இசையின் ஒவ்வொரு பரிமாணத்திற்கும், ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் சிலப் பல 'தல'கள் இருந்தாலும், கேசட்களின் கடைசி கட்டத்தில் உலகை(அட்லீஸ்ட் எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு), கட்டிப்போட்டவர்.
எங்கக்கால்லாம் அப்டியே செம பேன்ஸ். அவங்க செட்டோடல்லாம் சுத்தறத்துக்காகவே இப்டி பல வித இசை கலைஞர்களின் இசையை கேக்க ஆரம்பிச்சு நமக்கும் புடுச்சுப் போச்சு.
நாங்கெல்லாம் பாப் ம்யூசிக்கை வெச்சு அபீஷியலா டார்ச்சர் கெளப்பக்கூடிய காலக்கட்டம் வரப்போ, அது சிடிக்களின் காலக்கட்டம். ஜாக்சன் கிரேஸ் பயங்கரமா கம்மியான காலக்கட்டம்.
எங்கக்காவ அப்போல்லாம் பயங்கரமா பழிவாங்கறதுண்டு, சின்ன சண்ட போட்டாக் கூட. ஒருத்தங்கள செம எரிச்சல் படுத்தனும்னா அவங்க சாப்பாடு, புக்ஸ் இல்லைன்னா இசை கலெக்ஷன்ல கை வெச்சா போதும்ங்கற உன்னத அறிவு அப்போவே வந்தாச்சு. அதால, அவங்க வாங்கி வெச்சிருக்க லேட்டஸ்ட் கேசட்சை எடுத்து, அதுல கண்றாவியான எதையாவது பாடி வெக்கிறது, இல்லை அம்மாப்பா கிட்ட போயிடும்னு பயமிருந்தா, அன்னைக்கு பாட்டு வாத்தியார் சொல்லிக் கொடுத்த ஒரு டப்பா பாட்டை, எவ்ளோவுக்கெவ்வளவு கர்ண கொடூரமா கத்த முடியுமோ அப்டி கத்தி அந்த கேசட் முழுக்க ரெக்கார்ட் பண்ணி சைலண்டா வெச்சிடறது.
அதுக்கப்புறம் நடக்கறத சொல்லித்தான் தெரியனுமா என்ன? இப்டி பண்ணி ஒரு தீவிரவாதி ரேஞ்சுக்கு சொந்தக்கார பசங்க மத்தியிலும் புகழ் பரவி, எக்கச்சக்க நட்புகள் கெடச்சிது.
இந்த பாட்டு நான் மறக்கவே முடியாது. இது இருந்த கேசட்டை நான் 'யசோத நந்த கோபாலனே' பாடி அழிச்சிட்டு, சும்மா ஜம்முன்னு உக்காந்த ஞாபகம் வருது. அப்போ இந்த பாட்டிற்கு இருந்த பக்தர்களுக்குத் தெரியும் நான் செஞ்சது எவ்ளோ கொடூரம்னு.
அது ஒரு அழகிய நிலாக்காலம்!!!!!!!!!!
என்னுடைய இனிமையான குழந்தைப் பருவ நினைவுகளுக்கு உதவியது அவரின் இசை, அடுத்த பிறவியிலாவது அவருக்கும் ஒரு இனிமையான குழந்தைப் பருவம் அமைய வேண்டுமென ஆசை.
இவர் தோன்றுவதற்கு முன்பே ஆலமரமாகி உச்சபட்ச வெற்றியை ஈட்டிய ஆப்பிரிக்க அமெரிக்க பாப் ம்யூசிக் இசைக்கு, இவர் காலக்கட்டங்களில் ஒரு பெரிய எதிர்ப்பு இயக்கமே நடந்துச்சி, மாற்று இசைக் கலைஞர்களால், அப்டின்னு கேள்விப்பட்டிருக்கேன்(உண்மை இல்லைன்னா, சுட்டினால் திருத்திவிடுகிறேன்).
அனைத்தையும் தாண்டி இவர் வந்தது நல்ல விஷயம்.
என்னளவில் என்னுடைய ஆல்டைம் பேவரிட்ஸ் இவை மூன்றும்.
இது போனஸ்.
Thursday, 25 June 2009
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
;-(
தொகுப்புக்கு நன்றி.
:(((
அருமையான நினைவு மற்றும் இசைத் தொகுப்பு.
உங்கள் இளமைக் காலக் குறும்பை ரொம்பவும் ரசித்தேன்!
:(
பகிர்வுக்கு நன்றி !
தல நல்லா இருக்கு.ஒரு வித்தியாசமான
கலைஞ்சன்.
சின்ன வயசுல பயங்கர டெரரா இருந்திருப்பீங்க போல
!
சின்ன வயசுல பயங்கர டெரரா இருந்திருப்பீங்க போல
!
repeatuu
//தீவிரவாதி ரேஞ்சுக்கு சொந்தக்கார பசங்க மத்தியிலும் புகழ் பரவி, எக்கச்சக்க நட்புகள் கெடச்சிது.//
நீங்க இம்புட்டு நல்லவங்கனு சொல்லவே
இல்லை
நல்ல பதிவு rapp.
//அதால, அவங்க வாங்கி வெச்சிருக்க லேட்டஸ்ட் கேசட்சை எடுத்து, அதுல கண்றாவியான எதையாவது பாடி வெக்கிறது//
பயங்கரமான ஆளா இருந்திருப்பீங்க போல!!!
Post a Comment