Tuesday 20 May, 2008

ஹோட்டல் சாப்பாடு

எனக்கு ரொம்ப பிடிச்ச சாப்பாடு ஐட்டம்னா தாளிச்ச தயிர் சாதம், மட்டன் பிரியாணி, தயிர் வடை. எங்கம்மா மூன்றயுமே நல்லா செய்வாங்க. இதுல இம்சை என்னன்னா அவங்க அப்டியே என்ன மாதிரி.நல்லா செய்யிற ஒரு விஷயத்த கூட நீங்க பாராட்டிணீங்கன்னா ஓவர் excitementலயும் டென்ஷன்லயும் அடுத்த தடவ கேவலமாக்கிடுவாங்க. பாரிஸ் வந்தப்புறம் நானே சமைச்சு நானே சாப்பிட்டு முடிக்கணும். கடைசி வார்த்தைய நோட் பண்ணிக்குங்க.இந்தக் கொடுமையாலே தாளிச்ச தயிர் சாதம் மட்டும் தான் செய்வேன்.மத்த ரெண்டையும் ஹோட்டல்ல சாப்டலாம்னு பாத்தா என்ன கொடுமைங்க இது? பிரியாணி கேட்டா காரம் கம்மியா spices ஜாஸ்தியா ஒரு தக்காளி சாதத்துல சிக்கனும் முட்டையும் வெச்சு தராங்க, தயிர் வடைனா சரியா அரைபடாத மாவுல பருப்பு போண்டா மாதிரி ஒண்ணுத்தை தராங்க.

ஆனா இங்க பரவாயில்லைங்க, போன தடவ சென்னை வந்த போது சரவண பவன்ல தயிர் வடை விலைய பாத்து மயக்கம் வராத குறைதான். ஏன்னா, பாரிஸ் விலையிலேயே விக்கறாங்க. அதிலயும் சென்னை பாரிஸ் கார்னர் சரவண பவன்லயும் அங்க இருக்க ரயில்வே ஸ்டேஷன் சரவண பவன்லையும் மட்டும்தான் சாப்பிட வர்றவங்களை மனுஷங்களா மதிக்கிறாங்க. மத்த கிளைகள்லேல்லாம் கஸ்டமர் சர்விஸ் ரொம்ப மோசம். (நம்ம ப்ளோக் நேம பார்த்திட்டும் இதுதான் பொழப்பானு கேக்கக் கூடாது) இதுல என் ரங்கமணிக்கு வெளியில சாப்டனும்னா சரவண பவனுக்குத்தான் போகணும். லஞ்ச் இல்ல டின்நெர் டைம்ல வெளியில இருந்தா "y dont v go to saravana bhavan" னு ஆரம்பிச்சிடுவாரு.

இவங்கதான் இப்படின்னா ஒரு முக்கிய விசேஷத்துக்காக சும்மா பந்தாவுக்கு குடும்பத்தோட தாஜ்(நுங்கம்பாக்கம்) போனோம். சிலர் பஃபேயும், மீதிப்பேர் ஆர்டர் பண்ணலாம்னும் முடிவாச்சு. அங்க பாஃபே நல்லா இருந்தது, ஆனா நாம மெனுல இருந்து ஆர்டர் பண்றதெல்லாம் படு கேவலமா இருந்துச்சு. பஃபேல வைக்கிற ஐட்டம் எல்லாம் ஏற்கனவே கையேந்தி பவன்ல செஞ்சு வாங்கிடுவாங்கன்னு நெனைக்கிறேன். அப்புறம் அவங்க chef நாம ஆர்டர் பண்ணும் போதுதான் சமைப்பாரு போல.இதுல அங்க இருந்த ஹெட் வெயிட்டர் ரொம்ப பெருமையா பஃபேனா சீக்கிரம் சாப்டலாம்,ஆர்டர் பண்ணீங்கன்னா ரொம்ப நேரம் ஆகும்கராரு. இந்த பஃபேங்கறது இப்போ பெரிய ஏமாத்து வேலையா ஆகிடுச்சு. எங்கே பாத்தாலும் அதுதான். அவ்ளோ ஐட்டம்ஸ் சாப்டாதவங்க காச கொள்ள குடுத்துட்டு பேக்கு மாதிரி ஒரு fried riceஉம் ஒரு மன்சூரியனும் சாப்பிட்டு வரணும். இங்க இன்னொரு கொடுமை என்னன்னா இவங்களுக்கு குடுத்தேயாகவேண்டிய பெரிய டிப்ஸ். எனக்கு டிப்ஸ் குடுக்கறது பிடிக்கும், என்னை பொறுத்தவரை யாரோ ஒருத்தருக்கு அவங்க திருப்தியா சாப்பிட உதவி பண்றது(அவங்க வேலயாவே இருக்கட்டுமே) பெரிய விஷயம்.ஆனா இங்க டூ மச்.

நான் எல்லா ஐந்து நட்சத்திர ஹோட்டல்லயும் இப்படின்னு சொல்லல. 3rd இயர் படிக்கும்போது புத்தாண்டிற்காக லீ மெரீடியனுக்கு பிரண்ஸோட போனேன். அங்கயும் பஃபேதான், ஆனா அங்க இருந்த ஹெட் வெயிட்டர்ல இருந்து எல்லாருமே ப்ளசண்டா இருந்தாங்க. இந்த மாதிரி ஹோட்டல் அனுபவங்கள் இருந்தா நீங்களும் பகிர்ந்துக்கங்களேன்.

6 comments:

ambi said...

//அவ்ளோ ஐட்டம்ஸ் சாப்டாதவங்க காச கொள்ள குடுத்துட்டு பேக்கு மாதிரி ஒரு fried riceஉம் ஒரு மன்சூரியனும் சாப்பிட்டு வரணும்//

ஹிஹி, அந்த பேக்கு லிஸ்டுல நானும் ஒருத்தன். லீ மெரிடியன் சூப்பரா இருக்கும். டெஸர்ட்ஸ் வெரைட்டி காட்டுவாங்க.

நாம ஆர்வமா ஒரு ஐட்டத்தை எடுக்கறத பாத்து சோக்கா ஒரு அம்மணி வந்து டூ யு லைக் இட் வெரி மச்?னு கேட்பாங்க. :))

இந்த பதிவுல ஒரு தெளிவு தெரியுது. அப்படியே பிடிச்சு மேலே போங்க. வாழ்த்துக்கள். :))

பரிசல்காரன் said...

நல்லா எழுதறீங்க மேடம்! நீங்க கேட்டுக்கொண்டதற்கிணங்க "Fivestar Hotel போனேனே!"-ன்னு நானும் நம்ம ஹோட்டல் அனுபவத்தை எழுதிருக்கேன். படிச்சுப் பாருங்க!

கோவை விஜய் said...

வீட்டில் தயரிக்கும் தாளிச்ச தயிர் சாதத்தில் தொடங்கி சென்னை சரவண பவன் அட்டாகாசங்கள் 5 நட்சத்திர ஹோட்டல்களின் பஃபே ஏமாற்று வித்தைகள்.

Thanks Intimating for Pleased Service--T I P S பற்றி சரியான வார்த்தைகள்.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

rapp said...

அடடா, நான் இந்த பின்னூட்டங்களைப் பாக்கலையே. ஹி ஹி, அம்பி அண்ணா அந்த அம்மணி பத்தி அண்ணிக்கு தெரியுமா?

rapp said...

ரொம்ப நன்றிங்க பரிசல்காரன்:):):)

rapp said...

ரொம்ப நன்றிங்க விஜய்:):):)