Thursday 22 May, 2008

Paris பதிவுகள்

நான் பாரிசில் கால் வைத்தது 31 டிசம்பர் 2006 பகல்லதான். என் ரங்கமணியோட நிம்மதியா சேர்ந்து இருக்கலாம்னு ஜாலியா எக்சைட்டிங்கா இருந்தாலும், இனிமே வீட்டுக்கு போகணும்னா இப்ப பட்ட இம்சைய(flight travel தாங்க, பின்ன அன்னிக்குன்னு பாத்து air france flight 3 மணிநேரம் தாமதம்) திரும்பி படணும்னு நெனைச்சப்போ சோகமாவும், கடுப்பாவும் இருந்துச்சு. நாம இந்தியால என்ன நெனைக்கறோம், பாரிஸ்ல நியூ இயர்க்கு பயங்கரமா கொண்டாட்டங்கள் இருக்கும்னுதானே, அதான் இல்லே. நாங்க வந்து வீட்ல luggageஐ வச்ச உடனே இவர் சீக்கிரம் கிளம்பு, மார்க்கெட்டுக்கும் (நம்ம சந்தை மாதிரி) சூப்பர் மார்க்கெட்டுக்கும் போகலாம்ங்கராறு. ஏன்னா ஜனவரி 1 & 2 எல்லாமே மூடி இருக்கும்னு சொன்னாரு.சரின்னு அதையெல்லாம் முடிச்சுட்டு படுத்துத் தூங்கிட்டோம்.

கரெக்டா 12 மணிக்கு இவர் நண்பர் தொலைபேசியில வாழ்த்தினப்பதான், அடடா புத்தாண்டு பொறந்தாச்சானு எழுந்து உட்கார்ந்தேன். அப்புறம் வேற என்ன, கடமை என்னை வா வானு அழைச்சுது. வெளிநாடு போற புதுப்பொண்னோட கடமை என்னங்க? 3 மணிநேரம் தொடர்ந்து, கணவர்கள் கிட்டத்தட்ட returnticket எடுக்கிற நெலமைக்கு போற வரைக்கும் தேம்பி தேம்பி அழறதுதானே, அத செவ்வனே செஞ்சேன்.

காலைல முதல்ல eiffel towerஅ சுத்தி பாக்க போலாம்னு சொன்னா,இவரு இல்லை அப்புறம் போகலாம், இப்போ notre dame கத்தீட்ரலுக்கு போகலாம்னாரு. அங்க போனா ஒரு நூறு பேரு க்யூல நிக்குறாங்க. சரின்னு போனோம், அழகா பிரம்மாண்டமா இருந்தது.இதுக்கு மேல என்கிட்டே இருந்து வர்ணிப்ப எதிர்பாக்காதீங்க, என்னால historical placesஅ எல்லாம் இவ்ளோ தான் ரசிக்க முடியும். அப்புறம் வெளியில சாப்பிட்டு சும்மா பாரிஸ் தெருக்களை ரசிக்கலாம்னு பாத்தா எனக்கு கொஞ்சம் பயமாயிடுச்சு ஏதோ ஒரு தலைவர் புட்டுக்கிட்டு ஊரடங்கு உத்தரவு போட்டாப்போல் ஒரு ஜீவனையும் காணும். கத்தீட்றல்ல இருந்தது புல்லா டூரிஸ்ட்டாம். செரினு வீட்டுக்கு வந்தாச்சு. அடுத்த நாளாவது eiffel towerஅ பாக்கலாம்னா இன்னிக்கும் Arc de Triomphe,Champs Elysées க்கெல்லாம் போலாம்ங்கரார். செரின்னுட்டு போனம். எல்லாம் நல்லா இருந்துது. இன்னிக்கு எனக்கொரு டௌட் ஸ்லைட்டா வந்திச்சி. இவரு ஏன் தொடர்ந்து eiffel tower கூட்டிட்டு போக மாட்டேங்கராருன்னு.

இப்போ உங்களுக்கொரு சந்தேகம் வரும்,நான் ஏன் eiffel டவர் பைத்தியம் புடிச்சு அலயரேன்னு. வேறோன்னுமில்லைங்க எங்க சொந்தக்காரங்கல்லாம் நான் அங்க நிக்கிறா மாதிரி போட்டோ அனுப்பலைனா நான் பாரிஸ்ல இருக்கிறதை நம்பாம, என் ரங்கமணிய பத்தி இல்லாத வதந்தி எல்லாம் கிளப்பி விடுவாங்க(ஏன்னா அவரு பிரன்ச்சுக்காரராமா) என்னாமோ நம்ம ஊர்னா அப்டியே நூத்துக்கு நூறு இவங்க கேரண்ட்டி மாதிரி. எல்லா எடத்திலயும் எல்லாமும் உண்டு. நம்ம நேரமும்,நெனைப்பும் சரியா இருந்தா எல்லாம் சரியா நடக்கும்னு நம்ப மாட்றாங்க.

அடுத்த நாளும் வா gare du nord போலாம், உனக்கு தேவையான இந்தியன் பொருட்கள் எல்லாம் வாங்கிக்கலாம்ங்கராரு. செரின்னு போனோம்னு வச்சிக்கங்க, ஆனா எனக்கு சந்தேகம் உறுதியாகிடுச்சு. அடுத்த நாள் நான் ஏதோ சிஐடி வேலை பாக்கரோம்னு நெனைச்சு, நீங்க ஏன் அங்க போக தவிர்க்கரீங்கன்னு எனக்கு தெரியும்னு சொன்னா, நான் எதிபார்க்காத ரியாக்ஷன் காமிக்கராரு. அது என்னான்னு அடுத்த பதிவுல பாப்போம்.

ஏங்க காறி துப்பறீங்க, மொக்கை சீரியல்ல எல்லாம் சஸ்பென்ஸ் இதை விட கேவலமா வச்சாலும் வீட்ல இருக்கிறவங்களுக்காக பொருத்துக்கறீங்க இல்ல, அடுத்த நாளும் பாக்கறீங்க இல்ல, அப்டித்தான் இதுவும்,தினமும் வந்து பாருங்க.

9 comments:

ambi said...

//நான் அங்க நிக்கிறா மாதிரி போட்டோ அனுப்பலைனா நான் பாரிஸ்ல இருக்கிறதை நம்பாம,//

ROTFL :))) ரசித்தேன்.

இதுல தொடர்ச்சி வேறயா? சரி தான் தெளிவா இருக்கீங்க. :))

மோகன் கந்தசாமி said...

ஆமா! ஏங்க Air France எப்பவும் லேட் -ஆ வருது இல்லன்னா பேக்கேஜ் லேட் -ஆ தருது?

rapp said...

அண்ணே, நம்ம ப்லோகை ஒரு தடவை பாக்கிற மனத்துணிவு இருக்கிறவங்களை ஊக்கப்படுத்தனும்னு தான் தொடரும்னெல்லாம் போடறது. இந்த மொக்கைய தினமும் படிக்கிறவங்களுக்கும் ஒரு காரணம் தேவையாச்சேனு ஏதோ என்னாலான சேவை.

rapp said...

மோகன்,
இத விட கொடுமை அவங்க வெச்சிருக்கிற பொம்பள தாதா air hostessகளும், அப்டி ஒரு thickஆன airport staffகளும் தான், உலக மகா அராஜகம்.

இம்சை said...

கலக்கறிங்க பயங்கர சஸ்பென்ஸ் தொடரா இருக்கும் போல இருக்கு... வாழ்த்துக்கள்

rapp said...

ரொம்ப நன்றி இம்சை சார், நீங்க தினமும் வந்து இப்டி உற்சாகப் படுத்தினா நல்லா இருக்கும்.

இம்சை said...

அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க... உங்க மாதிரி புது ஆட்கள உற்சாகப்படுத்த தானே எங்க கும்மி சங்கம் செயல்படுது

பரிசல்காரன் said...

நல்லா சஸ்பென்ஸ் வைக்கறீங்க! லக்கி லுக் blog-ல என் தானைத் தலைவன் ஜெ.கே.ரித்தீஷ் பத்தி எழுதினதப் படிச்சு ஆச்சரியப் பட்டேன்! நான் இன்னைக்குதான் என்னோட ஒரு பதிவுல `அவரைப்' பத்தி எழுதியிருந்தேன்.. படிச்சுப் பாருங்க. (நம்ம வூட்டுப் பக்கம் காணோமே ரெண்டு நாளா? ரொம்ப பிசியோ? )

கோவை விஜய் said...

eiffel tower படம் எப்போ?

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com