Sunday, 31 August, 2008

நான் வந்துட்டேன்

வணக்கம் நண்பர்களே. நான் முன்னறிவிப்பின்றி விடுமுறை எடுத்ததற்கு முதற்கண் என் வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னை விசாரித்து எழுதிய பிரேம்ஜி, எஸ் கே, இவன், மங்களூர் சிவா, ச்சின்னப்பையன், அப்துல்லா அண்ணா, அம்பி அண்ணா, முத்துலெட்சுமி-கயல்விழி, முரளிக்கண்ணன் சார், தன் அவியலிலேயே இடமளித்து என் ப்ளாகிற்கு நல்ல விளம்பரமளித்த கிருஷ்ணா(பரிசல்காரன்), தாமிரா, சரவணக்குமரன், தமிழன் மேலும் அவ்வப்பொழுது என் ப்ளாகையும் நினைவில் கொண்டு திறந்து பார்த்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. தவறி இதில் எவர் பெயராவது விடுபட்டிரிந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். இனி வழக்கம்போல என் பாடு கொண்டாட்டம்தான், உங்க பாடு திண்டாட்டம்தான் :):):)

81 comments:

குசும்பன் said...

வாங்க வாங்க!

குசும்பன் said...

//. இனி வழக்கம்போல என் பாடு கொண்டாட்டம்தான், உங்க பாடு திண்டாட்டம்தான் :):):)//

ரைட்டு உசாரா எஸ்கேப் ஆகிடுவோம்!

rapp said...

அடடே, சகுனம் சூப்பரா இருக்கே, முத ரெண்டு பின்னூட்டமே, நான் தலைவியாக விரும்பும் கும்மி சங்கத்தில் இருந்தா, ரொம்ப ரொம்ப நன்றி குசும்பன் :):):)

ச்சின்னப் பையன் said...

வாங்க வாங்க!!!

வருண் said...

மக்கள் இரண்டு வகைங்க ராப்!

வாயளவில் விசாரிப்பவர்கள் ஒன்று.

மனதிலேயே உங்கள் "அட்டகாசத்தை" பார்க்காமல் மிஸ் பண்ணுறவங்க இரண்டாவது வகை!

நான் இரண்டாவது வகைங்க! ;-?

வடகரை வேலன் said...

வாங்க. எங்க போய்டிங்க. நீங்க இல்லாம கலகலப்புக்குப் பஞ்சம்.

இராம்/Raam said...

ஊருக்கு போயிருந்தீங்களா???

rapp said...

வாங்க ச்சின்னப்பையன் வாங்க. நம்ம தலயோட பட வெற்றியை தொடர்ந்து நாளை முதல் நம்ம சங்க உறுப்பினர்கள் எல்லாம் நம்ம தலயின் அருமை பெருமைகளை போற்றி ஆளுக்கொரு பதிவாவது போட்டு மக்களை அறியாமை இருளில் இருந்து மீட்போம் :):):)

astro said...

நம்ம தலைவர் படம் ரிலீஸ் ஆனா நேரத்தில் இப்படி லீவு எடுத்து விட்டீர்களே !
தலைவருக்கு தெரிந்தால் என்ன ஆகும் ?
வருண் சொன்னதை நானும் மறுக்கா சொல்லிக்கிறேன் !

ARUVAI BASKAR said...

நம்ம தலைவர் படம் ரிலீஸ் ஆனா நேரத்தில் இப்படி லீவு எடுத்து விட்டீர்களே !
தலைவருக்கு தெரிந்தால் என்ன ஆகும் ?
வருண் சொன்னதை நானும் மறுக்கா சொல்லிக்கிறேன் !

விஜய் ஆனந்த் said...

வாங்க வாங்க!!!

welcome back!!!!

அப்பாடி...இனிமே கும்மிக்கு பஞ்சமேயில்ல!!!

rapp said...

வருண், என்னங்க இது, இப்படி அருமையா நெஞ்சை தொடர மாதிரியெல்லாம் எனக்கு பின்னூட்டம் போடறீங்க, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்................ அப்புறம் நானும் பதிலுக்கு எதாவது உருப்படியா எழுதிடுவேன்(இல்லைனா தேத்திடுவேன்) ஆமா:):):)

rapp said...

வடகரை வேலன் சார், கவலைய விடுங்க, இனி நாம சங்கத்து வேலைய ஆரம்பிச்சிடுவோம். நான் நீங்கல்லாம்(நீங்க, கிருஷ்ணா, வால்பையன், சஞ்சய்) பாலா சாரோட புத்தக வெளியீட்டு விழாவிற்கு போயிருப்பீங்கன்னு நினைச்சேன்

rapp said...

ஆமாங்க இராம். எங்க மாமியார் வீட்டுக்கு போயிருந்தேன். நான் பெரிய பஜாரியா, எங்க மாமியார் பெரிய பஜாரியான்னு போட்டி நடந்ததில் எங்க மாமியார் எக்கச்சக்க மதிப்பெண் முன்னணி வகிச்சு பரிசை அள்ளிக்கிட்டு போயிட்டாங்க. அதான் கும்மி அடிக்கக்கூட வர முடியலை

rapp said...

தப்புதாங்க astro. அதனால்தான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுருக்கேன் எல்லார்கிட்டயும்

ராமலக்ஷ்மி said...

//இனி வழக்கம்போல என் பாடு கொண்டாட்டம்தான், உங்க பாடு திண்டாட்டம்தான்//

குஷாலான கொண்டாட்டங்கள்!
தித்திக்கும் திண்டாட்டங்கள்!

வாழ்த்துக்கள் rapp.

rapp said...

aruvai baskar உங்கக்கிட்டையும் நிபந்தனையற்ற மன்னிப்பு வேண்டிக்கறேன்.

rapp said...

விஜய் ஆனந்த் உங்க நம்பிக்கையை நான் காப்பாத்தறேன், இனி கும்மிக்கு பங்கம் வராமல் காப்பதே என்னோட தலையாய கடமை. உங்களுக்கு குழந்தை பிறந்திருக்கு இல்லையா, அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

ambi said...

Welcome back. :)


//நான் பெரிய பஜாரியா, எங்க மாமியார் பெரிய பஜாரியான்னு போட்டி நடந்ததில் எங்க மாமியார் எக்கச்சக்க மதிப்பெண் முன்னணி வகிச்சு பரிசை அள்ளிக்கிட்டு போயிட்டாங்க.//

ROTFL :)))

rapp said...

வாங்க ராமலக்ஷ்மி மேடம், ரொம்ப ரொம்ப நன்றி :):):)

rapp said...

ஹி ஹி அம்பி அண்ணா, ரொம்ப ரொம்ப நன்றி :):):)

ambi said...

பாவம் உங்க மாமனார் மற்றும் உங்க ரங்கு. :)))

tamil cinema said...

வாங்க... உங்களத்தான் எதிர்பாத்தேன்...

வருண் said...

****வருண், என்னங்க இது, இப்படி அருமையா நெஞ்சை தொடர மாதிரியெல்லாம் எனக்கு பின்னூட்டம் போடறீங்க, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. ****

LOL!

அதான் கும்மியடிக்கத்தான் ஒரு கூட்டமே வச்சிருக்கீங்களே!

ஆமா, நெஞ்சைத்தொடுமளவுக்கா இருக்கு? உண்மையைச் சொல்லுங்கள்! நீங்களும் முதல் வகைதானே ராப்? ;-)

Just kidding, rapp!

Welcome back, rapp! ;-)

பரிசல்காரன் said...

ஐயோ!

சந்தோஷத்துல குதிச்சுட்டேங்க ராப்!

பரிசல்காரன் said...

அட நான்தான் 25ஆ?

வாயளவுல விச்சாரிக்கலீங்க. மனசளவுல நிஜமாவே உங்களை மிஸ் பண்ணினேன். என் அவியல்ல சொன்ன ஒவ்வொண்ணும் நெஜம்.

நெறைய ஃப்ரெண்ட்ஸ் இருந்தாலும் யாரோ குறிப்பிட்ட ஒருத்தரை காணோம்ன்னா அவனையும் கூட்டீட்டு வந்திருக்கலாம்டான்னு நெனைபோம் இல்லியா? அது மாதிரி உங்களை மிஸ் பண்ணினோம்!

வந்ததற்கு நன்றியோ நன்றி!!!

மங்களூர் சிவா said...

வெல்கம் பேக்!

மங்களூர் சிவா said...

தலைவரோட படம் வந்ததும் பாட்டை பதிவா போட்டுட்டு உங்களை தேடினேன் சொல்றதுக்கு நீங்க ஆள் எஸ்கேப்பு விடுவோமா

நிலா நிலா ஓடி வா

மங்களூர் சிவா said...

//. இனி வழக்கம்போல என் பாடு கொண்டாட்டம்தான், உங்க பாடு திண்டாட்டம்தான் :):):)//

ரைட்டு! பாத்திடுவோம்!
:)

மங்களூர் சிவா said...

/
எங்க மாமியார் வீட்டுக்கு போயிருந்தேன். நான் பெரிய பஜாரியா, எங்க மாமியார் பெரிய பஜாரியான்னு போட்டி நடந்ததில் எங்க மாமியார் எக்கச்சக்க மதிப்பெண் முன்னணி வகிச்சு பரிசை அள்ளிக்கிட்டு போயிட்டாங்க.
/

:))))))))))))))
ஹா ஹா இப்பிடி எல்லாம் வேற நடக்குதா !?

அத பத்தி சிம்பிளா ஒரு 10 போஸ்ட் வரும்னு எதிர்பார்க்கிறோம்!!

கிரி said...

வாங்க ராப் எப்படி இருக்கீங்க? விடுமுறை எல்லாம் நன்றாக இருந்ததா?

புத்துணர்வோடு வந்து இருக்கீங்களா? :-))

விஜய் ஆனந்த் said...

// rapp said...
விஜய் ஆனந்த் உங்க நம்பிக்கையை நான் காப்பாத்தறேன், இனி கும்மிக்கு பங்கம் வராமல் காப்பதே என்னோட தலையாய கடமை. உங்களுக்கு குழந்தை பிறந்திருக்கு இல்லையா, அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் //

:-)))....

ரொம்ப ரொம்ம்ம்பபப நன்றீங்க ஆப்பீஸ்ஸஸர்!!!!

:-)))....

SanJai said...

வாங்க தலைவி.. தலைவர் பட வெளியீட்டிற்காக மன்றத்து சார்பில் முக்கிய பணிகளை சிறப்பாக செய்துவிட்டு திரும்பி இருக்கும் எங்கள் தலைவியை வரவெற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

//தவறி இதில் எவர் பெயராவது விடுபட்டிரிந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்//

தலைவருக்காக இதை கூட பண்ண மாட்டோமா என்ன? மன்னிச்சிட்டேன் தல.. :))

தமிழ்ப்பறவை said...

ஆஹா வந்துட்டாங்கய்யா.. வந்துட்டாங்கய்யா.... வருக மொக்கை தருக...

rapp said...

ஹி ஹி அம்பி அண்ணா, பஜாரித்தனமே, என் ரங்கமணியால்தானே :):):)

rapp said...

ரொம்ப நன்றிங்க tamil cinema

rapp said...

வருண் அப்போ உங்களுக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்கா, அப்படி இருந்தா சுத்தமா துடைச்சிடுங்க, நான் தீவிரமா கும்மியடிப்போர் சங்கத்தலைவியாக முயற்சிப் பண்ணிக்கிட்டு இருக்கேன் :):):)

rapp said...

ஹி ஹி கிருஷ்ணா ரொம்ப சந்தோஷம், உண்மைய சொல்லப்போனா, நான்தான் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சொல்லணும். நான் வழக்கம்போல அன்னைக்கு நடுராத்திரி வந்து படிக்க உக்காந்து உங்கப் பதிவ பார்த்த உடன் ரொம்ப சந்தோஷமாகிடுச்சி. இனி கும்மியோ கும்மிதான் :):):) நீங்க இன்னைக்கு சென்னைக்கு போகலியா??? வெயிலான் அவர்கள் நீங்க போவீங்கன்னு ஒரு பின்னூட்டம்(ஆசிப்மீரான் அவர்களின் பதிவில்) போட்டதால கேக்கிறேன்

rapp said...

ரொம்ப நன்றிங்க சிவா, நான் உடனே வந்து பார்த்தாச்சு. ஆனா எங்குமே பின்னூட்டம் போட முடியல. இனி தீவிர கும்மிதான். தலயோட பாட்ட போய் நான் தவற விடுவேனா?!?!:)

//
எங்க மாமியார் வீட்டுக்கு போயிருந்தேன். நான் பெரிய பஜாரியா, எங்க மாமியார் பெரிய பஜாரியான்னு போட்டி நடந்ததில் எங்க மாமியார் எக்கச்சக்க மதிப்பெண் முன்னணி வகிச்சு பரிசை அள்ளிக்கிட்டு போயிட்டாங்க.
/

:))))))))))))))
ஹா ஹா இப்பிடி எல்லாம் வேற நடக்குதா !?

அத பத்தி சிம்பிளா ஒரு 10 போஸ்ட் வரும்னு எதிர்பார்க்கிறோம்!!//

எதுக்கு இப்பவே எப்படியெல்லாம் தப்பிச்சிக்கிட்டு ஓடலாம்னு ப்ளான் பண்ணவா? அஸ்கு புஸ்கு என் ரங்கமணி பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

rapp said...

ரொம்ப நன்றிங்க கிரி. கண்டிப்பா பயங்கர புத்துணர்வோடத்தான் வந்திருக்கேன். இனி பாருங்க என் கும்மியை :):):)

rapp said...

//
// rapp said...
விஜய் ஆனந்த் உங்க நம்பிக்கையை நான் காப்பாத்தறேன், இனி கும்மிக்கு பங்கம் வராமல் காப்பதே என்னோட தலையாய கடமை. உங்களுக்கு குழந்தை பிறந்திருக்கு இல்லையா, அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் //

:-)))....

ரொம்ப ரொம்ம்ம்பபப நன்றீங்க ஆப்பீஸ்ஸஸர்!!!!
//
இந்த நன்றி என்னோட வாழ்த்துக்கா, இல்லை கும்மியை தொடர்வேன்னு சொன்னதுக்கா :):):)

பெத்தராயுடு said...

ஆகஸ்டு மாசம் ப்ரான்ஸ்ல விடுமுறை காலம் இல்லையா? மறந்து போச்சு.

எங்கே ஆல்ப்ஸ் மலை கிராமங்களா, இல்ல ரிவியேரா கடற்கரைகளா?

உங்க தல வேற ஹிட் கொடுத்திருக்காரு. கொண்டாடுங்க!

rapp said...

ரொம்ப ரொம்ப நன்றிங்க சஞ்சய் :):):)

அடடா, என்னோட இரகசிய விசிட் கோவை வரைக்கும் வந்திடுச்சா, வர வர எல்லா இரகசியங்களும் பாலபாரதி அவர்களோட கல்யாண ரகசியம் மாதிரி காமடியா மாறிடுச்சி. என்னப் பண்றதுங்க சஞ்சய், தலயோட மன்றத்தலைவி பதவின்னா சும்மாவா, நம்ம மன்றக் கிளைகளுக்கு டிக்கட் விநியோகம் என்ன, வசூல் எக்கச்சக்கமா இருக்கறதால பாராட்டு விழாக்களுக்கும் வெற்றிவிழாக்களுக்கும் தேதிகள் கொடுப்பதில் நம்ம தலக்கிட்ட ரெக்கமண்ட் பண்ணச்சொல்லி பல நாட்டு ரசிகர்களிடம் இருந்து வந்த நச்சரிப்புகள் என்ன, புதுப்புது கிளைகள் தொடங்க அனுமதி கேட்டு வந்த விண்ணப்பங்கள் என்ன, ஸ்ஸ்ஸ்ஸ் ஒரே பிசி போங்க :):):)

rapp said...

ரொம்ப நன்றிங்க தமிழ்ப்பறவை :):):)

விஜய் ஆனந்த் said...

// rapp said...

இந்த நன்றி என்னோட வாழ்த்துக்கா, இல்லை கும்மியை தொடர்வேன்னு சொன்னதுக்கா :):):) //

அவ்வ்வ்வ்..

அதுதான் 2 தடவ ரொம்ப ரொம்ப-ன்னு போட்டிருக்கனே...ரெண்டுத்துக்கும் சேத்துதான்!!!!

rapp said...

ரொம்ப நன்றிங்க பெத்தராயுடு, நீங்க வேற இங்க விடுமுறை இல்லாத மாதங்கள்தான் குறைவு. மே மாசத்தில் பாதிநாட்கள் அரசு விடுமுறை. ஜூன் மாதத்தில் இருந்து ஆகஸ்டு வரை கோடை விடுமுறை. மறுபடி நவம்பரில் ஒரு வாரம் விடுமுறை. டிசம்பர் கடைசியிலும் ஜனவரி பாதி வரையும் கிருஸ்துமஸ் மற்றும் குளிர்கால விடுமுறை. பிப்ரவரியில் ஒரு வாரம் விடுமுறை. பின்னர் ஈஸ்டர் விடுமுறை ஒருவாரம், இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இப்படி எக்கச்சக்க விடுமுறை இருந்தால் யாருக்காவது குழந்தை பெத்துக்க தோனுமா? அவங்களை எப்படி சமாளிக்கறது, அவ்வ்வ்வ்வ்வ்....................

நான் போனது ஆல்ப்ஸ், அங்கிருந்து இத்தாலி, பின்னர் மான்டிகார்லோ, மற்றும் அதனருகில் உள்ள கடற்கரை பகுதிகள் இப்படி ஒரு மாதம் பெண்டு நிமிர்ந்தது.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

வாங்க வாங்க வாங்க வாங்க வாங்க வாங்க வாங்க வாங்க வாங்க வாங்க
வலது காலுன்னு இல்ல...ஏதோ ஓரு காலு...எடுத்து வச்சு வாங்க வாங்க வாங்க!!!!!!!!!!!

rapp said...

ஹி ஹி அப்துல்லா அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி :):):)

இவன் said...

வந்திட்டீங்களா?? வந்திட்டீங்களா?? வந்திட்டீங்களா?? எங்க போய் இருந்தீங்க??

மோகன் கந்தசாமி said...

Welcome back. ச்சும்மா ட்டமாஷ்... -50 க்கு பதிவெழுத ரெடியா என்பதை மெயில் செய்யுங்கள் ராப். Ad ரெடியா இருக்கு. இணைத்துவிடுகிறேன்.

தமிழன்... said...

வாங்க வாங்க...:))

கோவை விஜய் said...

வருக ! வருக !

கோவை விஜய்

தமிழன்... said...

இனிமே வக்கேஷன் போறதா இருந்தா சொல்லிட்டுப்போகணும்...:)

தமிழன்... said...

/
எங்க மாமியார் வீட்டுக்கு போயிருந்தேன். நான் பெரிய பஜாரியா, எங்க மாமியார் பெரிய பஜாரியான்னு போட்டி நடந்ததில் எங்க மாமியார் எக்கச்சக்க மதிப்பெண் முன்னணி வகிச்சு பரிசை அள்ளிக்கிட்டு போயிட்டாங்க.
/


:))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

என்ன பரிசு கிடைச்சது உங்க மாமியாருக்கு ? அத சொல்லவே இல்லையே.. :)

துளசி கோபால் said...

என்னதான் வேட்டியாபீஸரா இருந்தாலும் இப்படிச் சொல்லாமக்கொள்ளாமப் போனது அவ்வளோ நல்லாயில்லே ...ஆமாம்....

எல்லாரும் தவிச்சுப்போயிட்டாங்கல்லே!!!!

என்ன பரிசு என்னா விசயமுன்னு விளக்கமா ஒரு ஹோம் ஒர்க் பதிவை எழுதிக்கிட்டு வாங்க.

வெண்பூ said...

வாங்க.. வாங்க.. நல்வரவு.. மறுபடியும் ஒரு சூப்பர் மொக்கையை கொடுத்து நீங்க இத்தனை நாள் இல்லாத குறைய சரி பண்ணுங்க...

Mahesh said...

அய்யா வாங்க... அந்த மூணு ஃபோட்ட்டோவயே ரொம்ப நாள் பாத்து போரடிச்சுருச்சு... நம்ம கடைப்பக்கம் வேற உங்க காலடி இன்னும் படல... வந்து வாழ்த்தீட்டுப் போங்க...

முரளிகண்ணன் said...

\\முரளிக்கண்ணன் சார்\\

உளவுத்துறை அளவுக்கு நான் ஓர்த் இல்லீங்க ஆப்பிசர்

சார் வேண்டாமே

Sri said...

ஹை அக்கா வந்துட்டீங்களா?? ரொம்ப சந்தோஷம்...!! :))

அபி அப்பா said...

என் பேர் விட்டு போச்சு! அதற்காண கண்டன கூட்டம் விரைவில் நடைபெறும். தாங்களும் அவசியம் கலந்துக்க வேணும் அக்கா:-))

அன்பு சின்ன தம்பி
அபிஅப்பா

SK said...

வருக வருக. கும்மிக்கு என் வாழ்த்துக்கள்

கார்க்கி said...

வாங்க தலைவி.... வெட்டி ஆபிஸர் வேலை இருந்ததுனு சொன்னா மத்தவங்க நம்புவாங்க.... நான் மாட்டேம்ப்பா

rapp said...

இவன் ரொம்ப ரொம்ப நன்றிங்க, நான் மேல சொல்லியிருக்கக் காரணம்தான் :):):)

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.................. இப்போ உடனே மெயில் அனுப்பிடறேன் மோகன், தாமதத்திற்கு மன்னிக்கவும்.

rapp said...

ரொம்ப நன்றிங்க தமிழன். இனிக் கண்டிப்பா லீவ் லெட்டர் கொடுத்திட்டு போறேன், இந்தவாட்டி நான் நடுவில் பின்னூட்டம் போடலாம்னு நினைச்சேன், ஆனா முடியலை.அதான்:):):)

rapp said...

ரொம்ப நன்றிங்க விஜய்

rapp said...

ஹி ஹி முத்து, இங்க அந்த பரிச சொன்னா எல்லாரும் என்னை காய்ச்சி எடுத்திடுவாங்க. அந்த ரகசியத்தை நீங்க விடுமுறையில் இருந்து வந்தவுடன் சொல்றேன் :):):)

rapp said...

துளசி மேடம், என்னப் பரிசா இருக்கும்னு தெரியலையா உங்களுக்கும்:):):) வேறன்ன, இனி மாசத்துக்கொருதரம் தரும் தரிசனம் (இந்த ஊர்)ஆடி அமாவாசைக்குன்னு மாத்திக்கறதுதான்

rapp said...

ரொம்ப நன்றிங்க வெண்பூ. அவ்வ்வ்வ்வ்.............வெண்பூ என்கிட்டே இவ்வளவு சுறுசுறுப்பல்லாம் திடீர்னு வந்திடுமா, வழக்கம்போல கும்மிப் போக மீதி நேரத்தில் ஒரு பதிவு போட்டிடறேன்:):):)

rapp said...

ரொம்ப நன்றிங்க மகேஷ், கண்டிப்பா சீக்கிரம் வருகிறேன்:):):)

ஹி ஹி இனிமே சார் போடாம கூப்பிட முயற்சி பண்றேங்க முரளிக்கண்ணன் :):):)

ரொம்ப நன்றிங்க ஸ்ரீ

rapp said...

ஹை (என் குட்டியூண்டு தம்பிப் பாப்பா)அபி அப்பா முத முதலா ஒரு பதிவை முழுசா படிச்சு பின்னூட்டம் போட்டிருக்கார், எல்லாரும் வந்து இந்த அதிசயத்தை கண்குளிரப் பாருங்க:):):) இதிலிருந்து என்னத் தெரியுதுன்னா (என் குட்டியூண்டு தம்பிப் பாப்பா)அபி அப்பா படிச்சு பின்னூட்டம் போடனும்னா, பதிவு பத்து வரிக்கு(ரொம்ப அதிகமா சொல்லிட்டேனோ) மேல இருக்கக் கூடாது:):):)

rapp said...

ஹை (என் குட்டியூண்டு தம்பிப் பாப்பா)அபி அப்பா முத முதலா ஒரு பதிவை முழுசா படிச்சு பின்னூட்டம் போட்டிருக்கார், எல்லாரும் வந்து இந்த அதிசயத்தை கண்குளிரப் பாருங்க:):):) இதிலிருந்து என்னத் தெரியுதுன்னா (என் குட்டியூண்டு தம்பிப் பாப்பா)அபி அப்பா படிச்சு பின்னூட்டம் போடனும்னா, பதிவு பத்து வரிக்கு(ரொம்ப அதிகமா சொல்லிட்டேனோ) மேல இருக்கக் கூடாது:):):)

rapp said...

ரொம்ப நன்றிங்க எஸ் கே

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........கார்க்கி வேலையிலிருக்க மத்தவங்க போற விடுமுறையில் என்னையும் செத்துக் கூட்டிக்கிட்டு போனாங்க, ரைட்டா:):):) ஆனாலும் இதைப் பத்தி ஒரு தனிப் பதிவே போடலாம்தான் :):):)

Ramya Ramani said...

Welcome back rapp akka :)

Dubukku said...

welcome back :))

பல்வேறு டாப்பிக்ல கலக்கறீங்க...போட்டோ சூப்பர்

தாமிரா said...

ஒரு நாள் லேட்டானா போதுமே, எழுபத்தெட்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுருவேனே..

மீ த லேட்டு.!
வெல்கம் பேக்கு.! (இதில் இரட்டை அர்த்தம் இருக்குதுன்னு நான் நினைக்கலை)

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்............................ரம்யா ரமணி, நான் உங்களுக்கு அக்காவா, திரும்ப வந்தவுடனே எல்லாரும் கலாச ஆரம்பிச்சிட்டீங்களா?

rapp said...

டுபுக்கண்ணா, ரொம்ப ரொம்ப நன்றி. எங்களுக்கெல்லாம் நீங்க பார்முக்கு மறுபடி வந்ததில்தான் சந்தோஷமோ சந்தோஷம் :):):)

rapp said...

me the 80th :):):)

rapp said...

தாமிரா இப்படித்தான் இருக்கணும் சூப்பர், நீங்க அந்த மாதிரி ஸ்பெஸிபிக்கா சொல்லலைனா நான் 'பேக்கு' வந்திருக்கவேமாட்டேன்:):):) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....................