Saturday 24 May, 2008

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

ஆண்கள் கிட்ட ஒரு வேலைய செஞ்சுக்குடுக்க கேட்டா அதை அவங்க எப்டி செய்வாங்கன்னு பாப்போம். முதல்ல அவங்களை ரெண்டு வகையா பிரிச்சிக்கலாம். சொன்னதை வேதவாக்கா எடுத்துக்கிட்டு தன் சுயபுத்திய சுத்தமா உபயோக படுத்தாதவங்க ஒரு வகைன்னா, சொன்னதுக்கு மேல ஓவர் உற்சாகமா செயல்பட்டு இவங்களை ஏன்டா செய்யச் சொன்னோம்னு குமுற வெக்கறவங்க இன்னொரு வகை. இதை ஒரு சின்ன உதாரனத்த வச்சு நான் விளக்கறேன்.

இப்போ நீங்க அவங்களை மார்க்கெட்டுக்கு போக சொல்றீங்கன்னு வச்சுக்கங்க, நீங்க ஒரு லிஸ்ட் எழுதி குடுப்பீங்கள்ள, அதுல முதல் வகைய சேர்ந்தவங்களுக்கு என்ன பிராண்ட்னு கூட எழுதி குடுக்கணும். இவங்க என்ன செய்வாங்கன்னா போய் அதே பிராண்ட, சொன்ன அதே வகைல வாங்கிட்டு வருவாங்க. சரி இதுல என்ன பிரச்சினை இவளுக்குன்னு யோசிக்கறீங்களா? பாக்க நல்லவிதமா தெரிஞ்சாலும், இதுல காண்டு கெளப்புற விஷயம் ஒண்ணு இருக்கு. என்னன்னா, இப்போ நீங்க சக்தி சிக்கன் மசாலா வாங்கிவர சொல்றீங்கன்னு வச்சுக்கோங்க, கடையில ஆச்சி சிக்கன் மசாலா தான் இருக்குன்னா இவங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா எதுவுமே வாங்காம திரும்பிடுவாங்க. கூட இன்னொரு கொடுமையான காமடியும் செய்வாங்க, என்னன்னா பால் பாயசம் செய்யலாம்னு பாலும் சக்கரையும் கேட்டா, நீ லிஸ்ட்ல எழுதுன ஆரோக்யா பால் இல்ல, அதனால் வெறும் சக்கரை மட்டும் தான் வாங்கிட்டு வந்துருக்கேன்னு அப்பாவியா சொல்லுவாங்க. இவங்ககிட்ட கோச்சுக்கவும் முடியாது, நம்ம எரிச்சல அடக்கவும் முடியாது.

ரெண்டாவது வகை எப்டின்னா, இவங்களுக்கு லிஸ்டெல்லாம் எழுதி குடுக்கக் கூடாது. அது இவங்களுக்கு பிரஸ்டீச் பிராப்ளம் ஆகிடும். கோவத்துல மார்க்கெட்டுக்கே போக மாட்டாங்க. சரினு நாம குருமா வைக்கத் தேவையான பொருட்களை சொல்லி வாங்கிட்டு வர சொல்லுவோம், இவங்கதான் லிஸ்டில்லாம போற புத்திசாலிங்களாச்சே, கோழியத்தவிர மத்த எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துட்டு ஜம்பமா ஆயிரம் விளக்கம் சொல்லிட்டு ஈராக் பிரச்சினைக்கு பஞ்சாயத்து பண்ண போற மாதிரி தலை தெறிக்க ஓடுவாங்க. சில சமயம் இன்னொன்னும் செய்வாங்க, இப்போ நாம அவசரத்துக்கு கொஞ்சம் வெங்காயமோ இல்ல தக்காளியோ வாங்கிட்டு வரச் சொன்னோம்னு வச்சிக்கங்க, இவங்களா கூட சேர்த்து உருளைகிழங்கு,கேரட்,பீன்ஸ்,கத்ரிக்கானு இஷ்டத்துக்கு கிலோ கிலோவா வாங்கிட்டு வந்துடுவாங்க. கேட்டா, "அதெப்படி வெறும் வெங்காயம் மட்டும் வாங்குறது, ஒரு மாதிரி இருந்தது,அதான்" அப்டின்னு சொல்லுவாங்க.கடைக்காரர் இவங்கள மதிக்க மாட்டாராம், வெறும் வெங்காயத்த வாங்கினா. இருக்கிற கூட்டத்துல அவருக்கு வெறும் வெங்காயம் வாங்கிரவங்களை கண்டு பிடிச்சு அவமரியாதை செய்யறதத் தவிர வேற வேலையில்ல பாருங்க. இதுல கொடுமை என்னன்னா நாம முத நாளுதான் இதெல்லாத்தையும் வாங்கி கழுவி சுத்தம் பண்ணி, கிளிக்கூண்டுல மயில அடைக்க படுற பாட்ட பட்டு எல்லாத்தையும் fridgeல அடுக்கி வச்சிருப்போம். நமக்கு எப்படி இருக்கும்.

யப்பா, இந்த பாட்டை படறத்துக்கு நாமே அந்த வேலைய செஞ்சு முடிச்சிடலாம். இந்த டார்ச்சர் குடுத்தப்புறம் நாம ஏன் அவங்க கிட்ட வேல சொல்லப்போறோம். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.

7 comments:

அபி அப்பா said...

நல்லாத்தான் இருக்கு பதிவு, நிறைய எழுதலாமே இன்னும். குட்:-))

ambi said...

ஹிஹி, நான் இதுல எந்த வகை?னு சொல்ல மாட்டேனே. இந்த பதிவுல எக்கசக்க முன்னேற்றம். சூப்பர். :))

ambi said...

ஹிஹி, அபி அப்பா பதிவை படிக்காம கமண்ட் போட்டு இருக்கார் பாரு. :p

அபி அப்பா said...

அம்பி! தேவரகசியங்களை வெளியே சொன்னா காது பெரிசா வலர்ந்துகிட்டே இருக்குமாம்,கீதாபாட்டி ஸாரி சீத்தாபாட்டி சொன்னாங்க:-)

rapp said...

அண்ணே,
நீங்க கண்டிப்பா முதல் ரகமாகத்தான் இருப்பீங்க. கரெக்டா?

பரிசல்காரன் said...

என்ன rapp.. முத முதல்ல என் உமாவை browsing center கூட்டிட்டு வந்து உங்க blog-ஐ படிக்க வெச்சேன். அப்படியே உங்களைப்பத்தி எழுதிருக்காங்க-ங்கறா. போங்க. பெண்கள் ஓட்டு உங்களுக்கு நிறைய கிடைக்கப் போகுது.

(அப்பப்ப நம்ம வூட்டுப் பக்கம் வந்து போறதுக்கு நன்றி!)

கோவை விஜய் said...

ஆண்களில் பெரும் பான்மையியினர் இரண்டாவது ரகம் தான்.

இதுக்கு சரியான வழி shopping" க்கு ரங்கமணி தங்கமணி இருவரும் போகலாமே!

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com