சில சமயம் பெரிய பெரிய ஆளுங்கல்லாம் பல்பு வாங்கும்போது, அடடா பாவமேன்னு இருக்கும். அப்டித்தான் சமீபத்துல பெரிய பெரிய எழுத்துலக ஆட்களெல்லாம் பல்பு வாங்கி பல்பத்தை முழுங்கினப்போ அச்சச்சோன்னு இருந்திச்சி. அதுலயும் அநியாயத்துக்கு சிறுவர் மலர் , அம்புலி மாமா, லட்சுமி, ரமணி சந்திரனோடல்லாம் கம்பேர் பண்ணப்போ சிரிப்பும் பரிதாபமும் சேர்ந்து வந்துச்சி. ஆனா, ரெண்டு நாளா இவங்க தன் தெறமய காட்டு காட்டுன்னு காட்றத பாத்தா..................................................................ஏதோ பிரான்ஸ் பத்தி மட்டும்தான் ஒன்னும்புரியாம அக்கிரமமா காமடி பண்ணுவாங்கன்னா, இப்போ ட்ராஜிக்கல் காமடியும் ட்ரை பண்றாப்டியோ?
ராகுல் காந்திக்கும், பத்து மாசத்திலருந்து ஒன்றரை வயசுவரையுள்ள குழந்தைகளின் நடைக்கும் ஒரு ஒத்துமை இருக்கு. என்னான்னு கண்டுப் பிடிச்சவங்க மனசோட வெச்சிக்கங்க:):):)
கேன்ஸ் பெஸ்டிவலுக்கு வந்ததிலிருந்து ரெண்டுநாள்வரை ஐஸ்வர்யா ராய்,அந்தக் கடுகடுன்னு இருந்தாங்க. என்னாக் கடுப்போ தெர்ல. இது வெறும் பிரென்ச் மீடியாகிட்டயா இல்லை அவங்க மூடே நல்லால்லையா யாருக்குத் தெரியும்? Franck Duboscங்கற நடிகர நல்லா வெளிப்படையாவே கலாய்ச்சாங்க. அதோட இவங்களுக்கு போய் டேன் மேக்கப் போடற அதிபுத்திசாலிங்கள என்னத்த சொல்ல.
டா வின்சி கோட் பார்த்து நொந்தவங்க, பயப்படாம போய் ஏஞ்சல்ஸ் அண்ட் டேமன்ஸ் பாருங்க. ஆனா கேள்வியெல்லாம் கேக்கக் கூடாது. எப்டி புஸ்தகத்த மதிமயங்கிப் போய் படிச்சோமோ அப்டியே பாக்கணும். அதே டமுக்கு டிப்பா டிப்பாதான்னாலும், ஜாலியா போகுது. புக்கைப் படிக்காதவங்களுக்குக் கதைச்சுருக்கம் என்னன்னா, தலையச் சுத்தி மூக்கை தொடுற கலையை விளக்கும் படம். கூடுதலா, ரோமுக்கு விசிட்டடிச்சவங்க டீமா போய், ஹேய் இது நாம அப்போ பார்த்தமே, என்னப்பா கூட்டம் இம்மாத்தூண்டு இருக்குங்கங்கற ரேஞ்சில பட்டயக் கெளப்பி, பக்கத்துல இருக்கவங்களை சதாய்க்கலாம்.
தமிழ்நாட்ல பன்னெண்டாம் கிளாஸ்ல ஸ்டேட் பர்ஸ்ட்லருந்து, பார்டர்ல பாசானவங்க வரைக்கும் எல்லாத்துக்கும் காரணம் நம்ம gaptain தான். பின்ன, அவரு எலெக்ஷனுக்கு குடும்ப சகிதமா ஊர் சுத்தலைன்னா, அவரு புள்ள ஸ்டேட் பர்ஸ்ட் வந்து, டெக்னிக்கலா தமிழ்நாட்லருக்க அத்தன ஸ்டூடன்சோட மார்க்கையும் பிரிச்சி, பெயிலாக்கி, அதகளமா சாதிச்சி, அல்லு கெளப்பிருப்பாப்ல. ஆனா பாருங்க, இந்த மைனாரிட்டி கருணாநிதி கவர்மென்ட் அடுத்த நாள் எலெக்ஷன் கவுண்டிங்க்ல கூட சரியா கவனம் செலுத்தாம, பன்னெண்டு தொகுதி, ஓட்டிங் மெஷினையும் கரெக்ட் பண்ணாம, ராவோட ராவா நம்ம ஜூனியர் gaptainஐ பெயிலாக்குற வேலைய செஞ்சி பழிவாங்கியிருக்குது. இதுக்கெல்லாம் ஒரு நாள் பிரேமலதா மேடம்க்கு ராஜாத்தி அம்மா, அவங்க பர்னிச்சர் கடைல வெச்சே பதில் சொல்ற காலம் வரும்னு எச்சரிக்கிறேன், ஆமா!
Wednesday, 27 May 2009
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
:))
da vinci code movie - :((
உன்னோட இந்த இடுகையில வழக்கமான உன் டச் ஏதோ குறையிற மாதிரி இருக்கு ராப்.
:-)))...
கவிஜாயினி,
Angels & demons பார்த்தேன்... ஒன்னுமே பிரில... புக் வாங்கிதான் படிக்கனும்.... :)
ஜீனியர் Gaptain ஃபெயிலா??? ஐயகோ... :)
//
ஜீனியர் Gaptain ஃபெயிலா??? ஐயகோ... :)//
அய்யகோ.. அய்யகோ :((
விஜயகாந்த்தின் மகன் பாஸாகிவிட்டதாகவும் தவறான செய்தி என்றும் இன்றைய விகடனில் மறுப்பு போட்டிருக்கிறார்கள் என்று இங்கு நான் சொல்வதால் என்னை கேப்டன் கட்சி என்று நினைத்து விடாதீர்கள்.. அன்றும் இன்றும் டீ.ஆர் தான்..(நேற்று கே டிவியில் வீராச்சாமி...)
naanum
:-))
thaan vera enna solla
he he he
:)
:))
:-))
ஜீனியர் Gaptain ஃபெயிலா:-)))))
Post a Comment