Monday, 15 December, 2008

செருப்பும் தீவிரவாதமும்

இந்தத் தொடருக்கு என்னை அழைத்த முத்துலெட்சுமி கயல்விழி அவர்களுக்கு மிக்க நன்றி. எனக்கு இதைப்பற்றி வழக்கம்போல பெரிதாக ஒன்றும் தெரியாது. இதில் கூறப்பட்டுள்ள விஷயங்களில் ஏதேனும் தவறிருந்தால் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டுங்கள் நண்பர்களே, திருத்தி விடுகிறேன்.


தீவிரவாதத்திற்குக் காரணம் அரசியல்வாதிகள்தான் என்பதோ, சட்டம் போட்டால் அனைத்தையும் அடக்கி விடலாம் என்பதோ நம் சூழலில் பொறுப்பான பதிலில்லை. காரணங்கள் எப்பொழுதும் மக்களின் மனவோட்டத்தை பொறுத்தது. குஜராத், பம்பாய் என எங்கு கலவரம் நடப்பதற்கும் வெறும் தலைவர்களே காரணம் அல்ல. அவர்களின் எழுச்சிக்கு மக்களே காரணமாக இருக்கின்றனர். சொன்னதை பத்தாகச் செய்கின்றனர், பின்னர் வசதியாக தலைவர்களை தூற்றுகின்றனர். பல ஊடகங்களும் மிக வெற்றிகரமாகவே இந்தக் கூற்றுக்கு நெய் ஊற்றுகின்றன. உணர்ச்சிவசப்பட்டவனுடைய மூளையைச் சலவை செய்வதில் ஊடகங்களுக்கு இணையுண்டா? ஆதலால் இத்தகையக் காரணங்களைப் பற்றி நான் இங்கு எழுதவில்லை.


நம்முடைய நாட்டில் உள்ள பேப்பர் பார்மாலிட்டீஸ் ஒழியாதவரை, அரசு அலுவல்களில் டிரான்ஸ்பரன்சி வராதவரை, தீவிரவாதம் உள்ளிட்ட அனைத்து சமூக விரோதப் போக்கும் செழித்தோங்கிக் கொண்டுதான் இருக்கும். இந்த முட்டாள்தனமான அலுவலக நடைமுறைகளை மாற்றினாலே போதும், நாட்டில் பல்வேறு பிரச்சினைகளில் தீர்வு ஏற்படுவதற்கு. ஒரு சாதாரண ஊரின் சாலை சரியில்லை என்று ஒரு கடிதம் எழுதியதற்கே நேரடியாக எவ்வளவோ நடவடிக்கை எடுத்த முதல்வரும் உண்டு, அப்படியும் முதல்வருக்கே டேக்கா கொடுத்த அரசு ஊழியர்களும் உண்டு. இதற்குக் காரணம் என்ன?


ஒரு சாதாரணக் குடிமகனுக்கு வெளிநாடு செல்ல தேவைப்படும் சிகப்பு முத்திரைக்கு குறைந்தபட்சம் ஒரு வாரமாவது அரசு ஊழியர்கள் நொட்டாங்கை வேலை செய்ய வேண்டும். அது தேவைப்படுபவர் அடுத்த பத்து நாட்களுக்கு எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு அது பற்றியே சிந்தித்து ஊண் உறக்கமின்றி களப்பணி ஆற்ற வேண்டும். நடைமுறை கீழே:


தலைமைச் செயலக எக்ஸ்டர்னல் அபேர்ஸ் துறை -> மாவட்ட ஆட்சியர் அலுவலகம் -> தாசில்தார் அலுவலகம் -> கிராம நிர்வாக அலுவலகம்(இரண்டு கட்டம்) -> பதிவாளர் அலுவலகம் -> கிராம நிர்வாக அலுவலகம் -> தாசில்தார் அலுவலகம் -> மாவட்ட ஆட்சியர் அலுவலகம் -> தலைமைச் செயலக எக்ஸ்டர்னல் அபேர்ஸ் துறை.


மாதத்தில் பாதிநாள் சென்னையில் ஏதேனும் காரணம் சொல்லி தங்கிவிடும் மாவட்ட ஆட்சியர், அவர் சம்பந்தப்பட்ட கடிதப்போக்குவரத்துகளில் உள்ள நடைமுறை சிக்கல்கள் பிளஸ் கடிதங்களை டீல் செய்யும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள், சிறுதாவூர் பிரச்சினையில் இருந்து, அன்றே தன் அலுவல்கள் அனைத்தையும் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று நெறுக்கும் இராணுவ அதிகாரி வரை அத்துணை விஷயங்களையும் அப்பொழுதே கவனித்தாக வேண்டிய நிலையிலிருக்கும் தாசில்தார், பிறப்பு இறப்பு சான்றிதழில் இருந்து அரசு வழங்கும் பல நலவுதவித்திட்டங்கள் வரை அனைத்தையும் கவனிக்க வேண்டிய அவருடைய அலுவலகத்தினர், உள்ளாட்சித் தேர்தலில் இருந்து, நில அளவுப் பிரச்சினைகள் வரை அனைத்தையும் சரிபார்த்து செய்ய வேண்டிய நிர்பந்தத்தயுடைய கிராம நிர்வாக அதிகாரிகள் அல்லது அவர்களுக்கு நிகரான பதவியில் உள்ளவர்கள். தரகரின்றி நெருங்கவே முடியாத கிட்டத்தட்ட கலவர பூமிபோன்ற தோற்றத்தை உடைய, காட்சிகளை பெற்ற பதிவாளர் அலுவலகங்கள். இவையனைத்தையும் தாண்டி செக்ரடேரியட்டில் வேலைப்பார்க்கும் ஒரு ஊழியரின்(கடைநிலை ஊழியர் என்றால் பிளஸ்) உதவியின்றி சுறுசுறுப்பாக வேலை நடக்காத தலைமைச் செயலக எக்ஸ்டர்னல் அபேர்ஸ் துறை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.


எதற்கு இப்படிப்பட்ட ஒரு பைத்தியக்காரத்தனமான நடைமுறை? ஏன் இன்னமும் அனைத்து நிலைகளிலும் அத்துணை கடிதங்கள் எக்கச்சக்க ரெபரென்ஸ் எண்களோடு?
ஏன் எங்குமே வெளிப்படையான அணுகுமுறை இல்லை. என் ஒருத்தியின் காரியத்திற்கே இத்துணை பேர் இவ்வளவு நேரத்தை செலவிட்டால் அவர்கள் எப்படி முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள்?
இதன் பலன்தான் என்ன? ஏன் எப்பொழுதுமே அனைத்து அரசு அலுவலகங்களிலும்மிக மோசமான அளவில் ஆள் பற்றாக்குறையுள்ளது? இந்தச் சூழலிலும் குறைந்தபட்ச மனசாட்சியோடு பெரும்பான்மையான அரசு ஊழியர்கள் செயல்பட்டாலும் எங்கும் எதிலும் அவப்பெயரே மிஞ்சுவதன் காரணமென்ன?இந்தப் பணிச்சூழலில் தானாக லஞ்சம் வரத்தானே செய்யும்? சிலசமயம் அவர்களின் பணிச்சுமையைப் பார்த்து எனக்கே அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியதே, காரணம் என்ன? குமாஸ்தா டைப் வேலைகள் பெரியளவில் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்காதுதான், ஆனால் இப்படி பத்தாள் வேலையை ஒருத்தர் மேலேயா சுமத்துவது?


அனைவரையும் விடுங்கள் கிராம நிர்வாக (அல்லது அதற்கு நிகரான)அலுவலகங்களிலே பணியாற்றுபவர்கள் என்ன தேவதூதர்களா அத்துணை காரியங்களை கவனிப்பதற்கு? இந்த சூழ்நிலையில் அவர்கள் வேறெப்படி செயல்படுவார்கள்? இதில் பல்வேறு விஷயங்களில் மாதத்திற்கொரு மாற்றம் என்று கடுப்பேத்துவது வேறு.


சமூக விரோதிகள் இந்த நடைமுறைகளால் லாபம்தானே அடைவார்கள்? தொல்லைகள் நிறைந்த இடங்களில் தொய்வுதானே ஏற்படும்? கடைசியில் யாரும் எதிலும் அக்கறை செலுத்துவதில்லை.
கமேண்டோக்கள் வருகையில் இருந்து, தரமான பாதுகாப்பு உடைகள் வரை அனைத்திலும் பிரச்சினை ஏற்பட்டது பெரும்பான்மையாக நிர்வாக சீர்கேட்டினால்தானே?


ஒரே ராத்திரியில், குடும்பத்தின் ஒரே சம்பாதிக்கும் நபர் இறந்து, எதிர்காலமே கேள்விக்குறியாகி, பெற்றோர்களே ஏழ்மையால் மற்றொரு பாரத்தை சுமக்க பயந்து ஒதுங்கி, ஒருவேளை பிழைத்தாலும் எட்டாக்கனியான மருத்துவத்தை அண்ணாந்து நோக்குவதையே தினப்படி வாழ்வாக ஏற்றுக்கொண்டு, இத்தனை ஏமாற்றங்களையும் சந்தித்த பின்னும் 'ஏதாவது வேலை போட்டுக் கொடுத்தால் பரவாயில்லை', என கெஞ்சும் மக்களை கொண்ட சமூகம் இது.
கிட்டத்தட்ட 'நாளை' எனும் சொல்லே கேள்விக்குறியாகி உள்ள இவர்களுக்கு குறைந்தபட்சம் இறப்புச் சான்றிதழ் பிரச்சினையின்றி கிடைக்க வேண்டும், சொந்தப் பகையை தீர்த்துக் கொள்வதற்காக அதனைக் கூட திருடிச் செல்லும் மைத்துனர் அமையாதிருக்கவேண்டும்.


பனிரெண்டாம் தேதி கார்கரே அவர்களின் பிறந்தநாள், பதிமூன்றாம் தேதி நாடாளுமன்ற தாக்குதலில் உயிர்நீத்தவர்களின் நினைவுநாள். அஞ்சலி செலுத்த வந்த தலைவர்களின் எண்ணிக்கை:(:(:(


கார்கரே மனைவியால் ஒரு கோடி வேண்டாம் எனக் கூற முடியும், ஆனால் இறந்த கான்ஸ்டபில்களின் குடும்பத்தாரால் கூற முடியுமா? பொருளாதாரம்தானே பல நேரங்களில் நம்முடைய சுயமரியாதையை தீர்மானிக்கிறது.


இப்படிப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளா கிலோ என்ன விலை என்கின்றன நட்சத்திர விடுதிகள். கேட்டால், இதெல்லாம் அரசாங்கத்தின் வேலை, பாதுகாப்புத்துறையின் வேலை என்கின்றனர். நூற்றுக்கு நூறு சரிதான். ஆனால் பம்பாய் போன்ற நகரங்களில் தங்க வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அயல்நாட்டு அலுவலர்கள் இவர்களின் விடுதியை நாடுவதேன்? இங்கெல்லாம் குறைந்தபட்ச பாதுகாப்பாவது இருக்கும் என்றுதானே? அண்டை நாட்டில் இதைவிட பயங்கர தாக்குதல் மற்றொரு விடுதியில் நடைபெற்ற போதே கொஞ்சமாவது உஷாராகியிருக்க வேண்டாமா? முன்பக்க வாசல் வழியாக வருவதற்கு அவர்கள் என்ன இவர்கள் வீட்டு மாப்பிள்ளையா? எப்படி தீவிரவாதிகளுக்கு அவ்வளவு துல்லியமாகத் திட்டமிட முடிந்தது என்ற கேள்விஎழும்போது, அதற்குக் கிடைக்கும் பதில்கள் ஆச்சர்யமூட்டுகின்றன. அப்படிஎன்றால் இங்கு இவர்களைப்போன்றவர்கள் இதே மாதிரி முஸ்தீபுகளுடன் தங்குவது சாதாரணம், என்ன இந்த முறை இங்கேயே தாக்குதல் நடத்திவிட்டார்கள் போலிருக்கிறது.


ஒருவேளை, இங்கெல்லாம் ஹவாய் செருப்புப் போட்டுக் கொண்டு வருபவர்களுக்குத்தான் அனுமதி இல்லை போலும். துப்பாக்கி மற்றும் இன்னபிற ஆயுதங்களோடு வருபவர்களுக்கு பிரச்சினை கிடையாது போலிருக்கிறது.


115 comments:

SUREஷ் said...

me the first

SUREஷ் said...

//எங்கு கலவரம் நடப்பதற்கும் வெறும் தலைவர்களே காரணம் அல்ல. அவர்களின் எழுச்சிக்கு மக்களே காரணமாக இருக்கின்றனர். சொன்னதை பத்தாகச் செய்கின்றனர், பின்னர் வசதியாக தலைவர்களை தூற்றுகின்றனர்.//


அக்கா, அசத்திட்டீங்க...

நீங்க சொல்லறது சரிதான்னு தோணுது

SUREஷ் said...

//அப்பொழுதே கவனித்தாக வேண்டிய நிலையிலிருக்கும் தாசில்தார், பிறப்பு இறப்பு சான்றிதழில் இருந்து அரசு வழங்கும் பல நலவுதவித்திட்டங்கள் வரை அனைத்தையும் கவனிக்க வேண்டிய அவருடைய அலுவலகத்தினர்//எல்லா அரசு அலுவலகங்களிலும் வேலைப் பளு மிக அதிகம் மேடம்

SUREஷ் said...

///. என் ஒருத்தியின் காரியத்திற்கே இத்துணை பேர் இவ்வளவு நேரத்தை செலவிட்டால் அவர்கள் எப்படி முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள்?///நூறு கோடி மக்களுக்கும் பணி செய்துதான் ஆக வேண்டும்

SUREஷ் said...

//சிலசமயம் அவர்களின் பணிச்சுமையைப் பார்த்து எனக்கே அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியதே, காரணம் என்ன?//ரொம்ப நல்லவங்களா இருக்கீங்க மேடம்.

SUREஷ் said...

//ஹவாய் செருப்புப் போட்டுக் கொண்டு வருபவர்களுக்குத்தான் அனுமதி இல்லை போலும். //


ஏறக்குறைய இதே மாதிரி பிரச்சனைக்குத்தான் மிகவும் ரோஷப் பட்டு அந்த ஓட்டலை ஆரம்பித்ததாகப் பேசிக் கொள்கிறார்களே.......

Anonymous said...

//பொருளாதாரம்தானே பல நேரங்களில் நம்முடைய சுயமரியாதையை தீர்மானிக்கிறது.//
நிச்சயமாய்.

Anonymous said...

மூளைச்சலவை செய்யறாங்கன்னாலும்,அவங்கவங்களுக்குன்னு ஒரு இது வேணுமில்ல. அது புத்தியோ காமன்சென்ஸோ ஏதோ ஒண்ணு.

Anonymous said...

//பொருளாதாரம்தானே பல நேரங்களில் நம்முடைய சுயமரியாதையை தீர்மானிக்கிறது. //

100% உடன்படுகிறேன்.

//முட்டாள்தனமான அலுவலக நடைமுறைகளை மாற்றினாலே போதும், நாட்டில் பல்வேறு பிரச்சினைகளில் தீர்வு ஏற்படுவதற்கு//

முட்டாள் தலைவர்களும் அவர்களுக்குக் காவடி தூக்கும் அதிகாரிகளும் இருக்கும்வரை இந்த நடைமுறைகள் இருக்கும்

புதுகைத் தென்றல் said...

இதில் கூறப்பட்டுள்ள விஷயங்களில் ஏதேனும் தவறிருந்தால் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டுங்கள் நண்பர்களே,//

இப்படி ஆரம்பிச்சிருந்தாலும் மிக அருமையா உங்களின் பார்வையைச் சொல்லியிருந்தீங்க. பாராட்டுக்கள்

நாம புலம்பத்தானே முடியுது!!

கார்க்கி said...

எனக்கு ஒரு நாள் டைம் தரவும். முழுவதும் படித்துவிட்டு கமென்ட்டுகிறேன். இது ஏதோ சீரியஸான பதிவு என்பதால் படித்துவிட்டு சொல்கிரேன்

விஜய் ஆனந்த் said...

!!!!

ஆப்பிசர்...அருமையா எழுதியிருக்கீங்க...

கடைசி பக்கம் said...

If they change the system more transparent then automatically work load will come down.

But for me we need to change the attitude of people.

சந்தனமுல்லை said...

ராப்..செம!!

//பொருளாதாரம்தானே பல நேரங்களில் நம்முடைய சுயமரியாதையை தீர்மானிக்கிறது. //

அப்பட்டமான உண்மை!!

நல்ல தெளிவானக் கருத்துக்கள்..அதை சொன்ன ப்ளோ-வும் அருமை!!

சந்தனமுல்லை said...

ராப்...ஒரு பத்திரிக்கையாளரின் கட்டுரை மாதிரி இருந்தது..//இங்கெல்லாம் ஹவாய் செருப்புப் போட்டுக் கொண்டு வருபவர்களுக்குத்தான் அனுமதி இல்லை போலும். துப்பாக்கி மற்றும் இன்னபிற ஆயுதங்களோடு வருபவர்களுக்கு பிரச்சினை கிடையாது போலிருக்கிறது.// இந்த வரிகள் செம!!

வால்பையன் said...

மீ த 16

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வால்பையன் said...

//செருப்பும் தீவிரவாதமும்//

ரெண்டும் ஒன்னுன்னு சொல்ரிங்களா?

வால்பையன் said...

//எனக்கு இதைப்பற்றி வழக்கம்போல பெரிதாக ஒன்றும் தெரியாது. //

உங்களுக்காகவது பெரிதாக ஒன்றும் தெரியாது, நிறைய பேருக்கு சிறிதாக கூட ஒன்றும் தெரியாது

வால்பையன் said...

//தீவிரவாதத்திற்குக் காரணம் அரசியல்வாதிகள்தான் என்பதோ, சட்டம் போட்டால் அனைத்தையும் அடக்கி விடலாம் என்பதோ நம் சூழலில் பொறுப்பான பதிலில்லை.//

அப்போ இல்லைன்னு சொல்ரிங்களா?

வால்பையன் said...

//நம்முடைய நாட்டில் உள்ள பேப்பர் பார்மாலிட்டீஸ் ஒழியாதவரை, அரசு அலுவல்களில் டிரான்ஸ்பரன்சி வராதவரை,//

தீவிரவாததுக்கு மட்டுமில்லை, நாடு உருப்படவே இது தேவைப்படுகிறது

வால்பையன் said...

//ஒரு சாதாரண ஊரின் சாலை சரியில்லை என்று ஒரு கடிதம் எழுதியதற்கே நேரடியாக எவ்வளவோ நடவடிக்கை எடுத்த முதல்வரும் உண்டு,//

அது ஒரு அழகிய கனாக் காலம்

வால்பையன் said...

//இங்கெல்லாம் ஹவாய் செருப்புப் போட்டுக் கொண்டு வருபவர்களுக்குத்தான் அனுமதி இல்லை போலும். துப்பாக்கி மற்றும் இன்னபிற ஆயுதங்களோடு வருபவர்களுக்கு பிரச்சினை கிடையாது போலிருக்கிறது.//

நச் வசனம்

வால்பையன் said...

இன்று இந்தியாவில் தீவிரமாக எதிர்க்க வேண்டியது தீவிரவாதம்

வால்பையன் said...

அதற்கு அரசு அலுவலகங்கள் சரியாக நடக்க வேண்டும்
சரியா
அதானே நீங்க சொல்ல வர்ரது

வால்பையன் said...

என் பதில் அதற்கு அரசியவாதிகளின் தலையீடு அரசு அலுவலகங்களில் இருக்க கூடாது

வால்பையன் said...

வந்ததுக்கு ஒரு குவாட்டர் போட்டாச்சு

Bharath said...

யக்கா என்னாதுதிது.. சாட்டைய இந்த சுத்து சுத்துறீங்க..

"NDTV" experience super'a தெரியுது.. :)

101% ஒத்துப்போகிறேன்..

நான் ஆதவன் said...

அசத்திட்டீங்க ராப்...
ஒரு புரொபஷனல் ஜெர்னலிசனம் இந்த கட்டுரையில் தெரியுது.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

rapp இந்த நடைமுறை ப்ரச்சனைகள் எல்லாம் கேள்விபட்டது தானே தவிர நேரில் போய் பார்த்தது இல்லை.. நீ பட்டிருக்க தெரியுது...ரொம்ப அழகா எழுதி இருக்கே.. அங்கங்க நறுக்கு தெறிக்கிறது....

முத்துலெட்சுமி-கயல்விழி said...

30

rapp said...

வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி சுரேஷ்:):):)

//எல்லா அரசு அலுவலகங்களிலும் வேலைப் பளு மிக அதிகம் மேடம்
//
ஆமாம் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. நான் இங்குக் கூறியுள்ளது சிறிய உதாரணம்தான்.


//
நூறு கோடி மக்களுக்கும் பணி செய்துதான் ஆக வேண்டும்//

ரொம்ப சரி, கூடவே சிஸ்டத்தில் டிரான்ஸ்பரன்சி ஏற்படுத்துவதின் மூலமும், ஆள் பற்றாக்குறையை குறைப்பதன் மூலமும் எவ்வளவோ மேம்படுத்தலாமே.


//
ரொம்ப நல்லவங்களா இருக்கீங்க மேடம்.//

நான் கஞ்சப்பிசினாரி நம்பர் ஒன். ஆனால் அன்று ஒருநாள் மட்டுமே விதவைகள் பென்ஷனில் இருந்து, என்னென்னமோ இருந்தது. அதையெல்லாம் கவனிக்க இருந்த ஆட்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அத்துணைக்கு நடுவிலும் நம் பிரச்சினைகளை உயரதிகாரிகளிடம் திட்டு வாங்கிக் கொண்டே அவர்கள் கவனித்த போது ஏற்பட்ட குற்றவுணர்ச்சி:(:(:(


//
ஏறக்குறைய இதே மாதிரி பிரச்சனைக்குத்தான் மிகவும் ரோஷப் பட்டு அந்த ஓட்டலை ஆரம்பித்ததாகப் பேசிக் கொள்கிறார்களே//

நம்மூர் ஆட்களைப் பற்றி தெரியாதா? வெள்ளைக்காரர்களைவிட ஜாஸ்தியாக, ஒரு தடை செய்யப்பட வார்த்தையை கறுப்பின மக்களை நோக்கி பிரயோகிப்பவர்களாயி்ற்றே, நாமும் அவர்களில் ஒருவர்தான் என்பதை மறந்து. அதோடு, ரோஷம் வந்தது பணக்கார இந்தியனை உள்ளே விடவில்லையென்றுதானே:):):)

rapp said...

வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி சின்ன அம்மிணி:):):)

//மூளைச்சலவை செய்யறாங்கன்னாலும்,அவங்கவங்களுக்குன்னு ஒரு இது வேணுமில்ல. அது புத்தியோ காமன்சென்ஸோ ஏதோ ஒண்ணு.//

நூற்றுக்கு நூறு சரி.

rapp said...

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி வேலன் சார்:):):)

//முட்டாள் தலைவர்களும் அவர்களுக்குக் காவடி தூக்கும் அதிகாரிகளும் இருக்கும்வரை இந்த நடைமுறைகள் இருக்கும்//

ஆமாம். அரசு அலுவல்களைப் பொறுத்தவரை அரசியல்வாதிகளை பெரும்பான்மையாக திசை திருப்புவது பல சமயங்களில் செல்வாக்குப் பெற துடிக்கும் சில அதிகாரிகள் என்பது என் கருத்து. அதேசமயம் நேர்மையான செயல்பாடுகளுக்கு சில சமயம் இடையூறு செய்வது அரசியல்வாதிகள்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நிஜம்மா உடை விசயமும் ஸ்டேட்டஸ் விசயமும் தான் ஹோட்டலில் கவனிக்கப்படுதுங்கறது மிகக்கொடுமை..தொடரை தொடர யாரையும் அழைக்கவில்லையே!

rapp said...

வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல் அவர்களே:):):) நீங்கள் சொல்வது சரிதான்:):):) புலம்பத்தான் முடிகிறது

rapp said...

வருகைக்கு நன்றி கார்க்கி:):):)

rapp said...

வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி விஜய் ஆனந்த்:):):)

rapp said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி கடைசிப் பக்கம்:):):) ஆம் நீங்கள் கூறுவதேதான் என் கருத்து. வெளிப்படையான அணுகுமுறையாக மாற்றப்பட்டால் முக்கால்வாசிப் பிரச்சினைகள் சீர்படும்:):):)

rapp said...

வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி சந்தனமுல்லை. ஆமாம், பல சமயங்களில் லாரி விபத்தில் இருந்து, முதலாளியின் அலட்சியங்கள் வரை நேறும் அனைத்து இழப்புகளுக்கும் பொருளாதாரத்தில் எளியோர் என்ன செய்ய முடிகிறது? ரோஷத்தயோ சுயமரியாதயயோ தீர்மானிக்கவா முடிகிறது.

rapp said...

வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி வால்பையன்:):):)

//
அது ஒரு அழகிய கனாக் காலம்//

கிடையாது நிகழ்காலம்:):):)

//இன்று இந்தியாவில் தீவிரமாக எதிர்க்க வேண்டியது தீவிரவாதம்.அதற்கு அரசு அலுவலகங்கள் சரியாக நடக்க வேண்டும்
சரியா
அதானே நீங்க சொல்ல வர்ரது//

அனைத்து சமூகவிரோத செயல்களுக்கும் ஒருவகையில் விரக்திகளும் ஏமாற்றங்களுக்கும் காரணமாகிறது. அவை அரசு அலுவலகங்கள் ஓரளவு நன்றாக செயல்பட்டால் பெரும்பான்மையாக குறையும். இன்றைக்கு சின்ன ஊர் பிரச்சினையாக தெரியும் மதக் கலவரங்களும் ஜாதி, இனக் கலவரங்களையும் ஆரம்பத்திலேயே கிராம நிர்வாகத் துறையினரும், தாசில்தாரும் தீர்த்து வைத்தால் நாளைய பெரிய மோதல்களை தவிர்க்கலாமே.

// அதற்கு அரசியவாதிகளின் தலையீடு அரசு அலுவலகங்களில் இருக்க கூடாது//

மிகவும் சரி. ஆனால் அரசு ஊழியர்களும் லேசு பட்டவர்கள் இல்லையே:):):) காடுவெட்டி குரு போன்ற எம்.எல்.ஏக்களுக்கு வேண்டுமானால் செவிச் சாய்ப்பார்கள். மற்றபடி சாதாரண அரசியல்வாதிகளுக்கோ, ஏன் ஆளுங்கட்சியினருக்கேக் கூட அவர்கள் மரியாதை அளிப்பதில்லை. நான் பார்த்த பல அலுவலகங்களில் இதுதான் நிலைமை. நான் முன்பே கூறியுள்ளதைப்போல முதல்வரே தலையிட்டாலும் டேக்கா கொடுக்கும் அதிகாரிகள் உண்டு. காரணம் பணிச்சுமை. வசதி, நம்முடைய சிஸ்டத்தில் சுத்தமாக டிரான்ஸ்பரன்சி இல்லாமல் இருக்கும் நிலை.

வித்யா said...

நிதர்சனமான உண்மைகள் ராப்.

rapp said...

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி பரத். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......என்டிடிவி அனுபவம்தான் பார்த்தீங்கல்ல:):):)

rapp said...

வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி நான் ஆதவன்:):):)

rapp said...

வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி முத்து. ஆமாம் அந்த ஏழு நாட்கள் மாதிரி, இது, அந்த பதினாலு நாட்கள். யாரையும் குறை சொல்ல முடியவில்லை. அவ்வளவு தொல்லைகள். பெரும்பான்மையானவை மிக முக்கியப் பிரச்சினைகள். நம்முடையது ஒன்றுமே இல்லை எனத் தோன்றும் நிலை. அதற்கு மத்தியில் நம்மைக் கொஞ்சம் கவனித்தாலே நன்றிக்கடன் பட்டவளாவேன் எனத் தோன்றியது.

rapp said...

வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி வித்யா:):):)

சுமி said...

பிரிச்சு மேய்ஞ்சிருக்கீங்க... சூப்பர்

ambi said...

ம்ம் ரொம்ப அழகா, தெளிவா பிரச்சனைய ஒரு கோணத்துல ஆராய்ஞ்சு இருக்கீங்க.

ஆனா எல்லா தீவிரவாதமும் பணத்துக்காக மட்டுமே செய்யபடறதில்லையே.

சொர்க்கத்துக்கு போய், குஜால்சா இருக்கலாம்னு மூளை சலவை எல்லாம் செய்யறாங்களாமே!

அருண் said...

Super rapp akka!

அருண் said...

49

அருண் said...

50

அருண் said...

me the 50th.

கோபிநாத் said...

பதிவை பத்தி சொல்ல என்னிடம் எந்த வார்த்தைகளும் இல்லை...இந்த மக்களில் நானும் ஒருவன். என்மேலும் தவறு இருக்கிறது.

விரைவில் இதை எல்லாம் கலைய வேண்டும்.

செய்வோம்!!

கபீஷ் said...

நல்லா அலசியிருக்கீங்க!!! நீங்க மொக்கை, கவுஜ எழுதறத உட்டுட்டு இது மாதிரி உருப்படியா எழுதலாம்.

வெளிப்படையான நிர்வாகம் பத்திரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. தீவிரவாதத்த பத்தி இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் :-(

கொஞ்சம் பேர் தான் தைரியமா எழுதறாங்க, நீங்க அந்த லிஸ்ட்ல இருந்துட்டு, இத்துனூண்டு எழுதியிருக்கீங்க

கபீஷ் said...

//சிறுதாவூர் பிரச்சினையில் இருந்து//

ஸ்பெக்ட்ரம் வரைக்கும்.... :-):-)

நீங்க கரெக்டா கழக கண்மணின்னு நிரூபிச்சிட்டீங்க.

கபீஷ் said...

கடமைக்கு எழுதணும்னு பேருக்கு ஏதோ எழுதாம, தெளிவா ஒரு கோணத்தை எடுத்து ஆராய்ந்து எழுதுனதுக்கு வாழ்த்துக்கள், நன்றி, ராப்!!! :-):-)

ராமலக்ஷ்மி said...

பிரச்சனையை வேர் வரை சென்று அலசியிருக்கிறீர்கள் ராப். பாராட்டுக்கள்.

அம்பி சொல்வது போல மூளைச் சலவை பணத்தை முன் வைத்து மட்டுமே நடப்பதில்லை. கொள்கைக்காக உயிரை விடுவது புனிதம் புண்ணியம் என்றெல்லாமும் சலவை செய்யப் படுகிறார்கள்:(!

கடைசி நாலு பத்தியும்
நச் நச் நச் நச்!

T.V.Radhakrishnan said...

அசத்திட்டீங்க

சரவணகுமரன் said...

நல்ல கருத்துக்கள்

நசரேயன் said...

/*ஒருவேளை, இங்கெல்லாம் ஹவாய் செருப்புப் போட்டுக் கொண்டு வருபவர்களுக்குத்தான் அனுமதி இல்லை போலும். துப்பாக்கி மற்றும் இன்னபிற ஆயுதங்களோடு வருபவர்களுக்கு பிரச்சினை கிடையாது போலிருக்கிறது*/
உண்மை

நசரேயன் said...

நீங்க ஆந்திரகாரர் சொல்லிக்கிட்டு தமிழ் நாட்டு அரசியல்ல களம் இறங்கினா நல்ல எதிர்காலம் இருக்கும்

நசரேயன் said...

இதுதான் பின்னி படல் எடுகிறதா?

coolzkarthi said...

நன்றாக சாடி உள்ளீர்கள்.....

RAMYA said...

//
நம்முடைய நாட்டில் உள்ள பேப்பர் பார்மாலிட்டீஸ் ஒழியாதவரை, அரசு அலுவல்களில் டிரான்ஸ்பரன்சி வராதவரை, தீவிரவாதம் உள்ளிட்ட அனைத்து சமூக விரோதப் போக்கும் செழித்தோங்கிக் கொண்டுதான் இருக்கும்
//


இதில் ராப் நிங்கள் கூறி இருப்பது
100% உண்மை, உண்மை.
மனம் என்பது அவரவர்கள் சம்பத்தப்பட்டது மனிதர்களாக பார்த்து திருந்தினால் தான் நாட்டுக்கு விமோசனம், இதில் வேறு ஒருவரும்
அறிவுரை கூற இயலாது
அறிவுரைகள் அங்கே ஏற்றக்கொள்ள மாட்டார்கள் நியாயம் வெட்கி தலை குனியும் அவலம்தான் எங்கு பார்த்தாலும் ஓங்கி நிற்கிறது
நாம் எங்கே போகிறோம் ?
இது இன்றைய சமுதாயத்தில் மிக பெரிய ஒரு கேள்வி குறியாகவே நிற்கிறது.

அருமையாக எழுதி இருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

நசரேயன் said...

64

நசரேயன் said...

65

RAMYA said...

66

RAMYA said...

67

RAMYA said...

68

RAMYA said...

69

RAMYA said...

70

RAMYA said...

71

RAMYA said...

72

RAMYA said...

73

RAMYA said...

74

RAMYA said...

me the 75th

RAMYA said...

Raap soda, i feel very thursty

நசரேயன் said...

/*Raap soda, i feel very thursty*/
ரம் okay?

புதுகை.அப்துல்லா said...

//கபீஷ் said...
//சிறுதாவூர் பிரச்சினையில் இருந்து//

ஸ்பெக்ட்ரம் வரைக்கும்.... :-):-)

நீங்க கரெக்டா கழக கண்மணின்னு நிரூபிச்சிட்டீங்க.

//


அரசு ஊழியர்கள் மாதிரி நினைச்சுட்டீங்களா எங்களயும்??

நாங்க எங்க இருந்தாலும் எங்க வேலைய கரெக்ட்டா பார்ப்போம் :)

rapp said...

வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சுமி:):):)

rapp said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி அம்பி அண்ணா:):):)
//ஆனா எல்லா தீவிரவாதமும் பணத்துக்காக மட்டுமே செய்யபடறதில்லையே.

சொர்க்கத்துக்கு போய், குஜால்சா இருக்கலாம்னு மூளை சலவை எல்லாம் செய்யறாங்களாமே//

இப்படிப்பட்ட மூடர்கள் எல்லாக் காலத்திலும் இருக்காங்களே:(:(:( காந்தியைக் கொல்ல மூளைச் சலவை செய்த கூட்டங்கள் முதல் இன்று வரை இந்தப் பிரச்சினை தொடர்கிறதே:(:(:( நான் இங்கு அதனால்தான் அவைகளைப் பற்றிக் கூறவில்லை. பணத்திற்காகவென்றும் கூறவில்லை. காரணிகளை பெரியளவில் அலசவும் இல்லை. இன்றைய தேதியில் எப்படியும் தாக்குதல் முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆனால், முன்னெச்செரிக்கை நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகள், அது இது என பல முக்கிய விஷயங்கள் செய்வதற்குக் கூட பேப்பர் பார்மாலிட்டீஸ் தடையாக இருக்கிறதே. சமூகவிரோதிகளுக்கு அரசுத் துறையை சார்ந்தவர்கள் துணைப்போய் பின் தப்பித்துக் கொள்வதற்கும் இந்த டிரான்ஸ்பரன்சி இல்லாத் தன்மை காரணமாக இருக்கிறதே:(:(:(
கடைசியாக பாதிக்கப்பட்டவர்கள் மீண்டுவர பெரும் தடையாய் இருப்பதும் பெரும்பான்மையாக இவைகளே. இன்றுகூட பாரீசில் ஒரு பெரிய மாலில் குண்டு வைத்திருந்ததை கண்டுப்பிடித்தார்கள். ஆதலால் இவைகளை முற்றிலும் ஒழிப்பது கடினம்தான். ஆனால் மாதத்திற்கு ஒருமுறை, வாரத்திற்கு ஒருமுறை என நடப்பதுதான் கொடுமை.

rapp said...

வருகைக்கும் கருத்துக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி அருண்:):):)

rapp said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி கோபி அண்ணே:):):)
கோபி அண்ணே, மக்கள் நாம மட்டும் என்ன செய்ய முடியும்?

rapp said...

வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி கபீஷ்:):):)

//கவுஜ எழுதறத உட்டுட்டு இது மாதிரி உருப்படியா எழுதலாம்.//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், வலையுலகமே திரண்டு வீறுகொண்டு எழு:):):) என் கும்ப்ளே கவுஜைல இருக்கிற நிதர்சன உண்மைகள் பத்தி இப்டில்லாம் பேசினத்துக்கு நான் உங்களுக்கு கருப்பனின் காதலி டிவிடி அனுப்பறேன் பாருங்க:):):)

////சிறுதாவூர் பிரச்சினையில் இருந்து//

ஸ்பெக்ட்ரம் வரைக்கும்.... :-):-)

நீங்க கரெக்டா கழக கண்மணின்னு நிரூபிச்சிட்டீங்க//

ஹா ஹா ஹா, நான் தான் எப்பவுமே சார்பு நிலை உடையவள்னு சொல்லிருக்கேனே:):):)
ஹி ஹி, ஆனா தாசில்தார் ஏன் ஸ்பெக்ட்ராம் விஷயத்தை கவனிக்கப்போறார்:):):) பிளஸ் இது சொந்த & நிஜ அனுபவமும் கூட:):):) நான் அங்க ரெட் சீல் விஷயமா போனப்போதான் சிறுதாவூர் பிரச்சினை கொழுந்துவிட்டு ஏறிய ஆரம்பிச்சது.

rapp said...

வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி அவர்களே:):):)

rapp said...

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி இராதாகிருஷ்ணன் அய்யா:):):)

rapp said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சரவணக்குமரன்:):):)

rapp said...

வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி நசரேயன்:):):)

//நீங்க ஆந்திரகாரர் சொல்லிக்கிட்டு தமிழ் நாட்டு அரசியல்ல களம் இறங்கினா நல்ல எதிர்காலம் இருக்கும்//

சூப்பர்:):):) வால்க தமில், தமில் என் மூச்சு:):):)

rapp said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கார்த்தி:):):)

rapp said...

ரம்யா வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி:):):)

உங்கள் கருத்துக்களை வழிமொழிகிறேன்.

rapp said...

மறுபடியும் நசரேயன், மற்றும் ரம்யாவுக்கு நன்றிகள்:):):)

rapp said...

//
நாங்க எங்க இருந்தாலும் எங்க வேலைய கரெக்ட்டா பார்ப்போம் :)//

ஹா ஹா ஹா சூப்பர் அண்ணா:):):)

பழமைபேசி said...

பதிவுலகமே இங்கதான் இருக்கு போலிருக்கு!

rapp said...

//நிஜம்மா உடை விசயமும் ஸ்டேட்டஸ் விசயமும் தான் ஹோட்டலில் கவனிக்கப்படுதுங்கறது மிகக்கொடுமை..தொடரை தொடர யாரையும் அழைக்கவில்லையே!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், முத்து இதற்கு நான் அளித்த பதிலை நானே இங்கு காப்பி செய்யவில்லை போலருக்கு. நான் ஏன் இப்டி சொதப்புறேன்:(:(:(

ஆமாம் நீங்க சொல்றது சரிதான். தேவைக்கும் அதிகமான முக்கியத்துவத்தை உடைக்கும், வெளித்தோற்றத்திற்கும் கொடுக்கிறார்கள்:(:(:(

தொடர அழைக்காததற்கு முக்கிய காரணம் எதுவுமில்லை முத்து. கிட்டத்தட்ட பலர் இதன் தொடர்பாக பதிவெழுதிவிட்டதுதான் காரணம். பிளஸ் நெறயப் பேர் தொடர் விளையாட்டு பார்த்து ஓடுறாங்க இல்லையா:):):)

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், பழமைபேசி, என்ன இப்டி சொல்லிட்டீங்க, பாருங்க சரிபாதி பின்னூட்டங்கள் என்னோடது, அதாவது நான் கொடுத்த பதில்கள்:):):)

கபீஷ் said...

//என் கும்ப்ளே கவுஜைல இருக்கிற நிதர்சன உண்மைகள் பத்தி இப்டில்லாம் பேசினத்துக்கு நான் உங்களுக்கு கருப்பனின் காதலி டிவிடி அனுப்பறேன் பாருங்க:):)//

தயவுசெஞ்சு அனுப்புங்க:-):-)

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............. கபீஷ் , நான் வன்முறையத் தூண்டறதா சொல்றத்துக்கா?:):):)

Itsdifferent said...

One more thing I would like to state is as an individual, my responsibility and accountability.
If each and everyone of us stand up for what is right, either as one or as a group, we can definitely make a difference.
Privatisation of telecom is a good example, even after so many claims of misuse,corruption etc, we now have a very good network for communication, almost everyone has some form of communication possible.
I am not advocating for privatisation, but for the accountability that is in the private sector is missing in public service.
Just to state the fact about recent floods, absence of regular maintenance of our infrastructure is the main reason, and we have not done that for years, leading to less capacity and chaos here. Who is accountable, I would say starting with the Minister in-charge to the head of the department who failed to lead.
They are very happily appearing on TV cameras and listing out crores of rupees they would need to do what? Give out free money. Shameless. And the press, no accountability there, why are they not questioning about missing maintenance. Fear, favoritism, missing accountability everywhere leads to big time corruption and inaction.

செந்தழல் ரவி said...

இப்பயாவது எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சுதே ?

செந்தழல் ரவி said...

ஆகா, கிட்ட வந்துருச்சு, வந்துருச்சு..

செந்தழல் ரவி said...

மீ த சச்சின்.....!!!!

rapp said...

வருகைக்கும் தங்களின் பங்களிப்புக்கும் மிக்க நன்றி its different:):):) நீங்கள் கூறுவதும் சரிதான், எப்பொழுது வெளிப்படையான நிர்வாகம் புழக்கத்தில் வருகிறதோ, எப்பொழுது முட்டாள்தனமான நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட்டு பணிச்சுமை குறைக்கப்படுகிறதோ அப்பொழுதுதான் எல்லாவற்றிலும் பாசிடிவ் முன்னேற்றங்கள் ஏற்படும்.

rapp said...

பின்னூட்டங்களுக்கு நன்றி செந்தழல் இரவி

PoornimaSaran said...

//ஒருவேளை, இங்கெல்லாம் ஹவாய் செருப்புப் போட்டுக் கொண்டு வருபவர்களுக்குத்தான் அனுமதி இல்லை போலும். துப்பாக்கி மற்றும் இன்னபிற ஆயுதங்களோடு வருபவர்களுக்கு பிரச்சினை கிடையாது போலிருக்கிறது.//

அப்படி தான் போலும்!!

கும்க்கி said...

எங்கியோ ஆரம்பிச்சு எங்கியோ கொண்டு போயிட்டீங்களே...
முழுசா படிக்க ஒரு வாரம் ஆகுமேக்கா..

Syam said...

அருமையான கருத்துக்கள், இந்த நிலைமை சீர் அடையனும்னா நம்ம தல ஜெ.கே.ஆர் பிரைம் மினிஸ்டர் ஆனா தான் உண்டு :-)

RAMYA said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ராப்!!!

rapp said...

ரொம்ப நன்றிங்க பூர்ணிமா சரண்

ரொம்ப நன்றிங்க ரம்யா.
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்:):):)

Expatguru said...

//பொருளாதாரம்தானே பல நேரங்களில் நம்முடைய சுயமரியாதையை தீர்மானிக்கிறது//


எவ்வளவு உண்மையான வார்த்தைகள்!

Vijay said...

போதும் ராப், சீக்கிறம் வாங்க. என்னா இது.. மக்கள் மறந்துட போறாங்க!!! ஆமாம்.

அறிவன்#11802717200764379909 said...

>>தலைமைச் செயலக எக்ஸ்டர்னல் அபேர்ஸ் துறை -> மாவட்ட ஆட்சியர் அலுவலகம் -> தாசில்தார் அலுவலகம் -> கிராம நிர்வாக அலுவலகம்(இரண்டு கட்டம்) -> பதிவாளர் அலுவலகம் -> கிராம நிர்வாக அலுவலகம் -> தாசில்தார் அலுவலகம் -> மாவட்ட ஆட்சியர் அலுவலகம் -> தலைமைச் செயலக எக்ஸ்டர்னல் அபேர்ஸ் துறை.
>>

கடவுச் சீட்டு-passport-வாங்குவது பற்றித்தான் சொல்லியிருக்கிறீர்களா?

எனக்குத் தெரிந்தவரை வெளியுறவுத் துறையிலிருந்து காவல்துறை ரிப்போர்ட்டுக்கு நேரடியாக மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்குத்தான் வருகிறது.அவர்கள் சம்பந்தப்பட்ட ஊர் காவல்துறை அலுவலகத்திற்கு அனுப்புகிறார்கள்.
ரிப்போர்ட் இதே வழிமுறையில் திரும்ப பாஸ்போர்ட் அலுவலகத்திற்குத் திரும்புகிறது.

மாவட்ட ஆட்சியர் அல்லது தாசில்தார் அலுவலகம் எங்கும் உள் நுழைவதில்லை.

அனாவசியமாக அரசு ஊழியர்களுக்கு அனுதாபம் தேடித்தர நினைக்கிறீர்கள்.

அரசு அலுவலகங்கள் முழுக்க கணினி மயக்கப்பட்டால் இப்போதிருக்கும் அலுவலர்களின் முக்கால்வாசி எண்ணிக்கையுடனேயே இன்னும் அவர்கள் திறம்பட வேலை செய்ய நிச்சயமாக முடியும்.

aprt from all these-பதிவில் என்ன சுட்ட விரும்புகறீர்கள் என்பதை பளிச்சுன்னு சொன்னால் நன்றாக இருக்கும்!

rapp said...

திருவாளர் அறிவன் அவர்களே பதிவில் என்ன சொல்லியிருக்கேன் என்பது தெளிவாகப் புரிய வேண்டுமானால், பதிவை ஒருமுறை முழுதாகப் படிக்க வேண்டும்:):):) அது பாஸ்போர்ட் பத்தி இல்லை. சில நாடுகளுக்கு செல்ல வேண்டுமானால், சிகப்பு முத்திரை எனப்படும் ரெட் சீல் தேவை(உதாரணத்திற்கு, திருமணச் சான்றிதழ்).

rapp said...

வருகைக்கு மிக்க நன்றி Expatguru:):):)

rapp said...

விஜய் சீக்கிரம் வந்திடறேன். ஹி ஹி, ரொம்ப புகழாதீங்க :):):)

narsim said...

ராப்.. கஜினி படம் பார்த்தீங்களே..??? மறந்துட்டீஙகளே..

Vijay said...

ஹாலோ, யாருப்பா அந்த இன்னொருத்தரு? நாந்தான் இங்க வெட்டியா சுத்திக்கிட்டு இருக்கேன்னா நீங்களுமா? ஓ...சாரி பா, பிளாக் ஓனரும் வெட்டிதான்ல...சரி பா...அப்ப சரிதான். நம்ப எல்லாம் ஒரெ குட்டைல ஊறுன மட்டைங்கதானெ... சுத்துங்க சுத்துங்க....