Wednesday 21 May 2008

பீட்டர்

எனக்கு ரொம்ப பிடிச்ச சீரியல்னா full house னு ஒரு சீரியல் தான்.அது என்னமோ இந்தியால 10 வருஷம் கழிச்சுதான் போட்டு இருக்காங்க. ஆனா முதல் எபிசோட் பார்த்த உடனேயே ரொம்ப புடிச்சு போச்சு. சின்ன சின்ன அழகான கருத்துக்களை கடைசியா நமக்கு அறிவுரை மாதிரி இல்லாம மனசுல படற மாதிரி சொல்லுவாங்க. எல்லா எபிசோடுலேயும் அந்த குடும்பத்தை சேர்ந்தவங்களை சுற்றி ரெண்டு கதைங்க இருக்கும்,ஒண்ணு moral of the storyக்கும் இன்னொண்ணு சும்மா மொக்கயாவும் இருக்கும். அந்த 1/2 மணி நேரம் போவதே தெரியாது.

இதுல என்ன கதைனா ஒரு அப்பா தன் மனைவியின் திடீர் மறைவுக்கு பிறகு தன் மூன்று பெண் குழந்தைகளை தன் மைத்துனரையும் தன் பால்ய கால நெருங்கிய நண்பரையும் உதவிக்கு வைத்துக்கொண்டு மிக நன்றாக,தாய் இல்லாத குறை தெரியாமல் வளர்ப்பார். அதில் மைத்துனர்(john stamos) பயங்கர ஜொள்ளு பார்ட்டியாகவும், மிக நெருங்கிய நண்பர்(dave coulier) பிரபலமான காமெடியனாக முன்னேற துடிப்பவராகவும்,தந்தையாக(bob saget) தொலைக்காட்சியில் பணிபுரிபவராகவும் வருவார்கள்.இதில் தான் Mary-Kate Olsen, ashley Olsen இரட்டையர்கள் கைக்குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமானது. பின்னர் மைத்துனர் திருமணம் செய்து இரட்டை குழந்தைகள் பெற்று தன் அக்காள் குழந்தைகளின் பால் உள்ள பாசத்தினால் அதே வீட்டில்(8 பேர் + 1 நாய்) தங்குவதுப் போல் அமைக்கப்பட்டு இருக்கும்.

இதில் துளி கூட ஆபாசமோ, தேவைல்லாத அழுகை காட்சிகளோ, அர்த்தமில்லாத நகைச்சுவயோ இருக்காது.இப்பொழுதும் என்னிடம் அதன் 8 seasonsஉம் உள்ளது.அந்த சமயத்தில் கிட்ட தட்ட இதே குடும்ப கதையமைப்பை கொண்ட பல hollywood படங்களும் serialகளும் வந்துள்ளன. இதை பற்றி முன்பொருமுறை படித்தபோது கிடைத்த தகவல் ஆச்சர்யமாக இருந்தது. அப்பொழுது Aids நோய் அங்கு பரவி வந்ததால்,மக்களிடையே ஒரு ஆரோக்கியமான மனமாற்றத்தை அவர்களறியாமலேயே ஏற்படுத்தும் பொருட்டு இவ்வாறு செய்தார்களாம். இது உண்மையா அல்லது கற்பனையா எனத் தெரியாது. ஆனால் எனக்கு இப்படிப் பட்ட தொடர்கள் மிகவும் பிடிக்கும்

2 comments:

ambi said...

இதை மாதிரி சீரியல்கள் தமிழில் வருமானு பாக்கறேன். ஒன்னுத்தையும் காணோம்.

பிக்க்ஷன் தொடர்கள் கூட கேவலமா இருந்தது. மர்ம தேசம், விடாது கருப்பு எல்லாம் நல்லா இருந்தது. இப்ப ஒன்னும் கானோம்.

ஒரே மாமியார், மச்சினி சீரியல்களா இருக்கு. :))

விஜய் said...

நாகரிகம் கொப்பளிக்கும் மேலை நாடுகளின் சீரியல்கள் நல்ல பண்பாடு காக்கும் போது
கலாச்சார மேன்மை கொண்ட தமிழ்கத்தில் எல்லா சின்னத் திரைகளும் விஷம் தூவுவது ஏன்?

சரியான கேள்வி
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com