Monday, 2 November, 2009

ஒரு ரம்பமே பிளேடு போடுகிறதே!

தொடருக்கு அழைத்த தீபாவுக்கு நன்றி. எனக்கு ரொம்ப கஷ்டமான விஷயம் சுருக்கமா வியாக்யானம் இல்லாம விடை சொல்றது. என்னால விருப்பமானவங்கள்ள ஒன்னே ஒண்ணுன்னு சொல்ல முடில.வழக்கம்போல பொறுத்தருள்க.


1. அரசியல் தலைவர்:
பிடித்தவர்: திருமா
பிடிக்காதவர்: இராமதாஸ்

2. எழுத்தாளர்:
பிடித்தவர்: (எனக்குப் படிக்க கிடைத்த அளவில்) எஸ்.இராமகிருஷ்ணன்.
பிடிக்காதவர்: இதற்கு பதில் சொல்ற அளவுக்கு படிச்சதில்லை.

3. கவிஞர்:
பிடித்தவர்: என் பெற்றோர் (இப்டி ஒரு தெய்வீகக் கவிதயப் படைச்சதுக்காக).
பிடிக்காதவர்: வி.ஜி.சந்தோஷம்(எனக்கு சரியானப் போட்டி).

4. இயக்குனர்:
பிடித்தவர்: பரீட்சை டொயத்துல கே.எஸ்.இரவிக்குமார், கொழுப்பெடுத்து திரியும்போது   பாலுமகேந்திரா, பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ அப்டின்னா வெங்கட் பிரபு.
பிடிக்காதவர்: மணிரத்தினம் .

5. நடிகர்:
பிடித்தவர்: வி.கே.இராமசாமி, எம்.ஆர.இராதா, கவுண்டமணி.
பிடிக்காதவர்: எஸ்.எஸ்.சந்திரன்.

6. நடிகை:
பிடித்தவர்: காஞ்சனா, அசின், நதியா.
பிடிக்காதவர்: இராஜஸ்ரீ.

7 . இசையமைப்பாளர்:
பிடித்தவர்: சூலமங்கலம் இராஜலக்ஷ்மி, இளையராஜா.
பிடிக்காதவர்: ஆதித்யன், இன்றைய டி.ஆர்.

8. பாடகர்:
பிடித்தவர்: ஏ.எம்.இராஜா.
பிடிக்காதவர்: ஹரிஹரன்.

9. பாடகி:
பிடித்தவர்: பி.சுசீலா, எல்.ஆர.ஈஸ்வரி.
பிடிக்காதவர்: சித்ரா

10. விளையாட்டு வீரர்:
பிடித்தவர்: சாந்தி.
பிடிக்காதவர்: தமிழ்நாட்டில் அப்படி யாரும் இல்லை.


கீழே அழைத்துள்ளவர்களில் தொடர விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.

முத்துலெட்சுமி கயல்விழி
அவீங்க ராசா
சுரேஷ் பழனியிலிருந்து
இராமலக்ஷ்மி

49 comments:

சந்தனமுல்லை said...

/
3. கவிஞர்:
பிடித்தவர்: என் பெற்றோர் (இப்டி ஒரு தெய்வீகக் கவிதயப் படைச்சதுக்காக).
பிடிக்காதவர்: வி.ஜி.சந்தோஷம்(எனக்கு சரியானப் போட்டி)./

ROTFL!!

Rapp....rocking post!!!

சந்தனமுல்லை said...

/ விளையாட்டு வீரர்:
பிடித்தவர்: சாந்தி.
பிடிக்காதவர்: தமிழ்நாட்டில் அப்படி யாரும் இல்லை./

சூப்பர்....

அசத்தல் ராப்..

இந்த தொடரிலேயே மிக மிக மிக ரசித்த போஸ்ட்-ன்னா இதுதான்!!

சந்தனமுல்லை said...

/"ஒரு ரம்பமே பிளேடு போடுகிறதே!"/

அடடே..!!! :))

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்?

ஆயில்யன் said...

//தொடருக்கு அழைத்த தீபாவுக்கு நன்றி. எனக்கு ரொம்ப கஷ்டமான விஷயம் ///

நீங்க நொம்ப்ப ஃபாஸ்ட்டு பாஸ் :)

ஆயில்யன் said...

//எழுத்தாளர்:
பிடித்தவர்: (எனக்குப் படிக்க கிடைத்த அளவில்) எஸ்.இராமகிருஷ்ணன்.
பிடிக்காதவர்: இதற்கு பதில் சொல்ற அளவுக்கு படிச்சதில்லை.///

குட் வளர்ற புள்ளைக்கு இதான் அழகு :))))

மணிகண்டன் said...

கடைசியில பதிவு எழுத வச்சிட்டாங்க :)-

ஆயில்யன் said...

//கவிஞர்:
பிடித்தவர்: என் பெற்றோர் (இப்டி ஒரு தெய்வீகக் கவிதயப் படைச்சதுக்காக).///

வாவ்!

வாவ்!

அசத்தல் :))

ஆயில்யன் said...

//பரீட்சை டொயத்துல கே.எஸ்.இரவிக்குமார், //


டொயத்துல :) - LOL :)

அந்த பரீட்சை மேல அப்படி என்ன வெறுப்பு :)

ஆயில்யன் said...

//பிடிக்காதவர்: மணிரத்தினம் .//


ஏன் பாஸ் அவுரு படம்ன்னா தியேட்டருக்கு டார்ச் லைட் எடுத்துட்டு போகணுமேன்னு கடுப்பா? :)

சென்ஷி said...
This comment has been removed by the author.
சென்ஷி said...

உண்மையில் அருமையா தொடர்ந்துட்டீங்க ராப் அக்கா :))

கவிஞர் பதில் அட்டகாசமான ராப் ஷ்டைல்..

(அப்பாலிக்கா நான் முன்னே போட்ட கமெண்டை டெலிட்டிடுங்க :-( )

சென்ஷி said...

//"ஒரு ரம்பமே பிளேடு போடுகிறதே!"//

அடடே.. ஆச்சரியக்குறி கூட இருக்குதே :))

சென்ஷி said...

என்னோட கமெண்ட் எதுவுமே ரிலீஸ் செய்யலையா :(

சென்ஷி said...

//எழுத்தாளர்:
பிடித்தவர்: (எனக்குப் படிக்க கிடைத்த அளவில்) எஸ்.இராமகிருஷ்ணன்.
பிடிக்காதவர்: இதற்கு பதில் சொல்ற அளவுக்கு படிச்சதில்லை.///


அழகான பதில்!

சென்ஷி said...

இன்னைக்கு இங்க கும்மணும்னுன்னு வந்து இங்க கமெண்ட் மாடரேசன் எனேபிள்ல இருக்கறதால மனசு வெறுத்துப் போய் போயிக்கறேன் :(

பட் நானும் நெட்டுக்கு வர முடியாத கொஞ்ச நாள் சில நாதாறிகளால கமெண்ட் மாடரேட் செஞ்சு வச்சிருந்தேன். :)

சேம் ப்ளட்!

சென்ஷி said...

//5. நடிகர்:
பிடித்தவர்: வி.கே.இராமசாமி, //

அதுல பாருங்க - அப்படின்னு சிரிச்சுக்கிட்டே பேச ஆரம்பிச்சா அம்புட்டு பயலும் பணாலுதான் :)

rapp said...

//
ROTFL!! //

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........முல்லை உண்மையச் சொன்னா சிரிக்கவா செய்றீங்க:):):)

ஆயில்ஸ் என்னைய மாதிரி தெய்வீகக் கவிதைக் கொயந்த நூற்றாண்டுகளுக்கு ஒரு முறைதானத் தோன்றும்:):):)

சென்ஷி, கிர்ர்ர்ர்ர்ர்.........எதுக்கு மீ தி பர்ஸ்டை கெட்ட வார்த்த கணக்கா டிலிட் பண்ணீங்க:):):) உண்மையச் சொல்லணும், எனக்கு டப் கொடுக்குறது வி.ஜி.சந்தோஷம் தான?:):):)

ஆமாம் மணிகண்டன், தமிழ்மணம் படிக்கிறவங்கத் தலையெழுத்து இப்டியிருந்தா என்ன செய்றது. பாவம்:):):)

சென்ஷி said...

//ஆயில்ஸ் என்னைய மாதிரி தெய்வீகக் கவிதைக் கொயந்த நூற்றாண்டுகளுக்கு ஒரு முறைதானத் தோன்றும்:):):)//


அதுக்கேத்த மாதிரி பதிவு எழுதறதையும் இப்படி குறைச்சுக்கிட்டா எப்படி.. ரசிகர்களுக்காக அப்பப்ப ஏதும் எழுத ஆரம்பிங்க.. கொலவெறி கவுஜ வேற ஏதும் வர மாட்டேங்குது :(

சென்ஷி said...

//சந்தனமுல்லை said...

/ விளையாட்டு வீரர்:
பிடித்தவர்: சாந்தி.
பிடிக்காதவர்: தமிழ்நாட்டில் அப்படி யாரும் இல்லை./

சூப்பர்....

அசத்தல் ராப்..

இந்த தொடரிலேயே மிக மிக மிக ரசித்த போஸ்ட்-ன்னா இதுதான்!!//

ரிப்பீட்டிக்கறேன்!

டவுசர் பாண்டி... said...

ஏன் இத்தனை பெரிய இடைவெளி...

இனி தொடரலாமே...!

டவுசர் பாண்டி... said...

நல்ல (ஆ)ரம்பம் !

வாழ்த்துகள்...

சந்தனமுல்லை said...

ஹே...மீ த ஃபர்ஸ்ட்!! :))))

சந்தனமுல்லை said...

/ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்?
/

நோ பாஸ்...மீ த ஃபர்ஸ்ட்ட்!!! :))

rapp said...

me the 25th:):):)

டவுசர் பாண்டி, தமிழ்மணத்துல படிக்கிறவங்ககளுக்குக் கண்ணவிஞ்சு போச்சுன்னா:):):)

முல்லை, பாருங்க சென்ஷி இதைப் போய் டிலிட் பண்ணதை. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

சென்ஷி, ஆமாம், விகேஆர் மாதிரி வருமா? ரதிபாரதி, பேபின்னு, சான்சே இல்லை:):):)

சென்ஷி said...

ஆண்பாவம் - விகேஆரோட நடிப்புல உச்சம்ன்னு சொல்லிக்கலாமா?!

ஆயில்யன் உடனே ஆமாம்ன்னு சொல்லி எல்லா வசனமும் எழுத ஆரம்பிச்சுடுவாரு..

அறிவன்#11802717200764379909 said...

||3. கவிஞர்:
பிடித்தவர்: என் பெற்றோர் (இப்டி ஒரு தெய்வீகக் கவிதயப் படைச்சதுக்காக).||

அது சரி...

அத நாங்கள்ள சொல்லணும் !

rapp said...

சென்ஷி, ஆண்பாவம் வசனம் மற்றும் காட்சிகளில் என்கிட்டே போட்டிக்கு வர ஆயில்ஸ் தயாரா:):):) எனக்கும் அவ்ளோ மனப்பாடமாச்சே:):):)

சென்ஷி said...

ஆயில்கிட்ட இந்த மாதிரில்லாம் போட்டி போடாதீங்க. கூட தொணைக்கு பாண்டி சகோதரரகள் சகிதமா களத்துல குதிச்சுடுவாரு :)

பாபு said...

ரொம்ப நாளாச்சு உங்க பதிவு படித்து
உங்கள் வழக்கமான கலக்கல்

சந்தனமுல்லை said...

/ சென்ஷி said...

ஆயில்கிட்ட இந்த மாதிரில்லாம் போட்டி போடாதீங்க. கூட தொணைக்கு பாண்டி சகோதரரகள் சகிதமா களத்துல குதிச்சுடுவாரு :)/

ஆமா...அன்னைக்கு சினிமாவை பாதிலே நிறுத்திட்டு இவங்க மாத்தி அந்த டயலாக்கை சொல்லிக்கறதைத்தான் கேட்டுக்கிட்டு இருந்தேன்! பெரிய பாண்டி & சின்ன பாண்டி - :))) !!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப நாள் கழிச்சு ராப் போஸ்ட் படிக்கிறதால.. 3 வது கேள்வியில் கொஞ்சம் குழம்பிட்டேன்.. ஆசிரியர்கள் கவிஞர்களும்போல ந்னு ஒரு நிமிசம் யோசிச்சு தெளிஞ்சுட்டேன்..:)

கவிஞர்களுக்கு தெய்வீககவிஞர்கள்னே பட்டம் வழங்கிடலாம்.
பதிவு ரொம்ப ரத்தின சுருக்கம்.

☀நான் ஆதவன்☀ said...

தலைப்பே கவிதையாய்.....அவ்வ்வ்வ்வ் எப்படி இப்படி?

தாரணி பிரியா said...

3வது பதிலை படிச்ச பிறகு கண்ணுல ஆனந்த கண்ணீரா வருது ராப்

☀நான் ஆதவன்☀ said...

// சந்தனமுல்லை said...

ஹே...மீ த ஃபர்ஸ்ட்!! :))))//

அவ்வ்வ் இருபது கமெண்ட் வந்ததுக்கு அப்புறம் என்ன பர்ஸ்ட்டான்னு கொண்டாட்டம்?

☀நான் ஆதவன்☀ said...

//4. இயக்குனர்:
பிடித்தவர்: பரீட்சை டொயத்துல கே.எஸ்.இரவிக்குமார், கொழுப்பெடுத்து திரியும்போது பாலுமகேந்திரா, பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ அப்டின்னா வெங்கட் பிரபு.
பிடிக்காதவர்: மணிரத்தினம் //

பாஸ் மணிரத்தினத்தை பிடிக்காதா? ஷாக்!!!!

☀நான் ஆதவன்☀ said...

//3. கவிஞர்:
பிடித்தவர்: என் பெற்றோர் (இப்டி ஒரு தெய்வீகக் கவிதயப் படைச்சதுக்காக).
பிடிக்காதவர்: வி.ஜி.சந்தோஷம்(எனக்கு சரியானப் போட்டி)//

ROTFL :)))

☀நான் ஆதவன்☀ said...

//2. எழுத்தாளர்:
பிடித்தவர்: (எனக்குப் படிக்க கிடைத்த அளவில்) எஸ்.இராமகிருஷ்ணன்.
பிடிக்காதவர்: இதற்கு பதில் சொல்ற அளவுக்கு படிச்சதில்லை.//

பாஸ் லைப்ல ஒரே ஒரு புக் படிச்சுட்டு எல்லாம் இந்த கேள்விக்கு பதில் சொல்லப்படாது :)

rapp said...

முல்லை, சென்ஷி, நீங்க ரெண்டு பேரும் என்னோட சினிமா அறிவ போய் இப்டி சோதிச்சுட்டீங்களே:):):) எந்த டயலாக் வேணும், சொல்லுங்க சொல்லுங்க:):):)

அறிவன் இப்போ உங்க பேரை நாங்க ஏத்துக்கலையா:):):) அது மாதிரியே நீங்களும் ஒடனே நம்பிடனும்:):):)

பாபு ரொம்ப நன்றி.

முத்து அந்த தெய்வீகக் கவிதயப் படைச்சவங்களுக்கு சரியான அங்கீகாரம் கொடுத்திருக்கீங்க:):):) இனி அவர்கள் தெய்வீகக் கவிஞர்கள்னு வழங்கப்படுவார்கள்:):):)

தாரணி பிரியா, இதுக்கே இப்டி சொல்றீங்களே, அந்த கவிஞர்கள் இத நெனச்சு நெனச்சு, வடிக்கிற ரத்தக்கண்ணீர் பத்தி கேட்டா அவ்ளோதான்:):):)

ஆதவன், மணிரத்தினம், ஆத்துறது காப்பியன்னாலும், பெரும் காப்பியம் மாதிரி சீனைப் போட்டா, கடியா இருக்குல்ல:):):) உங்களுக்கு பொறந்தநாள்னு நேத்து விட்டாச்சு, இன்னைக்கு அப்புறம் என்னோட லைப்ரரி போஸ்ட் லிங்க் கொடுத்திடுவேன்:):):)

கபீஷ் said...

அடிக்கடி பிளேடு போடுங்க.
திருமா ?:-):-) அப்போ சீரியஸா பதில் சொல்லலையா?

rapp said...

கபீஷ் எனக்கு திருமாவைப் பிடிக்கும். நீங்க சொல்ற காரணம் புரிந்தாலும், இதில் நேர்மையானவர்கள் யாரும் காணோம்:(:(:(

கோபிநாத் said...

ஆகா..ரொம்ப நாள் கழிச்சி பதிவு ;)

Anonymous said...

//பிடிக்காதவர்: சித்ரா //

ஏங்க ராப், நல்லாத்தானே பாடுவாங்க சித்ரா.

ஏன் இவ்வளவு நாள் கேப் பதிவுக்கு

Vidhoosh said...

http://vidhoosh.blogspot.com/2009/11/blog-post_04.html

Please accept this gift from me with deep appreciation for your blog.

-vidhya

முத்துலெட்சுமி/muthuletchumi said...

http://sirumuyarchi.blogspot.com/2009/11/blog-post.html

போட்டாச்சு ராப். அழைப்புக்கு நன்றிங்கோ.. :)

ராமலக்ஷ்மி said...

கொஞ்சம் லேட்டு.

பிடித்த கவிஞர்.. வாய் விட்டு சிரித்தேன்.
(சரியாத்தான் சொல்லியிருக்கீங்கப்பா)
பிடிக்காத கவிஞர்.. அதையும் ரசித்தேன்:)!

அழைத்த அன்புக்கு நன்றி ராப்.

தொடர, ஹி 'விருப்பமுள்ளவர்கள்' என்று சொல்லியிருப்பதற்கு மறுபடி நன்றி:)!

rapp said...

கோபிநாத்:):):)

சின்னம்மிணி, சித்ரா பாடல்கள் என்னவோ கொஞ்சம் கிணத்துக்குள் இருந்து ஒலிக்கும் குரலின் தெளிவுடன் இருப்பதாகத் தோன்றும். இவருடைய குரலில் விசேடமாக எதுவும் தெரியாதது போலவும், வேறொருவருக்குக் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாகப் பாடியிருப்பாரோ எனத் தோன்றும்.

விதூஷ், விருதுக்கு மிக்க நன்றி.

இன்றைக்கே பதிவிட்டதற்கு மிக்க நன்றி முத்து.

இராமலக்ஷ்மி, எனக்கு அவர் மிகுந்த போட்டியை உண்டாக்கிட்டே இருக்காரு. என்னையே முந்திடுவாரோன்னு பகபகன்னு எரியிது:):):)

Agila said...

பிடிக்காதவர்: மணிரத்தினம்
ஏன்?
..Ag

Deepa (#07420021555503028936) said...

wow!
Rapp, you rock big time!

நீங்கள் பதிவிட்ட அன்றே படித்து விட்டாலும் பின்னூட்டமிடுவதில் சிரமங்கள் இருந்தன. அதனால் தான் இவ்வளவு தாமதம்
//விளையாட்டு வீரர்:
பிடித்தவர்: சாந்தி.//
salute! :) எனக்கும் புதுக்கோட்டை சாந்தி தான் சட்டென்று நினைவுக்கு வந்தார்.