Sunday 25 May, 2008

Paris பதிவுகள்-2

என்னங்க எல்லார்க்கும் சஸ்பென்ஸ் தாங்க முடியலையா, மீதி பிளேட போடாமயா இருப்பேன்.இதோட முதல் பாகம் படிக்கணும்னா இங்க போங்க- http://vettiaapiser.blogspot.com/2008/05/paris.html

சரி நான் எனக்கு காரணம் தெரியும்னு சொன்னா முழிப்பாருன்னு பாத்தா,இவர், ஹப்பானு நிம்மதிப் பெருமூச்செல்லாம் விட்டுட்டு, அப்டின்னா eiffel towerக்கு போக வேண்டாம்தானேங்கராறு. எனக்கு கடுப்பாயிடுச்சி,சரின்னு வேற வழியில்லாம தோல்வி ஒரு வீராங்கனையின் வாழ்க்கையில் சகஜம்னு அவர்கிட்டயே காரணத்தை கேட்டேன். காரணம் என்னவாம்னா, நாம எப்டி சென்னைல அண்ணா சமாதி,எம்.ஜி.ஆர் சமாதி எல்லாம் சுத்தி பாக்க போறத பட்டிக்கட்டுத்தனம்னு நெனைச்சு, அவாயிடு பண்ணுவோம்ல( இல்லைன்னா இந்த புனித பூமியோட நாற்றமிகு சிடிசன்ஸ் இல்லைன்னு மத்தவங்க நெனைச்சுப்பாங்கலே) அந்த மாதிரி தான் இவங்கல்லாம் eiffel towerஅ சும்மா சுத்தி பாக்க அதுவும் ஜனவரி மாசக்குளிருல போனா கேவலமா பீல் பண்ணுவாங்களாம்.

ஒரு கணவன் தன்னோட நிலமைய இப்படி தெளிவா எடுத்துச் சொன்ன பிறகு ஒரு மனைவியோட கடமைய நான் கண்டிப்பா செய்யணும் இல்ல. அதனால அவர்கிட்ட இன்னைக்கு என்னை eiffel tower கூட்டிட்டு போனாத்தான் ஆச்சின்னு அடம் பிடிச்சி கூட்டிட்டு போயிட்டேன். பின்ன இந்த அளவுக்கு கூட அவர் உணர்வுகளுக்கு நான் மதிப்பு குடுக்கலயின்னா எப்படிங்க, அதான் என்னால முடிஞ்ச, சின்ன அளவுல அவரை humiliate பண்ணேன். இல்லைனா நான் என்னங்க அவருக்கு பொண்டாட்டி.

சரி இப்டியாக இன்னும் எல்லா எடமும் சுத்தி பாத்தாச்சா, இந்த போட்டோஸ் பாத்து வீட்ல இருக்கிறவுங்க சந்தோஷம்தானே படணும், ஆனா எங்க வீட்ல அப்டி இருந்தாத்தான் கோளாறுன்னு பயப்படணும். இப்போ இவங்களுக்கு என்ன பிரச்சனைன்னா இவங்களோட அருமை பெருமையான மாப்பிள்ளைய மிரட்டி எல்லா எடத்துலயும் நானே போட்டோல நின்னுக்கிட்டேனாம்.நான் என்னத்தங்க சொல்றது இந்த கொடுமைய, இவர ஒரு போட்டோ எடுக்கிறேன்னாலும், இவரு நின்னாத்தானே(அதே அண்ணா சமாதி ரீஸன்தான்).

நானும் இவர டயானா கார் அக்சிடென்ட் ஆன இடத்திலேருந்து அது இதுன்னு கேட்டு டார்ச்சர குடுத்தேன். அப்டியே ஒரு ஆறு மாசம் ஜாலியா இவர கொடுமப்படுத்திட்டு வாழ்க்கை ஆனந்தமா போச்சு.

இப்போல்லாம் நானே இவர மாதிரி ஆகிட்டேன். இன்னைய தேதிக்கு மட்டன் பிரியாணியும், தயிர் வடையும் சேர்த்து குடுத்தாலும் போட்டோ எடுத்துக்க ஒரு ப்ளேட்டுக்கு ரெண்டு ப்ளேட்டு சேர்ந்து யோசிக்கிறது.

4 comments:

Anonymous said...

நிஜமாவே உங்க ரன்கமணி ரொம்ப பாவம். :)

rapp said...

ஆஹா,
இப்டியெல்லாம் சொல்லி அவருக்கு ஞானப்பால் ஊட்டப் பாக்காதீங்கண்ணே. எல்லா தங்கமணிகளும் அவங்களோட ரங்கமணிக்கு இப்டித்தான் டார்ச்சர் குடுப்பாங்கன்னு நானும் என் மாமனாரோட தங்கமணியும் சேர்ந்து இவங்க ரெண்டு பேரையும் நம்ப வெச்சிருக்கோம்.

கருணாகார்த்திகேயன் said...

ரப்ப் ( தங்கமணி)
எழுத்தை கையாண்ட விதம் அருமை ..
நல்ல கட்டுரை ..

அன்புடன்
கருணாகார்த்திக்கேயன்

கோவை விஜய் said...

//rapp said...
ஆஹா,
இப்டியெல்லாம் சொல்லி அவருக்கு ஞானப்பால் ஊட்டப் பாக்காதீங்கண்ணே. எல்லா தங்கமணிகளும் அவங்களோட ரங்கமணிக்கு இப்டித்தான் டார்ச்சர் குடுப்பாங்கன்னு நானும் என் மாமனாரோட தங்கமணியும் சேர்ந்து இவங்க ரெண்டு பேரையும் நம்ப வெச்சிருக்கோம்.//

மாமியார் மெச்சும் மருமகள்
வாழ்த்துக்கள். கூட்டணி வெற்றி தொடரட்டும்.

திவிஜய்
rapp said...
ஆஹா,
http://pugaippezhai.blogspot.com