டிஸ்கி: நான் இதனை ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை ரேஞ்சில் எழுதவில்லை. என் மனவுணர்ச்சிகளின் அடிப்படையிலேயே எழுதுகிறேன். இதில் கூறப்பட்டுள்ள தகவல்களில் தவறிருந்தால், பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே, திருத்திக்கொள்கிறேன்:):):)
நான் திராவிட சமூகத்தைச் சேர்ந்தவளாக இருப்பினும், மத நம்பிக்கை இல்லாதவளாக இருப்பினும், இதனையெல்லாம் என் மூளையும் மனதும் உணரும் சந்தர்ப்பம் எனக்கு என் திருமண ஏற்பாடுகள் செய்யும்போதுதான் கிடைத்தது. என் தந்தை வழி சொந்தங்களின் கருத்துக்களுக்கு நான் மதிப்பளிப்பதில்லை எனினும், கீழே குறிப்பிடும் விஷயம் எனக்கு ஆச்சர்யத்தையும், வேதனையையும் அளித்தது. எனக்கு திருமண ஏற்பாடு நடக்கிற தகவல் தெரிஞ்சு என் நெருங்கிய சொந்தக்காரர் தொலைப்பேசினார். அவர்தான் எங்க நெருங்கிய சொந்தங்களில் மிகப் பெரிய கோடீசுவரர், மிக நல்லப் பதவியில் இருந்தவர்(ஆட்சியர் பதவிக்கு இணையான பதவி). பதவி அவரை பண்படுத்தலைன்னாலும், அகம்பாவம் உண்டு. தொடர்ச்சியாக கேணத்தனமா கேள்விக்கேட்டுக்கிட்டு வந்தவர், கடைசியா கேட்ட கேள்விதான் அவ்ளோ மோசமானது. அது என்னன்னா, 'அவர் ஒரு கறுப்பர்(இவ்விடத்தில் அவர் உபயோகப்படுத்தியது ஒரு அன்பார்லிமெண்டரி வார்த்தை) இல்லையே' எனக் கேட்டு என்னமோ இந்த நூற்றாண்டின் புத்திசாலித்தனமானக் கேள்வியக் கேட்டுட்டா மாதிரி சிரிச்சார்.
மேற்கத்திய நாடுகளில் வாழும் இந்தியர்கள் இப்படி இல்லை என நினைக்கிறேன். ஆனால் இந்தியாவில் வாழும் முக்காவாசிப்பேர் இதே மாதிரி யோசிப்பதன் அர்த்தம் புரியவில்லை. நளதமயந்தியில் வரும் மாதவன் மாதிரியான சிந்தனை, நன்றாகப் படித்த நல்ல பொதுஅறிவுச்சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கும் இருப்பதின் காரணம் எனக்குப் புரியவில்லை.
இன்று ஒபாமா அடைந்திருக்கும் வெற்றியின் மூலம் (என் பார்வையில்) மெதுவாக மறுபடியும் தலைத்தூக்க ஆரம்பித்திருந்த ஒரு சமூகக் கேடு கிள்ளி எறியப்பட ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எழுபதுகளின் இறுதியிலிருந்து ஏற்பட்ட நம்பிக்கையூட்டும் சமூக மாற்றம், இரண்டாயிரத்து ஒன்றில் இருந்து வீழ்ச்சிப்பாதையை நோக்கி செல்ல ஆரம்பித்தது. இது என்ன ஒரு தேசத்து அதிபர் தேர்தல் அனைத்தையும் மாற்றிவிடுமா என்றால், நாம் ஒத்துக்கொண்டாலும் இல்லையானாலும், அமெரிக்காவின் நிலைப்பாடையே பெரும்பான்மையான வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் பின்பற்றி வருகின்றன. அங்கு கறுப்பினத்தவரை ஆதரிப்பதுதான் கூல் ஆட்டிட்யூடாக கருத ஆரம்பித்த போதுதான், ஐரோப்ப்பாவிலும் அது பரவியது. பின்னர் அழகாக மலர ஆரம்பித்தது. அதில் பாதி கிணறு தாண்டும்போதுதான் அத்தனையும் குலைந்தது. தன்னை ரேசிஸ்டாக பிரகடனப்படுத்திக்கொள்வதும், மேல் ஷாவனிச ஆதரவாளராகக் காட்டிக்கொள்வதும், அசிங்கமான விஷயம் இல்லை எனும் போக்கு அதிகரித்தது. இன்னும் ஐரோப்பாவில் உள்ள பெரிய நிறுவனங்களில் இதனை வெளிப்படையாகவே செயல்படுத்தத் தொடங்கினர். மதச்சார்பற்ற ஜனநாயக அரசுகளாக விளங்கிய நாடுகள் கூட என்றுமில்லா அதிசயமாக மதத்தலைவருக்கு அரசு வரவேற்பையும் மரியாதையையும் அளித்து தன் சார்புநிலையை வெளிப்படுத்தி அதிர்ச்சி ஏற்படுத்தின.
சரி, இது மட்டுமா? குடியரசுக்கட்சியின் கொள்கைகளை பார்த்தால், அது இந்த நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு அமெரிக்கக் கட்சியினை சார்ந்ததா என்ற சந்தேகம் வருமளவுக்கு இருக்கின்றன. gay, lesbian ரயிட்சை ஆதரிக்காத காட்டுமிராண்டித்தனம், போருக்கு ஆதரவளிக்கும் நெப்போலியத்தனம், கருக்கலைப்புக்கு எதிரான விநோதப்போக்கு, குழப்பமானக் கல்விக்கொள்கை, மருத்துவக் காப்பீடுக் குறித்த வடிக்கட்டின முட்டாள்தனமான கொள்கை என அதிர்ச்சி மேல் அதிர்ச்சிதான். இங்கு கூறப்பட்டவைகள் சொற்பமெனினும் கிட்டத்தட்ட அனைத்துமே சோகக் காமடி வகையைச் சேர்ந்தவைகளாகவே இருந்தன.
வயதான கௌபாய் ஆக மெக்கெயினை காண்பித்தார்கள் என்றால், துணை ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் அவர்களின் ஆணியப்போக்கு என்னை எரிச்சல் படுத்தியது. சாரா பாலினை துணை ஜனாதிபதி வேட்பாளராக்கியத்தின் மூலம் அவர்கள் பெண்களை எப்படி மதிப்பிட்டுள்ளார்கள் என்று வெளிச்சமாகிறது. இப்படிப்பட்ட தகுதியே இல்லாத ஒருவர் மட்டும்தான் பெண்களின் சார்பாகக் கிடைத்த ஒரே வேட்பாளரா?
இந்தத் தேர்தலில் வைக்கப்பட்ட வாதங்களில் இரண்டு, ஒபாமா முழுமையாகக் கருப்பினத்தைச் சேர்ந்தவரில்லை, அவர் ஏன் தன்னை கிருஸ்துவராக வெளிப்படுத்திக்கொள்கிறார். ஆனால் பொதுவாக மேற்கத்திய நாடுகளில் எல்லாம், கறுப்பினத்தவரைச் சேர்ந்தவர்களைக் காட்டிலும், இம்மாதிரி கலப்புத் திருமணக் குழந்தைகள் மேலும் இன்னல்களை அனுபவிப்பது நிதர்சனம். அதேப்போல இரண்டாவதிற்கும் இன்றைய அமெரிக்காவின் மோசமான நிலையையேக் காட்டுகிறது. மதச் சார்பின்மை எந்தழகில் இப்பொழுது உள்ளது என்பதின் வெளிப்பாடுதான் அது. நிலைமைமேலும் மோசமாகாமல் இருப்பதற்காகவாவது இந்த வெற்றி முக்கியமானது.
தேர்தல் நடந்த தினம் ஒரு வேலைநாள். தேர்தலுக்காக அரசு விடுமுறை அளிக்கவில்லை என்றே நினைக்கிறேன். மிடில் கிளாஸ் மற்றும் அவர்களுக்கும் மேலே உள்ள சமூகத்திற்கு சரி. ஆனால் தினசரி கூலி அடிப்படையிலும், ஒரு நாள் விடுமுறை எடுத்தால் பாதிக்கப்படும் சூழ்நிலையிலுள்ள ஏழ்மையான மக்களும் சாமான்யர்களும் எவ்வாறு ஓட்டளிப்பார்கள்? இதனால் பாதிக்கப்படும் வேட்பாளர் யார்? கண்டிப்பாக ஒபாமா என்றே நான் நினைக்கிறேன்.
திருமதி மிஷல் ஒபாமா பல்வேறு வகைகளிலும் கவருகிறார். முதலில் அவருடைய நோ நான்சென்ஸ் லுக், தன்னை பெண்குலத்தின் பொன்விளக்கு ரேஞ்சில் வெளிக்காட்டிக்கொள்ளாத்தன்மை. பொதுவாக கணவர் ஜனாதிபதியாகத் தேர்வானவுடன் மேடையில், உலக அழகிப்பட்டம் வென்றவுடன் அந்த அழகிகள் செய்யும் டிராமாவயே இவர்களும் செய்வதை பார்த்து எரிச்சல்வரும். ஆனால் மிஷல் ஒபாமா இதனை கையாண்டவிதம் அவ்ளோ நேர்த்தி. பிஆர் கேர்ள் போல் தன்னை பிரசன்ட் பண்ணாமல் அவ்ளோ கம்பீரமாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார்.
மீடியாவும், கறுப்பின மக்களும் இன்னபிற சிறுபான்மையினரும், அவர்களின் நிதியும் இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு முக்கியத் தூண்கள் எனினும் இந்தத் தேர்தலில் மாணவர்கள் மற்றும் இளையசமுதாயத்தின் பங்களிப்பும் அபாரமானது. அவர்களின் இந்த இமாலய ஆதரவில்லையென்றால் நிலைமை எப்படி இருந்திருக்கும் எனக் கூறமுடியவில்லை.
மிக மிக அசாதாரணமான சூழ்நிலையில் ஜனாதிபதியாகி உள்ள ஒபாமா, சந்திக்க வேண்டிய சவால்கள் எக்கச்சக்கம். இவற்றில் அவர் வெற்றி பெற்றால் ஒரு நல்ல அமெரிக்க ஜனாதிபதியாக ஏற்கப்படுவார். ஆனால் தோல்வியடைந்தால் ஒரு மோசமான கறுப்பின ஜனாதிபதியாகக் கருதப்படுவார். ஆதலால் அனைவரும் அவர் வெற்றியடைய மனதார வாழ்த்துவோம்:):):)
Wednesday, 5 November 2008
Subscribe to:
Post Comments (Atom)
229 comments:
«Oldest ‹Older 201 – 229 of 229 Newer› Newest»200
ரைட்டு வர்ட்டா
அப்பா
சிவா
இது ரொம்ப ஓவர்
நான் கஷ்டப்பட்டு ஆள் கூட்டிகிட்டு வந்து 200 அடிக்கலாம்னு பாத்தா இப்படி செஞ்சுடீங்கலே :( :(
இது போங்கு ஆட்டம்.! கார்க்கி பதிவுல எவ்ளோ தெளிவா 200 அடிச்சேன் போய் பாருங்க.. சிவா.! இங்கேயும் மிஸ்பண்ணிட்டிங்களா எஸ்கே.!
yesuuuuuuuuuuuu :( :(
அங்கே இருந்து இங்கே வர்றதுக்குலே
வடையா காக்கா தூக்கி கிட்டு போய்டே :( :(
வடையா காக்கா தூக்கி கிட்டு போய்டே :( :(// ROTFL..
அடுத்து எங்கே 190 இருக்குன்னு தான் பாக்கணும் இனி :) :(
:)))
//அதோட McCain'னின் நெகடிவ் காம்பைக்ன் வொர்க் ஆகலைன்னும் தெரியுது. //
ரொம்ப நன்றிங்க மொக்கைச்சாமி. ரொம்ப சரியா சொல்லிருக்கீங்க. அவரே நெகடிவ் சைட்ல இருந்துக்கிட்டு சேம் சைட் கோல் அடிச்சாரு.
//மெக்கெயின் மேற்கொண்ட தனி மனித தாக்குதல் (ஓபாமா மீது) பிரச்சாரமே அவருக்கு ஆப்பு .//
கரெக்டா சொன்னீங்க:):):)
ராப், ஒண்ணே ஒன்னு எழுத மறந்துடீங்க. இந்த தேர்தல்ல maccain ஒருமுறை கூட ஒபாமாவோட சர்ச் பத்தியோ, அதுல அவரோட reverend பேசினத பத்தியோ கொண்டு வரல. அதை அவரோட பார்ட்டி கொண்டுவர முயற்சி பண்ணின போது தடுத்துட்டாராம். ஆனா democratic பார்ட்டி தேர்தல் போது ஹிலாரி இதை உபயோக படுத்தினாங்க.
ரொம்ப நன்றிங்க அரவிந்தன்:):):)
ரொம்ப நன்றிங்க ஜி:):):)
ரொம்ப நன்றிங்க வேலன்:):):)
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ், ரொம்ப நன்றிங்க தாமிரா:):):)
ஹா ஹா ஹா, ரொம்ப நன்றிங்க புது மாப்பிள்ளை மங்களூர் சிவா:):):)
ரொம்ப நன்றிங்க எஸ்கே:):):)
ரொம்ப நன்றிங்க மணிகண்டன். நீங்க சொல்றது கரெக்ட்தான். ஆனா அவர் அந்த பாயின்ட் எடுத்திருந்தாலும் எடுபட்டிருக்காதுன்னு நினைக்கிறேன்:):):)
இங்கு கஜக்கும்மியடிச்ச எஸ்.கே, சிவா, தாமிராவுக்கு இன்னொரு தரம் நன்னி சொல்லிக்கிறேன்:):):)
// நன்னி சொல்லிக்கிறேன்:):):)///
அப்படின்னா ?????????????
:)))))))))))))
நான் 220 வது
me the 221
ராப் அக்கா ,நாயகன் நூறாவது நாளுக்கு ஏதாவது ஸ்பெஷல்?
////அவர் வெற்றி பெற்றால் ஒரு நல்ல அமெரிக்க ஜனாதிபதியாக ஏற்கப்படுவார். ஆனால் தோல்வியடைந்தால் ஒரு மோசமான கறுப்பின ஜனாதிபதியாகக் கருதப்படுவார். //
உங்கள் பதிவை பற்றி எனக்கு S.K தான் கூறினார். நண்பருக்கு மிக்க நன்றி. அருமையாக எழுதி இருக்கிறிர்கள். நல்ல கருத்து செறிவுள்ள நடை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது சகோதரி.
நன்றி, மீண்டும் வருகிறேன்
ரம்யா
//gay, lesbian ரயிட்சை ஆதரிக்காத காட்டுமிராண்டித்தனம், போருக்கு ஆதரவளிக்கும் நெப்போலியத்தனம், கருக்கலைப்புக்கு எதிரான விநோதப்போக்கு, குழப்பமானக் கல்விக்கொள்கை, மருத்துவக் காப்பீடுக் குறித்த வடிக்கட்டின முட்டாள்தனமான கொள்கை என அதிர்ச்சி மேல் அதிர்ச்சிதான்//
1. gay, lesbian -ஆதரிக்கனும்னு சொல்றிங்களா?
2. போருக்கு ஆதரவளிக்கும் நெப்போலியத்தனம்- தீவிரவத்த அழிக்கரறது நல்லது தானே ?
3. கருக்கலைப்புக்கு எதிரான விநோதப்போக்கு-இது நல்ல விஷயம் தானே.?? இப்போவே நாட்டுல (நம்ம நாடு இல்லைங்க, US) ஜன தொகை கோரஞ்சிபோச்சி.
4. மருத்துவக் காப்பீடுக் குறித்த வடிக்கட்டின முட்டாள்தனமான கொள்கை - No COMMENTS.
Other than this, everything esle is good in this POST. Keep doing your JOB
மறுபடி சொல்கிறேன்..
உங்களுக்கு கோவிக்கண்ணதோஷம் பிடித்துள்ளது...
உடனே ஸ்வாமி ஓம்காரை சந்தித்து பரிகார பூஜை செய்யவும்...
வலைப்பதிவர்களின் இஷ்ட தெய்வமான மகரநெடுங்குழைகாதனையும் வேண்டவும்...
வாங்க கார்த்தி, நூறாவது நாளெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்ல. இருநூத்தம்பதாவது நாள் ஒரு பகீர் திகீர் விழாவே எடுத்திடுவோம்:):):)
வாங்க ரம்யா வாங்க ரொம்ப நன்றி:):):) எஸ்கே அண்ணே இப்போ எனக்கு பயங்கர போட்டியாளரா ஆகிட்டு வர்றார்:):):) எல்லா இடத்திலையும் மீ த பர்ஸ்ட் அவரே போட்டிடறார்:(:(:(
//
1. gay, lesbian -ஆதரிக்கனும்னு சொல்றிங்களா?
2. போருக்கு ஆதரவளிக்கும் நெப்போலியத்தனம்- தீவிரவத்த அழிக்கரறது நல்லது தானே ?
3. கருக்கலைப்புக்கு எதிரான விநோதப்போக்கு-இது நல்ல விஷயம் தானே.?? இப்போவே நாட்டுல (நம்ம நாடு இல்லைங்க, US) ஜன தொகை கோரஞ்சிபோச்சி.
4. மருத்துவக் காப்பீடுக் குறித்த வடிக்கட்டின முட்டாள்தனமான கொள்கை - No COMMENTS.
//
வாங்க பழயப்பேட்டை சிவா:):):) முதல் கேள்விக்கு என் பதில் கண்டிப்பா ஆதரிக்கணும். ஒருவிதத்துல அவங்க என்ன குற்றவாளிகளா இல்லை பிரச்சினைக்குரியவர்களா நாம் ஆதரிக்க. அவங்க சமூகத்தின் சாதாரணப் பிரஜை நம்மைப் போலவே. செக்ஸ் விஷயத்தில் அவர்களுக்கு எதிர்பாலின ஈர்ப்பு இல்லைன்னா என்ன? விருப்பமில்லாமல் வன்புணருவதைக் கூட இந்த சமூகம் விட்டுடுது, ஆனா இயற்கையான ஈர்ப்பை எதிர்க்குது:(:(:(
அமெரிக்காவின் ராணுவக் கொள்கை தீவிரவாதத்தை எதிர்க்குதா இல்லை வளர்க்குதா? நீங்களே சொல்லுங்க?
நாட்டுல ஜனத்தொகை குறையறதை தடுக்கனும்னா, அபார்ஷனை தடுக்கக் கூடாது. தம்பதிகள் குழந்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக விடுமுறை, பணிச்சுமை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுக் கொள்கைகள வகுக்கணும், ஐரோப்பாவில் பல நாடுகளில் உள்ளதைப்போல தாய்மார்களுக்கு பல்வேறு பொருளாதார அரண்கள் அமைச்சுத் தரணும். கல்வியினை எட்டாக் கணியாக்காமல் அனைவருக்கும் எர்புடயதாக்க வேண்டும். அபார்ஷன் தர்மசங்கடமான மற்றும் குழந்தைப் பெற்றுக் கொள்ள இயலாத சூழலில் உள்ளவர்கள் மற்றும் பல தரப்பினருக்கு அவசியமான ஒன்று.
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றிங்க சிவா.
ஹா ஹா ஹா ரவி வாங்க. என் பதிவுல உங்க கமென்ட் பார்த்து ஆச்சர்யப் படறேன். இதுக்கே இப்டி சொல்றீங்களே இன்றையப் பதிவில் உண்மைத்தமிழன் சார் ஸ்டயில்ல எழுதி கொலைவெறித்தாக்குதல் நடத்திருக்கேன்:):):) அங்கயும் பின்நவீனத்துவ பின்னூட்டம் போட்டுட்டு போங்க:):):)
உங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்:):):)
me the 230TH:):):)
Post a Comment