Tuesday, 14 July, 2009

நான் கூட விருது வாங்கிட்டேன்.


இந்த விருது கொடுத்த முல்லைக்கு ரொம்ப ரொம்ப நன்றி:):):)

நான் கொடுக்கப் போற மொதல் விருது முத்துவுக்கு. இவங்களோட போஸ்ட்ல நான் மொதல்ல படிச்சது 'சாட்ட சாட்ட'தான். நம்ம வீட்ல நடக்குற விஷயமாத்தான் இருக்கும். ஆனா, நாம சரியா நோட் பண்ணிருக்க மாட்டோம். அதயெல்லாம் சும்மா சூப்பரா போட்டிருவாங்க. பெருசா மெனக்கெடாம, சிம்பிளா அப்டியே சொல்ல வந்தத சொல்லிட்டு போவாங்க. வர வர புதுக் காமிரா வாங்குனதுலருந்து, இந்தப் போட்டோங்களப் போட்டு ஓவரா சீன் காமிக்கறாங்க. நான் அதப் புடிங்கி பாலு மகேந்திரா எபெக்ட்ல நாலு படம் எடுத்தா சரியாகிடும்.

அம்பி அண்ணன். ஹி ஹி, இப்போல்லாம் இவர பதிவு எழுத வெக்குறதுன்னா விருதெல்லாம் கொடுக்கணும் போலருக்கு. அப்பப்போ வந்து ஜம்புக் கதைகள எடுத்துவிட்டா நல்லாருக்கும். இல்லைன்னா அட்லீஸ்ட் ஒரு கோபிகா போஸ்டாவது போட்டு தாக்கனும். ஆஹா ஆஹா, அது ஒரு அழகிய கனாக்காலம்.

டுபுக்கு அண்ணன். ஒரே நாள்ல இவரோட மொத்தப் பதிவுகளும் படிச்சிருக்கேன். வீணாப் போனவங்க, அது இதுன்னு வெளங்காத கணக்கஎல்லாம் வெச்சு பரீட்சைல காண்டாக்குறத்துக்கு பதில், இவரு பதிவுகள வெச்சு, கேள்விக் கேட்டா, நான் சூர்யவம்சம் தேவயானி கணக்கா கலெக்டராகி, பிளயிட் டிக்கட் கொடுத்து, மாமனார இந்தியா வரவெச்சு, பேப்பர் வெயிட்ட அவர் கால்ல தூக்கி போட்டு, அத எடுக்குறாப்டி காலத் தொட்டுக் கும்பிட்டு, பெருவெரல முறுக்கி, பிராக்ச்சராக்கிடுவேன். எங்க நம்ம நாடு முன்னேறுறது.

சென்ஷி அண்ணன். இவரு ஏதோ இந்த பின்நவீனத்துவ அறிவுஜீவி ஆளுன்னு ரொம்ப நாளா நெனச்சிட்டிருந்தேன். பாத்தா பின்னூட்டத்துல வேற எபெக்ட் காட்டுகிறார், அம்பி அந்நியனாட்டம். மீரா ஜாஸ்மின் போஸ்ட் பாத்தாலே தெரியுமே. ஆயில்ஸ் ஊர்ல இருந்து வந்தவுடன், சீக்கிரம் எல்லாரும் சேர்ந்து அப்டி ஒன்னு போடனும்னு நேயர் விருப்பம். இவரு முப்பத்திரண்டுக் கேள்விக்கு தான் பதில் சொன்னத விட, கோபிண்ணனுக்கு கோபியன்ணன் கணக்கா பதில் போட்டு கலக்கலா கலாய்ச்சத போல எக்கச்சக்கமா எதிர்பாக்கறோம்.

கானாஸ். இவரையும் ரொம்ப நாளா வெறும் பாட்டுக்கள் சம்பந்தமான இடுகைகள் மட்டும்தான் போடுவாருன்னு நெனச்சிருந்தேன். எனக்கு ஏன் இப்டி ஒரு வினோத காமாலக் கண்ணுன்னு தெர்ல, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............ அப்புறம் இவரோட கம்போடியா டிரிப் பத்தினப் பதிவுகள்தான் எனக்கு பர்ஸ்ட் தெரிஞ்சது(யாரும் துப்பாதீங்கப்பா என்னைய). இவரு சோக்கா ஒரு போட்டோ போட்டிருக்காரே அழகிகளோட, அதுலப் பாத்தா நம்ம சந்தானம் மாதிரி இல்ல, கி கி கி.

நான் ஆதவன். இவரோட பின்னூட்டங்களால தான் பர்ஸ்ட் பர்ஸ்ட் இவரு வலைப்பூக்கு போக ஆரம்பிச்சேன். பஞ்ஜி ஜம்பிங்க்ள பெங்களூர்ல ஒரு விபத்து நடந்தப்போக் கரெக்டா இவரோட அந்த இடுகயப் பாத்து பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...... ஆகிட்டேன். எந்தப் பதிவுலையும் இவரோட பின்னூட்டங்கள் செம ஜாலி. ஏசி ரூம்ல இருந்து, நெறயப் பதிவு எழுதி, கையையும் சேர்த்து வெத்தல சாராட்டம் செவக்க வெச்சிக்கணும்னு இந்த விருதக் கொடுக்கிறேன்.

31 comments:

சென்ஷி said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

விருது தந்தமைக்கும் நன்றிகள் :)

விரைவில் பதிவிலேற்றுகிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பஸ்ஸில் ஏறும் கலையா.. இது ஓடற பஸ்ஸில் ஏறுவது போல இருக்கே.. :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆக்சுவலி ஐ ம் ப்ளானிங்க் டு போஸ்ட் ஒன் மோர் போட்டோ போஸ்ட் ராப்... :))

புதுகைத் தென்றல் said...

வாழ்த்துக்கள் ராப்

மணிகண்டன் said...

Neenga vaangaatha viruthaa raap ??

" உழவன் " " Uzhavan " said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

செந்தழல் ரவி said...

வாழ்த்துக்கள்...!!!

விருதை சைட்ல டிஸ்ப்ளே செய்யவும்...!!!!

☀நான் ஆதவன்☀ said...

அவ்வ்வ்வ் நன்றி யக்கோவ். இந்த பஸ்ஸில டிக்கெட் எடுக்கனுமா?

இதுக்கு மேல நான் சிவப்பாகனும்ன்னா செங்கல்ல வச்சு தான் மூஞ்சியில தேய்க்கனும்.....

கானா பிரபா said...

எனக்கு பணமுடிப்பா தந்தா தான் வாங்கிப்பேன் :)

அ.மு.செய்யது said...

நிறுத்தணும்.எல்லாத்தையும் நிறுத்தணும்.

எப்படிங்க வரிக்கு வரி சிரிக்க வைச்சு.மத்தியான சாப்பாட்ட மூக்கு வழியா
வர வக்குறீங்க..

ஏற்கெனவெ அந்த கும்பிளே கவுஜய நினைச்சி நினைச்சி அடிக்கடி தனியா சிரிச்சிட்ருக்கேன்.

Dubukku said...

விருதுக்கு மிக்க நன்றி மேடம். தன்யனானேன். கூடிய சீக்கிரம் பதிவ போட்டுவிடுகிறேன்

வால்பையன் said...

சுவாரஷ்யப்ளாக்குன்னு சொன்னாங்க,
உங்களுக்கு கொடுத்துருக்காங்க


சும்மா லுலுலாயிக்கு

வாழ்த்துக்கள்!

கோபிநாத் said...

உங்களுக்கும்....உங்களிடம் இருந்து விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)

கோபிநாத் said...

\\இவரு முப்பத்திரண்டுக் கேள்விக்கு தான் பதில் சொன்னத விட, கோபிண்ணனுக்கு கோபியன்ணன் கணக்கா பதில் போட்டு கலக்கலா கலாய்ச்சத போல எக்கச்சக்கமா எதிர்பாக்கறோம்.
\\\

கிர்ர்ர்ரர்ர்ர்ர்ர்...ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு ;))

மதிபாலா said...

விருதுக்கு வாழ்த்துக்கள்..

என் ஜாய்!

ராமலக்ஷ்மி said...

விருது பெற்ற உங்களுக்கும் வாங்கிய மற்றவருக்கும் வாழ்த்துக்கள்!

//ஆஹா ஆஹா, அது ஒரு அழகிய கனாக்காலம்.//

ஆமாங்க, ஓஹோ ஓஹோன்னு எழுதிட்டிருந்தாரு.

//இப்போல்லாம் இவர பதிவு எழுத வெக்குறதுன்னா விருதெல்லாம் கொடுக்கணும் போலருக்கு.//

கரெக்ட், ஆனா வெறும் விருது பத்தாது என்பாரே:))! சரி எப்படியோ உங்க விருது மறுபடி அவரை எழுத வச்சா சரிதான்!

rapp said...

இங்கு கமன்ட் மாடரேஷன் எனேபில் செய்ய வைத்த நல்லவருக்கு நன்றி.

நேசமித்ரன் said...

best wishes for The award
ur posts are very interesting

all the best

வாழ்த்துக்கள்

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் ராப்! விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

லேபிள் - ரசித்தேன்! :))

சந்தனமுல்லை said...

//மீரா ஜாஸ்மின் போஸ்ட் பாத்தாலே தெரியுமே. ஆயில்ஸ் ஊர்ல இருந்து வந்தவுடன், சீக்கிரம் எல்லாரும் சேர்ந்து அப்டி ஒன்னு போடனும்னு நேயர் விருப்பம்.//

:-))

சந்தனமுல்லை said...

//எனக்கு ஏன் இப்டி ஒரு வினோத காமாலக் கண்ணுன்னு தெர்ல, //

ஆகா..இது என்ன கொடுமை ராப்....:-)) பாவம் கானாஸ்!!

சந்தனமுல்லை said...

//இவரு பதிவுகள வெச்சு, கேள்விக் கேட்டா, நான் சூர்யவம்சம் தேவயானி கணக்கா கலெக்டராகி, பிளயிட் டிக்கட் கொடுத்து, மாமனார இந்தியா வரவெச்சு, பேப்பர் வெயிட்ட அவர் கால்ல தூக்கி போட்டு, அத எடுக்குறாப்டி காலத் தொட்டுக் கும்பிட்டு, பெருவெரல முறுக்கி, பிராக்ச்சராக்கிடுவேன். எங்க நம்ம நாடு முன்னேறுறது.//

ராப்....சிரிச்சுக்கிட்டே இருந்தேன் ரொம்ப நேரம்! நான் உங்களை அப்படியே கற்பனை செஞ்சு பார்த்துட்டேன் வேற!! :-)))))))

சந்தனமுல்லை said...

இதேமாதிரி ஜாலி போஸ்ட் எப்பவும் போடணும்னு நேயர்கள் கேட்டுக்கறோம்! பாத்து மனசு வைங்க மேடம்! :-))

கைப்புள்ள said...

//பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...... //


நீங்களுமா? அங்கே ஒரு பவ்வ்வ்வதாரிணின்னா இங்கே ஒரு பவ்வ்வ்வானி போலிருக்கு :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

எனக்கு ஏன் இப்டி ஒரு வினோத காமாலக் கண்ணுன்னு தெர்ல, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............
வாழ்த்தலாம்னு வந்தா இப்படி கன்னாபின்னான்னு உங்கள நீங்களே கலாச்சிகிட்டு சிரிப்பு வர வைக்கறீங்களே !!

உங்களுக்கும், வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துகள்

kanagu said...

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் தலைவா :)

தேவன் மாயம் said...

விருதுக்கு வாழ்த்துக்கள்11

Anonymous said...

where is the party?

ஜெகநாதன் said...

வாழ்த்துக்கள் ​வெட்டிஆபிசர் சார்! அப்புறம் விருது ​பெற்றவர்களுக்கும்!

r.selvakkumar said...

பதிவர்கள் பற்றிய தொகுப்பு தற்போது அடிக்கடி கண்களில்படுகிறது.

இதற்கு அர்த்தம் . . .?

பதிவர்கள் உலகம் ஒருவருக்கொருவர் அறிமுகமான உலகமாகவும், அனுபவம் மிக்க உலகமாகவும் மாறிக் கொண்டிருக்கின்றது.

Deepa (#07420021555503028936) said...

தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.
http://deepaneha.blogspot.com/2009/11/blog-post.html

Please do the honors! :)