Sunday, 18 May, 2008

சொந்தக் கதை(1)

வணக்கம்,

நான் முதலில் எழுதப்போறது எங்கப்பவை பத்தி. அவர் ஒரு தமிழாசிரியர். மிகத்தீவிரமான தி.மு.க காரர்( எங்க வீட்டில் எல்லோரும் அப்டியே தான், even பிரெஞ்சுக்காரரான என் கணவரையே கலைஞரோட பேன் ஆ ஆக்கிட்டோம்னா பார்த்துக்கோங்க) அந்தக்கால பி.யூ.சி இல் மிக நல்ல மார்க் எடுத்தும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் தீவிர அதரவாளரா இருந்ததால தமிழ் எடுத்துப் படித்தார். இவர்கள் பர்மாவில் இருந்து இரண்டாம் உலகப் போர் அப்போ இந்தியா வந்தவங்க. மிக வசதியா இருந்தாங்களாம், அங்கேருந்து வந்த எல்லா சொந்தக்கரங்களையும் இவங்கதான் பராமரிச்சாங்களாம். ஆனா தாத்தா திடீர்னு மாரடைப்புல இறந்துட்டார், அப்போ எங்கத்தை மூன்றாம் வருட மருத்துவம் படிச்சிட்டிருதாங்களாம், மத்தவங்களும் இவங்களை விட சின்னவங்க தான், தாத்தா எல்லாருக்கும் நல்லவரா இருந்தாலும் பாட்டிய மட்டும் பயங்கரமா கொடுமை படுத்துவாராம், அதனால பாட்டிக்கு சின்ன வயசுலேயே பி.பி சுகர் எல்லாம் இருந்துதாம், ஆனா அவங்க பட்ட கஷ்டம் பார்த்து தாத்தா இறந்தவுடன் சிலர் அத்தை மீதிப் படிப்பைத் தொடர உதவியுள்ளனர், பின்னர் அத்தை தனக்கு திருமணமான பின்னும் இவர்கள் தலையெடுக்கும் வரை உதவியுள்ளார், அதனால் என் தந்தைக்கு அவர் குடும்பத்தின் மேல் பயங்கர பக்தி, இதில் பிரச்சினை என்னவென்றால் அவர் வீட்டில் அனைவரும் வாய்க்கொழுப்பில் வல்லவர்கள்


எனக்கு ஒரு சந்தேகம், சிலப்பேர் நேருக்கு நேராவே மிக மோசமா ஒருத்தரோட உணர்வுகளை கிண்டல் கேலி என்ற போர்வையில் காயப்படுத்திவிட்டு, அதற்கு பாதிக்கபட்டவர் பதிலடி தந்தால் குய்யோ முய்யோவென அமர்க்களம் செய்வது, இல்லை என்றால் "உன்னால் விமர்சனத்தை தாங்கி கொள்ள முடியவில்லை என்பது". அவர்களைச்சேர்ந்தவர்களும் "அவன்/அவள் மனசுலே ஒன்னுமே கிடையாது, இப்டி பேசறது அவன்/அவள் குணம் என்று உனக்குத் தெரியாதா" என்பது. இதையே நீங்க ஏன் பின்பற்ற கூடாதுன்னு கேட்டா சம்பந்தம் இல்லாம பேசருது, இது அப்டியே எங்க வீட்ல நடக்கும், எங்கம்மாவையும் எங்களையும் அவங்க வீட்டு ஆட்கள் என்ன சொன்னாலும் அவரும் அவர்களை திருத்தமாட்டார், நாங்களும் ஒண்ணுமே சொல்லக் கூடாது, பார்பதற்கு சிறிய பிரச்சினையாக இருந்தாலும், இதனால் பலப் பிரச்சனைகள் எழுந்தன, இக்குணத்தின் காரணமாக இன்று வரை நாங்கள் அவரிடம் மனம் விட்டு பேச முடிவதில்லை.


இதைத் தவிர ஒரு சின்ன குறை கூட அவரிடம் இல்லை, எங்கம்மா கல்யாணமாகி வரும்போது வெறும் பி.ஏ பி.எட் தான், ஆனா அவங்களை மேல டபுள் எம்.ஏ எம்.எட் படிக்க வச்சார், இத்தனைக்கும் எங்கம்மா பிரைவேட் ஸ்கூல்ல தான் வேலை பார்த்தாங்க, இதனால அவருக்கு எந்த பொருளாதார முன்னேற்றமும் கெடயாது, என்னையும் எங்க அக்காவையும் கூட எவ்ளோ வேணா படிக்க சொன்னார். நாங்க ரெண்டு பேரும் எது கேட்டாலும் உடனே கிடைக்கும், இன்னி வரைக்கும் எனக்கு எந்த பொருள் மேலையும் அதீத ஆசை வந்ததில்லை, காரணம் என்னுடைய ஞாயமான அனைத்து ஆசைகளையும் நிறைவேத்தி வைத்திருக்கிறார், தேவயில்லாத ஆசைஎன்றால் அதை மிக அழகாக எடுத்துச் சொல்லி புரிய வைப்பார், இன்று வரை எனக்கு தேவைகள் பற்றிய ஒரு தெளிவு உண்டென்றால் அது அவரால் தான்.

அதேப் போல நாங்கள் என்ன தவறு செய்தாலும் என் தாயும் சரி தந்தையும் சரி அப்பொழுது கோபிக்கவே மாட்டார்கள், பின்னர் அந்த பிரச்சனை முடிந்த பின் அதனை மிக அழகாக சுட்டிக்காட்டுவார்கள்.

இன்னொரு விஷயம், அது கார் ஆகா இருந்தாலும், கிரையிண்டராக இருந்தாலும், செருப்பு தைப்பதாக இருந்தாலும், அதை அவ்ளோ நேர்த்தியாக சரி செய்வார், இதன் காரணமாகவே எனக்கு இந்த திறமை இல்லாத ஆண்களை கண்டால் கொஞ்சமும் பிடிக்காது. என் கணவர் என்னை கவர்ந்ததில் இதற்கு முக்கியப்பங்குண்டு

இப்படி நான் பார்த்து பழகிய முதல் ரியல் லைப் ஹீரோ எங்கப்பாதான்

4 comments:

இம்சை said...

இன்னொரு விஷயம், அது கார் ஆகா இருந்தாலும், கிரையிண்டராக இருந்தாலும், செருப்பு தைப்பதாக இருந்தாலும், அதை அவ்ளோ நேர்த்தியாக சரி செய்வார், இதன் காரணமாகவே எனக்கு இந்த திறமை இல்லாத ஆண்களை கண்டால் கொஞ்சமும் பிடிக்காது.

என் கணவர் என்னை கவர்ந்ததில் இதற்கு முக்கியப்பங்குண்டு

ஆகா ரொம்ப இன்ரெஸ்டிங் ஸ்டோரியா இருக்கும் போல... எப்ப பதிவு போட போறிங்க

இம்சை said...

அடடே மீ த பர்ஸ்ட்...

விஜய் said...

நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்.

//நான் பார்த்து பழகிய முதல் ரியல் லைப் ஹீரோ எங்கப்பாதான்//

தந்தையின் நற்குணங்களை நினைவு கூர்ந்து எழுதிய வரிகள் "சூப்ப்ர்'


அத்தை மாமன் உறவுப் பிரச்சனைகள்
ஊரறிந்த ரகசியம்.
வீட்டுக்கு வீடு வாசல் படி.


தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

துளசி கோபால் said...

ம்ம்ம்ம்ம்ம் நல்லா இருக்கு ஆரம்பம்.

அப்புறம்?