Tuesday, 20 May 2008

செவ்வாய்க் கிழமை தூர்தர்ஷன் நாடகம் - 1

எனக்கு ஒரு விஷயம் சரியா புரிய மாட்டேங்குது, என்னன்னா, தாய்மொழியாம் தமிழ்மொழி பால் திடீர் பாசம் கொண்டவர்களை பற்றி.இந்தியால எனக்கு தெரிஞ்ச சிலப்பேர் அக்மார்க் தமிழ்னு ப்ரூவ் பண்ணுவாங்க, எப்டின்னா இப்போ ஒரு tableல தமிழ் மற்றும் ஆங்கில தினசரிகள் இருக்குன்னா, இவங்க நாம தமிழ் பேப்பர எடுத்தா என்னமோ ஒரு பெரிய தப்பு செஞ்சது மாதிரி பாப்பாங்க, சர்ச்ல தமிழ் சர்வீஸ்னா அந்த சர்ச்சுக்கு போக மாட்டாங்க, பொது இடங்கள்ல பாத்தா ஆங்கிலத்துல தான் பேசுவாங்க, தொலைக்காட்சியில ஆங்கில சேனல் தான் பாப்பாங்க. இப்படியேர்பட்டவங்க திடீர்னு தமிழ் மேல அக்கறை காட்டுறாங்க. எப்டீன்னா, நான் என் ரங்கமணிக்கு தமிழ் கத்து குடுக்கலயாம், அதனால எனக்கு தமிழ் பற்றே இல்லையாம்.இந்த கேள்விய தமிழாசிரியரான எங்கப்பா கேட்டா ஞாயமுண்டு. ஆனா அவர மாதிரி "மொழிப்பற்று இல்லாதவங்க" எல்லாம் தெளிவாத்தான் இருக்காங்க,ஒரு மொழிங்கறது தகவல் பரிமாற்றதுக்குதான்னு. என்னை பொருத்தவரைக்கும் ஒரு மொழிய ஒருத்தர் கத்துக்கணும்னா (தாய்மொழியா இல்லாத பட்சத்தில்) அதுக்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒண்ணு அவங்களுக்கு அந்த மொழி மேலயோ அந்த மொழி சார்ந்த வரலாறு, பண்பாடு மேலயோ (இல்ல யாரையாவது கவர் பண்றதுக்கு) பயங்கர ஆர்வம் இருக்கணும். அல்லது இரண்டாவது காரணம் என்னன்னா அது அவங்களுக்கு அத்தியாவசியமா, முன்னேற்றத்துக்கு அவசியமானதா இருக்கணும். இது ரெண்டுலயும் சேர்த்தி இல்லைனா நாம யாரையும் கத்துகிட்டே ஆகணும்னு சொல்ல முடியாது. நீங்க என்னங்க சொல்றீங்க?


என்னங்க தலைப்புக்கும் மேட்டருக்கும் சம்பந்தம் இல்லையேனு பாக்கறீங்களா, செவ்வாய்க் கிழமை தூர்தர்ஷன் நாடகம் இப்படித்தானே சம்பந்தா சம்பந்தம் இல்லாம மொக்கை போடும்.

8 comments:

ambi said...

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் இப்படி தானா முடிச்சு போடனும்? யப்பா கண்ண கட்டுது எனக்கு. :))


word verification என்னத்த எடுத்தீங்க? இன்னும் இருக்கு.

me typing, gefnjquk :)

template save பண்ணலைனு நினைக்கறேன்.

Anonymous said...

இப்போ சரி ஆகிடிச்சுன்னு நெனைக்கறேன் அண்ணே

rapp said...

thanks

Anonymous said...

very good.

பரிசல்காரன் said...

மேடம் .. இவ்ளோ அருமையா எழுதறீங்க! வெரி குட்! உங்க முதல் போஸ்ட்-க்கு என் கமெண்ட்ஸ் படிக்கலியா?

ஆமா.. நம்ம அக்ரிமெண்ட்-ஐ மதிக்கலியே நீங்க? எத்தனை கமெண்ட்ஸ் அனுப்பறேன் நான்? என் பிளாக் பக்கமே நீங்க வரலியே? என்னக்கா இப்படி பண்றீங்க?

Anonymous said...

Yes. If you teach them Tamil, it does not do them any harm. But if you want them to move away from the culture you were breeded, then it is a good way not to teach them tamil. Kindly don't take my view as a criticism. I am living in europe for 7 years now and i understand that the language has a greater role in understanding ones heritage and culture and it is much more than an communication medium.

with regards
manikandan

rapp said...

மணிகண்டன் சார்,
நீங்க சொல்றது எனக்கு குழந்தை பிறந்து அந்தக்குழந்தைக்கு நான் தமிழ் பேச கத்துக்குடுக்கலைனா தான். ஒருத்தருக்கு கொஞ்சமும் விருப்பமில்லாத விஷயத்த கம்பெல் பண்ணி செய்ய வைக்கிறது தப்பு. இதுதான் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்னு உருவாச்சு. இதையே இப்டி யோசிங்க, என் மாமனாரும் மாமியாரும் அவங்களுக்கு புரியனும்னும், அவங்களோட பேசணும்னும் எங்கக்கா எங்கம்மா எல்லாம் பிரஞ்சு கத்துக்கணும்னு சொன்னா அராஜகமா இருக்காதா? நான் கண்டிப்பா என் குழந்தைக்கு தமிழ், நம்ம பண்பாடு எல்லாத்தையும் சொல்லித்தருவேன். அதில் சந்தேகமே இல்லை.ஆனா ஒரு 29 வயசு இளைஞனுக்கு தேவையோ,விருப்பமோ இல்லாமல் எதையும் கம்பெல் பண்ணி செய்ய வைப்பதில் எனக்கு துளி கூட உடன்பாடு இல்லை.

கோவை விஜய் said...

மொழி பற்றிய தங்கள் மதிப்பூடு மிகச் சரியானது.

யாரையும் கட்டாயப் படுத்துதல் கூடாது ,அதுவும் மொழி விசயத்தில்.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com