Monday 2 November, 2009

ஒரு ரம்பமே பிளேடு போடுகிறதே!

தொடருக்கு அழைத்த தீபாவுக்கு நன்றி. எனக்கு ரொம்ப கஷ்டமான விஷயம் சுருக்கமா வியாக்யானம் இல்லாம விடை சொல்றது. என்னால விருப்பமானவங்கள்ள ஒன்னே ஒண்ணுன்னு சொல்ல முடில.வழக்கம்போல பொறுத்தருள்க.


1. அரசியல் தலைவர்:
பிடித்தவர்: திருமா
பிடிக்காதவர்: இராமதாஸ்

2. எழுத்தாளர்:
பிடித்தவர்: (எனக்குப் படிக்க கிடைத்த அளவில்) எஸ்.இராமகிருஷ்ணன்.
பிடிக்காதவர்: இதற்கு பதில் சொல்ற அளவுக்கு படிச்சதில்லை.

3. கவிஞர்:
பிடித்தவர்: என் பெற்றோர் (இப்டி ஒரு தெய்வீகக் கவிதயப் படைச்சதுக்காக).
பிடிக்காதவர்: வி.ஜி.சந்தோஷம்(எனக்கு சரியானப் போட்டி).

4. இயக்குனர்:
பிடித்தவர்: பரீட்சை டொயத்துல கே.எஸ்.இரவிக்குமார், கொழுப்பெடுத்து திரியும்போது   பாலுமகேந்திரா, பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ அப்டின்னா வெங்கட் பிரபு.
பிடிக்காதவர்: மணிரத்தினம் .

5. நடிகர்:
பிடித்தவர்: வி.கே.இராமசாமி, எம்.ஆர.இராதா, கவுண்டமணி.
பிடிக்காதவர்: எஸ்.எஸ்.சந்திரன்.

6. நடிகை:
பிடித்தவர்: காஞ்சனா, அசின், நதியா.
பிடிக்காதவர்: இராஜஸ்ரீ.

7 . இசையமைப்பாளர்:
பிடித்தவர்: சூலமங்கலம் இராஜலக்ஷ்மி, இளையராஜா.
பிடிக்காதவர்: ஆதித்யன், இன்றைய டி.ஆர்.

8. பாடகர்:
பிடித்தவர்: ஏ.எம்.இராஜா.
பிடிக்காதவர்: ஹரிஹரன்.

9. பாடகி:
பிடித்தவர்: பி.சுசீலா, எல்.ஆர.ஈஸ்வரி.
பிடிக்காதவர்: சித்ரா

10. விளையாட்டு வீரர்:
பிடித்தவர்: சாந்தி.
பிடிக்காதவர்: தமிழ்நாட்டில் அப்படி யாரும் இல்லை.


கீழே அழைத்துள்ளவர்களில் தொடர விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.

முத்துலெட்சுமி கயல்விழி
அவீங்க ராசா
சுரேஷ் பழனியிலிருந்து
இராமலக்ஷ்மி

Tuesday 14 July, 2009

நான் கூட விருது வாங்கிட்டேன்.


இந்த விருது கொடுத்த முல்லைக்கு ரொம்ப ரொம்ப நன்றி:):):)

நான் கொடுக்கப் போற மொதல் விருது முத்துவுக்கு. இவங்களோட போஸ்ட்ல நான் மொதல்ல படிச்சது 'சாட்ட சாட்ட'தான். நம்ம வீட்ல நடக்குற விஷயமாத்தான் இருக்கும். ஆனா, நாம சரியா நோட் பண்ணிருக்க மாட்டோம். அதயெல்லாம் சும்மா சூப்பரா போட்டிருவாங்க. பெருசா மெனக்கெடாம, சிம்பிளா அப்டியே சொல்ல வந்தத சொல்லிட்டு போவாங்க. வர வர புதுக் காமிரா வாங்குனதுலருந்து, இந்தப் போட்டோங்களப் போட்டு ஓவரா சீன் காமிக்கறாங்க. நான் அதப் புடிங்கி பாலு மகேந்திரா எபெக்ட்ல நாலு படம் எடுத்தா சரியாகிடும்.

அம்பி அண்ணன். ஹி ஹி, இப்போல்லாம் இவர பதிவு எழுத வெக்குறதுன்னா விருதெல்லாம் கொடுக்கணும் போலருக்கு. அப்பப்போ வந்து ஜம்புக் கதைகள எடுத்துவிட்டா நல்லாருக்கும். இல்லைன்னா அட்லீஸ்ட் ஒரு கோபிகா போஸ்டாவது போட்டு தாக்கனும். ஆஹா ஆஹா, அது ஒரு அழகிய கனாக்காலம்.

டுபுக்கு அண்ணன். ஒரே நாள்ல இவரோட மொத்தப் பதிவுகளும் படிச்சிருக்கேன். வீணாப் போனவங்க, அது இதுன்னு வெளங்காத கணக்கஎல்லாம் வெச்சு பரீட்சைல காண்டாக்குறத்துக்கு பதில், இவரு பதிவுகள வெச்சு, கேள்விக் கேட்டா, நான் சூர்யவம்சம் தேவயானி கணக்கா கலெக்டராகி, பிளயிட் டிக்கட் கொடுத்து, மாமனார இந்தியா வரவெச்சு, பேப்பர் வெயிட்ட அவர் கால்ல தூக்கி போட்டு, அத எடுக்குறாப்டி காலத் தொட்டுக் கும்பிட்டு, பெருவெரல முறுக்கி, பிராக்ச்சராக்கிடுவேன். எங்க நம்ம நாடு முன்னேறுறது.

சென்ஷி அண்ணன். இவரு ஏதோ இந்த பின்நவீனத்துவ அறிவுஜீவி ஆளுன்னு ரொம்ப நாளா நெனச்சிட்டிருந்தேன். பாத்தா பின்னூட்டத்துல வேற எபெக்ட் காட்டுகிறார், அம்பி அந்நியனாட்டம். மீரா ஜாஸ்மின் போஸ்ட் பாத்தாலே தெரியுமே. ஆயில்ஸ் ஊர்ல இருந்து வந்தவுடன், சீக்கிரம் எல்லாரும் சேர்ந்து அப்டி ஒன்னு போடனும்னு நேயர் விருப்பம். இவரு முப்பத்திரண்டுக் கேள்விக்கு தான் பதில் சொன்னத விட, கோபிண்ணனுக்கு கோபியன்ணன் கணக்கா பதில் போட்டு கலக்கலா கலாய்ச்சத போல எக்கச்சக்கமா எதிர்பாக்கறோம்.

கானாஸ். இவரையும் ரொம்ப நாளா வெறும் பாட்டுக்கள் சம்பந்தமான இடுகைகள் மட்டும்தான் போடுவாருன்னு நெனச்சிருந்தேன். எனக்கு ஏன் இப்டி ஒரு வினோத காமாலக் கண்ணுன்னு தெர்ல, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............ அப்புறம் இவரோட கம்போடியா டிரிப் பத்தினப் பதிவுகள்தான் எனக்கு பர்ஸ்ட் தெரிஞ்சது(யாரும் துப்பாதீங்கப்பா என்னைய). இவரு சோக்கா ஒரு போட்டோ போட்டிருக்காரே அழகிகளோட, அதுலப் பாத்தா நம்ம சந்தானம் மாதிரி இல்ல, கி கி கி.

நான் ஆதவன். இவரோட பின்னூட்டங்களால தான் பர்ஸ்ட் பர்ஸ்ட் இவரு வலைப்பூக்கு போக ஆரம்பிச்சேன். பஞ்ஜி ஜம்பிங்க்ள பெங்களூர்ல ஒரு விபத்து நடந்தப்போக் கரெக்டா இவரோட அந்த இடுகயப் பாத்து பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...... ஆகிட்டேன். எந்தப் பதிவுலையும் இவரோட பின்னூட்டங்கள் செம ஜாலி. ஏசி ரூம்ல இருந்து, நெறயப் பதிவு எழுதி, கையையும் சேர்த்து வெத்தல சாராட்டம் செவக்க வெச்சிக்கணும்னு இந்த விருதக் கொடுக்கிறேன்.

Tuesday 30 June, 2009

வாரா வாரா பூச்சாண்டி

பல நாட்கள் உங்க பிளாகுக்கு வரலாம்னு நினைப்போம், ஆனா எங்க நீங்க புது இடுகை போட்டு, ஆந்தராக்ஸ் கணக்கா தாக்கோ தாக்குன்னு தாக்கிடுவீங்களோன்னுதான் வர்றதில்லைன்னு நேர்மையா ஒத்துக்குற நல்லவங்களும், பெரும்பான்மயானவங்களும் இனி ஒரு மாசத்துக்கு தங்கு தடையே இல்லாம இந்த பிளாகுக்கு வரலாம்.


ஏன்னா, இந்த மாசம் நான் இந்தக் கடையில் டோபாஸ் விக்கப்போறேனாக்கும்.

சிறுபான்மையினரான, பின்னூட்ட கயமையைத் தவறாமல் நிறைவேற்றும் பெரிய மனசுக்காரர்களும் அங்க வந்து, என்னைய மாதிரியே கடமைய எருமை கணக்கா, ஆத்தலாம்.

ஒன்னுமே இல்லாத இந்த இடுகைலக் கூட, பெரும்பான்மையினர் சிறுபான்மையினர்னு பேசி, என்னைய மாதிரியே பேமசாக லோலோலோன்னு அலையறவங்களும் அங்க வரலாம்.

மேற்படி வாய்ப்பளித்த நிர்வாகிகளுக்கு ஆட்டோ அனுப்ப துடிப்பவர்கள் முதற்கொண்டு அனைவரும் வந்து காண்டாவ கேட்டுக்கொள்கிறேன்.

Thursday 25 June, 2009

கேசட் கால தல

இசையின் ஒவ்வொரு பரிமாணத்திற்கும், ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் சிலப் பல 'தல'கள் இருந்தாலும், கேசட்களின் கடைசி கட்டத்தில் உலகை(அட்லீஸ்ட் எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு), கட்டிப்போட்டவர்.

எங்கக்கால்லாம் அப்டியே செம பேன்ஸ். அவங்க செட்டோடல்லாம் சுத்தறத்துக்காகவே இப்டி பல வித இசை கலைஞர்களின் இசையை கேக்க ஆரம்பிச்சு நமக்கும் புடுச்சுப் போச்சு.

நாங்கெல்லாம் பாப் ம்யூசிக்கை வெச்சு அபீஷியலா டார்ச்சர் கெளப்பக்கூடிய காலக்கட்டம் வரப்போ, அது சிடிக்களின் காலக்கட்டம். ஜாக்சன் கிரேஸ் பயங்கரமா கம்மியான காலக்கட்டம்.

எங்கக்காவ அப்போல்லாம் பயங்கரமா பழிவாங்கறதுண்டு, சின்ன சண்ட போட்டாக் கூட. ஒருத்தங்கள செம எரிச்சல் படுத்தனும்னா அவங்க சாப்பாடு, புக்ஸ் இல்லைன்னா இசை கலெக்ஷன்ல கை வெச்சா போதும்ங்கற உன்னத அறிவு அப்போவே வந்தாச்சு. அதால, அவங்க வாங்கி வெச்சிருக்க லேட்டஸ்ட் கேசட்சை எடுத்து, அதுல கண்றாவியான எதையாவது பாடி வெக்கிறது, இல்லை அம்மாப்பா கிட்ட போயிடும்னு பயமிருந்தா, அன்னைக்கு பாட்டு வாத்தியார் சொல்லிக் கொடுத்த ஒரு டப்பா பாட்டை, எவ்ளோவுக்கெவ்வளவு கர்ண கொடூரமா கத்த முடியுமோ அப்டி கத்தி அந்த கேசட் முழுக்க ரெக்கார்ட் பண்ணி சைலண்டா வெச்சிடறது.

அதுக்கப்புறம் நடக்கறத சொல்லித்தான் தெரியனுமா என்ன? இப்டி பண்ணி ஒரு தீவிரவாதி ரேஞ்சுக்கு சொந்தக்கார பசங்க மத்தியிலும் புகழ் பரவி, எக்கச்சக்க நட்புகள் கெடச்சிது.

இந்த பாட்டு நான் மறக்கவே முடியாது. இது இருந்த கேசட்டை நான் 'யசோத நந்த கோபாலனே' பாடி அழிச்சிட்டு, சும்மா ஜம்முன்னு உக்காந்த ஞாபகம் வருது. அப்போ இந்த பாட்டிற்கு இருந்த பக்தர்களுக்குத் தெரியும் நான் செஞ்சது எவ்ளோ கொடூரம்னு.





அது ஒரு அழகிய நிலாக்காலம்!!!!!!!!!!

என்னுடைய இனிமையான குழந்தைப் பருவ நினைவுகளுக்கு உதவியது அவரின் இசை, அடுத்த பிறவியிலாவது அவருக்கும் ஒரு இனிமையான குழந்தைப் பருவம் அமைய வேண்டுமென ஆசை.

இவர் தோன்றுவதற்கு முன்பே ஆலமரமாகி உச்சபட்ச வெற்றியை ஈட்டிய ஆப்பிரிக்க அமெரிக்க பாப் ம்யூசிக் இசைக்கு, இவர் காலக்கட்டங்களில் ஒரு பெரிய எதிர்ப்பு இயக்கமே நடந்துச்சி, மாற்று இசைக் கலைஞர்களால், அப்டின்னு கேள்விப்பட்டிருக்கேன்(உண்மை இல்லைன்னா, சுட்டினால் திருத்திவிடுகிறேன்).
அனைத்தையும் தாண்டி இவர் வந்தது நல்ல விஷயம்.

என்னளவில் என்னுடைய ஆல்டைம் பேவரிட்ஸ் இவை மூன்றும்.





இது போனஸ்.

Monday 8 June, 2009

ரிலே ரேஸ்

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

எதையும் உருப்படியா செய்யாம, தொணதொணன்னு கருத்து சொல்லிட்டு திரியறவங்க என்னைப் பொறுத்தவரை வெட்டியாப்பீசர். பிரான்ஸ் வந்தப்புறம் எதையும் ஆக்கப்பூர்வமா செஞ்சதா நெனப்பில்ல, அதால இந்தப் பேர் வெச்சிக்கிட்டேன்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?


ரொம்ப போரடிச்சாக் கூட, சும்மாதான இருக்கோம், எதுக்கும் எதையாச்சும் நெனச்சு அழுது வெப்போம், பின்னாடி உபயோகப்படும்னு யோசிச்சு அழுதுவெ க்கிற ஆள் நானு
. கோவம் வந்தாலும் அழுக தான், சந்தோஷம்னாலும் அழுகைதான். அதால அதுக்கு கணக்கெல்லாம் கெடயாது. என் அழுகைக்கெல்லாம் நான் முக்கியத்துவம் கொடுக்கறதில்ல.
தோ, இவ்ளோ பெரிய திராபயெல்லாம் படிச்சு மண்டக்காயப் போறீங்களேன்னு நெனச்சுக் கூட அழுக வருது. அதுக்கென்ன பண்றது?

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

என் கையெழுத்துன்னா எனக்கு அவ்ளோ இஷ்டம். பின்ன வேறெதிலுமில்லாத வசதி இதில் இருக்கே. நாம பரீட்சையில கேவலமான மார்க் வாங்கினாலும், நான் சூப்பராத்தான் எழுதினேன், கையெழுத்து புரியாம ஏதோ கரெக்ட் பண்ணிருக்காங்கன்னு தாளிக்கலாம்.(பல சமயம் நமக்கு முன்னையே , மத்தவங்க பேத்தறத்துக்கும் வாய்ப்புண்டு). சீனியர்ஸ் சப்பத்தனமா, ரிக்கார்ட் எழுதுங்கறதஎல்லாம் ராகிங்குன்னு நெனச்சு கொடுத்தா, அதை எழுதி கொடுத்து, நாம பதிலுக்கு அவங்கள ரேக் பண்ணலாம்.

4.பிடித்த மதிய உணவு என்ன?

பசிச்சு சாப்டா என் சமையல் கூட புடிக்கும்.
ருசிக்குன்னு பாத்தா, எங்கம்மா & பெரியம்மா சமையல்ல மட்டன் மீன் தவிர்த்து எல்லாமேப் பிடிக்கும். தென்னிந்திய மதிய உணவுகள் அத்தனையும் பிடிக்கும்.
குஸ்கா+தயிர் பச்சடி, வெஜிடபுள் புலாவ்+தென்னிந்திய சிக்கன் கிரேவி, தாளிச்ச தயிர் சாதம்+கத்தரிக்கா கொத்சு, வெண்டைக்காய் மோர்குழம்பு+ உருளைக்கிழங்கு பிரை, தக்காளி சாதம்+ தயிர் வடை, லெமன் ரைஸ்+வாழைக்காய் வறுவல், வத்தக்குழம்பு/காரக்குழம்பு+காய்கறிக் கூட்டு/முட்டை பிரை, பெஸ்டோ, சிக்கன் பிரை+பிரென்ச் பிரை, confit de canard+ mashed potato(ஒரு வகையான வாத்து ரோஸ்ட்+மேஷ்ட் பொட்டேட்டோ).

5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

ரிவால்வர் ரீட்டாவாட்டம், இந்தக் கேள்விய கண்டுபுடிச்சி மறுபடி கொண்டாந்த சந்தனமுல்லைக்கு என் கண்டனங்களை தீவிரமா பதிஞ்சிக்கிறேன். பாதாள பைரவில, என்டிஆர், எம்.கே.நாராயணன் புத்திய மாதிரி கொடூரமா, தமிழ்ல 'உள்தைச் சொல்வா, இல்லி உண்மைய இலியென்று சொலவா'ன்னு கேக்குறாப்டி, நாங்களும் பதில் கேள்விதான் கேக்கணும்.
அதோட, நான் இன்னொருத்தரா கற்பனைப் பண்ணனும்னா, அப்டியே குணநலன்களையும் கொடுத்திருக்கணும். நட்பு நண்பர்கள் எல்லாமே குணநலன்களை வெச்சுத்தான வருது.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

குளிக்கிறது எனக்கு அடிக்ஷன் மாதிரி. கடல்ல குளிக்க புடிக்கும்னாலும், அருவி மாதிரி வருமா.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

எதிராளிய எங்கருந்து பாக்குறது. அவங்க நம்மை கவனிப்பாங்களேன்னு அப்பவும் என்னைச் சுத்திதான் நெனப்பு ஓடும். மீறி, பராக்குப் பாக்குறதுன்னா, டிரெஸ், ஆக்சசரீஸ் புடிக்கும். வினோதமா, யாராச்சும் உக்காந்திருந்தா, அவங்க எப்டி காலாட்றாங்கன்னு பாக்குற பழக்கம் காலேஜ்ல பசங்க சொன்ன 'ஜோசியத்தால' தொத்திக்கிச்சி.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம் : ஒரு லிமிட் தாண்டி சும்மா எதையும் பிடிச்சு தொங்கிட்டிருக்க மாட்டேன், முடியாப் போச்சுன்னு வேலயப்பாத்துக்கிட்டு போய்ட்டே இருப்பேன்.
பிடிக்காத விஷயம் : வாய் ஓயாம பேசிட்டே இருப்பேன். நிஜமாவே எனக்கு வாயெல்லாம் வலிக்கும் சில சமயம். இங்கயே பாருங்க, ஒரு கேள்விக்கு ஒம்போது பதில். நாம பேசறதாட்டம்தான எழுதறதும்.

போரடிக்குதுன்னோ, பிடிக்கலைன்னோ இல்ல வேற காரணத்துக்காகவோ யாரையும் அவாய்ட் பண்ண வராது. அப்டி, நோ நான்சென்ஸ் ஆடிட்யூட் இருக்கவங்களை பாத்து ஏங்கறதுதான் மிச்சம்.

9.
உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தது : பிடிக்காதுன்னு சொல்லிருக்க ஒன்னைத் தவிர மத்ததெல்லாம் பிடிக்கும்.
பிடிக்காத விஷயம் : என்னவானாலும் நெகடிவா பேச மாட்டேன்னு அடம் பிடிக்கிறது. உதாரணத்துக்கு, இன்னைக்கு சாலட் சாப்ட மூடிருக்கான்னு கேட்டா, ஆமா/இல்லைன்னு சொல்லாம, நேத்தைக்கு சாலட் சாப்டற மூட் இருந்துதுன்னு, சுத்திவளைச்சு பதில் சொல்லி, நூதனமா மண்டக்காயவெக்கிறது.
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அம்மா அப்பா. எங்கம்மாகிட்ட நாலஞ்சு நாள் பேசலைன்னா எனக்கு வெறி புடிச்சிடும்(நார்மலா இருக்கப்பவே இப்டின்னா, பாத்துக்கங்க).

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

பிங்க் கலர்.

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

இப்போ பாட்டு கேக்கலை, படம் ஓடுது. வானம்பாடி

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

அது எழுதப்படப்போற தாளை பொறுத்தது. வெள்ளை வகையறா தாள்னா, கறுப்புக் கலர்ல, அதுவே டார்க் கலர் ஷீட்னா, அதுக்கேத்த கலர்ல.

14.பிடித்த மணம்?

பன்னீர் ரோஜா, நித்திய மல்லி, சாதா மல்லி, எலுமிச்சை வாசனை. என்னால கொஞ்சூண்டு ஸ்ட்ராங் வாசனைன்னாக் கூட தாங்க முடியாது, மயக்கம் வந்திடும்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

அம்பி அண்ணன். இவருக்கு இந்தத் தொடர் பதிவுன்னா, காண்டாவும். அதால பதில்கள் ஜாலியா இருக்கும். அதோட, அண்ணி பத்தி புடிக்காத விஷயம்னு என்ன சொல்வார்னும் பாக்க ஆசை:):):)

இவர்கிட்ட புடிச்ச விஷயம் ஜாலியா எழுதுவார், ஜாலியா பேசுவார்.
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

முல்லையோட பதிவில் எனக்குப் பிடிக்காதுன்னு ஒண்ணுமே இல்லை. சூப்பரா இருக்கும். நச்சுன்னு பாயிண்டுக்கு வந்திடுவாங்க. அவங்களோட, பேரிச்சம்பழம் பதிவைச் சொல்வதா, கலர் டிவி பதிவைச் சொல்றதா, இல்லை, மொதமொதல்ல என்னை பயங்கரமா ஈர்த்த அவங்களோட bally sagoo பதிவை சொல்றதா, இல்லை, ஈனா மீனா ஐக்கசா பதிவை சொல்றதா? இவங்க நாஸ்டால்ஜியா பதிவு ஒன்னொன்னும் எனக்கு மனப்பாடம். இசை ரசனைல இவங்க எனக்கு பிடிச்சவங்க.

17. பிடித்த விளையாட்டு?
விளையாட்டுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. ஒரு தரம் விளையாட்டு தொடர் அழைச்சப்போ கூட மண்டயக் கசக்கி, சும்மா டூப் விடலாம்னாக் கூட முடியாதளவுக்கு இருந்திச்சி.

பாக்கறதுன்னா ஒன் டே மேட்ச் கிரிக்கெட்ல ரொம்ப பிடிக்கும். கபடி ரொம்பப் பிடிக்கும். ஹாக்கி ரொம்ப பிடிக்கும்:):):)(ஹி ஹி ஹி, சென்னை 28, கில்லி, சக் தே இந்தியா படங்கள் நியாபகம் வர வேண்டாம், எனக்கு நெஜமாவே இதெல்லாம் புடிக்கும்:):):))

18.கண்ணாடி அணிபவரா?
பவர் கண்ணாடி கெடயாது. ஆனா சீன் போடனும்னா டிசைனர் சன்கிளாஸ் போட்டுட்டு சுத்தறதுண்டு.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

அது மூடை பொறுத்தது.

பொதுவா, எரிச்சல் கெளப்புற படங்களைப் பிடிக்காது. ஆம்பளன்னா அல்வா கிண்டனும், பொம்பளைன்னா போண்டா திங்கணும்னு வர்ற விஜய், சிம்பு ரேஞ்ச் படங்களையும், ஹீரோவை அரலூசா காட்ற ஒரே காரணத்துக்காக, ஹீரோயினை முழு லூசாக்குற சந்தோஷ் சுப்பிரமணியம் ரேஞ்ச் படங்களையும், ஒரு விஷயமும் புரியாம, மேதாவித்தனமா கிழிக்கறதா நெனச்சு கடுப்பேத்துற உயிரே, வாரணம் ஆயிரம் ரேஞ்ச் படங்களையும் பாத்தா பத்திக்கிட்டு வரும். பேசாம இவங்க படத்துக்கெல்லாம் போய் ஸ்க்ரிப்ட் எழுதி சாவடிக்கிற அளவுக்கு பேஜாராகிடும்.

ஒன்னு உருப்படியா வீடு, பூ , இல்லம் மாதிரி அழகா ஒழுங்கா எடுக்கணும், இல்லை, நாயகன், நரசிம்மா மாதிரி தைரியமான முயற்சிகளை எடுக்கணும்.


20.கடைசியாகப் பார்த்த படம்?

Drag Me to Hell - தியேட்டரில்
பாவர்ச்சி - வீட்டில்

21.பிடித்த பருவ காலம் எது?

நம்மூர்ல இருக்கப்போ, வெயில் காலம் புடிக்காது. மத்ததெல்லாம் பிடிக்கும்.
இங்க வசந்த காலம் ரொம்ப பிடிக்கும்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

The Speckled People

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எனக்கு டெஸ்க்டாப்பில் மாத்தி மாத்தி படங்கள் போட புடிக்காது.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது : எங்கக்கா பையன் குரல் ரொம்ப டு த இன்பினிட்டி லெவல் பிடிக்கும். ஸ்கூல் பசங்க சாயந்திரம் மணியடிச்சவுடன் போட்டுட்டே ஓடுற சந்தோஷக் கூப்பாடு ரொம்ப ரொம்ப பிடிக்கும். தீபாவளி, பொங்கல் பண்டிகைக்காலங்களில் ஷாப்பிங் போற மக்கள் பேசுற சத்தம், சூழ்நிலை ரொம்பப் பிடிக்கும்.

பிடிக்காதது : ரொம்பப் பக்கத்துல வெச்சு, 'பே'ன்னு எதை அலறவிட்டாலும் பிடிக்காது. எங்க அக்கா பையன் அழுற சத்தம் பிடிக்கவே பிடிக்காது. அப்டியே பாசம் பொத்துக்கிட்டு வந்திடும், இப்போவரை. சொல்லப்போனா, அவன் பொறந்தப்புறத்துலருந்து, எந்தக் கொழந்த அழுதாலும் அப்டியே பாசம் பொத்துக்கிட்டு வந்திடுது. எத்தனையோ கே.எஸ். கோபாலகிருஷ்ணன் படங்கள் சாதிக்க முடியாதத இவன் சாதிச்சிட்டான்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
ஐரோப்பா- அம்மா வீட்டை வைத்து.
சென்னை-எங்கள் வீட்டிலிருந்து.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
(தனித்திறமைன்னாலே என்னாதுன்னு புரியமாட்டேங்குது. நாம வருஷக்கணக்கா, எதுக்காச்சும் பெருமப்பட்டுக்கிட்டு திரிஞ்சா, அதை சர்வ சாதாரணமா ரெண்டு பேர் பண்ணிட்டு அலட்டிக்காம போறாங்க)
எவ்ளோ நேரம் வேணா க்யூல நிப்பேன் முனகாம, எரிச்சலும் வராது, போரடிக்காது.
எவ்ளோ நேரம் வேணாலும் பராக்குப் பார்ப்பேன்.

வெட்டி வியாக்யானம்(அது என்னான்னு புரியாதவங்க இந்தப் பதிவையே நாலஞ்சு தரம் படிங்க).
நல்லா திட்டுவேன், ஜாடை பேசுவேன்.
'என்னமோ போடா மாதவா', மாதிரி என்னை நானே அப்பப்போ புகழ்ந்துப்பேன்.


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

எதையுமே திணிச்சாப் பிடிக்காது, திணிக்கவும் பிடிக்காது, திணிக்கிறவங்களை பிடிக்கவேப் பிடிக்காது.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சோம்பேறித்தனம், மற்றும் ஈறை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி கவலைப்படுவேன். என்னை சோகப் படத்தால் சோகப்படுத்த முடியாது, அதுக்கு மேலயே நான் கற்பனை பண்ணி கவலைப்பட்டு முடிச்சிருப்பேன்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

வெனிஸ் ரொம்ப ரொம்ப ரொம்ப புடிச்சது.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

எப்டி இருக்கக்கூடாதுன்னே தெர்ல, இதுல எங்கருந்து நான் எப்டி இருக்கணும்னு ஆசைப் படுறது. மத்தவங்களைத் தொந்தரவுப் படுத்தற நோய்கள் வராம இருக்கணுங்கறதுதான் ஒரே ஒரு சாலிட் ஆசை.ஒரு ஆளைக் குறிப்பிட்டு சொல்லனும்னா, எங்கம்மா மாதிரி டைனமிக் பெர்சனா இருக்கணும்னு ஆசை.
31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

இங்க எல்லாருமே, ரொம்ப லைட்டாதான் காலைச் சிற்றுண்டி சாப்டுவாங்க. ஆனால், எங்க வீட்ல இட்லி தோசை பொங்கல்னு பாத்தி கட்டி அடிச்சி, பழக்கம். நான் நிம்மதியா காலைச் சிற்றுண்டி இந்தியால, எங்க வீட்ல வெச்சு, இவரு ஆன்னு ஆச்சர்யமா பாக்குற காண்டில்லாம, நிம்மதியா சாப்ட விருப்பம்:):):)

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....................நான் என்னைக்கு ஒரு வரில சொல்லிருக்கேன்?
ஒரு நிமிஷம் நாகை, ராமேஸ்வர மீனவர்கள் வாழ்க்கையை யோசிங்க. அப்டியாச்சும் அடங்குறோமான்னு முயற்சி செஞ்சு பாக்கலாம். அனைத்து வகை கழிவுகள் அகற்றும் பணியிலிருக்க மக்களைப் பத்தி யோசிங்க. நாம எதையும் கிழிக்கலைன்னு புரியிதா பாருங்க. இது குத்தவுணர்ச்சி வரணும்னோ, ப்யூரிட்டான்னு காட்டிக்கவோ இல்லை, நம்மக்கிட்டருக்க லூசுத்தனத்த கொஞ்சூண்டு கொறைச்சிக்கத்தான்(ஆமா, கம்மியாகிதான் இந்தளவுக்காவது இருக்கேன். இல்லன்னா யோசிங்க) நைநைங்காம நிம்மதியா (நீங்க நிம்மதியா இருக்கீங்களோ இல்லையோ) மத்தவங்கள இருக்க விடுங்க.

Wednesday 27 May, 2009

மொக்கைச் செய்திகள்

சில சமயம் பெரிய பெரிய ஆளுங்கல்லாம் பல்பு வாங்கும்போது, அடடா பாவமேன்னு இருக்கும். அப்டித்தான் சமீபத்துல பெரிய பெரிய எழுத்துலக ஆட்களெல்லாம் பல்பு வாங்கி பல்பத்தை முழுங்கினப்போ அச்சச்சோன்னு இருந்திச்சி. அதுலயும் அநியாயத்துக்கு சிறுவர் மலர் , அம்புலி மாமா, லட்சுமி, ரமணி சந்திரனோடல்லாம் கம்பேர் பண்ணப்போ சிரிப்பும் பரிதாபமும் சேர்ந்து வந்துச்சி. ஆனா, ரெண்டு நாளா இவங்க தன் தெறமய காட்டு காட்டுன்னு காட்றத பாத்தா..................................................................ஏதோ பிரான்ஸ் பத்தி மட்டும்தான் ஒன்னும்புரியாம அக்கிரமமா காமடி பண்ணுவாங்கன்னா, இப்போ ட்ராஜிக்கல் காமடியும் ட்ரை பண்றாப்டியோ?

ராகுல் காந்திக்கும், பத்து மாசத்திலருந்து ஒன்றரை வயசுவரையுள்ள குழந்தைகளின் நடைக்கும் ஒரு ஒத்துமை இருக்கு. என்னான்னு கண்டுப் பிடிச்சவங்க மனசோட வெச்சிக்கங்க:):):)

கேன்ஸ் பெஸ்டிவலுக்கு வந்ததிலிருந்து ரெண்டுநாள்வரை ஐஸ்வர்யா ராய்,அந்தக் கடுகடுன்னு இருந்தாங்க. என்னாக் கடுப்போ தெர்ல. இது வெறும் பிரென்ச் மீடியாகிட்டயா இல்லை அவங்க மூடே நல்லால்லையா யாருக்குத் தெரியும்? Franck Duboscங்கற நடிகர நல்லா வெளிப்படையாவே கலாய்ச்சாங்க. அதோட இவங்களுக்கு போய் டேன் மேக்கப் போடற அதிபுத்திசாலிங்கள என்னத்த சொல்ல.

டா வின்சி கோட் பார்த்து நொந்தவங்க, பயப்படாம போய் ஏஞ்சல்ஸ் அண்ட் டேமன்ஸ் பாருங்க. ஆனா கேள்வியெல்லாம் கேக்கக் கூடாது. எப்டி புஸ்தகத்த மதிமயங்கிப் போய் படிச்சோமோ அப்டியே பாக்கணும். அதே டமுக்கு டிப்பா டிப்பாதான்னாலும், ஜாலியா போகுது. புக்கைப் படிக்காதவங்களுக்குக் கதைச்சுருக்கம் என்னன்னா, தலையச் சுத்தி மூக்கை தொடுற கலையை விளக்கும் படம். கூடுதலா, ரோமுக்கு விசிட்டடிச்சவங்க டீமா போய், ஹேய் இது நாம அப்போ பார்த்தமே, என்னப்பா கூட்டம் இம்மாத்தூண்டு இருக்குங்கங்கற ரேஞ்சில பட்டயக் கெளப்பி, பக்கத்துல இருக்கவங்களை சதாய்க்கலாம்.


தமிழ்நாட்ல பன்னெண்டாம் கிளாஸ்ல ஸ்டேட் பர்ஸ்ட்லருந்து, பார்டர்ல பாசானவங்க வரைக்கும் எல்லாத்துக்கும் காரணம் நம்ம gaptain தான். பின்ன, அவரு எலெக்ஷனுக்கு குடும்ப சகிதமா ஊர் சுத்தலைன்னா, அவரு புள்ள ஸ்டேட் பர்ஸ்ட் வந்து, டெக்னிக்கலா தமிழ்நாட்லருக்க அத்தன ஸ்டூடன்சோட மார்க்கையும் பிரிச்சி, பெயிலாக்கி, அதகளமா சாதிச்சி, அல்லு கெளப்பிருப்பாப்ல. ஆனா பாருங்க, இந்த மைனாரிட்டி கருணாநிதி கவர்மென்ட் அடுத்த நாள் எலெக்ஷன் கவுண்டிங்க்ல கூட சரியா கவனம் செலுத்தாம, பன்னெண்டு தொகுதி, ஓட்டிங் மெஷினையும் கரெக்ட் பண்ணாம, ராவோட ராவா நம்ம ஜூனியர் gaptainஐ பெயிலாக்குற வேலைய செஞ்சி பழிவாங்கியிருக்குது. இதுக்கெல்லாம் ஒரு நாள் பிரேமலதா மேடம்க்கு ராஜாத்தி அம்மா, அவங்க பர்னிச்சர் கடைல வெச்சே பதில் சொல்ற காலம் வரும்னு எச்சரிக்கிறேன், ஆமா!

Tuesday 19 May, 2009

!!!!!!!!!!!!!

சில உண்மையான வார்த்தைகள்