Thursday, 22 May 2008

ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா

அது ஒரு மார்ச் மாதம். 1989 ஆம் வருஷம். நான் 2nd standard படிச்சிகிட்டு இருந்தேன்.அப்போ எனக்கு தெரியல அடுத்த 6 வருஷங்கள் என்னோட பொது வாழ்க்கை இருளப்போகுதுன்னு. யப்பா,வேறோன்னுமில்லைங்க இந்த ஹிந்தி க்லாசைத்தான் சொல்றேன். என்னை பலி ஆடு மாதிரி அங்க கொண்டு போய் சேத்தாங்க. எங்கக்கா அங்கதான் பிரவீன் வரைக்கும் படிச்சாங்க. அந்த சீசன்ல எப்பப் பார்த்தாலும் எங்கக்கா என்னமோ செவ்வாய் கிரகத்துக்கு போய்ட்டு வந்த மாதிரி எங்க வீட்ல+குடும்பத்துல+ஸ்கூல்ல எல்லாத்துக்கும் கம்பேர் பண்ணி கொடுமை படுத்துவாங்க. இப்போ அங்கயும் ஆரம்பிச்சாங்க. எனக்கு ஒரு விஷயத்த செய்ய சொல்லி ரொம்ப stress பண்ணா சுத்தமா அதுல concentrate பண்ண முடியாது.

அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு பூராவும் இந்த மேனியா பரவிகிட்டு இருந்தது. எல்லா ஊர்லயும் தெலுங்குகாரங்களோ, மல்லுசோ அவங்க ஊர்ல படிச்ச ஹிந்திய வச்சி இங்க ஒரு பிரோபகண்டா பண்ணிக்கிட்டு இருந்தாங்க.என்னன்னா ஹிந்தி படிச்சாதான் இனிமே வேலை கெடைக்கும், ஹிந்தி படிக்கலைனா future கிடயாதுனு. இது எப்டியோ இங்க இருக்கிற எல்லா அம்மாங்க மனசுலயும் பதிஞ்சு போச்சு. முதல்ல PUC அப்புறம் 12th வரைக்கும்னு படிச்ச அக்காங்களை எல்லாம் கல்யாணம் ஆகி நார்த்ல(நமக்குத்தான் கர்நாடகாவை தாண்டினாலே நார்த் ஆச்சே) செட்டில் ஆனா உபயோகமா இருக்கும்னு சேத்து விட்டாங்க. அப்டி படிக்க போன அக்காங்க கூட துணைக்கு போன அம்மாங்களுக்கு நாம சும்மாத்தான இருக்கோம் நாமளும் பொண்ண பாக்க போறப்போ கைகொடுக்குமேனு படிக்க ஆரம்பிச்சாங்க(இந்த இடத்துல இன்னொன்னும் உண்டு. இவங்கல்லாம் கல்யாணுத்துக்கு முன்ன ரொம்ப நல்லா படிச்சிகிட்டு இருக்கறப்போ கல்யாணம்னு படிப்ப நிறுத்தி இருப்பாங்க. கூட சுமாரா படிச்ச சிலப் பேர் continue பண்ணி காலேஜ் முடிச்சு வேலைக்கு போயிட்டு இருக்கறத பாத்து கடுப்புல இருந்திருப்பாங்க)

இப்போ ஹிந்தி டியுஷன் எடுக்க ஆளுங்க ஜாஸ்தி, ஆனா படிக்க ஆளுங்க கம்மியாகிட்டாங்க. உடனே அவங்க பார்வை ஸ்கூல் பசங்க மேல பட்டுச்சி. அப்டி ஆரம்பிச்சதுதாங்க.இவங்க ஒரு காலத்துல பண்ண பந்தாக்கு அளவே கிடையாது.என்னமோ மேத்ஸ்,பிசிக்ஸ்,chemistry எல்லாம் படிக்கிறது சுத்த வேஸ்ட் மாதிரியும் ஹிந்தி படிச்சாதான் நாசால வேல குடுப்பாங்கன்னும் பீலா உட்டுகிட்டு இல்லாத உட்டாலக்கடி வேலைய செய்வாங்க. தீபாவளி,பொங்கலைத் தவிர எல்லா நாளும்(annual லீவு, சனி ஞாயிறு உட்பட) ஹிந்தி க்ளாஸ் இருக்கும். இவங்க வீட்ல எழவு விழுந்தா டியுஷன் பசங்களுகெல்லாம் அவ்ளோ சந்தோஷமா இருக்கும். என்னவோ இந்தியாக்கு விடுதலை கிடைச்ச விஷயம் அப்போதான் தெரிஞ்ச மாதிரி திரிவாங்க.

நான் பாத்த முக்காவாசி வீடுகள்ல(எங்க வீடும்தான்) அப்பாங்களுக்கு இது புடிக்காது,மத்த விஷயங்களை போலவே எதுக்கு வம்புன்னு வழக்கம்போல அம்மாங்களுக்கு அடங்கி போய்டுவாங்க. சிலப்பேர் ஒரு படி மேல போய் சுத்த தமிழ்காரங்களா இருந்தாலும், அதை ஸ்பஷ்டமா நிரூபிக்க பசங்களை ஸ்கூல்ல செகண்ட் languageஆ தமிழ் படிக்க விடாம ஹிந்தி படிக்க வைப்பாங்க. "ஹைய்யோ இவளுக்கு தமிழ் படிக்க தெரியாதுன்னு" ஒரு பொது இடத்துல சொல்லி கேக்க பெக்கனு இளிக்கரதுல நோபெல் பரிசு வாங்கின மாதிரி அவ்ளோ பெருமை இந்த அம்மாங்களுக்கு.அப்பா ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில தீவிரமா இருந்திருப்பாரு,ஆனா வீட்ல ஜுரம் வந்தா கஷாயம் சாப்ட வைக்கிற மாதிரி சனிக்கிழமை அந்த பசங்களை கதறக் கதற ஹிந்தி படம் பாக்க வைப்பாங்க. சொந்தக்காரங்க வீட்டு புள்ளைங்க ஹிந்தி படிக்கலைனா இவங்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். வெறுப்பேத்தியே ரெண்டு நாள்ல வீட்ட விட்டு துரத்திடுவாங்க. ஹிந்தி exam நடக்குறதுக்கு முன்னாடி, சொந்த பாட்டி செத்ததுக்கே ரெண்டு நாளு லீவு போட விடாதவங்க, ஒரு வாரம் லீவு போட வைப்பாங்க(இந்த சமயத்துல medical certificate குடுக்கன்னே ஒவ்வொரு ஊர்லயும் ஒரு பாவமான டாக்டர் இருப்பாரு) எதுக்குன்னா பசங்க கண்டிப்பா பாஸ் பண்ணனுமாம். இப்போ +2க்கு பண்ற எல்லா அட்டூழியமும் நடக்கும். பரீட்சையன்னைக்கெல்லாம் க்ரூப்புக்கு ரெண்டு அம்மாங்கன்னு டர்ன் போட்டுக்கிட்டு கட்டு சோறு கட்டிக்கிட்டு பசங்களுக்கு escortஆ கிளம்பிடுவாங்க.பிரவீன் முடிக்கிற வரைக்கும் இந்த கொடுமை தொடரும்.

ஒவ்வொருத்தரோட தலையெழுத்துக்கு ஏத்த மாதிரி இந்த 8 examஐயும் 4 வருஷத்துலயும் முடிக்கலாம் மேலயும் ஆகலாம். சிலருக்கு இதுக்கு இடைப்பட்ட காலத்திலயே ஞானம் கிடைச்சு நடுவுலயே நிறுத்திடுவாங்க. ஹூம் எனக்கு அது கிடைக்கலே. நான் 6 வருஷம் அனுபவிச்சேன். கடைசில இதனால ஒரு உபயோகமும் இல்ல. சரி ஹிந்திக்காரங்ககிட்ட ஹிந்தில பேசலாம்னா நம்ம ஹிந்திய மதராசி ஹிந்தின்னு சொல்லி நக்கலடிக்கறது(இவங்க பேசறது என்னமோ தேவ பாஷைனு நெனைப்பு, சேட்டுங்க சிலப் பேர் பேசிற தமிழ கேட்டு நாம ரசிக்கிறோம், என்னத்த சொல்றது) சரி ஹிந்தி படம் பாக்க உதவியா இருக்கும்னு பார்த்தா அதுல பத்து வார்த்தைக்கு மேல ஹிந்தில பேசறது இல்ல, புல்லா இங்கிலிபீஸ்தான். கரன் ஜோஹர் படத்துக்கு அந்த பத்து வார்த்தை கூடப் புரிய தேவையில்லை.

அடப்பாவிகளா இதுக்கா என்னை வருஷக்கணக்குல போட்டு வாட்டி எடுத்தீங்க. ஒரு பாக்யராஜ் படத்துல வர்றமாதிரி, பல சின்ன பசங்க வாழ்க்கைய இம்சைப்படுத்தின இந்த ஹிந்தி டீச்சருங்களை கல்ல விட்டு அடிச்சு, நாய விட்டு தொரத்தனுங்க. இந்தப்பதிவு யார் மனசையும் புண்படுத்த இல்லை, பட்ட கஷ்டம் பேச வைக்கிறது

16 comments:

பரிசல்காரன் said...

//இவங்க பேசறது என்னமோ தேவ பாஷைனு நெனைப்பு, சேட்டுங்க சிலப் பேர் பேசிற தமிழ கேட்டு நாம ரசிக்கிறோம், என்னத்த சொல்றது//

வழி மொழிகிறேன்! ஏன்னா நான் வேலை பாக்கறது ஒரு ஹிந்தி காரங்க கம்பெனிதான்.. இருபது வருஷமா அவங்க கம்பெனி வெச்சிருக்காங்க.. சுத்தியும் எல்லாம் தமிழ் ஆளுங்கதான் ஆனா இன்னும் தமிழை கொன்னு,கொலை எடுக்கறாங்க! ஆனா, நான் அவங்க கூட இருந்த ஒரு வருஷத்துல நல்லா ஹிந்தி பேச கத்துகிட்டேன்!
சின்ன வயசுல நீங்க ஹிந்தி கத்துக்க பட்ட அதே கஷ்டம் நானும் பட்டேன்.. ஆனா தொடர்ந்து போகல! இந்த லட்ஷணத்துல என் சித்தி ஹிந்தி பண்டிட் வேற! எனக்கு ஹிந்தி தேவை-ன்னு வர்றப்ப தான கத்துக்குவேன் இப்படி முப்பது பேரோட உக்கார்ந்து கோஷம் போடறதுல எனக்கு உடன்பாடு இல்ல-ன்னு டயலாக் விட்டுட்டு க்ளாஸ்-க்கு போறதை நிறுத்தீட்டேன். இப்போ அந்த க்ளாஸ் எல்லாம் போய் நாலஞ்சு சர்ட்டிபிகேட் வெச்சிருக்கற என் சொந்தக்கார பொண்ணுகிட்ட ஹிந்தி பேசினா, `ஏய்.. போதுண்டா.. தமிழ்ல பேசு-ங்கறா..! சரி.. ரொம்ப பேசிட்டேன்னு நினைக்கறேன்.. Bye!

மோகன் கந்தசாமி said...

////தீபாவளி,பொங்கலைத் தவிர எல்லா நாளும்(annual லீவு, சனி ஞாயிறு உட்பட) ஹிந்தி க்ளாஸ் இருக்கும். இவங்க வீட்ல எழவு விழுந்தா டியுஷன் பசங்களுகெல்லாம் அவ்ளோ சந்தோஷமா இருக்கும். என்னவோ இந்தியாக்கு விடுதலை கிடைச்ச விஷயம் அப்போதான் தெரிஞ்ச மாதிரி திரிவாங்க.////

என்னாது!!!!, annual லீவு, சனி ஞாயிறு இதெல்லாம் இல்லையா? அப்ப உங்களுக்கு சராசரி மானவப்பருவமே இருந்திருக்காதுன்னு நினைக்கிறேன், மே லீவுல சோறு தண்ணியில்லாம தெருதேருவா சைக்கிள் எடுத்துகிட்டு சுத்துறது, உயரமான கவுர்மண்டு பில்டிங்கு ஏ. சி பாக்ஸ்ல இருக்க புறாவ சுண்டு வில்லு வச்சு புடிக்கிறது, வேலில ஓனான் அடிக்கிறது, பட்டம் உடறது இப்படி எதுவுமே இல்லாம பண்ணிடுச்சி போல இந்த இந்தி..

////"ஹைய்யோ இவளுக்கு தமிழ் படிக்க தெரியாதுன்னு" ஒரு பொது இடத்துல சொல்லி கேக்க பெக்கனு இளிக்கரதுல நோபெல் பரிசு வாங்கின மாதிரி அவ்ளோ பெருமை இந்த அம்மாங்களுக்கு./////
அப்படியா? கொடுமைக்கார அம்மா போலிருக்கே, எங்கம்மா வேறமாதிரி கொடுமைக்காரி, "சேரி பாஷையை கத்துகிட்டு வந்து இன்னமே, வாம்மே, போம்மே -ன்னு பேசறான் இவன், பட்ரையிலதான் சேக்கப்போறேன்" -ன்னு எல்லா அம்மாங்க கிட்டயும் சொல்லி மானத்த வாங்குவாங்க. சரி நம்ம அம்மாங்க தான, மன்னிச்சிடுங்க.

////கதறக் கதற ஹிந்தி படம் பாக்க வைப்பாங்க.////
நானெல்லாம் ஹிந்தி படம் பாக்க கதற மாட்டேன். 15 நிமிஷத்துக்கு ஒரு முறை வரும் அந்தக்கால தூர்தர்ஷன் விளம்பரங்களுக்காகவே முழு படத்தையும் பாப்பேன்.

////நான் 6 வருஷம் அனுபவிச்சேன்////
எல்லாம் ஆச்சா? இல்ல இன்னும் அரியர்ஸ் இருக்கா?
அப்ப இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் -ன்னு சொல்லுங்க பாப்போம்

थामिज्ह वानन कंधासामी
कलानिथी कंधासमी
कस्तूरी कंधासमी
मोहन कंधासमी
सुगनेस्वारी कंधासमी
.

rapp said...

மோகன்,
சராசரி மாணவப்பருவம் இல்லைன்னு சொல்றது சரிதான்.ஏன்னா கிட்டத்தட்ட நான் சன் டிவி பாக்கறதே பெரிய இன்பம்னு நெனைச்சிருந்தேன்( வீட்ல இருந்தாத்தான) ஆனா அப்டியே இருந்தாலும் நீங்க சொல்ற ஜிம்னாஸ்டிக்கயெல்லாம் செஞ்சிருக்க மாட்டேன்.

//அப்படியா? கொடுமைக்கார அம்மா போலிருக்கே, எங்கம்மா வேறமாதிரி //
அது எங்கம்மா இல்லை, நான் ஸ்கூல்ல தமிழ்தான் +2 வரைக்கும். எங்க பிரண்ட்சு, தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்கன்னு நெறைய பேர் இப்டி பண்ணாங்க. இதுல அவங்கள எல்லாம் பத்தி தான் ஜாஸ்தி இருக்கு.

நீங்க வேற அப்டியெல்லாம் அரியர்ஸ் வைக்கிற அளவுக்கு புத்திசாலித்தனமும் அறிவும் இருந்திருந்தா, நான் எப்பவோ பதிவுல சொன்ன ஞானத்த அடைஞ்சிருப்பேனே . நான் பிரவீன் உத்தரார்த் வரைக்கும் புல்லா 7ஆம் க்ளாஸ் படிக்கும்போது முடிச்சேன். யப்பா, அப்பத்தான் ஹிந்தி மேல இருந்த கடும் வெறுப்பு கொஞ்சமாவது கொறஞ்சது.

இது உங்களுக்கே ஓவரா தெரியில, இருந்தாலும் காலேஜ்ல இருந்து பசங்க பண்ற அதே வேலைய நீங்க செய்யிரப்போ மட்டும் குறை சொல்ல முடியுமா
தமிழ்வாணன் கந்தசாமி
கலாநிதி கந்தசாமி
கஸ்தூரி கந்தசாமி
மோகன் கந்தசாமி
சுகுணேஸ்வரி கந்தசாமி , இது எல்லாம் நிஜப்பேருன்னு நெனைக்கிறேன்.

நீங்க டைப்பின orthographஐ ட்ரான்சுலேட்டினா என்னா தெரியுமா வருது,பாருங்க,
தமிஜ்ஹ வாணன் கந்தாசாமி
கலாநிதீ கந்தாசமி
கஸ்தூரி கந்தாசமி
மோகன் கந்தாசமி
சுகுணேஸ்வாரி கந்தாசமி

ஏங்க பசங்க எல்லாரும் ஒரே மாதிரி check பண்றீங்க.இனிமே http://www.google.com/transliterate/indic/hindi ஜாஸ்தி நம்பாதீங்க. வந்ததுக்கு நெம்ப தேங்க்ஸ் மோகன்.தினமும் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்க.

மோகன் கந்தசாமி said...

/////இது எல்லாம் நிஜப்பேருன்னு நெனைக்கிறேன்////
ஆமாம்.
கடைசியில இருக்கறது தங்காச்சி...(இம்சை)
அதுக்கு முன்னாடி கீறது நான்.

/////ஏங்க பசங்க எல்லாரும் ஒரே மாதிரி check பண்றீங்க////
ஹி..ஹி...ச்சும்மா ட்டமாஷ்....

Anonymous said...

நீங்க சொல்றது காரீக்கிட்டு கிருஷ்ணா, நான் அடையாத ஞானத்தை நீங்களாவது அடங்சீங்களே, உங்கள நெனைச்சா பெருமையா இருக்கு.

இம்சை said...

காமெடி நல்லா வருது உங்களுக்கு, தொடர்ந்து எழுதுங்க... நல்ல எதிர்காலம் தமிழ்மணம்ல இருக்கு உங்களுக்கு....

உங்க பிலாக் டெம்ப்லேட் சேஞ்ச் பண்ணினா இன்னும் நல்லா இருக்கும்ம்... both left and right side there are lot of space so your post looks very big. Choose any stretched template.

இம்சை said...

நாங்க எல்லாம் பச்சை தமிழன்கள், பூனால 6 வருசமா இருந்தும் ஏக், தோ, தீன் தவிர ஒன்னும் தெரியாது...

Anonymous said...

நெம்ப நன்றி இம்சை அண்ணா. நான் சொன்னத மதிச்சு நீங்க வந்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ். நீங்க சொன்னதை சீக்கிரமே செய்யறேன்.

Ramya Ramani said...

ஹா ஹா இந்த ஹிந்தி க்லாஸ் போன அனுபவம் உங்களுக்கும் இருக்கா? அது என்ன ஒரு காலம் இல்லியா! க்லாஸ்க்கு போயிட்டு அப்படியே மிஸ்ச ஏமாத்திட்டு,ஷாந்தி,சுவாபிமான் பார்த்துட்டு,டெஸ்டு வெச்சா உடம்பு ச்ரியில்லாதமாதிரி சீன் போட்ட காலம் எல்லாம் சூப்பர் :)

இவன் said...

//நான் 6 வருஷம் அனுபவிச்சேன்.//

ஏதோ ஜெயில் தண்டனை அனுபவிச்சமாதிரி சொல்லுறீங்க

rapp said...

நெம்ப நன்றிங்க ரம்யா ரமணி. ஆமாங்க யப்பா என்னமா காரணங்களை யோசிச்சு அதெல்லாம் செய்வோம்ல.

rapp said...

அமாங்க இவன் சார், கிட்டத்தட்ட ஜெயில் தண்டனை மாதிரித்தான் இருக்கும்.

Selva Kumar said...

// "ஹைய்யோ இவளுக்கு தமிழ் படிக்க தெரியாதுன்னு" ஒரு பொது இடத்துல சொல்லி கேக்க பெக்கனு இளிக்கரதுல நோபெல் பரிசு வாங்கின மாதிரி அவ்ளோ பெருமை இந்த அம்மாங்களுக்கு.//

:-)) சூப்பருங்க....

rapp said...

உங்கக் கருத்துக்களை பதிஞ்சதுக்கு நெம்ப நன்றிங்க வழிப்போக்கன்.

கோவை விஜய் said...

தஷின் ஹிந்தி பிரச்சார சபா இன்னும் களை கட்டிக் கொண்டுதான் இருக்கு.

ஆனால் யருக்கும் படிச்ச ஹிந்தி பிரயோசனப் படவில்லை.அதுவும் உண்மைதான்.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

rapp said...

உங்க பின்னூட்டத்திற்கும் வருகைக்கும் ரொம்ப நன்றிங்க விஜய் :):):)