என்னை இந்தத் தொடருக்காக அழைத்த முரளிக்கண்ணன் அவர்களுக்கும், முத்துலெட்சுமி கயல்விழி அவர்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி:):):)
1 - அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
நான் பிறக்கறத்துக்கு முன்ன இருந்தே வீட்ல டிவி இருந்ததால ரொம்ப சின்னக் குழந்தைல இருந்தே சினிமா பாக்க ஆரம்பிச்சிட்டேன். எனக்கு நியாபகம் இருக்கறது, தலைவரோட பராசக்தி படம்தான். அப்போல்லாம் எங்க தெருவில் எங்க வீட்ல மட்டும்தான் டிவி இருந்ததால, நெறயப் பேர் டிவி பார்க்க வருவாங்க. பராசக்திக்காக, பொதுவா வராத சிலப் பேர் கூட வந்திருந்தாங்க. நான், குழந்தையை ஆத்துல போடும் சீனைப் பார்த்து நிஜம்னு நினைச்சு, 'பே'ன்னு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி, படத்தோட முக்கியமான கோர்ட் காட்சியை யாரையும் பாக்க விடாம செஞ்சிட்டேன். இன்னும்கூட சிலப்பேர் அதை நியாபகம் வெச்சிக்கிட்டு என் கஷ்டத்தை குறைப்பாங்க(என்னக் கஷ்டம்னா, நானா ஏதாவது யோசிச்சு கடுப்பேத்துறத்துக்குள்ள தானே கடுப்பாகிடுவாங்க)
1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
தியேட்டர்லன்னு வெச்சுக்கலாம். கணபதிராம் தியேட்டர்னு அடையார்ல ஒரு சரித்திரப் புகழ்வாய்ந்த தியேட்டர் இருக்கு இல்லையா, அங்கதான் ராஜாதி ராஜா பார்த்தேன். எங்க மாமா தாத்தா(அத்தைப் பாட்டி மாதிரி) வீட்டு விசேஷத்துக்கு போகனும்னு, அங்க வர விருப்பமில்லாத கசின்சோட என்னையும் சேர்த்து படத்துக்கு அனுப்பிட்டாங்க(நான் அங்க வந்தா தொந்தரவு கொடுப்பேனாம்!!!) சோகமா போன நான் அப்டியே செம ஜாலியாகிட்டேன். இவ்ளோ பேரோட படம் பாக்கறோம்ங்கற பீலே குஷியாக்கிடுச்சி. கொஞ்ச நாளில திருப்பி நான் தொந்தரவு கொடுத்ததால அபூர்வ சகோதரர்கள் கூட்டிட்டு போனாங்க(அதே தியேட்டர்). அதுல குள்ள கமல் சாரை நிஜமாகவே வேற ஒரு ஆள்னு ரொம்ப நாள் நினைச்சுக்கிட்டு இருந்தேன்:):):) இதுல ஸ்பெஷாலிட்டி என்னன்னா, ரெண்டுமே டபுள் ஆக்ஷன் படங்கள்.
1 - இ. என்ன உணர்ந்தீர்கள்?
வேற என்ன, விசிலடிக்கறதுங்கறது ஒரு தனி கலை. சின்ன வயசுலயே அதை கத்துக்க சரியான குரு கெடைக்கலன்னா இருபத்து நாலு வயசானாலும் தேற முடியாதுங்கற உண்மையைத்தான்.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
பீமா, மாயாஜால் தியேட்டரில் பார்த்தது. இந்த வருஷம் ஆரம்பத்துல (ஜனவரி) இந்தியா வந்திருந்தப்ப நானும் என் ரங்கமணியும் போனோம். அங்க பிரிவோம் சந்திப்போம், பீமா ரிலீசாகி இருந்துச்சி. பிரிவோம் சந்திப்போம்ல குத்துப் பாட்டு இல்லைங்கறதால, என் ரங்கமணி வர மாட்டேன்னுட்டார். சரின்னு பீமா போனோம்.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
என் பழக்கமே, வீட்ல ஏதாவது ஒரு படம் போட்டு விட்டுட்டு வலையில் சுத்திக்கிட்டு இருக்கறதுதான். இன்னைக்கு கடைசியா கர்ணன் போட்டுட்டு சுத்திக்கிட்டு இருந்தேன். படம் சூப்பர், ஆனா ஏன் தோல்விப்படமா ஆச்சுன்னு சிலக் காரணங்கள் தோனுச்சி. எல்லாருக்கும் ஒரு மினி பூதம் கணக்கா மேக்கப் போட்டு, உடம்பை கொஞ்சம் குறைக்கச் சொல்லாம, கர்ணனை விட அவர் மனைவி புஜபல பராக்கியாமச்சாலியாக தெரியறது, திருவிளையாடல், கந்தன் கருணை மாதிரி ஒரு புளோ இல்லாம, குட்டிக்கதைகளா(நோ கற்பனை ஓட்டம் பிளீஸ்) எடுத்திருக்கறது, முக்கியமா 'ப' வரிசைப் பீல் குட் செண்டிமெண்ட் படங்களுக்கு டிமான்ட் எகிறனப்போ ஹீரோ சாகிறாமாரி காட்னதுன்னு(மகாபாரதம்தான்,ஆனா டைமிங் முக்கியமில்ல சினிமாக்கு) எக்கச்சக்க காரணங்கள் தோனுச்சி. (சரி, நஷ்டத்தை சரிக் கட்ட எடுத்த பலே பாண்டியா எப்டி ஓடுச்சின்னு யாராவது பின்னூட்டத்துல சொல்லுங்களேன்). புதுப்படம்னா, சரோஜா. சூப்பரா இருந்தது. நான் கிட்டத்தட்ட பிரேம்ஜியும் மிர்ச்சி சிவாவும் கலந்தக் கலவை(அதப் பத்தி ஒரு தனிப் பதிவே போடறேன்)
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
நல்ல தம்பி(என்.எஸ்.கே), பசி, அன்பே சிவம், கண்ட நாள் முதல், மொழி, சென்னை 28, மகளிர் மட்டும், சந்தியா ராகம், முதல் மரியாதை, பாமா விஜயம், நரசிம்மா.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?
சம்பவம் நடந்தப்போ நான் பிறக்கலைன்னாலும் லக்ஷ்மிகாந்தன் கொலைவழக்கும், கீழே இருக்குற வழக்கும் இன்னிவரைக்கும் என்னை ரொம்ப அட்ராக்ட் பண்ணிக்கிட்டு இருக்கு.
எம்.ஆர். ராதா சார் எம்.ஜி.ஆரை சுட்டது. அச்சம்பவம் எப்படி, மதுரை முத்து ரேஞ்சில கட்சில இருந்தவரை வேறு தளத்திற்குக் கொண்டுசென்றது, அந்த சமயத்தில் அது எப்படி செம பரபரப்பாக பேசப்பட்டிருக்கும்ங்கற ஒருவித திரில், அதுக்குப் பின்னணியா சொல்லப்படற ரெண்டு முக்கியக் காரணங்கள், சம்பவத்திற்கு அப்புறம் ராதா சார் அடிச்ச கமெண்ட்ஸ், கேஸ்ல வாதாடுனது எங்க நெருங்கின உறவினர், இப்படி பலக் காரணங்கள் உண்டு. இன்னொரு சோகமான விஷயம் இந்த ஒரு சம்பவத்தாலே, அவ்ளோ பெரிய திறமைசாலிக்கு பெரிய அளவுல வெளிப்படையா அரசாங்கம் எந்த மரியாதயுமே செய்ய முடியாமப் போனது.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
ரெண்டு அபூர்வ சகோதரர்களும் என்னை ரொம்ப பிரம்மிக்க வெக்கும். (எம்.கே.ராதா நடிச்சது)அந்தக் காலக்கட்டத்துலயே, நமக்கு உறுத்தாம ரெட்டை வேஷத்தை அழகா எடுத்திருப்பாங்க (எல்லாத்தையும் வெச்சுக்கிட்டு ஷங்கர் ஜீன்ஸ் எடுத்து எரிச்சல்படுத்தினாரே:(:(:()புது அபூர்வ சகோதரர்கள் அப்பு கமலும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
கண்ல படற அத்தனை சினிமா சம்பந்தப்பட்ட நியூசும் வாசிப்பேன். மொதோ மொதோ படிச்சது குமுதம்ல வர்ற லைட்ஸ் ஆன்தான்னு நினைக்கறேன். கிசுகிசு ரொம்பப் பிடிக்கும். நம்ம சினிமா கிசுகிசு மட்டும்தான் கொஞ்சமாவது விடை தெரியும்.
7. தமிழ்ச்சினிமா இசை?
இதைப்பத்தி நான் ஒரு தனிப்பதிவே போட்டிருக்கேன்.
எங்கம்மா எனக்கு பாடுன தாலாட்டே சினிமாப் பாட்டுங்கதான். ஆனா அப்புறம் ஒரு காலத்துல நான் இல்லாத பியூரிட்டான் வேல செஞ்சுக்கிட்டு இருப்பேன். வெறும் கர்நாட்டிக் மியூசிக் பாடறது, கேக்குறதுன்னு. மினி சைஸ் அவ்வையார் மாதிரி கொடுமைப் பண்ணுவேன். அப்புறம் அது தானா ஒம்போது பத்து வயசானப்போ சரியாகி, இப்போ தமிழ்ல சினிமாப் பாட்டைத்தவிர வேறெதுவும் கேக்குறதில்லை.
என்னைப் பொறுத்தவரை தமிழ் சினிமா இசைக்கு மூணு கோல்டன் பீரியட் இருந்துச்சு. முதல் பீரியட் ஐம்பதுகளின் இறுதியில் இருந்து, அறுபதுகளின் இறுதிவரை ஒரு காலக்கட்டம், எண்பதுகள் முழுசா, இன்னொரு காலக்கட்டம், தொன்னூத்தி ரெண்டுல இருந்து தொன்னூத்தி ஏழுவரைக்கும் அடுத்த காலக் கட்டம். மத்ததெல்லாம் அவ்ளோ பிடிக்காது, காரணம், ஒண்ணு, கதாநாயகன், நாயகி கொடுமயாத் தோன்றும் காலக்கட்டம்(திரிசூலம், உரிமைக்குரல், ஜக்கம்மா ரேஞ்ச் படங்கள்), இன்னொன்னு யார் இசையமைச்சிருக்காங்கன்னு தெரிஞ்சிக்கும் ஆவல் கூட தோணாத மாதிரி ஒரு பீரியட்:(:(:(
8. அ. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?
படத்துக்கு நான் மொழியே பாக்கறதில்லை. தெலுங்கு கிருஷ்ணா படங்கள் குழந்தையா இருக்கறச்சே பார்த்தது. அப்புறம் ஷங்கர் நாக் இறந்தப்போ அவர் படம் ரெண்டு மூணு பாத்திருக்கேன். ஹிந்தி படம் நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து பாக்கறேன். ஞாயிறு மதியம் போடற பெங்காலிப் படங்கள் ஒன்னு ரெண்டு பாத்து கொஞ்சநாள் மிதுன் பிடிச்சிருந்தது. அதே நேரத்தில் போடும் மலையாளப் படங்களைப் பார்த்து வெறுத்துப்போயி இனி மலையாளப் படமே பாக்கைக் கூடாதுன்னு நெனச்சிருந்தேன், அப்புறம் எங்கக்கா பாதிப்புல பாக்க ஆரம்பிச்சு இப்போ நெறைய பாக்கறேன். ஹாலிவுட் படங்கள் பாக்க ஆரம்பிச்சது வில்ஸ்மித் பைத்தியம் புடிச்சு அலஞ்சதால. இப்போ நெறைய பிரெஞ்சுப் படங்கள் பாக்கறேன். பிரெஞ்சு சினிமாக்கள் மிக மிக வித்தியாசமான தளங்களை மிக வித்தியாசமா டீல் செய்வது ரொம்ப நல்லா, பிரஷா இருக்கு.
8. ஆ. அதிகம் தாக்கிய படங்கள்?
தெலுங்குல ஷிவா,பிரேமா, தொலி பிரேமா
மலையாளம்ல இன் ஹரிஹர் நகர், காட்பாதர், akale, பிரியதர்ஷன் சார் படங்கள்.
ஹிந்தில ஜங்க்லீ, shree 420, அனாரி, பாவர்ஜி, பாதோன் பாதோன் மே, பியா கா கர், கட்டா மீட்டா, சாத் சாத், guddi,கபி ஹான் கபி நா, ஹெச்ஏஹெச்கே, டிடிஎல்ஜே.
ஹாலிவுட்ல எனக்கு தெரிஞ்சதெல்லாம் ரொமாண்டிக் காமடி வகைகளும், பாண்டசி வகைகளும் மட்டும்தான், அதால ரொம்ப ரொம்பப் பிடிச்சப் படங்கள் மட்டும் சொல்றேன். Independence Day, Bridget Jones' Diary (ரெண்டு பாகமும்), when harry met sally, monster in law, how to lose a guy in 10 days, what a girl wants, jingle all the way இப்படிப்பட்ட படங்கள்தான்.
பிரெஞ்சுல நான் பார்த்தவரை எனக்குப் பிடிச்சது டேனி பூனின் Bienvenue chez le ch'tis, La Maison du bonheur மற்றும் Louis de Funèsஇன் அனைத்து படங்களும். நெஞ்சைத் தொட்டு மனசை லேசாக்கும் காமடிக்கு முன்னவர் படங்க, லாஜிக் இல்லாமல், சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்களையும், அவலங்களையும், விநோதங்களையும் வித்தியாசமானக் காமடியோடு கூறுவது பின்னவர் படங்கள்(உதாரணத்திற்குக் கூறவேண்டுமானால் இதேப் போல இருக்கும்).
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
நெறயப் பேரை தெரியும்(அவங்களுக்கும் என்னைத் தெரியும்), அப்பாவோட ஸ்டூடண்ட்ஸ் பாதிப்பேர், மீதிப்பேர் நண்பர்களாவோ உறவினர்களாவோ இருக்கறதால, அவங்க எதிர்ல சீன் போட்டு பொழப்பு நடத்தறதே பெரும்பாடு. தெரிஞ்சவங்க எல்லாரும் மிக மிக நல்ல நிலைமையில் இருப்பதால், அவங்களை தொந்தரவு பண்ணாம இருக்கறதே பெரும் சேவைன்னு நினைக்கறேன். நான் உப்புமா கிண்டி ஏதாவது ஆகிடுச்சுன்னா:(:(:(ஆனா ரொம்ப மனசைக் கஷ்டப்படுத்துற ஒரே ஒருத்தர் எங்கப்பாவோட பால்யகால நண்பர் பாடலாசிரியர் சிதம்பரநாதன் அவர்கள்தான்:(:(:(
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கலக்கலா இருக்கும்னு நினைக்கறேன். காப்பி அடிச்சு எடுத்தாலும் அழகா எடுக்கணும். வெங்கட்பிரபுவ நக்கல் அடிக்கறவங்க குசேலனை நினைச்சுப் பாக்கணும். வெங்கட்பிரபு, அமீர், பூபதி பாண்டியன், ராதா மோகன்னு சூப்பர் ஆளுங்க இருக்காங்க:):):) ரீமேக் மற்றும் ரீமிக்ஸ் மேனியா போச்சுன்னா ரொம்ப நிம்மதியா இருக்கும்.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
மத்த மொழிப்படங்களைப் பார்ப்பேன். சினிமால நான் மொழி பாக்கறதில்லை. அதால பெருசா போரடிக்காது. எக்கச்சக்கமா, சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் வரும். வழக்கம்போல ஆற்காட்டார் 'தயவிருந்தா', ஏதாவது நாடகம், இசை சம்பந்தமான நிகழ்ச்சிகள், கைவேலைப்பாடுகள், விளையாட்டுகளில் பொழுதுபோக்குவோம். சினிமா அடிக்ஷன் இப்போ பெரும்பான்மையா இருக்கிறா மாதிரி தெரியலை. அப்புறம் நாம இதை ஒரு பெரிய வரலாறா மாத்தி, அடுத்த தலைமுறைக்கிட்ட என்னமோ எமர்ஜென்சி பீரியட் கணக்கா பில்டப் கொடுக்கலாம். எனக்கு வருத்தம்னா, அடிமட்ட மக்கள் சிறிது நேரமாவது ஆனந்தமாக தங்களை மறந்து பொழுதை கழிக்கும் விஷயம் திரைப்படம்(குறிப்பாக திரையரங்குகளில்). திரைப்படத்துறையை நம்பி இருக்கறவங்க மாதிரியே இவங்களும் பாதிப்படைவாங்கன்னு நினைக்கறேன்.
நான் இதைத் தொடர அழைப்பது,
அப்துல்லா அண்ணா.
அம்பி அண்ணா.
மங்களூர் சிவா.
சஞ்சய் .
எஸ்கே .
தருமி அவர்கள்.
இவன்.
Subscribe to:
Post Comments (Atom)


318 comments:
«Oldest ‹Older 201 – 318 of 318 Newer› Newest»-
SK
said...
-
-
16 October 2008 at 4:41 am
-
புதுகை.அப்துல்லா
said...
-
-
16 October 2008 at 4:42 am
-
விஜய் ஆனந்த்
said...
-
-
16 October 2008 at 4:42 am
-
SK
said...
-
-
16 October 2008 at 4:42 am
-
SK
said...
-
-
16 October 2008 at 4:43 am
-
rapp
said...
-
-
16 October 2008 at 4:44 am
-
விஜய் ஆனந்த்
said...
-
-
16 October 2008 at 4:44 am
-
கார்க்கிபவா
said...
-
-
16 October 2008 at 4:44 am
-
விஜய் ஆனந்த்
said...
-
-
16 October 2008 at 4:46 am
-
புதுகை.அப்துல்லா
said...
-
-
16 October 2008 at 4:46 am
-
கார்க்கிபவா
said...
-
-
16 October 2008 at 4:46 am
-
SK
said...
-
-
16 October 2008 at 4:46 am
-
விஜய் ஆனந்த்
said...
-
-
16 October 2008 at 4:47 am
-
கார்க்கிபவா
said...
-
-
16 October 2008 at 4:47 am
-
SK
said...
-
-
16 October 2008 at 4:47 am
-
வெண்பூ
said...
-
-
16 October 2008 at 4:47 am
-
MyFriend
said...
-
-
16 October 2008 at 4:48 am
-
விஜய் ஆனந்த்
said...
-
-
16 October 2008 at 4:48 am
-
SK
said...
-
-
16 October 2008 at 4:50 am
-
rapp
said...
-
-
16 October 2008 at 4:50 am
-
SK
said...
-
-
16 October 2008 at 4:51 am
-
SK
said...
-
-
16 October 2008 at 4:52 am
-
SK
said...
-
-
16 October 2008 at 4:53 am
-
கார்க்கிபவா
said...
-
-
16 October 2008 at 4:54 am
-
கார்க்கிபவா
said...
-
-
16 October 2008 at 4:55 am
-
வால்பையன்
said...
-
-
16 October 2008 at 5:31 am
-
வால்பையன்
said...
-
-
16 October 2008 at 5:48 am
-
வால்பையன்
said...
-
-
16 October 2008 at 5:48 am
-
வால்பையன்
said...
-
-
16 October 2008 at 5:49 am
-
இவன்
said...
-
-
16 October 2008 at 6:06 am
-
rapp
said...
-
-
16 October 2008 at 6:10 am
-
rapp
said...
-
-
16 October 2008 at 6:11 am
-
மணிகண்டன்
said...
-
-
16 October 2008 at 7:14 am
-
Sanjai Gandhi
said...
-
-
16 October 2008 at 7:16 am
-
மணிகண்டன்
said...
-
-
16 October 2008 at 7:18 am
-
Sanjai Gandhi
said...
-
-
16 October 2008 at 7:19 am
-
மணிகண்டன்
said...
-
-
16 October 2008 at 7:20 am
-
வெண்பூ
said...
-
-
16 October 2008 at 7:21 am
-
வால்பையன்
said...
-
-
16 October 2008 at 7:21 am
-
வெண்பூ
said...
-
-
16 October 2008 at 7:22 am
-
மணிகண்டன்
said...
-
-
16 October 2008 at 7:22 am
-
மணிகண்டன்
said...
-
-
16 October 2008 at 7:24 am
-
மணிகண்டன்
said...
-
-
16 October 2008 at 7:29 am
-
சின்னப் பையன்
said...
-
-
16 October 2008 at 9:05 am
-
சின்னப் பையன்
said...
-
-
16 October 2008 at 9:06 am
-
அரவிந்த்
said...
-
-
16 October 2008 at 10:56 am
-
கோபிநாத்
said...
-
-
16 October 2008 at 11:59 am
-
கோபிநாத்
said...
-
-
16 October 2008 at 12:00 pm
-
கோபிநாத்
said...
-
-
16 October 2008 at 12:03 pm
-
ILA (a) இளா
said...
-
-
16 October 2008 at 12:37 pm
-
ILA (a) இளா
said...
-
-
16 October 2008 at 12:38 pm
-
குடுகுடுப்பை
said...
-
-
16 October 2008 at 12:41 pm
-
குடுகுடுப்பை
said...
-
-
16 October 2008 at 12:42 pm
-
rapp
said...
-
-
16 October 2008 at 12:55 pm
-
rapp
said...
-
-
16 October 2008 at 12:55 pm
-
rapp
said...
-
-
16 October 2008 at 12:56 pm
-
rapp
said...
-
-
16 October 2008 at 12:56 pm
-
rapp
said...
-
-
16 October 2008 at 12:57 pm
-
rapp
said...
-
-
16 October 2008 at 12:57 pm
-
rapp
said...
-
-
16 October 2008 at 1:01 pm
-
rapp
said...
-
-
16 October 2008 at 1:01 pm
-
rapp
said...
-
-
16 October 2008 at 1:02 pm
-
rapp
said...
-
-
16 October 2008 at 1:02 pm
-
சரவணகுமரன்
said...
-
-
16 October 2008 at 9:45 pm
-
rapp
said...
-
-
16 October 2008 at 10:29 pm
-
சந்தனமுல்லை
said...
-
-
17 October 2008 at 12:21 am
-
SK
said...
-
-
17 October 2008 at 2:39 am
-
SK
said...
-
-
17 October 2008 at 5:51 am
-
கயல்விழி
said...
-
-
17 October 2008 at 3:46 pm
-
பரிசல்காரன்
said...
-
-
17 October 2008 at 7:21 pm
-
பரிசல்காரன்
said...
-
-
17 October 2008 at 7:24 pm
-
பரிசல்காரன்
said...
-
-
17 October 2008 at 7:26 pm
-
பரிசல்காரன்
said...
-
-
17 October 2008 at 7:28 pm
-
பரிசல்காரன்
said...
-
-
17 October 2008 at 7:29 pm
-
பரிசல்காரன்
said...
-
-
17 October 2008 at 7:29 pm
-
MyFriend
said...
-
-
17 October 2008 at 7:30 pm
-
பரிசல்காரன்
said...
-
-
17 October 2008 at 7:30 pm
-
MyFriend
said...
-
-
17 October 2008 at 7:30 pm
-
MyFriend
said...
-
-
17 October 2008 at 7:30 pm
-
பரிசல்காரன்
said...
-
-
17 October 2008 at 7:31 pm
-
MyFriend
said...
-
-
17 October 2008 at 7:31 pm
-
பரிசல்காரன்
said...
-
-
17 October 2008 at 7:31 pm
-
MyFriend
said...
-
-
17 October 2008 at 7:31 pm
-
MyFriend
said...
-
-
17 October 2008 at 7:32 pm
-
பரிசல்காரன்
said...
-
-
17 October 2008 at 7:32 pm
-
MyFriend
said...
-
-
17 October 2008 at 7:32 pm
-
பரிசல்காரன்
said...
-
-
17 October 2008 at 7:32 pm
-
பரிசல்காரன்
said...
-
-
17 October 2008 at 7:33 pm
-
MyFriend
said...
-
-
17 October 2008 at 7:33 pm
-
பரிசல்காரன்
said...
-
-
17 October 2008 at 7:34 pm
-
MyFriend
said...
-
-
17 October 2008 at 7:34 pm
-
பரிசல்காரன்
said...
-
-
17 October 2008 at 7:35 pm
-
MyFriend
said...
-
-
17 October 2008 at 7:35 pm
-
பரிசல்காரன்
said...
-
-
17 October 2008 at 7:36 pm
-
பரிசல்காரன்
said...
-
-
17 October 2008 at 7:37 pm
-
பரிசல்காரன்
said...
-
-
17 October 2008 at 7:37 pm
-
பரிசல்காரன்
said...
-
-
17 October 2008 at 7:38 pm
-
பரிசல்காரன்
said...
-
-
17 October 2008 at 7:38 pm
-
தமிழன்-கறுப்பி...
said...
-
-
19 October 2008 at 8:44 am
-
தமிழன்-கறுப்பி...
said...
-
-
19 October 2008 at 8:44 am
-
தமிழன்-கறுப்பி...
said...
-
-
19 October 2008 at 8:46 am
-
தமிழன்-கறுப்பி...
said...
-
This comment has been removed by the author.
-
19 October 2008 at 8:48 am
-
தமிழன்-கறுப்பி...
said...
-
-
19 October 2008 at 8:50 am
-
தமிழன்-கறுப்பி...
said...
-
-
19 October 2008 at 8:51 am
-
Anonymous
said...
-
-
19 October 2008 at 10:54 am
-
அமிர்தவர்ஷினி அம்மா
said...
-
-
20 October 2008 at 2:37 am
-
coolzkarthi
said...
-
-
22 October 2008 at 5:21 am
-
சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்)
said...
-
-
23 October 2008 at 6:12 am
-
மொக்கைச்சாமி
said...
-
-
23 October 2008 at 8:19 am
-
Arizona penn
said...
-
-
24 October 2008 at 10:06 am
-
rapp
said...
-
-
24 October 2008 at 11:53 am
-
ALIF AHAMED
said...
-
-
24 October 2008 at 1:39 pm
-
MyFriend
said...
-
-
25 October 2008 at 4:18 am
-
Vidhya Chandrasekaran
said...
-
-
29 October 2008 at 3:09 am
-
கார்க்கிபவா
said...
-
-
29 October 2008 at 4:41 am
-
அரவிந்த்
said...
-
-
1 November 2008 at 2:45 am
-
Sanjai Gandhi
said...
-
-
2 November 2008 at 12:27 am
-
நசரேயன்
said...
-
-
6 November 2008 at 6:06 am
«Oldest ‹Older 201 – 318 of 318 Newer› Newest»// ச்சே அண்ணிக்கெல்லாம் வேண்டாம் எனக்கு மட்டும் போதும் ஹி...ஹி...ஹி.. //
:-) :-) :-) :-)
திரும்ப ஜெயிச்ச ராப் அவர்களை என்ன செய்யலாம்னு நாட்டாமை தீர்ப்பு எழுதுங்க .-)
//
பேசாம நம்ப ஆற்காட்டாரை பிரான்சுக்கு மின்சார அமைச்சராக்கிட வேண்டியதுதான்
இது இப்படியே போச்சுன்னா Blogger record ஆயிடும்னு நெனக்கிறேன்...
வீர தீர கலைவாணி
வலையுலகின் யுவராணி
கும்மி சங்க மகராணி
கருத்து காமாட்சி ராப் ராணி
பராக் பராக் பராக்..
:-) :-) :-)
எப்படி இது எல்லாம் உங்களால மட்டும் முடியுது :-)
// இது இப்படியே போச்சுன்னா Blogger record ஆயிடும்னு நெனக்கிறேன்... //
எதை சொல்லுறீங்க விஜய் ஆனந்த்.
இன்றைய கும்மியவா இல்லை அவுங்க தொடர்ந்தது அதிகார 200 யா
தொடர்ந்து பிரான்ஸ் நாட்டை வீழ்த்த திட்டம் தீட்டும் அண்ணனை கன்னாபின்னாவென கண்டிக்கறேன்:):):)
// கார்க்கி said...
வீர தீர கலைவாணி
வலையுலகின் யுவராணி
கும்மி சங்க மகராணி
கருத்து காமாட்சி ராப் ராணி //
ஆப்பீஜர்...ஹாட்டா ஒரு எதிர் கவுஜ கார்க்கிக்கு பார்சேல்ல்ல்...
இல்லப்பா உருப்படாதது ஒரு தடவ 400 அடிச்சாரு
// கார்க்கி said...
இல்லப்பா உருப்படாதது ஒரு தடவ 400 அடிச்சாரு //
அதான் சகா...இதே ரேட்ல போச்சுன்னா record break ஆயிடும்னு சொன்னேன்...
ஓ.கே நான் கிளம்புறேன் பை பை
என்ன எல்லாம் அப்பீட்டா? ஒரு கவ்ஜைக்கு காணோம். இன்னும் ஸ்டாக் இருக்குப்பா
// இல்லப்பா உருப்படாதது ஒரு தடவ 400 அடிச்சாரு //
அப்போ ராப்பால அது முடியாது சொல்லுரீங்கள
என்னடா இது தலைவிக்கு வந்த சோதனை. :-)
// புதுகை.அப்துல்லா said...
ஓ.கே நான் கிளம்புறேன் பை பை //
நானும் அபீட்டிக்கறேன்...
கும்மிய கலைச்சுட்டு அப்படியே ஃபிரியா இருக்கறவங்க என் வீட்டு பக்கம் வாங்க.. எனக்கு ஆசை இருக்காதா? ஒரு தடவ கூட 90யே அடிச்சது இல்ல
அண்ணே
உங்க தங்கைக்கு எதிரா பேசற கார்க்கிக்கு எதாவது பதில் சொல்லிடு போங்க :-) :-)
//
1 – 200 of 222 Newer› Newest»
//
இதெல்லாம் ஆகுறதில்ல.. இந்த கும்மியா?
ஒரு சின்ன நியூஸ்.. நாங்கெல்லாம் ஏற்கனவே 3000+ அடிச்சிருக்கோம். :-)
இந்த பதிவை அந்த அளவுக்கு கொண்டு வர நீங்க முயற்சிங்க இன்னைக்கு. :-) வாழ்த்துக்கள்.
:-)
// கார்க்கி said...
கும்மிய கலைச்சுட்டு அப்படியே ஃபிரியா இருக்கறவங்க என் வீட்டு பக்கம் வாங்க.. எனக்கு ஆசை இருக்காதா? ஒரு தடவ கூட 90யே அடிச்சது இல்ல //
90, 100, 200-லாம் அ்டிக்கணும்னா கொஞ்சம் செலவாவும்...பரவால்லயா???
யாரது திருப்பூர் காரரு வந்து இருகர போல இருக்கு .-)
இங்க கும்மியோ கும்மி அடிச்ச, அடிக்கிற மை பிரெண்ட், சென்ஷி அண்ணன், முத்து, அப்துல்லா அண்ணன், எஸ்கே, கார்க்கி, நியூ பாதர் விஜய் ஆனந்த், வெண்பூ, இவங்க எல்லாருக்கும் நன்றியோ நன்றி:):):)
// ஒரு சின்ன நியூஸ்.. நாங்கெல்லாம் ஏற்கனவே 3000+ அடிச்சிருக்கோம். :-) //
என்னது 3000 பின்னோட்டமா .-)
// இங்க கும்மியோ கும்மி அடிச்ச, அடிக்கிற மை பிரெண்ட், சென்ஷி அண்ணன், முத்து, அப்துல்லா அண்ணன், எஸ்கே, கார்க்கி, நியூ பாதர் விஜய் ஆனந்த், வெண்பூ, இவங்க எல்லாருக்கும் நன்றியோ நன்றி:):):) //
இப்படி எல்லாம் நன்றி சொன்ன ஒதுக்க மாடோம்,
தனி தனிய கெட்ட கேள்விக்கு எல்லாம் பதில் வரணும். இது தான் சொந்த வுடுளையே 100 மற்றும் 200 போட்ட உங்களுக்கு நாட்டமை தீர்ப்புன்னு இப்போ தான் மெயில் செஞ்சாரு
// இதெல்லாம் ஆகுறதில்ல.. இந்த கும்மியா? //
:-) :-) :-)
//
90, 100, 200-லாம் அ்டிக்கணும்னா கொஞ்சம் செலவாவும்...பரவால்லயா???//
பரவாயில்லப்பா..
//நியூ பாதர் விஜய் ஆனந்//
அப்படியா??????????
//மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
நரசிம்மா.//
ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி
ரொம்ப உணர்ச்சிபூர்வமா இருக்கு
சாப்பாடும் சினிமாவும் தான் உங்க வாழ்க்கை போல
240
நான் கொஞ்சம் லேட்டோ?? பரவாயில்லை 241... ஹி ஹி ஹி
ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், வால்பையன் புக்ஸை விட்டுட்டீங்களே:):):) ஆனா இந்த மூணுமே ஹாபிதான், பொழப்பு கருத்து சொல்றது. சொந்தக் காசில் சூனியம் வெச்சுக்கும் கருத்துப்போலீசாக்கும் நான்:):):)
இவன், சீக்கிரம் உங்க பதிவை எதிர்ப்பாக்கரேன்:):):)
ராப்,
கொஞ்சம் ஒழுங்கா எழுதிக்கிட்டு வந்தாலும் உங்களாலயே உங்கள கன்ட்ரோல் பண்ண முடியல. "நரசிம்மா" செலக்ட் பண்ணினத சொல்லறேன். புத்தி ஒரு கால்மணி நேரம் நேரா சிந்திச்சாலும், அப்பப்ப பராக் பாக்க ஆரம்பிச்சுடும் போல இருக்கு.
பதிவை அப்புறம் படிக்கிறேன்.. எவ்ளோ பெரிய பதிவு? :((
***** படத்துக்கு நான் மொழியே பாக்கறதில்லை ***
வேற எதுக்கு மொழி பாப்பீங்க ?
அட ங்கொக்க மக்கா.. 245 பின்னூட்டங்களா?
இதுல ஒருத்தராவது ஒருமுறையாவது பதிவை படிச்சி இருக்கிங்களா? :(
****** எனக்கு வருத்தம்னா, அடிமட்ட மக்கள் சிறிது நேரமாவது ஆனந்தமாக தங்களை மறந்து பொழுதை கழிக்கும் விஷயம் திரைப்படம்(குறிப்பாக திரையரங்குகளில் *****
ஆஹா ! என்ன சமுதாய பொறுப்புணர்வு உங்களுக்கு ராப் உங்களுக்கு !
//
இதுல ஒருத்தராவது ஒருமுறையாவது பதிவை படிச்சி இருக்கிங்களா?
//
எல்லாரும் பாத்துகோங்க.. இதுல இருந்தே இவரு படிக்காம பின்னூட்டம் போடுவது நிருபணம் ஆகிவிட்டது யுவர் ஆனர்...
//இதுல ஒருத்தராவது ஒருமுறையாவது பதிவை படிச்சி இருக்கிங்களா? :( //
ஒருத்தராவது சரி, அது என்ன ஒரு முறையாவது
நீங்க எத்தனை முறை படிப்பிங்க
ஆஹா.. நாந்தான் 250.. எல்லாரும் பாத்துகோங்க.. பாத்துகோங்க..
****** பொதுவா வராத சிலப் பேர் கூட வந்திருந்தாங்க. நான், குழந்தையை ஆத்துல போடும் சீனைப் பார்த்து நிஜம்னு நினைச்சு, 'பே'ன்னு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி, படத்தோட முக்கியமான கோர்ட் காட்சியை யாரையும் பாக்க விடாம செஞ்சிட்டேன் *****
நல்லது தான பண்ணி இருக்கீங்க ! இதுல ஏன் மக்கள் கடுப்பாவாரங்க !
************ 1 - அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
நான் பிறக்கறத்துக்கு முன்ன இருந்தே வீட்ல டிவி இருந்ததால ******
உங்க வீட்டுல எப்ப டிவி வாங்கினாங்கன்னு யாரு கேட்டாங்க !
************* பிரிவோம் சந்திப்போம்ல குத்துப் பாட்டு இல்லைங்கறதால, என் ரங்கமணி வர மாட்டேன்னுட்டார் ****************
அவர்கிட்ட குத்துப்பாடு இருக்குன்னு சொல்லி அழைச்சிகிட்டு போக வேண்டியது தான ! நான் கூட என்னோட நண்பன் ஒருத்தன "மோக முள்" படத்துக்கு சூப்பர் ! படம்ன்னு சொல்லி அழைச்சிகிட்டு போனேன். படம் ஆரம்பிச்ச உடன "கமலம் பாத கமலம் " ன்னு பாட்ட கேட்டு அவன் மூஞ்சி போன போக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு !
ஓ மை காட்... மீ த 256த்....
இவ்ளோ பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் பதிவா??????? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... தூக்கம் வருது படிச்சி முடிக்கறதுக்குள்ளே.....
Me the 257..
2+5 = 7..
ippa enna seiveenga..
259 :)
260 :)
ஆமா பதிவு போட்டிங்கல்ல!!!...மறந்துட்டேன் பாருங்க...பதிவு அருமை ;)
\\1 - இ. என்ன உணர்ந்தீர்கள்?
வேற என்ன, விசிலடிக்கறதுங்கறது ஒரு தனி கலை. சின்ன வயசுலயே அதை கத்துக்க சரியான குரு கெடைக்கலன்னா இருபத்து நாலு வயசானாலும் தேற முடியாதுங்கற உண்மையைத்தான்.
\\
;)) தம்பிங்க நாங்க இருக்கோம்...கவலையை விடுங்க ;)
இன்னும் நீங்க நிறுத்தலையா? சீக்கிரம் முடிங்கப்பா..
அட பதிவ படிக்கனுமாமே? படிச்சுட்டு வர்றேன்.
உங்க படம் நல்லா இருக்கு ஒரு வருடம் ஓடும்போல இருக்கு 264 நாள் ஒடிடுச்சு.
//இருபத்து நாலு வயசானாலும் தேற முடியாதுங்கற உண்மையைத்தான்.//
எப்படி இப்படியெல்லாம்
//கொஞ்சம் ஒழுங்கா எழுதிக்கிட்டு வந்தாலும் உங்களாலயே உங்கள கன்ட்ரோல் பண்ண முடியல. "நரசிம்மா" செலக்ட் பண்ணினத சொல்லறேன்//
நெஜமாவே என்னை அந்தப்படம் ரொம்ப பாதிச்சுதுங்க மணிகண்டன். என்னைக்கூட விடுங்க, அந்தப் படத்தோட டைரெக்டரே, பட டப்பிங் அப்போ பார்த்து விபத்துல சிக்கி நிலைமை விபரீதமாகிடுச்சி:(:(:( படத்தில் gaptain நெகத்தை பிச்சித் துப்பறதென்ன, கரண்டுக்கே ஷாக்கடிக்க வெக்கறதென்ன, சாதா கண்ணை நொள்ளக்கண்ணாக்கி குளோஸ் அப் ஷாட்ஸ் வெக்கிற தெகிரியம் என்ன, சிகரம் வெச்சாப்போல ஒரு கிளைமேக்ஸ் என்ன? கதறிட்டேன் போங்க, என்னவோ மகாநதியப் பத்தில்லாம் பேசறாங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......................
//வேற எதுக்கு மொழி பாப்பீங்க ?//
எதுக்கும் மொழி கன்சிடர் பண்ண மாட்டேன்:):):)
//உங்க வீட்டுல எப்ப டிவி வாங்கினாங்கன்னு யாரு கேட்டாங்க !//
பதிவ படிச்சா, அனுபவிக்கனும், ஆராயக் கூடாது:):):)
//அவர்கிட்ட குத்துப்பாடு இருக்குன்னு சொல்லி அழைச்சிகிட்டு போக வேண்டியது தான //
எனக்கு சேரனைப் பார்க்க பிடிக்கலை.
//இதுல ஒருத்தராவது ஒருமுறையாவது பதிவை படிச்சி இருக்கிங்களா?//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சஞ்சய் கம்பெனி ரகசியத்தை உங்க வாயாலயே ஏன் வெளியிடறீங்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................
//எல்லாரும் பாத்துகோங்க.. இதுல இருந்தே இவரு படிக்காம பின்னூட்டம் போடுவது நிருபணம் ஆகிவிட்டது யுவர் ஆனர்//
வெண்பூ, ரெண்டு நாளா ஒவ்வொருத்தரா டர்ன் போட்டு ஒன்னொன்னா நிரூபிக்கறீங்க போலருக்கே?:):):)
//தூக்கம் வருது படிச்சி முடிக்கறதுக்குள்ளே//
ச்சின்னப்பையன், இப்படில்லாம் பில்டப் கொடுத்தா நீங்க படிச்சீங்கன்னு ஆகிடுமா, அஸ்கு புஸ்கு:):):)
//Me the 257..
2+5 = 7..
ippa enna seiveenga..//
அரவிந்த் ஏன் இந்தக் கொலைவெறி, நீங்க எப்டின்னாலும் 258வதுதான்.
//மறந்துட்டேன் பாருங்க...பதிவு அருமை //
கோபி அண்ணே, ரொம்ப ரொம்ப நன்றிண்ணே, இவ்ளோ பெரிய பதிவப் போட்டாலே மறக்கறீங்களே, நான் மத்தவங்க மாதிரி நார்மல் பதிவு போட்டா என்னாகுறது நிலைமை?
//தம்பிங்க நாங்க இருக்கோம்...கவலையை விடுங்க //
தம்பிங்களா, இது என்ன புது வார்த்தை? இதுக்கு என்னா அர்த்தம்? கேக்கவே நாராசமா இருக்கே:):):)
//அட பதிவ படிக்கனுமாமே? படிச்சுட்டு வர்றேன்//
நான் அப்படி சொன்னேனா இளா, இப்படில்லாம் அபாண்டமா குற்றச்சாட்டு கூறாதீங்க:):):)
//எப்படி இப்படியெல்லாம்//
இதுக்கு பேரு நாசுக்கு. அப்படியாவது கோபி அண்ணனும், சென்ஷி அண்ணனும் நிருத்துவாங்கன்னு பார்த்தா, ம்ஹூம்:):):)
274
275:):):)
பூபதி பாண்டியன்!!!
:-))
சரவணக்குமரன் பூபதி பாண்டியன் ஒரு நல்ல மசாலாப் பட இயக்குனரா மிளிர்ந்துக்கிட்டு வருகிறார். பேரரசு எவ்ளோ கொடுமப்படுத்தறார், என்னையே கவுஜாயினி ஸ்டேஜ்ல இருந்து டைரடக்கர் ஆக்கிடுவார் போலருக்கு. சோ, இப்போ ஒரு நல்ல மசாலாப் பட இயக்குனர் வேணும், என்னைப் பொறுத்தவரை வெங்கடேஷை விட, சுராஜை விட ரவிக்குமாரை விட, பூபதி பாண்டியன் கலக்குறார்:):):)
//நான், குழந்தையை ஆத்துல போடும் சீனைப் பார்த்து நிஜம்னு நினைச்சு, 'பே'ன்னு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி, படத்தோட முக்கியமான கோர்ட் காட்சியை யாரையும் பாக்க விடாம செஞ்சிட்டேன்.//
ஹஹ்ஹா!!
கலக்கீட்டிங்க ராப் வழக்கம் போலவே!
//ராஜாதி ராஜா // இதிலேதானே ரஜினி கௌதமி குட்டீஸ்-க்கு பாட்டுலே கதை சொல்லுவாங்க?!
//வெறும் கர்நாட்டிக் மியூசிக் பாடறது, கேக்குறதுன்னு. மினி சைஸ் அவ்வையார் மாதிரி கொடுமைப் பண்ணுவேன்//
கர்னாட்டிக் மியூசிக் தெரியுமா? தெரிஞ்சதான் பாடனுமானு சொல்லாதீங்க..ஒரு பொது அறிவுக்கு கேட்டேன்! :-)
//அப்புறம் நாம இதை ஒரு பெரிய வரலாறா மாத்தி, அடுத்த தலைமுறைக்கிட்ட என்னமோ எமர்ஜென்சி பீரியட் கணக்கா பில்டப் கொடுக்கலாம்//
ROTFL!!
செம கலக்கல் ராப்!!
// இதிலேதானே ரஜினி கௌதமி குட்டீஸ்-க்கு பாட்டுலே கதை சொல்லுவாங்க?! //
இல்லீங்க அது ராஜ சின்ன ரோஜா.
இன்னும் 21 பின்னோட்டம் போட என்னோட யாரு எல்லாம் தயாரா இருக்கா ??
Me the last????
கயல்விழி said...
Me the last????//
NO!
rapp..
பெருமையா இருக்கும்மா. எவ்ளோ மனுஷங்களை சம்பாதிச்சு வெச்சுருக்கீங்க!
சரவணக்குமரன் பூபதி பாண்டியன் ஒரு நல்ல மசாலாப் பட இயக்குனரா மிளிர்ந்துக்கிட்டு வருகிறார். பேரரசு எவ்ளோ கொடுமப்படுத்தறார், என்னையே கவுஜாயினி ஸ்டேஜ்ல இருந்து டைரடக்கர் ஆக்கிடுவார் போலருக்கு. சோ, இப்போ ஒரு நல்ல மசாலாப் பட இயக்குனர் வேணும், என்னைப் பொறுத்தவரை வெங்கடேஷை விட, சுராஜை விட ரவிக்குமாரை விட, பூபதி பாண்டியன் கலக்குறார்:)
// SK said...
போன பின்னோடதுக்கும்
அடுத்த பின்னோட்டம் போடறதுக்கும் நடுவுலே பத்து பின்னோட்டம் விழுது //
இல்லியே...
இன்னும் 15! முடியுமான்னு தெரியல.
கஷ்டம்தான்.. இருந்தாலும் ராப்-புக்காக கஷ்டப்படலாம்...
// பரிசல்காரன் said...
இன்னும் 15! முடியுமான்னு தெரியல.//
நான் கைக்கொடுக்கவா? :-)
வெண்பூ மாதிரி யாராவது 300-ன்னு அடிச்சு வெச்சுகிட்டு ஒக்கார்ந்திருப்பாங்களோன்னு பயம்ம்ம்ம்மா இருக்கு!
காலை வணக்கம் ராப் மற்றும் பரிசலண்ணா
பரிசலண்ணா.. 300 இன்னைக்கு உங்களுக்குதான்.. ;-)
கவலைப்படாதீங்க.
யாருமே இல்லாத கதையில யாருக்குடா டீ ஆத்துற-ன்னு கேக்கப்படாது...
//கயல்விழி said...
Me the last????//
இன்னும் இல்லம்மா. :-)
ஆஹா.. ஃப்ரெண்டு.. வந்துட்டீயளா! வெரிகுட்டு!
//பரிசல்காரன் said...
யாருமே இல்லாத கதையில யாருக்குடா டீ ஆத்துற-ன்னு கேக்கப்படாது...//
நான் கேட்க்கமாட்டேன்.. எனக்கு ஒரு க்லாஸ் ஆத்துங்க. :-)
// பரிசல்காரன் said...
ஆஹா.. ஃப்ரெண்டு.. வந்துட்டீயளா! வெரிகுட்டு!//
இன்னும் 3தான்.. ஜமாய்ங்க. ;-)
//:: மை ஃபிரண்ட் ::. said...
//கயல்விழி said...
Me the last????//
இன்னும் இல்லம்மா. :-)//
அவ்ளோ சீக்கிரம் முடிச்சுடுவோமா நாங்க?
இன்று 300 அடிக்கப்போகும் பரிசலண்ணாக்கு எல்லாரும் ஜோரா கைத்தட்டுங்க பார்க்கலாம். :-)
இது எத்தனையாவது?
நான் தான் 300ஆ?
//பரிசல்காரன் said...
நான் தான் 300ஆ?//
சூப்பர்.. நீங்களேதான்.. ;-)
//.:: மை ஃபிரண்ட் ::. said...
இன்று 300 அடிக்கப்போகும் பரிசலண்ணாக்கு எல்லாரும் ஜோரா கைத்தட்டுங்க பார்க்கலாம். :-)//
சீரியஸா சொல்றேன்..
உங்க இடத்துல வேற யாரு இருந்திருந்தாலும் விட்டிருக்க மாட்டாங்க. க்ரேட் யா!
300 அடிக்க திணறிய அண்ணாசுக்கு ஹெல்ப் பண்ண வந்தேன்.. இப்போ கெளம்புறேன். பை பை. :-)
மை ஃப்ரெண்டு..
இத கின்னஸூக்கோ, லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸுக்கோ அனுப்பலாம் போலிருக்கே...
// பரிசல்காரன் said...
//.:: மை ஃபிரண்ட் ::. said...
இன்று 300 அடிக்கப்போகும் பரிசலண்ணாக்கு எல்லாரும் ஜோரா கைத்தட்டுங்க பார்க்கலாம். :-)//
சீரியஸா சொல்றேன்..
உங்க இடத்துல வேற யாரு இருந்திருந்தாலும் விட்டிருக்க மாட்டாங்க. க்ரேட் யா!//
எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா? ஹீஹீ..
விடைப்பெறுகிறேன்..
உங்கள்,
.:: மை ஃபிரண்ட் ::.
நமக்கெல்லாம் போஸ்ட் தான் Older, Newer காமிக்கும். ராப்புக்கு பின்னூட்டமே அப்படிக் காமிக்குதே..
ராப்..
எப்போ ட்ரீட்?
நானும்
பை..பை!!
ஏற்கனவே சர்வேசன் வெறுத்துப் போய் ஒரு பதிவு போட்டுட்டாரு....
முதல்ல யாரு 100, 200 அடிச்சா-ங்கறது முக்கியமில்ல. கடைசில வந்து யாரு 300 அடிச்சா-ங்கறதுதான் முக்கியம்!!!
கலக்குறிங்க ராப்...
312
கலகலன்னு பதிவெழுதறிங்க...:)
\\
நான் கிட்டத்தட்ட பிரேம்ஜியும் மிர்ச்சி சிவாவும் கலந்தக் கலவை(அதப் பத்தி ஒரு தனிப் பதிவே போடறேன்)
\\
அதான் பதிவுகளை பாத்தாலே தெரியுதே...;)
மறுபடியும்...
கலக்கறிங்க ஆப்பீஸர்...:)
யப்பா எவ்ளோ பெரிய பதிவு. ஆனாலும் நல்லா இருக்குங்க. ஏன் கேப்டன் மேல உங்களுக்கு இவ்வளவு காண்டு?
சினிமா உலகின் ஜீனியஸ் போல இருக்கே நீங்கள் பதில் சொன்ன விதம்.
அதுவும் M.R. ராதா /MGR . எனக்கு கூட இதன் பின்னணி தெரிந்துக்கொள்ள மிகவும் ஆவல்.
அப்புறம் அது தானா ஒம்போது பத்து வயசானப்போ சரியாகி
"முற்றி"லும் சரியாகிவிட்டதா.
படா சோக்கா கீதுப்பா....
அட தெய்வமே! இப்படி ஒரு நல்ல ப்திவையும் விட்டு வைக்கிறது இல்லையா?
இப்படியா அடிப்பாயிங்க கும்மி! :)
யக்கோவ், ச்சின்னப்பையன் உங்களை "me the first" போட விடாம சதி செஞ்சத கண்டிச்சி ஒரு பின்னூட்டம் போட்டுட்டேன்... ஆங்...
http://www.boochandi.com/2008/10/blog-post_23.html
நீ நிஜமாவே ஷங்கர் நாக் படம், பெங்காலி படம் எல்லாம் பார்த்தியா?? சும்மா பீலா தானே??? நானாவது குஜராத்தி படம், மராத்தி படம், சத்யஜித்ராய் படம், அசாமி படம், மணிப்பூரி படம், கொங்கிணி படம்னு ஒரு வரைமுறையே இல்லாம ஸ்டேட் வித்தியாசம் பாக்காமே எல்லா படமும் பாப்பேன்...நீ வெறும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, இங்கிலீஷ் மட்டும் தானே பாப்பே???
ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், கும்மியோ கும்மியா:):):) எஸ்கே, பரிசல்காரன் மற்றும் மை பிரேண்டிற்கு ரொம்ப ரொம்ப நன்றி:):):)
ரொம்ப நன்றிங்க சந்தனமுல்லை:):):)
ரொம்ப நன்றிங்க கயல்விழி:):):)
ரொம்ப நன்றிங்க தமிழன்:):):)
ரொம்ப நன்றிங்க வடகரைவேலன்:):):)
ரொம்ப நன்றிங்க அமிர்தவர்ஷிணி அம்மா:):):)
ரொம்ப நன்றிங்க கூல்ஸ்கார்த்தி :):):)
ஹி ஹி, ரொம்ப நன்றிங்க சுடர்மணி:):):)
ஆமாங்க மொக்கைச்சாமி, நானும் பார்த்தேன். ரொம்ப நன்றிண்ணே:):):)
யேய் பாவி, விஜி சித்தி வீட்லயே ஒரு படம் பாத்தோமே. அப்புறமும் வீட்டுக்கு வந்தப்போ ஒரு படம் பாத்தேன்(சனிக்கிழமை காலைல அப்போ ஒரு படம் போடுவாங்களே). என்னால மறக்கவே முடியாதப் படம் பிச்சைகாரனா மிதுன் நடிச்ச படம். என்னை கொடுமைப்படுத்தி பாக்க வெச்சிட்டு, பேச்சப்பாரு:):):)
http://pravagam.blogspot.com/2007/07/blog-post_05.html
3211 பின்னுட்டங்களை பார்க்க இங்கே செல்லவும்
நீதி : இன்னும் முயற்சி தேவை :)
//மின்னுது மின்னல் said...
http://pravagam.blogspot.com/2007/07/blog-post_05.html
3211 பின்னுட்டங்களை பார்க்க இங்கே செல்லவும்
நீதி : இன்னும் முயற்சி தேவை :)//
ரிப்பீட்டேய்... ;-)
சிஸ்டர், தொடர்பதிவிற்கு உங்களையும் கூப்பிட்டுருக்கேன். டைம் இருக்கும்போது இங்க வாங்களேன். http://vidhyascribbles.blogspot.com/2008/10/blog-post_23.html.
உங்களுக்காத்தான் இந்தப் பதிவேப் போட்டேன்.. மரியாதையா வந்து மீ த லாஸ்ட்டாவது போடுங்க..
http://www.karkibava.com/2008/10/blog-post_26.html
Me the first
(November 1st)...
ஐயோ... ஐயோ..
ஆகட்டும்.. ஆகட்டும்...
அடுத்தது யாருப்பா...
என்னை இந்தத் தொடருக்காக அழைத்த "மீ த ராப் " "பெரியக்கா மலேசியா மாரியாத்தா மைஃப்ரண்ட் " என் பாசமலர் "பின்னவீணத்துவ சுனாமி ஸ்ரீமதி " ஆகியோருக்கு கொலைவெறியுடன் ஆளுக்கு ஒரு நன்றி ):):)
http://podian.blogspot.com/2008/11/blog-post.html
நான் 330.
படிச்சுட்டு அப்புறமா ஒன்னு போடுவேன்
Post a Comment