Monday, 15 September 2008

என்டிடிவியும் நானும்

இதன் முதல் பாகம் இங்கே.

எங்கக்கா பார்க்க ரதி மாதிரி(அதாவது பாரதிராஜாவோட புதியவார்ப்புகள் ரதி மாதிரி, ஒடனே எங்கக்காவுக்கு பொளந்த வாயா, வயத்துக்குள்ள தினம் எத்தனை ஈ, கொசு குடிபோகும்னெல்லாம் கேக்காதீங்க, ஏன்னா அவங்களும் இப்போ ப்ளாகர் ஆகிட்டாங்க, அவ்வ்வ்வ்வ்...................) ஓடி வந்து என்கிட்டே நின்னு, "ஏய் உனக்குத்தான்டி போன், என்டிடிவியில் இருந்து ஒரு பல்பு டி, வர்ற வியாழக்கிழமை, நம்ம தமிழ்நாட்டோட தேர்தல் ரிசல்ட் பத்தி ஒரு டிஸ்கஷனாம், அதில் பங்கெடுத்துக்க உன்னை செலெக்ட் பண்ணி இருக்காங்களாம்", அப்டின்னு கிழக்கே போகும் ரயில் ராதிகா கணக்கா சிரிக்கறா.

என்னடா இது ஒருத்தருக்கொருத்தர் சூனியம் வெச்சுக்கறளவுக்கு விரோதம் இல்லைனாலும், இப்டியெல்லாம் ஒருத்தர் நலனில் ஒருத்தர் அக்கறை செலுத்துவோம்ங்கற ஆக்டிங்கெல்லாம் நம்ம வீட்ல வொர்கவுட் ஆகாதுன்னு தெரிஞ்சும் தன்னம்பிக்கையோட முயற்சி பண்றாளே, என்னா விஷயமா இருக்கும்னு தீவிரமா, அந்த நம்பிக்கையோட கைய எடுக்க யோசிக்க ஆரம்பிச்சேன்(யப்பா, இதை எழுதறதுக்கு இம்புட்டு கஷ்டமா இருக்கும்னு தெரிஞ்சிருந்தா, என் மூளைய வழக்கம்போல செயல்படவிடாம ஊக்குவிச்சிருப்பேன்) .

என் தொலைநோக்குப் பார்வையை தெளிவா புரிஞ்சிக்கிட்டு, அவளும் விஷயத்துக்கு வந்தா, "நீ, கூட ஒருத்தங்களையும் கூட்டிக்கிட்டு வரணும்னு சொன்னாங்கடி, நானும் வேறவழியில்லாம என் பேரை கொடுத்திட்டேண்டி, பேசின ஆளு ரொம்ப ஸ்ட்ரிக்டா வேற பேசினார்டி" அப்டின்னு அடிச்சு விட்டுக்கிட்டே போறா, சரி தீட்டின கம்பியிலயே கூர் பாக்கிறாப் போலன்னு, ஒரு குரு ஸ்தானத்தில் இருந்து அதில் லயிச்சேன். திருவாளர் பீட்டர் இறுதி முடிவு தெரிஞ்சிக்க நாளை திரும்பவும் என்னைக் கூப்பிடுவதாக சொன்னதாக சொல்லிட்டு, எங்கக்கா நடையக்கட்டிட்டா.

எனக்கோ டென்ஷனாகிடுச்சி, ஏன்னா என்கிட்டே பல குறைகள் இருந்தாலும், எதிராளி என்னை ஜென்ம விரோதியா பாக்குற அளவுக்கு ஒரு குறை உண்டு. அது என்னன்னா, சாதாரணமா எல்லார் கிட்டயும் சகஜமா பழகற நான், இந்த மாதிரி கூட்டம், விவாதம், கலந்துரையாடல்னா இன்னும் ஜாலியாகிடுவேன். இந்தக் கலை எனக்குள்ள எந்த வயசில் துளிர் விட்டுச்சின்னு தெரியல, ஆனா விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து போஷாக்கா வளர்ந்துக்கிட்டே இருக்கு.

என்ன பில்டப் ஜாஸ்தியாகிடுச்சா, சரி விஷயத்துக்கு வர்றேன். ஒரு கூட்டத்தில் நான் போய் உக்காந்தாலே, அங்கு நிகழ்ச்சிய நடத்துறவர்ல இருந்து, கலந்துக்கற மத்த மைக் மோகன்கள் வரை எல்லாரையும் வித விதமா கலாய்க்கறது, அவங்க நடந்துக்கறதை வெச்சும், பேசுறதை வெச்சும் அவங்களை டிஆர், பேரரசு, குரோதம் பிரேம் மாதிரியான தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத தூண்களோட கம்பேர் பண்றது, இல்ல அவங்களோட விவாதம் நடத்தினா எப்படி இருக்கும்னு யோசிக்கறதுன்னு, ஆக்கப்பூர்வமா அறிவ வளப்பேன். இன்னும் அவங்க என்னை மதிக்கறதா தெரிஞ்சா ஒரே கொண்டாட்டம்தான், என்னை ஒருவேளை கேள்விக்கேட்டா, "சீ போ, சொல்ல முடியாது"ன்னோ, "வெவ்வெவ்வே உன் வேலையப் பாத்துக்கிட்டு போ"ன்னோ, இல்லை வேற விதமாக நங்குக் காட்டியோ அவங்களை வெறுப்பேத்தினா எப்படி இருக்கும்னு குஷியா கற்பனைக் குதிரைய தட்டிவிட்டுக்கிட்டு, ஒரு ஸ்மைலிங் பேசோடவே இருப்பேன். இதனால் அந்த நிகழ்ச்சிய நடத்துறவங்க நேர்மாறா புரிஞ்சிக்கிட்டு, என்னையே சுத்தி சுத்தி வருவாங்க.

நான் இப்படி கவலைப்பட்டுக்கிட்டே(எதுக்குன்னா ஒரு வாரத்துக்கு முன்னருந்தே ஒரு பொறுப்பு, பருப்பு பீலுக்கு போக. பின்ன அந்தச் சின்ன விஷயத்துக்காக வாழ்நாள் முழுசும் நாலுபேரை வெறுப்பேத்துற வாய்ப்பை விடுவனா நானு)அடுத்த நாள், நிகழ்ச்சியில் கலந்துக்க சம்மதமும் சொல்லிட்டேன்.

வழக்கம்போல எங்கக்கா முக்கியமான வேலை இருக்கு, அங்க வந்து ஜாயின் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டு, கடமையே கண்ணா செல்போனை வீட்டில் மறந்து வெச்சிட்டு போயிட்டா. சாந்தோம் தேவாலயப் பின்புறம் படப்பிடிப்பு. என் ராசிப்படி எல்லா விதத்திலும் தாமதமாகி டென்ஷனாகி, சர்ச்சுக்கு போனப்புறமும் எங்கக்காவைத் தேடி முழிச்சி, ஆட்டோவைக் கட் பண்ண சில்லறை இல்லாத பரிதாப நிலையில், ஆட்டோக்காரர் நவீன கர்ணனா மாற(மாற்ற) முயற்சி நடந்துக்கிட்டிருக்கும்போது, எங்கக்காவை பார்த்து, மினி சண்டை போட்டு, பிரச்சினைய சால்வ் பண்ணிக்கிட்டு படப்பிடிப்பு நடக்கிற இடத்துக்கு போய் சேர்ந்தேன்.

அப்போ என்ன நடந்துச்சின்னா..................

டிஸ்கி: நாளைக்கே இதன் தொடர்ச்சியை கண்டிப்பா போட்டிடறேன், இந்தப் பதிவும் எக்கச்சக்க நீளமாகிடுச்சில்லையா:):):)(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................எப்படியெல்லாம் பில்டப் கொடுக்க வேண்டியிருக்கு)

111 comments:

கார்க்கிபவா said...

ஆஜர் ஆபீஸர்

முரளிகண்ணன் said...

ரெண்டு பதிவாயிருச்சு, இன்னும் மேட்டருக்கே வரல்லையே? ஆனால் முன்னுரை அபாரம். நான் சிறுவயதில் பெண்கள் எல்லாம் ஆண்களை கலாய்க்க மாட்டார்கள் என நினத்திருந்தேன். அது கடவுள் நம்பிக்கையை போலவே குறைந்து கொண்டே வந்தது. இப்போது முழு நாத்திகனாகி விட்டேன்

rapp said...

கார்க்கி அட்டன்டென்ஸ் போட்டாச்சு:):):) ரொம்ப நன்றி

rapp said...

முரளிக்கண்ணன் உங்களை அப்படிப்பட்ட அறியாமை இருளில் தள்ளியவர்கள் யார்? :) உண்மையச் சொல்லனும்னா, தேவர் பிலிம்ஸ் படங்கள் மாதிரி தெளிவா சொல்லாதவரை ஆண்களுக்கு முக்காவாசி சமயம் பெண்கள் கலாய்க்கராங்கன்னே தெரியாதது தான் பிரச்சினை:):):)

Unknown said...

Rapp...வர வர உங்க அழிச்சாட்டியம் அதிகமாகிட்டே போகுது :)))
அது எப்படிங்க விஷயத்துக்கே வராம 2 பதிவு போடுறீங்க....

//அவங்க நடந்துக்கறதை வெச்சும், பேசுறதை வெச்சும் அவங்களை டிஆர், பேரரசு, குரோதம் பிரேம் மாதிரியான தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத தூண்களோட கம்பேர் பண்றது, இல்ல அவங்களோட விவாதம் நடத்தினா எப்படி இருக்கும்னு யோசிக்கறதுன்னு, ஆக்கப்பூர்வமா அறிவ வளப்பேன்//

இது கலக்கல்........

மொத்த பதிவையும் படிச்சிட்டு கண்ணா பின்னானு சிரிச்சேன் :)))

நெக்ஸ்ட் கோயிங் யூவர் அக்காஸ் பதிவு....பாப்போம் அவங்க எப்படின்னு???

rapp said...

ரொம்ப நன்றிங்க கமல்:)
//அது எப்படிங்க விஷயத்துக்கே வராம 2 பதிவு போடுறீங்க....//
இது எங்கம்மா எனக்குக் கொடுத்த சீதனம். அவங்கக்கிட்ட எப்படி தண்ணி குடிக்கனும்னு கேட்டாக்கூட, ஒரு தனி ஸ்க்ரிப்ட் அமைச்சு, ஒரு திரில்லர் கதை மாதிரி சொல்வாங்க. ஏண்டா கேட்டோம்னு ஆகிடும். இப்போ ப்ளாக் எழுத ஆரம்பிச்ச உடனே அந்த கலையை நானும் வளர்த்துக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் :):):)
//பாப்போம் அவங்க எப்படின்னு???//
அவங்களா, எனக்கு அப்படியே ஆப்போசிட் :):):)

புருனோ Bruno said...

//அது கடவுள் நம்பிக்கையை போலவே குறைந்து கொண்டே வந்தது. இப்போது முழு நாத்திகனாகி விட்டேன்//

பட்டைய கிளப்புறீங்க.:)

Bharath said...

எக்ஸ்க்யுஸ்மீ ஆபீசர்.. பில்டப் ஆஹா ஓஹோ.. ஆனா அடுத்த பதிவுல matter க்கு வந்திடனும் ஆமா!!!

rapp said...

புருனோ சார், முரளிக்கண்ணன் சார்பா நானே நன்றி சொல்லிடறேன் :):):) நீங்க எப்படி சின்ன வயசில் இருந்தே அறியாமையில் இருந்தீங்களா, இல்லை அப்போலேருந்தே நாத்திகரா? :):):)

rapp said...

பாரத் வேற வழியில்லை, மேடை வரைக்கும் போயிட்டதால, அடுத்தப் பதிவுல விஷயத்துக்கு வரும் கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளேன். ஊடால பூந்து எங்கக்கா சஸ்பென்சை கெடுக்கலைன்னா ஓகே:):):)

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

பில்டப்பிலேயே இரண்டு பதிவினை ஓட்டி விட்டீர்களே!
பில்டப்பும் கூடவே உள்ள comment களும் நன்றாகவே உள்ளன .
சீக்கிரமே தொடருங்கள் .அங்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகமாகி விட்டது !

Thamiz Priyan said...

எக்ஸ்யூஸ்மி.. வாட் ஸ்டோரி யு டெல்லிங்... பிலீஸ் டெல் மீ..:)

rapp said...

ஹி ஹி பாஸ்கர், அது உப்புச்சப்பில்லாத மேட்டர்தான். இப்படில்லாம் பின்னூட்டம் போட்டீங்கன்னா நான் அடுத்த பதிவில் கொஞ்சம் நல்லா எழுதுவேன்னு பகல்கனவில் இருந்தீங்கன்னா, அந்த பாச்சா என்கிட்டே பலிக்காதுங்கறேன்:):):):)

rapp said...

ஹே தமிழ் பிரியன் ட்யூட், யு வெயிட்டிங் வித் அதர்ஸ் யா. மீ நோ பார்ஷியாலிட்டி ஷோயிங்:):):)

Kanchana Radhakrishnan said...

ஒன்னு மில்லாத விஷயத்துக்கு இவ்வளவு பில்டப் கொடுக்கற உங்களை......

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........................என்ன செய்யனுங்கறீங்க?:):):) சஸ்பென்சை இப்படி உடைச்சிட்டீங்களே:):):)

முரளிகண்ணன் said...

\\முக்காவாசி சமயம் பெண்கள் கலாய்க்கராங்கன்னே தெரியாதது தான் பிரச்சினை:):):)\\

ராப், இதை என் கல்யாணத்தின் பின் தான் நான் அறிந்து கொண்டேன்

ஆயில்யன் said...

/அப்டின்னு கிழக்கே போகும் ரயில் ராதிகா கணக்கா சிரிக்கறா.
//


நினைத்தேன் சிரித்தேன்! :)

ஆயில்யன் said...

//வெவ்வெவ்வே உன் வேலையப் பாத்துக்கிட்டு போ"ன்னோ, இல்லை வேற விதமாக நங்குக் காட்டியோ அவங்களை வெறுப்பேத்தினா எப்படி இருக்கும்னு குஷியா கற்பனைக் குதிரைய தட்டிவிட்டுக்கிட்டு, ஒரு ஸ்மைலிங் பேசோடவே இருப்பேன்.///

வவ்வவ்வவ! :)))

SK said...

எனக்கு இப்போ மொதோ பகுதி மறந்து போச்சு. நீங்க மொத்தமா முடிங்க நான் படிச்சுகறேன்.

rapp said...

ஹா ஹா ஹா.அறியாமை இருளுலிருந்து வெளிச்சத்துக்கு வந்ததிற்கு வாழ்த்துக்கள் முரளிக்கண்ணன் :):):)

rapp said...

ரொம்ப ரொம்ப நன்றிங்க ஆயில்யன். இதுக்கே இப்படி ஆகிட்டீங்களே, நான் மேடையில் நடனமாடும்போது இப்படியெல்லாம் எதிரிலிருக்கும் முக்கிய விருந்தினரை பார்த்தும் கற்பனை செய்துக்கொண்டு ஸ்மைலிங் பேசோடு ஆடி நல்லப் பெயர் வாங்கறதை பார்த்து காறித்துப்பாத பிரெண்ட்சே கிடயாதுங்கலாம்:):):)

rapp said...

ஹி ஹி எஸ்கே டென்ஷனாகாதீங்க. அடுத்தப் பதிவில் முடிச்சிடறேன்:):):)

கூடுதுறை said...

கமல் கிட்ட அசிஸ்டேண்ட் வேலை எதாவது பாத்திக்கிங்களா?

எவ்வ்வ்வ்வ்லோ பெரிய வாக்கியங்கள்??

narsim said...

சிரிப்பாக இருந்தது படிக்கும்பொழுது.. நல்ல நடை!

நர்சிம்

rapp said...

வாங்க கூடுதுறை. ரொம்ப நன்றி. நீங்க வேற நான் எழுதறதுலதான் இப்படி, பேசும்போது அப்படியே வேற மாதிரி, விவரம் அடுத்த பதிவில் :):):)

rapp said...

நர்சிம் வாங்க வாங்க. ரொம்ப நன்றிங்க. படிக்கும்போது ஜாலியாத்தான் இருக்கு. இதை செஞ்சிக்கிட்டு பொழப்பு நடத்துற எனக்கும் நல்லாத்தான் பொழுதுபோகுது. ஆனா பாருங்க, கூட இருந்து இதெயெல்லாம் அனுபவிக்கறவங்க மட்டும் கொலவெறியோட திரியறாங்க. கொஞ்சம் கூட ஸ்போர்டிவ்வா இருக்கறதில்லை:):):)

விஜய் ஆனந்த் said...

பிக் ஸிஸ்டர்..நோ திஸ் நவ் கமிங் டு தி மேட்டர்?? வாட் திஸ்??டூ பேட்..வெரி வெரி பேட்யா....

நோட்டட் தி பாயிண்ட்...சைக்கிள் கேப்பிங் டெல்லிங் யூ டான்சிங்???

யக்கோவ்...அருமையான ஃப்ளோல எழுதறீங்க!!! கலக்கல்!!!

சாரி மீ யா..நாட் திங்கிங் ஆஃப் த டீலிங்...டோட்டல் ஃபர்கெட்டிங் நாட் ்யு காலிங் பிக் ஸிஸ்டர்..ஃபுல் டேமேஜ்...

rapp said...

ஹே ந்யூ பாதர் விஜய் ஆனந்த், ஹவ் ஆர் யு? ஒய் லேட் கம்மிங்? மீ பிக் சிஸ்டர், ஆல் மை டைம் யா:):):) நெக்ஸ்ட் பதிவு ஐ புட்டிங்கோ புட்டிங் ஆல் யா, நோ வொர்ரி யு.

//சைக்கிள் கேப்பிங் டெல்லிங் யூ டான்சிங்???//
மீ த ரியல் பரதநாட்டியம் டான்சர் யா. நோ சைக்கிள் கேப்புல ஓட்டிங். ஐ டூயிங் உருப்படியா டான்சிங் அண்டு சிங்கிங்கு ஒன்லி. மை மதர் பிரிப்பேரிங் மீ பார் மேரேஜு ப்ரம் பர்ஸ்டு ஸ்டாண்டர்டு. ஐ ரெடியிங் பார் பிரைட், மீ த கிரேட் குடும்ப இஸ்திரி விஜய் ஆனந்த் ட்யூட். யு கேட்ச் மை பாயின்ட்?


//சாரி மீ யா..நாட் திங்கிங் ஆஃப் த டீலிங்...டோட்டல் ஃபர்கெட்டிங் நாட் ்யு காலிங் பிக் ஸிஸ்டர்..ஃபுல் டேமேஜ்...//

பைனல்லி யு அண்டர்சிட்டிங், மீ யு பர்கிவ்விங். ஓகே? நைஸ் மேன். குட்.

//அருமையான ஃப்ளோல எழுதறீங்க!!! கலக்கல்!!!//

Thanking you!
Yours faithfully,
rapp

rapp said...

me the 30th

புதுகை.அப்துல்லா said...

//ஆனா பாருங்க, கூட இருந்து இதெயெல்லாம் அனுபவிக்கறவங்க மட்டும் கொலவெறியோட திரியறாங்க. கொஞ்சம் கூட ஸ்போர்டிவ்வா இருக்கறதில்லை:):):)
//

கண்டிப்பா நான் ஸ்போர்டிவ்வா எடுத்துக்குறேன் சிஸ்டர். பிகாஸ் நான் உங்க கூட இருக்குறது இல்ல :)

புதுகை.அப்துல்லா said...

//அது எப்படிங்க விஷயத்துக்கே வராம 2 பதிவு போடுறீங்க....
//

ஆரமிச்சாச்சு. எப்படி முடிக்கிறதுன்னு தெரிஞ்சா முடிக்க மாட்டோமா? :))

rapp said...

என்ன அப்துல்லா அண்ணே, இன்னைக்கு கொஞ்சம் வேலை வேற பாத்தீங்களா? இவ்வளவு லேட்டா வந்திருக்கீங்களே:):):)

புதுகை.அப்துல்லா said...

//எக்ஸ்யூஸ்மி.. வாட் ஸ்டோரி யு டெல்லிங்... பிலீஸ் டெல் மீ..:)

//

அது என்ன ஸ்டோரின்னு அவங்களுக்கே தெரியாததால தான 2 பதிவு ஓடிக்கிட்டு இருக்கு..நீங்க வேற :)))))

rapp said...

//ஆரமிச்சாச்சு. எப்படி முடிக்கிறதுன்னு தெரிஞ்சா முடிக்க மாட்டோமா? :))//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.................இது நிஜக் கதை. இதுல சம்பந்தப்பட்ட சிலர் என்னை எத்தனை ஜென்மமெடுத்தாலும் மன்னிக்க, மறக்க மாட்டாங்க:):):) அவ்ளோ மொக்கை போட்டேன்.

புதுகை.அப்துல்லா said...

இன்னைக்கு கொஞ்சம் வேலை வேற பாத்தீங்களா?
//

அவ்வ்வ்வ்வ்வ்

பாபு said...

"அப்டின்னு கிழக்கே போகும் ரயில் ராதிகா கணக்கா சிரிக்கறா."
நினைத்து பார்த்து சிரித்தேன்.

சரவணகுமரன் said...

// டிஆர், பேரரசு, குரோதம் பிரேம் மாதிரியான தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத தூண்களோட //

//தெரிஞ்ச நாள்ல இருந்து போஷாக்கா வளர்ந்துக்கிட்டே இருக்கு.//

ஹையோ ஹையோ

மோகன் கந்தசாமி said...

இப்படியே போனால் தொடரின் கடைசி பகுதியில் தான் விஷயத்துக்கு வருவீர்கள் போலிருக்கு. மொத்தம் எத்தனை பாகம் என்று சொல்லிவிடுங்கள்! நன்றாக உள்ளது பதிவு!


உங்கள் சகோதரியும் பதிவெழுதுகிறாரா? Double whammy? :-))))) சும்மா டமாஷு!

rapp said...

வருகைக்கும் பாராட்டிற்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க பாபு :)

rapp said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றிங்க சரவணக்குமரன் :)

rapp said...

மோகன் இந்த சஸ்பென்ஸ் கதைக்கு அடுத்தப் பகுதித்தான் கடைசிப் பகுதி. ஹி ஹி அதுவும் வழக்கம்போல பேஜாரா இருக்கும்.

ambi said...

//டிஸ்கி: நாளைக்கே இதன் தொடர்ச்சியை கண்டிப்பா போட்டிடறேன், //

அவ்வ்வ்வ்... இன்னும் மேட்டருக்கே வரல்லையே? :)))

rapp said...

ஹி ஹி அண்ணே, சீக்கிரம் போட்டிடறேண்ணே :):):)

சின்னப் பையன் said...

மன்னிச்சிக்கங்க ராப்... மீ த லேட்...

சின்னப் பையன் said...

ஒவ்வொரு பாராவையும் படிச்சி முடிக்கறதுக்குள்ளே மூச்சு வாங்குது..... ஏன்னா அவ்ளோ பெரிய வாக்கியங்கள்.... அவ்வ்வ்.....

சின்னப் பையன் said...

அடுத்த பகுதிக்காக மீ த வெயிட்டிங்.... நெக்ஸ்ட் மீட் பண்றேன்....

சின்னப் பையன் said...

48

சின்னப் பையன் said...

Me the 50th...:-)))

rapp said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றிங்க ச்சின்னப் பையன். நாங்கெல்லாம் நான்ஸ்டாப்பா பேசற மாதிரியே எழுதற அதிபுத்திசாலி வகையைச் சேர்ந்தவங்க:):):) நானும் எவ்வளவோ முயற்சி பண்றேன், சின்ன வாக்கியங்கள் எழுத வர மாட்டேங்குது. சித்திரமும் கைப்பழக்கம் தானே, போக போக சரி பண்ணிக்க முயற்சி பண்றேன்:):):)

SK said...

எங்கே அடுத்த பகுதி. இன்னைக்கு வர்றா போல தெரியலை.

கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் இருக்கும் ராப் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

வருண் said...

***முரளிகண்ணன் said...
ரெண்டு பதிவாயிருச்சு, இன்னும் மேட்டருக்கே வரல்லையே? ***

///Kamal said...
Rapp...வர வர உங்க அழிச்சாட்டியம் அதிகமாகிட்டே போகுது :)))
அது எப்படிங்க விஷயத்துக்கே வராம 2 பதிவு போடுறீங்க....///

-----------

rapp said...
ரொம்ப நன்றிங்க கமல்:)
//அது எப்படிங்க விஷயத்துக்கே வராம 2 பதிவு போடுறீங்க....//
இது எங்கம்மா எனக்குக் கொடுத்த சீதனம்.
----------------

வணக்கம் ராப்!

நான் மேலே உள்ள எதையுமே வாசிக்கவில்லை!

LOL!

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....................எஸ்கே, இப்படில்லாம் யாரும் கண்டுப்பாங்கன்னு நான் நினைக்கவே இல்லை. பொதுவா நான் நாளைக்குன்னு சொன்னா அது வந்து, அது வந்து, அவ்வ்வ்வ்வ்........................எனக்கு சமாளிக்கத் தெரியல. ஆனா என் பதிவை படிச்சும் நீங்க தர்ற ஆதரவை என்னாலயே நம்ப முடியல:):):) ரொம்ப ரொம்ப நன்றிங்க :):):) முடிஞ்சவரைக்கும் சீக்கிரமா அடுத்த பதிவை போடறேன்.

rapp said...

வாங்க வருண் வாங்க, ஹி ஹி, நான் சீக்கிரமா அடுத்தப் பதிவை போடறேன், ஆனா அதுல இப்படி சொல்லிடாதீங்க:):):) ரொம்ப ரொம்ப நன்றி:):):)

SK said...

மொக்கைனாலும்
முழுசா படிக்கணும் !!


பாதில விட்டா மண்டை வெடிச்சிடும். இப்போ சீகரம எழுதறேன்னு சொல்லுறீங்க. என்ன கொடுமை இது எல்லாம்.

ஒன்னும் இல்லை கார்கி கொடுத்த கவிதை டிப்ஸ் அதான் வெட்டி எழுதினேன்.

வருண் said...

****rapp said...
நான் சீக்கிரமா அடுத்தப் பதிவை போடறேன், ஆனா அதுல இப்படி சொல்லிடாதீங்க:):):)
17 September, 2008 1:33 AM ****

அதெப்படிங்க இதெல்லாம் ராப்? :)

எனிவே, உங்க எழுத்து நடை ரொம்ப யுனீக் கா இருக்குங்க. ஏதோ பிறவி எழுத்தாளர் போல எழுதுறீங்க, ராப்.

ஆமா, அதென்ன "அம்மா கொடுத்த சீதனம்"? அப்பா கோவிச்சுக்க போறாருங்க!

ISR Selvakumar said...

ராஜ் டிவியில மத்தியானம் ஆரம்பிச்சு, மிட் நைட் வரைக்கும் 'இந்தியன்' படத்தை போடுவாங்க.

நீங்க ராஜ் டிவியை விட இழுப்பீங்க போலருக்கு.

அப்புறம் என்னதான் ஆச்சு?

Sanjai Gandhi said...

//அப்போ என்ன நடந்துச்சின்னா..................//

என்னதான் டிவி பேட்டியா இருந்தாலும்.. சீரியல் கணக்கா இப்டியா முடிக்கிறது.. நல்லா கூட்டறாங்கய்யா சஸ்பென்ச.. :((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உலகமகா சோம்பேறி ராப் க்கு கண்டனங்கள்... ஒரு பதிவை பிச்சு பிச்சு எத்தனை பதிவா போடுவேப்பா நீ/

பாலராஜன்கீதா said...

//அவங்களும் இப்போ ப்ளாகர் ஆகிட்டாங்க, அவ்வ்வ்வ்வ்//
முதன்முதலாக வந்து வரவேற்று (http://aviyalselvi.blogspot.com/2008/08/munnurai.html )
பிறகு அதிக உரிமையுடன் பின்னூட்"டி"யபோதே சந்தேகமாக இருந்தது.
http://aviyalselvi.blogspot.com/2008/08/blog-post_24.html )
:-))

பரிசல்காரன் said...

அடுத்த பார்ட் எப்போ? இன்னும் உங்க ‘நாளைக்கு' வர்லியா? இல்ல, நூறு கமெண்ட் வந்தப்புறம்தான் அடுத்த பார்ட்டா?

SK said...

பரிசல் சொன்னது : // அடுத்த பார்ட் எப்போ? இன்னும் உங்க ‘நாளைக்கு' வர்லியா? இல்ல, நூறு கமெண்ட் வந்தப்புறம்தான் அடுத்த பார்ட்டா? //

அட இது தான் காரணமா. சொன்ன நாங்களே ஏற்பாடு பண்ணி புரிஞ்சுபோம்ள. இப்புடு சூடு. நன்றி பரிசல் தெளிவுபடுதியதர்க்கும் இனி வர இருப்பதற்கும்

SK said...

சுதந்திரம் வாங்கி 61 வருஷமாச்சு.. இல்லையா?

SK said...

காந்தி சுதந்திரத்துக்காக அஹிம்சா முறையில போராடினார். ஆனா அதுல சுபாஷ் சந்திரபோஸுக்கு கொஞ்சம் வருத்தம் தான்...

SK said...

பாபா தோத்ததுடுச்சுன்னப்ப, ரஜினியை என்னமா பேசினாங்க.. ஆனா, அவரு சொல்லி அடிச்சாருல்ல சந்திரமுகில..

SK said...

மருதநாயகம் எப்பப்பா வருது?

SK said...

நியாயத்தராசு படத்துல வானம்.. அருகில் ஒரு வானம்’ன்னொரு பாட்டு அருமையா இருக்கும்ப்பா...

SK said...

வேலை செய்யற இடத்துல இருந்து நெட்டை நோண்டி, ப்ளாக் படிக்கறது தப்பில்லையாடா தம்பி?

SK said...

அடங்க மாட்டீங்களா?

SK said...

அடங்க மறு!

SK said...

லக்கிலுக் புதன்கிழமை பொய் சொல்லப் போறோம் படம் பார்த்தாரு.

SK said...

பரிசல்காரன் நேத்து பொய் சொல்லப் போறோம் படம் பார்த்தாரு.

SK said...

நேத்து ஒருத்தர் கூப்ப்ட்டு ஃபோன் சார்ஜ் தீரற வரை திட்டறாருப்பா..

SK said...

எதிர்வினைக் கவிதைன்னா, சம்பந்தமில்லாம வருமாமே? அப்ப இது எதிர்வினைப் பின்னூட்டமா?

SK said...

75 ஆச்சா? ஆனா அப்படி இல்லையா? ஆமாவா.. இல்லையா?

SK said...

வள்ளுவர் அழைக்கும் போது, வாசுகி தண்ணி இறைத்துக் கொண்டிருந்தாராம்... இவர் அழைத்ததும் அப்படியே விட்டுவிட்டு வந்துட்டாராம்

SK said...

ஆனா, தண்ணி வாளி கிணற்றுல விழலயாம்

SK said...

இதுலிருந்து என்ன தெரீயுது?

SK said...

தெரியுது-ங்கறத தப்பா எழுதியிருக்கன்னு தெரியுது

SK said...

அப்ப உனக்கு தமிழ் சரியா எழுத வராதா?

SK said...

வரும்... ஆனா, சில சமயம் எழுதும்போது, இப்படி தப்பா வந்துடுதுப்பா. சாரி...

SK said...

ஆனா, சந்திப் பிழை அதிகமா வருதா உனக்கு?

SK said...

தெரியல. எழுதறேன். மேக்ஸிமம் தப்பு வர்றதில்லன்னு நெனைக்கறேன்ப்பா..

SK said...

அப்படியே தப்பா வந்தாலும் என்ன பண்ண? தலையெழுத்துன்னு படிச்சுட்டு போய்டுவாங்க.

SK said...

போன பின்னூட்டத்துல படிச்சுட்டுப் போய்டுவாங்க-ங்கறதுல ‘ப்’பை விட்டுட்டியே, அது சந்திப்பிழை அல்லவா?

SK said...

ஆமா, கவனிக்கல சாரி.

SK said...

யாருமில்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற நீ?

SK said...

இவ்ளோ கஷ்டப்படற,

வெண்பூ வந்து ஐ! நாந்தான் 100-ங்கப் போறாரு..

SK said...

அப்படி நடந்தா நாம என்ன பண்ண முடியும்?

SK said...

ஒண்ணும் பண்ணமுடியாது...

SK said...

பரிசளோட பதில் எல்லாம் முடிஞ்சே போச்சே என்ன பண்ணலாம்

SK said...

நீயே அடிடா கொசுமூடி தலையா அப்படின்னு சொல்லுறீங்களா

SK said...

அதுவும் சரி தான்

SK said...

ஆனா எனக்கு பரிசல் அளவுக்கு அழகா எழுத வரதே என்ன பண்ண

SK said...

அப்போ வேற யார் பதிவிலையாவது பரிசல் இது மாதிரி போடு இருகார பாக்கணும்

SK said...

அப்படி நான் பாக்க போனா இங்கிட்டு யாரவது வந்து நூறு அடிசுடுவான்களே

SK said...

யாரோ ரெண்டு பேரு நூறுன்னு அடிச்சு வெச்சுகிட்டு காத்துகிட்டு இருகர போல தெரியுது

SK said...

மனம் தளர விட கூடாது மாப்ளை

SK said...

ஹாப்பி வீக் எண்டு யா

SK said...

அப்படி நான் தான் நான் தான் சொக்கா சொக்கா

அடிச்சுட்டேன் அடிச்சுட்டேன் தனியா நின்னு தலைவி புகழை காப்பாத்திட்டேன்

SK said...

தலைவி இனியாவது அடுத்த பாகம் கொடுங்க. எங்களை எல்லாம் பாத்தா பாவமா தெரியலையா

VIKNESHWARAN ADAKKALAM said...

:)

SK said...

இந்த பதிவை முடிக்காமல் மற்ற பதிவில் சுற்றி கொண்டு இருக்கும் ராப் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். :(

RATHNESH said...

அடுத்த வருஷத்துக்குள்ள இந்தச் சிறிய பதிவை முடித்து விட்டீர்கள் என்றால் அதன்பிறகு,

// அந்த பாச்சா என்கிட்டே பலிக்காதுங்கறேன்:):):):)//

என்று ஓரிடத்தில் எழுதியிருந்தீர்களே; அது என்ன பாச்சா, பலித்தல் எல்லாம் என்று இன்னொரு குட்டிப் பதிவாக மூன்று வருடங்கள் மட்டும் எழுதும் படிக் கேட்டுக் கொள்கிறேன்.

Sanjai Gandhi said...

//டிஸ்கி: நாளைக்கே இதன் தொடர்ச்சியை கண்டிப்பா போட்டிடறேன், இந்தப் பதிவும் எக்கச்சக்க நீளமாகிடுச்சில்லையா:):):)//

எச்சுச் மீ தல.. ஒரு நாளைக்கு உங்க ஊர்ல எத்தனை நூரு மணி நேரங்கள்? :(

ஒரு வாரம் முடிஞ்சி போச்சி...

anantha-krishnan said...

நாளைக்கே போஸ்ட் போடுடறேன்னு சொன்னதா நம்ம்ம்ம்பி குந்தவெச்சு ஒக்காந்து இருக்கோம் !!
பிளாக் லோகத்தை நீண்டநாள் கழித்து எட்டிப் பார்க்கும் நான்
நம்ம ஏரியா பக்கம் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்

www.jega-pethal.blogspot.com

RAMYA said...

ஆபிசர் அண்ணே !!

அதென்ன டெக்னிக் அண்ணே விசயத்துக்கு வராமே சும்மா கலங்கவைக்கிறேங்கள நியாயமா, வாங்கன்னே கலாயிச்சது போதும், விஷயம் எப்போ? விரைவில் எழுதனும் சரியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் தான்.

ரம்யா

Unknown said...

eppa adutha part varum ...
Grrrrrrrrrr .....:(

vivek.j

manikandan said...

திருப்பி மாமியார் வீட்டுக்கு போய்டீங்களா ? ஒரு பதிவையும் காணோம்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

>>பேசும்போது அப்படியே வேற மாதிரி, விவரம் அடுத்த பதிவில் :):):)>>

ஏன் மணிரதனம் ஸ்டைலில் பேசுவீங்களோ????!!!

லெனின் பொன்னுசாமி said...

அய்ய்ய்ய்யோ.. இப்படிப்பட்ட செம கலாட்டவான ஆள இதுவரை பாத்ததே இல்லை.. நான் பாத்ததிலேயே அஜால் குஜால் காமெடி கிங்(கி) நீங்கதானுங்க. சிரிச்சு சிரிச்சு சீனாதான ஆகிட்டேன்.