வாழ்கையில எல்லாருக்கும் ரொம்ப கஷ்டமான விஷயமுன்னு சில விஷயங்கள் இருக்கும்லே, அது நாம வெறுக்கிற/பயப்படற விஷயமா/நபரா இருக்கணும்னு இல்லை. உதாரணத்துக்கு எனக்கு எங்க மாமியார் வீட்டுக்கு போறதுன்னா ரொம்பப் பிடிக்கும்.அது மிக அழகான இயற்கைச் சுழலில் அமைஞ்ச வீடுந்கரதாலே மட்டுமில்லே, அங்க போனா, என் மாமியாரோட ஓவர் அன்பாலே சில சமயம் என் கணவர் படர அவஸ்தைய பாத்தா ஜோக்கா இருக்கும். எக்சாம்பிளுக்கு சின்ன வயசுல சில வகை உணவு பதார்த்தங்களை அவங்க கஷ்டப்பட்டு செஞ்சுட்டாங்களேனு இவர் ரொம்ப நல்லாருக்குன்னு சொல்லப்போக, பையனுக்கு ரொம்ப பிடிக்கும்னு அந்தக் காமடிய திரும்பத் திரும்பச் செய்வாங்க. இவர் மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம தவிக்கிரத பாத்தா எனக்கு சிரிப்பா இருந்தாலும், இவர் ஏன் அம்மா கிட்ட நேர்மையா சொல்ல மாட்டேங்கிராருன்னு கோவம் வரும்.இதுல எதுக்கு கோழைத்தனம்னு தோணும்.
எனக்கு ஜென்ரலா பூன்னா பிடிக்கும், அவ்ளவுதான். இங்க வந்தப்புறம் பூன்னா ரொம்ப ஆசை வந்துடுச்சி(ஏன்னா இங்கதான சான்ஸ் கிடைக்காது) அதனால நாங்க provence சைடுல டூர் போனா அங்க கிடைக்கிற நித்ய மல்லி, மல்லிப்பூ இதையெல்லாம் கட்டி வச்சிப்பேன், அப்புறம் தோட்டத்துல இருந்து அழகழகான ரோஜா பூக்களை பறிச்சு வச்சிப்பேன். இதையெல்லாம் மிகவும் இரசிக்கும் என் மாமியார் என்ன நெனச்சிட்டாங்கன்னா, நாம இந்தியால எல்லாப்பூவையும் தலையில வச்சிப்போம்னு நெனைச்சிட்டாங்க.
ஒகே ஒகே, புரியுது, என்ன இவ சம்பந்தம் இல்லாம பேசிட்டு இருக்காளேன்னு நெனைக்குறது புரியுது, வெயிட் ஏ நிமிட் பார் ஏ மினிட். நம்ம டைரக்டோரியல் டச் வருது.
இதிலே இருந்து அவங்க என் டிரஸ் கலருக்கு மேட்சா எல்லாப்பூவையும் பறிச்சு எனக்கு குடுப்பாங்க. இதுல வேடிக்கை என்னன்னா சில சமயம் செம்பருத்தி பூக்கள் இருக்கும்.அதையும் மிக மிக ஆசையோட பறிச்சு என் தலையில வெச்சு விடுவாங்க. அப்பா நான் பாக்க அசல் நவராத்திரி படத்துல வர்ற லூசு மாதிரியே இருப்பேன்(மத்த நேரத்துல எப்படின்னு கேக்க கூடாது). ஆனாலும் நான் அதை நாள் முழுதும் சந்தோஷமா வெச்சிட்டிருப்பேன்(தூக்கி போட சந்தர்ப்பம் கிடைத்தாலும்). அந்த சமயத்தில்தான் புரிஞ்சிச்சி ஏன் என் கணவர் அப்படி இருக்காருன்னு.
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
//நான் பாக்க அசல் நவராத்திரி படத்துல வர்ற லூசு மாதிரியே இருப்பேன்//
ஹஹா, செம காமடி,
இப்படிதான் எனக்கு சேவை (சமூக சேவைய சொல்லல, திங்கற சேவை) ரெம்ப பிடிக்கும்னு தெரிஞ்சுகிட்ட தங்கமணி, ரெடிமிக்ஸ் சேவை செஞ்சு அது அரிசிகளியா வந்தது.
முத தடவைனு நானும் வெரி நைஸ்!னு அள்ளி விட்டேன். முழுங்கவே முடியல, அதவிட கொடுமை ரெண்டு நாளைக்கு ரெண்டுக்கு வரவே இல்லை. கார்க் மாதிரி அடச்சுகிச்சு போல. :)))
Welcome to blog world :))
கலக்குங்க. ஆமாங்க இது பெரிய இம்சை...நானும் இத மாதிரி நிறைய தடவை சொல்லி மாட்டியிருக்கேன் :))))
:) நல்லா எழுதறீங்க..
word verification வேணாமே!!
ஹலோ.. ஒவ்வொரு தடவை உங்களுக்கு கமெண்ட்ஸ் அடிக்கும் போதெல்லாம் word verification கேட்குது! கடுப்பாகீது! எடுத்துடுங்க ப்ளீஸ்.!
ஓகே அண்ணாத்தே, நீங்க சொன்ன மாதிரி word verification எடுத்திட்டேன்
கயல்விழி மேடம், நீங்க சொன்ன மாதிரி word verification எடுத்திட்டேன் , வந்ததுக்கு நெம்ப தேங்க்ஸ்
அண்ணாத்தே கண்டிப்பா வர்றேன், எனக்கு சாதாரணமா செய்ற விஷயம் கூட நாலு பேரு பாக்கராங்கன்னா சொதப்பும், அத பத்தி தனி பதிவே போடலாம்.நானும் நெம்ப நாளா எழுதலாம்னு நெனைப்பேன் ஆனா டென்ஷன்ல ஒண்ணும் வராது. அப்றம் நம்ம அம்பி அண்ணன் தான் சும்மா ஆரம்பினு தெகிரியம் குடுத்தாரு
நீங்க சொன்னதுக்கப்புறம் நான் என்னோட செட்டிங்க்ஸ் மாத்திட்டேன்..
அண்ணாத்தே எல்லாம் வேண்டாம், கிருஷ்ணா போதுமே..!
ஓகே கிருஷ்ணா சார், தப்பா எடுத்துகாதீங்க, சார்/அண்ணே இப்படி ஏதாவது போடாம எழுத முடியல
\\ சின்ன வயசுல சில வகை உணவு பதார்த்தங்களை அவங்க கஷ்டப்பட்டு செஞ்சுட்டாங்களேனு இவர் ரொம்ப நல்லாருக்குன்னு சொல்லப்போக, பையனுக்கு ரொம்ப பிடிக்கும்னு அந்தக் காமடிய திரும்பத் திரும்பச் செய்வாங்க. //
சரியா சொன்னீங்க........
வாங்க வாங்க. நெம்ப தேங்க்ஸ் கடுகு சார்.
அப்பா நான் பாக்க அசல் நவராத்திரி படத்துல வர்ற லூசு மாதிரியே இருப்பேன்(மத்த நேரத்துல எப்படின்னு கேக்க கூடாது).
மத்த நேரத்தில எப்படி இருப்பிங்கன்னு நாங்க தான் கேக்கனும் நீங்களா கேட்டுக்கிட்டா உண்மை பொய் ஆகிடுமா
மாமியாரை மெச்சும் மருமகள் வாழ்க.
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com
நல்லாருக்கு மேடம், உங்க எழுத்து நடை.
இத படிச்சு
தானா சிரிச்சு
லூசுனே முடிவு பண்ணையாச்சு என்ன என் ஆபிஸ்ல.
Post a Comment