Tuesday 7 October, 2008

என்டிடிவியில் என்னை பார்த்தீங்களா?

டிஸ்கி: பதிவு இம்மாம் பெர்சா இருக்கேன்னு வழக்கம்போல கடைசீப் பத்திக்குப் போய், அத வெச்சு ஒப்பேத்தி அட்டெண்டன்ஸ் போடும் அன்பர்களுக்கு, கருப்பனின் காதலி பட பிரிவ்யூ ஷோ டிக்கட் கூரியரில் அனுப்பப்படும் என்பதை பேரானந்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


இதோட முதல் பாகம் இங்கே, ரெண்டாவது பாகம் இங்கே.


அங்கப் போனா விவாதத்துல கலந்துக்கற மாதிரி ஒரு மூஞ்சியும் காணோம். அப்போதான் முழு நம்பிக்கை வந்துச்சி, இங்க நிஜமாவே விவாதம் நடக்கப்போகுது, வந்த போன்கால் எல்லாம் யாரும் எங்களை பல்பு வாங்க வெக்க செஞ்ச சதியில்லைன்னு. ஏன்னா என் பின்னணி அப்படி!!!


சரின்னு, ஒரு பெண்ணாகப் பிறந்தால் திருமணமாகும்வரை ஆற்ற வேண்டிய சிலக் கடமைகள் இருக்கே, அதை செவ்வனே செய்யனும்ங்கற கடமையுணர்ச்சியோட, விகல்பமில்லாம பார்வையை சுழல விட்டால், சவுக்கார்பெட்டே தேவலாம்னு ஆகிடுச்சி. அதென்னமோ சேட்டு பசங்க மட்டும் அசட்டுக்களையை வரமா வாங்கிட்டு வந்தா மாதிரி இருக்கறதோட ரகசியம் என்னன்னே புரியல. சரின்னு இன்னொருப்பக்கம் யதார்த்தமா பார்வையை திருப்பினா, எக்சாம்கு பிரிப்பேர் பண்ற மாதிரி நியூஸ் பேப்பரை வெச்சிக்கிட்டு சிலப் பழம்ஸ் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தாங்க.

நெக்ஸ்ட் கலர் கலர் வாட் கலர்னு பார்த்தா டோட்டல் டாமேஜ். எக்கச்சக்க மாமிங்க இங்கிலிபீஸ் பேச தெரிஞ்ச ஹோம் மேக்கர்னு ப்ரூவ் பண்ண கெடச்ச சந்தர்ப்பத்த தெளிவா பயன்படுத்திக்க செம சதியோட சங்கமிச்சிருந்தாங்க. என்னடா இது கருத்துப் போலீஸ்களுக்கு வந்த சோதனைன்னு பார்த்தப்போ, ரெண்டு பேர் வந்தாங்க. ரெண்டு பேரும் எம்.ஒ.பி, எங்கள மாதிரியே சேம் பிளட் பீலிங்க்ல இருந்தாங்களாம், அதைச் சொல்லியே அறிமுகப்படுத்திக்கிட்டாங்க. அவங்கக் கிட்ட யாரெல்லாம் (வி.ஐ.பி) வராங்கன்னு கேட்டப்போ, மைத்ரேயன், கனிமொழி, ஒரு பெண் சினிமா டைரெக்டர், இன்னும் ரெண்டு பேர்(ஜாஸ்தி பிரபலமில்லாததால் இப்போ நியாபகம் இல்ல) அப்புறம் நம்ம மல்லுவேட்டி மைனர் கார்த்தி சிதம்பரம்னு சொன்னாங்க.

விஷயத்தை பரப்ப பிரெண்ட்சுக்கு போன் போட்டா, கடமைய எருமை கணக்கா பண்ணிக்கிட்டிருக்காங்க. அதாவது நான் என்டிடிவில வரேன்னதும் செல்லைக்கூட ஆப் பண்ணிட்டு டிவி முன்னாடியே பழியா கெடக்கறாங்களாமா. சீன் போடறதுக்கு சொல்லியா தரணும். சரின்னு பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............ஆகறதுக்குள்ள அடுத்த மேட்டரைக் கேட்டிருவோம்னு, யாரு நிகழ்ச்சிய நடத்தப் போறாங்கன்னு கேட்டேன், ஸ்ரீனிவாசன் ஜெயினாம்னு அவங்க சொல்லிக்கிட்டு இருக்கும்போதே அவரு கார்ல டைரெக்டா விமானநிலையத்தில இருந்து வந்து இறங்கறார். ஆள், தமிழ் பட அமெரிக்க மாப்பிள்ளையாட்டம் இருந்தார். கொஞ்ச நேரத்தில பிரபலங்கள் எல்லாம் வர ஆரம்பிச்சுட்டாங்க, கனிமொழி மேடம் வரலைன்னு தகவல் வந்துச்சி. கார்த்தி ஸார் வரும்போது, 'காரைக்குடி மைனர் பராக் பராக்னு' கத்தனும் போல இருந்துச்சி.


பொதுவாவே யாராவது பிரபலமானவங்க வந்தா, விழுந்தடிச்சு போய் பாக்கறது என்னோட தனித்திறமைகளில் ஒன்னு. ஒருதரம் நான் மினி புராஜெக்ட் ரிப்போர்ட் பிரிண்டவுட் எடுக்கும்போது, அந்தக் கட்டடத்துக்கு எதிர்புறம் அம்மா பிரச்சாரம் பண்ண வராங்கன்னதும், எனக்கு முன்னாடி நின்ன நாலஞ்சு கட ஆளுங்கள எத்திட்டு, பாஞ்சு போய் ஒரு யு டர்ன் அடிச்சு, சுவத்தைப் பிடிச்சி பாலன்ஸ் பண்ணிய ஸ்டைலை பார்த்தப்புறம், அங்க எனக்குக் கெடச்ச மரியாதையே வேற, "மேடம் முதல்ல உங்க பைண்டிங்க முடிச்சுக்கங்க, மேடம் உங்க பிராஜெக்ட் காப்பி எப்படி இருக்குன்னு பாருங்கன்னு" ஒரே அன்புத் தொல்லை.இப்படிப்பட்ட நான் இங்க என்னா செஞ்சிருப்பேன்னு யோசிக்கறீங்களா? ஒன்னும் பண்ணல, யு சி அட் தட் டயம் மீ த மேரியிங் நெக்ஸ்ட் மந்த், சோ நோ அல்பை வேல வெளிப்படையா செஞ்சிங், ஓகே.


பெரிய மனுஷங்கள்லாம் குசலம் விசாரிச்சிக்கிட்டும், ஜாலியா பேசி சிரிச்சிக்கிட்டும் இருக்கும்போதே, நிகழ்ச்சியை நிர்வகிக்கிறவர் வந்தார். 'மாமா பிஸ்கோத்துன்னு' மட்டும்தான் கத்தலை, மத்தபடி அதேமாதிரி தான் எல்லாரும் வரிசைக்கட்டி நின்னோம். வழக்கம்போல இங்கயும் கடசியாத்தான் போய் நின்னேன். அங்கப்போய் பார்த்தா அவர் தன்னை பூச்சாண்டின்னு நம்ப வெக்க படாதபாடு பட்டுக்கிட்டு இருந்தார்.


காலேஜ்ல கான்பரன்ஸ்(எங்களையும் உள்ள விடுற ரேஞ்சுல கூட்டம் இருக்கும்னா பாத்துக்கங்க), மீட்டிங்னு, சிம்போசியத்தைத் தவிர அத்தனைக்கும் எப்டி ஹெச்.ஒ.டி மாமாவ வெச்சு பூச்சு காட்டுவாங்க, அதேமாதிரி அங்கயும் புல்தடுக்கி மாமா, எங்கள எல்லாம் கூப்ட்டு, என்னமோ பிரியாணி பொட்லம் கொடுக்கப்போரா மாதிரி இறுமாப்போட, 'யாரும் மைக்க புடுங்காதீங்க, கருத்த சொல்ல விழுந்தடிச்சு, மிதிபடாதீங்க' அப்டி இப்டின்னு என்னமோ விவாதம் முடிஞ்சப்புறம் எங்க மூஞ்ச ரவுண்டு கட்டி, தாய் மண்ணே வணக்கம் போடப்போறா மாதிரியும், நாங்கெல்லாம் ஒப்பாரி வெக்க மதுரையில ஸ்பெஷல் டிரெயினிங் எடுத்துக்கிட்டு வந்திருக்க மாதிரியும், ஸ்ரீனிவாசன் ஜெயின் வாயப் பொத்தி அழ திருப்பூர்லருந்து டர்க்கி டவல் ஆர்டர் பண்ணி கோட் பாக்கெட்ல சொருகி விட்டா மாதிரியும் ஓவரா பில்டப் கொடுத்தார்.


நம் சமூகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தமிழ்நாட்டின் கருத்துக் காவலர்களான குஷ்பு, ஐயா(ஜயா இல்ல) தமிழ் 'குடி'தாங்கி அண்ட் கோவோட பொன்மொழிகளால் ஏற்பட்ட கலவரச் சூழலில், இம்மாதிரி ஒரு ஆங்கிலத் தொலைகாட்சி நடத்திய விவாதத்துல கலந்துக்கிட்ட ஒரு காலேஜ் பிரெண்டின் வாக்குமூலத்தின் மூலம், இந்த மாதிரி விவாதத்துக்கு அவங்களே ஆள் டிரெயின் பண்ணி கூட்டி வந்து, அவங்களை மட்டுமே பேச விடுவாங்கன்னும், முக்காவாசி நேரம் நம்ம கைகிட்டக் கூட மைக்க கொடுக்க மாட்டாங்கன்னும் கேள்விபட்டிருந்ததால நானும் நிம்மதியா, அந்த மாமாவின் முக அமைப்பை தீவிரமா ஆராய்ச்சி செஞ்சிக்கிட்டு இருந்தேன். ஆனா நிஜ கருத்துப் போலீசான எங்கக்காவை நெனச்சுத்தான் பாவமா இருந்துச்சி.


சரின்னு, அவர் எல்லாரையும் போய் உ , என்ன முழிக்கறீங்க, நிஜமாவே, அவரு இவ்ளோதான் சொன்னாரு, அதுக்குள்ள கேமரா கோணத்தை பாலுமகேந்த்ரா சார் கணக்கா கணிச்சு, அடுச்சி புடுச்சி ஆர்டர் பண்ண ஸ்பெஷல் ஐட்டங்கள் உக்காரதுக்குக் கூட இடம் விடாம, தமிழ் மரபை காக்கும் பொருட்டு, லேடீஸ் தனி, பல்ப்ஸ் தனின்னு லேன்ட் ஆகிட்டு, இன்னும் பார்க் ஆகாம தவிச்சுக்கிட்டிருந்த எங்க நாலு பேரை நக்கலா வேற ஒரு பார்வை பாக்கறாங்க. உடனே, ஐரோப்பாவின் மண்ணையும், அமெரிக்காவின் கழிவையும் அமுதமாகக் கருதும் அந்த புல்தடுக்கி மாமா, நம்ம சென்னையை பத்தி நக்கலா கமெண்டடிச்சுட்டு, எல்லாரும் கலந்துக் கட்டி உக்காருங்கன்னு சொன்னார்.


நான் ரெண்டாவது வரிசை இடது ஓரத்துல இருந்த சீட்டில் உக்கார வெக்கப்பட்டேன். எங்கக்காவ, அவளோட ராசிப்படி பர்ஸ்ட் ரோவில், ஸ்பெஷல் கெஸ்டான மைத்ரேயன் பக்கத்துல உக்கார வெச்சாங்க. விவாதம் ஆரம்பமாச்சு, நானும் வழக்கம்போல கற்பனாஉலகில் சஞ்சரிக்க ஆரம்பிச்சேன். அப்பப்போ மனசு, நம்மள இங்க நொந்திட்டாங்களே, டிவியில நம்மள காமிப்பாங்களா, அப்படின்னு அடிச்சிக்கிட்டே இருந்தது. ஆனாலும் எல்லாந்தெரிஞ்ச மேதாவி ஸ்மைல மட்டும் கொட்டோ கொட்டுன்னு தேளவிட ஜாஸ்தியா கொட்டிக்கிட்டு இருந்தேன். கீழ எங்கக்காவும், அவ பக்கத்துல உக்காத்திருந்த ஒரு பொண்ணும் தரையில் விடப்பட்ட மீனாட்டம் துடிச்சிக்கிட்டு இருந்தாங்க, அதாவது அவங்க கைல மைக்கக் கொடுக்கனுமாம். அதுக்குள்ள ஒரு சின்ன பிரேக் விட்டாங்க. ஒடனே நெறயப் பேர் தப தபதபன்னு கீழ ஓடினாங்க, என்னவாம்னா, ஸ்ரீனிவாசன் ஜெயின்கிட்ட அந்த ரெண்டு மூணு நிமிஷத்துல கலந்தாலோசிச்சி, அடுத்த பிரணாய் ராய் ஆகோனும்னு ஆலோசிக்கராங்களாமா.


நான் நம்ம உடன்பிறப்பு எங்கன்னு பார்த்தா, அப்பவும் தொடர்ந்து பக்கத்துல இருந்த பொண்ணுகிட்ட ஏதோ தீவிர டிஸ்கஷன்ல இருந்தா, அடிப்பாவிகளா நீங்கல்லாம் எப்போதான் அறியாமை இருளிலிருந்து ஜெனெரேட்டர் வெளிச்சத்துக்கு வருவீங்கன்னு சிரிச்சிக்கிட்டேன். நாம எப்பவுமே ஒரு சின்ன ஸ்மைல் கொடுக்கறோம்னாலே நாலு நிமிஷத்துக்கு கொறையாம இருக்கும், சிரிச்சோம்னா எவ்வளவு நேரம் தாங்கும்னு நீங்களே யோசிங்க(இவ்ளோ பெரிய பதிவையே படிக்கறீங்க, இதச் செய்ய மாட்டீங்களா). சோ, அதுக்குள்ள பிரேக் முடிஞ்சு நிகழ்ச்சி தொடர ஆரம்பிச்சிது. அந்த பிரேக் முடிஞ்சு ஆரம்பிச்சப்போ என் சிரிச்ச மூஞ்சுக்கு ஒரு டைட் க்ளோசப் வேற வெச்சாங்களாம்(அப்போன்னு டிவி பார்த்து ஜன்னி கண்ட குழந்தைகளின் தாய்மார்கள் கொடுத்த கண்ணீர் பேட்டியிலிருந்து தெரிஞ்சுக்கிட்டேன்)


மறுபடியும் நிகழ்ச்சி தொடர ஆரம்பிச்ச ரெண்டு நிமிசத்துக்குள்ள துள்ளித் திரியும் காலம்(மைக்குக்காக) ஆரம்பிச்சுது, நான் பாட்டுக்கு பிசியா, கார்த்தி டை அடிக்கறாரா, விழ ஆரம்பிச்சிருக்க நடுமண்டை சொட்டையை எப்படி எதிர்காலத்துல மறைப்பார்ங்கற முக்கிய பிரச்சினை சம்பந்தமா தீவிரமா யோசனை பண்ணிக்கிட்டு இருக்கும்போது, யாரோ என்னை இடிக்கிறா மாதிரி இருந்துச்சி, யாருடா அது, கேமரா முன்னாலயே வேலையக் காமிக்கர ஆள்னு, புதுமைப்பெண் படத்துல, 'ஒரு தென்றல் புயலாகி வருமோன்னு', ரேவதி சூப்பரா காமடி பண்ணுவாங்களே, அப்படி பாக்கறேன், இடிச்சது மைக். எனக்கு ஒரு நிமிஷம் புரியவே இல்ல(டிவியில ஒரு முழு நிமிஷம்னா யோசிச்சுக்கங்க), ஏன் என்கிட்டப் போய் இதை கொடுக்கறாங்கன்னு. அப்புறம் சுதாகரிச்சு, புடிங்கி பின்னால கொடுக்கறதுக்குள்ள கொஞ்சம் பதட்டமே ஆகிடுச்சுன்னா பாருங்களேன். 'டோமர் பாய், என்கிட்டே என்ன வெள்ளாட்டு சின்னப்புள்ளத் தனமான்னு' நிமிர்ந்து பார்த்தா, ஸ்ரீனிவாசன் ஜெயின் முறைக்கறார். அதுக்குள்ள அடுத்த பிரேக். எல்லாரும் என்னைய திரும்பி திரும்பி பாத்துக்கிட்டு குசுகுசுன்னு பேச்சு வேற. அப்பவும் எங்கக்கா வளரும் நாடுகளின் விவசாயப் பிரச்சினைய டிஸ்கஸ் பண்ற மாதிரியே சீன் போட்டுக்கிட்டு இருந்தா. சரி வளர்த்த கடாவோட அம்மாதானேன்னு விட்டுட்டேன்(எங்கக்கா பையனை நானும் வளர்த்தேனாக்கும்) .


திரும்ப விவாதம் ஆரம்பிச்சது, எல்லா வி.ஐ.பி பனியன் வேஷ்டிகளும், சுடிதார், புடவைகளும் பேசி முடிச்சாச்சி. மறுக்கா சாதா ஆளுங்கக் கைல மைக் வந்துச்சி, ஒரு மாமி மூணாவது வரிசையில மைக்குக்காக அந்த குதி குதிக்கறாங்க, கீழே டைரெக்டரம்மா சாமியாடாத குறைதான். எங்கக்கா, அவ பக்கத்துல இருக்கிற எம்.ஒ.பி பொண்ணு இப்டி மைக்குக்காக அங்க ஒரு ஜனத்திரளே அல்லோலகல்லோலப் பட்டுக்கிட்டு இருக்குது, ஆனா பாருங்க, எல்லாரையும் விட்டுட்டு, என்னமோ பூர்வ ஜென்ம பந்தம் மாதிரி, என்கிட்டயே மைக் வந்துச்சி. 'யோவ் நீங்கல்லாம் என்னத்தப் பத்தி இப்போ பேசிக்கிட்டு இருகீங்கன்னே எனக்கு தெரியாது, என்னைய ஏன்யா ரப்ச்சர் பண்றீங்கன்னு' கத்தனும்போல இருந்தாலும், அங்க இருந்தவங்க பார்வையெல்லாம் சரியில்லாததால கம்முன்னு அதை பாஸ் பண்ணிட்டேன். அப்போ மட்டும் எனக்கு அந்த பிரெண்ட் கைல கெடச்சிருந்தா உயிரைக்கொடுத்தாவது, விஜயகாந்த் படத்துல கதாநாயகி வேஷம் வாங்கிக் கொடுத்திருப்பேன்.


ஒரு வழியா நிகழ்ச்சி முடிஞ்சது, இந்த பின்னங்கால் பிடரியில் பட ஓடறதும்பாங்களே, அப்படில்லாம் நான் எப்பவுமே செய்ய மாட்டேன். இப்போ என்னாச்சு, வீரத் திருமகளின் சரித்திரத்தில் மற்றுமொரு விழுப்புண், அப்படின்னு தொடச்சி விட்டுட்டு எங்கக்காவோட வீட்டுக்கு வந்துட்டேன். போறவழியெல்லாம் ஒரே விசாரிப்பு, பொதுமக்கள் கிட்டருந்து இல்ல, பிரெண்ட்ஸ்கிட்ட இருந்து. சும்மா சொல்லக்கூடாது, நல்லா வகதொக இல்லாம காரி காரி துப்புறாங்க. இந்த வீணாப்போன கேமராமேன நான் என்னவோ பயங்கரமா மயக்கி எக்கச்சக்க க்ளோசப் ஷாட்ஸ் வாங்கிட்டேன்னேல்லாம், 'சேர்த்து வெச்சி அபாண்டமா பேசுவது எப்படிங்கற' புக்குக்கு, வாயாலேயே விளக்க உரை எழுதுனாங்க. அப்போ புரோகிராம் பாக்காத, ரெண்டு மூணு குரங்குங்கக் கூட விஷயத்தை கேள்விப்பட்டு, சந்துல சிந்து பாடுதுங்க(அதை எப்டி கண்டுபுடிச்சேன்னா, நான் போட்டுக்கிட்டு போன சல்வார் கமீஸ் மஞ்சள்&ஒயிட் காம்பினேஷன், இதுங்க என்னோட பேவரிட் காம்பிநேஷனான எங்கக் கட்சிக் கொடி காம்பினேஷன்ல தான் போட்டுக்கிட்டு போயிருப்பேன்னு நெனச்சு, ரியலிஸ்டிக்கா இருக்கணும்னு, டிரஸ்ஸப் பத்தி உளறி மாட்டிக்கிட்டாங்க, நாம யாரு, ஜெய்சங்கர் படமாப் பார்த்து வளர்ந்த ரிவால்வர் ரீட்டாவாச்சே)


வீட்டுக்குப் போனா, என்னமோ நான் பிக்பாக்கெட் அடிச்சி மாட்டிக்கிட்டா மாதிரியும், அதப்பத்தி பேசி எம்பாரஸ் பண்ண விரும்பாதவங்க மாதிரியும் திரிஞ்சாங்க. சரின்னு சமாதானப்படுத்தி திட்டச்சொன்னா, முதல்ல கொஞ்சம் சுமார்தான்னாலும், அப்புறம் பிக்கப் ஆகிடுச்சி, நானும் ஸ்டார்ட் மீசிக்னு தாலாட்டை ரசிக்க ஆரம்பிச்சேன்.


இதுல என்ன சோகமான விஷயம்னா, இதை மறுஒளிபரப்பு செஞ்ச ரெண்டு தரமும் கரண்ட் மாமா விரும்பி விளையாடும் கரண்ட் கட் மற்றும் கேபிள் மாமா விரும்பி விளையாடும் ஜாலி கட் போன்ற விளையாட்டுகளின் காரணமாக என் முகத்த என்டிடிவியில பாக்கற கொடுப்பனை கூட எனக்கு இல்லாமப் போய்டுச்சி.

229 comments:

«Oldest   ‹Older   201 – 229 of 229   Newer›   Newest»
கோபிநாத் said...

ஏய்ய்ய்ய்ய்ய்ய்....நான் தான் 200 ;))

மாப்பி நீ காலி...;)

சென்ஷி said...

//உன் நிலைமையை நினைச்ச ரொம்ப கஷ்டமாக இருக்கு மாப்பி....கடைசிவரைக்கும் பதிவை படிச்சிருக்க பார்த்தியா!!
//

இல்லைன்னா கறுப்பனின் காதலிக்கு சார்ஜாவுலயே டிக்கட் வாங்கி அனுப்பி வச்சிடுவாங்கன்னு மிரட்டியிருக்காங்கடா அக்கா :(

சென்ஷி said...

//கோபிநாத் said...
ஏய்ய்ய்ய்ய்ய்ய்....நான் தான் 200 ;))

மாப்பி நீ காலி...;)
//

வுட்டுக்கொடுக்கறது நல்ல புள்ளைக்கு அடையாளம்ன்னு நாகேஷ் சொல்லியிருக்கார்டா மச்சி :)

நான் நல்ல புள்ள. நீ எப்படி :)

கோபிநாத் said...

\சென்ஷி said...
//உன் நிலைமையை நினைச்ச ரொம்ப கஷ்டமாக இருக்கு மாப்பி....கடைசிவரைக்கும் பதிவை படிச்சிருக்க பார்த்தியா!!
//

இல்லைன்னா கறுப்பனின் காதலிக்கு சார்ஜாவுலயே டிக்கட் வாங்கி அனுப்பி வச்சிடுவாங்கன்னு மிரட்டியிருக்காங்கடா அக்கா :(
\\

யூ மின் கருப்பு லவ்வர்!!!

சென்ஷி said...

ஓக்கே

அப்ப நான் உத்தரவு வாங்கிக்கட்டா

உறக்கம் வருது :(

சென்ஷி said...

//கோபிநாத் said...
\சென்ஷி said...
//உன் நிலைமையை நினைச்ச ரொம்ப கஷ்டமாக இருக்கு மாப்பி....கடைசிவரைக்கும் பதிவை படிச்சிருக்க பார்த்தியா!!
//

இல்லைன்னா கறுப்பனின் காதலிக்கு சார்ஜாவுலயே டிக்கட் வாங்கி அனுப்பி வச்சிடுவாங்கன்னு மிரட்டியிருக்காங்கடா அக்கா :(
\\

யூ மின் கருப்பு லவ்வர்!!!
//

நோ கரடி லவ்வர் :((

கோபிநாத் said...

\\சென்ஷி said...
//கோபிநாத் said...
ஏய்ய்ய்ய்ய்ய்ய்....நான் தான் 200 ;))

மாப்பி நீ காலி...;)
//

வுட்டுக்கொடுக்கறது நல்ல புள்ளைக்கு அடையாளம்ன்னு நாகேஷ் சொல்லியிருக்கார்டா மச்சி :)

நான் நல்ல புள்ள. நீ எப்படி :)
\\

நீ நல்ல புள்ள ...நான் ரொம்ப ரொம்ப நல்ல புள்ள..ரைட்டு பார்ப்போம் ;))

சென்ஷி said...

//நீ நல்ல புள்ள ...நான் ரொம்ப ரொம்ப நல்ல புள்ள..ரைட்டு பார்ப்போம் ;))//

ஓக்கே.. பை.. சீ யூ.. :))

கயல்விழி said...

LOL

very nice, enjoyed it.

சுரேகா.. said...

:))))

புதுகை.அப்துல்லா said...

அய்யோ!அய்யோ!அய்யோ!

இவ்வளவு கும்மி நடந்துருக்கு நா இல்லாம போய்ட்டேனே!!!!!!!

என்கிட்ட முன்னாடியே சொல்லாம பதிவ போட்ட ராப்புக்கு ஓரு நல்ல தண்டனை குடுக்கனும்.ம்ம்ம்ம்ம் என்ன பண்ணலாம்? பேசாம நம்ப ஆற்காட்டாரை பிரான்ஸ்க்கு கரண்டு மினிஸ்டர் ஆக்கிட வேண்டியதுதான் :)))))

rapp said...

ஆஹா ஆஹா, கோபி அண்ணே, ரொம்ப ரொம்ப நன்றி. என்னை இப்படி எக்கச்சக்கமா புகழ்ந்தா நான் என்ன பண்றது?:):):) சென்ஷி அண்ணனுக்குப் பார்க்கறதா இருக்கா மாதிரி உங்களுக்கும் ஒரு பொண்ணு பாத்துக் கொடுத்து என் நன்றிக்கடனை செலுத்திட வேண்டியதுதான்:):):) இல்லைனா, திருப்பதியில் இருந்து சக்கரயில்லாத சக்கரப்பொங்கல் வரவழைக்கட்டுமா:):):)
நீங்க அடிச்சிருக்க கும்மியப் பார்த்து என் நெஞ்சு பஞ்சாகி அடுத்த பஞ்சடிக்க விம்முதுண்ணே:):):)

rapp said...

சென்ஷி அண்ணே, மறுக்கா ஒருமுறை நன்றி சொல்லிக்கிறேன்:):):) உங்களுக்குப் பொண்ணு பாக்கும் அசைன்மன்டில் யாரையெல்லாம் சேத்துக்கலாம்னு சொல்லுங்க, அவங்க பர்மிஷன் இல்லாமயே முத்துவை சேர்த்தாச்சு.உங்க மேல வேற யாராவது கொலவெறியோட இருந்தா சொல்லுங்க, அவங்களையும் லிஸ்ட்ல சேத்துக்குவோம்:):):)

rapp said...

ரொம்ப நன்றிங்க கயல்விழி:):):)
ரொம்ப நன்றிங்க சுரேகா:):):)

rapp said...

//என்கிட்ட முன்னாடியே சொல்லாம பதிவ போட்ட ராப்புக்கு ஓரு நல்ல தண்டனை குடுக்கனும்.ம்ம்ம்ம்ம் என்ன பண்ணலாம்? பேசாம நம்ப ஆற்காட்டாரை பிரான்ஸ்க்கு கரண்டு மினிஸ்டர் ஆக்கிட வேண்டியதுதான்//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்துல்லா அண்ணே, மெயில் பண்ணத அழகா மறச்சிட்டு, பேச்சைப் பாரு:):):) ஹி ஹி ஆற்காட்டார்லாம் எதுக்குண்ணே, நமக்குள்ள பிரச்சினைன்னா பேசி தீத்துக்கலாம், எதுக்கு வன்முறை:):):)

மணிகண்டன் said...

******* உங்க மேல வேற யாராவது கொலவெறியோட இருந்தா சொல்லுங்க, அவங்களையும் லிஸ்ட்ல சேத்துக்குவோம் ******

ராப், பொண்ணு பாத்து கொடுங்க. அதுவே அவருக்கு கொடுக்கற பெரிய தண்டனை. அத விட்டுட்டு !

ஜியா said...

:)))

//லேடீஸ் தனி, பல்ப்ஸ் தனின்னு // பல்ப்ஸ்?? அவ்வ்வ்வ்வ்வ்வ்...

ஆமாம், நிகழ்ச்சிக்கு வந்தவங்க சூர்யா, அஜித், விஜய் மாதிரிலாம் சாதரணமா பேர் வைக்க மாட்டாங்களா?? எல்லாமே பயலாஜிக்கல் நாமன்க்ளேட்ச்சரா இருக்கு...

---------------

சான்ஸே இல்லீங்க... நானும் இன்னைக்கு முடிக்க வேண்டிய என்னோட வேலைய விட்டுட்டு உங்க பதிவ படிச்சிட்டு இருந்தேன்... வரிக்கு வரி நக்கலும் காமெடியும், கலக்கறீங்க...

சென்ஷி said...

//rapp said...
சென்ஷி அண்ணே, மறுக்கா ஒருமுறை நன்றி சொல்லிக்கிறேன்:):):) உங்களுக்குப் பொண்ணு பாக்கும் அசைன்மன்டில் யாரையெல்லாம் சேத்துக்கலாம்னு சொல்லுங்க, அவங்க பர்மிஷன் இல்லாமயே முத்துவை சேர்த்தாச்சு.உங்க மேல வேற யாராவது கொலவெறியோட இருந்தா சொல்லுங்க, அவங்களையும் லிஸ்ட்ல சேத்துக்குவோம்:):):)
//

தனிப்பதிவா போட்டு கூட்டம் சேர்க்க வேண்டிய மேட்டர கும்மியில 213வது கமெண்டா போட்டு இருட்டடிப்பு செஞ்சுட்டீங்களே தங்கச்சிக்கா :(

என்னைய மாதிரி 217 கமெண்டையும் படிக்கற அளவுக்கு வேலை வெட்டி இல்லாதவங்க இருப்பாங்கன்னு நான் நினைக்கல :)

கோபிநாத் said...

\\ rapp said...
ஆஹா ஆஹா, கோபி அண்ணே, ரொம்ப ரொம்ப நன்றி. என்னை இப்படி எக்கச்சக்கமா புகழ்ந்தா நான் என்ன பண்றது?:):):) சென்ஷி அண்ணனுக்குப் பார்க்கறதா இருக்கா மாதிரி உங்களுக்கும் ஒரு பொண்ணு பாத்துக் கொடுத்து என் நன்றிக்கடனை செலுத்திட வேண்டியதுதான்:):):) இல்லைனா, திருப்பதியில் இருந்து சக்கரயில்லாத சக்கரப்பொங்கல் வரவழைக்கட்டுமா:):):)
நீங்க அடிச்சிருக்க கும்மியப் பார்த்து என் நெஞ்சு பஞ்சாகி அடுத்த பஞ்சடிக்க விம்முதுண்ணே:):):)
\\

யக்கா...இப்ப நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு இப்படி ஒரு கொலைவெறி...அவ்வ்வ்வ்வ்வ்வ்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உன்னைய மாதிரி நானிருக்கேன் சென்ஷி..பாரு 219 பின்னூட்டம் வந்ததப்பறமும் இந்த விசயத்தை படிச்சி தெரிஞ்சிக்கிட்டிருக்கேன்.. அப்பறம் சேட்டுக்கு வா ராப் ..கூடி பேசி முடிவு செய்வோம் எப்படி பொண்ணு பாக்கலாம்..ன்னு.. :)

மணிகண்டன் said...

me the 100th

ஜியா said...

//சரின்னு, ஒரு பெண்ணாகப் பிறந்தால் திருமணமாகும்வரை ஆற்ற வேண்டிய சிலக் கடமைகள் இருக்கே, அதை செவ்வனே செய்யனும்ங்கற கடமையுணர்ச்சியோட, விகல்பமில்லாம பார்வையை சுழல விட்டால், //

இத பாத்த உடனேயே நம்மளோட பழைய கவுஜ ஒன்னு ஞாபகத்துக்கு வந்திரிச்சு...

//எங்களுக்கான ஆயுள்தண்டனை
வரும்வரை பார்வையிடுவோம்
அதற்குப்பின்னும்...
ஜெயிலுக்குள் அடிக்கும்
திருட்டு 'தம்'மாய்...
//

நாங்களும் வெளம்பரம் கொடுப்போம்ல... சுட்டி: http://veyililmazai.blogspot.com/2007/05/blog-post_16.html

குடுகுடுப்பை said...

என்டிடிவியில் என்னை பார்த்தீங்களா?

ஆமாம் பாத்தேன்.

rapp said...

ஜி, குடுகுடுப்பை, மணிகண்டன், கோபி அண்ணே, சென்ஷி அண்ணே, முத்து உங்க எல்லாருக்கும் நன்றி, நன்றி, நன்றி:):):)

rapp said...

me the 225th

முரளிகண்ணன் said...

உங்களை தொடர் விளையாட்டுக்கு அழைத்திருக்கிறேன் , நன்றி

முரளிகண்ணன் said...

உங்களை தொடர் விளையாட்டுக்கு அழைத்திருக்கிறேன் , நன்றி

Itsdifferent said...

You have very good writing skills. Excellent flow. I read your blog for the first time today between my meetings, was laughing out explicitly in my office, and my co-worker outside of the office must be wondering, what the heck!!! (She is working hard, and I am reading and laughing out! Can we blame her? Nooooooo.)
Just a suggestion, should use your extraordinary cominc sense to something constructive.(Dont leave this, thats what I meant). Start some serious blog also. I am a big fan of Coaching leadership skills to youngsters (yea, I am 42). But I am not able to write well. Got lots of ideas, but when I sit to write it becomes narrative, rather than a free and comic flow like yours.
Gotta go, good luck.

coolzkarthi said...

ஆஹா நன்றாக இருக்கிறது செல்வங்களே.....சரளமான எழுத்து நடை,அருமை...

«Oldest ‹Older   201 – 229 of 229   Newer› Newest»