1) கொய்யாலக்கா, கொய்யாலக்கா, சக்சேனாவா சன் பிக்சர்சான்னு பாடறளவுக்கு, ஒரே ஆனந்தக்கூத்தாடுது மனசு. அயன் படத்தோட புரோமோஷனுக்கு, ஷங்கர் மாதிரி ட்ரூலி பாரின் டைரடக்கர(அதாவது முடிஞ்சளவுக்கு நமக்குத் தெரிஞ்ச பாரின் படங்களாப் பாத்து மட்டுமே காப்பியடிக்கிறவர்) எல்லாம் செவுள்லப் போட்டுத் தூக்கியாந்து, உக்காத்திவெச்சு, 'அந்தப் படத்த இப்டிக்காப் பாத்தப்பவே ஒரு பீலிங், அப்டிக்கா பாக்கும்போது சீலிங் பேனுக்கே விசிறின பீலிங், ஆஹா ஒவ்வொரு மனுஷனுக்கும் எத்தனப் பீலிங்கு'ன்னு வெற்றிகரமா பொலம்ப வெச்ச தெறமைக்கே மத்திய சென்னைய தாரைவார்க்கலாம்.
பொதுவா அஜீத் விஜய், சிம்பு படங்கள கொஞ்சூண்டு பாத்தாலே, விஜயகாந்த் படத்துல, அவரு வல்லவரு நல்லவரு வடிக்கட்டுன (உத்த)மருன்னு நாலஞ்சு சீரியல் ஆர்ட்டிஸ்டை விட்டு பேச வெச்சு டிராஜடியையும் காமடியாக்குவாங்கள்ல, அதுல சீரியல் ஆர்ட்டிஸ்டுக்கு பதிலா இவங்களப் போட்டு டிராஜடி சீனை, கிரைம் இல்லைன்னா சயன்ஸ் பிக்ஷன் ஆக்கனும்னு தோணும். அதையே இப்போ சன் பிக்சர்ஸ் இன்னொரு விதத்துல பண்ணிக்கிட்டு இருக்கு. சீக்கிரமே மணிரத்தினம், ராஜீவ் மேனன், கவுதம் மேனன் மாதிரியாப்பட்ட டாபர் பாய்சயெல்லாம், புத்தம் புதுசாக் கெளம்பி, தான் ஹீரோவா நடிச்ச படத்தால கானகத்த கிடுகிடுக்க வெச்ச டாக்டர். இராமோடப் புதுப் படங்களைப் பத்தி பாராட்டி பேச வெக்கனும்னு அழகிரி அண்ணனை அடம்பிடிக்க சொல்லணும்.
2) இனிமேட்டு நான் ஷாப்பிங் போக மாட்டேன்.
பிரியாணியேத் திங்க மாட்டேன்.
எங்கயும் பராக்குப் பாக்க மாட்டேன்.
தப்புதப்பா போட்டோ எடுத்துட்டு, பாலுமகேந்திராவே சொல்லிருக்கார், மனித முகம் இல்லாதப் புகைப்படம் மண்ணுக்கு சமம்னு, அதாலத்தான் வானவில்லை விட்டுட்டு, பக்கத்துல நிக்கிற தாத்தாவ படம் புடிச்சேன்னு சொல்லமாட்டேன்.
பீட்சாவுக்கு மாவை அரமணிநேரத்துக்கு முன்ன பெசஞ்சிட்டு, ஹ்யுமிடிட்டி பத்தலைன்னு ஏதாச்சும் பேத்த மாட்டேன்.
தமிழ் பண்பாடு, ஹிந்து, கலாச்சாரம் அப்டி இப்டின்னு இஷ்டத்துக்கு புருடா விடாம, போர்க் பிடிக்காது, அதால சாப்டமாட்டேன்னு இங்கிருக்க நண்பர்கள்கிட்ட உண்மையச்சொல்வேன்.
தமிழைத் தமிழா எழுதுவேன்.
கடைக்குப் போனா பிரெஞ்சுத் தெரியாத டூரிஸ்ட் மாதிரியே சீன் போட்டு கடக்காரங்கள சாவடிக்க மாட்டேன்.
அம்மா தேர்தல்ல ஜெயிச்சா என்னென்னமோ வாங்கித் தருவேன்னு சொன்னதை நம்புறவங்க, மேலே சொன்னதையும் நம்பிடனும்.
3)ஆண்டவா, பன்னிக் காய்ச்சல்லருந்து(ஒன்னுக்குள்ள ஒன்னுதான) கூடக் காப்பாத்த வேணாம், ஆனா இந்த நசுங்கின கொசுக்களோட இம்சைலருந்து ஜாமீனாவது வாங்கிக் கொடுன்னு கதறனும் போலருக்கே.
இந்தத் தமிழ்'குடி'தாங்கி ஐ(ஜ)யா தொல்லையத் தாங்க முடியல. இத்தன நாளா தயாநிதி, கலாநிதியப் பாத்து பொதுமக்களுக்கு பாதகமில்லாமப் பொறாமையில பொசுங்கிக்கிட்டுக் கெடந்தாரு. இப்ப என்னடான்னா, முழுசா வேகறத்துக்கு முன்னயே குதிச்சு வந்துட்டு, ஸப்பாஆஆ........
தயாநிதி காப்பி வித்த அனுவோட நிகழ்ச்சியில வந்தா, இவரு போட்டிக்கு புள்ளயாண்டான் கண்ணாலம் கட்டினக் கதைல குடும்பத்தை கோத்துவுடறார். அன்புமணி தனக்கு பால விவாகம் நடந்துட்டதா பொலம்பினது காலக் கொடுமைன்னா, பேட்டி முழுக்க தான் பேசுனதுல தானே டபுள் மீனிங் கண்டுப்பிடிச்சி அதத் திருத்துனதுதான், கொடும இன்பினிட்டி. இதுவரைக்கும் மத்தவங்களைத்தான் இப்டில்லாம் பேசுவாங்க, அப்புறம் எங்கப் புரியாமப் போய்டுமோன்னு திருத்துறாப்டி இன்னும் தெளிவாக்குவாங்க, ஆனா இவரு தன் குடும்பத்துக்கே இப்டி ஆப்படிக்கிறாரே.
4)பொதுவாவே பாராளுமன்றத் தேர்தல்னா, இந்தத் தொழிலதிபருங்க தொல்லையத் தாங்க முடியாது. இந்தவாட்டியும் ஆரூண்லருந்து, சரத்பாபு வரைக்கும் இந்தியாவ வல்லரசாக்குறக் க்யூ நீண்டுக்கிட்டே போகுது. எப்டியோ தமிழ்நாட்ல 'லாட்ரி' அடிக்காம இருந்தா சரி. ஒருவகைல இவங்களையும் பாராட்டனும், தேர்தல் மூலமா பாராளுமன்றம் போக முயற்சி பண்றாங்களே.
5)பழைய தூர்தர்ஷன் நாட்களை எண்ணி ஏக்கம் கொள்பவர்கள், அந்த ஏக்கமே முத்தி, செவ்வாய்க்கிழமை நாடகத்தைக் கூட சிலாகிக்கிறவங்களுக்கு ஒரு நற்செய்தி. ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில், காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் இரண்டரை மணிநேர தூர்தர்ஷன் ஸ்பெஷல் செவ்வாய்க்கிழமை நாடகம் சென்ற மாதம் வெளியிடப்பட்டுள்ளது. நாடகத்தின் பெயர், ஆனந்தத் தாண்டவம். சுஜாதா என்ற எழுத்தாளரை பலதரப்பட்ட சினிமாக் கலைஞர்கள் கூட்டாக இயங்கி பழி தீர்க்கும் கதை.
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
மீ த ஃபஷ்டு
2,3,5 டாப்பு.. 5 செம்ம.. முதல் பகுதி கொஞ்சம் தெளிவா எழுதியிருக்கலாம். மண்டையை பிச்சுக்கிட்டேன்.
:)))))
முதல் இது எனக்கும் விளங்கல..சரி நமக்கு என்னைக்கு அரசியல் விளங்கி இருக்குன்னு விட்டுட்டேன் :)
ரேப் அய்யா,
ஆ மஞ்ச துண்டு கோட்டானா?மூஞ்சியைப் பாத்தா திராவிட உடும்பு மாதிரி அல்லவா இருக்குது?குழப்பம்.
பாலா
ரெண்டாவது சூப்ப்பர்...:)
1,3,4,5 சூப்பர். ரெண்டாவ்து சூப்பரோ சூப்பர். என்னா சரளமான நடை.
பின்னிட்டீங்க ராப்
2 வது தூளு.
ரொம்ப டென்சன் போல!!!..விடுங்கோவ் ;)
பதிவுக்கு ஒரு கோனார் உரை கொடுங்களேன், உங்களுக்கு மெரினா பீச்சில சிலை வைக்கிறேன்
எல்லாத்தையும் சகட்டுமேனிக்கு கலாய்ச்சிருக்கிங்களே!
இந்தியாவுல இல்லைங்கிற தைரியமா?
வாக்குறுதில அம்மாவ தோக்கடிச்சிட்டீங்க!!
:)))))))
Post a Comment