகளில் நார்மலான பின்னூட்டங்கள் இடுமாறு நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது:):):)

223 comments:

«Oldest   ‹Older   201 – 223 of 223   Newer›   Newest»
முரளிகண்ணன் said...

no no wish for 500.
All the best

சங்கணேசன் said...

//நான் கிட்டத்தட்ட தமிழ்மணத்தில் வர்ற எல்லாப் பதிவுகளும் படிச்சிடுவேன்.//

நாம எழுதுனாலும் படிக்கறதுக்கு ஒரு ஆள் கிடச்சாச்சு...

இருங்க இருங்க..நாங்கதான் இன்னும் எழுதவே அரம்பிக்கலையே..

இப்பவே முன்பதிவு... அவ்வளவுதான்

(படத்திலிருக்கும் ‘குட்டி' யாருங்க?)

King... said...

210...:)

Kathir said...
This comment has been removed by the author.
Kathir said...

//ஆனால் சகோதரர் டுபுக்கு 2004, 2005 களில் நிறைய பயனுள்ள வேவேரானன தலைப்புகளில் பதிவு எழுதி உள்ளார். சில பதிவுகளுக்கு 1பின்னோட்டம் கூட இல்லை.//

kuppan & rapp,

தலைவர் டுபுக்கு 2004, 2005 களில் tamildubukku.blogspot.com எனும் தளத்தில் எழுதி வந்திருக்கிறார். பின்னர் dubukku.blogspot.com க்கு migrate செய்யும் போது அவர் அப்பதிவுகளுக்கான் பின்னூட்டங்களை திரட்டாமல் விட்டு விட்டார் என்று நினைக்கிறேன்.

:))

Kathir

சென்ஷி said...

//rapp said...
நான் இல்லாம இந்தப் போட்டி நடந்துச்சுன்னா கும்மி நிர்வாகத்தோட பருப்பு அண்ணன், ச்சே, பொறுப்பு அண்ணன் போட்டியையே ரத்து பண்ணிடுவாராக்கும்:):):)
//

நான் இதை கன்னாபின்னாவென ஆமோதிக்கிறேன் :)

இவன் said...

me the 214th.... ரொம்ப lateஓஓஓஓஓ??

ஜியா said...

//இது சில சமயங்களில் பதிவர்களின் மனதை காயப்படுத்திவிடுகிறது போன்று தோன்றுகிறது.//

இதுக்குமா?? என்ன உலகமடா இது?? நீங்க அந்த வேலைய தொடர்ந்து பண்ணுங்க... புடிக்காதவங்க இக்னோர் பண்ணிப்பாங்க :)))

கோபிநாத் said...

\\ rapp said...
//நானும் மீ த பர்ஸ்ட் தான்...(இப்பதான் முதல் முறை வரேன்) //

கோபி அண்ணே, இப்படி நெறைய மீ த பர்ஸ்ட் ஆளுங்க வரணும்னுதான் இப்படில்லாம் பில்டப் கொடுக்க வேண்டியிருக்கு, அஆங் :):):)
\\

யக்கா இதெல்லாம் ஒவரு...அவ்வவ்வ்வவ்வ்வ் ;)

கயல்விழி said...

எப்படி இருக்கீங்க ராப்? புது பதிவு போட்டிருப்பதை எனக்கு தெரிவிக்கவில்லையே?? :) :)

நல்லா இருக்கு(வழக்கம் போலவே)

cheena (சீனா) said...

யப்பா - மீ த பர்ஸ்டுக்கு இப்படி ஒரு பதிவா - என்னாச்சு - எங்கே இடறுச்சு - ம்ம்ம்ம்ம் - கவலைப் படாமல் தொடரலாமே

மீ த 218 ஆ ?

Tech Shankar said...

me the 219th...

who is 1000th.

ரவி said...

நான் தான் 220.

ஆன்லன் யூசர் 1.

அது இந்த இள மண்ணு...!!!

ரவி said...

எச்சூஸ்மீ என்ன கொஞ்சம் கொமெண்டு தான் காட்டுது மீதி எங்க ?

ரவி said...

..//Collapse comments///

ஆங் இருக்கு இருக்கு...

ரவி said...

முரளி கண்ணன் நாலு கமெண்டு போட்டிருக்கார்.

ரவி said...

ஏன் ஜி ஒரு கமெண்டோட போயிட்டார் ?

ரவி said...

Comment deleted
This post has been removed by the author.


ஏன் கமெண்டு போடனும் அப்புறம் அதை டெலீட் பண்ணனும் ?

ரவி said...

தாத்தா பாட்டி சவுக்கியமா ?

ரவி said...

நாஷ்டா ஆச்சா ?

ரவி said...

துவரம் பருப்பு கொதிக்கும்போது உப்பு போடனுமா கூடாதா ?

ரவி said...

இந்த சங்க கனேஷன் பதிவு இனிமே படிங்க.

கனேஷா. காப்பாத்துப்பா. (ரஜினி ஸ்டைல்ல படிங்க)

ரவி said...

ஒய்ப்புக்கு மாத்திரை தரனும் நான் போறேன்...

«Oldest ‹Older   201 – 223 of 223   Newer› Newest»